கிசு கிசு - ஊர் திரும்பிய நடிகை ரெஸ்ட் எடுக்கும் ஹீரோயின்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது..
நல்ல காலம் பொறக்குது..

அமல ஹீரோயின் கைநிறைய வரும் படங்களை தவிர்த்து, ஒண்ணு ரெண்டுன்னுதான் ஒப்புகிறாராம்.. ஒப்புக்கிறாராம்.. திடீர்ன்னு தோழிகளோடு துபாய்க்கு போனவரு, அங்கே தன்னோட உடல் எடையை குறைக்க¤றதுக்காக சிகிச்சை எடுத்துக்கிட்டாராம். ரெஸ்ட்டுக்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்துட்டாராம். ஆனாலும் கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு, புது தோற்றத்துல வந்து எல்லோருக்கும் சர்ப்பிரைஸ் கொடுக்கப் போறாராம்.. போறாராம்..

இலி ஹீரோயின் திடீர்னு ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு வீட்டுல ரெஸ்ட் எடுக்க¤றாராம்.. எடுக்க¤றாராம்.. கடுமையா உழைச்சதால வந்த களைப்பு இதுக்கு காரணமில்லையாம். கன்னா பின்னான்னு ஜங்க் ஃபுட் சாப்பிட்டதால வந்த வயித்து கோளாறுதான் காரணமாம்.. காரணமாம்.. மும்பைல ஷூட்டிங்ல இருந்தப்போ கடுமையான வயித்து வலியால துடிச்சவரு, பிளைட் புடிச்சி ஊர பாத்து வந்துட்டாராம்.. வந்துட்டாராம்..

உடற்பயிற்சி செய்றதுல மேடி நடிகருக்கு ஆர்வம் கிடையாதாம். பல நடிகருங்க அட்வைஸ் பண்ணியும் சோம்பல¢ காரணமா பயிற்சி செய்றதில்லையாம். உடம்பு கூடிட்டே போகுதாம். அதனால நடிகருக்கு வயது முதிர்ந்த கேரக்டர் வர தொடங்கியிருக்காம்.. தொடங்கியிருக்காம்.. இனிமே உடற்பயிற்சி பண்ணனும்னு நடிகரு முடிவு பண்ணியிருக்காராம்.. பண்ணியிருக்காராம்..


 

ஷாருக்குடன் நெருக்கம்: பிரியங்காவை ஒதுக்கும் பாலிவுட்?


ஷாருக்கானுடன் 'ஓவர்' நெருக்கமாக இருப்பதால் இயக்குனர் கரண் ஜோஹார் தனது படத்தில் பிரியங்காவைப் போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

நடிகை பிரியங்கா சோப்ராவும் ஷாஹித் கபூரும் அவ்வப்போது சேர்வதும் பிரிவதுமாக இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் மீண்டும் பிரிந்தபோது பிரியங்கா ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக உள்ள ஷாருக்கானைப் பிடித்துக் கொண்டார். ஷாருக் பிரியங்காவுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும் கூறப்படுகின்றது.

வீட்டில் மனைவி கௌரி கேட்டால் ஷூட்டிங் போனேன், அங்கே போனேன், இங்கே போனேன் என்று டபாய்க்கிறாராம். இதனால் கௌரி பிரியங்கா மீது காட்டமாக உள்ளார். இந்நிலையில் ஷாருக்குடன் ஒட்டி உறவாடும் பிரியங்காவை பாலிவுட் நடிகர்களின் மனைவிமார்கள் ஒதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர். ஹிரித்திக் ரோஷனின் மனைவி ஏற்கனவே பிரியங்காவை விட்டு விலகி விட்டார். அதேபோல மேலும் பலரும் விலகி வருகின்றனர். அவர்கள் கௌரிக்கு ஆதரவு தெரிவித்து அவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ரித்திக் ரோஷன் மனைவி எப்படி பிரியங்காவை ஒதுக்கியுள்ளாரோ அதே போன்று கௌரிக்கும், ஷாருக்கானுக்கும் நல்ல நண்பரான இயக்குனர் கரண் ஜோஹாரும் சோப்ராவை தனது படங்களில் நடிக்க வைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.

இதற்கிடையே கரண் ஜோஹாரின் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக பிரியங்கா விளம்பரப்படுத்தி வருகிறார் என்று ஒரு முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதை கரண் மறுத்துள்ளார்.

கௌரி கோபித்தால் எனக்கென்ன என்று இருந்த பிரியங்கா, பாலிவுட்டே ஒட்டுமொத்தமாக கோபித்துக் கொள்ளும் என்பதை எதிர்பார்க்கவில்லை போலும்...!
 

கர்மா படத்துக்கு ஆன்லைனில் நடிகர்கள் தேர்வு!


கொஞ்ச நாளைக்கு முன் தில் இருந்தா இந்தப் படத்தில் நடிக்க வாங்க என கர்மா என்ற படக்குழுவினர் விளம்பரம் செய்திருந்தனர்.

இதற்கு ஏக ரெஸ்பான்ஸாம். இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஏராளமானோர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர். கிட்ட தட்ட 22000த்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர், அவற்றில் 170 பேர்களை இறுதி செய்துள்ளார்களாம்.

இன்னொன்று, இந்த விளம்பரம் வெளியான 15 நாட்களுக்குள் கர்மா திரைப்படத்தின் பேஸ்புக் பக்கத்தை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளார்களாம்.

வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தப் படத்துக்கான நடிகர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்துகிறார்கள்.

இதுகுறித்து அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இந்த தேடலுக்கான ரெஸ்பரான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. இவ்வளவு பேர் நடிக்க ஆர்வம் உள்ளவர்களா என்று என்னை ஆச்சரியமாக இருந்தது. பல பிரபலங்களின் திரை வாரிசுகள் கூட நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதே சமயம் இவற்றில் ஒருவருக்குதான் வாய்ப்பு கொடுக்க முடியுமே என்று வருத்தமும் அடைந்தேன்.

அதனால் நாங்கள் முடிவு செய்து வைத்து 170 நபர்களைக் கொண்டு புதிதாக படத்தில் ஒரு ஆல்பம் பாடல் சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் திரைப்படத்தில் ஸ்டைல் பார்ட்னராக அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம், 10 நபர்களுக்கு மாடலிங் வாய்ப்பும் அளிக்க இருக்கிறது. நம்பிக்கையோடு விண்ணப்பிதிருந்தவர்களுக்கு எங்களால் ஆன சிறு உதவி இது," என்றார்.
 

பிரபல பாடகி எஸ் ஜானகி குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தார்.


உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றிருந்தார் ஜானகி. 73 வயதான அவர் காலையில் தரிசனத்தை முடித்துக் கொண்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினார். இன்று காலை அவர் குளியலறை சென்றபோது வழுக்கி விழுந்தார்.

உடனடியாக திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இப்போது அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாக அவரது மகன் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, மராத்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர் ஜானகி. தேசிய விருது வென்றவர்.
 

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?


ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் உலக நாயகன் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார் அல்லவா. அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.

தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.

ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
 

கோச்சடையானில் ரஜினி நாயகி கத்ரீனா அல்ல... தீபிகா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


கோச்சடையான் படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிப்பார் என்று படத்தின் இயக்குநர் சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கோச்சடையானில் நடிக்க கத்ரீனா கைஃபுடன் பேசி வருவதாக சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் அவரது தேதிகள் ஒத்து வராததால், ராணாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோனேவுக்கே மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

'கோச்சடையான்' படம் வெறும் அனிமேஷன் என்பதைத் தாண்டி, புதிய தொழில் நுட்பத்துடன் ஒரு முழுமையான ரஜினி படமாக உருவெடுத்துள்ளது.

' கோச்சடையான் ' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி, ஜாக்கி ஷெரஃப் என பாத்திரத்திங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். படத்தின் முதல் ஸ்டில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கேத்ரினா கைஃப் இடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'ராணா' படத்தில் ரஜினிக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோன் ' கோச்சடையான் ' படத்தின் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் இணையத்தில், "தீபிகா படுகோன் கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி.. " என்று தெரிவித்துள்ளார்.
 

தீவிர ரசிகரான தொழிலதிபருடன் அனன்யா நிச்சயதார்த்தம் - கேரளாவில் நடந்தது!


நாடோடிகள் படம் மூலம் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், அவரது தீவிர ரசிகரும் தொழிலதிபருமான ஆஞ்சநேயாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை அனன்யா. திருச்சூரைச் சேர்ந்தவர். சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றி மூலம், தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

இந்த நேரத்தில் கேராளவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அனன்யாவின் தீவிர ரசிகராக ஆஞ்சநேயன் தினமும் அவரை பின்தொடர்நது சென்று காதலை வெளிப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

அனன்யா-ஆஞ்சநேயன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் திருச்சூரில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர்.

திருமணம் விரைவில் நடக்க உள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் ஓரளவு படங்களை கையில் வைத்துள்ளார் அனன்யா. திருமணத்துக்கு பின்னும் சினிமாவில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.
 

தீவிர ரசிகரான தொழிலதிபருடன் அனன்யா நிச்சயதார்த்தம் - கேரளாவில் நடந்தது!


நாடோடிகள் படம் மூலம் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், அவரது தீவிர ரசிகரும் தொழிலதிபருமான ஆஞ்சநேயாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை அனன்யா. திருச்சூரைச் சேர்ந்தவர். சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றி மூலம், தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

இந்த நேரத்தில் கேராளவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அனன்யாவின் தீவிர ரசிகராக ஆஞ்சநேயன் தினமும் அவரை பின்தொடர்நது சென்று காதலை வெளிப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

அனன்யா-ஆஞ்சநேயன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் திருச்சூரில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர்.

திருமணம் விரைவில் நடக்க உள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் ஓரளவு படங்களை கையில் வைத்துள்ளார் அனன்யா. திருமணத்துக்கு பின்னும் சினிமாவில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.
 

மகளுடன் கோவா புறப்பட்ட ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன்


நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் இன்னும் பெயர் வைக்காத மகளுடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையின் கண்கள் தாயைப் போன்று உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்நாள் வரை குழந்தையைக் கண்ணில் காட்டாமல் வைத்துள்ளனர். பிரசவத்திற்குப் பிறகு ஐஸும் அவ்வளவாக வெளியே வருவதில்லை. அவ்வப்போது அபிஷேக் மட்டும் தனது மகளைப் பற்றி டுவிட்டரில் செய்தி வெளியிடுவார். அண்மையில் கூட தனது மகள் வேகமாக வளர்வதாகத் தெரிவித்திருந்தார்.

அமிதாப் பச்சனை பாலிவுட்டில் பிக் பி என்று அழைக்கின்றனர். ஐஸ் மகளுக்கு பெயர் வைக்காததால் பேட்டி பி என்று ஊடகங்கள் அழைக்கின்றன. இந்நிலையில் பேட்டி பி முதன்முதலாக தனது, தாயுடன் வெளியுலகைப் பார்க்கிறார். அவர்கள் 3 பேரும் தற்போது கோவாவில் உள்ளனர்.

நீங்கள் கோவாவில் இருக்கிறீர்களா? யார் கண்டார் இதுவரை யார் கண்ணிலும் படாத ஐஸ் மகள் உங்கள் கண்ணில் படலாம்.!
 

மகளுடன் கோவா புறப்பட்ட ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன்


நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் இன்னும் பெயர் வைக்காத மகளுடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையின் கண்கள் தாயைப் போன்று உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்நாள் வரை குழந்தையைக் கண்ணில் காட்டாமல் வைத்துள்ளனர். பிரசவத்திற்குப் பிறகு ஐஸும் அவ்வளவாக வெளியே வருவதில்லை. அவ்வப்போது அபிஷேக் மட்டும் தனது மகளைப் பற்றி டுவிட்டரில் செய்தி வெளியிடுவார். அண்மையில் கூட தனது மகள் வேகமாக வளர்வதாகத் தெரிவித்திருந்தார்.

அமிதாப் பச்சனை பாலிவுட்டில் பிக் பி என்று அழைக்கின்றனர். ஐஸ் மகளுக்கு பெயர் வைக்காததால் பேட்டி பி என்று ஊடகங்கள் அழைக்கின்றன. இந்நிலையில் பேட்டி பி முதன்முதலாக தனது, தாயுடன் வெளியுலகைப் பார்க்கிறார். அவர்கள் 3 பேரும் தற்போது கோவாவில் உள்ளனர்.

நீங்கள் கோவாவில் இருக்கிறீர்களா? யார் கண்டார் இதுவரை யார் கண்ணிலும் படாத ஐஸ் மகள் உங்கள் கண்ணில் படலாம்.!
 

கோச்சடையானில் ரஜினி நாயகி கத்ரீனா அல்ல... தீபிகா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


கோச்சடையான் படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிப்பார் என்று படத்தின் இயக்குநர் சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கோச்சடையானில் நடிக்க கத்ரீனா கைஃபுடன் பேசி வருவதாக சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் அவரது தேதிகள் ஒத்து வராததால், ராணாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோனேவுக்கே மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

'கோச்சடையான்' படம் வெறும் அனிமேஷன் என்பதைத் தாண்டி, புதிய தொழில் நுட்பத்துடன் ஒரு முழுமையான ரஜினி படமாக உருவெடுத்துள்ளது.

' கோச்சடையான் ' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி, ஜாக்கி ஷெரஃப் என பாத்திரத்திங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். படத்தின் முதல் ஸ்டில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கேத்ரினா கைஃப் இடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'ராணா' படத்தில் ரஜினிக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோன் ' கோச்சடையான் ' படத்தின் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் இணையத்தில், "தீபிகா படுகோன் கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி.. " என்று தெரிவித்துள்ளார்.
 

நான் ஒரு இந்தியன், இங்கிலிஷ்காரன் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் மூலம் ஒரே நாளில் சர்வதேச அளவில் பிரபலம் ஆனது எப்படி என்று மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார் தனுஷ். தனுஷ் நடிக்கும் படம் '3'. மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயின். இப்படத்துக்காக 'ஒய் திஸ் கொலவெறிடி' என்ற பாடலை சொந்த குரலில் பாடினார் தனுஷ். இது அவருக்கு எல்லைகளை கடந்து சர்வதேச அளவில் புகழை பெற்றுத் தந்துள்ளது. ஒரே பாடல் மூலம் பிரபலம் ஆனது பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையடுத்து வெவ்வேறு இடங்களில் நடக்கும் நேரடி நிகழ்ச்சி யில் பங்கேற்றார். பொழுதுபோக்கு விழாக்களில் மட்டுமே பங்கேற்று வந்த தனுஷுக்கு தற்போது கல்வி நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி யில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று கல்லூரில் அவர் பாடம் எடுக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது,"இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்லூரியில் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல முறையில் இங்கிலிஷ் பேசத் தெரியாது. ஆனாலும் அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள். நான் ஒரு இந்தியன், இங்கிலிஷ்காரன் இல்லை" என்றார்.


 

நம்பர் 1 இடத்தை பிடிக்க 4 ஹீரோயின்கள் கடும் போட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் சினிமாவில் த்ரிஷா, அசின், நயன்தாரா, தமன்னாவின் மவுசு குறைந்துவிட்டது. நம்பர் ஒன் இடம் காலியாக இருப்பதால் அந்த இடத்தை பிடிப்பதில் 4 இளம் நடிகைகளுக்குள் கடும்போட்டி நிலவுகிறது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, அசின், நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகளுக்கான மார்க்கெட் குறைந்து வருகிறது. அசின் பாலிவுட்டில் கவனம் செலுத்துகிறார். நயன்தாரா, பிரபுதேவா வுடன் காதல் வலையில் விழுந்த பின் சினிமா விலிருந்து ஒதுங்கினார். இப்போது பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. த்ரிஷா, வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த நம்பர் 1 நடிகை யார் என்று போட்டி எழுந்துள்ளது. இந்த இடத்தை பிடிக்க காஜல் அகர்வால், அமலா பால், ஹன்சிகா மோத்வானி, சமந்தா ஆகிய 4 இளம் நடிகைகளுக்குள் ரேஸ் நடக்கிறது.

விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' படங்களில் நடித்து வருவதால் காஜல் அகர்வால் உற¢சாகத்தில் இருக்கிறார். விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானி அடுத்து ஹரி இயக்கும் 'சிங்கம் 2' படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 'வேட்டை மன்னன்' படத்திலும் நடிக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் நடிக்காமலே போட்டி களத்தில் முன்னேறி வரும் நடிகை, அமலா பால். அதே நேரம், மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கும் சமந்தா மற்ற மூன்று நடிகைகளுக்கும் போட்டியாக களத்தில் உள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள ரிச்சாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. தீக்ஷா சேத்துக்கு 'வேட்டை மன்னன்' படம் மட்டும் உள்ளது.


 

ஒரே மாதத்தில் ஒல்லி ஆனார் : ஆபரேஷன் செய்து கொண்டாரா அசின்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை அசின் திடீரென்று உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் நடிகை ஆகி இருக்கிறார். கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது. தமிழில் விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த அசின் திடீரென்று பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். ஆமிர்கான், சல்மான்கான் என டாப் நடிகர்களுடன் நடித்துவருகிறார். தென்னிந்திய படங்களில் கொழுக் மொழுக் நடிகைகளுக்குதான் வரவேற்பு. ஆனால் பாலிவுட்டில் ஒடிந்துவிழும் அளவுக்குள்ள ஒல்லிபிச்சான் நடிகைகளுக்குதான் மவுசு.

கரீனா கபூர், கேத்ரினா கைப், தீபிகா படுகோன் என முன்னணி ஹீரோயின்கள் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு கடைபிடித்தும், ஒரு சிலர் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு நீக்கும் ஆபரேஷன் செய்தும் மெலிந்த தேகத்தை தக்க வைத்து வருகின்றனர். பாலிவுட்டில பாப்புலர் ஆகிவரும் அசினை அங்குள்ள நிருபர்கள் சந்திக்கும்போதெல்லாம், 'உடல் எடையை குறைக்கும் எண்ணம் உள்ளதா?' என்று கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். அதற்கு அசின், 'ஒரு சில மாதங்கள் கழித்து என்னைப் பாருங்கள் அப்போது தெரியும்' என்றார்.

1 மாதத்துக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அசின் சமீபத்தில் மும்பையில் நடந்த  நடிகை ஜெனிலியா திருமண விழாவுக்கு வந்தார். யாரோ புதுநடிகை வருகிறார் என்று பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் அவர்தான் அசின் என்று கண்டுகொண்ட புகைப்படக்காரர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பளிச் பளிச்சென கிளிக் செய்து தள்ளினர். காரணம் ஒல்லிபிச்சான் நடிகை தோற்றத்துக்கு அவர் மாறி இருந்ததுதான். கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால்தான் அவரால் ஒல்லியாக முடிந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமே மெலிந்ததாக அசின் தரப்பில் கூறப்படுகிறது.


 

சிம்பு-தெலுங்கு நடிகர் திடீர் மோதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புவுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரது படத்தில் இருந்து தெலுங்கு நடிகர் விலகினார். வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை' என்ற புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக தெலுங்கு நடிகர் ரானா நடிக்க ஒப்புக்கொண்டார். உடனடியாக ஷூட்டிங் தொடங்க முடிவு செய்தார் இயக்குனர். இந்நிலையில் 'படத்தில் நடிக்க முடியாது' என்று கூறி வெளியேறிவிட்டார் ரானா.  சிம்புவும் தனது இசை ஆல்பம் பணிக்காக வெளிநாடு சென்றுவிட்டார். இதையடுத்து படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை. படம் டிராப் ஆகிவிட்டதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதை இயக்குனர் மறுத்துள்ளார். சிம்புவுடன் ஏற்பட்ட மோதலால்தான் ரானா வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னைபற்றி வெற்றிமாறன் கூறும்போது,"தன்னுடைய கேரக்டர் பிடிக்காததால் ரானா நடிக்க மறுத்துவிட்டார்" என்றார். ஏற்கனவே இப்படத்தில் 2வது  ஹீரோவாக நடிக்க வேறு சில நடிகர்களும் மறுத்துவிட்டதால் மற்றொரு ஹீரோவை தேடிக்கொண்டிருக்கிறது படக்குழு.



 

பாத்ரூமில் வழுக்கி விழுந்து பாடகி ஜானகி சீரியஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, பாத்ரூமில் வழுக்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க திருப்பதி சென்றார். அறை ஒன்றில் தங்கி இருந்த அவர், பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆந்திராவில் உள்ள குண்டூரில் 1938ம் ஆண்டு பிறந்த ஜானகி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். 4 முறை தேசிய விருதும், 31 மாநில அரசு விருதுகளும் பெற்றவர். இதுகுறித்து ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், "மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாச ராவ் தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தலையில் காயம் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது. கீழே விழுந்ததால் மூளை சேதம் ஏற்பட்டதா என கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தனர். கீழே விழுந்ததால் தற்போது முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல் நலம் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்" என்றார்.


 

பேச்சுவார்த்தையில் இழுபறி: 9-ம் தேதி வரை படப்பிடிப்பு கிடையாது!


பெப்சி - தயாரிப்பாளர் சங்கம் இடையே சம்பள உயர்வு குறித்து நீடித்து வரும் மோதல் நேற்று முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

நேற்று இருதரப்புக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவை எட்டாததால், மீண்டும் 9-ம் தேதி சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது. அதுவரை படப்பிடிப்புகள் நடக்காது என்ற நிலையை பெப்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எஸ் ஏ சந்திரசேகரன் தலைமையிலும், பெப்சி பிரதிநிதிகள் இயக்குநர் அமீர் தலைமையிலும் நேற்று பேச்சு நடத்தினர்.

இதுகுறித்து எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழக அரசின் நோக்கம் புரிந்து நாங்கள் சிலவற்றை விட்டுத் தர முன் வந்துள்ளோம். அடுத்த கூட்டத்தில் நல்ல முடிவை எட்டி விடுவோம்," என்றார்.

இயக்குநர் அமீர் கூறுகையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி பேசிய பிறகுதான் விஷயம் முடிவாகும். அதுவரை படப்பிடிப்புகள் இருக்காது. இப்போதுள்ள நிலையே தொடரும்," என்றார்.
 

எனக்கு நேரஞ் செரியில்ல...! - வடிவேலு


எல்லோருக்குமே நேரம் சரியாக அமைய வேண்டும். இப்போதைக்கு எனக்கு நேரஞ் செரியில்ல... அரசியல் பத்தி எதுவும் பேதீங்க!, என்று கேட்டுக் கொண்டார் நடிகர் வடிவேலு.

விஜயகாந்தும், வடிவேலுவும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மிகக் கடுமையாக மோதிக்கொண்டனர். இதையடுத்து விஜயகாந்த் கட்சியை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு நிலைமை மோசமானது. எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

சிலர் அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என தங்களுக்கு மிரட்டல் வருவதாக சிலர் கூறினர். ஆனால் வடிவேலுவோ நான்தான் ஒதுங்கியிருக்கிறேன், என்றார்.

சமீபத்தில் அ.தி.மு.க. வுக்கும், விஜயகாந்துக்கும் தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் சமரசம் ஆகி மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக வடிவேலு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின. அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் கிசுகிசுக்கள் வருகின்றன.

இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்ல. அவரை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகளைப் பார்த்தா, கற்பனைக்கு அளவே இல்லைன்னுதான் தோணுது.

பொதுவாக எல்லாத்துக்கும் நேரம் முக்கியம். சிலருக்கு அந்த நேரம் சாதகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிராக இருக்கும். எனக்கு நேரஞ் செரியில்ல. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய கவனமெல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்.

நான் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம் திரையுலகில் எனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்யும். வேறு ஒண்ணும் இப்போதைக்கு சொல்வதற்கில்லை," என்றார்.
 

வயசான ஹீரோன்னாலும் ஓகேதான்! - த்ரிஷா


வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை... நான் நடிக்க ரெடி என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார் த்ரிஷா.

ஒரு காலத்தில் இளம் ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன், ரஜினி - கமல் மட்டும் விதிவிலக்கு என்று கூறிவந்தார் த்ரிஷா.

இதனால் த்ரிஷாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் (அவங்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே) போன்றவர்கள், தங்களுக்கேற்ற இளம் நாயகிகளை தேட வேண்டி வந்தது. விஜயகாந்த் புதிது புதிதாக நாயகிகளை கொண்டுவந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கும வயசாகிவிட்டது!! விளைவு... தன் பாலிசியைத் தளர்த்திக் கொண்டுள்ளார்.

"எந்த வயசா இருந்தாலும் பரவால்ல... கதையும் என் கேரக்டரும் நல்லாருந்தா, ஜோடியாக நடிக்க நான் ரெடி. என்னை விட வயது குறைவான ஹீரோ, வயசான ஹீரோ என எந்த பேதமும் இல்லை," என்று கூறியுள்ளார்.
 

ஜீவனாம்சம்: டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது வழக்குத் தொடர தாராவுக்கு ஆலோசனை!


சென்னை: ஜீவனாம்சம் கேட்டு டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு எதிராக டான்ஸ் மாஸ்டர் தாரா தாக்கல் செய்த முறையீடு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று தாராவுக்கு சமரச மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா காதல் விவகாரம் சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விவகாரம் குடும்பநல நீதிமன்றம் வரைக்கும் வந்தது. இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. பைனலாக 'செட்டில்' ஆகவில்லை.

இந்த நிலையில் நடிகர் பிரபுதேவாவின் தந்தையான டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், திருமணத்துக்கு முன்பு செய்த லீலைகள் வெளிவந்துள்ளன. தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி, பின்னர் திருமணமும் செய்து கொண்ட சுந்தரம், பின்னர் ஏமாற்றிவிட்டுப் போய் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக டான்ஸ் மாஸ்டர் தாரா முறையிட்டிருந்தார்.

2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படும், சமரச தீர்வு மையத்தில் தாரா இந்தப் புகாரைக் கொடுத்தார். அது சில தினங்களுக்கு முன்புதான் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது.

தன்னையும் தனது மகனையும் கடந்த பல ஆண்டுகளாக சுந்தரம் பராமரித்து வந்தார் என்றும் தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு நிதியுதவி செய்வதில்லை என்றும் புகார் மனுவில் தாரா கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளார்.

இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி சுந்தரத்துக்கு பலமுறை சமரச தீர்வு மையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நோட்டீஸ் அடிப்படையில் அவர் ஆஜராகவில்லை.

அதைத் தொடர்ந்து தாராவுக்கு சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியது. இந்த புகார் மனுவை வழக்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தாராவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கைவசம் எக்கச்சக்க ஆதாரங்கள் இருப்பதால் விரைவில் வழக்கு தொடரப் போகிறாராம் தாரா.
 

புயல் நிவாரணம்: கண்ணீரைத் துடைத்த ஜெயலலிதாவுக்கு பாராட்டு-தங்கர்பச்சான்


சென்னை: தானே புயல் நிவாரணத் திட்டங்களை அறிவித்து எங்கள் கண்ணீரைத் துடைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்று தமிழ்நாடு உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவரும், சினிமா இயக்குனருமான தங்கர்பச்சான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்பு தொகுப்பு திட்டங்கள் எங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து நம்பிக்கையூட்டி இருக்கிறது. ரூ.1 லட்சத்து 18,000 கோடி நிதி நெருக்கடியில் தமிழக அரசு தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையிலும் எங்களின் கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு எங்களை நெகிழ வைத்திருக்கிறது.

முதல்கட்ட உதவி ரூ.500 கோடியை மட்டும் அறிவித்துவிட்டு, பேரிடர் மாவட்டமாக அறிவிக்காமல் இன்னமும்கூட மீதி நிவாரணத் தொகையை அறிவிக்காமலிருக்கிற மத்திய அரசை எதிர்பார்க்காமல், திட்டங்களை அறிவித்திருக்கும் ஜெயலலிதாவுக்கு எங்களது பாராட்டுக்கள்.

மனநலம் குன்றி எந்த திசையில் பயணிப்பது எனப் புரியாமல் குழம்பியிருந்த கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிற இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேறி எங்களின் துயர் தீர உடனடியாக கிராமங்கள்தோறும் உழவர்கள் பங்கேற்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்து பராமரிப்புச் செலவுடன்கூடிய 5 ஆண்டு மரம் வளர்ப்புத் திட்டம், 25 ஏக்கருக்கு ஒரு பம்புசெட்டு அமைத்து பாசன வசதி ஏற்படுத்தித் தரும் திட்டமும் மிக, மிக சிறப்பான திட்டங்கள் ஆகும்.

குழந்தைகளின் கல்வியையும், பிள்ளைகளின் திருமணத்தையும் நிறுத்தி வைக்க முடியாமல் தவித்து வரும் உழவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தால் பெரிதும் உதவியாக இருக்கும். நாங்கள் முன்னேற காரணமாக நினைத்த எங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கும் வரை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், இப்போது பள்ளிகளில் வழங்கப்படுகின்ற பிற்பகல் உணவுடன், காலை உணவையும் இந்த மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டுகிறோம்.

உழவன் நிலை உயர்ந்தால்தான் அனைத்தும் உயரும் என்பதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதாவின் மேலான எண்ணத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். அனைத்தையும் இழந்துள்ள நாங்கள் இப்போது உங்களுக்கு தருவதற்கு வெறும் `நன்றி' எனும் சொல் மட்டுமே இருக்கிறது. முதல்வரின் உதவியை நாங்கள் மறக்கமாட்டோம். எங்களின் தலைமுறைகளும் இந்த பேருதவியை மறக்காது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

'நான் கொடுத்த ரூ 50 லட்சம் என்னாச்சு?' - இலியானா மீது தயாரிப்பாளர் புகார்!


இலியானா தமிழில் இரண்டு படங்கள் (கேடி, நண்பன்) செய்திருக்கிறார் இதுவரை. ஆனால் அவருக்கோ, அவரை வைத்து படமெடுத்தவர்களுக்கோ, அட குறைந்தபட்சம் ரசிகர்களுக்கோ... அந்தப் படங்கள் நல்ல அனுபவமாக அமையவில்லை!

அதனால்தானோ என்னமோ... அம்மணிக்கு கோலிவுட் என்றால் வேப்பங்காயாக கசக்கிறதாம். தமிழில் மேற்கொண்டு நடிக்கவும் அவர் விரும்பவில்லையாம்.

தேடி வந்து தேதி கேட்ட இரண்டு முன்னணி தயாரிப்பாளர்களிடம் சாக்குப் போக்கு சொல்லி அனுப்பிவிட்டு, இரண்டு இந்திப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

இதற்கிடையே, தமிழ் சினிமா பிடிக்காது... தமிழ் சினிமா தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ் மட்டும் பிடிச்சிருக்கோ என கோபக் குரல் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் மோகன் நடராஜன்.

விக்ரமும் இலியானாவும் நடிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இது. அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது. கொடுத்த அட்வான்ஸ் பணம் ரூ 50 லட்சத்தை அப்படியே மறந்துவிட்டாராம் இலியானா.

படத்தில் நடிக்கவில்லை என்றாகிவிட்டது. நான் கொடுத்த அட்வான்ஸ் என்னாச்சு... உடனடியாக எண்ணி வைக்கணும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் மோகன் நடராஜன்.

படத்தில் நடிக்க கோடம்பாக்கம் வரப் பிடிக்கலன்னாலும், இந்த பஞ்சாயத்துக்கு இலியானா கண்டிப்பா வந்தாகணுமில்ல!