ஹாரிஸா... அனிருத்தா... உதயநிதி விளக்கம்

Harris Jayaraj Is The Music Director For Udhayanidhi

உதயநிதி அடுத்து நடிக்கும் படத்துக்கு கொலவெறி புகழ் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பார் என்று வந்த செய்திகளை உதயநிதி மறுத்துள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு, உதயநிதி தயாரித்து நடிக்க, எஸ் ஆர் பிரபாகரன் ஒரு படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை உதயநிதி மறுத்துள்ளார்.

"நான் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார். என் மனைவி கிருத்திகா முதல்முறையாக இயக்கும் படத்துக்குதான் அனிருத் இசையமைக்கிறார்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கிருத்திகா இயக்கும் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

 

'வடிவேலுவுக்கும் மேல் தம்பி ராமையா...' - 'உ' பட இயக்குநர்!

Thambi Ramaiya Is Morethan Vadivelu Director Ashique

தம்பி ராமையா பிரதான வேடத்தில் நடிக்க, குறும்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்ற பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் ஆஷிக் இயக்கத்தில் உருவாகும் படம் இது.

ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தம்பி ராமையா பிரதான வேடமேற்று நடிக்கிறார். அவருடன் பல புதுமுகங்கள் நடிப்பில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது இந்தப் படம்.

படத்தின் இயக்குநர் ஆஷிக், விசுவல் கம்யூனிகேசன் மற்றும் சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்கம் பயின்றவர்.

தம்பி ராமையா தவிர, வருண், மதன் கோபால், 'ஸ்மைல்' செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சௌந்தரராஜா, காளி, ராஜசிவா, தீப்ஸ் சூப்பர் சிங்கர் ஜூனியர் டைட்டில் வின்னர் ஆஜீத், மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஆனால் இன்னும் நாயகி யார் என்பதை முடிவு செய்யவில்லையாம்.

படம் குறித்து இயக்குநர் ஆஷிக் பேசுகையில், "தலைப்புக்கு அர்த்தம் பிள்ளையார் சுழி என்பதுதான். இந்தப் படத்தின் ஹீரோ பெயர் கணேஷ். ஹீரோ வேறு யாருமல்ல, தம்பி ராமையாதான். அவர் ஒருவர்தான் இந்த வேடத்தைச் செய்ய முடியும். அதனால் அவரை ஒப்பந்தம் செய்தோம்.

தம்பி ராமையாவின் சிறப்பே, அவர் அழுதால் நாமும் அழுவோம், சிரித்தால் நாமும் சிரிப்போம். ஆனால் வடிவேலு போன்றவர்கள் சிரிப்புக்கு மட்டுமே உத்தரவாதம் தர முடியும். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து இந்தப் படத்தை இயக்குகிறேன்," என்றார்.

படத்துக்கு இசை அபிஜித் ராமசாமி, ஒளிப்பதிவு ஜெயப்பிரகாஷ். பாடல்களை எழுதி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கிறார் முருகன் மந்திரம்.

 

கமலுக்கு தயாரிப்பாளர், நடிகர், பெப்சி, இயக்குநர் சங்கங்கள் ஆதரவு- இன்று கூட்டாக பிரஸ்மீட்!!

Major Film Bodies Sopport Kamal Dth Efforts

சென்னை: கமல்ஹாஸனின் டிடிஎச் வெளியீட்டு முயற்சிக்கு தமிழ் சினிமாவின் பெரும்பாலான அமைப்புகள் முழு ஆதரவை அளித்துள்ளன. திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மட்டுமே முழுமையாக எதிர்க்கின்றனர்.

விஸ்வரூபத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு 1 நாள் முன்னதாக டிடிஎச்சில் நாடு முழுவதும் மூன்று மொழிகளில் கமல்ஹாஸன் வெளியிடுகிறார். இதில் முன்னணி டிடிஎச் நிறுவனங்கள் 5 அவருடன் இணைந்துள்ளன.

ஆனால் திரையரங்க உரிமையாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கமல் ஹாஸனுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது, அவர் படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் மாட்டோம் என அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் கமல் முயற்சிக்கு தமிழ் சினிமாவின் முக்கிய அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.

தென்னிந்திய பிலிம்சேம்பர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், அமீர் தலைமையிலான பெப்சி, பாரதிராஜா தலைமையில் இயங்கும் இயக்குநர்கள் சங்கம், சரத்குமார் தலைமை வகிக்கும் நடிகர் சங்கம் ஆகியவை அவருக்கு முழு ஆதரவு அளித்துள்ளன.

அதுமட்டுமில்லாமல், இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை ஹயாத் ஓட்டலில் இந்த அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கமலுடன் இணைந்து கூட்டாக நிருபர்களைச் சந்திக்கின்றனர்.

ஏற்கெனவே அரசின் ஆதரவையும் கமல்ஹாஸன் பெற்றுள்ளதால், தன் முயற்சியில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார்.

 

உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் புவனேஸ்வரி! - சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

Bhuvaneshwari Recieved Charge Sheet Brothel Case

சென்னை: உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன்.

கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள்.

அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை.

அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை.

இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார்.

இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர்.

அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது.

அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார்.

மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.

 

ரகசியமாக 3வது திருமணத்தை முடித்த கேத் வின்ஸ்லெட்... புது கணவருடன் விண்வெளியில் பறக்கிறார்!

Kate Winslet Weds Third Husband Ned Rocknroll

லண்டன்: டைட்டானிக் நாயகி கேத் வின்ஸ்லெட் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

37 வயதாகும் பிரிட்டிஷ் நடிகையான கேத் வின்ஸ்லெட் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

முதல் கணவர் இயக்குனர் ஜிம் தெரபில்டன் இவரை 2001 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது.இரண்டாவதாக ஷேம் மெண்டீஸ் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது தன்னை விட இளையவரான 34 வயதாகும் நெட் ராகென்ரோல் என்பவரை காதலித்து வந்தார். இவர் விண் வெளி ஆய்வு நிறுவனத்தில் பணி புரிகிறார்.

அவரைத்தான் இப்போது 3-வதாக திருமணம் செய்து கொண்டார் கேத் வின்ஸ்லெட். இவர்களது திருமணம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் முன்பே நடந்துவிட்டது. ஆனால் கொஞ்சநாள் இதை ரகசியமாக வைத்திருந்த வின்ஸ்லெட் - நெட் ராகென்ரோல் ஜோடி நேற்றுதான் உலகுக்கு வெளிப்படுத்தினர்.

ராக்கென்ரோலின் உறவினர்தான் பிரபல பிஸினஸ்மேன் சர் ரிச்சர்டு பிரான்ஸ்மேன். வர்ஜின் குழும தலைவர். 400 நிறுவனங்களுக்கு அதிபர்.

கேத் வின்ஸ்லெட் - ராக்கென் ரோல் திருமணப் பரிசாக இருவரையும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம் பிரான்ஸ்மேன்.

 

தியேட்டர்கள் எதிர்ப்பு குறித்து கவலையில்லை.. ஜனவரி 10ம் தேதி விஸ்வரூபம் டிடிஎச்சில் ரிலீஸ் - கமல் அற

Kamal Officially Announced Dth Release Of Viswaroopam

சென்னை: தியேட்டர்கள் எதிர்ப்பு குறித்து கவலையில்லை. திட்டமிட்டபடி ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாகும் என கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரூ 95 கோடி செலவில் கமல் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11-ம் தேதி வருகிறது.

இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் அறிவித்திருந்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்' படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே அணியாக உள்ளனர்.

இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.

இன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற கமல், "யார் எதிர்ப்பு குறித்தும் கவலையில்லை. எதிர்ப்பவர்கள் பின்னர் என் நிலையைப் புரிந்துகொள்வார்கள்.

5 டிடிஎச் நிறுவனங்கள்...

திட்டமிட்டபடி விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்,"என்றார்.