மீண்டும் நடிக்க சோனா முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் நடிக்க சோனா முடிவு

2/21/2011 12:07:30 PM

நடிப்பை விட்டுவிட்டு படத் தயாரிப்பில் ஈடுபட்ட சோனா, மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: படத் தயாரிப்பில் முழுவதுமாக கவனம் செலுத்தலாம் என்று நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். காமெடி வேடமா? என்கிறார்கள். 'குசேலன்' படத்தில் காமெடி வேடத்தில் நடித்தேன். பிறகு எல்லோரும் அப்படியான வேடத்துக்கே கேட்டார்கள். இனி காமெடி, மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன். நடிப்பை வெளிப்படுத்தும் வேடங்களிலேயே நடிப்பேன். 'கனிமொழி' படத்துக்குப் பிறகு படத் தயாரிப்பை விட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. அடுத்து,  பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் 2012 பாக்யராஜ், வெங்கட்பிரபு இயக்கும் படங்களை தயாரிக்கிறேன். இவ்வாறு சோனா கூறினார்.


Source: Dinakaran
 

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

2/21/2011 12:06:03 PM

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். இவரது தெளிவான தமிழ் உச்சரிப்பு ரசிகர்களை ஈர்த்த விஷயங்களில் ஒன்று. மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார். 'டெல்லி டு மெட்ராஸ்' படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனால் அவரை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது, 'பதினாறு வயதினிலே' படத்தில் இடம்பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…' பாடல். பிறகு, 'கோடைகால காற்றே', 'அள்ளித் தந்த பூமி', 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி', 'பொன்மானைத் தேடி நானும்…', 'பூங்காத்து திரும்புமா' உட்பட இவர் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவரது குரல் ரஜினிக்கு பொருத்தமாக இருந்ததால், அவர் படங்களில் அதிகமாக பாடி வந்தார். 85 திரைப்படங்களில் நடித்துள்ள மலேசியா வாசுதேவன், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். ஒரு வாரத்துக்கு முன், அவருக்கு நுரையீரல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். நேற்று நண்பகல் ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமம் கோதண்டபாணி ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்களுடன், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 3 மணிக்கு போரூரில் உடல் தகனம் செய்யப்படுகிறது. மலேசியா வாசுதேவனுக்கு உஷா என்ற மனைவியும், யுகேந்திரன் என்ற மகன், பிரசாந்தினி, பவித்ரா ஆகிய மகள்கள் உள்ளனர்.


Source: Dinakaran
 

நார்வே படவிழாவுக்கு எந்திரன் தேர்வு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நார்வே படவிழாவுக்கு எந்திரன் தேர்வு

2/21/2011 12:08:57 PM

நார்வே நாட்டில் நடக்கும் தமிழ் திரைப்பட விழாவில், சன் பிக்சர்ஸ் தயாரித்து மெகா ஹிட்டான 'எந்திரன்' படம் திரையிடப்படுகிறது. நார்வேயில், கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் தமிழ்த் திரைப்பட விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த வருடம், ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இப்பட விழா நடக்கிறது. இதில் 'எந்திரன்', 'ஆடுகளம்', 'அங்காடி தெரு', 'களவாணி', 'மதராசப் பட்டினம்', 'மைனா', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'யுத்தம் செய்', 'தா', 'பயணம்', 'தென்மேற்கு பருவக்காற்று', 'என் சுவாசம்' உள்ளிட்ட 13 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த படங்களுக்கு 22 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. இதுதவிர 'எங்க வீட்டுப் பிள்ளை', 'கப்பலோட்டிய தமிழன்' ஆகிய படங்களும் திரையிடப்படுகிறது. நார்வே தமிழ் திரைப்பட விழாவின் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் இயக்குனர்கள் சேரன், மிஷ்கின், பிரபு சாலமன், சுசீந்திரன், வசந்தபாலன், சூரிய பிரகாகர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Source: Dinakaran
 

கள்ளச் சிரிப்பழகா என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கள்ளச் சிரிப்பழகா என்ன கதை?

2/21/2011 12:10:09 PM

யூனிபே 2யூ புரொடக்ஷன் சார்பில் பி.ஜெயப்பிரகாஷ் தயாரிக்கும் படம் 'கள்ளச் சிரிப்பழகா'. ஷக்தி, மேக்னா ராஜ், சந்தானம், தம்பி ராமய்யா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.ரவி. இசை, ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள், விவேகா. எழுதி இயக்கும் எஸ்.கே.ஜீவா கூறியதாவது: 75 சதவீதம் காமெடி, 25 சதவீதம் காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக இது உருவாகிறது. எத்தனை பிரச்னைகள் வந்தாலும், சிரித்தபடி சமாளிக்கும் இளைஞனாக ஷக்தி நடிக்கிறார். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால், பின்விளைவுகளை எதிர்பார்க்காமல் செய்வார். கல்லூரியில் அவரும், சந்தானமும் படிக்கிறார்கள். இவர்களின் லூட்டிகள் சொல்லி மாளாது. பல் மருத்துவக் கல்லூரி மாணவியாக வருகிறார், மேக்னா ராஜ். இரு பாடல்கள் மலேசியாவில் படமாகின்றன.


Source: Dinakaran
 

காதலிப்பது உண்மைதான் திருமணம் முடிவாகவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலிப்பது உண்மைதான் திருமணம் முடிவாகவில்லை

2/19/2011 12:45:57 PM

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் காதல் என அடிக்கடி செய்திகள் வெளியாயின. ஆனால், இதை ரீமா மறுத்து வந்தார். இந்நிலையில் காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் ரீமா சென். அவர் கூறியதாவது: எனக்கு திருமணமாகி விட்டது என்பதில் உண்மையில்லை. டெல்லி தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என் நண்பர். கடந்த சில மாதங்களாக நாங்கள் நண்பர்களாகப் பழகி வந்தோம். கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள அவரது ஓட்டலில் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். இதில் எனது நண்பர்களும் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று, என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?' என்று கேட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் உடனே ஒப்புக் கொண்டேன். அடுத்த நிமிடமே, தயாராக வைத்திருந்த வைர மோதிரத்தை அவர் எனக்குப் பரிசளித்தார். இதுதான் நடந்தது. திருமண நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு ரீமா சென் கூறினார். ஷிவ் கரண் சிங்குக்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. அவர் கூறும்போது, 'ரீமாவை ரொம்ப நாட்களாக தெரியும். எங்கள் திருமண நாள் குறித்து இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்வார்கள்' என்றார்.


Source: Dinakaran
 

உலக கோப்பையில் நாக்க முக்க விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உலக கோப்பையில் நாக்க முக்க விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி

2/19/2011 12:50:12 PM

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி துவக்க விழா வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில், 'காதலில் விழுந்தேன்' படத்தில் இடம்பெற்ற 'நாக்க முக்க' பாடலும் இடம்பெற்றது. இதுபற்றி இதன் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் கேட்டபோது கூறியதாவது: உலகமே ஆர்வமாக எதிர்பார்க்கும் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் 'நாக்க முக்க' பாடல் இடம்பெற்றது மகிழ்ச்சியான விஷயம். பொதுவாக குத்துப்பாட்டு என்ற வகையில் சில பாடல்களை புறக்கணிக்கிறார்கள். ஆனால், அந்த வகையில் இடம்பெற்ற 'நாக்க முக்க' பாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். பறை, தப்பட்டை, தாரை போன்ற இசைக்கருவிகளை கொண்டு உருவாக்கப்படும் கிராமிய பாடலுக்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் உலகம் முழுவதும் இருக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் சாட்சியாக இருக்கிறது.


Source: Dinakaran
 

விளம்பரங்களில் நடிப்பது முக்கியம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விளம்பரங்களில் நடிப்பது முக்கியம்

2/19/2011 12:47:59 PM

சமீபகாலமாக அதிகமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார் ஜெனிலியா. இதுபற்றி அவர் கூறியதாவது: விளம்பரப் படங்கள், ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் முக்கியமானது. படங்களில் நடிகர், நடிகைகள் அந்தந்த கேரக்டராக மட்டுமே நடிக்க முடியும். ஆனால் விளம்பரங்களில் மட்டும்தான் இயல்பாக, எப்படி இருக்கிறோமோ அப்படி நடிக்க முடியும். அது மட்டுமில்லாமல் டி.வி விளம்பரங்களில் நடிக்கும்போது, நடிகையாக ரீச் ஆவதை விட, அதிகமான மக்களைச் சென்றடைய முடியும். எப்போதாவது ரசிகர், ரசிகைகளை சந்திக்கும்போது நான் ஏற்கும் வேடங்கள் பற்றி பேசுகிறார்கள். நான் கிளாமராக நடிக்காதது பற்றியும் அவர்களது கேள்வி இருக்கிறது. ஆனால், உடைகளை குறைத்தால் அதிகமாக ரீக் ஆக முடியும் என்று நம்பவில்லை. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நான் நடித்துள்ள 'உருமி' படம் முடிந்துவிட்டது. இதில் என் கேரக்டர் பேசப்படும் விதமாக இருக்கும்.


Source: Dinakaran
 

நகுல்,சாந்தனு நடிக்கும் நண்பா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நகுல், சாந்தனு நடிக்கும் நண்பா

2/19/2011 12:51:22 PM

முத்து மூவிஸ் வழங்க, அங்கை சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் டி.ஜீவகன் தயாரிக்கும் படம், 'நண்பா'. நகுல், சாந்தனு ஹீரோக்கள். நிகிஷா படேல் ஹீரோயின். மற்றும் ஜெயப்பிரகாஷ், சுஜா, சுப்பு பஞ்சு உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, ராம் குணசேகரன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். அவர் கூறுகையில், 'நெருங்கிய நண்பர்களாக நகுல், சாந்தனு நடிக்கின்றனர். நட்புக்கு நடுவே ஒருவரை ஒருவர் சார்ந்த குணாதிசயங்கள் வலுவாக விளையாட, அடுத்து என்ன நடக்கிறது என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது. பிஜி தீவுகளில் இதன் ஷுட்டிங் நடக்கிறது' என்றார்.


Source: Dinakaran