பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது! - ரஜினி பாடிய பாட்டு

மாற்றம் ஒன்றே மாறாதது என்று தொடங்கும் கோச்சடையான் பாடல் இது. இந்தப் பாடலின் ஸ்பெஷல், பாடியிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதுதான்.

கோச்சடையான் படத்திலிருந்து வெளியாகும் 5வது பாடல் இது.

பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது! - ரஜினி பாடிய பாட்டு

மாறு.. மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது

சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா உயிரா பெயரா
மூன்றும் இல்லை... செயல்

நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா.. தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்!

 

கேயாருக்கு எதிராக கூட்டம் - கலைப்புலி தாணு அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 7-ந் தேதிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் கேயாருக்கு எதிராக நாங்கள் கூட்டத்தைக் கூட்டுவோம். அதற்கு எந்தத் தடையும் இல்லை, என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். மற்றும் நிர்வாகிகள் சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி அணியான கலைப்புலி எஸ்.தாணு தரப்பினர் அறிவித்திருந்த பொதுக்குழுவைக் கூட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதாகக் கூறினர்.

கேயாருக்கு எதிராக கூட்டம் - கலைப்புலி தாணு அறிவிப்பு

மேலும், 7-ந் தேதிக்குள் பொதுக் குழுவைக் கூட்ட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தாணு கூறுகையில், "2-ந் தேதி நாங்கள் கூட்டுவதாக இருந்த சிறப்பு பேரவைக் கூட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, சில உத்தரவுகளையும் பிறப்பித்தது. அதாவது, ஏப்ரல் 7-ந் தேதிக்குள் தற்போதுள்ள கே.ஆர். தலைமையிலான நிர்வாகிகள் பேரவைக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்.

இதற்காக, சங்க சட்ட விதி 21-ன்படி எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும் அந்த அறிவிப்பில், சங்க நிர்வாக பதவியில் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய பொருள் இருக்க வேண்டும்.

7-ந் தேதிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாவிட்டால், அதன்பின்னர் நாங்கள் சிறப்பு பேரவைக் கூட்டத்தை கூட்ட எங்களுக்கு உரிமையளித்திருக்கிறது நீதிமன்றம்," என்றார்.

 

வரும் தீபாவளி 'தளபதி' தீபாவளி: ஏ.ஆர். முருகதாஸ்

சென்னை: விஜய்யை வைத்து தான் இயக்கி வரும் தீரன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் விஜய், சமந்தா உள்ளிட்டோரை வைத்து தீரன் படத்தை இயக்கி வருகிறார். கொல்கத்தாவில் கடந்த மாதம் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. இதையடுத்து சென்னையில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது.

வரும் தீபாவளி 'தளபதி' தீபாவளி: ஏ.ஆர். முருகதாஸ்

படக்குழு தற்போது ஆந்திராவில் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது. 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்நிலையில் தீரன் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த பொங்கல் தல, தளபதி பொங்கலாக இருந்தது. இதையடுத்து வரும் தீபாவளி தளபதி தீபாவளி ஆக இருக்கப் போகிறது.

தீரன் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகை!

பெங்களூர்: தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் காமாட்சி பாளையாவை சேர்ந்தவர் நடிகை விந்தியா. இவரது நெருங்கிய நண்பர் மஞ்சுநாத். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். விந்தியாவுக்கும், மஞ்சுநாத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகை!

இந்த நிலையில் நேற்று முன்தினம் நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டு நடிகை விந்தியா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் "பவுரிங்"ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயங்கி நிலையில் இருக்கும் விந்தியாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் விந்தியாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், 80 க்கும் அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதால் தான் அவர் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் விந்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் கூறினார்கள்.

 

வெயிட் போட்ட நடிகை: கை நழுவிய 'தல' படம்

சென்னை: உயர்ந்த நடிகை தெலுங்கு படத்திற்காக வெயிட் போட்டுவிட்டதால் தான் 'தல' நடிகரின் அடுத்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

'தல' நடிகர் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக உயர்ந்த நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கில் 2 பெரிய படங்களில் பிசியாக இருப்பதால் 'தல' நடிகரின் படத்திற்கு டேட்ஸ் ஒதுக்க முடியவில்லை என்றும், அதனால் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால் நடிகை தெலுங்கில் தான் நடித்து வரும் சரித்திர படம் ஒன்றுக்காக உடல் எடையை ஏற்றிக் கொண்டிருக்கிறாராம். இதனால் தனக்கு பிடித்த உணவு வகைகளை சக்கை போடு போடிகிறாராம்.

இப்படி அவர் குண்டடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதால் தான் 'தல' படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.