ஐயய்யோ, தமன்னாவா: மிரளும் பேச்சலர் ஹீரோக்கள்

Tamanna Scares Unmarried Heroes   

தமன்னாவுடன் நடிக்க வேண்டும் என்றாலே மணமாகாத இளம் ஹீரோக்கள் மிரளுகிறார்களாம்.

தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் ஓரளவு தான் வருகின்றன என்றாலும் தெலுங்கில் அவருக்கு வாய்ப்பு மழையாகக் கொட்டுகிறது. அதனால் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இது தவிர விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்றாலே திருமணம் ஆகாத இளம் ஹீரோக்கள் பயப்படுகிறார்களாம்.

இது என்னடா உல்டாவா இருக்கு என்று தானே நினைக்கிறீர்கள். அவர்களின் பயத்திற்கு காரணம் இருக்கு. தமன்னாவுடன் தெலுங்கில் ஜோடி சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன்,ராம் சரண் தேஜா மற்றும் தமிழில் கார்த்தி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. இதனால் தமன்னாவுக்கு கல்யாண ராசி என்றும், அவருடன் நடித்தால் திருமணமாகாத ஹீரோக்களுக்கு சீக்கிரமே திருமணமாகிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

நிறைய படங்களில் நடித்து பெயரும், புகழும் வாங்க வேண்டும் என்று நினைப்பில் போராடிக் கொண்டிருக்கும் இளம் ஹீரோக்கள் தமன்னாவுடன் நடிக்க வேண்டும் என்றால் பயப்படுவதற்கு இந்த கல்யாண ராசி தான் காரணம்.

 

மன்மதன் 2க்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

Ar Rahman Work With Simbu

சிம்பு எழுதி, நடித்த வெற்றிப் படமான மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.

சிம்பு எழுதி, நடித்த வெற்றிப் படம் மன்மதன். தற்போது மன்மதன் இரண்டாம் பாகம் எடுக்க சிம்பு ரெடியாகிவிட்டார். சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அந்த படப் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது. அதை சிம்பு மறக்கவில்லை. அதனால் தான் மன்மதன் 2 படத்திற்கு இசையமைக்குமாறு ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டுள்ளார்.

அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து சிம்பு மறுபடியும் ரஹ்மானை சந்தித்து ஒப்பந்தம் செய்யவிருக்கிறாராம். மன்மதன் போன்றே இந்த படத்தையும் எழுதி, நடிப்பவர் சிம்பு தான். எனக்கு பிடித்த நடிகை ஜோதிகா தான் என்று சொல்லித் திரிந்த சிம்பு அவரையே மன்மதனில் தனக்கு ஜோடியாக்கினார்.

தற்போது எனக்கு பிடித்த நடிகை அனுஷ்கா தான் என்று சிம்பு தெரிவித்துள்ளார். அப்படின்னா மன்மதன் 2வின் நாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்வாரா?

வாலு, போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களை முடித்த பிறகு மன்மதன் 2 துவங்கும் என்று தெரிகிறது.

 

சகுனியால் தள்ளிப்போன பில்லா 2

Billa 2 Postponed June 29   

வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருந்த அஜீத் குமாரின் பில்லா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்த்தியின் சகுனியும் ஜூன் 22ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டில் எந்த படத்தின் தேதி மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது பில்லா 2 அறிவித்தபடி 22ம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும், ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா 2 பெரிய பட்ஜெட்டில் அஜீத் குமாரை வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் வியாபாரம் அடியாகும் என்று தயாரிப்பு வட்டம் கருதியுள்ளது. இதையடுத்து தான் பில்லா 2வின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் பில்லா 2 அவருக்கு பிறந்தநாள் பரிசு போல் அமைந்துள்ளது என்று இரு நடிகர்களின் ரசிகர்களும் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் அஜீத்தின் படம் தள்ளிப்போயுள்ளது.

 

ராணாவில் ரஜினி ஜோடி தீபிகா இல்லை

Deepika Won T Be Seen With Rajini Rana   

ராணா படத்தில் ரஜினிகாந்தின் ஜோடி தீபிகா இல்லை என்று அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கவிருந்த படம் ராணா. படப்பிடிப்பு துவங்கிய முதல் நாள் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குணமடைந்தார். நாடு திரும்பிய பிறகு ராணா படப்பிடிப்பு துவங்காமல் கோச்சடையான் துவங்கியது.

ராணாவில் நடிக்க ஒப்பந்தமான தீபிகாவை கோச்சடையானில் நாயகி ஆக்கினர். தற்போது படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. வரும் தீபாவளிக்கு கோச்சடையான் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமாரின் ராணாவில் நடிப்பார். ஆனால் நாயகி தீபிகா கிடையாது என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தீபிகா ஏற்கனவே ரஜினி சாருடன் கோச்சடையானில் நடித்துவிட்டார். அதனால் அடுத்த படத்திலும் அதே ஜோடியைப் போட விருப்பமில்லை. படப்பிடிப்பு துவங்கிய பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் ரவிக்குமார்.

கோச்சடையானில் கத்ரீனா கைப் நடிப்பதாக இருந்தபோது அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு வந்தது. தற்போது ராணாவில் தீபிகா வாய்ப்பு யாருக்கு போகப் போகிறதோ...

 

ஸ்ருதி ஹாசனின் எண்ணமெல்லாம்....

Is Shruti Doing The Right Thing   

ஸ்ருதி ஹாசனுக்கு கோலிவுட், டோலிவுட்டில் மவுசு இருந்தாலும் அவரது எண்ணமெல்லாம் பாலிவுட் மீது இருக்கிறது.

லக் இந்தி படம் மூலம் நடிகையானவர் ஸ்ருதி ஹாசன். லக் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் ஏழாம் அறிவு அவரை கோலிவுட்டின் முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கில் அவர் நடித்த படங்கள் ஓடாமல் இருந்த நிலையில் அண்மையில் வெளிவந்த கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அங்கும் ஸ்ருதிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்வம் காட்டினால் நம்பர் 1 நடிகையாக ஆகலாம். ஆனால் அவரது நினைப்பெல்லாம் பாலிவுட் மீது தான் உள்ளது. எப்படியும் பாலிவுட்டில் பெரிய நடிகையாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக மும்பையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார்.

ஏழாம் அறிவு படத்தில் தமிழர்களைப் பற்றியும், தமிழைப் பற்றியும் பெருமையாக பேசிய ஸ்ருதி கொஞ்சம் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினால் அவரை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. ஆனால் என்னவோ அவர் கவனம் எல்லாம் இந்தியில் உள்ளது. தெலுங்கில் கப்பார் சிங் பிச்சிக்கிட்டு ஓடிய பிறகும் அவர் அங்கு புதுப்படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஷாலுடன் ஆட்டம்போடும் டாப்ஸி, வரலக்ஷ்மி

Tapsee Varalakshmi With Vishal    | வரலக்ஷ்மி  

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் மதகஜராஜாவில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் டாப்ஸி, வரலக்ஷ்மி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

இயக்குனர் சுந்தர் சி. விஷாலை வைத்து மதகஜராஜா சுருக்கமாகச் சொன்னால் எம்.ஜி.ஆர். என்னும் படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் விஷால் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்திகா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சுந்தர் சி. திடீர் என்று கதையை இரண்டு நாயகிகள் வருமாறு மாற்றியமைத்ததால் அவர் படத்தை விட்டு வெளியேறினார்.

தன்னிடம் கூறிய கதை வேறு, தற்போது எடுக்கவிருக்கும் கதை வேறு அதனால் தான் படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கார்த்திகா தெரிவி்த்தார். இந்நிலையில் அந்த 2 கதாநாயகிகள் கதாபாத்திரத்திற்கும் ஆளைப் பிடித்துவிட்டார் சுந்தர் சி. இரண்டு விஷாலுக்கு ஜோடியாக டாப்ஸி மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு விஷால் கெட்டவனாக வருகிறாராம். அவருககு மட்டும் ஜோடி இல்லை.

விஷால் தற்போது திரு இயக்கத்தில் த்ரிஷா, சுனைனாவுடன் சமர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு துவங்கும்.

விஷால் மச்சக்காரன் தான். சமர் படத்திலும் சரி, எம்.ஜி.ஆரிலும் சரி இரண்டு நாயகிகள்.

 

கோலிவுட்டைக் கலக்கும் சூடான வதந்தி!

A Hot Gossip On Rounds Kollywood

கோலிவுட்டில் ஒரு செய்திதான் படு ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது வதந்தியாகத்தான் இப்போது பரபரப்பாகிக் கிடக்கிறது என்றாலும் உண்மையானதாகவும் கூறப்படுகிறது.

நல்ல கருப்பு நிறமுடைய உயரமான நடிகர் அவர். தற்போதைய இளம் ஹீரோக்களில் நல்ல டிமாண்ட் உடையவர். அதிரடி படங்களிலும், அட்டகாசமான கெட்டப் சேஞ்சிலுமாக கலக்கியவர். முத்திரை இயக்குநரின் 'டபுள் ஹீரோ' படத்தில் வித்தியாசமான 'கெட்டப்பில்' கலக்கலாக நடித்தவர்.

இவருக்கும், முக்கியமான சீனியர் நடிகரின் முதல் மனைவியின் மகளுக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டிருக்கிறதாம். இதுதான் கோலிவுட்டில் இப்போது படு ஹாட்டாக பேசப்படுகிறது.

இந்த செய்தியால் அந்த சீனியர் நடிகர் படு கோபமாக இருக்கிறாராம். அவரே ஒரு 'பஞ்சாயத்து'ப் பேசும் நடிகர், அவரது வீட்டுக்கே பஞ்சாயத்து வந்து விட்டதே என்று சீனியர் நடிகரின் சுற்றத்தார் டென்ஷனாகிக் கிடக்கிறார்களாம்.

இளம் நடிகரைப் பாய்ந்து கடித்துக் குதறி விடுவது என்று கோபத்தில் கொந்தளித்த நடிகரை, அவரது 2வது மனைவிதான் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தி வைத்துள்ளாராம்.

மகளையும் கண்டிக்க முடியாமல், அந்த நடிகரையும் கண்டிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீனியர் நடிகர், விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள முயற்சித்து வருவதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே இந்த இளம் நடிகரின் குடும்பத்தார் மீது படத் தயாரிப்பு தொடர்பாக சீனியர் நடிகரின் 2வது மனைவி பஞ்சாயத்துக் கிளப்பியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே, இளம் நடிகர், சீனியர் நடிகரின் மகளுடன் நட்பு பாராட்டுவது பழி வாங்கும் படலமா என்ற சந்தேகப் பார்வையும் கோலிவுட்டில் எழுந்துள்ளதாம்.

ஆனால் இதைப் பற்றி இளம் நடிகர் கவலையேபடவில்லையாம். அதேபோல சீனியர் நடிகரின் மகளும் கவலைப்படவில்லையாம். இருவரும் சேர்ந்து இப்போது ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த செய்தியின் ஹைலைட்டாகும்.

 

நடிப்புக்கு குட்பை சொல்ல ரெடி, ஆனால்...: பிரியா ஆனந்த்

Priya Anand Ready Say Goodbye Films   

நடிகை பிரியா ஆனந்த் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் நடிப்புக்கு குட்பை சொல்லத் தயாராக உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். சித்தார்த்துடன் அவர் நடித்த நூற்றெண்பது படம் தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு கழுகு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்த அவர் தற்போது எதிர்நீச்சல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

வழக்கமாக நடிகைகள் நடிக்க வந்த புதிதில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று பெரிய வேண்டும் பட்டியல் வைத்திருப்பார்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை நடித்துவிட்டு மார்க்கெட் இல்லாமல் போன பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்றே பலர் நினைக்கிறார்கள். அதில் பிரியா ஆனந்த் சற்றே வித்தியாசமாக உள்ளார்.

அவர் நடிக்க வந்து இன்னும் 10 படங்களில் கூட நடித்து முடிக்கவில்லை. ஆனால் அதற்குள் நடிப்புக்கு முழுக்கு போட தயாராகிவி்ட்டார். ஆனால் ஒரு கன்டிஷன் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் மட்டுமே திரையுலகை விட்டுச் செல்வாராம்.

 

கடலில் நயன்: எல்லாம் வதந்தியாம்

Nayanthara Is Not Kadal   

மணிரத்னத்தின் கடல் படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று வெளியான தகவல் எல்லாம் வெறும் வதந்தியாம்.

கார்த்திக் மகன் கௌதம், ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து மணிரத்னம் எடுத்து வரும் கடல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை கேட்டுள்ளார் என்றும், நயனும் நிச்சயம் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று உறுதியளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் நடித்தால் எங்கே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற முத்திரை விழுந்துவிடுமோ என்று நயன் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

கடைசியில் பார்த்தால் நயன் கடல் படத்தில் நடிக்கவில்லையாம். இது குறித்து வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறப்படுகிறது. அவர் தற்போது அஜீத் குமாருடன் ஒரு படம் மற்றும் பூபதி பாண்டியன் இயக்கும் இன்னொரு படத்திலும் பிசியாக இருக்கிறார்.

நயனுக்கு தமிழில் மட்டும் கிராக்கி இல்லை. தெலுங்கிலும் கோடி கொடுத்தாவது அவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்கள் தயாராக உள்ளனர். அம்மணி கையில் 3 தெலுஙகு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நாளில் ரிலீஸாகும் ரஜினி, அஜீத், சிம்பு படங்கள்

Rajinikanth Ajith Kumar Simbu Movies To Clash

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான், விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படம் மற்றும் சிம்புவின் வாலு ஆகிய படங்கள் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகின்றன என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு வரும் படம் கோச்சடையான். ஏற்கனவே மக்களிடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோச்சடையானைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஜப்பானிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவிருக்கிறதாம்.

இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினிகாந்தின் மனம் கவர்ந்த அஜீத் குமார் விஷ்ணுவர்த்தனின் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோருடன் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படமும் தீபாவளி அன்றே ரிலீஸ் ஆகிறது.

அடுத்ததாக நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் சிம்புவின் வாலு படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகிறது. ஆக தீபாவளி அன்று 3 படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப்போகிறது.

ரஜினி, அஜீத், சிம்புவுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால் ரஜினியின் ரசிகர்கள் தற்போது அஜீத்தின் ரசிகர்களாகவும் உள்ளனர். அஜீத்தின் ரசிகர்களில் பலர் சிம்புவின் ரசிகர்களாக உள்ளனர்.

 

விஸ்வரூபத்தில் கமலின் சம்பளம் ரூ. 45 கோடி

Kamal Gets Rs 45 Crore Viswaroopam

விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார்.

படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காதல் ரோஜாவே படத்தில் நடித்த பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் சிங்கப்பூரில் நடந்த ஐஐஎப்ஏ விழாவில் வெளியிடப்பட்டது. டிரெய்லரைப் பார்த்தே அனைவரும் அசந்துவிட்டார்களாம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம் படத்திற்காக கமலுக்கு ரூ.45 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்று தயாரிப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. படத்திற்காக தன்னை வருத்திக்கொள்ளும் கமலுக்கு கோடி, கோடியாக கொடுக்கலாம், தப்பில்லை.

 

கார்த்திக்காக சகுனியில் காமெடி பீசான அனுஷ்கா

Anushka Turns Comedian Karthi Saguni    | சகுனி  

கார்த்தி கேட்டுக் கொண்டதால் அவரது சகுனி படத்தில் அனுஷ்கா காமெடி போலீசாக வருகிறார்.

கார்த்தி, பிரணீதா நடித்துள்ள படம் சகுனி. இது தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. புது முகம் சங்கர் தயால் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவுக்கு எப்படி கஜினி அமைந்ததோ அது போன்று கார்த்திக்கு சகுனி அமையும் என்று கூறப்படுகிறது. சகுனு வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்த படத்தில் அனுஷ்கா கெஸ்ட் ரோலில் காமெடி போலீசாக வருகிறாராம். அனுஷ்கா கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டார்களாம். இதையடுத்து கார்த்தி தனது சகுனி படத்தில் கெஸ்ட் ரோலில் வருமாறு அனுஷ்காவை கேட்டுள்ளார். அவரும் உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.

படத்தில் அனுஷ்கா, சந்தானம், கார்த்தி ஆகியோருடன் சேர்ந்து காமெடி செய்துள்ளராம். அனுஷ்கா வரும் காட்சிகளில் அரங்கம் அதிரும் என்று கூறப்படுகிறது. படத்தில் அவர் வரும் காட்சிகள் பெரிதும் பேசப்படுமாம். கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த அனுஷ்கா தற்போது காமெடி சீன்களில் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார்.

அனுஷ்காவுக்கு காமெடி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.