திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த்?

பிரபல தொழிலதிபரும் தயாரிப்பாளருமான அசோக் கென, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தப் படத்தில் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ரஜினியை அணுகியுள்ளார் அசோக் கெனி.

கன்னடத்தில் அர்ஜூனை வைத்து பிரசாத் என்ற படத்தைத் தயாரித்த அசோக், இப்போது நானே பாரி நீனு என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

Rajinikanth to play Tippu Sultan life story

திப்பு சுல்தான் படத்தை தனது கனவுப் படமாக எடுக்கப் போவதாக கூறும் அசோக் கெனி, இந்தப் படம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியிடம் பேசியிருக்கிறார். ஆனால் அப்போது ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததால், விஷயத்தை தள்ளிப் போட்டுவிட்டார்.

இதுகுறித்து அசோக் கூறுகையில், "திப்பு சுல்தானின் பெருமைகளில் பல இன்னும் உலகறியாதது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிடங்டனுக்கு கப்பல்களைப் பரிசாகத் தந்த பெருமைக்குரியவன் திப்பு சுல்தான். இந்தக் காட்சியில் ரஜினி நடித்து, அது உலகெங்கும் திரையிடப்பட்டால் திப்புவுக்கும் அவன் ஆண்ட இந்த மண்ணுக்கும் எத்தனைப் பெருமை சேரும் என்பதை நினைத்துப் பார்த்தாலே பரவசமாக உள்ளது.

இந்த திரைப்படம் தொடர்பாக விரைவில் ரஜினியைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன். ராஜமவுலி மாதிரி ஒரு படைப்பாளி இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்றார்.

 

ஆர்யாவை அழுக்காகக் காட்டுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!- விஷ்ணுவர்தன்

விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, ஸ்வாதி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் யட்சன். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது இந்தப் படம்.

எழுத்தாளர்கள் சுபா இந்த படத்தின் கதையை எழுதியுள்ளனர். இந்த யட்சனின் மைய கரு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றது.

Vishnuvardhan speaks on Yatchan

படத்தை பற்றி விஷ்ணு வரதன் பேசும் போது, "ஆரம்பம் படத்துக்கு முன்னரே இந்த படம் உருவாக வேண்டியது. எழுத்தாளர்கள் சுரேஷ் பாலாஜி அவர்கள் விகடன் வாரஇதழில் எழுதி வரும் கதைக்கு என்னுடைய பெயரை உபயோகப்படுத்த அனுமதி கேட்டார்கள். நான் அதற்க்கு பச்சை கொடி காட்டிவிட்டு, கதையின் கருவை கேட்டேன். எனக்கு அது மிகவும் பிடித்து போய் நிச்சயம் இந்த கதையை படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.

கதையைப் படமாக்க முடிவு செய்தவுடன் திரை கதையை மிக நுணுக்கமாக கையாண்டு அதை முற்றிலும் புதிய கோணத்தில் உருவாக்க முடிவு செய்தோம். இது முற்றிலும் ஆக்ஷ்ன் காமெடி படமாக உருவாகியுள்ளது. கதைப்படி நாயகன் ஆர்யா 'சின்னா' என்னும் கதாபத்திரத்தில் தூத்துக்குடிகாரராக நடித்துள்ளார். அவர் ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு சென்னைக்கு வருபவராக நடித்துள்ளார்.

இன்னொரு நாயகனான கிருஷ்ணா 'கார்த்தி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி கார்த்திக்கு சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். வீட்டுக்கு பயந்த கிருஷ்ணாவை நாயகி சுவாதி மிரட்டி கோடம்பாக்கத்துக்கு கூட்டி செல்வார். சென்னைக்கு வந்த பின் தீபா சன்னிதியின் கதாபாத்திரம் அவர்கள் இருவரின் வாழ்க்கையில் மிகபெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதன் பின் மாறி மாறி மூன்று நாட்கள் என்ன நடக்கின்றது என்பதை மிகவும் சுவாரசியமாக நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறோம்.

இந்த கதையை ஏற்கனவே படித்தவர்கள் கூட படமாகப் பார்க்கும் போது ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு படம் புதுமையாக வந்துள்ளது. இது நான் கிருஷ்ணாவுடன் முதல் முறையும், ஆர்யாவுடன் ஐந்தாவது முறையும் இணையும் படம். நான் இயக்கிய டபுள் ஹீரோ கதைகள் அனைத்திலும் ஆர்யா நடித்துள்ளார்.

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் அவரை அப்படி தான் காட்டியுள்ளேன். படத்தில் தீபா சன்னிதியின் கதாபாத்திரத்தை நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னேரே சொல்லும் ஆற்றல் படைத்தவராக உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நான் படத்தின் உருவாக்கத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வேன். இந்தப் படத்திலும் அதைப் போலவே நிறைய உழைத்துள்ளேன். படத்தில் ஆர்யா வரும் காட்சிகள் அனைத்தும் சிகப்பு நிற டோனிலும், கிருஷ்ணா வரும் காட்சிகள் அனைத்தும் நீல நிற டோனிலும் வரும். கண்டிப்பாக அது ரசிகர்களின் கவனத்தைச் சிதைக்காது. படம் பார்க்கும்போது எல்லோரும் நிச்சயம் சந்தோஷமாக பார்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

யட்சனை வேறு எந்த மொழிகளிலும் வெளியிட போவதில்லை. அதற்க்கு காரணம் படத்தை நாங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட உள்ளோம்.

யட்சன் திரைப்படம் வருகிற 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது," என்றார்.

 

விஷ்ணுவர்த்தனின் அடுத்த ஹீரோ அஜீத்?

சென்னை: தல 56 படத்தைத் தொடர்ந்து தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அஜீத் முடிவு செய்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது 3 வது முறையாக இருவரும் கைகோர்க்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கசிந்துள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நவம்பர் பத்தாம்தேதி தீபாவளியன்று வெளியிடத் திட்டமிட்டு வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்களாம்.

Ajith Next Movie Director

செப்டம்பருக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டால் அக்டோபரில் மற்றவேலைகளை முடித்து நவம்பர் பத்தில் வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கிடையே அஜித்தின் அடுத்தபடத்தை இயக்கும் இயக்குநரை முடிவு செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

கே.வி.ஆனந்த் உட்பட சில இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அஜித் முடிவுசெய்திருப்பது இயக்குநர் விஷ்ணுவர்த்தனை என்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாகவே இதுதொடர்பான பேச்சுகள் நடந்து கொண்டிருந்ததாகவும் இப்போது அது உறுதியாகியிருப்பதாகவும் மிகவும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அஜீத் இதைப் பற்றி இன்னும் உறுதியாக சொல்லவில்லை எனினும் விஷ்ணுவர்த்தனின் அடுத்த படத்தில் நடிக்கவே அஜீத் விரும்புவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பில்லா 3 யில் அஜீத்தை நடிக்க வைக்க விஷ்ணுவர்த்தன் விரும்பியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், எனினும் அஜீத் பில்லா 3யில் நடிக்கப் போகிறாரா அல்லது வேறு புதிய கதையா? என்பது தெரியவில்லை.

அஜீத் மீண்டும் பில்லாவாக மாறுவாரா?

 

யாத்ரீகனுக்காக தலையை மழித்து, காவி உடை அணிந்த கிஷோர்!

உலகமே நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல வாழ்க்கையே ஒரு பயணம் என்பார் கண்ணதாசன்.

'யாத்ரீகன்' என்கிற படம் அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள், நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. விடை தேடி அவனை அலைக்கழிக்கின்றன.

Kishore tonsures head for Yathreegan

இப்படி ஆதி தன் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடி பல இடங்களுக்கு பயணம் செய்கிறான். சில நேரம் சூழலே அவனை இழுத்துச் செல்கிறது. அலைகிறான்; திரிகிறான்.. முடிவு என்ன?

'யாத்ரீகன்'. இது 10 வயது முதல் 45 வயது வரை ஒரு மனிதனின் பயணக்கதை .

இப்படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்.

ஆதியாக கிஷோர் நடிக்கிறார். கதையைக் கேட்டு பிடித்துப்போய் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். கிஷோருடன் சாயாசிங், 'டூரிங் டாக்கீஸ்' சுனுலட்சுமி, 'கடல்' சரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்புக்காக படக்குழுவினர் நேபாளம், காங்க்டாக் ,சிலிகுரி, டார்ஜிலிங், வாரணாசி, ,காலிம்பான் போன்ற இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர்.

இன்னமும் ஆறு இடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றார் இயக்குனர் ஜெயபால்.

நேபாளத்தில் ஒரு புத்த மடாலயத்துக்கு சென்று இது தொடர்பாக பேசவிரும்பிய போது அதன் உள்ளே நுழைய வேண்டும் என்றால்கூட தலை மழித்து அவர்களுடைய உடையை அணிந்து வந்தால்தான் அனுமதி என்று கூறியுள்ளனர்.

கிஷோர் அதற்காக தலையை மழித்துக் கொண்டு உள்ளே சென்று அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி செய்து விட்டுத்தான் மதத் தலைவரைப் பார்த்துள்ளனர்.

புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி இவற்றுக்குப் பொருள்கள் பலவாறு கூறப்பட்டாலும் அது நமது பௌதீக வாழ்க்கையில் எப்படிப் பரிணாமப்படுத்தப்பட வேண்டும் என்கிற உண்மையான விளக்கத்தை கேட்டுப் பெற்றுள்ளனர்.

புத்த பூர்ணிமா தினத்தன்று படப்பிடிப்பு நடத்தி ஆயிரக்கணக்கான புத்தபிட்சுகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலத்தையும் பதிவு செய்து வந்துள்ளனர்.

''நாயகனின் கேள்விகளுக்கு விடை தேடும் 'யாத்ரீகன்' திரையில் ஒரு பயண அனுபவமாக இருக்கும்'' என்கிறார் இயக்குநர் ஜெயபால் கந்தசாமி.

ஒளிப்பதிவு வி.வெங்கடேஷ். இவர் ஜீவாவின் மாணவர். 'மூச்சு' படத்துக்குப் பிறகு இது இவருக்கு 2 வதுபடம்.

இசை ஜி.ரங்கராஜ். சென்னையில் இசைப்பள்ளி நடத்தி வருகிற இவருக்கு கர்நாடக சங்கீத உலகத்தில் குறிப்பிட்ட இடம் உள்ளது.

நாக் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பவர் சோமசேகர ரெட்டி. இவர் பழம்பெரும் தெலுங்கு தயாரிப்பாளர் நாகேஸ்வர ரெட்டியின் மகன்.

''படக்கதை ரசிகர்களுக்கு, தங்கள் கதையாக உணர வைக்கும். நாயகன், அவன் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் சுவாரஸ்யத்தின் தோரணங்களாக ரசிக்க வைக்கும். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும். இவை பார்க்கும் ஒவ்வொருவரையும் கதைஉடன் தொடர்பு படுத்தி மகிழவும் நெகிழவும் வைக்கும்,'' என்கிறார் இயக்குநர்.

 

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற நயன்தாராவின் பேய்ப் படம்!

நயன்தாரா நடித்துள்ள பேய்ப் படமான மாயா ட்ரெய்லர் சர்வதேச அளவில் கவனத்தைக் கவர்ந்துள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் மாயா.

நடிகர் ஆரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசை ரோன் ஏதன் யோகன்.

Maya gets international recognition, says debutant director

படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் பேசும் போது, "நான் இந்த படத்தின் கதையை எழுதும் போது என் மனதில் யாரையும் வைத்து எழுதவில்லை அதற்கு காரணம், யாரையாவது நினைத்து நான் கதை எழுதி அவர்கள் படத்தில் நடிக்க இயலாமல் போனால் என்னால் அதில் இருந்து வெளியே வர முடியாது.

படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டவுடன் இந்த கதையில் முக்கிய பாத்திரமாக வரும் அந்த சிங்கள் மதர் கதாபாத்திரத்தில் நன்கு தெரிந்த முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார். உடனேயே எங்கள் மனதுக்கு நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே தயாரிப்பாளர் நயன்தாராவிடம் பேசி என்னை கதை சொல்ல அனுப்பி வைத்தார். நயன்தாராவிடம் கதை சொல்ல எனக்குள் சின்ன பயம் இருந்தது. நான் கதையை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. கண்டிப்பாக படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

Maya gets international recognition, says debutant director

இந்தக் கதையைப் படமாக்க மொத்த குழுவும் ஒரு வருடம் கடுமையாக வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் உழைத்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நான் ஒரு வருடம் அவர்கள் எல்லோரையும் அதிக அளவில் தொல்லை செய்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தில் ஆரி அவர்கள் ஓவியராக நடித்துள்ளார். அவர் பிரபலமான பத்ரிக்கைகளுக்கு ஓவியம் வரையும் நபராக வருகிறார். அவர் வரையும் ஓவியங்களில் இருந்து தான் கதையின் ஒவ்வொரு முடிச்சும் அவிழும். இந்த படத்தில் நிறைய ஓவியம் சார்ந்த கதை சொல்லல் இருக்கும். இந்த படத்தின் சவுண்ட் டிசைன் பெரிய அளவில் பேசப்படும். நயன்தாராவுக்கு இந்த படத்துக்கு ஏற்றவாறு மேகப் போடப்பட்டுள்ளது.

முதன் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் ட்ரைலர் உலக அளவில் ஆங்கிகாரம் பெற்றுள்ளது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்," என்றார்.

படத்தை பற்றி நடிகர் ஆரி பேசுகையில், "இந்தhd படத்தில் முதலில் நடிகர் நானி நடிப்பதாகத்தான் இருந்தது. பின்னர் சில காரணங்களால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் இந்த கதையை கேட்டதும் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன்," என்றார்.

நான் இதுவரை வெளியிட்ட பேய்ப் படங்களிலேயே பெஸ்ட் இந்த மாயாதான் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

செப் 17-ல் உலகெங்கும் 'உனக்கென்ன வேணும் சொல்லு'!

உனக்கென்ன வேணும் சொல்லு திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் படத்தை வெளியிடும் மகேஷ் இந்தப் படம் குறித்துக் கூறுகையில், "இந்தப் படத்துக்கு கிடைத்து உள்ள வரவேற்ப்பு எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Unakkenna Venum Sollu from Sep 17

திரை அரங்கங்கள் எங்கள் படத்தை வெளியிட ஆவலுடன் முன் வருவது இந்த படத்துக்காக உழைத்த திறமையான இளம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகும். இந்தப் படம் வெறும் பயத்தை மட்டும் ஆதராமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் அல்ல. இப்படியும் நடக்குமா என நாம் சிந்திக்கும் பல நிகழ்வுகளை அடக்கிய படம். இந்தப் படத்துக்கு 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்ற தலைப்பை வைக்கும் போதே எங்களுக்கு அசுர பலம் வந்ததைப் போல் உணர்கிறோம். அந்த பலமே எங்களை வெற்றிப் பாதைக்கு இட்டு செல்லும் என்று நம்புகிறோம்," என்றார்.

ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ள உனக்கென்ன வேணும் சொல்லு படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாளன் மோகன், மோர்ணா அனிதாரெட்டி, அனு, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். மணிஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, சிவசரவணன் இசையமைத்துள்ளார்.

 

தொழிலதிபரை மணந்து திருமதி ஆனார் பாபிலோனா

பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவுக்கும் தொழிலதிபர் சு்தர் பாபுல் ராஜூக்கும் இன்று சென்னையில் திருமணம் நடந்தது.

'தை பிறந்தாச்சு' படத்தின் மூலம் அறிமுகமாகி, ஏராளமான தமிழ்ப் படங்களில் ஆடிக் கலக்கியவர் பாபிலோனா. மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

Babilona marriage with Sundar Babul Raj

சுந்தர் பாபுல் ராஜ் என்ற தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த பாபிலோனா, அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார்.

சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று காலை 211 மணிக்கு வடபழனியில் ஹோட்டல் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி பாபிலோனா - சுந்தர் பாபுல் ராஜ் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

மணமக்களை அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், நடிகர் செந்தில், தயாரிப்பாளர் ருக்மாங்கதன், கவிதா ஸ்ரீ, அனுஷா உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

 

தெரியலேன்னா எதுக்கு தப்புத் தப்பா எழுதறீங்க?- கோபத்தில் அஞ்சலி

'பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் அதிகம் வருவது வழக்கமாகிவிட்டது...'

- வெளியிலிருக்கும் யாரும் இப்படிச் சொல்லி எளிதில் அதைக் கடந்து போய்விடலாம். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் நிலைமை?

Media's false stories irk Anjali

அப்படி ஒரு சங்கடத்தை அடிக்கடி சந்திக்கிறார் நடிகை அஞ்சலி. முடிந்தவரை தன்னைப் பற்றி எதையுமே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவரைப் பற்றி தாறு மாறாத செய்திகள் வருவதால் பெரும் கோபமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதாம் அவருக்கு.

அஞ்சலிக்கு அமெரிக்காவில் காதலர் இருக்கிறார் என்று சிலரும், அஞ்சலிக்கு உடல்நலமில்லை, எனவே படங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறார் என்று சிலரும், அஞ்சலி நாள் கணக்கில் சம்பளம் கேட்கிறார் என்று சிலரும் அடித்துவிட... இதனால் அஞ்சலிக்கு தொழில்ரீதியாக பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து சமீபத்தில் தனது நலம் விரும்பிகளிடம், "என்னைப் பற்றி எந்த விஷயமும் தெரியாமலேயே இஷ்டத்துக்கும் சிலர் எழுதுவது வேதனையாக உள்ளது.

இவர்கள் எழுதும் எதுவுமே உண்மை கிடையாது. என்னிடம் விசாரிக்காமல் எதையும் தயவு செய்து வெளியிட வேண்டாம். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். எனக்குப் பிரச்சினை என்ற போது கைகொடுத்ததும் மீடியாதான். அந்த மரியாதையை தொடர விரும்புகிறேன்," என்று கூறி வருந்தியுள்ளார்.

இதனால் சகலமானவர்களுக்கும்....

 

அஜீத்துக்கு ஜோடியா... மாட்டவே மாட்டேம்பா! - தடாலடி ஹீரோயின்

"அஜீத்துக்கு ஜோடியாக மட்டும் நடிக்கவே மாட்டேன். ஏதாவது கெஸ்ட் ரோல் இருந்தா நடிக்கலாமா-ன்னு யோசிப்பேன்!"

- இந்த ஸ்டேட்மென்ட்டுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா... அஜீத்தின் சொந்த மச்சினிச்சியான ஷாம்லிதான்!

Actress says no to act with Ajith

2009-ல் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து, ஷைனாகாமல் போன ஷாம்லி, இப்போது தீவிரமாக வாய்ப்பு தேடி இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். தனுஷ் மற்றும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

வீட்டிலேயே ஒரு மிகப் பெரிய ஹீரோ, அதுவும் அக்கா கணவர் இருக்கிறாரே.. அவருக்கு ஜோடியாக நடிப்பீர்களா? என்று ஷாம்லியிடம் கேட்டதற்கு, "ம்ஹூம்.." என்று தலையை இடது வலதாக ஆட்டினார்.

ஏன்.. என்னாச்சு ஷாம்லி?

"அஜீத்தோடு கட்டாயம் ஜோடியாக நடிக்க மாட்டேன். ஒருவேளை ஏதாவது கெஸ்ட் ரோல் கொடுத்து நடிக்கக் கேட்டால்கூட யோசிப்பேன். பயம் காரணமாக இப்படிச் சொல்லவில்லை. அவருக்கு ஜோடி என்பதை ஏனோ நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!" என்கிறார்.

 

"அவுக தான் வேணும்" அடம்பிடிக்கும் பிரமாண்ட இயக்குநர்

சென்னை: உச்ச நட்சத்திரத்தை வைத்து தான் இயக்கவிருக்கும் படத்தில் வில்லனாக ஹாலிவுட் அல்லது உலகம் முழுவதும் தெரிந்த பாலிவுட் நடிகர்கள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் பிரமாண்ட இயக்குநர்.

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்த எந்திர மனிதனை மீண்டும் எடுக்கவிருக்கிறார் பிரமாண்ட இயக்குநர்.

The Grand Director Want World Fame Actor

முதல் பாகத்தில் நடித்த உச்ச நட்சத்திரமே தற்போது 2 வது பாகத்திலும் நாயகனாக நடிக்கவிருக்கிறார், இளம் இயக்குனரின் கதையில் நடித்து முடித்தவுடன் எந்திர மனிதனின் 2 ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் உச்ச நட்சத்திரம்.

எனவே அதற்குள் கதைக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து விட துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். ஏற்கனவே படத்தின் நாயகியைத் தேடி அலைந்த இயக்குநர் தற்போது வில்லனைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய 2 படங்களில் நடித்த அந்நிய நடிகரை முதலில் ஒப்பந்தம் செய்த இயக்குநர் தற்போது படத்தின் பிரமாண்டம் கருதி அவரை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகரைத் தேடி வருகிறார்.

ஹாலிவுட்டில் அல்லது உலக மகா நடிகர் எவரேனும் தான் வேண்டும் என தயாரிப்புத் தரப்பிடம் அடம்பிடிக்கிறாராம் பிரம்மாண்ட இயக்குநர்.

இப்போது தயாரிப்புத் தரப்பு கையை பிசைந்து வருகிறார்கள், வேறு என்ன எல்லாம் சம்பளத்தை நினைத்துதான். உள்ளூர் நடிகர்களுக்கே சம்பளம் கொடுக்க வழியில்லை.

இப்போது உலக மகா நடிகர் (வில்லன்) எனில் எங்கு போவது என தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம், தயாரிப்புத் தரப்பினர்.

எங்கும் பிரமாண்டம், எதிலும் பிரமாண்டம்...

 

மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ்...செந்தமிழால் அடித்தது அதிர்ஷ்டம்

சென்னை: ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்தது எப்படி? என்கிற கேள்வி பலரின் மனதையும் போட்டுக் குடைந்து கொண்டிருந்தது.

Keerthy Suresh in Mani Ratnam's Next Movie Heroine

இதற்கு விடை சமீபத்தில் கிடைத்திருக்கிறது மேலும் இந்தத் தகவலை படப்பிடிப்புக் குழுவினரே வெளியிட்டிருக்கின்றனர். கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்பு கிடைக்க காரணம் செந்தமிழ் தான் காரணமாம்.

ஓ காதல் கண்மணி படத்தில் லைவ் சவுண்ட் என்கிற சிங்க் சவுண்ட் (Sync Sound) முறையைப் பயன்படுத்தினார் மணி ரத்னம். அது சிறப்பாக வந்ததால் அடுத்தப் படத்திலும் சிங்க் சவுண்டைப் பயன்படுத்த உள்ளார்.

‘இதனால் தமிழ் தெரிந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என மணிரத்னம் முடிவு செய்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுபவர் என்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு சுலபமாகக் கிடைத்தது. இரண்டாவது ஹீரோயினுக்காக தேர்வு நடைபெற்று வருகிறது' என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

Keerthy Suresh in Mani Ratnam's Next Movie Heroine

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகிறது.

தமிழுக்கும் அமுதென்று பேர்....

 

4 நாட்கள் இறைச்சிக்குத் தடையா.. என்ன அக்கிரமம் இது! - கொந்தளித்த சோனாக்ஷி

மும்பையில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சமூக வலைத் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

இதற்காக அவரை எதிர்த்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

Sonakshi Sinha's anti #Meatban tweets trolled

ஜெயின் சமூகத்தினரின் பண்டிகையையொட்டி, அவர்கள் அதிகம் வாழும் மிராபயந்தர் பகுதியில் 8 நாட்களுக்கு இறைச்சி விற்க தடை விதித்திருந்தது மாநகராட்சி. இந்தத் தடையை மும்பை முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மும்பையில் 4 நாட்களுக்கு இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்துள்ள சோனாக்ஷி சின்ஹா, "இது சுதந்திர நாடு! இந்த பான்-இஸ்தான் (BAN-isthan)... அதாவது இந்தியாவை வரவேற்கிறேன். முட்டாள்தனமானது.. தன்னிச்சையானது," என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் இரு ட்வீட்டுகளையும் அவர் வெளியிட, உடனே அவரைக் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர் வலையுலகவாசிகள்.

காரணம் இதற்கு முன் சோனாக்ஷி, மிருக வதைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதை நிறுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மிருக வதை என்று கூறி தடையை தொடர வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதனால் அவரது முரண்பாடான கருத்துகளைக் கிண்டலடித்து ட்விட்டரில் ஏக பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.

இன்னொரு பக்கம் பாஜகவினரும் ஆர்எஸ்எஸ் அபிமானிகளும் சகட்டு மேனிக்கு சோனாக்ஷியைத் திட்டியும் வருகின்றனர்.

சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹா பாஜகவில் முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்சாருக்குத் தயாரானது விஜயின் "புலி"

சென்னை: நடிகர் விஜயின் புலி திரைப்படம் சென்சாருக்குத் தயாராகி விட்டது என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முதலில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர்.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஆனால் படவேலைகள் முழுவதும் முழுமை அடையாததால், அக்டோபர் 1 ம் தேதி காந்தி ஜெயந்தியில் உலகம் முழுவதும் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

Vijay's Puli Gears up Sensor

தற்போது படத்தின் ஸிஜி மற்றும் விஎப்எக்ஸ் (VFX) வேலைகள் ஆகியவை முழுமையாக முடிந்து விட்டதால் படம் சென்சாருக்கு விரைவில் செல்லவிருக்கிறது.

விஎப்எக்ஸ் (VFX) பணிகளில் மிகவும் சிறந்தவரான ஆர்.சி.கமலக்கண்ணன் புலி படத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர். படத்தின் ஒட்டு மொத்த போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளும் முடிவடைந்து விட்டன.

தொடர்ந்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தும் தனது பின்னணி இசை வேலைகளை ஆரம்பித்து விட்டார், இதனால் இந்த வாரத்திற்குள் படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவிருக்கும் புலி படத்தின் விநியோக உரிமைகள் முழுவதும், ஏற்கனவே முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

புலி உறுமத் தயார்...

 

கால் நூற்றாண்டைக் கடந்து... தமிழில் குரல் கொடுத்த ஸ்ரீதேவி

சென்னை: கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் தன் சொந்தக்குரலில் புலி படத்திற்காக தமிழில் (டப்பிங்) பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுருதிஹாசன் ஹன்சிகா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படம் வரும் காந்தி ஜெயந்தியன்று வெளியாக இருக்கிறது.

Sridevi to Dub Her Voice for Puli’s Tamil Version

புலி வாயிலாக 20 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவி மீண்டும் நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இன்னொரு சுவாரசிய தகவலாக புலி படத்தில் ஸ்ரீதேவியே சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.

இருபத்தைந்து வருடங்கள் கழித்து தமிழில் டப்பிங் பேசியது மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி இந்தி , தெலுங்கு மொழிகளிலும் புலி படம் நேரடிப்படமாக வெளியாக இருக்கிறது.

தமிழ் தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஸ்ரீதேவியே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக சென்னையிலேயே தங்கி இருந்து டப்பிங் வேலைகளை முடித்துள்ளாராம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் விஜய் படம் இந்தியில் வெளியாக இருப்பது இதுதான் முதல் முறையாம். எனவே மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் புலிக் (பட)குழுவினர்.

ஆக "புலி"யின் மூலமாக "மயிலு" வின் சொந்தக்குரலை மீண்டும் கேட்கலாம்.

 

தனி ஒருவனை நேசித்தேன் - ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய சூர்யா

சென்னை: சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் தனி ஒருவன் திரைப்படத்தை தான் மிகவும் நேசித்ததாக நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

I Loved it Thani Oruvan - Says Surya

மேலும் இந்தப் படத்தின் வெற்றியில் இருந்து என்ன தெரிகிறதென்றால் மொத்த படக்குழுவினரும் தங்கள் உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர். அதனால் தான் இந்த மாபெரும் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

மொத்தத்தில் சூப்பரான ஒரு திரைப்படமாக தனி ஒருவன் வந்திருக்கிறது இப்படி ஒரு சிறந்த திரைப்படத்தைக் கொடுத்த, தனி ஒருவன் குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார் சூர்யா.


சூர்யாவின் இந்த பாராட்டால் தனி ஒருவன் படக்குழுவினர் மிகவும் மகிழ்ந்து போயிருக்கின்றனர், குறிப்பாக படத்தின் வசனகர்த்தா சுபா மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் தங்கள் நன்றிகளை சூர்யாவிற்கு தெரிவித்து இருக்கின்றனர்.

தனி ஒருவன் - வசூல், பாராட்டு இரண்டிலுமே நம்பர் 1 தான்..

 

மாங்கா படத்துக்கு ஏ! எல்லாம் இவரால்தானாம்...!!

இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் மாங்கா. இந்த படத்திற்கு சென்சார் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. க்ளீன் ஏ சர்டிபிகேட் வேறு கொடுத்திருக்கிறார்கள்!

இத்தனைக்கும் இந்த படத்தில் கற்பழிப்பு காட்சியும் இல்லை. வன்முறை காட்சியும் இல்லை. அப்புறம் எதற்கு ஏ சான்றிதழ்? எல்லாம் படத்தில் நடித்த நவீன் என்பவரால் வந்த வினை.

A for Maanga, just because of this man!

இவர் நடித்த காட்சிகளைப் பார்த்த பெண் உறுப்பினர்கள் அத்தனை பேரும், "இவர் நடிக்கும் போர்ஷனையே வெட்டுனீங்கன்னா க்ளீன் யு சர்டிபிகேட் தர்றோம். இவர் இருந்தால் ஏ தான் தருவோம்," என்று கூறுகிற அளவுக்கு நிலைமை மோசம்.

படத்தின் இயக்குனர் ராஜாரவிக்கு பயங்கர தர்மசங்கடம். அதையும் தாண்டி படத்திலிருந்து இவரை நீக்கினால், கதையே கெட்டுப் போகிற அளவுக்கு இந்த கேரக்டருக்கும் கதைக்கும் ‘லிங்க்' இருக்கிறதாம். வேறு வழியில்லாமல், "அவரை நீக்க முடியாது. நீங்க ஏ சர்டிபிகேட்டே கொடுங்க. வாங்கிக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். தயாரிப்பாளரும் இதை ஒப்புக் கொள்கிற அளவுக்கு சூழ்நிலை லாக் பண்ணிவிட்டதாம் இருவரையும்.

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான அந்த புதுமுக நடிகரின் பெயர் நவீன். சாஃப்ட்வேர் என்ஜினியர். அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரை நட்பு முறையில் அழைத்து வந்தாராம் டைரக்டர் ராஜாரவி.

வில்லங்கத்தை பிளைட் ஏற்றி அழைச்சுட்டு வந்துட்டாரோ?

 

ரஜினி படத் தலைப்புக்கு போட்டா போட்டி!

கோடம்பாக்கத்தில் இன்று புதிதாய் அறிமுகமாகும் ஹீரோ கூட தன் படத்துக்கு வைக்க ஆசைப்படுவது, ரஜினி நடித்த ஏதாவது ஒரு படத்தின் தலைப்பைத்தான் (ஆனால் அந்த ரஜினி படத்துக்கோ ஒரு புது இயக்குநரின் கபாலியை வைத்திருப்பதை என்னவென்பது!).

இன்றைய தேதிக்கு ரஜினி நடித்த படங்களைத் தலைப்பாக வைத்து மூன்று படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

Tough competition for Rajini movie titles

ஜீவா - ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு போக்கிரி ராஜா தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள ரஜினி அனுமதி அளித்துள்ளார். முதலில் அந்தத் தலைப்பில் படமெடுத்த ஏவிஎம்மிடம்தான் அனுமதி கேட்டார்களாம். அவர்கள் ரஜினியைக் கேட்குமாறும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்களாம்!

ரஜினி நடித்த காளி தலைப்பை எப்படியாவது பயன்படுத்தியே தீருவது என கார்த்தி ஆசைப்படுகிறாராம். ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த மெட்ராஸ் படத்துக்கு முதலில் வைத்த பெயர் காளிதான். பின்னர் மாற்றிவிட்டனர்.

அதிபர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ள ஜீவன், அடுத்து சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரஜினியின் ஜானி படத்தை அதே பெயரில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கான அனுமதியை உரியவர்களிடம் பெறும் வேலைகள் நடக்கிறதாம்!

 

கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ "யார்யா"?

சென்னை: கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார்யா என்று கேட்டால் அது ஆர்யா தான் என்று கூறுகின்றனர் தகவல் அறிந்தவர்கள். அனேகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் பற்றிப் பல்வேறு செய்திகள் வந்துவிட்டன.

அடுத்து அவர் அஜித் படத்தை இயக்கப்போகிறார், விஜய் படத்தை இயக்கப்போகிறார் என்று வந்த எந்தத் தகவலையும் கே.வி.ஆனந்த் மறுக்கவில்லை.

K.V.Anand's Next Hero?

ஆனால் இரண்டுநாட்களுக்கு முன்பு அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கப்போகிறார் என்று செய்திகள் வந்தன. உடனே அதை மறுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்தார் கே.வி.ஆனந்த்.

மறுத்ததோடு இந்தச்செய்தியைப் படித்தால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல அந்த ஹீரோவும் டென்ஷனாகிவிடுவார் என்று தான் ஒரு பெரிய ஹீரோவிடம் பேசிக் கொண்டிருப்பதை குறிப்பாக சொல்லியிருந்தார் கே.வி.ஆனந்த்.

யார் அந்த ஹீரோ? என்று அவர் சொல்லவில்லை, குறைந்த பட்சம் ஒரு க்ளூ கூடக் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஹீரோ ஆர்யா என்றும் அந்தப்படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த செய்தியாவது உண்மையாகுமா? முடிவு இன்னும் சில தினங்களில்...

 

அந்த டைரக்டர் ஏன் நடிகரானார் தெரியுமா?- சத்யராஜ் சொன்ன கவுண்டரின் 'கவுன்ட்டர்!'

49ஓ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி, சிவகார்த்திகேயன் பேசியதை நேற்று தந்திருந்தோம். அவர்களுக்கு இணையாக மிக சுவாரஸ்மாகப் பேசிய இன்னொரு பிரபலம் சத்யராஜ்.

நிச்சயம் மற்ற நடிகர்களைவிட சத்யராஜுக்குத்தான் கவுண்டருடன் அதிக அனுபவங்கள் இருக்கும் என்பது திரையுலகம் அறிந்தது.

அந்த அனுபவங்களிலிருந்து சத்யராஜ் சொன்னவற்றை இங்கே தருகிறோம்...

‘‘நான் எத்தனையோ அழகான நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருந்தாலும், அண்ணன் கவுண்டமணியுடன் நடித்ததுதான் ஜாலியான அனுபவங்கள்.

Sathyaraj shares his experience with Goundamani

அவருடன் நடிக்கும்போது நொடிக்கு நொடி கேலியும் கிண்டலும் செய்து சிரிக்க வைப்பார். மனதில் பட்டதை நகைச்சுவையாக வெளியில் பேசுவதில், அவருக்கு இணை அவர்தான்.

நான், ‘வீரநடை' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, என் கைவசம் வேறு படங்கள் இல்லை. அந்த ஒரு படம் மட்டும்தான் இருந்தது.

என்றாலும் நான் விட்டுக் கொடுக்காமல் டைரக்டர் சீமானிடம், ‘‘மாலை ஆறு மணிக்கு என்னை விட்டு விடுங்கள். ஒரு டைரக்டர் கதை சொல்ல வருகிறார்'' என்று கூறினேன். அருகில் இருந்த கவுண்டமணி அண்ணன், ‘‘எப்படியிருந்தாலும் அந்த கதையை நீங்க வேண்டாம்ன்னு சொல்லப் போவதில்லை. கண்ணுக்கு எட்டின தூரம் வரை எந்த தயாரிப்பாளரும் உங்களைத் தேடி வரவில்லை. எதற்கு இந்த பந்தா?'' என்று கிண்டலடித்தார். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

Sathyaraj shares his experience with Goundamani

ஒரு டைரக்டர் திடீரென்று நடிகர் ஆனார். அதற்கு அவர் 'நான் ஒரு பள்ளிக்கூட விழாவுக்கு போய் இருந்தேன். அங்குள்ள மாணவர்கள் அனைவரும் என்னை நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதனால்தான் நடிக்கிறேன்' என்றார். ‘அட, அது பிளைன்ட் (கண்பார்வையற்றவர்) ஸ்கூல்' ஆ இருக்கும்பா'' என்று அண்ணன் கவுண்டமணி அடிச்சார் பாருங்க...

இது மாதிரி அண்ணனுடன் எனக்கு நிறைய அனுபவங்கள். ‘யு டியூப்'பில் கவுண்டமணிக்குத்தான் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘கட்டப்பா ஏன் பிரபாசை குத்தினார்?' என்ற கேள்விக்கு, ‘ராத்திரி கண் தெரியாமல் குத்திட்டாம்பா' என்று கவுண்டமணி சொல்வது போல், கமெண்ட் போடுகிறார்கள்.

இப்படி அவரைப் பத்தி நிறைய சொல்லிட்டே போகலாம்," என்று சொல்ல, கவுண்டமணி அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

 

அஸ்வினையும் "தனி ஒருவன்" சுழற்றிப் போட்டு விட்டதே!

சென்னை: "தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படமொன்றை நான் பார்த்தேன் " என்று தனி ஒருவன் படத்தைப் பாராட்டியிருக்கிறார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஜெயம் ரவி நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் தரணியெங்கும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

Thani oruvan stands tall under the shadow of Aravind swamy - Says Ravichandran Ashwin

நல்ல ஒரு ஆக்க்ஷன் த்ரில்லராக வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்தப் படத்தைப் பார்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படமொன்றை நான் என் வாழ்க்கையில் பார்த்தேன்.


தனி ஒருவன் படத்தின் உயரமே தனியாக உள்ளது, படத்தில் நடித்த அரவிந்த் சாமியின் நிழலைப் போல படத்தின் உயரம் என்னைப் பிரமிக்க வைத்தது என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.

சமீபத்தில் இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா ஆகியோரும் தனி ஒருவன் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவனின் நடிப்பிற்கு இந்த தரணியே ரசிகனப்பா...

 

லண்டனில் கணவருடன் பிறந்த நாள் கொண்டாடிய கபாலி நாயகி!

கபாலி படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடிக்கும் ராதிகா ஆப்தே இந்த ஆண்டு தன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

ராதிகா ஆப்தே நடிக்க வந்து எட்டாண்டுகள் ஆகின்றன. 2005-ல் வாஹ் லைப் ஹோ தே ஹைசி படத்தில் அறிமுகமான ராதிகா, 2012-ல் தோனி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

Kabali heroine celebrates her B'day at London

இந்த ஆண்டு மட்டும் தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

ஆனால் ரஜினிக்கு நாயகியாக நடிப்போம் என்று அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

கபாலியில் நடிப்பதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் நாயகியாக மாறியுள்ளார்.

நேற்று அவர் தன் 30 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தன் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு.. மகிழ்ச்சியான பிறந்த நாள் இதுவே என ராதிகா தெரிவித்துள்ளார்.

நேற்று லண்டனில் தன் கணவர் பெனடிக்டுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார் ராதிகா ஆப்தே.

 

ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்குறான்.. பிரேம்ஜி கவலை

சென்னை: தான் பார்ட்டிகளுக்கு செல்லும் விஷயம் பற்றி மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் தனக்கு யாரும் பெண் தர மறுப்பதாக நடிகர் பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ளார்.

பிரேம்ஜி அமரன் தனது அண்ணன் வெங்கட் பிரபுவின் படங்களில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மாங்கா படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். மாங்கா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

படத்தில் அவருக்கு அத்வைதா, லீமா என இரண்டு ஜோடிகள். இந்நிலையில் இது குறித்து பிரேம்ஜி கூறுகையில்,

Premgi Amaren's worry

நான் சோலோ ஹீரோவாக பல காலம் ஆகிவிட்டது. என்னை ஹீரோவாக வைத்து என் அண்ணன் ஒரு படத்தை எடுக்க உள்ளார். அவர் இல்லாமல் நான் இல்லை. நான் பார்ட்டிகளுக்கு செல்வது பற்றி மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

அதை எல்லாம் பார்த்துவிட்டு எனக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். எனக்கு திருமணம் செய்து வைக்க என் அண்ணன் தான் தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

 

ரஜினிமுருகனுக்கு க்ளீன் யு சான்று... செப் 17-ல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ரஜினிமுருகன் படத்துக்கு எந்த வெட்டும் இல்லாமல் யு சான்று கொடுத்துள்ளது சென்னை மண்டல தணிக்கைக் குழு.

Clean U for Rajinimurugan

லிங்குசாமி, சுபாஷ் சந்திர போசின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ளது ரஜினிமுருகன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என ஏற்கெனவே விளம்பரங்களை வெளியிட்டிருந்தனர்.

Clean U for Rajinimurugan

இந்த நிலையில் இன்று தணிக்கைக் குழுவினர் படம் பார்த்தனர்

எந்தக் காட்சி, வசனத்துக்கும் ஆட்சேபணையோ வெட்டோ தராமல் படத்துக்கு க்ளீன் யு சான்று அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 17 வியாழக்கிழமையன்று உலகெங்கும் அதிக அரங்குகளில் படத்தை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் தயாராகி வருகிறது.