'மாற்றான்' ஓடிய தியேட்டரின் மேற்கூரை இடிந்து 3 பேர் காயம்- ரசிகர்கள் ரகளை!

Theatre Collapses Salem 3 Injured   

சேலம்: சேலம் கிச்சிப்பாளையத்தில் மாற்றான் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அலறியடித்து ஓடினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். படம் பாதியில் நின்றதால் டிக்கெட் கட்டணத்தை ரசிகர்கள் திருப்பிக் கேட்க, தியேட்டர்காரர்கள் மறுக்க ரசிகர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

கிச்சிப்பாளையம் கைலாஷ் தியேட்டரில் மாற்றான் படம் இன்று வெளியானது. ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது திடீரென தியேட்டரின் மேற்கூரையிலிருந்து மண் பொதபொதவென கொட்டியது. அடுத்து கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக படம் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் அலறிப் புடைத்து வெளியே ஓடினர். இந்த நிலையில் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் அதிக விலை கொடுத்து வாங்கிய டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை ரசிகர்கள் திருப்பிக் கேட்டனர். ஆனால் தியேட்டர்காரர்கள் கொடுக்க முடியாது என்று கூறினர். இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து ரகளையில் இறங்கினர்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தினர்.

 

மூன்றரை வருடமாக பாடாய்ப்படுத்திய 'உறவுகள்' முறிந்தது, அதாவது முடிந்தது!

A Mega Serial Engs With Subam

சன் தொலைக்காட்சியில் 850 எபிசோடுகளுக்கு மேல் ஓடி இல்லத்தரசிகளை பாடாய் படுத்திய உறவுகள் தொடருக்கு ஒருவழியாய் முற்றும் போட்டுவிட்டனர்.

இந்த தொடரின் பெயர்தான் ‘உறவுகள்'. ஆனால் கதையில் அண்ணன் - தம்பி, கணவன் - மனைவி இடையே கூட ஒற்றுமை இல்லாத ஒரு சீரியல் என்றால் அது இதுவாகத்தான் இருந்திருக்கும். சான் மீடியா நிறுவனம் தயாரித்த உறவுகள் தொடரில் ஸ்ரீகுமார், ராஜ்காந்த், பீலிசிவம், நீபா, துர்கா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த கதை முதலில் பங்காளிச் சண்டையாக ஆரம்பித்தது. பின்னர் ராஜ்காந்த் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு அல்லாடினார். இரண்டாவது மனைவியே வில்லியாக மாறி இடைஞ்சல் கொடுக்கவே கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியமல் விழிபிதுங்க ஆரம்பித்தார் இயக்குநர்.

800 வாரம் வரை ஜவ்விழுப்பு இழுத்த இந்த தொடருக்கு படிப்படியாக டிஆர்பி குறைய ஆரம்பிக்கவே 850 வாரங்களுக்கு மேல் இழுக்க முடியாமல் ( டிவி நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) ஒருவழியாக சுபம் போட்டு முடித்துவிட்டனர். அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட முடியாது. ஏனெனில் அடுத்ததாக ஏதாவது அழுகாச்சித் தொடரைப் போட்டு மக்களை இம்சிக்க ரெடியாக இருப்பார்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

 

நடிகை கெளசல்யாவுக்கு என்ன கொடுக்கப் போகிறார் நித்தியானந்தா?

Kausalya May Become Principal Sishy

சென்னை: நடிகை ரஞ்சிதா பாணியில் நித்தியானந்தாவிடம் சரணடைந்துள்ள நடிகை கெளசல்யாவுக்கு நித்தியானந்தா ஏதோ பதவி ஒன்றைக் கொடுக்கப் போவதாக கூறி வருகின்றனர். அனேகமாக அவருக்கு முதன்மை சீடர் என்ற அந்தஸ்தை நித்தியானந்தா கொடுத்துக் கெளரவிப்பார் என்று தெரிகிறது.

நித்தியானந்தாவிடம் நடிகர்களை விட நடிகைகள்தான் நிறையப் பேர் பரம ஆதரவாளர்களாக உள்ளனர். ரஞ்சிதா, ராகசுதா, மாளவிகா என்று பலர் நித்தியானந்தா மீது அதிக பாசத்துடன் உள்ளனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்து கொண்டவர் கெளசல்யா.

தமிழில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நேருக்கு நேர் படத்தில் விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்தார். கடைசியாக சந்தோஷம் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அக்காள் வேடத்தில் நடித்தார்.

கடந்த 3 வருடமாக இவர் நடிப்பதில்லை. சொந்த ஊரான பெங்களூரிலேயே செட்டிலாகி விட்டார். இவருக்கு இப்போது 32 வயதாகி விட்டது. தீராத முதுகு வலியால் ரொம்பக் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் நித்தியானந்தாவிடம் போனார். அவர் தனக்குத் தெரிந்த ஹீலிங் சிகிச்சை மூலம் கெளசல்யாவின் முதுகை நன்றாக நீவி விட்டு குணப்படுத்தினார். இதனால் பரிபூரண சந்தோஷமடைந்த கெளசல்யா, நித்தியானந்தாவின் தீவிர ஆதரவாளராக மாறி விட்டார். அடிக்கடி பெங்களூர் ஆசிரமம் பக்கம் கெளசல்யாவைக் காண முடிந்தது.

இப்போதும் அவர் ஆசிரமத்தில்தான் பெரும்பாலும் தங்கியிருக்கிறார். தியானம், யோகா என பிசியாக இருக்கிறார். அவரது சேவை, அர்ப்பணிப்பு உணர்வை மெச்சி அவருக்கு முதன்மை சீடர் என்ற அந்தஸ்தைக் கொடுக்க நித்தியானந்தா திட்டமிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

 

மீனவர்கள் வாழ்க்கை ‘நீர்ப்பறவை’

Neerparavai is tribute to Fishermen's life

மீனவர்கள் வாழ்க்கை கதை படமாகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் 'நீர்ப்பறவை'. விஷ்ணு, சுனேனா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படம்பற்றி இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: கடல் சார்ந்த காதல், கடல் சார்ந்த அரசியல் கதையாக உருவாகிறது 'நீர்ப்பறவை'. மீனவரின் மகனாக விஷ்ணு, கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றும் பெண்ணாக சுனேனா நடிக்கின்றனர். வர்களுக்கிடையேயான காதல் கவிதையாக படமாகி இருக்கிறது. இதன் ஷூட்டிங் திருச்செந்தூரில் மணப்பாடு மீனவ கிராமத்தில் நடந்தது. கடுமையான வெயில் நேரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஏற்ற கதாபாத்திரத்துக்காக சுனேனா வெயிலில் நின்று தனது நிறத்தை கருமையாக மாற்றிக்கொண்டார்.

மேலும் பாசியில் வழுக்கி விழுந்து கையில் காயம் ஏற்பட்டபோதும் பொருட்படுத்தாமல் நடித்தார். இதன் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விஷ்ணுவுக்கு கிரிக்கெட் விளையாடியபோது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்காக காத்திருந்து இதன் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. சுனாமிக்கு பிறகு கட்டுமர படகுகள் காணாமல்போய்விட்டது. எல்லா இடத்திலும் பைபர் படகுகள்தான் பயன்படுத்தப்படுகிறது. காட்சிக்கு அது பொருந்தாது என்பதால் பல்வேறு மீனவ கிராமங்களிலிருந்து கட்டுமர படகுகள் கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இசை ரகுநந்தன். பாடல் வைரமுத்து. ஒளிப்பதிவு பாலசுப்ரமணியன். இவ்வாறு சீனு ராமசாமி கூறினார்.
 

அதர்வா நடிப்பு சூப்பர் : பாலா

Superb performance show by atharva : Bala

தேசிய விருது வென்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'பரதேசி'. அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில், தனது 3வது படத்திலேயே அருமையான நடிப்பை அதர்வா வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குனர் பாலா கூறியுள்ளார். மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வாவின் நடிப்பு குறித்து இயக்குனர் பாலாவிடம் கேட்டதற்கு, ' தனது 3வது படத்திலேயே அருமையான நடிப்பை அதர்வா வெளிப்படுத்தியுள்ளார், ஒரு 100 படத்தில் நடித்த அனுபவத்தை அதர்வா நடிப்பில் பார்த்தேன்' என்று இருவரிகளில் கூறி சென்றுவிட்டார்.

பட ஷூட்டிங் முடியும் வரை பட ஸ்டில்ஸை வெளியடாத பாலா, தற்போது ஸ்டில்களை வெளியிட்டுயிருக்கிறார். அதில் அதர்வா, சாக்கு பையை சட்டையாக போட்டுக் கொண்டு, ஒரு விதமான முடி கட்டுடன் இருக்கிறார். முப்பொழுதும் உன் கற்பனை படத்தில் மிகவும் அழகாக இருந்த அதர்வா இது என்ற அளவுக்கு இருக்கிறது அவரது கெட்டப். கெட்டப் எப்படியிருந்தாலும் பாலா படத்தில் நடித்தால் நடிப்பு சூப்பராக வந்து விடும் என்பது தான் உண்மை.. இந்த படம் நிச்சியம் தமிழ் சினிமாவிற்கு நல்ல பெயரை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
 

தனுஷை கிண்டல் செய்யவில்லை

we are not teasing dhanush

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், 'வாலு'. இதில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சந்தானம், கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். 'தினம்தோறும்' நாகராஜ் உதவியாளர் விஜய் சந்தர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சென்னை இளைஞனாக சிம்பு நடிக்கிறார். எப்போதும் துறு துறுவென்று இருக்கும் கேரக்டர். இதே கேரக்டர் கொண்ட ஹீரோயின். இருவருக்குமிடையே நடிக்கும் கதைதான் படம். இதன் திரைக்கதை பரபரப்பாக இருக்கும். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். ஒரு நிமிடம் ஓடும் படத்துக்கான டீஸரை ரெடி பண்ணிவிட்டோம். தமன் இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார்'. என்று கூறினார்.

தனுஷை கிண்டல் செய்யவில்லை

படிக்காதவன் படத்தில், 'என்ன மாதரி பசங்கல பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்' என்று தனுஷ் வசனம் பேசியிருப்பார். வாலு படத்தின் டீஸரில், இந்த வசனத்தை, வேறு விதமாக காட்டியிருப்பார்கள். டீஸரில், சிம்புவை பார்த்து ஹன்சிகா. 'ஒரு சில பசங்கல பார்க்க பார்க்க தான் பிடிக்கும், ஆன உன் மாதரி பசங்கல பார்த்தலே பிடிக்கும்' என்று கூறியிருப்பார். இதனால் சிம்பு படத்தில் தனுஷை கிண்டல் செய்ததாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வந்தது. இதனையை இயக்குனர் விஜய் சந்தர் மறுத்துள்ளார், 'டீஸரில் வந்தது சின்ன காட்சி தான், அதனால் தனுஷை கிண்டல் செய்வது போல் இருக்கும், ஆனால் யாரையும் கிண்டல் செய்யவில்லை படம் வெளியான பிறகு அது தெரிய வரும்' என்று கூறினார்.
 

கார்த்தி ஜோடியாக நடிக்க இலியானா மறுப்பு

Ileana recjects karthi''s film

கார்த்தி ஜோடியாக நடிக்க மறுத்தார் இலியானா. கார்த்தி நடித்துள்ள 'அலெக்ஸ் பாண்டியன்' திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் 'பிரியாணி' என்ற படத்தில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆம்பூரில் தொடங்கியது. பிரியாணிக்கு பேமஸான ஊரில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரிச்சா கங்கோபாத்யாய் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே அவர் மாற்றப்பட்டார். இதையடுத்து ஹீரோயின் தேடும் பணி நடைபெற்று வந்தது. இலியானாவை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

இதுபற்றி இலியானா தரப்பில் கூறுகையில்,'பர்பி இந்தி படத்தில் இலியானா நடித்தார். அப்படம் பெரிய ஹிட் ஆகியுள் ளது. இதையடுத்து அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்பு வந்துக்கொண்டிருக்கிறது. பாலிவுட் படங்களுக்கு ஏற்ப தனது உடலை பல மடங்கு குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார். தனது 2வது படத்தில் சாஹித் கபூர் ஜோடியாக நடிக்கிறார். தென்னிந்திய படங்களில் அவர் இப்போதைக்கு கவனம் செலுத்தப்போவதில்லை. பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடிப்பதில் கவனமாக இருக்கிறார். எனவே இப்போதைக்கு தென்னிந்திய படத்தில் நடிக்க மாட்டார்' என்றனர். இதையடுத்து கார்த்தி ஜோடியாக நயன் தாரா அல்லது மற்றொரு பிரபல மும்பை நடிகை யாராவது ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு.
 

சம்விருதா நடிப்புக்கு முழுக்கு

Samvrutha Sunil Stop's Acting

நடிப்புக்கு முழுக்கு போட்டார் நடிகை சம்விருதா. தமிழில் 'காதல் முடிச்சு', 'காதல் செய்வோம்', 'உயிர்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பதுடன் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் சம்விருதா. இவருக்கு வரும் நவம்பர் 1ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் மலை யாள நடிகர் லால் ஜோஸ் இயக்கும் 'ஆயாளும் ஞானும் தம்மில்' படத்தில் நடித்த கடைசி காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் லால் கூறும்போது, 'ஆயாளும் ஞானும் தம்மில் பட இறுதிகட்ட ஷூட்டிங் மூணாறில் நடந்தது. இது உணர்வுபூர்வமான ஷூட்டிங்காக அமைந்தது. ஏனென்றால் திறமையான சம்விருதாவின் கடைசி நாள் ஷூட்டிங்காக இது அமைந்தது. இப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ளது' என்றார். இந்நிலையில் சம்விருதா நடித்துள்ள மற்றொரு படமும் இம்மாதம் திரைக்கு வருகிறது.
 

பொங்கலுக்கு வருகிறது ""கோச்சடையான்''?

Kochadaiyaan may release on pongal

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கோச்சடையான்' படம் (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளான அன்று திரைக்கு வராது என்று தெரிகிறது. 3D செயல்திறன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் முதல் தமிழ் படம் என்பதால், அதற்கான அதிக நேரம் தேவைப்படும் என்கிறது படக்குழு, இதனால் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் இருக்கிறதாம் படக்குழு.
 

ரஜினியை இயக்க நான் தயாராகவில்லை

I'm not ready to direct Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கும் அளவிற்கு தான் இன்னும் தயாராகவில்லை என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'கோச்சடையான்' படத்தில் நடித்து வருகிறார். பட ஷூட்டிங் படுவேகமாக நடந்து கொண்டியிருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் பற்றி பேச்சுக்கள் வெளி வர தொடங்கியுள்ளன. ரஜினி சமீபத்தில் கலைப்புலி எஸ் தாணுவை சந்தித்துள்ளார். அப்போது ஏ.ஆர்.முருகதாஸின் திறமைகளை தாணு ரஜினியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், இயக்குநர் மணிரத்னம், கே.வி.ஆனந்த், ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா என அனைத்து இயக்குநர்களின் பெயரும் அடிப்படுகிறது.

இதனையடுத்து ரஜினி படம் இயக்கப் போகீறர்களா என்று கே.வி.ஆனந்த்திடம் கேட்டதற்கு, 'இல்லை' என்று கூறினார், மேலும் அவர் கூறுகையில் 'ரஜினி சாரை இயக்குவது ஒரு பெரிய விஷியம்.. சாதாரண விஷியமல்ல.. ரஜினி சார் டைரக்ட் பண்ணியவர்கள் பெரிய இயக்குனர்கள்.. மாற்றான் எனக்கு 4வது படம், இப்போது என் இயக்குனர் வாழ்க்கை தொடங்கியிருக்கிறேன்.. கொம்பு தேனுக்கு நான் இப்போதைக்கு ஆசைப்பட கூடாது.. ரஜினி சார் படத்தை இயக்குவது என்பது பெரிய பொறுப்பு.. அவரது ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும்.. அதற்கு நான் முதலில தயாராக வேண்டும், முதலில் சூர்யாவின் ரசிகர்களை திருப்திபடுத்திய பிறகு மற்ற விஷியம் பற்றி யோசிப்«ன்' என்றார்.
 

பிறந்த நாள் அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து

Rajini in Amithab Birthday

நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இதர இந்தி திரைப்பட பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும், ரசிகர்களும் அவருக்கு நேரிலும்; போனிலும், டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாளை முன்னிட்டு ஜூகுவில் உள்ள அவரது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் கூடி நின்று ஆடியும் பாடியும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடினர். இவர்களில் பலர் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய வடமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். அப்போது காரில் அந்தேரியில் உள்ள 7 ஹில்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த அமிதாப் பச்சன் உற்சாகமாக ரசிகர்களுக்கு கைகளை உயர்த்தி காண்பித்தபடி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

மருத்துவமனையில் நீரிழிவு நோயை பரிசோதனை செய்யும் தானியங்கி கருவி ஒன்றை மும்பையில் உள்ள இங்கிலாந்து நாட்டு துணை தூதர் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அமிதாப் பச்சன் நீரிழிவு நோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோரேகாவில் உள்ள பிலிம் சிட்டியில் அமிதாப் பச்சன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் ஷாருக்கான், மாதவன், மாதுரி தீட்ஷித், கரண் ஜோகர் உட்பட பல நடிகர், நடிகைகள் உள்பட ஏராளமான சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி கோலாகலமாக கொண்டாடினர். சுமார் 40 ஆண்டுகளில் அமிதாப் பச்சன் 180 படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை மத்திய அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றவர். 14 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். மத்திய அரசின் பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றவர்.
 

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் மந்த்ரா

Mantra became host

வெள்ளித்திரையில் தனது புன்னகையால் ரசிகர்களை வசீகரித்த நடிகை மந்த்ரா, சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 25 வாரங்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தற்போது நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுடனான என் பிணைப்பு இப்போது இன்னும் இறுகியிருக்கிறது. அந்தவிதத்திலும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல், என்று மந்த்ரா கூறியுள்ளார்.
 

மீண்டும் சசிக்குமாருடன் லட்சுமி மேனன்

The actress will be joining again with sasikumar

சசிகுமாருக்கு அதிர்ஷ்டம் எல்லா ரேகையிலும் ஓடுகிறது போல, படம் இயக்க வந்தவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. இயக்கியது இரு படங்கள், நடித்ததன் எண்ணிக்கை ஒன்பதைத் தொடப் போகிறது. சுந்தரபாண்டியன் சூப்பராக ஓடுகிறது. இதனால் மீண்டும் நடிக்கப் போகிறார். இந்தமுறையும் சொந்த தயா‌ரிப்பு. முத்தையா என்கிற அறிமுக இயக்குனர். லட்சுமி மேனனுடன் காதலித்து போதவில்லை போலிருக்கிறது. இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்துக்கு அவரையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறாராம்.
 

மாற்றானைவிட துப்பாக்கி பெஸ்ட்

Thuppakki is best when compared to Maattaran

மாற்றானைவிட துப்பாக்கி பெஸ்ட் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தேதியில் இந்த இரு படங்களையும் பார்த்த ஒரே நபர் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ். இரண்டுப் படங்களுக்கும் இவர்தான் இசை. அதிலும் துப்பாக்கியின் இடைவேளைவரைதான் பின்னணி இசை சேர்த்திருக்கிறாராம். பார்த்தவரைக்கும் ‌ரிசல்ட் என்ன? மாற்றானைவிட துப்பாக்கி பெஸ்ட் என்பதே ஹாரிஸின் கூடாரத்திலிருந்து கசிந்திருக்கும் செய்தி. இதற்கு அர்த்தம் மாற்றான் மட்டம் என்பதல்ல, இரண்டில் துப்பாக்கி பெஸ்ட் என்று ஹாரிஸ் கூறியதாக தகவல்.
 

முத்தத்துக்கு நிறம் உண்டா? - கவிஞர் வைரமுத்து சொன்ன அர்த்தமுள்ள பதில்!!

Vairamuthu Explains Colour Kisses

சென்னை: முத்தத்துக்கு நிறம் உண்டா... நிச்சயம் உண்டு. முத்தத்தில் நிறம் என்பது குணத்தைக் குறிக்கும் என்றார் கவிஞர் வைரமுத்து.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி இயக்கியுள்ள `நீர்ப்பறவை' படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது.

அவர் பேச்சின் 'முத்தப் பகுதி' மட்டும் இங்கே:

"நீர்ப்பறவை, கடலோர கிராமத்தில் நிகழும் கிறிஸ்தவ வாழ்வியல் சார்ந்த காதல் கதை. சீனுராமசாமி இந்த கதையை சொல்லி முடித்தவுடன், கதை வாசனை வீசுமாறு விவிலியச் சொற்களால் பாடல் எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டேன். பைபிளை மறுவாசிப்பு செய்தேன்.

கடவுளுக்கும், காதலுக்கும் ஒரு மெல்லிய வேறுபாடுதான் இருக்கிறது. சத்தியமும் ஜீவனுமாய் நானே இருக்கிறேன் என்ற வரி கர்த்தருக்கு மட்டுமல்ல, காதலுக்கும் பொருந்தும். அதனால்தான் 'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்' என்று காதலன் பாடுவதாக எழுதினேன்.

எனக்கு முன்னே பேசிய இயக்குனர் சீனுராமசாமி ஒரு பரீட்சை வைத்துவிட்டு போயிருக்கிறார். 'கிச்சு கிச்சுப் பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே பச்சை முத்தம் போடவா' என்று எழுதியிருக்கிறீர்களே...பச்சை முத்தம்-சிவப்பு முத்தம் என்றெல்லாம் முத்தங்களுக்கு நிறம் உண்டா? கவிஞர்தான் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று இங்கு பேசினார். அதை விளக்குவது என் கடமை ஆகிறது.

பச்சை முத்தம்...

பச்சையென்றால் இங்கே நிறமல்ல. குணம். பெருந்தலைவர் காமராஜரை பச்சை தமிழர் என்று குறிப்பிடுவோம். பச்சை என்றால் அசல் என்று அர்த்தம். போலி முத்தம் போடாதே பெண்ணே. அசல் முத்தம் போடு என்று அதற்கு அர்த்தம். இது முதல் பொருள்.

பிறந்த குழந்தையைப் பச்சைக் குழந்தை என்பார்கள். அங்கே பச்சை என்பதற்கு புதிது என்று பொருள். இதுவரை எனக்கு முத்தமென்ற அனுபவம் இல்லை. இதுதான் முதல் முத்தம். அதனால் எனக்கு புத்தம் புதிய முத்தம் போடு என்பது இரண்டாவது பொருள்.

மூன்றாம் பொருள் ஒன்று உண்டு. அதுதான் முக்கியமான பொருள். அரைகுறை முத்தம் போடாதே. அது அழிந்துவிடும். பச்சை குத்துவது போல் நச்சென்று ஒரு முத்தம் போடு என்பது மூன்றாம் பொருள். இத்தனை அர்த்தம் தெரிந்தால்தான் முத்தம் ருசிக்கும்," என்றார்.

 

செம்பட்டை பட ஹீரோ திலீபன் திடீர் மரணம்

Actor Dhileepan Died

சென்னை: செம்பட்டை என்ற படத்தில் நடித்த இளம் நடிகர் திலீபன் மஞ்சள் காமாலையால் இன்று காலை மரணம் அடைந்தார்.

திலீபனுக்கு வயது 32. அவரது உண்மையான பெயர் பாலா. கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். ராதாமோகன் இயக்கிய ‘அழகிய தீயே' படத்தில் கதாநாயகன் பிரசன்னாவின் நண்பனாக நடித்தார். ‘பட்டியல்', ‘சிந்தனை செய்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான 'செம்பட்டை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். திலீபனுக்கு திருமணம் ஆகவில்லை. வடபழனியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருந்து சினிமாவில் நடித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

திலீபனின் நண்பரான ரவி என்பவர் தனது ஊரான மதுரை வத்திராயிருப்புக்கு அழைத்து சென்று அங்குள்ள மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை பெற வைத்தார். ஆனால் பலனில்லை.

மஞ்சள் காமாலை நோய் தாக்கி முற்றிய நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் இன்று அதிகாலை 3 மணிக்கு திலீபன் மரணம் அடைந்தார். திலீபன் உடல் சொந்த ஊரான பட்டுக்கோட்டை ஒரத்தநாடு அருகில் உள்ள பழவங்காடு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடக்கிறது. திலீபனுக்கு 2 தம்பிகளும், ஒரு அக்காவும் உள்ளனர்.

 

துப்பாக்கியை விடுவதாக இல்லை... தீபாவளி ரேஸில் குதித்தது கள்ளத்துப்பாக்கி!

Diwali Race Kallathuppakki Takes Tuppaakki   

சென்னை: துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு எதிராக தாங்கள் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டாலும்கூட, படத்துக்கான நெருக்கடியை குறைப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது 'கள்ளத்துப்பாக்கி'காரர்கள்!

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் துப்பாக்கி படத்துடன் களத்தில் மோதுகிறது கள்ளத்துப்பாக்கி.

விக்கி, விஜித், பிரபாகரன், எஸ்பி தமிழ்ச்செல்வன், குட்டி ஆனந்த் ஹீரோக்களாகவும், ஷாவந்திகா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

லோகியாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை கேசி ரவிதேவனும், சிஎஸ் முருகேசனும் தயாரித்துள்ளனர். ரவிதேவன் கமல்ஹாஸனிடம் பணியாற்றியவர்.

128 நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்து கமல்ஹாஸன் பாராட்டியிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.

தீபாவளி ரேஸில் பிரமாண்டமாய், நட்சத்திர அந்தஸ்துடன் வெளிவரும் துப்பாக்கியை, புதியவர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளத்துப்பாக்கி எதிர்கொள்கிறது.

இந்தப் படங்கள் தவிர, அலெக்ஸ் பாண்டியன், கும்கி, போடா போடி போன்றவையும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தள்ளிப் போகும் கோச்சடையான்.. பொங்கலுக்கு ரிலீஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகிறது.

kochadaiyaan release postponed further   
Close
 
ரஜினியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையாமல் தொடர்வதால், படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் இதுகுறித்து கூறுகையில், "கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை. அந்தப் பணிகள் முடிவதைப் பொறுத்துதான் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களில் அதுகுறித்த இறுதி அறிவிப்பை வெளியிடுவோம்," என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முதல் முழுநீள 3டி மோஷன் கேப்சரிங் படம் என்ற பெருமையோடு வருகிறது கோச்சடையான்.

படத்தின் பாடல்களை அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இதுவும் தள்ளிப் போகுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்!

 

'கடவுளை நம்பாத கமலோடு, கடவுளை நம்பும் நீங்கள் எப்படி நட்பாக இருக்க முடியும்?'

Ilayaraja Comments On Atheist Kamal

-இப்படி ஒரு கேள்வியை வாசகர்கள் இளையராஜாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு இளையராஜா அளித்துள்ள பதில் படு யதார்த்தம்...

"நண்பர்களாக இருக்க முடியாதல்லவா... ஆனால் நண்பர்களாக இருக்கிறோம். அதுதானே விஷயம். உண்மையில் அவர் ஒரு ஆழ்வார்தான். கடவுளை நம்புவதோ நம்பாமல் இருப்பதோ.. இரண்டிலும் பொதுவாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது நம்பிக்கை. கமல் கடவுள் இல்லை என்று நம்புகிறார். நான் உண்டு என்று நம்புகிறேன். இந்த இரண்டிலும் இருப்பது நம்பிக்கை ஒன்றே.

அதுதான் கடவுள் என்பது அவருக்குத் தெரியாது, எனக்குத் தெரியும். பெயர் வேறு வேறாக இருந்தால், கடவுளும் வேறு வேறாக இருப்பாரா?

அங்கே இப்படி இங்கே அப்படி என்பதெல்லாம் அவர் விஷயத்தில் கிடையாது. எல்லா மதங்களும் பெயரளவில் வேறுவேறாக இருந்தாலும், ஒரு பொருள்தான்.

கமல், கடவுள் இல்லை என்று சொல்கிறாரே என்பதற்காக கடவுள் வருத்தப்படவும் மாட்டார். கடவுளா அவர் கிடக்கிறார் என்று கமல் சொல்வதை அவர் கண்டு கொள்ளவும் மாட்டார்.

அடடே இதைப் பாருங்கள்... அவர் கிடக்கிறார் என்றாலும் இருக்கிறார் என்றுதானே பொருள் வருகிறது.

வள்ளுவனையும் கம்பனையும் பாரதியையும் விட கமல், தான் அறிவில் சிறந்தவன் என அவரே சொல்வாரா? அப்படியே சொன்னாலும் அது உண்மையாகுமா?

நம் எல்லோரையும் விட கடவுளை நம்புகிறவர் அவர்தான். இல்லாவிட்டால் தன் படங்களுக்கு அன்பே சிவம், தசாவதாரம், விஸ்வரூபம் என்று பெயர் வைப்பாரா?"

-இப்படி பதிலளித்துள்ளார் இசைஞானி. இதற்கு கலைஞானி என்ன சொல்லப் போகிறாரோ!

 

மாற்றான் ... சூர்யாவின் கடும் உழைப்புக்கு கைமேல் பலன்!

Maattrraan First Report   

மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது.

'படம் எப்படி இருக்கிறது?' சினிமா ரசிகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் குறித்த ஃபீட்பேக் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

பார்த்த ரசிகர்கள் பலருக்கும் படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம், படத்தின் வேகம் போன்றவற்றில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அனைவரின் ஒருமித்த கருத்து: 'சூர்யா பிரமாதப்படுத்திட்டார்!'

படத்தின் முதல் பாதி முழுக்க ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ள சூர்யா, இடைவேளைக்குப் பிறகுதான் தனித்தனி சூர்யாவாக வருகிறார்.

இரண்டு சூர்யாக்கள், அதுவும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டே சண்டை போடுவதும், காதல் வயப்படுவதும் என தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத பரிமாணத்தை சூர்யா வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.

இடைவேளையே 1.15 மணிநேரம் என்பதால் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்பது இன்னும் சிலரின் கருத்து.

இன்று திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் போர்டுடன் ஆரம்பமாகியுள்ளது மாற்றான்.

படம் சராசரிக்கு சற்று மேல் என்று கருத்து சொல்பவர்கள் கூட, சூர்யாவுக்கு 100-க்கு 100 மார்க் போட்டிருப்பது, இந்தப் படம் சூர்யாவுக்காக பாக்ஸ் ஆபீஸில் நின்றுவிடும் என்பதை உணர்த்துவதாக கோலிவுட் நம்புகிறது.

 

பெங்களூரில் மாற்றான் படத்துக்கு ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை!

No Theater Maattrraan Karnataka   

பெங்களூர்: காவிரி பிரச்சினை வந்தாலே போதும்... கர்நாடகத்தில் 'முதல் பலிகடா' தமிழ் சினிமாக்கள்தான்.

சத்தமில்லாமல் எல்லா தமிழ்ப் படங்களையும் தியேட்டர்களைவிட்டு தூக்கிவிடுவார்கள். புதுப்படங்களுக்கு தியேட்டரும் தர மாட்டார்கள்.

இந்த முறையும் காவிரி கலாட்டா ஆரம்பித்ததுமே, அத்தனை தமிழ்ப் படங்களையும் தியேட்டர்களிலிருந்து எடுத்துவிட்டார்கள் கர்நாடகத்தில். இத்தனைக்கும் இவைதான் அதிக வசூலைக் கொடுத்து வந்தவை. குறிப்பாக ஒற்றைத் திரை அரங்குகளில் தமிழ்ப் படங்கள்தான் அதிக ரசிகர்களை ஈர்த்து வந்தன.

இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் சூர்யாவின் மாற்றானுக்கு, பெங்களூரில் ஒரு தியேட்டர் கூட தரப்படவில்லை. படத்தின் கர்நாடக விநியோக உரிமையை வாங்கிய விநியோகஸ்தரும் கூட படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

மைசூர், மாண்டியா உள்பட தமிழர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக பகுதிகளில் எங்குமே இந்தப் படம் வெளியாகவில்லை.

 

‘26/11’ ராம்கோபால் வர்மாவுக்கு நோ சொன்ன ரயில்வேத்துறை

Rgv S Cst Shoot Stopped Its Tracks

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சூட்டிங் நடத்த அனுமதி கிடைக்காததால் ராம்கோபால்வர்மாவின் ‘26/11' படத்திற்கு மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து ராம்கோபால்வர்மா ‘26/11' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தவேண்டும். இதற்காக ரயில்வே துறையிடம் அனுமதி கோரி ராம்கோபால்வர்மா கடிதம் எழுதியிருந்தார்.

அக்டோபார் 10ம் தேதிமுதல் 14ம் தேதிவரை சூட்டிங் நடத்தவேண்டும் என்றும் அதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் அந்த கடிதத்தை ரயில்வேத்துறை நிராகரித்துவிட்டது. இதற்காக 6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யவும் தயாராக இருப்பதாக ராம்கோபால் வர்மா கூறியிருந்த நிலையிலும் அவருக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அப்செட் ஆன வர்மா சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு பேக் அப் சொல்லிவிட்டாராம்.

25 லட்சம் நஷ்டம்

ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்காததற்கு சினிமாத்துறையினரிடம் ஏற்பட்ட முந்தைய அனுபவமே காரணம் என்று கூறப்படுகிறது. தி பர்னிங் ட்ரெயின் திரைப்படத்திற்காக ரயிலில் படப்பிடிப்பு நடத்தியவர்கள் ஒரு பெட்டியையே எரித்துவிட்டனராம். அந்த படம் எடுப்பதற்கு அனுமதி கொடுத்ததற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாம். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெறும் 5ஆயிரம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செலுத்தியிருந்தனராம். எந்தவித அக்ரிமென்டும் இல்லாத காரணத்தினால் அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க முடியாமல் போய்விட்டதே இப்போது சினிமா சூட்டிங் நடத்த அனுமதி கொடுக்கமாட்டேன் என்கின்றனர்.