தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்தானம்- உதயநிதி கூட்டணி!

கேமரா இல்லாமல் கூட படமெடுக்கப் போவார்கள்... ஆனால் சந்தானம் இல்லாமல் போக மாட்டார்கள் போலிருக்கிறது ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்.

அந்த அளவுக்கு அந்தப் படங்களின் வெற்றிக்கு சந்தானத்தின் கவுண்டமணி ஸ்டைல் காமெடி உதவுகிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்தானம்- உதயநிதி கூட்டணி!

மேலே குறிப்பிட்ட நாயகர்கள் நடிக்கும் அத்தனை படங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் சந்தானம்.

உதயநிதியும் சந்தானமும் தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்கள் நண்பேன்டா படம் மூலம்.

‘இது கதிர்வேலன் காதல்' படம் வெளியான பிறகு, உதயநிதி ஸ்டாலின் தொடங்கப் போகும் படம் ‘நண்பேன்டா'.

இந்தப் படத்தை இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த ஏ.ஜெகதீஷ் இயக்குகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிகிறது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு இசை அமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜே இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளன.

ராஜேஷ் இயக்கிய ‘பாஸ் என்னிகிற பாஸ்கரன்' படத்தில் சந்தானம் அடிக்கடிப் பேசும் வசனம்தான் இந்த 'நண்பேன்டா' தலைப்பு என்பது தெரியும்தானே!

 

டீல் பெயர் மாறியது.... புதிய தலைப்பு 'வா'!

அருண் விஜய் நடிக்கும் டீல் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இப்போது வா என்று புதிய தலைப்பு சூட்டியுள்ளனர்.

தடையற தாக்க படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் அருண்விஜய் நடித்து வரும் படம் ‘டீல்'. இந்தப் படத்தை சிவஞானம் இயக்குகிறார்.

டீல் பெயர் மாறியது.... புதிய தலைப்பு 'வா'!

படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ராதா மகள் கார்த்திகா நடிக்கிறார். சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய தமன் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘டீல்' திரைப்படம் இப்போது பெயர் மாற்றம் பெற்றுள்ளது. ‘வா' என்று புதிய தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

டீல் என்பது ஆங்கிலச் சொல் என்பதால், கேளிக்கை வரி விலக்குக்காக தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.

டீல் பெயர் மாறியது.... புதிய தலைப்பு 'வா'!

"ரிலீஸ் நேரத்தில் வரும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக இப்போதே பெயரை மாற்றிவிட்டோம்," என இயக்குநர் சிவஞானம் தெரிவித்தார்.

 

நடிகை சுருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்: வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நடிகை சுருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி நுழைந்து சுருதிஹாசனை தாக்கினார். பின்னர் அவனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.

நடிகை சுருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதி

சுருதிஹாசன் தற்போது ஹைதராபாத்தில் தங்கி இருந்து ரேஸ்குராம் என்ற படத்தில் நடித்து வந்தார். இவர் தெலுங்கில் நடித்துள்ள இன்னொரு படமான ஏவடு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரோமோசன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

தெலுங்கு படப்பிடிப்பில் இருந்தபோது சுருதிஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

 

குஷ்பு- சுந்தரி சி படத்தை மறுத்தாரா அஜீத்?

கணவர் சுந்தர் சி இயக்கம், தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்குமாறு கேட்டு வந்த நடிகை குஷ்புவை, கதை கூட கேட்காமல், நாசூக்காக திருப்பி அனுப்பிவிட்டார் அஜீத் என தகவல் வெளியாகியுள்ளது.

அஜீத் நடித்த வீரம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனால் படத்தில் நடித்ததோடு சரி.. அது தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அஜீத், குடும்பத்துடன் வெளிநாடு பறந்துவிட்டார் ஓய்வுக்காக.

குஷ்பு- சுந்தரி சி படத்தை மறுத்தாரா அஜீத்?

அங்கேயே மகளின் 6வது பிறந்தநாளையும் உற்சாகமாக கொண்டாடினார். வீரம் படம் வெளியாகும் ஒருநாள் முன்பாக அதாவது வரும் 9ம் தேதி இரவுதான் அஜீத் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் அஜீத் குறித்து ஒரு தகவல் கோடம்பாக்கத்தை பரபரக்க வைத்துள்ளது.

அஜீத் வெளிநாட்டு பயணம் செய்வதற்கு முந்தைய நாள் அவரை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் அவருடைய வீட்டுக்கு சென்று சந்தித்தாராம்.

அப்போது குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும்படி கேட்டதாகத் தெரிகிறது. கதை ரெடி.. இப்பவே கேக்கறீங்களா? என்றாராம்.

ஆனால் அஜீத் பிடி கொடுக்கவில்லையாம். கவுதம் மேனன் படம் முடிந்ததும், வெங்கட் பிரபு படம்... இந்த இரண்டும் முடியாமல் எதையும் முடிவு செய்ய விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம்.

மேலும், 'மேம்.. எதுவாக இருந்தாலும் நானே முடிவு செய்து அழைப்பதுதான் வழக்கம். நான் வெளிநாடு சென்று வந்ததும், உங்களுடன் பேசுகிறேன். நன்றி,' என்று கூறி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அஜீத் ஏற்கனவே திமுக ஆட்சியின்போது கசப்பான அனுபவம் பெற்றவர். ஒரு பக்கா அதிமுக அனுதாபி என்ற இமேஜுக்குள் இருப்பவர். திமுகவில் முக்கிய பிரமுகரான குஷ்பு தயாரிப்பில் நடிக்கப் போய், தேவையில்லாத பிரச்சினைகள் எதற்கு என்பதுதான் அவரது இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.

இருந்தாலும் இந்த செய்திகளுக்கான குஷ்புவின் பதிலை எதிர்ப்பார்த்து அவரது khushsundar ட்விட்டர் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்!

 

நாளை முதல் ஜில்லா ட்ரைலர்

விஜய் நடித்துள்ள பொங்கல் சிறப்புத் திரைப்படமான ஜில்லாவின் முன்னோட்டக் காட்சி நாளை வெளியாகிறது.

விஜய் - காஜல் நடிப்பில், நேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜில்லா படம் வருகிற 10-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஜில்லா ட்ரைலர்

தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். இப்போது படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தில் விஜய் ‘கண்டாங்கி கண்டாங்கி' என்ற பாடலை சொந்த குரலில் பாடிஉள்ளார். இந்த பாடலை இணைய தளங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கேட்டு உள்ளனர்.

படம் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் இதன் ட்ரைலர் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

நாளை முதல் ஜில்லா ட்ரைலர்

இப்போது ‘ஜில்லா' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சிறப்பு காட்சியை மோகன்லால் மனைவி பார்த்து விட்டு விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் போன் செய்து பிரமாதமாக வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவில் தமது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உதய்கிரணுக்கு வயது 33. அவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். உதய்கிரண் தற்கொலை சம்பவம் தெலுங்கு திரைப்பட பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை

உதய்கிரணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பல்லோவில் உதய்கிரண் உடல்

Read in English: Telugu actor Uday Kiran commits suicide
 

குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா உதய் கிரண்?

குடும்பப் பிரச்சினை காரணமாகவே நடிகர் உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்ரம் தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் உதய் கிரண். தொடர்ந்து நுவ்வு நேனு என்ற பெரிய வெற்றிப் படத்தில் நடித்தார். விருதுகளையும் வென்றார். ரொமான்டிக் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். தமிழில் பாலச்சந்தரின் பொய் படத்தில் அறிமுகமானார். வம்புச் சண்டை, பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான பல படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனாலும் தமிழ், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வந்தார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா உதய் கிரண்?

இருபது நாட்களுக்கு முன்புதான் தன் 34 வது பிறந்த நாளை உற்சாகத்துடன் நண்பர்களுடன் கொண்டாடினார் உதய் கிரண்.

முன்னணி தெலுங்கு நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவியின் மகளுக்கும் உதய் கிரணுக்கும் 2003-ல் நிச்சயதார்த்தம் நடந்து, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் 2012-ல் அவர் தனது தோழி விஷிதாவை திருமணம் செய்து கொண்டார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா உதய் கிரண்?

நேற்று இரவு விஷிதா மணி கொண்டா என்ற இடத்துக்குச் சென்றிருந்தபோது, தனியாக இருந்த உதய்கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து தன் செல்போன் அழைப்புகளுக்கு உதய் கிரணிடமிருந்து பதில் இல்லாமல் போகவே, அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்தார் விஷிதா. அப்போது உதய் கிரண் பிணமாகக் கிடந்தார்.

குடும்ப பிரச்சினைதான் அவர் தற்கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்து கோணங்களிலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அப்பல்லோவில் உதய்கிரண் உடல்

 

பொங்கல் ரேஸில் குதித்தது சத்யராஜின் 'கலவரம்'!

சென்னை: பொங்கல் ரேஸில் அஜீத், விஜய்யோடு சத்யராஜும் மோதுகிறார். அவர் நடிக்க கலவரம் படம் ஜனவரி 14 அன்று வெளியாகிறது.

யுனிவர்சல் புரடக்சன் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் "கலவரம்". இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோட்றத்தில் சத்யராஜ் ஒரு விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார்.

பொங்கல் ரேஸில் குதித்தது சத்யராஜின் 'கலவரம்'!

அஜய் ராகவ், குட்டி, யாசர், தணிகல பரணி, நந்தா, சரவணன், சுஜிபாலா,ராஜ்கபூர், மயில்சாமி, இன்பநிலா, லாவண்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எப் எஸ் பைசல் இசையமைத்துள்ளார். டிஎஸ் ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். உளவுத் துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியவர். பாஸ்கரன் நடித்து பிரச்சினைக்குள்ளான தலைவன் படத்துக்கும் இவர்தான் இயக்குநர் (ஆனால், படம் முடிந்து ரிலீஸுக்கு தயாரானபோது, படத்திலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்துவிட்டார்).

பொங்கல் ரேஸில் குதித்தது சத்யராஜின் 'கலவரம்'!

ஒரு உண்மை கலவரத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ரமேஷ் செல்வன்.

படம் குறித்து அவர் கூறுகையில், "கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி இத்திரைப்படம்.இதில் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிப்பதே இந்த படத்தின் திரைக்கதையின் சிறப்பு. ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலை முதல், பின் அச்சம்பவ களத்தின் உண்மை முகங்களை வெளிச்சமிட்டு காட்டியுள்ளோம்," என்றார்.

பொங்கல் ரேஸில் குதித்தது சத்யராஜின் 'கலவரம்'!

படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார்கள்.

 

இசைப்புயலுக்கு வயசு 48!

இசைப்புயலுக்கு வயசு 48!

இசைப்புயல் என்று ரசிகர்களால் புகழப்படும், ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று வயது 48. அவரது பிறந்த நாளையொட்டி, தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் கலைஞர்களும் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.

ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். தொடர்ந்து பல மெகா ஹிட் பாடல்களைத் தந்தார்.

ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் இசையமைத்ததற்காக நான்கு முறை தேசிய விருதுகள் வென்றார்.

அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல, ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற படத்துக்கு இசையமைத்ததற்காக இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். தமிழர்களைப் பெருமைப் படுத்தும் வகையில், அந்த ஆஸ்கர் மேடையிலேயே எல்லாப் புகழும் இறைவனுக்கே என தனது தாய்த் தமிழில் பேச்சை ஆரம்பித்து இனிய அதிர்ச்சி தந்தார்.

இன்றைக்கு தமிழ், இந்தி என்ற வட்டத்தைத் தாண்டி, சர்வதேச அளவில் மெச்சத்தக்க ஒரு இசையமைப்பாளராகத் திகழ்கிறார் ரஹ்மான்.

2013-ம் ஆண்டில் ரஹ்மான் இசையில் தமிழில் கடல் மற்றும் மரியான் படங்கள் வெளியாகின. இரண்டுமே கடல் சார்ந்த கதைகள். இந்தப் படங்களின் உண்மையான நாயகனாகத் திகழ்ந்தார் ஏஆர் ரஹ்மான்.

படங்கள் சரியாகப் போகாவிட்டாலும், அவர் போட்ட நெஞ்சுக்குள்ளே..., மூங்கில் தோட்டம்..., கடல் ராசா நான், நெஞ்சே எழு போன்ற பாடல்கள் நெஞ்சில் நிலைத்துவிட்டன.

ரஹ்மான் ரசிகர்களுக்கு இதற்கு முந்தைய ஆண்டுகளை விட ரொம்ப ஸ்பெஷலாக அமைகிறது இந்த ஆண்டு. இந்த ஆண்டில் கோச்சடையான், ஐ, கவுதம் மேனன் படம் மற்றும் காவியத் தலைவன் போன்ற படங்கள் ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கின்றன. இவை தவிர மூன்று ஆங்கிலப் படங்களும் அவர் இசையில் வெளியாக உள்ளன.

இன்னும் இன்னும் இனிய இசை தந்து மக்கள் மனங்களை ஆற்றுப்படுத்த இசைப் புயலை வாழ்த்திடுவோம்!