இன்று முதல் ரஜினியின் 'சிவாஜி 3 டி' ட்ரெயிலர்!

Sivaji 3 D Trailor From Today

ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்து 2007-ல் ரிலீசான ‘சிவாஜி' - தி பாஸ் படம், அடுத்த மாதம் புதுப் பொலிவுடன் வெளியாகிறது.

ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது. ரூ.80 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அனைத்துவித உரிமைகளையும் சேர்த்து ரூ. 150 கோடிக்குமேல் வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘சிவாஜி' படத்தை தற்போது ‘3டி' தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர் ஏவிஎம் நிறுவனத்தினர். கடந்த சில மாதங்களாக ‘சிவாஜி'யை 3டி-யில் மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

அடுத்ததாக ‘சிவாஜி 3டி' பட டிரெய்லர் வெளியிட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடக்கிறது. இதில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் பங்கேற்கின்றனர்.

ஒரு புதிய படத்துக்கே உரிய அத்தனை பரபரப்புடனும் சிவாஜியை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறது ஏவிஎம் நிறுவனம்.

 

ஹன்சிகாவுக்கு எகிறும் பிரஷர்: காரணம் யாரோ?

Hansika Gets Tensed

சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனுக்கு ஜோடியாக நடிக்குமாறு ஹன்சிகாவுக்கு பிரஷர் கொடுக்கிறார்களாம்.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் தலைவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா தான் நடிக்க வேண்டும் என்று பாஸ் என்று தனது பெயரை சுருக்கியுள்ள பாஸ்கரன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து எடு போனை, கூப்பிடு ஹன்சிகாவை என்று அழைத்து பேசியுள்ளனர்.

விஜய், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள ஹன்சி புதுமுகம் கூட எல்லாம் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஏன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலின் கூட மட்டும் நடித்தீர்களே. அவரும் புதுமுகம் தானே என்று எதிர்தரப்பு மறுகேள்வி கேட்டு பிரஷர் கொடுக்கிறதாம். இதனால் எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் அமுல் பேபி ஹன்சிக்கு பிரஷர் எகிறியுள்ளதாம்.

இது என்னடா வம்பா போச்சு என்று விழிக்கிறாராம் ஹன்சிகா.

 

திருவிளையாடல் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றத் தடை!

Hc Bans Digitilising Thiruvilayadal

சென்னை: திருவிளையாடல் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த விஜயா பிக்சர்ஸ் உரிமையாளர் ஜி.விஜயா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்' படத்தின் நெகடிவ் உரிமை என்னிடம் உள்ளது. அண்மையில் ‘கர்ணன்' படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றியமைத்து வெளியிட்டனர். இது மாபெரும் வெற்றி அடைந்தது.

இதைப் பார்த்து திருவிளையாடல் படத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி வெளியிட விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியிட்டுள்ளனர்.

இது சட்டவிரோதமானது. எனது உரிமையை பறிப்பதாக உள்ளது. டிஜிட்டல் முறையில் திருவிளையாடல் படத்தை மாற்றி அமைக்க விஜயலட்சுமி பிக்சர்ஸ்க்கும், ஜெமினி கலர் லேப் நிறுவனத்துக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு விஜயா தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து, திருவிளையாடல் படத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்ற ஜெமினி கலர் லேபுக்கும், விஜயலட்சுமி பிக்சர்ஸ்க்கும் தடைவிதித்தார். இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 

'புதுப் படத்துல இனியாவப் போடுங்க...'- இசையமைப்பாளரின் நிபந்தனை!

Music Director Recommends Iniya New Movie

"எங்கேயும் எப்போதும்' என்ற ஒரே படம் மூலம் 'முன்னணி' இசையமைப்பாளராகிவிட்டாராம் சத்யா. பெயரைக் கூட இப்போது சத்தியமூர்த்தி என்று மாற்றி வைத்துக் கொண்டுள்ளாரா.

இவரை தங்கள் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப் போயிருக்கிறார்கள் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தினர்.

பொதுவாக ஒரு இசையமைப்பாளரின் வேலை, முழு கதையையும் முதலில் கேட்டுவிட்டு, பாடலுக்கான சூழலைப் புரிந்து இசையமைப்பதுதான்.

ராஜா, ரஹ்மான், யுவன் என யாராக இருந்தாலும் இதுதான் வழக்கம்.

ஆனால் நம்ம சத்யா என்கிற சத்யமூர்த்தியோ, "படத்தோட தலைப்பு சரியில்ல, மாத்துங்க, கதையில இன்னும் விஷயங்களைச் சேருங்க..." என்று தன் அலப்பறையை ஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து அவர் போட்ட கண்டிஷன்தான் தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்காமல் தெறித்து ஓட வைத்திருக்கிறது. "இன்னொரு சின்ன சஜஷன்... இந்தக் கதைக்கு இனியாதான் பொருத்தமா இருப்பார், அதனால ஒடனே இனியாவை கதாநாயகியா போடுங்க... அப்பதான் எனக்கு இந்தப் படம் செட்டாகும... மியூஸிக் பண்ணுவேன்..' எனச் சொல்லிவிட்டாராம்.

என்னடா இந்த படத்துக்கு வந்த சோதனை என டென்ஷனாகிவிட்ட இயக்குநர்... சரி... இனியாதான் வேணும்னு இவர் ஏன் நுனிவிரல்ல நிக்கிறாரு? என உதவிகளிடம் கேட்க... அவர்கள் புரியாமல் நின்றார்களாம்.

ஏங்க.. உங்களுக்கு ஏதாவது புரியுதா?!

 

ரெசிடெண்ட் ஈவில் 5: ஹாலிவுட் ஆக்ஷன் விருந்துக்கு ரெடியாகுங்க!

Get Ready The Action Entertainer Resident Evil

பல பாகங்கள் வந்து வெற்றி பெற்ற படங்களில் 'ரெசிடெண்ட் ஈவில்' படத்துக்குச் சிறப்பிடம் உண்டு. அறிவியலும் ஆக்ஷனும் கலந்த அதிரடிப்பட வரிசையில் இப்படம் புகழ் பெற்றதாகும்.

இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி வெற்றியில் ஒன்றை ஒன்று மிஞ்சியுள்ளதை ஹாலிவுட் பட ரசிகர்கள் நன்கு அறிவர்.

இப்போது ஐந்தாம் பாகமாக வெளிவரவுள்ளது 'ரெசிடெண்ட் ஈவில் - ரீட்ரிபூஷன்'. இதை எழுதி இயக்கியிருப்பவர் பால். டபிள்யூ. எஸ்.ஆண்டர்சன். இது வீடியோ கேம்ஸ் சீரிஸ் அடிப்படையில் கதை பின்னப்பட்டதாகும். புதிய படத்தில் இதற்கு முந்தைய படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களும் உண்டு. புதிதாகச் சில பாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மில்லா ஜாவோ விச், சீன்னா கிளாரி.ஜோஹன் அர்ப்.லி பிங்பிங், ஷன் ராபர்ட்ஸ்,கெவின் டுராண்ட்... போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கதை எழுதி இயக்கியுள்ளவர்.பால்.டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன். இவர் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட. இசை - டாமன்மேன்டி இசைக்குழு, ஒளிப்பதிவு -க்ளன் மேக் பெர்சன்.

இப்படத்துக்கு 2011 அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. டிசம்பரில் முடிந்தது. பக்கா திட்டமிடல். தொடங்கப்பட்ட அன்றே வெளியிடும் தேதியும் குறிக்கப்படுவது ஹாலிவுட் மரபு. அதன்படியே அன்று அறிவிக்கப்பட்டபடி 2012 செப்டம்பர் 14ல் வெளியாகிறது இந்தப் படம்.

இந்தப்படம் ஐநாக்ஸ் 3டியில் மட்டுமல்ல, 2டியிலும் வெளியாகிறது.

அம்பரல்லா கார்ப்பரேஷன் பல மர்மங்கள் நிறைந்த அமைப்பு. ஆலிஸூக்கும் அதற்கும் என்ன தொடர்பு ? பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆலிஸ் முயல்கிறாள். ஒரு கட்டத்தில் தான் யார் என்கிற மர்ம முடிச்சுக்கும் விடை கிடைக்கிறது. அம்பரல்லா கார்ப்பரேஷன் என்ன செய்கிறது என்கிற கேள்விக்கும் விடை கிடைக்கிறது.

மர்மங்கள், அதிரடி அக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக படம் உருவாகியுள்ளது. அலிஸாக மில்லா நடித்திருக்கிறார்.

டோக்கியோ, நியூயார்க், லண்டன் ஆகிய இடங்களில் கதை நிகழ்வதாகக் காட்டப்படுகிறது. அதாவது ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்கள்தான் கதைப் பின்னணி. பொதுவாக ஹாலிவுட் படங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, சீனா என எதாவது ஒரு நாட்டில் நடப்பதாகவே இருக்கும். இது மூன்று கண்டங்களில் நிகழும் உலகளாவிய படமாக இருக்கும்.

ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட புகழ் பெற்ற ஆக்ஷன் - சயின்ஸ் பிக்ஷங்களின் செல்வாக்கு இப்படத்தில் உண்டு. அவற்றையெல்லாம் தாண்டிய பிரமாண்ட முயற்சிகளும் உண்டு.

படத்தில் இடம் பெரும் சண்டைக் காட்சிகள் ஆசிய சினிமாவின் தாக்கத்தில் இருக்கும் என்கிறார்கள். தாய்லாந்து படங்களில் ஆக்ஷன் பாதிப்பும் இருக்குமாம். ஆக்ஷன் காட்சிகளில் '3டி' தொழில் நுட்பம் மயிர்க்கூச்செரிய வைக்கும் என்கிறார்கள்.

மொத்தம் 44 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டோரன்டோவிலுள்ள சினிஸ்பேஸ் கிப்ளிங் ஸ்டுடியோ, நியூயாக்கிலுள்ள டைம்ஸ் கொயர், மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கம் போன்ற புகழ் பெற்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இது, ரெசிடெண்ட் ஈவில் தொடரில் 3டி பயன்படுத்தப்படும் இரண்டாவது படமாகும். ரெட் எபிக் கேமெரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்படம் உலகெங்கும் செப்டம்பர் 14ல் வெளியாகிறது. ஸ்க்ரீன் ஜெம்ஸ் விநியோகிக்கிறது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

தமிழ் உள்பட மற்ற இந்திய மொழிகளிலும் 'ரெசிரெண்ட் ஈவில்- ரீட்ரிபூஷன்' வெளியாகிறது. ஒரு புதிய ஆக்ஷன் அனுபவத்துக்கு தயாராகுங்கள்!

 

கௌதம் மேனன் படத்தில் 'தெய்வத் திருமகள்' சாரா

Gautham Brings Deiva Thirumagal Back To Kollywood

இயக்குனர் கௌதம் மேனின் படத்தில் தெய்வத் திருமகளில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கௌதம் மேனன் கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை துவங்கி அசினை கதாநாயகியாக ஒப்பந்தமெல்லாம் செய்தார். ஆனால் அந்த படம் 2 முறை கைவிடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஒரு மழைக்காலத்தை தூசு தட்டி எடுத்து 'சென்னையில் ஒரு நள்ளிரவு' என்று பெயரை மாற்றி மீண்டும் துவங்கியிருக்கிறார்.

இதில் 'மைனா' புகழ் விதார்த் மற்றும் மலையாள நடிகர் அனூப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விக்ரமின் தெய்வத் திருமகளில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் சாராவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தனது அசத்தலான நடிப்பால் தமிழக மக்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார் சாரா. அந்த படத்திற்கு பிறகு தமிழ் பக்கம் வராத சாராவை கௌதம் மேனன் சென்னையில் ஒரு நள்ளிரவுக்காக அழைத்து வருகிறார்.

படத்தில் சாராவுக்கு முக்கிய கதாபாத்திரமாம். சாராவை மீண்டும் திரையில் பார்க்க அனைவருமே ஆவலாக உள்ளனர் கௌதம்.

 

பிட், ஜூலி திருமண மோதிரங்கள் ரூ.8.7 கோடி மட்டுமே

Brad Pitt Angelina Jolie Order 1m Wedding Rings

லண்டன்: ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் அடுத்த சனிக்கிழமை திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். அதற்காக ரூ. 8.7 கோடி செலவில் திருமண மோதிரங்கள் செய்துள்ளனர்.

ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் திருமணமாகாமலேயே பல ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் 3, தத்தெடுத்த குழந்தைகள் 3. ஆக மொத்தம் 6 குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு குழந்தைகள் தொடர்ந்து நச்சரி்த்து வந்ததால் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து அவர்களின் திருமணம் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சனிக்கிழமை பிரான்சில் உள்ள அவர்களின் வீட்டுக்கு அருகே இருக்கும் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடக்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே அவர்கள் திருமண மோதிரத்திற்கு ஆர்டர் கொடுத்து அவையும் ரெடியாகிவிட்டன. ரோஸ் கோல்டால் செய்யப்பட்டு வைரக்கற்கள் பதித்த அந்த மோதிரங்களின் விலை ரூ.8.7 கோடி மட்டுமே.

என்ன விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறதா?

 

காதலி அஞ்சனாவுடன் 'நான் ஈ' நானிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

Naan Ee Nani Gets Engaged

நான் ஈ படத்தில் நடித்த பிரபல இளம் தெலுங்கு நடிகர் நானிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அஞ்சனா என்பவரை அவர் மணக்கிறார். மணமகள் விசாகப்பட்டினத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இது ஒரு காதல் திருமணமாகும். சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விசாகப்பட்டினத்தில் சந்தித்தனர். அப்போது நானி ரேடியோ அறிவிப்பாளராக இருந்தார். அந்த சந்திப்பு பின்னர் தொடர்ந்தது. காதல் மலர்ந்தது.

பின்னர் நானி நடிகரான பின் இருவர் காதலும் வெளிச்சத்துக்கு வந்தது. இதுபற்றி பத்திரிகைகள் எழுதியபோது, அனைவரையும் திட்டித் தீர்த்தார் நானி. இல்லவே இல்லை என்றெல்லாம் மறுப்பு சொன்னார்.

கடைசியில் செய்தி உண்மையாகிவிட்டது. இருவருக்கும் நேற்று விசாகப்பட்டணத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. டிசம்பரில் திருமணம் நடக்கிறது.

நானி இப்போது தெலுங்கில் கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.

 

டுவிட்டரைக் கலக்கும் அஜீத்தீன் 'ஜிம்' படங்கள்

Ajith Flexes His Muscles

நடிகர் அஜீத் குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட படங்கள் தான் தற்போது டுவிட்டரை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோரை வைத்து பெயரிடப்படாத படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அஜீத் புது கெட்டப்பில் வருகிறாராம். இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அஜீத்தை பார்த்த இயக்குனரிடம் அவர் விரைவில் தன்னிடம் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று உறுதியளித்துள்ளார்.

அதன் பிறகு 15 நாட்கள் கழித்து அஜீத்தை பார்த்த இயக்குனர் அசந்துவி்ட்டாராம். தினமும் ஜிம்முக்கு போய் அஜீத் கும்மென்று இருக்கிறார். இதையடுத்து அஜீத் உடற்பயிற்சி செய்யும்போது அதை போட்டோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஷ்ணுவர்தன். அந்த போட்டோக்களை பல பிரபலங்களும் ரீடுவீட் செய்து வருகின்றனர். இப்போதைக்கு அந்த போட்டோக்கள் தான் டுவிட்டரைக் கலக்கி வருகின்றன.

அடுத்த செட் போட்டோக்களை 30 நாட்கள் கழி்த்து வெளியிடுவதாக விஷ்ணுவர்தன் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

திரையுலகில் 20 ஆண்டுகள் இருந்தும் இன்னும் அதே அர்ப்பணிப்புடன் இருக்கிறார் அஜீத். 13 அறுவை சிகிச்சைகள் செய்த ஒருவர் தினமும் 6 மணிநேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது சாதாரண விஷயம் அல்ல. அவரது அர்ப்பணிப்பை பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியமாக உள்ளது என்றார்.

அஜீத் பெரிய தொப்பை வைத்திருக்கிறார், உருண்டுவிட்டார் என்று பலர் நக்கலடித்து வந்தனர். ஆனால் இந்த படத்தைப் பார்ப்பவர்கள் அவரின் உடல்வாகைப் பார்த்து அதிசயிக்கப்போவது உண்மை.

 

விஸ்வநாதன் ஆனந்தின் வெற்றிப்பாதை சிறப்பு நிகழ்ச்சி

Vetri P Padhai I Day Special Program Jaya Tv

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி என்றாலே சினிமா நடிகர், நடிகையர்களின் பேட்டிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் ஜெயா டிவியில் சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது.

சதுரங்கத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த். அவர் பெற்ற வெற்றியின் மூலம் நம் தேசத்தின் பெருமை உலகளவில் உயர்ந்தது. ஆனந்தின் சாதனைகளையும், வெற்றிகளையும் இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் ஜெயா டிவியில் சிறப்பு பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஸ்வநாதன் ஆனந்தின் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. அதில் `இன்றைய இளைய சமுதாயம், நாளைய வெற்றிப்பாதையில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதில் தொடங்கி, விடாமுயற்சி எப்படி தன்னை உயர்த்தியது என்பது வரை அவர் விவரிக்கிறார்.

சுதந்திர தினத்தன்று ஜெயா டிவியில் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சினிமா நடிகர்களின் பேட்டியில் லயித்து விடாமல் இதுபோன்ற சாதனை மனிதர்களின் பேட்டிகளை கண்டு ரசிக்கலாம்.

 

அடையாளத்தில் அசத்திய ‘லொள்ளு சபா’ மனோகர்

Adayalam Lollu Shabha Manokar Share His Experience

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அடையாளம் நிகழ்ச்சி சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இன்றைக்கு பிரபலங்களாக உயர்ந்தவர்களைப் பற்றிய நிகழ்ச்சி.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அறிமுகம் ஆன சந்தானம், லொள்ளு சபா மனோகர், நீயா நானா கோபிநாத், அது இது எது சிவகார்த்திகேயன் போன்றோர் இன்றைக்கு பிரபலங்களாக உயர்ந்துள்ளனர்.

தங்களை அடையாளப்படுத்திய விஜய் டிவியுடன் தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர். இந்தவாரம் லொள்ளு சபா மனோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மனோகரின் பேச்சும், கை சைகையும் சிறு குழந்தைகளுக்குக் கூட பிடித்தமானது.

பல்வேறு கெட் அப் களில் சந்தானத்துடன் இணைந்து அவர் நடத்திய லொள்ளு சபா நிகழ்ச்சிகளை ரீவைண்ட் செய்தனர். அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார் மனோகர்.

மனோகரைப் பற்றி அவருடன் பணியாற்றியவர்களும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர்களுக்காக எந்த ஒரு தொலைக்காட்சி சேனலும் செய்யாத அட்டகாசமான நிகழ்ச்சி அடையாளம் என்றால் மிகையாகாது.

 

'ஈ'யை விரட்டி விட்ட ஜுலாயி!

Allu Arjun S Julayi Beats Eega Collection Box Office   

ஹைதராபாத்: தென்னகம் முழுவதும் வசூல் வேட்டையில் முன்னணியில் இருந்து் வந்த ஈகா படம் அமெரிக்காவில் புதிய சவாலை சந்தித்துள்ளது. அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள ஜுலாயி படம் ஈகாவின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறதாம்.

அமெரிக்காவில் அல்லு அர்ஜூன் படத்திற்கு முதல் முறையாக பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளதாம். ராஜமெளலியின் ஈகா அதாவது தமிழில் நான் ஈ, படத்தின் முதல் வார இறுதி வசூல் சாதனையை ஜுலாயி முறியடித்து விட்டதாம்.

ஜூலை 5ம் தேதி ஈகா படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது. தொடக்க வசூலில் அது சாதனை படைத்தது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதல் வாரத்தில் அப்படம் ரூ. 3 கோடியை வசூல் செய்தது.

அதேசமயத்தில் இதே காலகட்டத்தில் ஜுலாயி படத்தின் வசூல் ரூ. 3.70 கோடியாக வசூலாகியுள்ளதாம்.

இருப்பினும் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மாத வசூல் சாதனையை ஈகா படம்தான் வைத்துள்ளதாம். இப்படம் இதுவரை ரூ. 5.98 கோடியை வசூலித்துள்ளதாம். ஆனால் ஜுலாயி படம் இதே ரேஞ்சுக்கு ஓடினால், 20 நாட்களிலேயே ஈகா படத்தின் ஒரு மாத வசூல் சாதனையை முறியடித்து விடும் என்கிறார்கள்.

 

புதியவர்களிடம் கதை கேட்கவே யோசிக்க வேண்டியிருக்கிறது! - யுடிவி தனஞ்செயன்

Dhananjayan Clarifies On Thaandavam   

சென்னை: தாண்டவம் கதை ஒரிஜினலாக இயக்குநர் விஜய்யால் எழுதப்பட்டது. வேறு யார் கதையிலிருந்து காட்சிகள் கையாளப்படவில்லை என யுடிவி தனஞ்செயன் விளக்கம் அளித்துள்ளார்.

விக்ரம் - அனுஷ்கா - எமி நடிக்க, யுடிவி பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் தாண்டவம். ஏஎல் விஜய் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் படத்தின் கதைக்கு சொந்தம் கொண்டாடி ஒரு உதவி இயக்குநர், சங்கத்தில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து, யுடிவி சார்பில் அதன் நிர்வாகியான தனஞ்செயனிடமும், உதவி இயக்குநரிடமும் விசாரித்த இயக்குநர் சங்க நிர்வாகிகள் அமீர் மற்றும் ஜனநாதன் ஆகியோர், இருவரின் ஸ்க்ரிப்டையும் படித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து யுடிவி தனஞ்செயன் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டி:

இந்தப் படத்தின் கதை விஷயத்தில் வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. காரணம், புகார் தெரிவித்துள்ள உதவி இயக்குநர் என்னைச் சந்திக்கும் முன்பே, நான் விஜய்யிடம் கதை கேட்டுவிட்டேன். அதைத் தொடர்ந்துதான் தெய்வத்திருமகள் படத்தின் வெற்றிவிழாவில், இதே டீமுடன் இணைந்து அடுத்து படம் செய்யப் போகிறேன் என்பதையும் அறிவித்திருந்தேன்.

அதன் பிறகு ஒரு நாள் இந்த உதவி இயக்குநர் வந்து கதை சொன்னார். நான் கேட்டு முடித்ததும், வேறு கதை ஒன்றை நாங்கள் படம் பண்ண தேர்வு செய்துவிட்டதை அவரிடம் சொன்னேன். நாங்கள் முடிவு செய்த கதையில் ஒரு ப்ளைன்ட் கேரக்டர் வருகிறது. இந்த உதவி இயக்குநர் சொன்ன கதையின் ஒன் லைனிலும் ஒரு ப்ளைன்ட் பாத்திரம் வருகிறது. அவ்வளவுதான். இந்த ஒன்றைத் தவிர இரண்டின் திரைக்கதையும் வேறு வேறு.

எனவே இந்தக் கதை வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தியதோடு அவரது ஸ்கிர்ப்டை கையோடு கொடுத்தனுப்பிவிட்டேன்.

இதெல்லாம் நடந்தது, கடந்த செப்டம்பர் மாதத்தில். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஓடிவிட்ட பிறகு இப்போது போய் புகார் தந்திருக்கிறார்.

மீண்டும் அந்த தம்பியை அழைத்து, என்ன பிரச்சினை என்று கேட்டேன். அதற்கு அவர், "நீங்கள் என் கதையை எடுத்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஆனால், ஒருவேளை நான் சொன்ன ஸ்க்ரிப்டை முழுமையாகக் கேட்ட நீங்கள், அதில் ஏதாவது காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? என்று கேட்டார்.

இதை என்னவென்பது? அவர் கதையைக் கேட்டதோடு சரி. எனக்கு சரிப்படாது என்றதுமே அதை திருப்பித் தந்துவிட்டேன். அதை நான் மறந்தேவிட்டேன். விஜய் சொன்னது புதிய ஸ்க்ரிப்ட். இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இருவரின் ஸ்க்ரிப்டுமே இயக்குநர் சங்கத்தில் உள்ளது. படித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.

எனவே, 'அந்த சந்தேகம் உனக்கு இருந்தால், சங்கத்தில் புகார் தரலாம், சட்டப்படி கூட வழக்குப் போடலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை' என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டேன்.

கதை கேட்டது ஒரு குற்றமா... அப்படிப் பார்த்தால் இனி யாரிடமும் எந்தத் தயாரிப்பாளரும் கதையே கேட்க முடியாதே. எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் சொல்லும்போதே கமிட் ஆகிவிட வேண்டும் என்ற கட்டாயம் அல்லவா வந்துவிடும்...

விஜய்க்கு இந்த விவகாரம் எதுவுமே தெரியாது. அவர் எப்போதோ இந்த ஸ்க்ரிப்டை எழுதிவிட்டார். எனவே உதவி இயக்குநரின் கதையில் என்ன இருந்தது என்றுகூட அவருக்குத் தெரியாது.

படம் வரட்டும். வந்த பிறகு அவர் கதையை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோமா என்று சொல்லட்டும். நான் அனைத்துக்கும் கட்டுப்படுகிறேன். அதைவிட்டு, படத்தில் என்ன எடுத்திருக்கிறோம் என்றே தெரியாமல் புகார் கூறுவது சரியல்ல.

அப்படிப் பார்த்தால், பார்த்திபன் நடித்து வெளிவந்த சபாஷ் படத்தின் 'ஒன்லைன்'தான், இந்த உதவி இயக்குநர் என்னிடம் சொன்ன கதை. அவர் என்னிடம் கதை சொன்னபோதே, இது எனக்கு நினைவில் வந்தது. ஆனால் அவரை நோகடிக்க வேண்டாமே என அமைதியாக இருந்துவிட்டேன் அன்றைக்கு. நியாயமாக இயக்குநர் சுபாஷ் அல்லவா இதற்காக சண்டைக்கு வந்திருக்க வேண்டும்...", என்றார்.

 

பலாத்காரம் செய்யப்பட்ட சோஹா... கதறி அழுத பரிதாபம்!

Soha Ali Khan Cried Badly After Being Molested

மும்பை: 'ஹெடிங்'கைப் பார்த்து பதறிப் போய் வந்த ரசிகர்களே... ரிலாக்ஸ். இது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிதான்.

அதாவது படத்தில் பலாத்காரம் செய்வது போல எடுக்கப்பட்ட காட்சியில் நடித்ததால், அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் அழுது விட்டாராம் சோஹா.

சைப் அலிகானின் தங்கச்சிதான் சோஹா. இவர் சமீபத்தில் ஒரு புதிய படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்றபோது பலாத்கார காட்சியொன்றைப் படமாக்கினர். அதில் நடித்தபோது உண்மையிலேயே பதறிப் போய் விட்டாராம் சோஹா. மேலும் காட்சியை படமாக்கி முடித்தும் அழுது விட்டாராம்.

குழந்தைகள் கடத்தல் குறித்த படம் இது. இதில் என்ஆர்ஐ வேடத்தில் நடிக்கிறார் சோஹா. அதில் ஒரு குண்டர் கும்பல் இவரை பலாத்காரம் செய்வது போல காட்சி வருகிறதாம். அதில் நடித்து முடித்த பிறகுதான் ஓவென்று அழுதாராம் சோஹா.

இந்தக் காட்சியைப் படமாக்கியபோது இயக்குநர், கேமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அரங்கில் இருந்தனராம். காட்சியைப் படமாக்கியபோது சோஹா உடம்பில் நிஜமாகவே சிராய்ப்புகள் ஏற்பட்டு விட்டதாம். மருந்து போட்டுக் கொண்டு பின்னர் ரெஸ்ட் எடுத்தாராம் சோஹா...

 

'மேக்ஸி(ம)ம்' கவர்ச்சி - அட,ஸ்ரேயாவா இது!

Shriya S Zizzling Photos Maxim

மும்பை: பிரபல மேக்ஸிம் இதழின் இந்த மாத அட்டையை அலங்கரித்திருப்பவர் தமிழ் நடிகை ஸ்ரேயா.

அதிகபட்ச கவர்ச்சி எனும் அளவுக்கு, அழகுகள் தெரிய கொடுத்திருக்கும் போஸ்கள், சக நடிகைகளைத் திகைக்க வைத்துள்ளன. புது வாய்ப்புகளையும் அவரை நோக்கித் திரும்ப வைத்திருக்கின்றன.

மேக்ஸிம் இதழுக்கு ஸ்ரேயா போஸ் தருவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஒரு முறை புகைப்படமெடுத்துள்ளார்.

இந்த முறை, ரொம்பவே முன்னேறி, கிட்டத்தட்ட டாப்லெஸ் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்துள்ளதுதான் விசேஷம்.

இந்தப் படங்கள் குறித்து ஸ்ரேயா கூறுகையில், "என் எல்லைகள் எனக்குத் தெரியும். அதற்குட்பட்டே நான் அந்த இதழுக்கு புகைப்படங்கள் கொடுத்தேன். அழகை வெளிப்படுத்துவதில் எனக்கு அலாதி ஆர்வம் உண்டு. இன்று நாடே இதைப் பற்றி பேசுவதைக் கேட்க சந்தோஷமாக உள்ளது," என்றார்.

இந்த அதிகபட்சக் கவர்ச்சி, வாய்ப்புகளைப் பிடிக்க அவர் கையாளும் முயற்சி என சக நடிகைகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

எல்லோரும் அதற்குத்தானே முயற்சி பண்ணுகிறார்கள்!

 

ஞாயிற்றுக்கிழமையை சூடாக்கிய பூனம் பாண்டே குளியல் படங்கள்!

Poonam Pandey Beats The Heat Naked In Her Bath Tub   

டெல்லி: பரபரப்பு கிளப்புவதில் தனக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட நிர்வாணத் திலகம் பூனம் பாண்டே, அடுத்து தான் குளிப்பதை தானே படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஒரு பெரிய பாத் டப்பில் தம்மாத்தூண்டு துணியும் இல்லாமல், நிர்வாணமாக குளிப்பதை, ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

"ஞாயிற்றுக்கிழமை... இந்தப் பூனம் பாண்டே படங்களைப் பார்த்து சூடாகுங்க" என்று வேறு தன் படங்களுக்கு தானே கமெண்ட் அடித்துள்ளார் பூனம்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, தனது முன்னழகைப் படம்பிடித்து வெளியிட்டு, என் முன்னழகு எவ்வளவு பெருசு பாத்தீங்களா.. இந்தியாவில வேறு யாருக்காவது இப்படி இருக்குமா என்று கேட்டு சில படங்களையும் வெளியிட்டிருந்தார்.

பூனம் பாண்டேயின் இந்த செயல் கொஞ்சம் கிறுக்குத்தனமாகத் தெரிந்தாலும், அவரது டெக்னிக் நன்றாகவே வேலை செய்கிறது. ஏகப்பட்ட வெளிநாட்டு மாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளதாம். பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளனவாம்!

 

சென்னை எக்ஸ்பிரஸ் - ஷாரூக் ஜோடியாக தீபிகா!

Chennai Express Deepika Star With Shah Rukh Again

மும்பை: தென்னிந்தியாவில் எந்த பாலிவுட் நடிகருக்கும் இல்லாத அளவு ரசிகர் - ரசிகைகள் ஷாரூக்கானுக்கு உண்டு.

அவரும் அதைப் புரிந்து கொண்டு, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பாத்திரமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் வந்த ராஒன் படத்தில் கூட, அவர் தென்னிந்திய இளைஞனாகத்தான் நடித்திருந்தார்.

இப்போது தனது அடுத்த படத்துக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

மும்பையிலிருந்து சென்னை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் கதாநாயகன் பயணிக்கிறான். பயணத்தின்போது என்ன நடக்கிறது? என்பதுதான் இந்தப் படம்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிப்பவர் தீபிகா படுகோனே. ஷாரூக்கானால் ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் தீபிகா என்பது நினைவிருக்கலாம்.

படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கானை வைத்து ரோஹித் ஷெட்டி எடுக்கும் முதல் படம் ஆகும். இதற்கு முன்பு அஜய் தேங்கன் நடிப்பில் எட்டுப் படங்களை தயாரித்திருக்கின்றார். படப்பிடிப்பு, சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் நடக்கவிருக்கிறது.

 

சன் டிவியில் ‘அரவான்’ ‘வேங்கை’ சுதந்திர தின சிறப்புத் திரைப்படம்

Independence Day Special Film Aravaan Vengai

சுதந்திர தினத்தை ஒட்டி விடுமுறை நாளில் கல்லா கட்டுவதற்காக தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப்படங்களை வரிசையாக ஒளிபரப்புவார்கள். சன் தொலைக்காட்சியில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று அரவான் திரைப்படமும், வேங்கை திரைப்படமும் ஒளிபரப்புகின்றனர்.

சுதந்திர தினத்தன்று நடிகர், நடிகையர்களை வைத்து பேட்டி என்ற பெயரில் அவர்களை கேள்வி கேட்பதும், அவர்கள் நடித்த திரைப்படங்களைப் போடுவதும்தான் தமிழ் சேனல்களின் பாரம்பரியம். அன்றைய தினம் சுதந்திரத்தைப் பற்றி எதுவும் கூறுவார்களோ இல்லையோ கண்டிப்பாக மூன்று அல்லது நான்கு திரைப்படங்களாவது போடுவார்கள்.

இந்த ஆண்டு கில்லி, அரவான், வேங்கை திரைப்படங்களை ஒளிபரப்பி புண்ணியம் கட்டிக்கொள்கிறது சன் டிவி. கே. டிவியில் கேட்கவே வேண்டாம் அரதப் பழசான படமாக ஒளிபரப்புகிறார்கள். அதில் முக்கியமானவை ஜெய்ஹிந்த், வீராப்பு, பழனி போன்ற திரைப்படங்கள். சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை பாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுங்கள் என்று கூறுவது தொலைக்காட்சி நிலையத்தாரின் தேசபக்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.