3/9/2011 10:01:19 AM
படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஆதி படுகாயமடைந்தார். வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம், 'அரவான்'. இதன் ஷூட்டிங் மதுரை மேலூர் பகுதியில் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் ஆதி, பசுபதி, அர்ச்சனா கவி மற்றும் ஏராளமான கிராமத்தினர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது 5 அடி உயர பனை மரத்தை ஆதி தாண்டிக் குதிப்பது போன்று படமாக்கினர். டூப் போடலாம் என்றபோது, மறுத்த ஆதி, தானே தாண்டினார். அப்போது எதிர்பாராவிதமாக பனை மரத்தின் மீது விழுந்தார். பனை மட்டை கறுக்குகள், ஆதியின் கைகளை கிழித்தது. படுகாயம் அடைந்த அவர் வலியால் துடித்தார். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்குப் பின், ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியுள்ளனர்.