சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான ஐஎம்டிபியில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக ரேட்டிங் பெற்று சாதனை புரிந்துள்ளது.
கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான். இந்தியில் இந்தப் படம் பெரிதாகப் போகாவிட்டாலும், தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்திலும் இந்தப் படம் புதிய சாதனை செய்துள்ளது.
இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது விஸ்வரூபம்.
இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.
ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது.