4/12/2011 10:46:14 AM
ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் பிரிவின் (ஐ.நா.வின் மனித குடியேற்ற திட்டம்) இளைஞர் தூதராக நடிகர் விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து நடிகர் விக்ரம் தேர்வாகியுள்ளார். கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23வது நிர்வாக் குழு கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு நேற்று துவங்கியுள்ள இக்கூட்டம் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுபற்றி நடிகர் விக்ரம் நைரோபியில் இருந்து கூறும்போது, ''பெருமைக்குரிய ஐ.நா.அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். ஐ.நா.வின் ஹாபிடேட் பிரிவின் நோக்கம், ஆரோக்கியமான நகர்ப்புற முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி மூலம் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதுதான். ஐ.நா.வின் நோக்கம் நிறைவேற உதவுவேன்'' என்றார்.