அடுத்து விஷ்ணுவர்தன் - ஏ எம் ரத்னம் படம்தான் - அஜீத் உறுதி

My Next Movie With Vishnuvardhan    | அஜீத்  
பில்லா 2 படத்துக்குப் பிறகு தான் அடுத்து நடிப்பது, ஏஎம் ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கும் படம்தான் என்பதை உறுதி செய்தார் நடிகர் அஜீத்.

அஜீத்தின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம் பில்லா. இந்தப் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இப்போது தயாரிப்பில் உள்ள பில்லா 2 படத்தை இயக்கவிருந்தவர் விஷ்ணுவர்தன்தான். ஆனால் சில காரணங்களால் படம் சக்ரி டோலெட்டி கைக்குப் போனது.

இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த யூகங்கள் பல வெளிவரத் தொடங்கிவிட்டன.

இதுகுறித்து சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அஜீத் கூறுகையில், "ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன்.

இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் ஆர்யாவும் நடிக்க உள்ளார். இது மங்காத்தா படம் போல அமையும். எனது வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார் அஜீத்.

விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு, விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளேன்," என்றார்.
 

சினிமா ஆசையில் வடபழனியைச் சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

சினிமா நடிகை ஆகும் ஆசையில் சென்னைக்கு வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சமல்ல. ஒரு நாளில் நூறுக்கும் குறையாத பெண்கள் இப்படி வருகிறார்கள்.

தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல, மும்பை, ஹைதராபாத், முக்கியமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான இளம் பெண்கள் எதற்கும் தயாராக கோடம்பாக்கம், வடபழனி, திநகர் பகுதிகளில் வந்து குவிகிறார்கள்.

அப்படி வடபழனிக்கு வந்த ஒரு பெண் நந்தினி (19). திருப்பூர் அனுப்பர்பாளையம் சொந்த ஊர். ப்ளஸ்டூ படித்து முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசை வந்துவிட்டது.

தோழிகள் சொன்ன ஐடியாபடி சென்னைக்கு வண்டியேறினார்.

வடபழனியில் உள்ள ஸ்டுடியோ வாசலில் நின்ற கொண்டு அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சிலர், வழி தெரியாமல் ஒரு பெண் நிற்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் டேனி, நந்தினியை மீட்டு போலீசிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார். சினிமா நடிகையாவதற்காக சென்னை வந்தேன். ஸ்டூடியோவில் வாய்ப்பு கேட்டு சென்றபோது உள்ளேவிட மறுத்து விட்டனர் என்று போலீசாரிடம் கூறியுள்ளார் (அது எந்த ஸ்டுடியோ உள்ளே விட மறுத்தது... இப்போதுதான் அத்தனை ஸ்டுடியோக்களும் ஆள் நடமாட்டமின்றி காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனவே!).

அவருக்கு போலீசார் அறிவுரை கூறியதுடன், அவரது பெற்றோரை வரவழைத்து நந்தினியை ஒப்படைத்தனர்.
 

'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் விஷால்!

Vishal Play Lead Role Saravanan Next
எங்கேயும் எப்போதும் படம் மூலம் கவனத்தைக் கவர்ந்த இளம் இயக்குநர் சரவணன்.

இவர் தனது அடுத்த படத்தை லிங்குசாமி நிறுவனத்துக்கு இயக்கப் போவதாகவும், அதில் ஆர்யா நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இப்போது அந்தப் படத்திலிருந்து ஆர்யா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கவிருப்பவர் விஷால். சமீபத்தில் விஷாலை நேரில் சந்தித்து கதை சொன்னார் சரவணன். கதை பிடித்துப்போனதால், சமர் மற்றும் சுந்தர் சி படங்கள் முடிந்ததும் ஷூட்டிங் போகலாம் எனக் கூறியுள்ளாராம் விஷால்.

இதற்கிடையே, தொழிலாளர் போராட்டம் காரணமாக தடைபட்டிருந்த சமர் பட வேலைகள் விறுவிறுப்பாகியுள்ளன.

இந்தப் படத்தின் முதல் ஸ்டில்லை மே 1-ம் தேதி வெளியிட்டிருந்தார் விஷால்.

அடுத்து பாங்காக் மற்றும் மலேசியாவிலும் படப்பிடிப்பை நடத்தப் போகிறார்களாம்.
 

ஜெயம் ரவிக்கு அமலா பால் இல்லையாம், திரிஷாதானாம்!

Trisha Romance Jayam Ravi Boologam   
ஜெயம் ரவியின் பூலோகம் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் இல்லை த்ரிஷா நடிக்கிறார். அதற்கான ஒப்பந்ததமும் கையெழுத்தாகிவிட்டது.

புதுமுக இயக்குனரான கல்யாண் கிருஷ்ணா ஜெயம் ரவியை வைத்து எடுக்கும் படம் பூலோகம். இதில் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று முதலில் பேசப்பட்டது. அடுத்து என்ன ஆனதோ ஏது ஆனதோ நயன் கிடையாது மைனா அமலா பால் தான் நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இப்போது ரவி ஜோடி அமலா பாலும் இல்லையாம். அதற்கு பதில் ரவியுடன் ஏற்கனவே ஜோடி போட்ட த்ரிஷா தான் மறுபடியும் ஜோடி சேர்கிறார். இது வெறும் தகவல் இல்லை. ஒப்பந்தம் போட்டு அதில் த்ரிஷா கையெழு்ததும் போட்டிவி்ட்டாராம். அதனால் இனி பூலோகத்தின் நாயகி த்ரிஷா மட்டுமே.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 20ம் தேதி துவங்குகிறது. இந்த படத்திற்காக சென்னை சினிமா ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்ட மார்க்கெட் செட் போட்டுள்ளார்களாம். இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். பெரிய்ய்ய பட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது.
 

ஆங்கில படத்தில் நீது சந்திரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஹோம் ஸ்வீட் ஹோம்' என்ற ஆங்கில படத்தில் நடிக்க இருப்பதாக நீது சந்திரா கூறினார். தமிழில் 'யாவரும் நலம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இவர் இப்போது அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக, 'ஆதி பகவன்' படத்தில் நடித்து வருகிறார். இவர், கிரேக்க இயக்குனர் கிரியகோஸ் டோபாரிடிஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் ஆங்கிலம் மற்றும் கிரீஸ் மொழியில் தயாராகிறது. சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யபை சந்தித்தார் கிரியகோஸ். அப்போது தான் இயக்கப் போகும் படத்துக்காக, இந்திய நடிகை ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். இதையடுத்து அனுராக், நீதுவின் பெயரை பரிந்துரைத்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தினகரன் நிருபரிடம் நீது சந்திரா கூறியதாவது: அனுராக்தான் இந்தப் படத்துக்காக என்னை பரிந்துரை செய்தார். 'ஹோம் ஸ்வீட் ஹோம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 8-ம் தேதி சைப்ரஸில் தொடங்குகிறது. இதற்காக 7-ம் தேதி அங்கு செல்கிறேன். என்னுடன் இரண்டு கிரீக் நடிகர்களும் ஒரு ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார்கள். ரொமான்டிக் காமெடி படமான இதன் ஷூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


 

மதன்பாப்பின் பாட்டு தர்பார் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
கிரியேட்டிவ் கோம்ப் நிறுவனம் சார்பில் அர்ச்சித் தயாரிக்கும் நிகழ்ச்சி, 'பாட்டு தர்பார்'. மதன்பாப் நடத்துகிறார். மே 6-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த நிகழ்ச்சி 3 பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி 'பாட்டோட கதை கேளு'. பாடல் பிறந்த கதை, சிறப்பு உள்ளிட்ட விவரங்களை சொல்வேன். இரண்டாவது பகுதி 'சிரிப்பு மழை'. இதில் மிமிக்ரி கலைஞர்கள் சிரிக்க வைப்பார்கள். அடுத்து, 'என் கேள்விக்கு என்ன பதில்'. இதில் திரைப்பட கலைஞர்களை பேட்டி காண்கிறேன். ஒரு காப்பி ஷாப்பில் நடப்பது மாதிரியான நிகழ்ச்சி. அதனால் பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகிறோம். இவ்வாறு மதன்பாப் கூறினார்.


 

கோ படத்துக்கு நாகிரெட்டி விருது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மறைந்த தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, பி.நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. முதலில், பாடகர் உன்னி மேனனின் இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு பி.வெங்கட்ராம ரெட்டி வரவேற்றார். ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன், வைரமுத்து, பிரபு, நதியா சிறப்புரையாற்றினர். கடந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படமாக, நடுவர்கள் சவுகார் ஜானகி மற்றும் கே.பாக்யராஜ் மூலம் தேர்வு செய்யப்பட்ட 'கோ' படத்துக்கு விருது வழங்கப்பட்டது. அதன் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் விருது மற்றும் ஒன்றரை லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றார். விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், 'கோ' இயக்குனர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

குத்து பாடலுக்கு இறங்கி வந்தார் சதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோயினாக நடிக்க காத்திருந்து ஏமாற்றம் அடைந்த சதா, குத்து பாடல் ஆட சம்மதித்துள்ளார். 'ஜெயம்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நடித்த படங்களில் ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் என எல்லாவற்றையும் கவர்ச்சியாக மாற்றிக்கொண்டு நடித்தார். இதனால் ரசிகர்களிடம் மவுசு குறைய ஆரம்பித்தது. விக்ரமுடன் 'அந்நியன்Õ, அஜீத்துடன் 'திருப்பதிÕ என முன்னணி நடிகர்களுடன் நடித்தபோதும் அவரால் இழந்த மார்க்கெட்டை மீட்க முடியவில்லை. கடைசியாக அவர் தமிழில் 'புலி வேஷம்Õ படத்தில் நடித்தார்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என 3 படவுலகிலும் அவர் கைவிடப்பட்ட நிலையில் புதிய படங்களுக்காக காத்திருந்தார். இந்நிலையில் சுந்தர்.சி. இயக்க விஷால் நடிக்கும் புதிய படத்தில் குத்துப் பாடல் ஒன்றில் ஆட சம்மதித்திருக்கிறார். ஹீரோயின் அந்தஸ்தில் நடித்துக்கொண்டிருந்த நீங்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன்? என்று சதாவிடம் கேட்டபோது, 'Ôஒருபாடலுக்கு நடனம் ஆடவேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து அழைப்பு வந்தபோது அதில் நடிக்க ஆர்வமில்லை என்றேன். இது வெறும் குத்துப்பாடல் அல்ல. பட ஹீரோவுடன் ஆடும் முக்கியமான பாடல் என்றனர். அவர்கள் கூறியவிதம் நியாயமாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்ÕÕ என்றார்.


 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆனது டெல்லி பெல்லி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியில் ரிலீசான டெல்லி பெல்லி, தமிழில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதை யு.டி.வி தயாரிக்கிறது. ஆர்.கண்ணன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஆர்யா ஹீரோ. மற்றும் ஹன்சிகா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ஜி.முத்தையா. இசை, தமன். பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை. வசனம், ஜான் மகேந்திரன். 7-ம் தேதி சென்னையில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் ஐந்து நட்சத்திர ஓட்டல் அரங்கை விதேஷ் அமைத்துள்ளார்.


 

ரவுடி ரத்தோர் படத்துக்காக அக்ஷய் குமாருடன் விஜய் டான்ஸ்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம், 'ரவுடி ரத்தோர்'. அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். ஜூன் 1ம் தேதி படம் வெளியாகிறது. இதில் பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்காக ஒரு பாடலுக்கு அக்ஷய்குமாருடன் விஜய் ஆடியுள்ளார். இதுபற்றி பிரபுதேவா கூறும்போது, "சமீபத்தில் விஜய்யை சந்தித்தபோது அக்ஷய்குமாருடன்  ஆடுகிறீர்களா என்று கேஷுவலாக கேட்டேன். சரி என்றார். ஒரு பெரிய ஹீரோ, நான் கேட்டதற்காக இந்திப் படத்தில் ஆட இப்படி ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் சில நாட்களில் இந்தப் பாடலை படமாக்க உள்ளோம்" என்றார்.


 

கமர்சியல் படங்களுக்கு நான் எதிரியில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமர்சியல் படங்களுக்கு நான் எதிரியில்லை என்று நந்திதா தாஸ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: என் குழந்தைக்காக, சில காலம் நடிக்காமல் இருந்தேன். இப்போது அவள் பிறந்து 20 மாதங்கள் ஆகிறது.  மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கிறேன். ஏன் கமர்சியல் படங்களில் நடிப்பதில்லை என்கிறார்கள். நான் கமர்சியல் படங்களுக்கு எதிரியில்லை. இருந்தாலும் எனது நோக்கம் அந்த மாதிரியான படங்கள் அல்ல. நான் இதுவரை நடித்த படங்கள் எல்லாமே எனக்கு திருப்தியாக இருந்துள்ளன. தற்போது தமிழ், இந்தியில் தலா ஒரு படத்தில் நடிக்கிறேன். 'பிராக்' படத்துக்கு பிறகு அடுத்து எப்போது டைரக்ட் பண்ண போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். 'பிராக்' எனக்கு சவாலான படமாக இருந்தாலும் மனநிறைவை தந்த படம். அது போன்ற திருப்தியான கதையை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் மீண்டும் படம் இயக்குவேன்.


 

விஷால் நடிக்கும் மத கஜ ராஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு 'மத கஜ ராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுபற்றி விஷால் கூறியதாவது: சுந்தர்.சி இயக்கத்தில் நான் நடிக்கும் படத்துக்கு 'மத கஜ ராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்துகளை சேர்த்தால், 'எம்.ஜி.ஆர்' என்று வரும். இது இயல்பாக அமைந்தது. மூன்று வேடங்களில் நடிக்கிறேன். மதன், கஜன், ராஜா என்ற இந்த கேரக்டர்கள், என் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும். கார்த்திகா ஹீரோயின். விஜய் ஆண்டனி இசை. ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு. 'சமர்' முடிந்த பிறகு இதன் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்.


 

உயிரெழுத்தில் நான் ஹீரோ இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய 'உயிரெழுத்து' படத்தில் ஹீரோவாக நான் நடிக்கவில்லை  என்று லாரன்ஸ் சொன்னார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 12 வருடங்களுக்கு முன், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 'உயிரெழுத்து' படத்தில் நடித்தேன். ஹீரோவின் நண்பனாக சில காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருந்தேன். சமீபத்தில் 'உயிரெழுத்து' படத்துக்கு செய்யப்பட்ட விளம்பரங்களில், என்னை பிரதானப்படுத்தி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். 'உயிரெழுத்து' விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன். 'காஞ்சனா'வுக்கு பிறகு நான் நடிக்கும் 'முனி' 3ம் பாகம் படத்தின் ஷூட்டிங், ஜூனில் தொடங்குகிறது. இதற்கிடையே நான் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.


 

நடிகர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் சினேகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருமணத்துக்கு முன்பு நடிகர், நடிகைகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் சினேகா. நடிகர் பிரசன்னா-சினேகா திருமணம் வரும் 11ம் தேதி  நடக்கிறது. இதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகிறது. இது பற்றி சினேகா கூறியதாவது: எனது திருமண விழாவை 4 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளேன். முதலாவதாக என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுக்கு என் வீட்டில் ஸ்பெஷல் பார்ட்டி தருகிறேன். நான்கு நாள் விழாவில் மெஹந்தி, சங்கீத் என இரண்டு விழாக்கள் ஆடம்பரமாக நடக்க உள்ளது. திருமணத்துக்காக எல்லா நிறத்திலும் பட்டு சேலை வாங்கிவிட்டேன். மணமேடையில் அமரும்போது அணிவதற்காக காஞ்சிபுரம் சென்று பட்டு சேலைகள் வாங்கினேன். இருமுறைப்படி திருமணம் நடப்பதால் பிராமண முறைப்படி மடிசாரும் அணிந்துகொள்ள உள்ளேன். ஒவ்வொரு விழாவின்போதும் விதவிதமான சேலையும், 'ஹம் ஆப்கே ஹைன் கோன்Õ படத்தில் திருமண காட்சியில் மாதுரி தீட்சித் அணிந்து வந்ததுபோல் காக்ரா உடை அணியவும் உள¢ளேன். எல்லா காஸ்டியூம் டிசைன்களையும் எனது அக்காதான் வடிவமைக்கிறார். பாரம்பரிய முறையிலேயே இந்த திருமணம் நடக்கவுள்ளது. திருமண நாளை நினைத்தால் மனசுக்குள்
ஆயிரக்கணக்கில் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது. பிரசன்னா எனக்கு மிக பொருத்தமான ஜோடி. இவ்வாறு சினேகா கூறினார்.


 

கலைஞர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தேனி சின்னமாயன் பிலிம்ஸ் சார்பில் என்.சின்னமாயன், என்.சி.ஜெகன், கூடல் எம்.ஸ்டாலின் என்கிற திலக் இணைந்து தயாரிக்கும் படம், 'கிழக்கு பாத்த வீடு'. பரதன், தமலி, திலக், தம்பி ராமய்யா, அப்புக்குட்டி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சேவிலோ ராஜா. இசை, மரியா மனோகர். பாடல்கள், வைரமுத்து. எஸ்.பி.பாலகுருசாமி இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வைரமுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னிலையில் பாரதிராஜா வெளியிட, கலைப்புலி எஸ்.தாணு பெற்றார். பிறகு பாரதிராஜா பேசியதாவது:

முன்பெல்லாம் சினிமாவைத்தேடி தேனியில் இருந்து சென்னைக்கு வருவார்கள். இப்போது சினிமா, தேனியைத்தேடி சென்றுவிட்டது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் சில படப்பிடிப்புகளை வேடிக்கை பார்த்தது உண்டு. கிராமத்துக் காட்சி என்றால் செட் போட்டு, அட்மாஸ்பியரில் புத்தம் புது ஏர்க்கலப்பையுடன் சிலர் நடந்து செல்வார்கள். கிராமம் என்றால் இதுவா? சாணம் வாசனை எங்கே, மண்வாசனை எங்கே, அந்த கிராமத்தின் யதார்த்த வாழ்க்கை எங்கே என்று தீவிரமாக யோசித்தேன். செட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சினிமாவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று, ஷூட்டிங்கை கிராமத்து மண்ணில் படமாக்கினேன். அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

கலைக்கு எந்த இலக்கணமும், கட்டுப்பாடும் கிடையாது. தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் கிடையாது. அது இந்த உலகுக்கே சொந்தம். தேனியில் ஒரு படத்தை உருவாக்குவதற்கான அத்தனை கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தேனி மண்ணுக்கென்று ஒரு பவர் இருக்கிறது. இங்கிருந்து சினிமாவுக்கு வந்த யாரும் சோடை போனது கிடையாது. தயாரிப்பாளர் சின்னமாயன், தேனியில் இருந்து பையோடு வந்திருக்கிறார். போகும்போது அவர் பெட்டியோடு செல்ல வேண்டும். அதற்கு இந்தப் படம் பெரிய வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் யு.டி.வி தனஞ்செயன், ஏ.வெங்கடேஷ், தருண்கோபி உட்பட பலர் கலந்துகொண்டனர். பெரு.துளசி பழனிவேல் தொகுத்து வழங்கினார். எஸ்.பி.பாலகுருசாமி நன்றி கூறினார்.


 

திட்டமிட்டு படம் எடுத்தால் ஜெயிக்கலாம் : எஸ்.பி.முத்துராமன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கல்பகனூர் கலைக்கூடம் சார்பில் கொத்தாம்பட்டி முருகேசன், தயாரித்து, இசை அமைத்து, இயக்கும் படம், 'காதல் சீதனம்'. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, ''சிறு பட்ஜெட் படங்கள் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. புதிதாக சினிமாவுக்கு வருகிறவர்கள் திட்டமிட்டு படம் எடுக்க கற்றுக் கொண்டால் நிச்சயம் ஜெயிக்கலாம். அதே போல, இயக்குனர்கள் எல்லா பொறுப்புகளையும் இழுத்து போட்டு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். நேரம் தவறாமை முக்கியம். காலம் பொன் போன்றது என்பார்கள். அது தவறு. பொன்னை விலை கொடுத்து வாங்கிவிடலாம். காலம் உயிர்போன்றது. அதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்'' என்றார். விழாவில் பெப்சி முன்னாள் தலைவர் வி.சி.குகநாதன், இயக்குனர் பவித்ரன், பட ஹீரோயின் யோகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கொத்தாம்பட்டி முருகேசன் வரவேற்றார். முடிவில் இணை இயக்குனர் இந்திராணி முருகேசன் நன்றி கூறினார்.


 

கே எஸ் ரவிக்குமார் மகள் திருமணம் - ரஜினி நேரில் வாழ்த்து!

இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் மூத்த மகள் ஜனனி - சதீஷ் குமார் திருமணம் இன்று சென்னையில் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார் - கற்பகம் தம்பதிகளின் மூத்த மகள் ஆர் ஜனனி. எம்பிஏ பட்டதாரி. இவருக்கும் தொழிலதிபர் ரவிசேகர் - கலாவதி தம்பதியரின் மகன் சதீஷ் குமாருக்கும் இன்று சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திரையுலகினர் ஏராளமாய் கலந்து கொண்ட இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், நடிகைகள் கே ஆர் விஜயா, எம் என் ராஜம், ஏ எல் ராகவன், வைஜெயந்தி மாலா, சினேகா, பிரசன்னா, சிம்ரன், கவுண்டமணி, இயக்குநர்கள் பி வாசு, சேரன், பாலாஜி சக்திவேல், ஜெயம் ராஜா, மனோஜ்குமார், நாசர், பிரபு, பாண்டு, சித்தாரா, சித்ரா, உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

நாளை துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் 'கனவு மெய்ப்பட வேண்டும்'

Atm S Kanavu Meipada Vendum Dubai Tomorrow
துபாய்: துபாயில் அமீரக தமிழ் மன்றத்தின் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சி ஸ்டார் சர்வதேச பள்ளியில் நாளை நடக்கிறது.

அமீரகத் தமி்ழ் மன்றம் நடத்தும் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சி துபாயில் உள்ள ஸ்டார் சர்வதேச பள்ளியில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. அனுமதி இலவசம்.

நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அமீரகத்தின் சிறந்த பெண்மணி 2012 போட்டி, சிவ்ஸ்டார் பவன் மற்றும் ஆச்சி மசாலா இணைந்து நடத்தும் சுவை அரசி 2012 போட்டி, கண்கவர் நடனங்கள், குறு நாடகம் மற்றும் பல்சுவை போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.

முன்னதாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை பிரைம் மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

'கிராமத்துக்குப் போய் நாலு பசுமாடு வாங்கிப் பிழைப்பேன்!' - 'மெரினா' பாண்டிராஜ் அறிக்கை

Marina Pandiraj Fumes On Negative Reports His Honesty
மெரினா படம் தொடர்பான மோசடி புகார்கள், நீதி மன்ற உத்தரவுகள் காரணமாக தன்னைப் பற்றி தவறான செய்திகள் பரவி வருவதாக இயக்குநர் பாணடி ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு அவர் விடுத்த அறிக்கை விவரம்:

ஒரு வாரமாக பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் பல லட்சம் மோசடி, கொலை மிரட்டல், கொமிஷனரிடம் புகார், மெரினாவை பிற மொழிகளில் வெளியிடத் தடை என்று என்னைப் பற்றிய தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

வெளியுரில் எனது அடுத்த பட வேளைகளில் இருந்ததாலும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும், எனது சட்டத்தரனி அமைதி காக்கும்படி கூறியதாலும் இதுவரை அமைதி காத்தேன்.

பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற எனது நிறுவனம் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னிடம் மேனேஜராக வேலை பார்த்த பி. சாம்பசிவம், மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு, நான் கொடுத்த உரிமையை தவறாகப் பயன்படுத்தி எனது நிறுவனத்தில் உள்ள Voucher Padகளைத் திருடிச் சென்று, எனது கம்பெனி பெயரிலேயே போலி கணக்குகளை தயார் செய்து (அதுவும் படப்பிடிப்பு எதுவும் நடக்காத நாட்களில் கூட) இன்று பாண்டிராஜ் தயாரிப்பாளர் இல்லை, இவர்தான் தயாரிப்பாளர் என்று பொய் வழக்கு போட்டுள்ளார்கள்.

ரூ 12 .50 லட்சம் போட்டவர் தயாரிப்பாளர் என்றால் கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தவனை என்னவென்று சொல்வது? அவர்கள் கொடுத்த 12.50 லட்சம் கணக்கிற்கு நீதிமன்ற உத்தரவின் படி, 15 லட்சமாக நீதிமன்றம் மூலமே வழங்கி விட்டேன்.

பெருந்தன்மையாக இணை தயாரிப்பாளர் என்ற மரியாதையையும் கொடுத்து விட்டேன். இவர் முதலீட்டிற்கான லாபத்தை இறுதி செய்ய நீதிமன்ற வலியுறுத்தலின் படி ஆடிட்டர் மூலம் ஆடிட்டிங் நடந்து வருகிறது.

அதற்குள் இவர்கள் மேலும் பல லட்சங்களை பறிப்பதற்காக பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேர் சொல்லும் பொய் எப்படி உண்மையாகிவிடும்? மெரினா திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நடந்த உண்மைகள் அனைத்தும் தெரியும். அதில் நடித்த சிறுவர்கள் கூட இவர்கள் செயலை பார்த்து சிரிப்பார்கள்.

இவர்கள் இருவரும் யார்? ஆர்.பாலமுருகன் என்பவர் பெரம்பலூரில் நில மோசடி வழக்கில் சிக்கி அவர் மேல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

சாம்பசிவம் என்னும் இன்னொருவர் உதவி இயக்குனர் ஒருவரை ஏமாற்றி செக் மோசடி வழக்கில் சிக்கியவர். இவர் மேல் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இவர்கள் இருவரின் வழக்கு பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

வழக்குகளை வழக்கமாக சந்தித்து வரும் இவர்கள், என் மீது மோசடி வழக்கு போட்டுள்ளார்கள். நான் பண மோசடி செய்தேனா? இல்லை என்னை மற்றவர்கள் பண மோசடி செய்துள்ளார்களா? என்று தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கள் என அனைவருக்கும் தெரியும்.

பணத்திற்காக எதையும் செய்யும் ஈனப் பிறவி இல்லை நான். பணம் வேண்டுமென்றால் இன்று பல கோடிகளை என்னால் அட்வான்ஸாக மட்டுமே பெற்றிருக்க முடியும். யாரையும் பண மோசடி செய்து பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

என் திறமைக்கும், நேர்மைக்கும் ஆண்டவன் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறான். அப்படி ஒரு நிலைமை வந்தால் எனது சொந்த கிராமமான விராச்சிலைக்கே சென்று நான்கு பசு மாடுகளை வாங்கி மேய்த்து பிழைப்பேனே தவிர அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி குடிக்க ஆசைப்பட மாட்டேன்.

தினமும் ஏதாவது செய்தி கொடுத்தால் பாண்டிராஜ் பயந்து விடுவான், அவனை மிரட்டி பணம் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

என்னைப் பற்றியும், எனது நேர்மையை பற்றியும் இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே என்ன நடந்தது என்பது பற்றியும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், என் உதவியாளர்களுக்கும், சக கலைஞர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

பசங்க படத்திற்காக சர்வசேத மற்றும் தேசிய விருது பெற்றது முதல் இன்று வரை எனது படைப்புகளுக்கும், எனக்கும் பேராதரவை வழங்கி வரும் பத்திரிக்கையாளர்கள், அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் என் நலம் விரும்பிகளுக்கும் நடந்த உண்மைகளை தெரியப்படுத்தவே இந்த தன்னிலை விளக்கத்தை அளிக்கிறேன். இவர்களை நீதியும், நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளட்டும்.
 

நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?

Hollywood Producer Barrie Osborne Watches Viswaroopam   
கமல்ஹாசனின் விஸ்வரூபம் அவரை எங்கெங்கோ கொண்டு சென்று விடும் போலத் தெரிகிறது. காரணம், அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளரான பேரி ஆஸ்போர்ன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் குறித்து அறிந்து அவரது படத்தை பார்க்க ஆர்வம் தெரிவித்துள்ளாராம். கமல்ஹாசனும் அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்ட அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

விஸ்வரூபம் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கனவே காட்டுத் தீ போல பரவி வருகிறது. இப்படம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை இந்த டிரெய்லரும், அதில் கமலின் தோற்றமும், விஸ்வரூபம் என்ற பெயரின் எழுத்துக்களும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கமல் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் நடிப்பையும், விஸ்வரூபம் படம் வந்துள்ள விதம் குறித்தும் அறிந்த ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன், உடனடியாக அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாராம். தனது விருப்பத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக்கேல் வாட்மோரிடம் தெரிவித்துள்ளார். மைக்கேல் வாட்மோர்தான், கமல்ஹாசனின் பல படங்களுக்கு மேக்கப் ஆலோசகர் என்பது நினைவிருக்கலாம்.

வாட்மோர், இந்தத் தகவலை கமலுக்குத் தெரிவிக்க கமலும் இசைவு தெரிவித்தாராம். இதையடுத்து தற்போது அமெரிக்கா சென்றுள்ள கமல், அங்கு பேரி ஆஸ்போர்னுக்குப் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு பதிப்புகளையும் சப் டைட்டிலுடன் ஆஸ்போர்னுக்குப் போட்டு காண்பிக்கிறார்களாம்.

பேரி ஆஸ்போர்ன் ஹாலிவுட்டின் பிரபல முகங்களில் ஒருவர். ஆக்டோபஸ்ஸி, அபோகாலிப்ஸ் நவ், மேட்ரிக்ஸ், லார்ட் ஆப் ரிங்ஸ், பேஸ் ஆப் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆஸ்போர்ன்.

விஸ்வரூபம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்தே வாட்மோர் மூலம் படத்தைப் பார்க்கும் விருப்பத்தை அவர் வெளியிட்டாராம். ஒருவேளை கமல்ஹாசனின் நடிப்பு அவரைக் கவர்ந்து விட்டால் நிச்சயம் கமல்ஹாசனை வைத்து நேரடியாக ஒரு ஆங்கிலப் படத்தை அவர் தயாரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

அப்படி ஒரு வேளை கமல்ஹாசன் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம் உருவானால் அல் பசினோ மாதிரியான வித்தியாசமான நாயகன் வரிசையில், நம்ம ஊர் கமலை ஹாலிவுட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்...

பார்க்கலாம், பேரி என்ன செய்யப் போகிறார் என்று...!
 

ரேகா பக்கத்தில் உட்கார ஜெயா பச்சன் விரும்பவில்லை?

Don T Wanna Sit Near Rekha Parliament Jaya Bachchan
ராஜ்யசபாவில் நடிகை ரேகாவுக்கு அருகே உட்காருவதை விரும்பாத நடிகையும், சமாஜ்வாடிக் கட்சி எம்.பியும், அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் தனக்கு வேறு இருக்கை தருமாறு ராஜ்யசபா தலைவருக்குக் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன். அமிதாப்புடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் ரேகா. ஜெயா பச்சனுக்கும், ரேகாவுக்கும் ஆகாது. பேசிக் கொள்ள மாட்டார்கள். பார்த்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரேகாவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து உள்ளே அனுப்பியுள்ளது காங்கிரஸ். இதனால் ஜெயா பச்சனுக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது. நேருக்கு நேர் ரேகாவைப் பார்க்க நேரிடுமோ என்று அவர் சங்கடத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

அதை விட முக்கியமாக, தற்போது 91வது இருக்கையில் ஜெயா பச்சன் அமர்ந்திருக்கிறார். ரேகாவுக்கு 98வது சீட் கொடுக்கப்படவுள்ளது. இதனால் ஜெயா பச்சன் பெரும் தர்மசங்கடமாகியுள்ளாராம். தனக்கு வெகு அருகே ரேகா அமருவது அவருக்கு ஒருவிதமாக உள்ளதாம். இதனால் அதைத் தவிர்க்கும் வகையில், தனக்கு வேறு சீட்டை ஒதுக்குமாறு ராஜ்யசபா தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவிடம் ராஜ்யசபா செயலகம் ஆலோசனை நடத்தி வருகிறதாம். இதில் வேடிக்கை என்னவென்றால் ரேகாவை ராஜ்யசபா எம்.பியாக்கியதே ராஜீவ் சுக்லாவின் பரிந்துரையின் பேரில்தான் என்பதே. எனவே ரேகாவுக்கும், ஜெயா பச்சனுக்கும் ராஜ்யசபாவுக்குள் தர்மசங்கட மோதல்கள் மூண்டு விடாமல் சமாளித்து ஆளுக்கு ஒரு பக்கமாக உட்கார வைக்கும் பெரிய வேலை சுக்லாவை வந்து சேர்ந்துள்ளது.

சமீபத்தில் அமிதாப் பச்சன் அளித்த ஒரு பேட்டியில் ரேகாவுக்கு எம்.பி. பதவி கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது ரேகாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதைக் கண்டு ஓட மாட்டேன் என்று பகிரங்கமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இவ்வளவு காலமாகி விட்டது, இன்னும் எதற்கு மோதல் ஜெயா...?
 

வீடு, தோப்பு துரவை விற்றுப் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்! - வைரமுத்து

Kizhakku Paartha Veedu Audio Launched
இன்றைய சூழலில் வீடு, நிலம், மனைகளை விற்றுத்தான் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து.

தேனி என்.சின்னமாயன் பிலிம்ஸ் தயாரித்துள்ள முதல் படம் 'கிழக்குப் பாத்த வீடு'. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

இயக்குநர் பாரதிராஜா பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து, விழாவுக்கு தலைமை தாங்கிப் பேசுகையில், "தேனி மாவட்டம் ஒரு இயக்குனரை, ஒரு இசையமைப்பாளரை, ஒரு பாடல் ஆசிரியரை தமிழ் உலகத்துக்கு தந்திருக்கிறது. இப்போது சின்னமாயன் என்ற தயாரிப்பாளரை தந்திருக்கிறது. இன்றைய சினிமா சூழலில், ஒரு தயாரிப்பாளர் அமைவதுதான் அரிய செயலாகும்.

படம் எடுத்து முடித்த ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து, "ஏரியா எல்லாம் விற்று விட்டீர்களா?'' என்று ஒருவர் கேட்டாராம்.

"ஊரில் ஒரு தென்னந்தோப்பு, சாலிகிராமத்தில் ஒரு வீடு, நீலாங்கரையில் ஒரு அடிமனை என எல்லா ஏரியாவையும் விற்று விட்டேன். எடுத்த படத்தைத்தான் இன்னும் விற்க முடியவில்லை'' என்று தயாரிப்பாளர் புலம்பினாராம். இப்படி ஒரு காலகட்டத்தில், படம் தயாரிக்க வருபவர்கள் துணிச்சல் மிக்கவர்கள்.

`கிழக்குப் பாத்த வீடு' என்பது கதையல்ல, தேனி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிஜம். தறிகெட்டு திரிந்த ஒரு இளைஞனை காதல் எப்படி மனிதனாக்கியது என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஒரு இளைஞனை என் வீட்டுக்கு அழைத்து வந்து, 'வர்தான் கதாநாயகன்' என்றார்கள். காடு போல் வளர்ந்திருந்த அந்த இளைஞனின் பரட்டைத் தலை என் கவனத்தை ஈர்த்தது.

தலை சிறந்த கதை மட்டுமல்ல, தலைமுடியும் கூட ஒரு பாட்டுக்கு பயன்படுவது உண்டு. இந்த படத்து கதாநாயகனின் பரட்டைத்தலையை பாடலில் பயன்படுத்தியிருக்கிறேன்.

'சீவாத தலையப்போல வாழ்ந்தேனே நானாக...

சீப்பாக வந்தாளய்யா என் வாழ்க்கை நேராக' என்று எழுதியிருக்கிறேன்," என்றார்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் எஸ் பி பாலகுருசாமி. 32 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதையை, அதை நேரில் பார்த்த அனுபவத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர்.

கதாநாயகனாக பரதன், எதிர் நாயகனாக திலக், நாயகியாக தமலி, தம்பி ராமையா, அப்புக்குட்டி நடித்துள்ளனர்.

சேவிலோராஜா ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.
 

தமிழ் - தெலுங்கில் வெளியாகும் காதல் 'காந்தம்' - ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது!

Gaandham Release Tamil Telugu
இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களில் ஒன்று காந்தம். இரு இளம் உள்ளங்களில் காதலை, கொஞ்சமும் விரசமின்றி, அழகாகச் சொல்லியிருக்கிறாராம் புதிய இயக்குநர் சரவணன்.

கதாநாயகனாக நடித்துள்ள தேஜ், ஏற்கெனவே கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழையல் நடித்தவர். காந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனத்தையும் இவர்தான் உருவாக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரஷ்மி நடித்திருக்கிறார்.

நியூ மூன் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்ஜீவ் கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தைப் பார்த்த ஜெமினி நிறுவத்தினர் தாங்களே இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதாக கூறி வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார்கள்.

புதுமுக இசையமைப்பாளர் பிரதாப், இசையில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள 'காந்தம்', தெலுங்கில் அயஸ் காந்தம் என்ற பெயரில் வெளியாகிறது.

டெலிபிரம்மா...

இந்தப் படத்தின் விளம்பரங்களில் டெலி பிரம்மா நிறுவனம் கைகோர்த்துள்ளது. காந்தம் பட போஸ்டர்கள் மற்றும் படம் குறித்த தகவல்களை மொபைல் மூலமே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். intARact.mobi என்ற முகவரியில் இதற்கான அப்ளிகேஷன் உள்ளது. இதில் படத்தின் பாடல்கள், விமர்சனம், கேலரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் காணக் கிடைக்கும்.
 

பெங்களூர் அடுக்குமாடி வீட்டில் விபச்சாரம்- நடிகை சனா கான் கைது!!

பெங்களூர்: பெங்களூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான சனா கான், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் கோரமங்களா 6-வது பிளாக்கில் விவி நகரில் உள்ள அனிஷா மெடோஸ் அபார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல சென்று விபசார புரோக்கர்களை அணுகினர். அவர்கள் மூலம் சில போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றனர். அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.

அதில் நடிகை ஒருவர் இருப்பதையும் தெரிந்து கொண்ட போலீசார், வெளியில் காத்திருந்த தனிப் படைக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்தனர்.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட நடிகை சனா கானும் சிக்கினார். சனா கானுடன் விபசாரத்தில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த காலிதா (28), நிகிதா ஜோசப் (21), இவர்களது மேனேஜரான ராஷ்மி, புரோக்கர்களான சமீர், கவிராஜ், வினய்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இரு புரோக்கர்களான சிவப்பிரகாஷ், உஸ்மத் ஆகியோர் தப்பிவிட்டனர்.

இந்த வீட்டில் இருந்து ரூ. 40,000 பணம், 2 லேப்டாப்கள், ஆபாசபட சி.டி.க்கள், கேமராக்கள், 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சில பணக்கார வாடிக்கையாளர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை படம் பிடித்தும் வீடியோ எடுத்தும் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியும் இவர்கள் பணம் பறித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சனா கானுக்கும் தமிழ் நடிகை சனா கானுக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

குழந்தைகள் கண் சிகிச்சைக்கு உதவ தன்னார்வ அமைப்பு - ரஜினி தொடங்கி வைத்தார்!

Rajini Inaugurates Organisation Cystinosis Affected
சென்னை: "சிஸ்டிநோசிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுவதற்கான தன்னார்வ அமைப்பினை சென்னையில் தொடங்கிவைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் "சிஸ்டிநோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள "சிஸ்டகான்' மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

'சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் நாட்டிலேயே முதன்முறையாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாகப் பங்கேற்ற ரஜினி, தனது ஆதரவை இந்த அமைப்புக்குத் தெரிவித்தார்.

சிஸ்டிநோசிஸ் நோய் குறித்து மியாட் மருத்துவமனை சிறுநீரக மருத்துவ துறைத் தலைவரும், "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' தலைவருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறுகையில், "சிஸ்டிநோசிஸ்' என்பது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மரபணு சார்ந்த அரிய வகை நோயாகும். உலகம் முழுவதும் இந்த நோயால் 2 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எவ்வளவு குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது என்பது தெரியவில்லை. மொத்தம் 6 குழந்தைகளுக்கு இந்த அரிய நோய் பாதிப்பு உள்ளது "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' அமைப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடன் இந்த நோய் பாதிப்பு தெரியாது. எனினும் குழந்தை வளரும்போது உரிய காலத்தில் வளர்ச்சி இல்லாத நிலையில், சிறுநீர்ப் பரிசோதனையில் சர்க்கரை இருந்தாலோ அல்லது அமினோ அமிலம் வெளியேறினாலோ இந்த நோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்; உடனடியாக

குழந்தையின் விழி வெண்படலம் ("கார்னியா') நன்றாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள குழந்தையை கண் மருத்துவரிடம் அனுப்பி சிறப்புப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

முன்கூட்டியே இந்த நோயைக் கண்டுபிடித்துவிட்டால் குழந்தைக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து அதன் வளர்ச்சியை உறுதி செய்து காப்பாற்ற முடியும்.

இப்போது இரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு குழந்தைகளின் மருந்துச் செலவுக்கு உரிய தலா ரூ.2 லட்சம், நன்கொடை மூலம் திரட்டப்பட்டு வருகிறது," என்றார்.

இந்த அமைப்பு குறித்த விவரங்களை www.sugarbp.org இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.