சென்னை: சிங்கம் 2 படம் முடிந்ததும், அடுத்தடுத்து கவுதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கப் போகிறார் நடிகர் சூர்யா.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம்-2' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து இரண்டு புதுப்படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து சூர்யா கூறுகையில், "கவுதம் வாசு தேவமேனன் இயக்கும் புதுப் படத்தில் அடுத்து நடிக்க உள்ளேன். இப்படத்தை போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது. ஜுன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும்.
இத்துடன் லிங்குசாமி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளேன். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஆகஸ்டு மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும். இரு படங்களிலும் ஒரே சமயத்தில் நடிக்கிறேன்," என்றார்.
கவுதம் மேனன் இயக்கும் படத்துக்கு 'துருவ நட்சத்திரம்' என்ற பெயர் வைக்க பரிசீலிக்கப்படுகிறது. இரு படங்களுக்கும் கதாநாயகிகள் உள்ளிட்ட நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
இதற்கிடையே சிங்கம் 2 க்ளைமாக்ஸ் படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறார் சூர்யா.