ஏ ஆர் முருகதாஸ், ஷங்கர், சுந்தர், ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ்... 'லக்கி' ரஞ்சித்!

திரையுலகில் ஒரு இயக்குநராக நுழையும் எவருக்கும், ஓரிரு படங்கள் இயக்கி முடித்ததும் துளிர்க்கும் ஆசை.. 'ரஜினியை இயக்க வேண்டும்... ரஜினிக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன்' என்று கிளம்பும்.

இன்றைய இளம் இயக்குநர்களில் பலர் அடிப்படையில் ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

குறிப்பாக ராகவா லாரன்ஸ், எஸ் எஸ் ராஜமவுலி, கார்த்திக் சுப்பராஜ், இப்போது தேர்வாகியிருக்கும் ரஞ்சித்... அனைவருமே ரஜினியின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரசிகர்கள்.

Rajini movie: How Ranjith joined in borad?

லிங்காவுக்குப் பிறகு, உடனடியாக ரஜினி படம் நடிக்கப் போகிறார் என்பது தகவலாகப் பரவியது. அதுவும் குறிப்பிட்ட சில இயக்குநர்களுக்குத்தான் என்றில்லாமல், இன்றைய இளம் இயக்குநர்களுக்கும் அவர் வாய்ப்பு தரப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும், பலரும் கதைகளோடு அணுகியிருக்கிறார்கள்.

ரஜினி முதலில் கேட்டது ஷங்கரின் எந்திரன் 2-வைத்தான். இதை இப்போது முதல் முறை அவர் கேட்கவில்லை. பலமுறை கேட்டதுதான். ஆனால் இந்த முறை எத்தனை நாளில் இந்தப் படம் முடியும்.. பட்ஜெட் என்ன என்பதைத்தான். அதற்கு ஒரு இறுதி வடிவமும் கொடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் அந்தப் படம் துவங்க குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் என்பதால், அதற்குள் ஒரு படம்.. அதுவும் ஒரு பரபர ஆக்ஷன் படம் பண்ணும் எண்ணம் ரஜினிக்கு.

அதனால் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ், ரஞ்சித் ஆகியோரிடமும் கதைகள் கேட்டுள்ளார். ரஞ்சித்தின் கதை ரொம்பவே பிடித்துப் போக... அவரையே தன் அடுத்த பட இயக்குநராக டிக் செய்துவிட்டார்.

ரஞ்சித் இதுவரை இரு முறை ரஜினியைச் சந்தித்துவிட்டார். முதல் சந்திப்பின்போது அவர் சொன்ன கதைச் சுருக்கம் மிகவும் பிடித்துப் போனதால், அவரைக் கட்டிப் பிடித்து பாராட்டி, முழுக் கதையையும் தயார் செய்யச் சொன்னாராம் ரஜினி.

முழுக் கதையும் தயாராக இருக்கிறது சார்... என ரஞ்சித் சொல்ல, வெரி குட் என்று பாராட்டிய ரஜினி, உடனே தாணுவைப் பார்த்துவிடுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார். தாணுவைப் பார்த்து படம் குறித்துப் பேசி அட்வான்ஸ் வாங்கிய கையோடு நண்பர்கள் அனைவருக்கும் விருந்து வைத்துக் கொண்டாடினாராம் ரஞ்சித்.

தாணுவும் ரஜினியும் கடந்த பத்து தினங்களாகவே, ஷூட்டிங், கால்ஷீட் என பலவற்றையும் பேசி முடிவு செய்து வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூனில் படப்பிடிப்பு, பொங்கலுக்கு ரிலீஸ் என்பதை ஏற்கெனவே நாம் தெரிவித்திருக்கிறோம்.

 

மே 15-ம் தேதி முதல் ஜோதிகா நடித்த 36 வயதினிலே!

திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள முதல் படமான '36 வயதினிலே' திரைப்படம் மே 15ம் தேதி வெளியாகிறது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ'. நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார்.

36 Vayathinile from May 15

இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவரும், முன்னணி நடிகருமான சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.

நீண்ட நாட்கள் நடிப்புக்கு ஓய்வு தந்திருந்த நடிகை ஜோதிகாவின் ரீ-என்ட்ரி படமாக இது பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. எந்த ஒரு காட்சியையும் நீக்கச் சொல்லாமல் படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

மே 8ம் தேதி இப்படத்தை வெளியிடத் தீர்மானித்திருத்தார்கள். ஒரு பாடல் காட்சியை ரீ ஷூட் பண்ண வேண்டியிருந்ததால், ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டார்கள்.

இப்போது வரும் மே 15-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 

கமல் என்றொரு உத்தமவில்லன்... என்னா ஒரு வில்லத்தனம்?

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

'உத்தம வில்லரான' கமலுக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்போதும் அதீத பாசம். அதனால் மக்களுக்கு 2.30 மணிநேரம் போதும் என்று முடிவு செய்த படத்தை எங்களுக்கு மட்டும் 3 மணி நேரப்படமாக காண்பித்தார். அது கமல் கணக்கு.

‘என் சொந்த அந்தரங்கங்களை கிசுகிசுக்களாக எழுதிப் பொழைத்த புண்ணியவான்களே, உங்களுக்காக இந்தப் படம் சமர்ப்பணம்' என்று ஒரு நக்கல் கார்டு படத்தின் துவக்கத்தில் போடத் திட்டமிடப்பட்டு கடைசி நிமிடங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கமலுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன்.

அப்படி செய்திருந்தாலும் தப்பில்லை என்றுதான் படம் பார்க்கும்போது தோணியது. ஏனெனில் இனி பத்திரிகையாளர்கள் தனது காதல் கதைகளை கிசுகிசுக்களாக எழுத முடியாதபடிக்கு மொத்தத்தையும் அவரே எழுதிக்கொண்ட படமே ‘உத்தம வில்லன்'. (என்னா ஒரு வில்லத்தனம்?')

இது நடந்தது சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்...

நம்ம உத்தமர் கமல், நடிகை சிம்ரனுடன் தீவிர காதலில் இருந்த சமயம். நான் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பத்திரிகை ஒன்றில் சின்னப் பயலுக சிலபேர் கமல் குறித்த வதந்திகளை, தங்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காத வயித்தெரிச்சலில், தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்கள்.

Cinemakkaran Saalai 23

ஒரு மனிதன் எவ்வளவு காலத்திற்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கமுடியும்?' நண்பர் ஒருவர் மூலம் எனக்கு பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தார் கமல். நமக்கு பில்டிங், பேஸ்மெண்ட் ரெண்டுமே வீக் என்பதால், கடுமையான வசவுகளுக்கிடையே, ரெண்டு சாத்து விழுந்தாலும் வாங்கிக்கொள்ள தயாராகவே நான் அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்துக்கு சென்றேன்.

உள்ளே வரும்படி அழைப்பு. கமல் மட்டும் தனித்து அமர்ந்திருந்தார். நான் வணக்கம் சொல்ல, பதில் வணக்கம் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சேரில் அமரும்படி சைகை செய்தார். சில நிமிடங்களில் பச்சைத் தண்ணீரும் (இப்பிடி அழுத்தமா சொல்லவேண்டியதா இருக்கு) தேநீரும் வந்தது. பழையபடி சாப்பிடும்படி சைகை. குடித்தேன். ‘அவரே அடிக்கமாட்டாரோ, யாராவது ஸ்டண்ட் யூனியன் ஆளுங்க வருவாங்களோ? ஆனா அந்த அளவுக்கு நாம ஒர்த் இல்லையே?' இப்படி சில வசன ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்க, சுமார் பத்து நிமிட மவுனத்திற்குப் பிறகு லேசாய் கையெடுத்து கும்பிட்டபடி ‘நீங்க போகலாம்' என்பது போல் கமல் அடுத்த அறைக்குள் போய்விட்டார்.

Cinemakkaran Saalai 23

கமல் எப்போதுமே புரிகிற மாதிரி குழப்பி, சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விட்டு, ‘இருந்தா நல்லாருக்கும் ஆனா இல்லை போல இருக்கே.. அப்புறம் நீங்களே மானே தேனே பொன்மானே போட்டு ஒரு முடிவுக்கு வந்துக்கங்க' போன்ற தில்லாலங்கடி டீலிங்குகளை இளம்பிராயத்திலிருந்தே கண்டும் கேட்டும் வளர்ந்தவனாகையால் பெரும் குழப்பங்களின்றி அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

அவரது மவுனத்துக்கு அர்த்தம் ‘ஏண்டா பொடிப்பயலே என் காதல் அனுபவங்களை சரியா புரிஞ்சிக்க உனக்கு வயசும் அறிவும் பத்தாது' என்பது போல, சுமார் பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு ‘உத்தம வில்லன்' பார்த்தபோது புரிந்துகொண்டேன்.

‘இணையங்களில் ‘உத்தம வில்லன்' படக் கதையை இதுவரை பல லட்சம் பேர் எழுதிவிட்டார்கள் என்பதால் நான் கண்டிப்பாக எழுத வேண்டியதில்லை. போக இது அப்படம் குறித்த விமர்சனமும் அல்ல.

மனிதர்களின் வாழ்க்கையை ஒரு காதல் ஒரு திருமணம் என்பதோடு முடித்துவிட முடியாது. அவ்வாறு காண்பிக்கப்படும் சித்திரங்களெல்லாம் படு போலித்தனமானவை. நின்ன காதல், ஓடிய காதல், சொன்ன காதல், சொல்ல முடியாமல் மனசுக்குள் மென்ன காதல் என்று எல்லோரும் பல வெரைட்டிகளைக் கடந்து வந்தவர்கள்தாம்.

Cinemakkaran Saalai 23

நிகழ்காலத்தில் கடுமையாக அவதூறு செய்யப்படும் காதல்களை கொஞ்சம் காலம் கடந்து சீர்தூக்கிப் பார்த்தால் கண்களில் வெள்ளம் மடை திறக்க பரவசத்துடன் பார்ப்பீர்கள் என்பது மறுபடியும் கமல் கணக்கு. இதில் கமல் பாதி வெற்றி பெற்றிருக்கிறார். வயதான காதல் மன்னர்கள் படத்தைப் போற்றிப் பாடடி பெண்ணே' என்கிறார்கள். இதில் சில ரஜினி ரசிகர்களும் அடக்கம்.

இன்னொரு குரூப்போ கமலுக்கு நட்டு கழண்டு விட்டது. அதனால் சொந்தக் கதையை எடுத்து சூனியம் வைத்துக் கொள்கிறார் என்று வசை பாடுகிறார்கள்.

தவறாமல் விமர்சனங்களை வைத்துக் கொண்டே கமலை வெகுவாக ரசித்து வந்தவன் நான். ‘உத்தம வில்லனை' என்னைப் பொறுத்தவரை கமலின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவே பார்க்கிறேன். வாணி, சரிகா, சிம்ரன் (அதுதான் டாக்டராக வரும் ஆண்ட்ரியா கேரக்டர்) தொடங்கி இடையில் சொல்ல மறந்த அல்லது சொல்லவிரும்பாத சிலர்களின் வழியாக கவுதமி வரை அனைவருக்கும் கமல் வழங்கும் தன்னிலை விளக்கமாகவே நான் இப்படத்தைப் பார்க்கிறேன்.

கூடவே அவரது பாவமன்னிப்பு கோரலும் அனைத்து காட்சிகளிலும் இருந்துகொண்டே இருக்கிறது. வேறு யாருக்கு வரும் இந்த துணிச்சல்?

Cinemakkaran Saalai 23

ஆண்ட்ரியாவுக்கும் தனக்கும் இருக்கும் கள்ளக்காதல் யாருக்கும் தெரியக் கூடாதென்று ட்ரைவரிடமும் நண்பரிடமும் சத்தியம் வாங்கி, அதைக் காட்சியாக்கி, ஊருக்கெல்லாம் சொல்கிற தைரியம் கமலைத் தவிர யாருக்கு வரும்?

மேனேஜரால் இரு கடிதங்கள் மட்டுமே மறைக்கப்பட்ட மனோன்மணி-ரஞ்சன் காதல் கதை, அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தை வளர்ந்து கல்லூரி மாணவியாய் (பார்வதியிடம் டச்-அப் பாய் வேலை கிடைக்குமா?) எதிரில் வந்து பார்வையால் சுட்டுப் பொசுக்குவது கிளாஸிக் எபிசோட் என்றால், பாலசந்தர் மற்றும் பழம்புராண ஃப்ளாஷ்பேக் படு அபத்தம். நல்ல சமாச்சாரங்களுக்கு மத்தியில் பல படங்களில் இவ்வகையான ஆர்வக் கோளாறு முயற்சிகள் கமலின் ரத்தத்தோடு கலந்தவை.

மனோரஞ்சன் என்ற மாபெரும் கலைஞன் மரணித்தால் மட்டுமே அவனது பழைய காதல்களை மக்கள் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்ற சாமர்த்திய ஸ்கிரிப்டில் கமல் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

Cinemakkaran Saalai 23

மற்றவர்கள் எப்படியோ இந்த ‘மரண' க்ளைமாக்ஸை நான் புரிந்துகொண்ட விதம், வயதாகிவிட்டதால் ‘காதல் மன்னன்' கமல், தன் காதல் கணக்கை ‘உத்தம வில்லன்' படத்தோடு முடித்துக்கொண்டார், இனி அவருக்கு காதலிக்க நேரமில்லை' என்பதாகத்தான்.

'அப்ப இனிமே உங்களைப் பத்தி கிசுகிசு எழுதாம நாங்க எப்பிடி பொழைக்கிறது கமல்? சொல்லுங்க மன்னா சொல்லுங்க!

(தொடர்வேன்...)

 

ரஜினிக்காக ரஞ்சித் அமைத்திருக்கும் அரசியல் களம்!

அட்டகத்தி, மெட்ராஸ் இரண்டிலுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் மிக அற்புதமாகச் சொன்ன ரஞ்சித், ரஜினிக்காக அமைத்திருக்கும் கதையும் அரசியல் சார்ந்ததுதானாம்.

இந்தப் படத்துக்கு ரஜினி முதலில் ஒதுக்கியது 30 நாட்கள்தானாம். பின்னர் தாணு கேட்டுக் கொண்டதால் 45 நாட்கள் ஒதுக்கித் தந்திருக்கிறார்.

மொத்தம் 90 நாட்களில் படத்தை முடித்துவிடத் திட்டம். ரஜினி உள்ள காட்சிகளை 45 நாட்களும், ரஜினி இல்லாத காட்சிகளை மீதி 45 நாட்களும் எடுக்கத் திட்டம்.

Rajini - Ranjith movie is a political - action story

தனது சினிமா உலகப் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே நட்பாகத் திகழும் தாணுவுக்கு, தாம் செய்யும் உதவியாக இந்தப் பட வாய்ப்பைத் தந்திருக்கிறார் ரஜினி.

இன்றைக்கு சினிமா இளைஞர்கள் கைகளில் வேறு பரிமாணத்துக்குப் போய்விட்டது. அதை உணர்ந்து, அவர்களுடன் பயணிக்கவே, கார்த்திக் சுப்பராஜ், ரஞ்சித் போன்றவர்களிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார் ரஜினி.

ரஞ்சித்தை ரஜினியிடம் அழைத்துச் சென்றதே சவுந்தர்யா ரஜினிதானாம்.

இந்தப் படம் விறுவிறுப்பான அரசியல் - ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். படத்தில் அநேகமாக ரஜினிக்கு ஜோடி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாகவே அரசியல் படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பவர் ரஜினி. முதல்வன், ஐயா போன்றவரை அவர் கடைசி நேரத்தில் தவிர்த்த படங்கள்.

அப்படிப்பட்ட ரஜினி, இப்போது தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களத்தை பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

காஞ்சனா வெற்றியால், கோப்பெருந்தேவி பேய்க்கு வந்த மவுசு!

‘பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ... மனசு நிறைய சந்தோஷத்தோடு வா' என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்து விழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள்.

காஞ்சனா 2 ன் கலெக்ஷனை கேட்டால், ஆவியுலகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு இருக்கிறது. ஒரு கோடி பணம் போட்டவர்களுக்கெல்லாம் நாலு மடங்கு ரிட்டர்ன் என்கிறார்கள் புள்ளிவிபர புலிகள்.+

Kopperunthevi, another horror movie on its way

இந்த நேரத்தில்தான் காஞ்சனா 1 ல் நடித்தவர்களையும், காஞ்சனா 2 ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற அரண்மனை படத்தில் நடித்தவர்களையும் தேடி பிடித்துப் போட்டு ‘கோப்பெருந்தேவி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி.

கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று நீண்டு கொண்டே போகிறது நட்சத்திர கூட்டம்.

காமெடி, த்ரில், ஹிஸ்டாரிக்கல், என்று சிரிக்கவும் அதிரவும் காதலிக்கவும் கவலைப்படவும் வைப்பது மாதிரி ஏகப்பட்ட வர்ணங்களை குழைத்திருக்கிறாராம் சங்கர் பழனிச்சாமி. தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய புண்ணியவானும் இவர்தான்.

"கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கு. அதுக்காகவே இந்த படத் தயாரிப்புக்கு ரெண்டு வருஷம் எடுத்துகிட்டேன்," என்கிறார் இயக்குநர். ஆராத்யா என்ற பெண்ணை கேரளாவிலிருந்து இறக்கியிருக்கிறார்கள். ஆரம்பகால நயன்தாராவை பார்த்த மாதிரியே இருக்கிறார் இவரும். படத்தில் இவர்தான் பேய்.

Kopperunthevi, another horror movie on its way

காஞ்சனா2 ன் வெற்றி ஆந்திராவிலும் தொடர்வதால், கோப்பெருந்தேவிக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் செம கிராக்கி. துட்டோடு கிளம்பி வரும் விநியோகஸ்தர்கள் துண்டு போட்டு இடம் பிடிக்கிற அளவுக்கு ஆர்வம் காட்டுவதால், படம் மே இறுதியில் வெளி வரலாம் என்கிறது கோடம்பாக்கத்து ஆவி.

தியேட்டர்ல ஒரு டிக்கெட்டோட ஒரு மந்திரிச்ச முடிகயிறையும் கொடுத்துட்டாங்கன்னா, ரசிகர்களுக்கு இன்னும் சவுரியமா இருக்கும்!

 

வரவே வராதா 'வாலு'?

தள்ளிப் போவதில் புது சாதனையே படைக்கிறது சிம்புவின் வாலு. இந்தப் படம் கடைசியாக அறிவிக்கப்பட்ட மே 9-ம் தேதியும் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கி உள்ளார்.

Vaalu postponed again

நான்கு ஆண்டுகளாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் முடிந்து மே 9ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தி வந்தார்கள். தற்போது மே 9 வெளியீடு என்ற விளம்பரமும் நிறுத்தப்பட்டு விட்டது.

தயாரிப்பாளர் சக்ரவர்த்தி கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பதால், இப்படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கான கடன் பிரச்சினைக்காகவும் சரத்குமார், தாணு உள்ளிட்ட குழுதான் பஞ்சாயத்து பேசவிருக்கிறது.

 

ஆர்யா- விஷ்ணுவர்தன் 5வது முறையாக இணையும் யட்சன்!

வணிகநோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையைப் பயன்படுத்துவதிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

எந்த ரகத்திலான படங்களிலும் தன் பளிச் முத்திரை பதிப்பவரான அவர், இப்போது இயக்கும் படம் 'யட்சன்'

Arya - Vishnuvardhan's 5th movie Yatchan

இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது. இதில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி நடித்துள்ளனர்.

கதை பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறும்போது, "இது இரண்டு புறம் போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போல பல அம்சங்களும் இருக்கும்," என்கிறார்.

ஐந்தாவது முறையாக ஆர்யாவை நாயகனாக்கி எடுத்துள்ள படம் 'யட்சன்'.

ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும் போது உள்ள புத்துணர்வு முடிக்கும் போதும் இருக்கும். முடித்தவுடன் அப்பாடா. முடிந்ததா என்று தோன்றாது. அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது ஸ்பெஷல். அடுத்த படம் எப்போது என்று அவரே கேட்பார் அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது.

முதன் முதலில் என் தம்பி கிருஷ்ணாவை, வைத்து இயக்கியதும் மறக்க முடியாத மகிழ்ச்சி,'' என்கிறார்.

இறுதிக் கட்டப் பணிகளில் மெருகேறிவரும் இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

விஷ்ணுவர்தனின் எல்லாப் படங்களுக்குமே யுவன் சங்கர்ராஜாதான் இசை. அந்தளவுக்கு பின்னிப் பிணைந்த கூட்டுறவுள்ளவர்கள் அவர்கள். இப்படத்திலும் யுவன் இசை யமைத்துள்ளார். 5 பாடல்கள் உள்ளன.

அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக உருவாகி வருகிறது யட்சன். இப்படத்தை விஷ்ணு வர்தன் பிக்சர்ஸுடன் யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது.

 

சித்தர் கையிலாயம்... நவீன தொழில்நுட்பத்தில் ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை வரலாறு!

கோவையையொட்டியுள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இப்போதும் வாழ்வதாகக் கருதப்படும் சித்தர்களைப் பற்றிச் சொல்லும் படம் சித்தர் கையிலாயம்.

ப்ரபஞ்சம் சினி சர்க்யூட் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் எஸ்.ரமேஷ்.

Siththar Kayilayam, a movie on Velliyangiri Siththar

இயற்கையை மீறிய சக்தி படைத்தவர்களே சித்தர்களாக கருதப்படுகிறார்கள். கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரங்களில் மரணத்தை வென்ற சித்தர்கள் இன்றும் வாழ்வதாக கருதப்படுகிறது. மனிதர்கள் சிறப்புற வாழ்வதற்காக பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் பல்வேறு காலங்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படியொரு அதீத சக்தி படைத்த ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை வரலாறுதான், ‘சித்தர் கையிலாயம்'.

சித்தரின் வாழ்க்கை வரலாற்றுடன், இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான காதல், மோதல், நகைச்சுவை கலந்த படமாக இதனை உருவாக்கியிருக்கிறாராம் சாய் எஸ் ரமேஷ்.

Siththar Kayilayam, a movie on Velliyangiri Siththar

வெள்ளியங்கிரி மற்றும் அதனை சுற்றிய காட்டுப்பகுதிகளில் நடைபெறும் இந்தப் படத்தின் புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார் அருண். கன்னடத்தில் புகழ்பெற்ற அர்ச்சனா சிங் இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடங்களில் சிலம்புச் செல்வம், மணிமாறன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் வெளுத்துக்கட்டு அப்பு, சின்ன ராசு, செல்வகுமார், மாஸ்டர் மௌலி ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Siththar Kayilayam, a movie on Velliyangiri Siththar

இந்தப்படத்துக்கு இசை அமைக்கிறார் டி.கெளதமசந்திரன். ஏ அஜய் ஆதித் ஒளிப்பதிவு செய்கிறார். விருதுநகர் மூளிபட்டி எம்.ராமலிங்கம் தயாரிக்கிறார்.

 

நான் ஸ்டாப் காமெடி... 'பாலக்காட்டு மாதவன்'!

நான் ஸ்டாப் காமெடிப் படமாக உருவாகியுள்ளது விவேக் நடித்துள்ள Vivek's non stop comedy in Palakkattu Madhavan  

சிரிக்காத நாட்களை வாழாத நாட்களாகவே கணக்கிட வேண்டும். இன்று மன அழுத்தம் போக்க செலவில்லாத மருந்து நகைச்சுவைதான். சிரிப்பு ஒன்றே சோர்வு நீக்கும் தீர்வைத்தரும். புத்துணர்ச்சி தரும். எனவேதான் இப்போதெல்லாம் சிரிக்க வைக்கும் படங்கள் சிறப்பான வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் ஒரு 'நான்ஸ்டாப் காமெடி' படமாக உருவாகியிருக்கிறது விவேக் நடித்துள்ள 'பாலக்காட்டு மாதவன்'.

எப்போதெல்லாம் ஒரு படம் குடும்பக்கதையாக கலகலப்பாக கலர் புல்லாக இருக்கிறதோ அப்போது அது நிச்சயமான வெற்றிக்கு உத்திரவாதம் தரும். அப்படி ஒரு படம்தான் இந்த 'பாலக்காட்டு மாதவன்'.

இது பாச உணர்வையும் நகைச்சுவையையும் சமமாகக் கலந்து உருவாக்கப் பட்டுள்ளது,''என்றார்.

படத்தின் தலைப்பு பற்றிக் கூறும் போது '''பாலக்காட்டு மாதவன்' கே. பாக்யராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாத்திரம். அது அவ்வளவு தூரம் அனைவரையும் சென்றடைந்தது. அந்த பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்து அதை இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறேன்," என்றார்.

Vivek's non stop comedy in Palakkattu Madhavan

படத்தின் கதை பற்றிக் கேட்ட போது, "ஒரு சாதாரண மனிதனின் கதைதான் இது. அவன் ஒரு அம்மாவைத் தத்தெடுக்கிறான். அதன் பிறகு வரும் பிரச்சினைகள் சுவாரஸ்ய சம்பவங்கள்தான் கதை. மகனாக விவேக்கும் அம்மாவாக செம்மீன் ஷீலாவும் நடித்துள்ளனர்," என்கிறார் இயக்குநர் சந்திரமோஹன்

ஏற்கெனவே ஸ்ரீகாந்த்தேவா இசையில் சமீபத்தில்தான் இந்தப் படத்தின் ஆடியோ வெளியானது.

 

ரஜினி படம்.. ஜூனில் தொடங்குகிறது... பொங்கலுக்கு வெளியாகிறது!

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படம் இந்த மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ரஜினி - ரஞ்சித் - தாணு புதிய படம் குறித்துதான் திரையுலகிலும் மீடியா உலகிலும் நேற்று இரவு முதல் பரபரப்பான பேச்சாக உள்ளது.

Rajini - Ranjith new movie to hit on Pongal 2016

ஆரம்பத்தில் இந்த செய்தியை சந்தேகமாகவே பார்த்தவர்கள், பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்டு உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எழுபதுகளிலிருந்தே ரஜினியுடன் பயணம் செய்பவர். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டி, அதை பிரமாண்ட கட் அவுட்டகளாக வைத்தவர். கூலிக்காரன் படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க வந்த ரஜினியை வியக்க வைக்கும் அளவு மெகா கட் அவுட் வைத்தவர்.

சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தும், சிவாஜி குடும்பம் மற்றும் பாலச்சந்தருக்காக அவற்றை விட்டுக் கொடுத்தார்.

இப்போதுதான் அவருக்கு ரஜினியை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்தப் படத்தை இந்த மாத இறுதியில் அல்லது, அடுத்த மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிச்சயம் பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார்களாம்.

ரஜினி - ரஞ்சித் - தாணு பட அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

 

ரஜினியின் புதுப்படம்... இயக்குகிறார் ரஞ்சித்.. தயாரிப்பு கலைப்புலி தாணு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டாகிவிட்டது. அவர் தன் வாயால் அதைச் சொல்லவில்லை. அவ்வளவுதான்.

ஆனால் இயக்கப் போகிறவரும், தயாரிப்பாளரும் நூறு சதவீதம் உறுதி செய்து மீடியாவுக்குச் சொல்லிவிட்டார்கள். இரவெல்லாம் சமூக வலைத் தளங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

ரஜினியின் புதுப் படத்தை இயக்கப் போகிறவர், அட்டகத்தி, மெட்ராஸ் என தமிழ் சினிமாவுக்கு புதிய வெளிச்சம் தந்த இயக்குநர் ரஞ்சித். தயாரிப்பவர் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் எனப் பட்டம் தந்து, பிரமாண்ட கட் அவுட்கள் வைத்து அழகு பார்த்த கலைப்புலி தாணு.

Attakathi Ranjith to direct Superstar Rajini

கலைப்புலி தாணுவின் சினிமா வாழ்க்கை இன்றுதான் முழுமையான அர்த்தம் பெறுகிறது. காரணம், ரஜினியை வைத்து சினிமா தயாரிப்பது அவரது பல ஆண்டு கனவு. எண்பதுகளிலிருந்தே முயற்சித்து வரும் தாணுவுக்கு அந்த கனவு நிறைவேற முப்பத்தைந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்.. ஏன், நாளையே கூட வெளியாகக் கூடும். அதற்கு முன்பே படம் குறித்த தகவல்களை மீடியாவுக்குத் தந்து பரபரப்பை உருவாக்கியவர் முன்னணி பிஆர்ஓ நிகில் முருகன். ஒரு காலத்தில் ரஜினியின் பிஆர்ஓவும் இவர்தான். எந்திரனுக்கும் கூட இவர்தான் பிஆர்ஓ.

அவர் இந்த அறிவிப்பை நிகில் வெளியிட்டதிலிருந்து சமூக வலைத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை அலறிக் கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் தூக்கம் மறந்து தங்கள் 'தலைவர்' படம் குறித்த அவரவர் பார்வைகள், எதிர்ப்பார்ப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் ரஞ்சித்தை நாம் தொடர்பு கொண்டபோது, தகவல்களை நூறு சதவீதம் உறுதி செய்தனர். ஆனால் அறிவிப்பை ரஜினிதான் வெளியிடுவார் என்றனர்.

இந்தப் படம் முடிந்த கையோடு, ஷங்கரின் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார், அந்தப் படத்துக்கு தலைப்பு 'நம்பர் ஒன்' என்பதல்லாம் கூடுதல் தகவல்கள்!

 

அவக எல்லாம் அங்க வராம போனது ஏன் தெரியுமா?

அந்த நட்சத்திர டிவி நிறுவனம், நடத்திய அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு திரையுலக பிரபலங்கள் சொற்ப அளவிலேயே பங்கேற்றனர். காரணம் எல்லாம் பாலிடிக்ஸ்தான் என்று காதை கடிக்கிறது கோலிவுட் பட்சி ஒன்று. தொலைக்காட்சி உரிமைக்காக அதிக படங்களை வாங்காத அந்த டி.வி சேனல், திரையுலகத்தை நம்பி நடத்தும் இந்த நிகழ்ச்சியால் கோடி கோடியாக லாபம். படம் வாங்காதவர்களுக்கு இப்படியொரு மரியாதையா? பொசுக்கென்று செக் வைத்துவிட்டதாம் தயாரிப்பாளர் சங்கம்.

படம் வாங்கினால்தான் நிகழ்ச்சிக்கு திரையுலகம் வரும் என்று கூறிவிட, இது தொடர்பான மீட்டிங்குக்கு வந்த அந்த டிவி சேனலின் சிஇஓ, இதுவே ஆளுங்கட்சி சேனல்னா இப்படி சொல்வீங்களா? என்றாராம். இதனால் ஆளுங்கட்சி கடுப்பாக அது அப்படியே காற்று வாக்கில் வெளியே கசிய, முக்கால்வாசி திரையுலக பிரபலங்கள் அந்த நிகழ்ச்சிக்கே போகாமல் ஆப்சென்ட் ஆகிவிட்டார்களாம். போனவர்களில் சிலரும் உடனே தலையைக்காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்களாம்.

டிவிக்கு முழுக்கு போடும் தொகுப்பாளினி

முருங்கைக்காய் இயக்குநர் வீட்டு மருமகளாகப் போகும் தொகுப்பாளினி விரைவில் சின்னத்திரைக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்படுகிறது. ஆடல் பாடல், இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

நீண்ட நாள் காதலித்த தொகுப்பாளினிக்கு முதலில் மாப்பிள்ளை வீட்டு தரப்பில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. காரணம் மகளை நினைத்துதான் முருங்கைக்காய் இயக்குநர் தடை போட்டார்.

இப்போது கிரீன் சிக்னல் காட்டிவிடவே தன்னுடைய தொகுப்பாளினை வேலையை மூட்டை கட்டிவிடலாம் என்று முடிவு செய்து விட்டாரம். இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போதே சினிமா வாய்ப்புகள் வந்தது. அப்பா அம்மா அனுமதித்தால் சினிமாவில் நடிப்பேன் என்று கூறினார். திடீரென்று திருமணம் நிச்சயமாகவே சின்னத்திரைக்கே டாட்டா காட்ட முடிவு செய்துவிட்டாராம் தொகுப்பாளினி.