உலக நாயகன் கமலஹாசன் நடித்து இயக்கும் படம் 'விஸ்வரூபம்'. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் உலக நாயகன் கமலஹாசன், விஸ்வரூபம் படத்தில் 'கதக்' நடனம் ஒன்றை ஆட இருக்கிறார். படத்தின் ஒரு காட்சி மட்டும் அல்லாமல், கதையொட்டியே இந்த நடனம் வருவதாக தெரிகிறது. கமல் கதக் டான்ஸ் இந்த பாடல் சங்கர் மகாதேவன் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் 'விஸ்வரூபம்' டீம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக அமரிக்கா சென்றுள்ளது. சில நாட்கள் கழித்து 'விஸ்வரூபம்' டீம் மீண்டும் சென்னை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஒய் திஸ் கொல வெறி" பாடலுக்காக சூப்பர் ஸ்டாரை அனுகிய ஷாரூக்?
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. '3' படத்தின் 'why this kolaveri di' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் டிவி ஷோக்களிலும் 'why this kolaveri di' பாடல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை. தற்போது இந்த பாடல் உரிமம் பெற பாலிவுட்டில் பெரும் போட்டியே நடந்து வருகிறது. பாடலை ஷாரூக் கான் வாங்க விருப்பட்டு தயாரிப்பாளரை அனுகியதாகவும், ஆனால் அதற்கு முன்பே அக்ஷய குமார் வாங்கிவிட்டதாக தயாரிப்பாளர் கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, எப்படியாவது உரிமமத்தை பெற்றிட வேண்டும் என நினைத்த ஷாரூக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுகியதாகவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
வயல்வெளி டூயட் சூப்பர் அனுபவம் : ஸ்ருதி குஷி!
'7ம் அறிவு' படத்தை தொடர்ந்து தனுஷுடன் '3' படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இரண்டுமே நகரத்து பின்னணியிலான கதை. இதையடுத்து தெலுங்கில் 'கப்பர் சிங்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியில் வெளியான 'தபங்' படமே தெலுங்கில் இப்பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கிராமத்து பெண்ணாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நேற்று நடந்தது. இதுபற்றி அவர் கூறும்போது, ''முதன்முறையாக கிராமத்து பெண்ணாக வேடம் ஏற்றிருக்கிறேன். பொள்ளாச்சியில் ஷூட்டிங். வாவ், சூப்பர் அனுபவம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று பயிர்கள் நிறைந்த வயல் பகுதி. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த அந்த இடத்தில் பவன் கல்யாணுடன் டூயட் காட்சியில் பங்கேற்றேன். ஒவ்வொரு அங்குல ஷூட்டிங்கையும் ரசித்துக்கொண்டிருக்கிறேன். மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மொழி எனக்கு தடை கிடையாது'' என்றார்.
சகுனியின் கதை!
சங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'சகுனி'. வரும் பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கும் இந்த படத்தின் க்ளைமக்ஸ் காட்சி விருவிப்பாக நடந்து வருகிறது. கதைப்படி கார்த்தி நேர்மையான இளைஞன், ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவர் ஊழல்வாதியாக மாறுகிறார். இதுதான் சகுனி படத்தின் கதை என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு நண்பன், '3', வேட்டை உட்பட சகுனி படமும் போட்டி போட தயாராக உள்ளது.
இனி பாரதநாட்டியம் மட்டும் தான் : சோபனா!
தமிழ் சினிமாவின் 1970களில் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய்காந்த் பாக்யராஜ் என அனைவருடன் ஜோடியாக நடித்த நடிகை சோபனா, இனி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தான் இதுவரை 225 படங்கள் நடித்தவிட்டதாக கூறிய சோபனா, இதுவரைக்கு நடித்தது எனக்கு போதும் என்று கூறியுள்ளார். பாரத நாட்டியம் தனக்கு தேவையான நிம்மதியை தருவதாகவும், இனி தன்னுடைய நடன பள்ளியில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் சோபனா கூறியுள்ளார்.
சென்னை சர்வதேச பட விழா போட்டியில் ‘ஆடுகளம்’ உள்பட 12 தமிழ் படங்கள்
சென்னை சர்வதேச பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. 22ந் தேதி வரை நடக்கிறது. போட்டி பிரிவில் 'ஆடுகளம்' உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் இடம்பெறுகின்றன. 9வது ஆண்டு சென்னை சர்வதேச பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். செய்தி ஒளிபரப்பு துறை செயலாளர் ராஜாராம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இந்தி பட இயக்குனர் சேகர் கபூர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் டி.ஜி.தியாகராஜன், பிலிம்சேம்பர் செயலாளர்கள் ஆனந்தா எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன், துணை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் தங்கராஜ், நடிகர்கள் பார்திபன், கணேஷ் வெங்கட்ராம், நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி, பாத்திமாபாபு, அபர்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடிகைகள் கார்த்திகா, தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நேற்று தொடங்கிய பட விழா வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 50 நாடுகளை சேர்ந்த 153 படங்கள் திரையிடப்படுகின்றன. சத்யம், உட்லண்ட்ஸ், உட்லண்ட் சிம்பொனி, ஐநாக்ஸ், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் போட்டி பிரிவில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்', விக்ரம் நடித்த 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. ஜூரியாக பிரதாப்போதன், ரோகிணி, மதன் உள்ளனர். இந்த விழாவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் பற்றிய 'செங்கடல்' என்ற படம் திரையிட நிராகரிக்கப்பட்டதையடுத்து பட விழா நடந்த அரங்குக்கு முன்பு நேற்று இயக்குனர்கள் அருண்மொழி, சீனு ராமசாமி, லெனின். அம்ஷன்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை குறிக்கும் படமான 'செங்கடல்', சென்னை திரைப்பட விழாவில் நிராகரிக்கப்பட்டது. இதை கண்டித்து நேற்று ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடந்த 9வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர்கள் அருண்மொழி, லெனின், அம்ஷன்குமார் தலைமையில் போராட்டம் நடந்தது.
சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் 9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. செய்தி துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். அருகில் செய்தி துறை முதன்மை செயலர் ராஜாராம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டிபாபு, இந்தி சினிமா இயக்குனர் சேகர் கபூர்.

சூப்பர் ஹீரோ கதையில் ‘மிஸ்’ அழகி பூஜா ஹெக்டே!
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கதைகள் அடிக்கடி வருகின்றன. தமிழில் முதன்முறையாக சூப்பர் ஹீரோ கதையாக உருவாகிறது 'முகமூடி'. மிஷ்கின் இயக்குகிறார். இதில் ஜீவா ஹீரோ. 'சித்திரம் பேசுதடி', 'நெஞ்சிருக்கும் வரை', 'அஞ்சாதே' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த நரேன் முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கடந்த ஆண்டு 'மிஸ் இந்தியா' போட்டியில் 2ம் இடம் பிடித்த அழகி பூஜா ஹெக்டே ஹீரோயின். இந்த படத்துக்காக ஜீவா, நரேன் இருவரும் ஹாங்காங் சென்று 3 மாதம் குங்பு பயிற்சி பெற்றனர். இருவரும் மோதிக்கொள்ளும் குங்பு காட்சி ஹைலைட்டாக பேசப்படும் வகையில் அமைக்க முடிவு செய்துள்ளார் மிஷ்கின். கே என்ற புது இசை அமைப் பாளர் இசை அமைக்கிறார். சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜீவாவுக்காக பிரத்யேகமான உடையை ஹாங்காங்கில் உள்ள காஸ்டியூம் டிசைனர்கள் உருவாக்கி உள்ளனர். இதன் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ்.
விஜய் படத்தில் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன் : பிரியங்கா சோப்ரா!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் பிரியங்கா சோப்ரா முதன் முதலில் தமிழில் தான் அறிமுகமானார். இளைய தளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமான பிரியங்கா, இளைய தளபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார். தன்னுடைய சினிமா கேரியர் விஜய்யுடன் ஆரம்பித்ததாக கூறிய பிரியங்கா, மீண்டும் விஜய் பட வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை தேர்வு செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அதே 2வது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் கூட தான் நடிக்க தயார் என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் விஜய் படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா கூறினார்.
புது டிரென்டை உருவாக்குவேன் : வெங்கட் பிரபு
மங்கத்தா வெற்றி பிறகு மீண்டும் முழு நீள போலீஸ் கதை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதையை சூர்யாவை மனதில் வைத்து எழுதி வருகிறார் வெங்கட்பிரபு. ஸ்கிரிப்ட் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவுட்லைன் ரெடியாம். டபுள் ஹீரோ சப்ஜெக்டான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகயிருக்கிறது. தெலுங்கில் சூர்யா வேடத்தில் ரவி தேஜா நடிக்கிறார். இந்த படம் போலீஸ் கதையில் புது டிரென்டாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்கிரிப்ட் ரெடியான பின்பு மற்ற நடிகர்ள் தேர்வு நடக்கும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
"ஒய் திஸ் கொல வெறி" பாடலுக்காக சூப்பர் ஸ்டாரை அனுகிய ஷாரூக்?
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. '3' படத்தின் 'why this kolaveri di' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் டிவி ஷோக்களிலும் 'why this kolaveri di' பாடல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை. தற்போது இந்த பாடல் உரிமம் பெற பாலிவுட்டில் பெரும் போட்டியே நடந்து வருகிறது. பாடலை ஷாரூக் கான் வாங்க விருப்பட்டு தயாரிப்பாளரை அனுகியதாகவும், ஆனால் அதற்கு முன்பே அக்ஷய குமார் வாங்கிவிட்டதாக தயாரிப்பாளர் கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, எப்படியாவது உரிமமத்தை பெற்றிட வேண்டும் என நினைத்த ஷாரூக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுகியதாகவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
ஹன்சிகாவை ரசிகர்கள் முற்றுகை!
'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது சிம்புவுடன் 'வேட்டை மன்னன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற ஹன்சிகா, படப்பிடிப்பு இடைவேளையில் ஷாப்பிங் செய்வதற்காக அண்ணா சாலையில் உள்ள வர்த்தக வளாகத்துக்கு சென்றார். ஒரு கடைக்குள் நுழைந்த அவர் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். மெல்ல மெல்ல கடை எதிரே கூட்டம் கூடியது. சில ரசிகர்கள் கடைக்குள் புகுந்தனர். சிலர் அவருடன் கைகுலுக்க முயன்றனர். சிலர் ஆட்டோகிராப் வாங்க முந்தினர். இதனால் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்தன. கண்ணாடி பொருட்கள் உடைந்தன. 'பொருட்களை வாங்கிக் கொண்டு சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்கள்' என்று அவசரப்படுத்தினார் கடைக்காரர். அங்கிருந்த செக்யூரிட்டிகள், கூட்டத்தை கட்டுப்படுத்தி ஹன்சிகாவை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
விஜய் படத்துக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தீம் சாங் ரெடி!
முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்திற்கு 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என பெயரிட்டுள்ளனர். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது. தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தயாரிக்க உள்ளனர். இதனையடுத்து, கௌதம் மேனன், தற்போது தயாரித்து இயக்கி வரும் 'நீ தானே என் பொன்வசந்தம' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம் ரகுமான். ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு, தான் இசை அமைப்பதாக கூறியதோடு, படத்திற்கு தீம் சாங் ஒன்றை காம்போஸிங் செய்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரகுமான்.
"ஆல் இன் ஆல் அழகுராஜா" கார்த்தி!
'ஆல் இன் ஆல் அழகுராஜா' இது தான் கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் பெயர். இயகக்குனர் யார் தெரியுமா... எப்போதும் காமெடி படங்களை எடுத்து வரும் நம்ம ராஜேஷ். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், அடுத்த கார்த்தியுடன் கை சேர உள்ளார். படத்தின் கதையை ஒரு வரியாக, கார்த்தியிடம் கூறியிருக்கிறார் ராஜேஷ். கதை பிடித்துப் போனதால் ராஜேஷூக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி தற்போது, இயக்குனர் சங்கர் தயாள் இயக்கத்தில் 'சகுனி' படத்திலும், சுராஜ் இயக்கும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கம் போல், தனது படத்திற்கு வித்தியசமான தலைப்பை தேர்வு செய்யும் ராஜேஷ், இந்த படத்திற்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்று பெயர் வைத்துள்ளார். படத்திற்கு காமெடியாக யாராக இருக்கும்... இதில் என்ன சந்தேகம் நம்ம சந்தானம் தான்...