விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்: ரஜினிகாந்த்


சென்னை: நான் நலம் அடைய ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி அந்த நாட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டுள்ள ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு, பேனா, பேப்பர் எடுத்து எழுதும் போது வார்த்தைகள் வரவில்லை. எனக்கு, தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்ய, எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞர் அவர்களுடன் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்.

முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள். காசை மேலே தூக்கிப் போடுவதான் மனிதனுடைய வேலை.

பூவாக விழுவதா, தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க…. இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.

ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள். நான் இப்பொழுது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம். என்னை ஒரு அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்து எனக்கு செய்த பூஜைகள் தான் காரணம்.

ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இனிமேல், உங்களை மகிழ வைப்பது தான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில், ராணாவில் உங்களை மகிழ வைக்க தோன்றுகிறேன். நான் உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளர்.

 

அருண் விஜய்யின் 'மானப் பிரச்சனை'-பிராச்சி தேசாய்க்கு நோட்டீஸ்!!


பிராச்சி தேசாய் விவகாரம் கிட்டத்தட்ட மானப் பிரச்சினையாகிவிட்டது நடிகர் அருண் விஜய்க்கு.

'அதிலும் அருண் விஜய் 'ராசி' காரணமாகத்தான் பிய்ச்சிக்கிட்டு ஓடிட்டார்' என மீடியாவில் செய்தி பரவ, உடனடியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அருண்.

தடையற தாக்க என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்புக்காக சென்னை வந்த அவர் ஒருநாள் தங்கி இருந்தார். மறுநாள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு மும்பை பறந்து விட்டாராம்.

இதனால் படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளரும், இயக்குனரும் பலதடவை அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. நேரில் சென்றும் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து பிராச்சி தேசாய்க்கு அருண்விஜய் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

படத்தில் நடிக்காததற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அருண்விஜய் கூறும்போது, பிராச்சி தேசாயால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போட்ட செட்களை எல்லாம் கலைத்தோம் (வேறு நடிகையை வைத்து எடுப்பதுதானே... இதற்காக ஏன் செட்களைக் கலைத்தார்?!). இதர நடிகர், நடிகைகளின் கால்ஷீட்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நஷ்டத்துக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்," என்றார்.
 

மக்கள் இயக்கம் துவங்கும் சூர்யா!!


விரைவில் மக்கள் இயக்கம் துவங்குவேன் என நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். தனது அறக்கட்டளை சார்பில் நடந்த கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார்.

பிலிம் சேம்பரில் நடந்த இந்த விழாவில் அவர் பேசுகையில், "சமூக சேவை பணிகள் செய்வதற்கு என் தந்தை சிவகுமார் தூண்டு கோலாக உள்ளார். 32 வருடங்களாக ஏழைகளுக்கு அவர் உதவிகள் வழங்கி வருகிறார். 25 வருடங்களுக்கு முன்பு அப்பொறுப்பை நான் ஏற்றேன்.

எதிர்காலத்தில் இது மேலும் விரிவுபடுத்தப்படும். அடித் தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முடிந்த பணிகளை செய்வோம்.

எங்கள் அறக்கட்டளை மூலம் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் சமூகத்தை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ள தேவையான பயிற்சிகளையும் நிபுணர்கள் உதவியோடு செய்து வருகிறது.

இதை எதிர்காலத்தில் தன்னார்வலர்களின் உதவியோடு மக்கள் இயக்கமாக மாற்றும் எண்ணமிருக்கிறது," என்றார்.

ஏற்கெனவே நிதி உதவி என்று ஆரம்பித்து, இப்போது மக்கள் இயக்கம், அடுத்து அரசியல் இயக்கம் என்று வந்து நிற்கிறார் நடிகர் விஜய். இப்போது கிட்டத்தட்ட இதே பாணியில் மக்கள் இயக்கம் துவங்கத் தயாராகிவருகிறார் சூர்யா.
 

விஜய் படத் தயாரிப்பாளருக்கு ரூ 5 லட்சம் அபராதம்!


சென்னை: நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் ஹிட் என்ற பூச்சி மருந்தை தவறாக சித்தரித்ததால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரேஜ் சாரா லீ என்ற நிறுவனம், ஹிட் என்ற பூச்சி மருந்தை தயாரிக்கிறது. இது கொசு, கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்காக தயாரிக்கப்படுவது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் டித்து பேரரசு இயக்கிய திருப்பாச்சி படம் 2005-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து சில நாட்களில் சூப்பர் குட் பிலிம்ஸ் மீது கோத்ரேஜ் சாரா லீ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், "கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றை தடுப்பதற்காக ஹிட் மருந்தை நாங்கள் தயாரிக்கிறோம். இந்த நிலையில் `திருப்பாச்சி' படத்தை பார்த்தோம். அதில் இந்த பூச்சி மருந்தைப் பற்றி 2 காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் அதிர்ச்சி அளித்தன.

கர்ப்பிணியைக் கூட கொல்லும்...

ஒரு காட்சியில், 'இந்த மருந்து, கருவில் உள்ள குழந்தையைக் கூட கொல்லும்' என்று ஒரு கர்ப்பிணியிடம் ஒருவர் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு காட்சியில், வில்லனின் வாயில் ஹிட் மருந்தை அடித்து அவரை ஹீரோ கொலை செய்வதுபோல் காட்டப்படுகிறது. இப்படி இந்த மருந்தை சித்தரித்திருப்பது தவறானது.

ரூ.25 லட்சம் நஷ்டஈடு

மனித உயிர்களுக்கு இந்த மருந்தால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் `திருப்பாச்சி' படத்தில் விதாண்டாவாதமாக கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.

எனவே இந்த மருந்தை பற்றி 'திருப்பாச்சி' படத்தில் வரும் காட்சிகளை தியேட்டரிலோ, சி.டி.களிலோ, டி.வி.களிலோ, கேபிள்களிலோ ஒளிபரப்பப் தடை விதிக்க வேண்டும். இந்த காட்சிகளால் மருந்து வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புக்கான நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் தர சூப்பர் குட் பிலிம்ஸ்-க்கு உத்தரவிட வேண்டும்.

இது போன்ற காட்சிகளை வேறு யாரும் பின்பற்றக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இடைக்கால உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பழனிவேல் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு விசாரணையின் போது அந்த காட்சிகளுக்கு ஏற்கனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் சில தியேட்டர்களில் மட்டும் அந்த காட்சியை நீக்கி படத்தை திரையிட்டனர். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் அந்த காட்சி நீக்கப்படாமல் திரையிடப்பட்டது.

ரூ.5 லட்சம் கொடுங்கள்

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து அந்த காட்சிகளை காட்டியது, மனுதாரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாய் அமைந்திருந்தது. எனவே மனுதாரருக்கு நஷ்டஈடாக ரூ.5 லட்சத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் வழங்க வேண்டும்.

மனுதாரரின் தயாரிப்பான இந்த மருந்துக்கு, மத்திய அரசின் தரச்சான்று தரப்பட்டுள்ளது. மனித உயிருக்கு பாதுகாப்பானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் காட்சிகள், அந்த மருந்தின் புகழை கெடுப்பதுபோல் அமைந்து விட்டது.," என்று கூறப்பட்டுள்ளது.
 

இரண்டாவது மகாத்மா மண்டேலாவா... மகிந்தாவா? - பாலாவின் கிண்டல்


சமூக அவலங்களையும், இன உணர்வையும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பதிவு செய்வது ஒரு பிரச்சாரகரின் பாணி. அதையே வெகு நாசூக்காக பதிவு செய்வது படைப்பாளியின் ஸ்டைல்.

உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில்.

டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்:

"உலகில் இரண்டாம் மகாத்மா எனப்படுவர்... அ) நெல்சன் மண்டேலா ஆ) மகிந்தா ராஜபக்சே" என்று கூறிவிட்டு, எது சரியான விடை என்று கேட்பார்.

மாணவர்கள் சற்று நேரம் யோசித்துவிட்டு, அ) நெல்சன் மண்டேலா என்பார்கள்.

உடனே அந்த ஆசிரியர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, "ஏசப்பா... கோடானுகோடி நன்றிகள் ஏசப்பா... கோடானு கோடி நன்றிகள்", என்பார். கொஞ்சம் விட்டால், மகிந்தாவையும் மகாத்மாவுக்கும் முயற்சி நடப்பதை இத்தனை நாசூக்காக பாலாவால் மட்டும்தான் சொல்ல முடியும்.

அவன் இவன் படம் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் மவுனித்து, ஆர்ப்பரித்த காட்சிகளில் இதுவும் ஒன்று.
 

காதல் கதைகள்தான் எடுபடும் : டி.ராஜேந்தர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் கதைகள்தான் எடுபடும் : டி.ராஜேந்தர்

6/18/2011 10:39:18 AM

'சென்டிமென்ட் கதைகள் எடுபடாது. இனி, காதல் கதைகள்தான் ஹிட்டாகும்' என்று டி.ராஜேந்தர் பேசினார். ஏ.ஜி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர்.குணசேகரன், கே.என்.ஆதிநாராயணன் தயாரிக்கும் படம், 'டூ'. சஞ்சய் ஹீரோ. சுமித்ரா மகள் நட்சத்திரா ஹீரோயின். ஒளிப்பதிவு, சி.ஆர்.மாறவர்மன். இசை, அபிஷேக்-லாரன்ஸ். பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, ஜி.குமார். ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். இப்படத்தின் பாடலை வெளியிட்டு, டி.ராஜேந்தர் பேசியதாவது: நான் கோடியை நம்பி படம் எடுக்க வந்தவன் அல்ல. தாடியை நம்பி படம் எடுத்தவன். 'ஒருதலை ராகம்' படத்துக்கு 108 பாட்டுகள் போட்டேன். ஒரு பாடலில் 9 குரல்கள் தேவைப்பட்டது. நானே குரல் மாற்றி பாடினேன். யாருக்காவது அது தெரியுமா? 10 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட அப்படம், 15 கோடி வரை வசூல் செய்தது. 'ரயில் பயணங்களில்' படத்தை 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் எடுத்தேன். அது, அப்போதைய ரஜினி படத்தின் கலெக்ஷனை தாண்டி வசூல் செய்தது. 'நெஞ்சில் ஒரு ராகம்' படத்தையும் குறைந்த செலவில் உருவாக்கினோம்.

இப்போது சினிமாவின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அப்போது என் படங்களுக்கு பிரமாண்ட செட்கள் போட்டேன். 500 கார்பென்டர்கள் பணியாற்றினார்கள். இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. கோடம்பாக்கத்தில் இருந்த சினிமா, இப்போது தேனிக்கும், ஆண்டிப்பட்டிக்கும் சென்றுவிட்டது. தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறியதற்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சின்சியாரிட்டியும், கடின உழைப்பும் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே படம் வெற்றிபெறும்.
இதற்கு 'களவாணி', 'மைனா' படங்களை உதாரணம் சொல்லலாம். இப்போது வயதானவர்களும், பெண்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது இல்லை. இந்நிலையில் 'என் தங்கை கல்யாணி'யையோ, 'தங்கைக்கோர் கீதம்' படத்தையோ என்னால் தர முடியாது.

தியேட்டருக்கு வரும் இளைஞர்களின் மனதைக் கவர வேண்டும் என்றால், காதலை நக்கலாகவும், லொள்ளாகவும் சொல்லும் படத்தை தர வேண்டும். இப்போது நான் இயக்கும் 'ஒருதலைக் காதல்', இளைஞர்களுக்கான காதல் கதையாக உருவாகிறது. இனி, சென்டிமென்ட் கதைகளை படமாக்க மாட்டேன். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார். விழாவில் கே.ஆர்.ஜி., ஆர்.பி.சவுத்ரி, கேயார், பட்டியல் சேகர், ஆர்.கே.செல்வமணி, வசந்த், தனஞ்செயன், சுமித்ரா, கிருஷ்ணா, சோனியா அகர்வால், சற்குணம், யுகபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

என் நடிப்பை கண்டு வியப்பார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என் நடிப்பை கண்டு வியப்பார்கள்

6/18/2011 10:34:38 AM

தீபா மேத்தா இயக்கும், 'மிட்நைட் சில்ரன்' படத்தில் என் நடிப்பை கண்டு எல்லாரும் வியப்பார்கள் என்றார் ஸ்ரேயா. சல்மான் ருஷ்டியின் 'மிட்நைட் சில்ரன்' நாவலை படமாக இயக்குகிறார் தீபா மேத்தா. இந்த ஆங்கிலப் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியதாவது: இந்த படத்தில் குடிசைப் பகுதிப் பெண்ணாக நடித்துள்ளேன். என் உடை, மேனரிசம் நடிப்பு எல்லாமே இதுவரை பார்த்திராததாக இருக்கும். வழக்கமாக கிளாமர் ஸ்ரேயாவைதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதில் என் நடிப்பை பார்த்துக் கண்டிப்பாக வியப்பார்கள். என்னாலும் கேரக்டராக மாறி நடிக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் உதாரணமாக இருக்கும். எந்த படத்தில் நடித்தாலும் அதில் நூறு சதவிகித உழைப்பை கொடுக்கிறேன். ஆனால், என்ன கேரக்டர் வருகிறது என்பதை பொறுத்துதான் நடிப்பு பேசப்படும். தமிழில் சிறந்த இயக்குனர்களோடு பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க ஆவலாக உள்ளேன். அதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

 

நான் அதிர்ஷ்டக்காரி : அசின்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நான் அதிர்ஷ்டக்காரி : அசின்!

6/18/2011 10:27:25 AM

சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கிற வாய்ப்புகளும் இடமும் நான் அதிர்ஷ்டக்காரி என்பதையே காட்டுகிறது என அசின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அமீர்கானுடன் இந்தியில் அறிமுகமானேன். அடுத்து சல்மான் கானுடன் நடித்தேன். இப்போது அக்ஷய் குமாருடன் நடிக்க இருக்கிறேன். இதையடுத்து ஷாரூக் கானுடன் நடிக்க உள்ளேன். இந்தி பட உலகின் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு, திறமைக்கானது. திறமை, ஒழுக்கம் இருந்தாலும் சினிமாவில் இன்னொன்றும் தேவைப்படுகிறது. அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். அல்லது நம்மை சுற்றி இருக்கிற நல்லவர்களின் ஆசி என எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன். அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரி. இவ்வாறு அசின் கூறினார்.

 

காதலுக்காக மல்லுக்கட்டும் ஹீரோ!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலுக்காக மல்லுக்கட்டும் ஹீரோ!

6/18/2011 10:29:21 AM

தி பிலிம் கம்பெனி சார்பில் டி.டி.பிரதாபன், எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம், 'மல்லுக்கட்டு'. தனுஷின் சித்தப்பா மகன் வருண் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜோடி, ஹனிரோஸ். மற்றும் பரத் ரெட்டி, சபேஷ் கார்த்திக், செவ்வாழை, சாதிகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சி.பிரேம்குமார். இசை, தாஜ்நூர். பாடல்கள்: வாலி, கபிலன், சினேகன், ஆண்டாள் பிரியதர்ஷினி. த.முருகானந்தம் இயக்குகிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை, அடையாளங்களை பதிய வைக்கவும் மற்றும் எண்ணங்களை, லட்சியங்களை செயல்படுத்தவும் கடுமையாகப் போராடுகின்றனர். போராட்டம் என்பதன் இன்னொரு அர்த்தம், மல்லுக்கட்டு. காதலுக்காக, அதனுடைய வெற்றிக்காகப் போராடும் இளைஞனின் கதையாக இப்படம் உருவாகிறது.

 

கன்னட மைனாவில் சனுஷா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கன்னட மைனாவில் சனுஷா

6/18/2011 10:25:00 AM

பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த், அமலா பால் நடித்த படம் 'மைனா'. தமிழில் ஹிட்டான இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. கே.மஞ்சு தயாரிக்கும் இந்தப் படத்தை எஸ்.நாராயண் இயக்குகிறார். கணேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அமலா பால் நடிப்பதாக இருந்தது. இப்போது அவருக்கு பதில் 'ரேனிகுண்டா' சனுஷா நடிக்கிறார். அமலா பால் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கன்னடத்தில் 'ஷைலு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், வரும் 24-ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

 

180ல் போர்ச்சுக்கீசிய பாடல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

180ல் போர்ச்சுக்கீசிய பாடல்

6/18/2011 10:26:15 AM

சித்தார்த், பிரியா ஆனந்த், நித்யா மேனன் நடிக்கும் '180' படத்தில் போர்ச்சுக்கீசிய பாடல் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குனர் ஜெயேந்திரா கூறியதாவது: படத்தின் கதை ஒரு பகுதி பிரேசிலில் நடக்கிறது. அங்கு ஹீரோ பிரேசில் இளைஞர்களோடு உற்சாகமாக ஆடிப்பாடுவது மாதிரியான காட்சி வருகிறது. இதில் புதிய முயற்சியாக அந்நாட்டு மொழியில் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். பிரேசில் நாட்டு மக்கள் போர்ச்சுக்கீசிய மொழி பேசுவதால் அந்த மொழியில் பாடல் அமைக்க முடிவு செய்தோம். பாடலாசிரியர் கார்க்கி கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் பாடலை எழுதினார். எலியப் டி ப்ரைட்டாஸ் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடல் 5 நிமிடங்கள் இடம்பெறுகிறது.

 

நடிகை ஸ்வேதா மேனன் திருமணம்: காதலரை இன்று மணக்கிறார்!


பிரபல திரைப்பட நடிகை ஸ்வேதா மேனன்- ஸ்ரீவத்சன் மேனன் காதல் திருமணம், திருச்சூர் வளாஞ்சேரியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சுவேதா மேனன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். இவர் நடித்த ரதி நிர்வேதம் என்ற புதிய மலையாள திரைப்படம் கேரளாவில் சக்கைப் போடு போடுகிறது.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கும், மும்பையில், ஒரு வார இதழில் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிவரும் ஸ்ரீவத்சன் மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

அதன்படி, இன்று, வளாஞ்சேரி வடக்கும்புறத்தில் உள்ள இந்திரா சதன் என்ற வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் ஸ்ரீவத்சன் மேனன், நடிகை ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டுகிறார்.

மணமகன் ஸ்ரீவத்சனும், நடிகை சுவேதா மேனனும், பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் திருமணம் பற்றி சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ஸ்வேதா, யாருடன் திருமணம் என்பதை இரண்டு ஆண்டு கழித்துதான் முடிவு செய்வேன் என்று கூறி வந்தது நினைவிருக்கலாம்!

 

அவதூறு வழக்கு: மோகன் லாலுக்கு ஜாமீன்


திருச்சூர்: எழுத்தாளரை அவதூறாகப் பேசினார் என தொடரப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருநபர் ஜாமீன் பெற்றார்.

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் கடந்த ஆண்டு மூத்த நடிகர் திலகனை சங்கத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

மிகவும் பரபரப்பான இந்த சர்ச்சையில், நடிகர் திலகனுக்கு ஆதரவாக பிரபல எழுத்தாளர் சுகுமார் அழிகோடு செயல்பட்டார். அப்போது சுகுமார் அழிக்கோடை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவதூறாக விமர்சித்ததாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து மோகன்லால் மீது சுகுமார் அழிக்கோடு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி மோகன்லால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று திருச்சூர் தலைமை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு பி.எஸ்.அந்தோணி உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால், முன்னதாகவே மோகன்லால் நேற்று கோர்ட்டில் ஆஜராகி, 22-ந் தேதி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், தனக்கு ஜாமீன் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

 

அவன் இவன்... திரண்டு வந்த நட்சத்திரங்கள்!


பெரும் எதிப்பார்ப்புக்கிடையே நேற்று வெளியான பாலாவின் அவன் இவன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு திரண்டு வந்தனர் திரையுலகினர்.

பொதுவாக இம்மாதிரி சிறப்புக் காட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்குத்தான் பெரிய அளவில் நடக்கும்.

ஆனால் பாலா என்ற படைப்பாளிக்காக மட்டுமே, ரஜினி படத்துக்கு இணையான முக்கியத்துவம் அவன் இவனுக்குத் தரப்பட்டது. சென்னை ஏஜிஎஸ் மல்டிப்ளெக்ஸில் நடந்த இந்தப் படத்தின் பிரிமியர் ஷோவில், ஒட்டுமொத்த சினிமா உலகமே பங்கேற்றது என்றால் மிகையல்ல.

இயக்குநர் பாலா, கல்பாத்தி எஸ் அகோரம், அவன் இவன் நாயகிகள் மதுஷாலினி, ஜனனி, இயக்குநர்கள் வெற்றி மாறன், ராஜேஷ், ஹரி, சசி, மனோபாலா, பாண்டியராஜன், ‘எத்தன்’ சுரேஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஜெயம் ரவி, பிரசன்னா, சினேகா, விவேக், பரத், திஷா பாண்டே, விதார்த், நாசர், சரண்யா பொன்வண்ணன், கவிஞர் நா முத்துக்குமார், அருண்விஜய் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.

அனைவரையும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம் வரவேற்றார்.

 

திமுக ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும் - கேயார்


சென்னை: திமுக ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும், என்று பட அதிபர் கேயார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ஒரு பட விழாவில் பங்கேற்ற கேயார் பேசுகையில், “தமிழ்பட உலகில், 200-க்கும் மேற்பட்ட படங்கள் தயாராகி, திரைக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. மேலும் 200 படங்கள் தயாராகி முடிவடையும் நிலையில் உள்ளன.

உற்பத்தியாளர்கள் பெருகி இருக்கிறார்கள். நுகர்வோர் குறைந்து விட்டார்கள். அதாவது பட தயாரிப்பாளர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். படங்களை திரையிடும் தியேட்டர்கள் குறைந்து விட்டன.

தமிழ்நாட்டில் முன்பு 2,800 தியேட்டர்கள் இருந்தன. இப்போது, 1,200 தியேட்டர்கள்தான் உள்ளன. மொழி மாற்று படங்களின் ஆதிக்கம் காரணமாக அசல் தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

சிறு தியேட்டர்கள்…

சினிமா தியேட்டர்களுக்கு ‘லைசென்சு’ கொடுக்கும் முறையை எளிமைப்படுத்தினால், 100 பேர் அல்லது 150 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய தியேட்டர்கள் பெருகும். ‘கார் பார்க்கிங்’ வசதி உள்ள கட்டிடங்களில் எல்லாம் தியேட்டர்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே தியேட்டர்களுக்கு எளிமையான முறையில் ‘லைசென்சு’ கிடைக்க அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும். அப்படி செய்தால், தமிழ்நாட்டில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் தியேட்டர்கள் வரை உருவாகும்.

மீண்டும் திரைப்பட நகரம்

கடந்த ஆட்சியில் மூடப்பட்ட திரைப்பட நகரை மீண்டும் உருவாக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் முதலீடு செய்ய தேவையில்லை. முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் அரசாங்கத்துக்கும் வருமானம் வரும். தனியார் நிறுவனங்களுக்கும் வருமானம் வரும்,” என்றார்.