நல்ல நேரம் வந்தது... புதுப்பட வேலையில் மும்முரம் காட்டும் சூப்பர் ஸ்டார்!

நேரம், காலம், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்ட ரஜினி, தனக்கான நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து, இப்போது பட வேலைகளில் மும்முரமாகியுள்ளார்.

பாபா படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்தார் ரஜினி. காரணம் கேட்டபோது, நேரம் சரியாக இல்லேன்னா என்ன பண்ணாலும் ஒன்றும் நடக்காது என்று அவர் கூறியது நினைவிருக்கலாம்.

நல்ல நேரம் வந்தது... புதுப்பட வேலையில் மும்முரம் காட்டும் சூப்பர் ஸ்டார்!

இந்த முறை ராணா படத் தொடக்கவிழாவன்றே உடல் நலம் குன்றிய ரஜினி, பின்னர் உடல்நிலை சரியாகி வந்து கோச்சடையானில் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாவது குறித்து இன்னும் உறுதியாக எதுவும் தெரியவில்லை.

இப்போது ஜாதகப்படி ரஜினிக்கு சாதகமாக உள்ளதாம் நேரம். எனவே புதிய படத்துக்கான வேலைகளை சத்தமின்றி ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் என்று கேவி ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர் என பல யூகங்கள். கடையில் வென்றவர், லிஸ்டில் கடைசியாக இருந்த ஷங்கர்தானாம்!

 

மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா!

மலையாளத்தில் இரு புதிய படங்களில் நடிக்கும் ஆன்ட்ரியா, இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம்.

கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா.

மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா!

இப்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறாராம்.

மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா!

இதுகுறித்து ஆன்ட்ரியா கூறுகையில், "என்றென்றும் புன்னகை படத்தில் எனக்கு நல்ல வேடம். பாராட்டுகள் குவிகிறது. மேலும் சில படங்களில் வலுவான கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்.

சினிமாவுக்கு வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது சரியல்ல. அதே நேரம் ஆபாசமாக நடிக்கமாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா!  

கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் கூட எனக்குப் பிரச்சினை இல்லை. ஏற்றுக் கொள்வேன்," என்றார்.

 

யாஷ்ராஜ் பிலிம்ஸின் முதல் தமிழ்ப் படம் - ஆஹா கல்யாணம்!

பாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் முதன் முதலாக தமிழ்ப் படம் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு ஆஹா கல்யாணம் என்று தலைப்பிட்டுள்ளனர்.

யாஷ்ராஜ் பிலிம்ஸின் முதல் தமிழ்ப் படம் - ஆஹா கல்யாணம்!

மறைந்த பாலிவுட் ஜாம்பவான் யாஷ் சோப்ராவால் உருவாக்கப்பட்டது யாஷ்ராஜ் பிலிம்ஸ். பல வெற்றிப் படங்களை இந்தியில் தயாரித்துள்ள நிறுவனம் இது.

முதல் முறையாக இப்போது தமிழிப் படம் தயாரிக்கிறார்கள். தங்களின் வெற்றிப் படமான பாண்ட் பஜா பாரத் படத்தை தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

நான் ஈ புகழ் நானியும், வாணி குப்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான யாஷ் ராஜ் பிலிம்ஸின் பிரமாண்ட தயாரிப்பான தூம் 3-யுடன் இந்த ஆஹா கல்யாணம் பட ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

 

பிரியாணி - விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு: கார்த்தி, பிரேம்ஜி, ஹன்சிகா, சம்பத், ராம்கி, மான்டி தக்கர்

ஒளிப்பதிவு: சக்தி சரவணன்

இசை: யுவன் சங்கர் ராஜா

மக்கள் தொடர்பு: ஜான்சன்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: வெங்கட் பிரபு

கதை இருக்கிறதோ இல்லையோ.. பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் இழுத்துப் பிடித்து உட்கார வைப்பதில் கில்லாடி வெங்கட் பிரபு.

ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குரிய அத்தனை மசாலாக்களையும் இந்தப் படத்திலும் சரியாகச் சேர்க்க முயன்றிருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

பிரியாணி - விமர்சனம்

முதல் பாதியை மட்டும் இன்றும் விறுவிறுப்பாக்கியிருந்தால், பிரியாணி இன்னும் சுவையாக வந்திருக்கும்.

சரக்கை மெயின் டிஷ்ஷாகவும், பிரியாணியை சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடும் பார்ட்டி கார்த்தி. பெண் பித்தர். அவரது இணை பிரியாத நண்பன் பிரேம்ஜி.

ஒரு நாள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஷோரூம் திறக்க ஆம்பூர் போகிறார்கள். இரவு நேரமாகிவிடுகிறது. ஆனாலும் ஆம்பூருக்கு வந்து பிரியாணி சாப்பிடாமல் போவதா என பிரியாணி கடை தேடுகிறார்கள். ஒரு இடத்தில் நிறுத்தி சாப்பிடும் போது, மாண்டி தக்கரைப் பார்க்கிறார்கள். அவரது அழைப்பின்பேரில் எல்லோரும் சேர்ந்து சரக்கடிக்க ஓட்டலுக்குப் போகிறார்கள். விடிய விடிய குடி. காலையில் கண்விழித்தால் கார்த்தி மட்டும் எங்கோ அத்துவான காட்டில் நிற்கிறார். பிரேம்ஜி இல்லை. அவரைத் தேடி மீண்டும் ஓட்டலுக்குப் போகிறார். போதை தெளியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பிரேம்ஜியை அழைத்துக் கொண்டு வெளியேறும்போது, போலீஸ் பிடிக்கிறது இருவரையும்.

பிரியாணி - விமர்சனம்

வரதராஜன் என்ற பிரபல தொழிலதிபரை கடத்தியதாக கைது செய்கிறார்கள். போலீசை அடித்து துவைத்து தப்பிக்கிறார்கள் கார்த்தியும் பிரேம்ஜியும். காரில் ஏறித் தப்பித்த பிறகு, ஒரு இடத்தில் நிறுத்திப் பார்த்தால் கார் டிக்கியில் வரதராஜன் பிணம்.

மீண்டும் போலீஸ் துரத்தல், இருவரும் ஓட ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் எப்படி இந்த கொலைப்பழியிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பது செம விறுவிறுப்பு ப்ளஸ் புத்திசாலித்தனமான க்ளைமாக்ஸ்.

இந்தப் படத்தில் தன் வேடம் என்னவோ அதை உணர்ந்து அந்த அளவுக்கு மட்டும் நடிப்பைத் தந்திருக்கிறார் கார்த்தி. குறிப்பாக அவரது முக பாவங்கள், உடல் மொழி இந்தப் படத்தில் சிறப்பாக உள்ளது. காதலியிடம் தன்னை நல்லவனாகக் காட்ட பிரேம்ஜியை மாட்டிவிடும் காட்சிகளில் சிரிப்பலைகள்.

பிரியாணி - விமர்சனம்

இன்னொரு ஹீரோவாக பிரேம்ஜி. வெங்கட் பிரபுவைத் தவிர, இவரை யாராலும் இத்தனை சரியாக பயன்படுத்த முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார். முந்தைய படங்களைப் போல, எந்த பஞ்ச் வசனமும் இல்லை.. ஆனாலும் அப்பாவியாக சிக்கலில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் இயல்பாக செய்திருக்கிறார். நண்பனுக்காக எதையும் சந்திக்க தயாராகும் போது, தன்னாலும் உருக்கமாக நடிக்க முடியும் என்று காட்டுகிறார்.

ஹன்சிகாவை ஏன் இப்படி வீணடித்தார் வெங்கட் பிரபு என்று தெரியவில்லை. அதேபோல ஜெயப்பிரகாஷ்.

பிரியாணி - விமர்சனம்

ஆனால் ராம்கியும், ஹிட் வுமனாக வரும் உமா ரியாசும் கவர்கிறார்கள். மான்டி தக்கர் கவர்ச்சியின் எல்லைக்கே போயிருக்கிறார். நாசர், பிரேம், சம்பத் தங்கள் வேலையைச் சிறப்பாக செய்துள்ளனர்.

ஒரு காட்சியில் வரும் ஜெய்க்கு வெங்கட் பிரபு தந்திருக்கும் அறிமுகம் இருக்கே... சிரிப்புச் சத்தத்தில் தியேட்டர் அதிர்கிறது!

ஒரு த்ரில்லர் என்றால், அந்த சஸ்பென்ஸ் முடிச்சு கடைசி காட்சிக்கு முந்திய காட்சி வரை அவிழக்கூடாது என்பதை இந்தப் படத்தில் அருமையாகக் காட்டியுள்ளார் வெங்கட்பிரபு. படத்தில் உள்ள மைனஸ்களை மறக்கடிப்பது அவரது இந்த புத்திசாலித்தனம்தான்.

பிரியாணி - விமர்சனம்

யுவனின் பின்னணி இசை படத்துக்கு பலம். அந்த மிஸிஸிப்பி பாடலில் கலக்கியிருக்கிறார். சக்தி சரவணன் கேமரா சேஸிங் காட்சிகளில் பரபரக்கிறது.

படத்தின் மைனஸ் முதல் பாதி... சதா சரக்கு, பெண்கள் என்று ஒரேமாதிரி காட்சிகள். குடியை குடும்பத்தின் கட்டாயப் பழக்கமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் ஈடுகட்டுகிறது இரண்டாம் பாதி. அதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்!

 

நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை- த்ரிஷா

நடிக்க வந்து பத்துப் பதினோரு ஆண்டுகள் கடந்த பிறகும் தினசரி செய்திகளில் வரும் நாயகியாகத் திகழ்கிறார் த்ரிஷா.

முன்பெல்லாம் தினமும் த்ரிஷாவுக்கு கல்யாணம் என்று செய்தி வந்து கொண்டிருந்தது.

இப்போது மீண்டும் அவர் பரபரப்பாக புதுப்படங்களில் ஒப்பந்தமாகும் செய்திகள் வருகின்றன.

நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை- த்ரிஷா

தமிழில் நேற்றுதான் அவர் நடித்த என்றென்றும் புன்னகை படம் வெளியானது. படம் குறித்து நல்ல விதமான பேச்சுகள் உலா வருவதால், மீண்டும் த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

என்றென்றும் புன்னகை படம் குறித்து த்ரிஷா கூறுகையில், "நான் நடித்த எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள். என்றென்றும் புன்னகை படம் ‘ஸ்பெஷல்' ஆன ஒன்று. இதில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி எளிமையான கேரக்டரில் நடித்துள்ளேன். வலுவான வேடத்தில் வருகிறேன். என் பாத்திரத்தை இயக்குநர் அகமது சிறப்பாக கொண்டு வந்துள்ளார். காமெடி படங்களில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது. அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.

நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பும் ஜாலியாக இருந்தது," என்றார்.

திருமணம் குறித்து பேசுகையில், "நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். வாழ்க்கையை முக்கியமான ஒருவருடன் பகிர்ந்து கொள்வது இனிமையானது. ஆனால் எப்போது என்று தெரியவில்லை. நேரம் வரும்போது செய்து கொள்வேன்," என்றார்.

 

இந்த பொண்ணு என்னையவே இப்படி கலாய்க்குதே: சந்தானம்

சென்னை: ஊரை எல்லாம் நான் கலாய்க்கிறேன் இந்த பொண்ணு நம்மை போன் போட்டு கலாய்க்கிறதே என்கிறாராம் சந்தானம்.

சந்தானம் படங்களில் மட்டுமின்றி படப்பிடிப்புகளிலும் பிறரை கலாய்த்து வருகிறார். ராஜாராணி படப்பிடிப்பின்போது ஆர்யா, நயன்தாரா, சந்தானம் பேசிக் கொண்டிருப்பார்களாம். அப்போது சந்தானத்திற்கும், நயனுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டதாம். சந்தானத்துடன் பேசிப் பேசி நயனும் கலாய்க்கத் துவங்கிவிட்டாராம்.

இந்த பொண்ணு என்னையவே இப்படி கலாய்க்குதே: சந்தானம்

படப்பிடிப்பில் கலாய்த்ததோடு மட்டுமில்லாமல் சந்தானத்தை நயன் தொடர்ந்து கலாய்த்து வருகிறாராம். நேரம் போகவில்லை என்றால் நயன்தாரா உடனே சந்தானத்திற்கு போன் போட்டு கலாய்க்கிறாராம்.

இதனால் ஊரில் உள்ளவர்களை எல்லாம் நான் கலாய்க்கிறேன் இந்த பொண்ணு நம்மை இப்படி கலாய்க்கிறதே என்று சந்தானம் கூறுகிறாரம்.

 

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக சல்மான்கான் மீது புது வழக்கு

ஹைதராபாத்: இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி சல்மான்கான் மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கும், வழக்குகளுக்கும் அப்படி ஒரு ராசி. மான் வேட்டை வழக்கு, குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பலியாக்கிய வழக்கு என அவர் கடுமையான குற்றங்களில் சிக்கி, ஜாமீனில் வெளியில் உள்ளார்.

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக சல்மான்கான் மீது புது வழக்கு

தற்போது மீண்டும் அவர் மீது ஒரு புதிய வழக்கு பாய்ந்துள்ளது.

இதனை பதிவு செய்திருப்பது ஹைதராபாத் போலீஸ். முஸ்லிம்களின் மத உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளதால் இந்த வழக்கை பதிவு செய்வதாக போலீஸ் அறிவித்துள்ளது.

சமீபத்தில் சல்மான்கான் கலந்துகொண்ட'பிக் பாஸ்' தயாரிப்பளர்களின் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சல்மான் சொர்க்கத்தையும், நரகத்தையும் சித்தரித்த விதம் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக முகமது பசிஹுதின் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

மதத்தை அவமதித்ததற்காக சல்மான் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் குற்றச் சட்டம் பிரிவு 295 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழைய ஹைதராபாத் நகரில் உள்ள பாலக்னுமா காவல்துறையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடவடிக்கைகள் எடுக்கும்முன் இந்த குற்றச்சாட்டு தொடர்பான சட்ட கருத்துகளையும் அறிய முயன்றுவருவதாக போலீஸ் கமிஷனர் அனுராக் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு- இயக்குநர் கவுதமன் கைதாகி விடுதலை!

சென்னை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் நேற்று கைதாகி விடுதலையாகினர்.

சென்னையில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்தார் பிரணாப் முகர்ஜி. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்பினர் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு- இயக்குநர் கவுதமன் கைதாகி விடுதலை!

திரைப்பட இயக்ககுநர் கவுதமன் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதனால் கவுதமன் நேற்று முன்தினம் நள்ளிரவு முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்.

அவருடன் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 7 பேர் கைதானார்கள். நேற்று மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையானவுடன் இயக்குநர் கவுதமன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்தனர். 2 இடங்களில் மாற்றி, மாற்றி உட்கார வைத்தனர். எங்களோடு கைதானவரை அடித்து துன்புறுத்தினார்கள். இதுதொடர்பாக மனித உரிமை கமிஷனில் புகார் கொடுக்க உள்ளோம், என்று தெரிவித்தார்.