கொம்பன் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. இன்று படம் ரிலீஸ்

கார்த்தி- லட்சுமி மேனன் நடித்துள்ள கொம்பன் படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கொம்பன் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், கொம்பன் தலைப்பே குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத் திமிரைக் காட்டுவதாகவும் கூறி புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

முதலில் படத்தின் சில காட்சிகளை நீக்கக் கோரியவர், அடுத்து படத்தையே தடை செய்ய வேண்டும் என்றார்.

கொம்பன் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. இன்று படம் ரிலீஸ்

இதைத் தொடர்ந்து படத்தை கிருஷ்ணசாமிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளடங்கிய குழுவுக்கும் போட்டுக்காட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் படத்தை 3 நிமிடங்கள் கூட யாரும் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான சூழல் உருவானது திரையரங்கில்.

இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்பே படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு வெளியிட்டார்.

இதனால் 2ம் தேதி வெளியாக வேண்டிய கொம்பன் படம், ஒரு நாள் முன்னதாகவே இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் மதுரை நீதிமன்றத்தில் கொம்பன் பட வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வருவதால் தீர்ப்புக்கு பிறகு படத்தை வெளியிட முடிவு செய்தனர் திரையரங்க உரிமையாளர்கள்.

அதன்படி இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொம்பன் படத்தை வெளியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். படம் வெளியான பிறகு சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் வழக்கு தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இதையடுத்து கொம்பன் படம் திட்டமிட்டபடி இன்று மாலை வெளியாகிறது.

 

ஸ்ருதி ஹாஸன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்! - விஜய் படத் தயாரிப்பாளர்

தனக்கு சிக்கலான சூழல் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து புலி படத்தில் இப்போது நடித்து வரும் ஸ்ருதிஹாஸன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தயாரிப்பாளர் பி டி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

புலி படத்தின் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பிவிபி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜூனா-கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால் ஸ்ருதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது.

குறிப்பாக அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி நடிகரின் புதிய படத்திற்கு சென்றுவிட்டார் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது.

ஸ்ருதி ஹாஸன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்! - விஜய் படத் தயாரிப்பாளர்

எங்களது தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்து வரும் புலி படத்தில்தான் ஸ்ருதிஹாசன் ஏப்ரல்-1 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடிக்கவுள்ளார்.

தற்போது ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் புலி படத்திலும், இந்தியில் அக்‌ஷய்குமாருடன் ‘கப்பர்' படத்திலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘ஸ்ரீமந்துரு' படத்திலும் என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் அவர் புலி படத்தை பொருத்த மட்டில் சொன்ன தேதியில் கரெக்டாக படப்பிடிப்புக்கு வருவதும், அர்ப்பணிப்போடு அவர் நடிப்பதையும் ஒட்டுமொத்த யூனிட்டே பாராட்டி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் வாரிசு என்ற துளி பந்தா கூட இல்லாமல் அவர் எளிமையோடு நடந்து கொள்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

புலி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தலக்கோணம் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் 150 பேருக்கு மேலானோர் இரண்டு மாதம் பணி புரிந்து காடும்-ஏரியும் சங்கமிக்கும் இடத்தில் இந்திய திரையுலகில் யாரும் பார்த்திராத வகையில் கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

ஏப்ரல் மாதத்தில் இந்தப் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவதால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டியது வரும். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பும் நஷ்டமும் ஏற்படும் என்று எங்கள் கஷ்டத்தை தெரிவித்தோம்.

அதைப் புரிந்துக் கொண்டு இறுதி கட்டத்தில் ஒரு படம் நின்று விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் புலி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

மேலும் தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளை எங்களுக்காக விட்டு தந்த ஸ்ருதிஹாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

வெறும் புறம்போக்கு இல்லை.. இப்போ பொதுவுடமையும் சேர்த்தாச்சு! - எஸ்பி ஜனநாதன்

புறம்போக்கு... இது ஒரு தலைப்பா... ஒரு மாதிரி இருக்கே.. என்று கொஞ்சம் ஃபீல் பண்ணவர்களுக்காக ஒரு மாற்றத்தை தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.

படத்துக்கு இப்போதைய தலைப்பு: புறம்போக்கு என்கிற பொதுவுடைமை!

எஸ்பி ஜனநாதன் இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள்.

தனது முதல் படமான ‘இயற்கை' மூலம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற ஜனநாதன், தனது அடுத்தடுத்த படங்களான ‘ஈ' மற்றும் ‘பேராண்மை' மூலம் மக்களுக்கான இயக்குநராகப் பரிமாணம் எடுத்தார்.

வெறும் புறம்போக்கு இல்லை.. இப்போ பொதுவுடமையும் சேர்த்தாச்சு! - எஸ்பி ஜனநாதன்

வேகமாக அதிகப் படங்கள் பண்ண வேண்டும் என்ற நினைப்பில்லாத இயக்குநர் இவர். பேராண்மை என்ற வெற்றிப் படம் தந்த பிறகும், நான்காண்டுகள் கழித்துதான் இப்போது புறம்போக்கு எனும் பொதுவுடைமை வருகிறது.

இந்தத் தலைப்பு மாற்றம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், "குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ‘புறம்போக்கு'என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்ததைக் கொண்டது.

‘புறம்போக்கு' என்ற சொல் தமிழில்,வழக்கத்தில் கொச்சையாகப் பயன் படுத்தப்பட்டாலும், இது ஆழமான அர்த்தம் கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்.

வெறும் புறம்போக்கு இல்லை.. இப்போ பொதுவுடமையும் சேர்த்தாச்சு! - எஸ்பி ஜனநாதன்

புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல. மக்களுக்கு பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்பு பகுதியைத் தவிர்த்து பொது தேவைக்கு நிலங்களை; ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர். மேலும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டிக் கொள்வதற்கு நத்தம் புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.

இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளும், பஸ் நிறுத்தம், மேலும் பள்ளிகூடம், மருத்துவனை கட்ட அரசு புறம்போக்கு நிலங்களும் இதில் அடக்கம். மலைகளும், பனி சிகரங்களும் துருவங்களும் சர்வதேச கடல் பரப்பும் புறம்போக்கே. காற்றும், ஒளியும் நிலவொளியும் சிகரங்களும் எல்லையற்ற அண்டவெளியும் புறம்போக்கே... எதுவும் தனியுடமை அல்ல, பொதுவுடமைதான்.

வெறும் புறம்போக்கு இல்லை.. இப்போ பொதுவுடமையும் சேர்த்தாச்சு! - எஸ்பி ஜனநாதன்

குழம்பிப் போன இந்த காலகட்டத்தில் பொதுவுடமை கருத்தை மறுபடியும் மறுபடியும் வலியுருத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை' என்று தலைப்பு வைக்கப்பட்டது," என்றார்.

இந்த மாதம் இசையையும், வரும் மே முதல் தேதி பட வெளியீடும் இருக்கும் என்றார் மேலும் அவர்.

 

கொம்பன்... ஞானவேல் ராஜாவின் அழுகை ஆனந்தக் கண்ணீராகப் போகிறது!

கொம்பன் படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேச நேற்ற செய்தியாளர்களைச் சந்தித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

அப்போது ஒருகட்டத்தில், நல்ல படம் எடுத்திருக்கிறோம். எந்த சாதியையும் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால் இப்படி சிக்கல் ஏற்படுத்துகிறார்களே என்று சொல்லும்போதே அழுதுவிட்டார்.

கொம்பன்... ஞானவேல் ராஜாவின் அழுகை ஆனந்தக் கண்ணீராகப் போகிறது!

இன்று படத்தை முன்கூட்டியே வெளியிட்டுள்ளார். படம் பார்த்த செய்தியாளர்கள் பலரும் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டி பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல்களைப் பதிய ஆரம்பித்துள்ளனர்.

முதல் பாதி பார்த்து முடித்தவர்கள், பார்த்தவரை கொம்பன் படம் சிறப்பாக உள்ளது. அருமை எனத் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

கொம்பன்... ஞானவேல் ராஜாவின் அழுகை ஆனந்தக் கண்ணீராகப் போகிறது!

படத்தின் ஆரம்பத்திலேயே ராஜ்கிரண் பேசும் வசனத்தைக் குறிப்பிட்டு, இதைவிட எப்படி சாதியை எதிர்க்க முடியும் என்றும் கேட்டுள்ளனர்.

அந்த வசனம்:

ஊர்க்காரர்கள்: அண்ணே நம்ம சாதி சனமெல்லாம் கோயிலுக்கு கெளம்பிட்டாங்க.. நீங்க வரலியா?

ராஜ்கிரண்: சனங்க வந்தா பரவால்ல.. நீங்க சாதியையும் சேர்த்து கூட்டிட்டுப் போறீங்களே.. நான் எப்படி வரமுடியும்!

-சூப்பர்!

 

அழகான குடும்ப உறவுகளைச் சொல்லும் படம் “கொம்பன்” – டுவிட்டரில் சூர்யா "வாய்ஸ்"!

சென்னை: கொம்பன் குடும்ப உறவுகள் குறித்த ஒரு அழகான படம் என்று கார்த்தியின் "கொம்பன்" திரைப்படத்திற்கு ஆதரவாக அவரது அண்ணனும், நடிகருமான சூர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள படம் கொம்பன்.

இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் வருகிற 2 ஆம் தேதி வெளியாவதாக தான் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொம்பன் படத்துக்கு சாதிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவே படத்தை ஒருநாள் முன்கூட்டியே இன்று திரைக்கு கொண்டு வந்துவிட்டனர்.

இந்நிலையில் படத்தின் நாயகன் கார்த்தியின் அண்ணன் சூர்யா கொம்பனுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கொம்பன்" படம் அழகான உறவுகளைப் பற்றிய படம்.

படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஏன் இப்படி திடீரென உணர்வுபூர்வமான நிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு டுவிட்டில் இந்த பிரச்னைக்கு ஆதரவளித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், மீடியாக்கள், ரசிகர்கள் ஆகியோரின் மனமார்ந்த ஆதரவுக்கு நன்றி. சென்சார் போர்டு முடிவை ஏற்றுக் கொண்டு, அதற்கு மரியாதை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஏ.. முத்தழகு... இயக்குநர் ராமுக்கு ஜோடியாகிறார் பிரியா மணி!

சென்னை : மிஷ்கின் திரைக்கதை எழுதும் புதிய படத்தில் இயக்குநர் ராம்-க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை பிரியாமணி.

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியாமணி. கடந்த 2007ம் ஆண்டு அமீரின் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.

ஆனால், தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையாதததால், பிரியாமணியை கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்க்க இயலவில்லை. இந்நிலையில், இயக்குநர் ராம் ஜோடியாக நடித்து, மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார் பிரியாமணி.

ஏ.. முத்தழகு... இயக்குநர் ராமுக்கு ஜோடியாகிறார் பிரியா மணி!

கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் தங்கமீன்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகம் ஆனார். இவர் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே, மிஷ்கின் உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கும் படமொன்றில் நடிக்கவும் ராம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு மிஷ்கின் திரைக்கதை எழுதுகிறார். அதோடு வில்லன் கதாபாத்திரத்திலும் அவரே நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத அந்தப் புதிய படத்தில் ராமுக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதத்தில் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

 

இந்த அப்பா பெண்ணை கொஞ்சம் பாருங்களேன்!

சில விளம்பரங்களைப் பார்த்தால் உடனே சேனல் மாற்றத் தோன்றும்... சில விளம்பரங்கள் வைத்த கண் வைக்காமல் பார்க்க வைக்கும். நம்ம அண்ணாச்சிக்கடை சரவணா ஸ்டோர் விளம்பரமும் கவித்துவமாக எடுக்கப்பட்டுள்ளது.

சரத்குமாரும் அவரது மகள் வரலட்சுமியும் நடித்துள்ள இந்த விளம்பரம் பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு பிடித்தமானதாக மாறியுள்ளது.

இந்த அப்பா பெண்ணை கொஞ்சம் பாருங்களேன்!

எடுத்துக்கோ எடுத்துக்கோ

சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடை விளம்பரம் என்றாலே கதாநாயகிகளின் குத்தாட்டம்தான் மெயின் ஐயிட்டமாக இருக்கும். அதுவும் அக்கா சிநேகா வந்து எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ என்று கூவி கூவி விற்பார்.

சரத் - வரலட்சுமி

ஆனால் இந்த விளம்பரமோ... பெண் குழந்தையைப் பெற்ற தகப்பனின் பொறுப்பை உணர்த்துகிறது. இதில் அப்பாவாக சரத்குமாரும் மகளாக அவரது சொந்த மகள் வரலட்சுமி நடித்துள்ளார்.

இந்த அப்பா பெண்ணை கொஞ்சம் பாருங்களேன்!

என்னா ஒரு கம்பீரம்

இதுநாள் வரை பனியன், வேஷ்டி என விளம்பரப்படங்களில் நடித்துள்ள சரத்குமார் இதில் ஒரு கம்பீரமான அப்பாவாக நடித்துள்ளார்.

பட்டுப்புடவையில் மகள்

பாவாடை சட்டையில்... தாவணியில் பார்த்து சந்தோசப்பட்ட மகளை திடீரென மணக்கோலத்தில் அதுவும் பட்டுப்புடவையில் பார்த்து பரவசப்படும் தந்தையாய் சரத் குமார் அசத்தியுள்ளார்.

விளம்பர வாரிசுகள்

விஜய் - ஷோபா நகை விளம்பரம் போல சரத் - வரலட்சுமியின் அண்ணாச்சி கடை விளம்பரம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம். ஆனால் இதை வைத்து பட்டுப்புடவை எடுக்கப் போவார்களா என்றால் அது எனக்குத் தெரியாது!.

 

ருத்ரமாதேவி பின்னணி இசைச் சேர்ப்பு... லண்டனுக்குப் பறந்தார் இளையராஜா!

ருத்ரமாதேவி படத்தின் பின்னணி இசைச் சேர்ப்புக்காக லண்டன் சென்றுள்ளார் இளையராஜா.

குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள பிரமாண்ட சரித்திரப் படம் ருத்ரமாதேவி.

ருத்ரமாதேவி பின்னணி இசைச் சேர்ப்பு... லண்டனுக்குப் பறந்தார் இளையராஜா!

இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். குணசேகருடன் இணைந்து தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் தன்னிகரில்லா அரசியாக நாட்டை ஆண்ட ருத்ரமா தேவியின் வாழ்க்கை கதையாக இப்படம் தயாராகி வருகிறது. இதில் ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் தொடங்கியுள்ளன.

இதற்காக நேற்று லண்டனுக்குக் கிளம்பினார் இளையராஜா. அங்கு இரண்டு வாரங்கள் தங்கி படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.

 

ஏப்ரல் 4-ம் தேதி மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி இசை

‘கடல்' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய படமான ஓ காதல் கண்மணி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடக்கிறது.

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் - நித்யா மேனன் நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏப்ரல் 4-ம் தேதி மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி இசை

‘அலைபாயுதே' பாணியிலான காதல் படமாக ஓ காதல் கண்மணியை உருவாக்கியுள்ளாராம் மணிரத்னம். அவரது மெட்ராஸ் டாக்கீஸ்தான் தயாரிக்கிறது படத்தை.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் ஒரு பாடல் மட்டும் சமீபத்தில் வெளியானது. மென்டல் மனசு.. என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அடுத்து படத்தின் இசையை ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியிடப் போவதாக மணிரத்னம் அறிவித்துள்ளார்.

 

ஏழை ரசிகர்களின் வியாபாரத்துக்கு உதவிய நடிகர் விஜய்

நடிகர் விஜய் தன் பிறந்த நாள், படங்கள் வெளியாகும் நாள், வெற்றி விழா சமயங்களில் ரசிகர்களுக்கு உதவிகள் செய்வார். சில நேரங்களில் மாவட்டத் தலைநகர்களில் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவிகள் செய்வதும் உண்டு.

குறிப்பாக மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அதிகம் வழங்கி வருகிறார்.

ஏழை ரசிகர்களின் வியாபாரத்துக்கு உதவிய நடிகர் விஜய்

ஏழை ரசிகர்கள் தொழில் தொடங்கவும் உதவுகிறார். அந்த வகையில் சமீபத்தில் மூன்று ரசிகர்களுக்கு தள்ளு வண்டிகள் கொடுத்து சுய தொழிலுக்கு உதவியுள்ளார்.

அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ், அண்ணா நகர் வளைவு அருகே வாடகை தள்ளுவண்டியில் சாப்பாட்டுக்கடை நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு வண்டியை வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய்.

கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் உள்ள லட்சுமி நகரில் டிபன் கடை, இஸ்திரி கடையை ஞானம் பிரகாசமும் அவருடைய மகன் லூர்துசாமியும் வாடகை வண்டியில் நடத்தி வந்தார்கள்.

அவர்களுக்கு சாப்பாட்டுக் கடை வண்டி மற்றும் இஸ்திரி போடும் வண்டி வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய். திருமதி.ஞானம்பிரகாசம் மகனுடன் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்து, அவரிடமிருந்து வண்டியை பெற்றுச் சென்றனர்.

நீலாங்கரை பகுதியிலுள்ள முருகன் என்பவர் பழம், இளநீர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் வண்டி பழுதடைந்து விட்டதால் வியாபாரம் செய்ய முடியாமல் கஷ்டத்திலிருந்தார்.

ரசிகர் மன்றம் மூலம் இதனைக் கேள்ழிப்பட்ட விஜய், உடனடியாக வியாபாரம் செய்ய தேவையான மூன்று சக்கர வண்டியை தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்தார்.

 

சென்சார் சான்று வழங்கிய படத்தை எதிர்க்க எந்த தனிமனிதருக்கும் உரிமையில்லை! - சரத்குமார்

சென்னை: சென்சார் சான்று வழங்கிய பிறகு எந்தப் படத்தையும் எதிர்க்கும் உரிமை தனிநபருக்கு இல்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.

கொம்பன் படத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் சில களமிறங்கியுள்ள சூழலில், படத்துக்கு ஆதரவாக திரையுலகின் முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து கொம்பன் விவகாரம் குறித்துப் பேசினர்.

சென்சார் சான்று வழங்கிய படத்தை எதிர்க்க எந்த தனிமனிதருக்கும் உரிமையில்லை! - சரத்குமார்

அப்போது சரத்குமார் கூறுகையில், "படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது?

மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.

மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.

எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.

பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து," என்றார்.

 

அட ஏங்க.. அஞ்சலியை நான் ஒரு தலையாவுல்ல காதலிக்கிறேன்.. புலம்பும் பரோட்டா

சென்னை: நடிகை அஞ்சலி, காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்கின்றார் என்ற செய்தி கோலிவுட்டில் உலா வந்துக் கொண்டிருக்கின்றது.

சூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான். "வெண்ணிலாக் கபடி குழு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் பரோட்டா சூரி.

அட ஏங்க.. அஞ்சலியை நான் ஒரு தலையாவுல்ல காதலிக்கிறேன்.. புலம்பும் பரோட்டா

பின் அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர்.

அதேப் போல் இப்போது சூரி நடித்துக் கொண்டிருக்கும் படம் அப்பாட்டக்கர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு த்ரிஷா மற்றும் அஞ்சலி என இரண்டு ஜோடிகள். ஆனால் இப்படத்தின் ஸ்டில்களில் சூரி மற்றும் அஞ்சலி சேர்ந்து நடிப்பதுப் போல் அதிக ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.

எனவே சூரி தான் இப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடி என்று கிசு கிசுக்கப் படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ளார் சூரி. அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் வேடத்தில் தான் நடிப்பதாகவும், அதனால் இதைப் பற்றிய வதந்திகளை கிளப்பவேண்டாம் எனவும் கூறியுள்ளாராம் சூரி.

 

படம் தயாரிப்பது தற்கொலைக்கு சமமாகிவிட்டது - நதிகள் நனைவதில்லை இயக்குநர் புலம்பல்

சென்னை: தமிழ்ப் படம் தயாரிப்பது இப்போதெல்லாம் தற்கொலைக்கு சமமாகிவிட்டது, என்று இயக்குநர் நாஞ்சில் பி சி அன்பழகன் கூறினார்.

நதிகள் நனைவதில்லை என்ற படத்தை அவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்டார்.

படம் தயாரிப்பது தற்கொலைக்கு சமமாகிவிட்டது - நதிகள் நனைவதில்லை இயக்குநர் புலம்பல்

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நதிகள் நனைவதில்லை' என்ற படத்தை தயாரித்து இயக்கினேன். இப்படம் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த அனைவரும் தரமான படம் என பாராட்டுகிறார்கள்.

எனக்குச் சொந்தமான வீட்டை விற்றுதான் இந்த படத்தை தயாரித்தேன். இன்னொரு வீட்டை விற்று ரிலீஸ் செய்தேன். மூன்றே முக்கால் கோடி ரூபாய் செலவாகியுள்ளது. சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தான் இதை செய்தேன்.

ஆனால் எனது ‘நதிகள் நனைவதில்லை' படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்கி விடும்படி திரையரங்கு உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். படம் பார்த்தவர்கள் நல்ல படம் என வாய்மொழியாக விளம்பரம் செய்த பிறகே கூட்டம் வரும்.

இரண்டு வாரங்கள் ஓடினால்தான் அது நடக்கும். அதற்கு கூட அவகாசம் தரவில்லை. 2-ந் தேதி பெரிய நடிகர் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளன. அந்த படங்களுக்கு எல்லா தியேட்டர்களும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களை தூக்கி விட்டு அந்த தியேட்டர்களையும் தங்களுக்கு தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். சிறு பட்ஜெட் பட அதிபர்கள் வாழ வேண்டாமா? ஆபரேசன் தியேட்டர் தவிர எல்லா தியேட்டர்களிலும் தங்கள் படங்கள்தான் ஓட வேண்டும் என்று பெரிய பட தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டுவது நியாயம்தானா? படம் தயாரிப்பது தற்கொலைக்கு சமம் என்பது போல் ஆகி விட்டது.

சிறுபட்ஜெட் படங்களை பெரிய தியேட்டர்களில் காலை காட்சி மட்டுமே திரையிட அனுமதி தருகிறார்கள். காலை காட்சி படம் பார்க்க யாரும் வருவது இல்லை. சிறுபட்ஜெட் படங்கள் 2 வாரங்கள் ஓட வழி வகை செய்ய வேண்டும்.

திரையுலகில் நடக்கும் இந்த அவலங்கள் தெரியாமல் புதிதாக நிறைய பேர் படம் எடுக்க வந்து பணத்தை இழந்து பிச்சைக்காரர்களாகிறார்கள். தயவு செய்து யாரும் படம் எடுக்க வராதீர்கள். இருக்கிற சொத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறோம்.. 14-ம் தேதி பர்ஸ்ட் லுக் கிடையாது!- புலி படக்குழு

சென்னை: புலி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், வரும் ஏப்ரல் 14-ம் தேதி படத்தின் முதல் தோற்றம் வெளியாகாது என்று படக் குழு தெரிவித்துள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி. ஏப்ரல் 14-ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக முதலில் தகவல்கள் வந்தன.

படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறோம்.. 14-ம் தேதி பர்ஸ்ட் லுக் கிடையாது!- புலி படக்குழு

ஆனால், எப்போது பர்ஸ்ட் லுக் என்பதை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இது குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "முதலில் நாங்கள் இன்னும் பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையே தீர்மானிக்கவில்லை. தீவிரமாக படப்பிடிப்பில் இருக்கிறோம்.

யாருடைய தேதிகளையும் வீணடிக்காமல் ஷூட்டிங் நடத்துவதுதான் இப்போதைக்கு முதல் வேலை. அதன் பிறகுதான் மற்றவையெல்லாம்," என்றனர்.

புலி படத்தை பிடி செல்வகுமார், தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

ஒருவேளை 'அதுக்குத்தான்' வந்திருப்பாரோ.. - சந்தேகத்தில் சன்னி லியோன் மீது சூரத் போலீஸ் வழக்கு

பட விளம்பரத்துக்காக வந்த சன்னி லியோன் மீது சூரத் போலீஸ் எப்ஐஆர்!

சூரத்: ஏக் பெஹலி லீலா படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக வந்த நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.

ஒருவேளை 'அதுக்குத்தான்' வந்திருப்பாரோ.. - சந்தேகத்தில் சன்னி லியோன் மீது சூரத் போலீஸ் வழக்கு

விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சூரத் நகரில் சமீபத்தில் நடந்தது.

இதில் சன்னி லியோன், அவர் கணவர் டேனியல் வெபர், இயக்குநர் பாபி கான், உடன் நடித்த ஜெய் பனுஷாலி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விளம்பர நிகழ்ச்சி முதலில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்தது. ஆனால் பிறகு வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார் தயாரிப்பாளர்.

இதனால் போலீசார் சன்னி லியோன் மீது சந்தேகப்பட்டு வழக்குப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சரி, அப்படி என்ன சந்தேகம் போலீசுக்கு?

கடந்த ஆண்டு புனே - மும்பை நெடுஞ்சாலை விடுதியொன்றில் வைர வியாபாரிகள் நடத்திய விருந்தில் பங்கேற்ற சன்னி லியோன் மேலாடையின்றி போஸ் கொடுத்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அது அங்கே எடுக்கப்பட்டதல்ல. பழைய போட்டோ என்றெல்லாம் சன்னி லியோன் விளக்கம் அளித்தார்.

இப்போது சன்னி லியோன் சூரத்துக்கு வந்ததும், பட நிகழ்ச்சியை புறநகர்ப் பகுதிக்கு மாற்றியதிலும் வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம் சூரத் போலீசார்.

யூகத்தின் அடிப்படையில் கூடவா வழக்கு பதிவார்கள்?