இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? - கமல் பதில்

I M Not Enemy Any Religion Says Kamal

எந்த மதத்துக்கும் நான் எதிரி இல்லை. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதில்லை, என்று கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படம் ‘ஆரோ 3டி' ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களிடம் பேசுகையில், விஸ்வரூபம்' இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்று கேட்டனர்.

அதற்கு கமல் பதிலளிக்கையில், "அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.

நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்றார்.

 

ஜெயலலிதாவை சந்தித்த கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

Kamal Hassan Met Cm Jayalalitha

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் கமலஹாசன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் இன்று தனது 58 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது கமலஹாசனுக்கு, முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கமல், இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா பற்றியும் தற்போது தான் நடித்து வெளிவரத் தயாராகி வரும் விஸ்வரூபம் படத்தில் பயன்படுத்தப்பட்ட 3டி தொழில்நுட்பம் பற்றியும், ஜெயலலிதாவிடம் பேசியதாகத் தெரிகிறது.

 

“நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சி வச்சிருக்கேன்”… எம்.டிவிக்காக ஏ.ஆர்.ரஹ்மான்

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும் கடல் திரைப்படத்திற்கு இத்திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள நெஞ்சுக்குள்ளே என்ற பாடல் எம்.டிவி. அன்ப்ளக்டு (MTV unplugged) நிகழ்ச்சியில் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

ar rahman nenjukulle video song from kadal movie
Close
 
திரைப்பட பாடலொன்றை முதல் முறையாக இப்படி டி.வி நிகழ்ச்சியொன்றில் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். பாடல் வெளியீடு தொடர்பில் "இது ஒரு மகிழ்ச்சியான தருணம்" என்று என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான்.

அக்கார்டியன் இசைக்கருவிவை ரஹ்மான் வாசிக்க, "நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்... என்று பாடுகிறார் பின்னணிப் பாடகி சத்தியஸ்ரீ கோபாலன்.

சிங்கிள் டிரேக் பாடல்களை யூடியூப்பில் தரவேற்றம் செய்து பிரபலமடையும் புது நுட்பத்தில் ரஹ்மானும் தன்னை இணைத்துக்கொண்டார். இப்பாடல் இந்தியாவில் யூடியூப்பில் அதிகதடவை பார்வையிடப்பட்ட வீடியோவாக மாறியுள்ளது. மேலும் சமூக தளங்களிலும் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் 'வைரமுத்து கவிதைகள்' புத்தகத்திலிருந்து இப்பாடலுக்கான வரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் எந்திரனுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படங்கள் வரிசையில் மணிரத்னத்தின் கடல், ரஜினிகாந்த்தின் கோச்சடையான், பாரத் பாலாவின் மரியான் என்பனவற்றை குறிப்பிட்டு சொல்லமுடியும். ரஹ்மான் பேக் என இசைப்புயலின் தமிழ் ரசிகர்கள் மீண்டும் உற்சாகமாக கூறிக்கொள்ளலாம்.

 

மலையாளப்படம் மூலம் மீண்டும் களம் இறங்கும் மும்தாஜ்

மலைக்க வைக்கும் கவர்ச்சியுடன் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகை மும்தாஜ் மலையாள திரைப்படம் மூலம் மீண்டும் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டி. ராஜேந்தரால் கதாநாயாகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் மும்தாஜ். குஷி படத்தில் கட்டிப் புடி கட்டிப்புடிடா பாட்டு மூலம் கிளாமராக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். பின்னர் நமீதா உள்ளிட்ட கவர்ச்சிப் புயல்கள் தமிழ் திரை உலகை ஆக்கிரமிக்கவே காணமல் போனார் மும்தாஜ். இப்போது ஜெயா டிவியில் சிறுவர்கள் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக சேவை செய்து வருகிறார்.

mumtaj makes comeback malayalam   
Close
 
நம்முடைய செய்தி அதைப் பற்றியதல்ல. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மும்தாஜ் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தமிழில் அல்ல மலையாளத்தில். ‘ப்ரீவியூ' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்தி விட்ட கதாநாயகி கேரக்டரில் நடிக்கிறார்.

ஹாசிம் மரிக்கார் இயக்கும் இந்தப் படத்தில் நிஷான், மக்பூல் சல்மான் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் லட்சுமிராயும் நடிக்கிறார்.

இதற்கு முன் ‘தாண்டவம்' என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார் மும்தாஜ். இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. எனவே 'ப்ரீவியூ' படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மும்தாஜ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

விஸ்வரூபம் ரிலீஸ் எப்போன்னு மட்டும் கேட்டுடாதீங்க! - கமல்

Dont Ask About Vishwaroopam Release

விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து மட்டும் எதுவும் கேட்டுவிடாதீர்கள் என்றார் கமல்ஹாஸன்.

இன்று கமல் பிறந்த நாள். இன்றுதான் கோவை, சென்னை, மதுரை என மூன்று மாநகரங்களில் விஸ்வரூபம் இசையை வெளியிட திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தினால் அதை தள்ளி வைத்து விட்டதாக அறிவித்தார் (இன்னிக்கு வெயில் பொளந்து கட்டுது!)

அதற்குப் பதிலாக இன்று காலை 10: 30 மணியளவில் சென்னை சத்யம் தியேட்டரில் "ஆரோ 3டி" டெக்னாலஜியில் தயாரான "விஸ்வரூபம்" படத்தின் ட்ரெய்லரை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக போட்டுக் காண்பித்தார்.

அதுமட்டுமில்லாமல் இன்று நடைபெறுவதாக இருந்த ஆடியோ பங்ஷனும் கேன்சலாகி விட்டதால் அதனால் தன் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக 30 ஊர்களில் உள்ள 30,000 ரசிகர்கள் "விஸ்வரூபம்" படத்தின் ட்ரெய்லர் மற்றும் கமல் அவர்களுடன் நேரடியாக தோன்றி பேசும் நிகழ்ச்சியை நடத்தினார்.

விழாவில் 5.1 மற்றும் ஆரோ 3டி சவுண்ட் டெக்னாலஜியில் ரெடி செய்யப்பட்டிருந்த 'விஸ்வரூபம்' படத்தின் ட்ரெய்லர்கள் போட்டு காண்பிக்கப்பட்டன.

விழாவில் பேசிய கமல், "இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தப் படத்தில்தான் "ஆரோ 3டி" என்ற புதிய சவுண்ட் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.

அப்போது கமலிடம் 5.1 ட்ரெய்லர் காண்பிக்கப்பட்ட போது பி.வி.பி நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது, ஆனால் ஆரோ 3டி டெக்னாலஜியில் போடப்பட்ட ட்ரெய்லரில் அந்த நிறுவனத்தின் பெயர் இல்லையே..? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கமல், அது வியாபார சம்பந்தமான விஷயம். மற்றபடி நானும், அவர்களும் நட்பாகத்தான் இருக்கிறோம் என்றார்.

"விஸ்வரூபம்" படம் எப்போ ரிலீஸாகும் என்ற கேள்விக்கு, "இந்தக் கேள்வி உங்களிடமிருந்து வரும் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போதைக்கு அந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள். வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன," என்றார்.

 

லதா மங்கேஷேகர் எனது கணவரின் கள்ளக்காதலி: புபென் ஹசாரிகாவின் மாஜி மனைவி குற்றச்சாட்டு

Lata Mangeshkar Had An Affair With Bhupen

மும்பை: மறைந்த பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகாவுடன் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தொடர்பு இருந்ததாக ஹசாரிகாவின் முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் பிரபலமாக இருந்து மறைந்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகா. அவரது முதலாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் கலந்து கொண்டார்.

அவர் அஸ்ஸாம் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், பாடகி லதா மங்கேஷ்கருக்கும், புபென் ஹசாரிகாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததால் தான் திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து அவரைப் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் குற்றச்சாட்டு மங்கேஷ்கர் குடும்பத்தாரையும், ஹசாரிகாவுடன் 40 ஆண்டுகளாக இருந்த கல்பனா லாஜ்மியையும் எரிச்சலடைய வைத்துள்ளது.

அந்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்,

லதா எப்பொழுது கொல்கத்தா வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வருவார். அப்படி வந்தால் அவரும், ஹசாரிகாவும் இரவு முழுவதும் ஒரே படுக்கையறையில் தான் இருப்பார்கள். லதாவுக்கு அவர் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு இசைக்கலைஞன் முன்னுக்கு வர வேண்டும் என்றால் அவனுடைய பாடல்களை லதா மங்கேஷ்கர் பாட வேண்டும் என்று என் கணவர் ஒரு முறை கூறினார் என்றார்.

ஹசாரிகா வாழ்வில் மும்பையைச் .சேர்ந்த ஒரு பெரிய பிரபலம் இருந்தது அஸ்ஸாம் மாநில மக்களில் பலருக்கு தெரியும். ஆனால் அது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஹசாரிகா தனது சுயரசரிதையில் தனது வாழ்வில் உள்ள இன்னொரு பெண்ணைப் பற்றி எழுதியிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை.

 

படுக்கையில் எழுச்சியுடன் செயல்பட ஒத்தாசை செய்யும் சன்னி லியோன்

Sunny Leone Can Help You Enhance Your   

மும்பை: சன்னி லியோன் பற்றி தனியாக விளக்கி,வெவரமாக சொல்லத் தேவையில்லை. எல்லோருக்குமே சன்னியைப் பற்றி நன்றாக தெரியும். ஆனால் படுக்கை அறையில் ஆண்களும், பெண்களும் எழுச்சியுடன் செயல்படுவதற்கு உதவும் வகையில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார் சன்னி.

கனடாவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான சன்னி லியோன் ஒரு போர்ன் பட நடிகை. அங்கு அதகளம் செய்து கொண்டிருந்தவரை பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் மும்பைக்குக் கூட்டி வந்தனர். இப்போது இவரும் ஒரு நடிகையாகி விட்டார் பாலிவுட்டில்.

ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து பாலிவுட்டில் தனது நடிப்பு இன்னிங்ஸை ஆரம்பித்த சன்னி, சைட் பை சைடாக தனது கவர்ச்சியை வைத்து விளம்பரங்களிலும் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்துக் கலக்கியிருந்தார்.

இந்த நிலையில், புதிதாக ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இது பாலிவுட்டில் கதகதப்பைக் கூட்டியுள்ளதாம். அதாவது படுக்கை அறையில் ஆண்களும், பெண்களும் எழுச்சியுடன் செயல்பட உதவும் ஒரு ஸ்பிரேவுக்கான விளம்பரப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் சன்னி.

பாத்டப்பில் படுத்தபடி பிகினி உடையில் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார் சன்னி. முழு விளம்பரத்திலும் அவர் பாத்டப்பில்தான் கிடக்கிறாராம்...

அடுத்து என்ன பிளானோ?

 

வாய்ப்பு குறைந்தால் கவலை இல்லை : சமீரா ரெட்டி

I don't concern about the less chance : Sameera Reddy சென்னை: படங்களில் வாய்ப்பு குறைவதால் கவலை இல்லை என்றார் சமீரா ரெட்டி. 'வாரணம் ஆயிரம்', 'வெடி' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: ராணா, நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். இந்த வாய்ப்பை ஏற்றது ஏன் என்கிறார்கள். குத்து பாடலுக்கு மட்டும் ஆட வேண்டுமென்றால் ஆடி இருக்க மாட்டேன். கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இது அமைந்திருக்கிறது. என்னுடன் வெங்கடேஷும்  ஆட உள்ளார். இதுவொரு கவுரவ தோற்றம் என்பதால் ஏற்றேன். இந்தி படங்களில் கரீனா கபூர், கேத்ரினா, வித்யா பாலன் ஆகியோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள்.

அதெல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. அவைகளில் தேசிய விருது இயக்குனர் பிரகாஷ் ஜா படத்தில் வந்த வாய்ப்பை மட்டும் ஏற்றேன். 'டோலிவுட் படங்களில் ஹீரோயின்கள் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்களே?' என்கிறார்கள். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படவுலகில் அப்படித்தான் இருக்கும். இதை மாற்றுவதற்காக நான் வரவில்லை. கிளாமர் வேடங்களை நான் தவிர்ப்பதில்லை. படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டதுபற்றி கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் பிடித்ததை மட்டுமே ஏற்கிறேன். விரைவில் குடும்பத்தினருடன் கிரிஸுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
 

இந்தி பட ரீமேக்கில் ரஜினியை இயக்குகிறார் ஐஸ்வர்யா

Ishwarya is going to direct Rajini சென்னை: இந்தி பட ரீமேக்கில் ரஜினியை இயக்க முடிவு செய்திருக்கிறார் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்தியில் அக்ஷய்குமார், பரேஷ் ராவல் நடிப்பில் ஹிட்டான படம் ஓ மை காட். கடவுளை நம்பாத பரேஷ் ராவல் ஒரு பிரச்னையில் சிக்குகிறார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர் (அக்ஷய் குமார்) பூமிக்கு வருகிறார். இதுதான் படத்தின் கரு. படம் முழுக்க மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் வசனங்கள், போலி சாமியார்களை தாக்கும் காட்சிகள் என விறுவிறுப்பாக திரைக்கதை நகரும். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ஏற்கனவே தனுஷ், ஸ்ருதி நடிப்பில் 3 படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா.

'ஓ மை காட்' படத்தை பார்த்தவர், அதை ரீமேக் செய்ய விரும்பினார். இதையடுத்து சமீபத்தில் மும்பைக்கு சென்று அக்ஷய்குமாரை சந்தித்தார் ஐஸ்வர்யா. சில நிறுவனங்களுடன் சேர்ந்து அக்ஷய்குமாரின் நிறுவனமும் படத்தை தயாரித்து இருப்பதால் அவரிடம் ரீமேக் உரிமை பற்றி ஐஸ்வர்யா பேசியதாக தெரிகிறது. அக்ஷய் குமார் நடித்த கிருஷ்ணர் வேடத்தில் தனது அப்பா ரஜினியை நடிக்க வைக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யாவுக்கு நெருங்கியவர்கள் கூறும்போது, அக்ஷய்குமாருடன் தொடர்ந்து ஐஸ்வர்யா பேசி வருகிறார். ஓ மை காட் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற விஷயங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றனர்.
 

இந்தி பட ரீமேக்கில் ரஜினியை இயக்குகிறார் ஐஸ்வர்யா

Ishwarya is going to direct Rajini சென்னை: இந்தி பட ரீமேக்கில் ரஜினியை இயக்க முடிவு செய்திருக்கிறார் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்தியில் அக்ஷய்குமார், பரேஷ் ராவல் நடிப்பில் ஹிட்டான படம் ஓ மை காட். கடவுளை நம்பாத பரேஷ் ராவல் ஒரு பிரச்னையில் சிக்குகிறார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர் (அக்ஷய் குமார்) பூமிக்கு வருகிறார். இதுதான் படத்தின் கரு. படம் முழுக்க மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் வசனங்கள், போலி சாமியார்களை தாக்கும் காட்சிகள் என விறுவிறுப்பாக திரைக்கதை நகரும். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ஏற்கனவே தனுஷ், ஸ்ருதி நடிப்பில் 3 படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா.

'ஓ மை காட்' படத்தை பார்த்தவர், அதை ரீமேக் செய்ய விரும்பினார். இதையடுத்து சமீபத்தில் மும்பைக்கு சென்று அக்ஷய்குமாரை சந்தித்தார் ஐஸ்வர்யா. சில நிறுவனங்களுடன் சேர்ந்து அக்ஷய்குமாரின் நிறுவனமும் படத்தை தயாரித்து இருப்பதால் அவரிடம் ரீமேக் உரிமை பற்றி ஐஸ்வர்யா பேசியதாக தெரிகிறது. அக்ஷய் குமார் நடித்த கிருஷ்ணர் வேடத்தில் தனது அப்பா ரஜினியை நடிக்க வைக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யாவுக்கு நெருங்கியவர்கள் கூறும்போது, அக்ஷய்குமாருடன் தொடர்ந்து ஐஸ்வர்யா பேசி வருகிறார். ஓ மை காட் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற விஷயங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றனர்.
 

நகைச்சுவை படத்தில் ரம்யா நம்பீசன்

Ramya Nambeesan in the comedy சென்னை: 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜசேகர். இவர் இயக்கும் படம் 'யா யா'. இதுபற்றி அவர் கூறியதாவது: 'கலகலப்பு' படத்துக்கு பிறகு சிவா, சந்தானம் இணைந்து நடிக்கின்றனர். ரம்யா நம்பீசன் ஹீரோயின். மனோபாலா, இளவரசு, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு. எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பு.

'கண்டேன்' படத்துக்கு இசை அமைத்த விஜய் எபினேசர் இசை அமைக்கிறார். நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையாக இது உருவாகிறது. 'யா யா' என்றால் ஆங்கில பெயரா என்கிறார்கள். இது ஆங்கில பெயர் இல்லை. தமிழ் பெயர்தான். இதற்கு அர்த்தம் இருக்கிறது. படத்தில் வரும் ஹீரோ, ஹீரோயின் பெயர்களை இணைத்து இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. பாடல் காட்சிகள் மலேசியா, ஹாங்காங்கில் படமாக உள்ளது.
 

கிசு கிசு - விமர்சகர்களை தாக்கிய நடிகை

Koidambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

அனுஷம், நமீன்னு சீனியர் ஹீரோயினுங்க டயட், உடற்பயிற்சினு உடம்பை கொஞ்சமா குறைச்சிருக்காங்களாம்... இருக்காங்களாம்... உடம்பு லேசா மெலிஞ்சாலும் முகத்துல வயசு தெரியுதாம். இதால உடம்பு ஷேப்பு எடுபடலையாம். சில நடிகைங்க மாதிரி கொழுப்பு நீக்க சிகிச்சைய பண்ணிக்குங்க, அப்பத்தான் உடம்பு மெலிஞ்சதுக்கும், முக வசிகரத்துக்கும் மேட்ச் ஆகும்னு பயிற்சியாளருங்க சொல்றாங்களாம். அதையும் செஞ்சி பாத்துடலாம்னு ஹீரோயினுங்க யோசனைல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

காமெடி நடிகர்களோட ஜால்ரா போட்ற தோஸ்த் நடிகர்கள ஒட்டுமொத்தமா வீரபத்திர வில்ல நடிகர் தயாரிக்கற படத்துல வளைச்சிபோட்டிருக்காராம்... இருக்காராம்... ஆனா சம்பளம் ரொம்பவே கம்மியாம்... கம்மியாம்... சும்மா இருக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சுதேன்னு கிடைச்ச பேமென்ட்போதும்னு வாயபொத்திகிட்டு நடிகருங்க நடிச்சு கொடுத்தாங்களாம்...
கொடுத்தாங்களாம்...

லட்சுமிகரமான மம்மி நடிகை இயக்குன படத்துக்கு சக இயக்குனருங்க மனசு குளிர்ர அளவுக்கு பாராட்டு சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்... ஆனா, மீடியா விமர்சனங்களால நடிகை முகம் சிவந்து போயிட்டாராம்... போயிட்டாராம்... உடனே டுவிட்டர் பக்கத்துல போயி, விமர்சகர்களை மனம் குளிர தாக்கியிருக்காராம்... தாக்கியிருக்காராம்...
 

அசத்தும் ‘சமையல் மந்திரம்’: பெண்களிடமும் பயங்கர ரெஸ்பான்ஸ்!

Samayal Manthiram Lures Women Viewers

கேப்டன் டிவியில் நள்ளிரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ‘சமையல் மந்திரம்' நிகழ்ச்சிக்கு பயங்கர ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் பயங்கர ரெஸ்பான்ஸ் இருக்கிறதாம். அந்த அளவிற்கு விரும்பி பார்க்க காரணம் சித்தவைத்தியர் அருண் சின்னையாவின் கைப்பக்குவம் என்கின்றனர்.

அவர் சமைக்கும் ‘இருக்கிப் பிடிக்கும் இலந்தை ஜாம்' ‘குட்டு வைக்கும் ரோஜா குல்கந்து' போன்றவைகளுக்கு வரவேற்பு அதிகம். மூட்டுவலிக்கு கடுகு சாதம், ஆண்மை வீரியம் பெற அமுக்கரா கிழங்கு, விந்து வளர்ச்சிக்கு ஆல் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நரம்பு புத்துணர்ச்சிக்கு புடலங்காய் பொறியல், இடுப்பு பலம் பெற ஊளுந்து களி என அந்தரங்கச் சமையலில் அசத்துகிறார்.

அந்தரங்கம் பற்றிய எந்த கேள்வி வந்தாலும் அதற்கு சரியான சங்கோஜப்படாத பதில்களை சொல்வது இவரது சிறப்பம்சம். அதனால்தான் ஆண்களைப் போல பெண்களும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனராம்.

நந்தினியின் தொகுப்பு

அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு சிலர் சங்கோஜப்படுவார்கள். ஏனெனில் அதில் பங்கேற்பாளர்கள் கேட்கும் ஏடாகூடாமான சந்தேகங்களுக்கு பதில் சொல்லவேண்டுமே? ஆனால் ‘சமையல் மந்திரம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நந்தினி இதற்காக பெருமைப் படுவதாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும், நேயர்களின் கடிதங்களை வாசிக்கவும் கொஞ்சம் கூட கூச்சமில்லை என்கிறார் நந்தினி. ஏனெனில் செக்ஸ் என்பது இயற்கையான விசயம். அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு நம்மால் தெளிவு ஏற்படுகிறதே என்பதில் மகிழ்ச்சிதானம் அவருக்கு.

சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முதலில் நந்தினியின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லையாம். இப்போது நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து ஓகே சொல்லிவிட்டார்களாம்.

முன்பு பாலியல் நிபுணர் மாத்ருபூதம், ஷர்மிளாவும் இணைந்து வழங்கிய அந்தரங்க நிகழ்ச்சியைப் போல சமையல் மந்திரம் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.