அஜீத் படத்துக்கு நோ சொன்னார் விமலா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத் படத்துக்கு நோ சொன்னார் விமலா

7/14/2011 4:51:30 PM

அஜீத் நடிப்பில் சக்ரி இயக்கும் படம் Ôபில்லா 2Õ. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. இதில் ஹீரோயினாக மாடல் ஹுமா குரேஷி நடிக்கிறார். இன¢னொரு ஹீரோயின் வேடத்துக்கு விமலா ராமனிடம் பேசினர். ஆனால் Ôபில்லா 2Õவில் நடிக்க விமலா ராமன் மறுத்துவிட்டார். முன்னணி இடத்துக்கு வர தெலுங்கில் கவர்ச்சியாக நடித்து வரும் விமலா, Ôபில்லாÕவில் அஜீத்துக்கு ஜோடி என்பதால் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே கூறப்பட்டது. அவர் மறுத்திருப்பது பட யூனிட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விமலா தரப்பில் கூறும்போது, Ôதெலுங்கு படங்களில் விமலா பிசியாக உள்ளார். இந்தி படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்கவில்லைÕ என்றனர். படத்தில் ஹுமா குரேஷிக்கே முக்கியத்துவம் என்பதால்தான் இதில் விமலா நடிக்கவில¢லை என கூறப்படுகிறது.




 

இந்தி வாய்ப்பை இழந்தார் காஜல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தி வாய்ப்பை இழந்தார் காஜல்

7/14/2011 4:41:40 PM

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ப¤ரபலமானார் காஜல் அகர்வால். Ôசின¤மாÕ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தாலும் அங்கு பிரபலம் ஆகவில்லை. இந்நிலையில் இந்தி Ôசிங்கம்Õ படத்தில் அஜய் தேவகன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படம் வரும் 22ம் தேதி ரிலீசாகிறது. பெரிய படம் என்பதால் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார் காஜல். இதற்கிடையே Ôபுட்டாÕ இந்தி படத்தை இயக்கிய புரி ஜெகன்னாத், அடுத்ததாக Ôபிசினஸ்மேன்Õ என்ற படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்குகிறார். தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கிறார். இந்தியில் அபிஷேக் பச்சன். மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்கும் காஜலையே இந்தியிலும் நடிக¢க வைக்க இயக்குனர் புரி விரும்பினார். ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லையாம். காரணம், அபிஷேக் பச்சன் என்கிறார்கள். சில புதுமுகங்களை அபிஷேக் சிபாரிசு செய்திருப்பதாகவும் அதில் ஒருவரை ஹீரோயினாக தேர்வு செய்ய சொல்லிய¤ருப்பதாகவும் தெரிகிறது. இதனால் இந்தி Ôபிசினஸ்மேன்Õ பட வாய்ப்பை இழந்துள்ளார் காஜல்.




 

சக்சேனா மீது புகார் கொடுத்த விநியோகஸ்தர் வீட்டில் வருமான வரி ரெய்டு!!


சேலம்: சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது மோசடி புகார் கொடுத்த சேலம் விநியோகஸ்தர் டிஎஸ் செல்வராஜ் வீட்டில் இன்று வரிமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.

சேலம் -நாமக்கல் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க பொருளாளராகவும் பிரபல விநியோகஸ்தராகவும் இருப்பவர் செல்வராஜ்.

தீராத விளையாட்டுப் பிள்ளை பட விவகாரத்தில் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா தனக்கு ரூ 83 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் தராமல் மோசடி செய்ததாக இவர் சென்னை கேகே நகர் போலீஸில் புகார் கொடுத்தார்.

இதை விசாரித்த போலீசார் சக்சேனாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் சேலம் வந்தனர்.

அவர்கள் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே வசிக்கும் செல்வராஜின் வீட்டிற்கு சென்றனர். செல்வராஜிடம் உங்களிடம் விசாரிக்க வேண்டும் என கூறி அவரிடம் சம்மனை கொடுத்தனர். இதை வாங்கி பார்த்த செல்வராஜ் விசாரணைக்கு ஒத்துக்கொண்டார்.

இதன் பின்னர் செல்வராஜிடம் கோவை மண்டல வருமான வரித் துறை துணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த விசாரணை முடிந்ததும், செல்வராஜின் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சென்று விசாரித்தனர். பின்னர் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனையிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்தனர். இதன் பின்னர் சினிமா வினியோகஸ்தர் செல்வராஜை சேலத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவல்களை அதிகாரிகள் குறித்து வைத்துக் கொண்டனர்.

இதன் பின்னர் செல்வராஜை அதிகாரிகள் அனுப்பி வைத்துவிட்டனர்.
 

நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!


காதலி நயன்தாராவை மணம் முடிக்கும் முன், குருவாயூர் கோயிலில் காணிக்கை செலுத்தி வேண்டிக் கொண்டார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா.

நடிகர் பிரபுதேவா காதலி நயன்தாராவுடன் கேரளாவில் தங்கி திருமண ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கொச்சி அல்லது மும்பையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது.

கோயிலுக்குள் வராத நயன்...

இதற்கிடையே, நேற்று பிரபுதேவா நயன் தாராவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால் அவர் காரிலேயே அமர்ந்து கொண்டார்.

பிரபுதேவா தனது கார் டிரைவருடன் கோவிலுக்குள் சென்று 15 நிமிடங்கள் வழிபட்டார். பின்னர் தங்க பட்டுச்சேலைக்குள் தாலியை வைத்து மேல்சாந்தியிடம் காணிக்கையாக கொடுத்து வழிபட்டார். அதோடு, வாழைக் குலை மற்றும் ஒரு கட்டு ரூபாய் நோட்டு, சந்தனம், நல்லெண்ணெய் ஆகியவற்றையும் காணிக்கையாக வழங்கினார்.

பிரபுதேவா கோவிலுக்கு வந்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண அங்கு திரண்டனர். இதனால் பிரபுதேவா அங்கிருந்து அவசர, அவசரமாக கிளம்பினார். பின்னர் நயன்தாராவுக்கு சொந்தமான அரியானூர் சாந்திமடம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றனர் இருவரும்.
 

கள்ளக்காதலரின் மனைவி கொலையில் எனக்குத் தொடர்பில்லை- நிலா


ஹரியானா மாநிலத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை நிலா ஹரியானா மாநில டிஜிபியை நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடிகை ரஞ்சிதா போலீஸ் கமிஷனரை சந்தித்த அதே நாளில் நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா, தனது கள்ளக்காதலரின் மனைவி கொலை வழக்கு தொடர்பாக ஹரியானா டிஜிபியை சந்தித்துள்ளார்.

குர்கானைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

நடிகை நிலாவுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் சுமித் தான் தனது மனைவியைக் கொன்று தொங்கவிட்டுள்ளார் என்று ருச்சியின் சகோதரி ஷெபாலி தெரிவித்தார். இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிலா கைதாகலாம் என்று கூறப்பட்டது. நிலாவைப் பிடிக்க டெல்லிக்குப் போலீஸ் படையும் விரைந்தது.

இந்நிலையில் திடீரென நிலா ஹரியானா டிஜிபியை சந்தித்து பேசியுள்ளார்.

அன்மையில் அவரைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்து வருத்தம் அடைந்துள்ளார் நிலா. அதனால் தான் டிஜிபியை சந்தித்து பேச முடிவு செய்தார் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.

நிலா விவகாரத்தில் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், டிஜிபியை நிலா சந்தித்து என்ன பேசினார் என்பது தெரியவில்லை.
 

'ராணா'வுக்காக கேளம்பாக்கத்திலேயே தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி!


ரஜினி திரும்பி வந்துவிட்டார், முன்னிலும் உற்சாகமாகவும், பொலிவுடனும். அவரைப் பார்க்க கஷ்டப்பட்டு முட்டி மோதி, போலீஸிடம் அடியெல்லாம்பட்டாலும், இந்த ஒரு விஷயத்துக்காகவே வந்திருந்த ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பெரிதுபடுத்தவில்லை.

அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில் அவர்கள் கவனம் திரும்பிவிட்டது.

ரஜினியின் இப்போதைய உடனடி கவனம் ராணாதான். அதற்கு முன் ஒரு மாதம் தன்னை முழுமையான ஃபிட்னஸுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார்.

காரணம் இந்தப் படத்தின் கதை ரஜினியுடையது. திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து செதுக்கியிருப்பவரும் அவரே.

பெரிய பட்ஜெட் படம் என்பதால், எந்திரனை விட மிகப் பிரமாண்ட வெற்றியை ராணா பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கேற்ப முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணாவுக்கான எதிர்ப்பார்ப்பு பெருகியுள்ளது.

இதையெல்லாம் மனதில் கொண்டு, ராணாவில் புதிய அம்சங்களைச் சேர்ப்பது, இருக்கிற காட்சியமைப்புகளை சரி செய்வது என ரஜினியின் ஒரு மாத கால ஓய்வு கழியப்போகிறது.

தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே புது அலுவலகம் திறந்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் முக்கிய கலைஞர்களுடன் படத்தை சிறப்பாக உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளவிருக்கிறார்.

இன்னும் சில தினங்களில் ரஜினியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க தீபிகா படுகோனேயும் இங்குவர இருக்கிறார்.

 

இந்திக்குப் போகும் 'மகாலட்சுமி'!


தெலுங்கில் அம்மா நானா ஒ தமிழ் அம்மாயி என்ற பெயரில் வெளியாகி, தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்று மொழி மாறி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை தற்போது அதன் ஒரிஜினல் இயக்குநரான பூரி ஜெகன்னாத் இந்தியிலும் எடுக்கப் போகிறார். நாயகி தமிழ்,தெலுங்கில் நடித்த அதே ஆசின்தான்.

தெலுங்கில் வெளியான அம்மா நானா தமிழ் அம்மாயி படத்தை ஜெயம் ரவி, ஆசின் நடிக்க தமிழில் ரீமேக் செய்தார் ஜெயம் ராஜா. படம் சூப்பர் ஹிட். ஆசினுக்கு இந்தப் படம்தான் முதல் தமிழ்ப் படம். இப்படத்துக்குப் பின்னர் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் தமிழை பெரிய ரவுண்டு அடித்து முடித்தார் ஆசின்.

இப்போது இந்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் படமான கஜினி பெரும் ஹிட் ஆகி ஆசினுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி பின்னர் சித்தெறும்பு ஆன கதையாக இப்போது ஆசினுக்கான இந்தி வாய்ப்புகள் பிரகாசமாக இல்லாத நிலை.

இந்த நேரம் பார்த்து அவரது வயிற்றில் பாலை ஊற்றும் விதமாக தனது அம்மா நானாவை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் பூரி ஜெகன்னாத் என்ற தகவல் ஆசினை வந்து சேர்ந்தது. அவரை அணுகி நான்தானே ஹீரோயின் என்று கேட்க, அவரும் ஆமாமா என்று வேகமாக மண்டையை ஆட்டி வைத்துள்ளாராம். இதனால் ஆசின் படு குஷியாக காணப்படுகிறார்.

இந்தி ரீமேக்கில் ஆசின் நடிப்பதாக இருந்தால், பூரியுடன் ஆசின் இணைவது இது மூன்றாவது முறையாகும். அம்மா நானா தவிர பூரி இயக்கி சிவமணி என்ற படத்திலும் ஆசின் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, தான் அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் இயக்கி புத்தா ஹோகா தேரா பாப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவது குறித்து பூரி கவலைப்படவில்லையாம். மாறாக அமிதாப்பச்சனை வைத்து இயக்கியதே தனது பெருமை என்கிறார்.

இந்தப் படத்தை முடித்து விட்டு தி பிசினஸ்மேன் என்ற படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் இயக்கப் போகிறாராம். அதன் பின்னர்தான் ஆசினுடன் அம்மா நானாவுக்காக இணையப் போகிறாராம்.

பூரியின் ‘அம்மா நானா’ விளையாட்டு ஆசினுக்கு இந்தியில் பிரேக் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…!

 

இந்தியில் ரீமேக்காகும் கோ: கே.வி. ஆனந்த் தீவிர ஆலோசனை


சென்னை: தமிழில் வெற்றிகரமாக ஓடிய “கோ” படத்தை இந்தியில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா-கார்த்திகா, பியா நடிப்பில் வெளியான படம் “கோ” . திரையரங்குளுக்கு வரும் தமிழ் படங்கள் எல்லாம் ஒரு வாரத்தில் வெளியேறிய நேரத்தில் கோ வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜீவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

கார்த்திகாவுக்கும் இதுதான் பெயர் வாங்கிக் கொடுத்த படம். இதில் நடித்த பியா பாஜ்பாயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இத்தனை சிறப்புகள் வாயந்த கோ படத்தை இந்தியில் எடுப்பது குறித்து கே. வி. ஆனந்த் ஆலோசித்து வருவதாக அந்த படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் தெரிவித்தார்.

இந்தியில் ஜீவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முதலில் ஜீவா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது ரன்பீர் அல்லது ஷாகித் நடிக்கக்கூடும் என்று தெரிகிறது.

 

குருவாயூர் கோயிலுக்கு நயன்தாராவுடன் பிரபுதேவா வருகை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குருவாயூர் கோயிலுக்கு நயன்தாராவுடன் பிரபுதேவா வருகை!

7/14/2011 12:54:59 PM

நடிகை நயன்தாராவுடன் குருவாயூர் கோயிலுக்கு வந்து பிரபுதேவா  தரிசனம் செய்தார். நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் விவாகரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரபுதேவாவும் நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இதற்காக நயன்தாரா சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.  இந்த நிலையில், பிரபு தேவா – நயன்தாரா ஜோடி நேற்று காலை குருவாயூர் கோயிலுக்கு வந்தது. பிரபுதேவா மட்டும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால், கோயிலுக்கு செல்லாமல் காரில் அமர்ந்திருந்தார். பிரபுதேவா சாமி கும்பிட்ட பிறகு, கோயிலுக்கு வாழைக்குலை காணிக்கை செலுத்தினார். பின்னர், நயன்தாராவுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா

7/14/2011 12:53:49 PM

மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மும்பையின் முக்கியப் பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தாயாகப்போகும் ஐஸ்வர்யா ராயும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஐஸ்வர்யா கணவர் அபிஷேக்குடன் நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார். அங்கு ஐஸ்வர்யாவுக்கு பிரெஞ்சு அரசு நேற்று விருது வழங்குவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டவுடன் இந்த நிகழ்ச்சியை தள்ளிவைக்குமாறு ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, நான் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்தேன். ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரெஞ்சு தூதரை கேட்டுக் கொள்வது தான் சரி என்று நானும், என் குடும்பத்தாரும் நினைத்தோம் என்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள அமிதாப்பும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ஆனால் மும்பை சம்பவம் பற்றி கேட்டதும் அவர் விழாவிற்கு செல்லவில்லை.




 

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

7/14/2011 9:58:56 AM

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் ராணா படப்பிடிப்பில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மே மாதம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் நீர்கோர்ப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் இருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதிலும், நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், வெளிநாடு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, மே 27ம் தேதி சென்னையில்  இருந்து மகள், மருமகன் மற்றும் டாக்டர்கள் 7 பேருடன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ரஜினி பூரணமாக குணமடைந்தார்.
அதன்பின், டாக்டர்களின் அறிவுரைப்படி அங்கேயே அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு மாதம் ஓய்வு எடுத்தார்.  அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் உடன் இருந்து கவனித்து வந்தனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ரஜினி சென்னை திரும்ப முடிவு எடுத்தார். அதன்படி, ரஜினி குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு சென்னை வருவதாக செய்தி வெளியானது.

ரஜினியை வரவேற்க ரசிகர்கள் கூட்டம் மாலை 6 மணியில் இருந்தே விமான நிலையத்தில் திரண்டனர். மேளதாளம், வாழ்த்து கோஷங்களுடன் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இதனால், பன்னாட்டு விமான நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. ரசிகர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், ரஜினி வெளியே செல்வது கடினம் என்பதை விமான நிலைய அதிகாரிகள் உணர்ந்தனர். அதன்பின், விமான நிலைய அதிகாரிகள் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரஜினி வெளியே வரும் பாதையை பழைய விமான நிலையத்தின் கேட் எண்.6க்கு மாற்றினர். பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் பழைய விமான நிலையம் கேட் எண்.6க்கு என இரண்டு இடங்களிலும் திரண்டனர். இதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் கேட் எண்6க்கு படையெடுத்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் விமானத்தில் நேற்று இரவு 10.00 மணிக்கு சென்னை வந்தார். ரஜினியுடன், அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, நடிகை மானு ஆகியோர் உடன் வந்தனர். ரஜினியை வரவேற்க ரசிகர்களுடன், தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் விமான நிலையத்தில் காத்திருந்தார். விமானத்தில் இருந்து ரஜினி சிரித்தபடியே இறங்கினார். நீல கலர் ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை கலர் சட்டை, கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி, கொஞ்சம் வெள்ளை தாடியில் பழைய கம்பீர நடையுடன் ரஜினி காணப்பட்டார்.

எஸ்கலெட்டர் வழியாக வந்த ரஜினி, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை போன்ற பகுதிகளுக்கு உற்சாகமாக நடந்து வந்தார். சோதனைகள் அனைத்து முடிந்த பின்னர், சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு வேனில் ரஜினி குடும்பத்தினருடன் ஏறினார். பழைய விமான நிலையம் கேட் எண்.6க்கு சொகுசு வேன் வந்தது. கேட்டின் வெளியே கார் தயாராக இருந்தது. வேனை விட்டு இறங்கிய ரஜினி வெளியே இருந்த காரில் ஏறவில்லை.

அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி வந்தார். ரஜினிக்கு ரசிகர்கள் பூங்கொத்து, சால்வைகளை கொடுத்தனர். அவற்றை உற்சாகமாக ரஜினி பெற்றுக் கொண்டார். அதன்பின், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ரசிகர்களின் உற்சாக வரவேற்பை நன்றியுடன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்து விட்டு குடும்பத்தினருடன் காரில் போயஸ் கார்டன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!




 

திருமணம் முடிவாகட்டும், அறிவிக்கிறோம்: கரீனா


தானும், சைப் அலிகானும் பிரியவில்லை என்றும், திருமணம் முடிவானதும் அறிவிப்பதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி கரீனா கபூரும், நடிகர் சைப் அலி கானும் நீண்டடடடட காலமாக காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அன்மையில் இருவருக்கும் லடாய், அதனால் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வந்தன.

இந்த செய்தி காற்றோடு கலந்து கரீனா காதுக்கும் சென்றுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கரீனாவை நிருபர்கள் மொய்த்துவிட்டனர். அப்போது கரீனாவிடம் சைப் அலி கானை பிரிந்துவிட்டீர்களாமே என்று கேட்க அதற்கு அவர் நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம். பிரிந்துவிட்டோம் என்று வரும் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி. எங்களுக்கு திருமணம் நிச்சயமானதும், அனைவருக்கும் அறிவிப்போம் என்றார்.

கடந்த ஆண்டே கரீனாவும், சைப் அலி கானும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அடுத்த ஆண்டும் பிறந்துவிட்டது, இன்னும் திருமணம் முடிந்தபாடில்லை.

எப்பம்மா அறிவிப்பீங்க?
 

ரீமாசென் வங்க மொழியில் தாசியாக நடித்த படத்துக்கு ஏ சர்டிபிகேட்


தமிழ் சினிமாக்களில் முன்பு பிசியாக நடித்து வந்த ரீமா சென், தனது தாய் மொழியான வங்கத்தில் தாசி வேடத்தில், படுக்கை அறைக்காட்சிகள் உள்ளிட்ட கவர்ச்சிக் காட்சிகளில் நடித்த படம் ஒன்று தமிழுக்கு இளவரசி என்ற பெயருடன் மொழிமாற்றமாகி வருகிறது.

இந்தப் படம் 2004ம் ஆண்டு வங்கத்தில் வெளியான படம். படத்தின் பெயர் இதி ஸ்ரீகாந்தா. அப்படியென்றால், தங்கள் உண்மையுள்ள, ஸ்ரீகாந்தா என்று பொருள். இப்படத்தைத்தான் தற்போது இளவரசி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர். படத்தைப் பார்த்து பயந்து போன சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளதாம். காரணம் படத்தில் ரீமா சென் நடித்த ஒரு படுக்கை அறைக் காட்சி.

கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துவது இக்கால ஹீரோயின்களின் புதிய பழக்கமாகி வருகிறது. குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான வேடங்களில் முன்னணி நடிகைகள் சிலர் நடித்து பரபப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

காமசூத்ரா படத்தில் ரேகா படு கவர்ச்சிகரமாக நடித்து பயமுறுத்திறார். ஃபயர் படத்தில் நந்திதா தாஸ் ஓரினச்சேர்ககையில் ஈடுபடும் பெண்ணாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐஸ்வர்யா ராயே கூட ஒரு படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாயகிகள் யாரும் இப்படி நடித்ததில்லை என்றாலும் அவர்கள் தகுதிக்கேற்ற வகையில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரீமா சென் நடித்த படம்தான் இந்த இதி ஸ்ரீகாந்தா. இதில் தாசி வேடத்தில் நடித்துள்ளார் ரீமா சென். தாசி வாழ்க்கையில் பல சித்திரவதைகளை சந்திக்கும் அவர் கடைசியில் அதை விட்டு விலகி சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.

படத்தில் ஒரு படுக்கை அறைக் காட்சியில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ரீ்மா சென். இதைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனராம்.
 

ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்


சென்னை: ரூ 45 லட்சம் கேட்டு தன்னை இணையதள ஆசிரியர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சென்னை மாநகர போலீசில் புகார் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

கனிமொழிக்கு காட்டிய சென்டிமெண்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா


சென்னை: கனிமொழிக்குக் காட்டிய சென்டிமென்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும். அன்று அவர் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மகளே பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நடிகை ரஞ்சிதா.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தோன்றிய செக்ஸ் வீடியோ பொய்யானது என கூறி வருகின்றனர்.

அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்த சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார்.

இப்போது முன்னணிப் பத்திரிகைகளின் நிருபர்கள் சிலரை அழைத்து தனியாக பேட்டி கொடுத்து வருகிறார் ரஞ்சிதா.

அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், "முன்பை விட நான் இப்போது அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்குக் காரணம் தியானம்தான். கடந்த சில வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். அது எனக்கு வலிமையையும், அழகையும் கொடுத்து உள்ளது. இப்போதைய எனது நடவடிக்கைகள் அவற்றின் பிரதிபலிப்புதான்.

தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். அதுதான் கருணாநிதி, கனிமொழி ஆகியோர் விஷயத்தில் நடந்துள்ளது. நான் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அப்போது கருணாநிதி எனக்கு பாதுகாப்பாக இல்லை. அப்போது அமைதியாக இருந்தார். ஆனால் கனிமொழிக்கு ஒன்று என்றதும் பதறுகிறார். கனிமொழிக்கு காட்டும் சென்டிமென்டை எனக்கு காட்டாதது ஏன்?

என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டன. ஒரு பெண்ணான எனனால் அரசியலில் சிறப்பாக பணியாற்ற முடியாது என்று கருதுகிறேன்.

என்னைப்பற்றி நிறைய அவதூறுகள் வந்தன. பழி வாங்கினார்கள். என் பெற்றோரும், சகோதரியும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எனது மொத்த குடும்பமும் என் பக்கம் இருந்தது.

இனி மீண்டும் நடிக்க மாட்டேன்:

தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருப்பேன். ஆசிரம பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். 100 சதவீதம் சமூக சேவைப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். ஆசிரமம் சார்பில் இலவச கல்வி அளித்தல், உணவு வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்றவை தினமும் நடக்கின்றன. அதில் இணைந்து செயல்படுவேன். ஒரு மருத்துவமனை கட்டவும் விருப்பம் இருக்கிறது.

சினிமாத் துறையில், நடிகர்-நடிகைகள் யாருடனும் நான் தொடர்பில் இருக்கவில்லை. அவர்கள் ஆதரவு எனக்கு தேவையும் இல்லை. நானும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்.

அடுத்த சில ஆண்டுகளில் சன்னியாசியாக மாறப் போகிறேன்," என்று கூறியுள்ளார்.
 

பிரான்சில் பிராட் பிட், ஏஞ்சலினா ரகசிய திருமணம்


ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடியான பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கின்றனர். அவர்களுக்கு மாட்டாக்ஸ் (9), பாக்ஸ் (7), ஜஹரா (6), ஷிலோ (5) , இரட்டையர்கள் விவியன் மற்றும் நோ (3) ஆகிய 6 குழந்தைகள் உள்ளனர்.

இத்தனை நாட்களும் திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தி வரும் அவர்களை விரைவில் முறைப்படி திருமண பந்தத்தில் இணையுமாறு குழந்தைகள் வற்புறுத்து வருகின்றனர்.

அவர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்வதென்று முடிவெடுத்துள்ளனர். ஆனால் இந்த திருமணம் பிராட் பிட், ஜெனிபர் ஆனிஸ்டன் திருமணம் போல விமர்சியாக நடக்காது என்று கூறப்படுகிறது.

பிட்டும், ஜூலியும் சேர்ந்து பிரான்சில் ஒரு மேன்சனை வாங்கியுள்ளனர். அந்த வளாகத்தில் 16-ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றும் உள்ளது. அங்கு தான் திருமணம் நடக்தவிருக்கிறது. அதுவும் ரகசியமாக.

எல்லாம் முடிஞ்சு போச்சு, இனி இன்னாத்துக்குப்பா ரகசியம்...!
 

இயக்குநர் சங்க தலைவர் பொறுப்பை சேரனிடம் ஒப்படைத்தார் பாரதிராஜா!


சென்னை: திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட நிர்வாகிகள் புதன்கிழமை பதவியேற்றனர். ஓய்வு தேவைப்படுவதால் தனது பொறுப்புகளை துணைத் தலைவர் சேரன் மற்றும் சமுத்திரக்கனியிடம் ஒப்படைத்தார் பாரதிராஜா.

கடந்த மாதம் இயக்குநர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து தலைவராக பாரதிராஜாவும், அமீர் செயலாளராகவும், சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பொருளாளராக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனும் பதவியேற்றுக் கொண்டனர். சென்னையில் நேற்று நடந்த இதற்கான விழாவில் செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் கூறியது:

வரவு, செலவை முறைப்படி தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத்தான், பதவியேற்பு விழாவை உடனடியாக நடத்த முடியவில்லை. பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக நடந்த பொதுக்குழுவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இயக்குநர் சங்கம் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தம் அதில் முக்கியமானது. அதன்படி, உதவி இயக்குநர்களுக்கு சினிமா சம்பந்தமான பயிற்சி அளிக்க இருக்கிறோம். வருடத்துக்கு 80 மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைவார்கள்.

சினிமா தொழில்நுட்பங்கள் அடங்கிய அனைத்து விதமான பயிற்சிகளையும் இதில் அளிக்க இருக்கிறார்கள். இயக்குநர் சங்கத்துக்காக ரூ.3000 செலவில் இந்த பயிற்சியை அளிக்க பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது," என்றார்.

பாரதிராஜா பொறுப்புகளை ஒப்படைத்தது குறித்து கூறுகையில், "இயக்குநர் பாரதிராஜா தன் பொறுப்புகளை துணைத் தலைவர்களான சேரன் மற்றும் சமுத்திரகனியிடம் கொடுத்திருக்கிறார். ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். வேறு எந்தக் காரணமும் இல்லை. தேவைப்படும்போது அவர் நேரில் வந்து வழிநடத்துவார்", என்றார் அமீர்.

தற்போதுள்ள சங்க நிர்வாகிகளுக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே தேர்தலுக்கு முன் பெரும் மனக்கசப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
 

மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா


டெல்லி: மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மும்பையின் முக்கியப் பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தாயாகப்போகும் ஐஸ்வர்யா ராயும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஐஸ்வர்யா கணவர் அபிஷேக்குடன் நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார்.

அங்கு ஐஸ்வர்யாவுக்கு பிரெஞ்சு அரசு நேற்று விருது வழங்குவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டவுடன் இந்த நிகழ்ச்சியை தள்ளிவைக்குமாறு ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார்.

இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது,

மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தோம். இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்தினருக்காவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த நேரத்தில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம்மை யாரும் அசைத்துவிட முடியாது என்று தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நான் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்தேன். ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரெஞ்சு தூதரை கேட்டுக் கொள்வது தான் சரி என்று நானும், என் குடும்பத்தாரும் நினைத்தோம் என்றார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள அமிதாப்பும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ஆனால் மும்பை சம்பவம் பற்றி கேட்டதும் அவர் விழாவிற்கு செல்லவில்லை.

அமிதாப்பின் டுவீட்:

மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்கள்...!!கடவுளே! மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்! என்று டுவிட்டரில் எழுதியிருந்தார்.

மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் திரைத்துறையினரும் தங்கள் அனுதாபத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தனர்.

தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன். கோழைத்தனமான தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று இயக்குனர் மாதுர் பந்தர்கர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

நடிகர் ஷஹீத் கபூரின் டுவீட்:

மும்பையில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள்... தயவு செய்து வீடுகளுக்கச் செல்லுங்கள்!!!

பிரியங்கா சோப்ரா டுவீட்:

தயவு செய்து யாரும் வதந்திகள் மற்றும் உறுதிபடுத்தாத செய்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம்.

ரித்தேஷ் தேஷ்முக் டூவீட்:

தாக்குதல்கள் பற்றி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதி்ல பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பத்திரமாக வீட்டில் இருங்கள்.

சோனம் கபூர் டுவீட்:

மும்பையில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள்.

அனுபம் கேர் கூறியதாவது,

மும்பை தாக்குதல்கள்: கோபம், ஏமாற்றம் மற்றும் உதவியின்மை பதில் அல்ல. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
 

சிங்கப்பூரில் ரஜினிக்கு உதவிய நடிகை மானு!


சிங்கப்பூரில் ரஜினி சிகிச்சைப் பெற்ற பிறகு, வசதியான குடியிருப்பில் தங்கி ஓய்வெடுக்க ஏற்பாடு செய்து தந்தவர் நடிகை மானு. இவர் காதல் மன்னன் படத்தின் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தவர்.

அந்த ஒரு படத்துக்குப்பிறகு நடிப்புலகிலிருந்து விலகி, நடனக் கலைஞராக புகழ்பெற்றுத் திகழ்கிறார். சிங்கப்பூரில் தயாரான சில படங்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார்.

இன்றைக்கு சிங்கப்பூரின் மிக முக்கிய கலைப் பிரமுகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார் மானு.

புதன்கிழமை சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பியபோது அவருடனே விமானத்தில் வந்தவர் மானு. ரசிகர்களிடம் ரஜினியின் கார் சிக்கிக் கொண்டதால் மானுவால் உடன் செல்ல முடியவில்லை.

பின்னர் நிருபர்கள் அவரிடம் நீங்கள் எப்படி ரஜினியுடன் வந்தீர்கள்? என்று கேட்டனர்.

உடனே அவர், சிங்கப்பூரில் நான்தான் அவரை கவனித்துக் கொண்டேன், என்றார்.

மேலும் பேச முயன்றபோது, பிறகு சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றார் மானு.
 

கட்டுக்கடங்காத ரசிகர்கள்... போலீஸ் தடியடி!


சென்னை: சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலையத்தில்.

ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டனர்.

ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே உண்மையைத் தெரிவித்தனர்.

இதனால் அடித்துப் பிடித்துக் கொண்டு கார்கோ பகுதி வாயிலுக்கு சென்றனர். பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்த வழியாகத்தான் விமான நிலையத்துக்குள் செல்வார்கள்.

ரஜினி வருகையையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ரஜினி வந்த போது, இந்த போலீஸால் கூட அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் பேச நடந்த வந்த ரஜினியால், பேச முடியாத சூழல் ஏற்பட்டது.

காரில் ஏறிப் புறப்பட்ட அவரை, மறித்துநின்ற ரசிகர்கள், அவரை அருகில் போய் பார்க்க முயன்றனர். இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது,

ரஜினி பயணித்த காரின் பேனட் உடைந்தது. காரின் வைப்பர்களும் பிய்ந்தன. காரை ஒரு அடி கூட நகரவிடாமல் ஒரு கூட்டம் தடுத்ததால் கடுப்பான போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். ஒரு ரசிகருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.மேலும் சிலருக்கு வெளியில் தெரியாவிட்டாலும் உள்காயம் ஏற்பட்டது.

இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே ரஜினி பெரும்பாலும் தனது பயணத் திட்டங்களை மீடியாவின் வெளிச்சத்துக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றார் ரஜினியின் உதவியாளர்.
 

சென்னை திரும்பினார் ரஜினி... ரசிகர்களின் உற்சாக வரவேற்பு


சென்னை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்னை திரும்பினார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூன் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார்.

எனினும் தொடர் மருத்துவ பரிசோதனைகள் தேவைப்பட்டதால், அவர் அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

அவர், புதன்கிழமை இரவு சென்னை வருவதாக தகவல் வெளியானது. இதனால், புதன்கிழமை மதியம் முதலே விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

தமிழகம் முழுவதுமிருந்து ரஜினி ரசிகர்கள் விமான நிலையத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

இரவு 9.30 மணி வரை ரஜினிகாந்த் விமான நிலையத்தில் எந்த வழியாக ரஜினிகாந்த் வருகிறார் என்பது விமான நிலைய போலீஸாரால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ரஜினியின் வருகையை எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் விமான நிலைய பிரதான நுழைவு வாயிலில் மேள தாளம், ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இரவு 9.40 மணியளவில் விமானநிலைய 6-வது வாயில் (விஐபி பிரிவு) வழியாக அவர் வருகிறார் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் 6-வது வாயிலில் கூடினார்கள். இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினிகாந்த் வந்திறங்கினார்.

வாயிலின் முகப்பில் நின்றிருந்த தனது காருக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்ததும் தனது பாணியில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி 3 முறை வணக்கம் தெரிவித்து கையசைத்தார்.

வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட ரஜினிகாந்த் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, குடும்பத்தினர் மற்றும் டாக்டர்களும் வந்திருந்தனர்.