நல்ல கேரக்டருக்காக போராடினேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நல்ல கேரக்டருக்காக போராடினேன்

1/31/2011 6:32:51 PM

'தவமாய் தவமிருந்து' படத்தில் அறிமுகமானவர் மீனாள். பிறகு சில படங்களில் நடித்தாலும், 'ஆடுகளம்' அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'தவமாய் தவமிருந்து' படத்துக்கு பிறகு நல்ல கேரக்டர் அமையவில்லை. அதற்காக போராடினேன். 'ஆடுகளம்' வாய்ப்பை பெற்றுத் தந்ததே, 'தவமாய் தவமிருந்து' படம்தான். அந்த படத்தில் என்னை பார்த்துவிட்டுதான் வெற்றி மாறன் நடிக்க அழைத்தார். 60 வயது முதியவருக்கு மனைவி கேரக்டர் என்றதும் முதலில் தயங்கினேன். 'முதியவரின் மனைவி என்றாலும் நீங்கள் இளமையானவர்தான்' என்றார். அந்த வார்த்தைக்காக நடித்தேன். இப்போது படம் பார்த்தவர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்.


Source: Dinakaran
 

அய்யன் என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அய்யன் என்ன கதை?

1/31/2011 6:34:08 PM

வர்ஷா பிக்சர்ஸ் சார்பில், சேகர்ராஜன் தயாரிக்கும் படம் 'அய்யன்'. வாசன் ஹீரோ. அவர் ஜோடியாக திவ்யா பத்மினி நடிக்கிறார். மற்றும் சண்முகராஜன், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கும் கேந்திரன் முனியசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
கிராமத்து காதலையும் அந்த காதலால் ஏற்படுகிற சமூகப் பிரச்னையையும் சொல்லும் படம் இது. ஊதாரியாக திரியும் இளைஞன், ஊர்க்காவல் தெய்வமான அய்யனாக மாறுவதுதான் கதை. படத்துக்கு பெரிய பலமாக இருப்பது இளையராஜாவின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளது. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதையா என்கிறார்கள். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் நடக்கிற உயிரோட்டமான சம்பவத்தை சொல்லியிருக்கிறேன். அது என்ன என்பது சஸ்பென்ஸ். முழுவதும் முதுகுளத்தூரைச் சுற்றி படமாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறினார். முன்னதாக, இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இளையராஜா வெளியிட இயக்குனர் ஜனநாதன் பெற்றார்.


Source: Dinakaran
 

தள்ளிப்போகிறது நடுநிசி நாய்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தள்ளிப்போகிறது நடுநிசி நாய்கள்

1/31/2011 6:35:13 PM

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், 'நடுநிசி நாய்கள்'. சமீரா ரெட்டி, வீரா, தேவா உட்பட பலர் நடித்துள்ளனர். காதல், த்ரில்லர் படமான இது, தெலுங்கில் 'எர்ரா குலாபிலு' என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படம் பிப்ரவரி மாதம் 11&ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். இப்போது, பிப்ரவரி 18&ம் தேதிக்கு ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.


Source: Dinakaran
 

கன்னடத்தில் நடிக்கவில்லை:ரஜினி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கன்னடத்தில் நடிக்கவில்லை: ரஜினி

1/31/2011 6:36:30 PM

கன்னடத்தில் உபேந்திரா, இயக்கி நடித்து ஹிட்டான படம் 'சூப்பர்'. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரத்யேக காட்சி பெங்களூரில் கடந்த வெள்ளியன்று ரஜினிக்காக திரையிடப்பட்டது. ரஜினியுடன் அவரது நண்பர்களும் படத்தை பார்த்தனர். படம் முடிந்ததும் உபேந்திராவை கட்டித்தழுவி பாராட்டிய ரஜினி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: வழக்கமாக உபேந்திரா நடிக்கும் படங்கள் எனக்குப் பிடிக்கும். இந்தப்படம் அதுக்கு விதிவிலக்கல்ல. உபேந்திரா சிறந்த நடிகர் மட்டுமில்ல. இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் சிறப்பானது. இந்த மாதிரியான படங்கள் அதிகம் வரவேண்டும். கன்னடத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். நல்ல கதையும் அதற்கான வாய்ப்பும் கிடைத்தால் எதிர்காலத்தில் நடிப்பேன். இப்போது எந்த கன்னடப்படத்திலும் நடிக்க வில்லை. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.


Source: Dinakaran