ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்தளித்து பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்தளித்து பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

சென்னை: குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு ஏகப்பட்ட இலவசப் பொருள்கள், அன்னதானம் என வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வந்த விஜய், இந்த முறை அமைதியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்து அளித்து பிறந்த நாளை 'அடக்கமாகக்' கொண்டாடினார்.

இன்று விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் இந்த முறை விமரிசையாக பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது.

இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்ட விஜய், அங்கு படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர்.

கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார் விஜய்.

 

ட்விட்டரில் ரசிகர்களைச் 'சந்தித்த' விஜய்!

ட்விட்டரில் ரசிகர்களைச் 'சந்தித்த' விஜய்!

சென்னை: முதல் முறையாக தனது பிறந்த நாளன்று ட்விட்டரில் ரசிகர்களைச் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து பெற்றார் நடிகர் விஜய்.

இன்று 39 வயது பூர்த்தியாகும் விஜய், தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடவில்லை.

ஜில்லா ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவர், பின்னர் 30 நிமிடங்கள் ட்விட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்தார். தனக்காக வாழ்த்துக் கூறிய நூற்றுக்கணக்கான ரசிகர்களின் ட்வீட்களுக்கு நன்றி கூறினார். பல ட்வீட்களை மறுட்வீட் செய்தார்.

தனது தலைவா பட இசை மற்றும் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று அவர் ரசிகர்களின் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டார் என்றும், மாலை நீலாங்கரையில் உள்ள தனது கடற்கரை மாளிகையில் தனக்கு வேண்டப்பட்ட நண்பர்களுக்கு மட்டும் விருந்து அளிப்பார் என்று விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

 

எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி

ஹைதராபாத்: என்னைச் சூழ்ந்திருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

சித்தி கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து, பரபரப்பைக் கிளப்பி பின் போலீசில் ஆஜரானார்.

எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி

தமிழ் - தெலுங்குப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் தன் சித்தியுடன் சமரசமும் ஆகிவிட்டார்.

இதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவை குறித்து செய்தியாளர்களிடம் அஞ்சலி கூறுகையில், "இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை மறக்கவே விரும்புகிறேன். என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்.

இந்த முடிவுதான் என் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இப்போது நான் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இனி என் வாழ்க்கை என் கையில்தான்.

மற்றவர்களுக்கு கீழ்படிந்து வாழ்வதும் இழிவாக நடத்தப்படுவதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் சர்ச்சையில் சிக்கி இருந்த போது நிறைய பேர் ஆறுதலாக இருந்தார்கள். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோர் நம்பிக்கையூட்டினார்கள். அவர்களின் ஆதரவுடன் இனி தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன். சினிமாதான் இனி எல்லாமே," என்றார்.

 

சூர்யாவின் சிங்கம் 2- ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ்!

சூர்யாவின் சிங்கம் 2- ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ்!

சென்னை: சூர்யா நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் சிங்கம் 2 படம் வரும் ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம் 2 என்ற பெயரிலேயே உருவாகி வந்தது.

இதில் சூர்யா - அனுஷ்கா ஜோடியுடன், ஹன்சிகா, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹரி இயக்கியுள்ளார். இதன் படபிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி தென் ஆப்ரிக்கா வரை நடந்தது. சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டன. படம் ஜூலை 5-ந்தேதி ரிலீசாகிறது.

சிங்கம் படம் உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் ரவுடிகள் பற்றி சொன்னது. அதன் இறுதியில் சர்வதேச டான்கள் பற்றிய ஒரு குறிப்போடு முடிக்கப்பட்டிருந்தது. சிங்கம் 2 படத்தில் சர்வதேச தாதாக்களுடன் சூர்யா மோதுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹன்சிகா பள்ளி மாணவியாக வருகிறார் (தாங்குமா?). இப்படம் தமிழகத்திலும் கேரளாவிலும் தமிழிலேயே வெளியாகிறது. யாமுடு 2 என்ற பெயரில், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது அனைத்து மொழிகளிலும், வெளிநாடுகளிலும்.

 

விஜய் மீது எஸ்ஏ சந்திரசேகர் கோபம்? நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்!

சென்னை: ஒரு பக்கம் பிறந்த நாள் விழா திட்டமிட்டபடி நடக்காமல் போன கடுப்பு, அரசியல் நெருக்கடியில் மூட் அவுட்டிலிருக்கும் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் கடந்த சில தினங்களாக மனக்கசப்பு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இதன் வெளிப்பாடாகத்தான், நேற்று நடந்த தலைவா பட இசை வெளியீட்டில் கூட பாதியிலேயே வெளியேறிவிட்டார் எஸ் ஏ சந்திரசேகரன் என்று முணுமுணுக்கிறார்கள்.

விஜய் மீது எஸ்ஏ சந்திரசேகர் கோபம்? நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்!

பிறந்த நாளுக்கு முன் நடக்கும் விழா என்பதால் தலைவா இசை வெளியீட்டில் பெரிதாக ஏதாவது பேசுவார் விஜய் என எதிர்ப்பார்த்துப் போன ரசிகர்கள், செய்தியாளர்களுக்கும் ஏமாற்றம்தான். விஜய் அப்படி எதுவும் பேசவில்லை.

தலைவா இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர், "தலைவா திரைப்படத்தின் கதை எனக்கே தெரியாது. நானும் உங்களைப் போலத்தான் படத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்," என்று பேசிவிட்டு, விழா நடந்து கொண்டிருக்கும்போதே கிளம்பிவிட்டார். தொடர்ந்து பேச வந்த விஜய்யும், படம் நல்லா வந்திருக்கு, தியேட்டருக்குப் போய் பாருங்கள்," என்று கூறி முடித்துக் கொண்டார்.

விஜய்க்கு வரும் கதைகளை சந்திரசேகர்தான் கேட்டு தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தலைவா கதையை எஸ்ஏசியிடம் சொல்லவில்லையாம். விஜய்க்கும் எஸ்ஏசிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.

பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் கேட்டதும் அலட்டிக்கொள்ளாமல் பாட்டு பாடுவது விஜய் வழக்கம். ஆனால் தலைவா விழாவில் ரசிகர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாடாமல் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

அப்பாவுடன் கருத்து வேறுபாடு, பிறந்த விழா ரத்து கோபம் போன்ற காரணங்கள்தான் விஜய்யின் இந்த மூட் அவுட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

 

திருமணம் செய்து கொள்ள மறுத்த நடிகை மீது ஆசிட் ஊற்றிய பாகிஸ்தான் தயாரிப்பாளர்

பேஷாவர்: பாகிஸ்தான் நடிகை மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். சம்பவத்தின் பிண்ணனியில் திருமண மறுப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் வசித்து வருபவரான 18 வயது நடிகையான புஷ்ரா, சில படங்களிலும், டி.வி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளாராம்.

நேற்று இரவு அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்துள்ளான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த புஷ்ராவின் மீது ஆசிட் ஊற்றியுள்ளான். புஷ்ராவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வருவதற்குள் தப்பி ஓடி விட்டானாம்.

ஆசிட் வீச்சினால் புஷ்ராவின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், இதனால் அவரது உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
.
புஷ்ராவின் சகோதரர் போலீசில் அளித்த புகாரில், நாடக தயாரிப்பாள ஒருவர் புஷ்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதை புஷ்ரா மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் கூட இந்த பாதகச் செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

 

முன்னணி ஹீரோவா இருக்கணும்.. ஆனா இளமையா இருக்கணும்- காஜல்

முன்னணி ஹீரோவா இருக்கணும்.. ஆனா இளமையா இருக்கணும்- காஜல்  

இனி என்னோடு நடிக்கும் ஹீரோக்கள் முன்னணியில் இருப்பவராக இருக்க வேண்டும், இளமையாகவும் இருக்க வேண்டும். வயசான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன், என தடாலடியாக அறிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

தனது 27-வது பிறந்த நாளை வியாழக்கிழமை மாலை ஹைதராபாதில் விமரிசையாகக் கொண்டினார் காஜல்.

தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர்கள் பலரும் விருந்துக்கு வந்திருந்தனர். இவர்களில் வெங்கடேஷ், நாகார்ஜூனா போன்ற வயசான முன்னணி ஹீரோக்களும் அடங்குவார்கள்.

விழாவில் கேக் வெட்டிய பிறகு பேசிய காஜல் அகர்வால், 'நான் ஆரம்ப காலத்தில் புது ஹீரோக்கள், இரண்டாம் கட்ட வளரும் ஹீரோக்களுடன் நடித்தேன்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. விஜய் போன்ற பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். காரணம் என் மார்க்கெட் அப்படி. இந்த நேரத்தில் வளரும் நடிகர்களுடன் நடித்தால் நானும் சறுக்க வேண்டியதுதான்.

முன்னணி ஹீரோக்களாக இருக்க வேண்டும். அதே நேரம் அவர்கள் இளமையானவர்களாகவும் இருக்க வேண்டும். இதுதான் என் முதல் கண்டிஷன்," என்றார்.

காஜலின் இந்த அதிரடிப் பேச்சு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சீனியர் நடிகர்களுக்கு அதிர்ச்சிளிப்பதாக இருந்து.

சமீபத்தில் கமல் ஹாஸன் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

 

4- வது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகை- இடுப்பு எலும்பு முறிவு!

கொச்சி: நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகைக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.

‘புட்டி' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர், சுவர்ணா தாமஸ். ‘பிரணயகதா,' ‘பிளாட்' உள்பட சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். 2 தமிழ் படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.

‘புட்டி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுவர்ணா கொச்சி வந்தார். அங்குள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அங்கிருந்து தினமும் படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.

4- வது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகை- இடுப்பு எலும்பு முறிவு!

இந்த நிலையில் அவர், 4 - வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து நேற்று கீழே விழுந்தார். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவருடைய முதுகு எலும்பும், இடுப்பு எலும்பும் முறிந்தது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சுவர்ணாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

 

படக்குழுவைப் பிரிய முடியாமல் தேம்பித் தேம்பி அழுத நடிகை காயத்ரி!

படக்குழுவைப் பிரிய முடியாமல் தேம்பித் தேம்பி அழுத நடிகை காயத்ரி!  

சென்னை: 'ப்பா.. என்ன பொண்ணுடா இது.. பேய் மாதிரி' என்று விஜய் சேதுபதியால் வெறுப்பேற்றப்பட்ட காயத்ரி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேம்பித் தேம்பி அழுதார்.

காரணம்... அவர் நடித்த பொன்மாலைப் பொழுது படக்குழுவைப் பிரிய முடியாததுதானாம்.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘பொன் மாலை பொழுது.'

இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன் ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ‘பொன் மாலை பொழுது' படத்தின் பிரஸ் மீட் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட காயத்ரியைப் பேச அழைத்தனர். பேசுவதற்கு மைக்கை எடுத்த காயத்ரி, பின்னர் பேச முடியாமல் தவித்தார்.

சில நொடிகளில் கண் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து 2 நிமிடங்களாக அவர் பேச முயற்சி செய்து முடியாததால், சோகமாக இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டார்.

ஏன் இப்படி அழுதீர்கள் என்று பின்னர் கேட்டபோது, "நான் நிறைய படங்களில் நடிப்பதில்லை. நல்ல கதையை தேர்வு செய்து, சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ‘பொன் மாலை பொழுது' அப்படி ஒரு படம்தான்.

படத்தின் இயக்குநர் ஏ.சி.துரை, தயாரிப்பாளர்கள் அமிர்த கவுரி, சத்யலட்சுமி, கதாநாயகன் ஆதவ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் என்னிடம் பாசத்துடன் பழகினார்கள். அன்பாக நடந்துகொண்டார்கள்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு போகும்போது உற்சாகமாக இருக்கும். ஒரு குடும்பம் போல் பழகினோம். படப்பிடிப்பு இப்போது முடிந்து விட்டது. இனிமேல் இவர்களைப் பார்க்க முடியாதே என்று நினைத்ததும் அழுகை அழுகையாக வருகிறது. உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன். அதான் பேச முடியவில்லை," என்றார்.

 

மூடு அவுட்டில் விஜய்... பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை!

மூடு அவுட்டில் விஜய்...  பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை!

சென்னை: கடும் மூட் அவுட்டில் இருக்கும் விஜய், இன்று நடக்கும் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை.

நடிகர் விஜய்யின் 39-வது பிறந்தநாளை இன்று 22-ம் தேதி சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில் சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர் (உள்ளுக்குள்தான்... வெளியே காட்டியிருந்தா உள்ளே போயிருப்பாங்கங்கிறது வேற விஷயம்!!).

ஆனால், ‘விழா ரத்தான விஷயத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் எதுவும் இல்லை.. கல்லூரி நிர்வாகம்தான் காரணம்' என்று விஜய்யே கூறியதால் அமைதியடைந்த ரசிகர்கள் ஆங்காங்கே தங்கள் ஊர்களில் நலத்திட்ட விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விஜய் வழக்கமாக தான் பிறந்த எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனது பிறந்தநாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பது மற்றும் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை எந்த நிகழ்ச்சியிலும் விஜய் கலந்துகொள்ளவில்லை.

இதுபற்றி விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது விஜய்யை மிகவும் பாதித்துள்ளதாம். எனவே இந்த பிறந்த நாளில் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறினர்.

இன்று அவர் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

 

பெப்சி உமா கொடுத்த புகாரில் ஜெயா டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது!

பெப்சி உமா கொடுத்த புகாரில் ஜெயா டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது!

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான பெப்சி உமா கொடுத்த புகாரின் பேரில் ஜெயா டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சன் டிவியில் பிரபலமான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா. 15 ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதால் உமாமகேஸ்வரி என்ற அவர் பெப்சி உமா என்றே அழைக்கப்பட்டார். சில ஆண்டுகளாக தொலைக்காட்சியை விட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது ஜெயா டிவியில் ஆல்பம் என்ற நிகழ்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கிண்டி மகளிர் காவல்நிலையத்தில் பெப்சி உமா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கர நாகராஜ் தம்மை பலரது முன்னிலையில் தகாத வார்த்தையில் திட்டி அவமானப்படுத்தி உள்ளார். இது பற்றி ஜெயா டிவி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சங்கர நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கிண்டி மகளிர் போலீசார் சங்கர நாகராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 

சேஸிங் காட்சியில் விபத்து- நடிகர் தருண் கோபி காயம்!

சேஸிங் காட்சியில் விபத்து- நடிகர் தருண் கோபி காயம்!

சென்னை: படப்பிடிப்பில் நடந்த ஒரு சேஸிங் காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார் நடிகர் தருண் கோபி.

விஷால் நடித்த ‘திமிரு' படத்தை இயக்கியவர் தருண்கோபி. மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

இவர் இப்போது, ‘கன்னியும் காளையும் செம காதல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய விசி வடிவுடையான் தயாரித்து இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள படூர் கிராமத்தில் நேற்று நடந்தது. மோட்டார் சைக்கிளில் செல்லும் தருண்கோபியை ஒரு கார் துரத்தி மோதுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கார் ‘பிரேக்' பிடிக்காமல், தருண்கோபி மீது நிஜமாகவே மோதி விட்டது.

தருண்கோபி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அவருடைய கை-கால்களில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தருண் கோபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஓய்வில் உள்ளார். இந்த விபத்து காரணமாக, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

 

வடிவேலு நடிக்கவிருந்த கதை, கடைசியில் விஜய்க்குப் போனது! - கரு பழனியப்பன் ப்ளாஷ்பேக்

வடிவேலு நடிக்கவிருந்த கதை, கடைசியில் விஜய்க்குப் போனது! - கரு பழனியப்பன் ப்ளாஷ்பேக்

சென்னை: விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வடிவேலுதான். அப்புறம்தான் அதில் விஜய் வந்தார், என்று ரகசியத்தை உடைத்தார் இயக்குநர் கரு பழனியப்பன்.

துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப் பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் தந்த இயக்குநர் எழில் இயக்கும் படம் தேசிங்குராஜா.

இதுவரை தான் இயக்கிய படங்களிலேயே மிகப் பிடித்த படம் என்று எழிலே சொல்லும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளதாம் இந்தப் படம்.

இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் எழில் பற்றி அவருடன் பணியாற்றிய இன்னொரு இயக்குநரான கரு.பழனியப்பன் பேசினார்.

தனது பேச்சில், "எத்தனை வெற்றிகள் வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மனிதர் எழில். துள்ளாத மனமும் துள்ளும் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லி கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அப்போதைய வடிவேலு வரை இந்தக் கதையில் நடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

கதையை கேட்ட வடிவேலு, 'இது ரொம்ப நல்ல கதை. ஆனா இந்த நல்ல கதையில் நான் நடிக்கணுமா. நல்லா யோசிச்சு பாருங்க. ஒரு நல்ல கதைல நான் நடிச்சு வீணடிக்க விரும்பல. 6 மாசம் காத்திருந்து அப்பறம் வாங்க, அப்பவும் உஙளுக்கு இதே மனநிலை இருந்தா நான் நடிச்சு குடுக்குறேன்,' என்று கூறினார்.

அதன்பிறகு சூப்பர்குட் ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. விஜய் கால்ஷீட் தந்தார். இல்லாவிட்டால் வடிவேலுதான் நடித்திருப்பார். வடிவேலு நடித்திருந்தால் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருக்க முடியாது," என்றார்.

தேசிங்கு ராஜா படத்தில் விமல் நாயகனாகவும், சூரி அவருக்கு தமாஷ் வில்லனாகவும் நடித்துள்ளனர். பிந்து மாதவி, சிங்கம் புலி, ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

 

ராத்திரியில் ரன்பிர் கபூரும், கத்ரீனா கைஃபும் என்ன செய்றாங்க தெரியுமா?

ராத்திரியில் ரன்பிர் கபூரும், கத்ரீனா கைஃபும் என்ன செய்றாங்க தெரியுமா?

மும்பை: அவ்வப்போது சேர்ந்து, பிரியும் காதல் ஜோடியான பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்பிர் கபூரும், கத்ரீனா கைஃபும் இரவு நேரத்தில் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தீபிகா படுகோனேவை காதலித்து பிரிந்தார். அதன் பிறகு கத்ரீனா கைஃபை காதலித்து அவரையும் பிரிந்தார். ஆனால் ரன்பிர், கத்ரீனா ஜோடி அவ்வப்போது பிரிவதும், சேர்வதுமாக உள்ளது. தற்போது அவர்கள் மீண்டும் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் மெலனி ஈஸ்டன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இரவு நேரத்தில் ரன்பீரும், கத்ரீனா கைஃபும் பாலி ஹில் பகுதியில் ரிக்ஷா ஓட்டுவதாக ஒரு ரிக்ஷாக்காரர் தெரிவித்தார். கத்ரீனா ரிக்ஷா ஓட்டுகையில் அவரை போலீசார் நிறுத்தி ஆட்டோகிராப் வாங்கினார்களாம் என்று தெரிவித்துள்ளார்.

இது ரிக்ஷாக்காரர் கூறிய தகவல் என்பதால் அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை என்று மெலனி தெரிவித்துள்ளார்.

 

'மூட் அவுட்'டில் விஜய்... நாளைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா?

'மூட் அவுட்'டில் விஜய்... நாளைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா?

சென்னை: கடும் மூட் அவுட்டில் இருக்கும் விஜய், நாளை நடக்கும் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 39-வது பிறந்தநாளை நாளை 22-ம் தேதி சிறப்பாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர் (உள்ளுக்குள்தான்... வெளியே காட்டியிருந்தா உள்ளே போயிருப்பாங்கங்கிறது வேற விஷயம்!!).

ஆனால், ‘விழா ரத்தான விஷயத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் எதுவும் இல்லை.. கல்லூரி நிர்வாகம்தான் காரணம்' என்று விஜய்யே கூறியதால் அமைதியடைந்த ரசிகர்கள் ஆங்காங்கே தங்கள் ஊர்களில் நலத்திட்ட விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விஜய் வழக்கமாக தான் பிறந்த எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனது பிறந்தநாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பது மற்றும் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை எந்த நிகழ்ச்சியிலும் விஜய் கலந்துகொள்ளவில்லையாம்.

இதுபற்றி விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது விஜய்யை மிகவும் பாதித்துள்ளதாம். எனவே இந்த பிறந்த நாளில் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறினர்.

நாளை அவர் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது.