தனுஷ் சார் இனி பிஸி தான்
செல்வராகவன் இயக்கும் ""பொன்னியின் செல்வன்''?
பொன்னியின் செல்வன் - இப்போ செல்வராகவன் முறை!!
பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆசை கொள்வதும், பின்னர் ஏதோ காரணங்களுக்காக கைவிடுவதும் வாடிக்கையான செய்தி ஆகிவிட்டது கோடம்பாக்கத்தில்.
அமரர் எம்ஜிஆர் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்தார். அதற்கு இயக்குநர் மகேந்திரனை வைத்து முழுமையாக திரைக்கதை வசனத்தைக் கூட எழுதிவிட்டார்.
ஆனால் அவர் அந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது, அரசியலில் மகா பரபரப்பாகிவிட்டார். படம் நின்றது.
பின்னர் கமல்ஹாஸன் முயற்சி செய்வதாகக் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இயக்குநர் மணிரத்னம் இந்த நாவலைக் கையிலெடுத்தார். விஜய், விக்ரம், ஆர்யா, மகேஷ்பாபு என பலர் நடிப்பதாகக் கூறப்பட்டது. மைசூர் லலிதமகாலில் ஷூட்டிங் நடத்த தேதியெல்லாம் குறித்த நிலையில், படத்தைக் கைவிட்டார் மணிரத்னம்.
இந்த நிலையில், அடுத்து செல்வராகவன் இந்தப் படத்தை எடுக்க ஆர்வமாக உள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு, விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை வைத்து இந்தப் படத்தை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'இராஜ இராஜ சோழனாக' விக்ரமும், 'ஆதித்த கரிகாலனாக' ஆர்யாவும், 'வல்லவரையன் வந்திய தேவனாக' ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
நடக்குமா... அல்லது வேறு இயக்குநர் முதலிலிருந்து ஆரம்பிப்பாரா? பார்க்கலாம்!
பக்கத்து வீட்டுக்காரர்கள் இம்சை-சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டுக்குப் போகும் ரஞ்சிதா!
சென்னை: நடிகை ரஞ்சிதாவுக்கு நடிகர் சங்கம் எதிரில் சொந்தமாக வீடு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது இந்த வீடு.
நித்யானந்தான் - ரஞ்சிதா செக்ஸ் வீடியோக்கள் வெளியானதும் இந்த குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள், போலீசார் போன்றோர் அந்த வீட்டுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தார்கள்.
இதையடுத்து ரஞ்சிதா சில மாதங்களாக அந்த வீட்டுக்கு வராமல் இருந்தார். அமெரிக்கா சென்று விட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்யானந்தாவுடன்தான் இருப்பதாக வெளியான படம் போலியானது என்று அறிவித்து மீண்டும் வெளி உலகுக்கு தலைகாட்டி வருகிறார்.
நித்யானந்தாவுடன் இணைந்து ஆன்மீக நிகழ்ச்சிகளில் மீண்டும் பங்கேற்று வருகிறார். ரஞ்சிதா வசித்த வீட்டை ரோட்டில் வருவோர் போவோர் வேடிக்கை பார்த்தபடி செல்வதால் சக குடியிருப்புவாசிகள் தேவையின்றி சண்டைக்கு நிற்கிறார்களாம்.
ரஞ்சிதா குடும்பத்தினருடன் அடிக்கடி சிலர் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை காலி செய்துவிட ரஞ்சிதா முடிவுவெடுத்துள்ளாராம். சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு பார்த்து வருகிறாராம்.
வேடிக்கைப் பார்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட இந்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக, சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்குப் போகிறார் ரஞ்சிதா!
லெஸ்பியனாக இருந்த மார்லின் மன்றோ!
பிரபலங்கள் மரணமடைந்தாலும் அவர்களைப்பற்றிய செய்திகளுக்கு மட்டும் மரணம் என்பது கிடையாது. என்றைக்கும் அவை புதிது போலவே மக்களால் வாசிக்கப்படும். அதுபோலத்தால் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான மர்லின் மன்ரோ மரணமடைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரைப்பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர் மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை வேறு எவரும் இல்லை. அவரை பிடிக்கா ஆண்களே இருக்க முடியாது.அவருடைய கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடீசுவரர்கள் தவம் கிடந்தார்கள்.
உலகம் முழுவதும் மர்லின் மன்ரோவுக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருந்தனர்கள். இவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால் மன்ரோவுக்கு ஆண்களை விட பெண்களையே அதிகம் பிடித்ததாம். பெண்களுடன்தான் அவர் நெருக்கமான நட்பையும் வைத்திருந்தாராம். இன்னும் ஒரு படி மேலே போய் சில பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவும் கொண்டிருந்தாராம்.
மிஷல் மார்கன் என்பவர் எழுதியுள்ள Marilyn Monroe: Private And Undisclosed என்ற நூலில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நூலில், மர்லின் மன்ரோ மீது மோகம் கொண்டு திரிந்தோர் எண்ணிக்கை எண்ணி மாள முடியாதது. ஆனால் அவருக்கோ ஆண்கள் மீது துளியும் ஈடுபாடு வரவில்லை. அவருக்கு ஆண்களுடன் உறவு கொள்வதில் பிடித்தமும் இல்லை, அதை அவரால் சரியாக செய்யவும் முடியவில்லை. மாறாக, அவர் உறவு வைத்திருந்த பெண்களிடம் பெரும் இன்பத்தை அனுபவித்தாக மன்றோவே கூறியுள்ளதாக மிஷல் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் பிரபலமான ஜோன் கிராபோர்ட், பார்பரா ஸ்டான்விக், மெர்லின் டயட்ரிச், எலிசபெத் டெய்லர் ஆகியோருடன் மன்ரோ லெஸ்பியன் உறவு வைத்திருந்ததாக அவரே ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். இவர்கள் போக நதாஷா லிடஸ், பாலா ஸ்டிராஸ்பெர்க் ஆகியோருடனும் அவருக்கு லெஸ்பியன் உறவு இருந்ததாம்.
மர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன். 3 முறை திருமணம் செய்தார். மூன்று முறை திருமணமாகி, மூன்று முறை விவகாரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் பெயர் ஜேர்டிமாக்கியா இவர் கால்பந்து வீரர். 3_வது கணவர் ஆர்தர்மில்லர் சினிமா படத்தயாரிப்பாளர். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.
மன்றோவின் திருமண வாழ்க்கையின் தோல்விக்கு அவரது லெஸ்பியன் பழக்கம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அவருக்கு ஆண்களுடனான இயற்கையான செக்ஸ் உறவு பிடிக்கவில்லையாம். மாறாக, பெண்களுடன் செக்ஸ் இன்பம் காணவே அவர் பெரிதும் விரும்பினாராம். இதனால்தான் திருமண வாழக்கையில் அவரால் நிலைக்க முடியவில்லை என்கிறார்கள்.
புத்தகம் வெளிவந்த பின்னர் இன்னும் எந்த மாதிரியான பரபரப்பை கிளப்பப் போகிறதோ ?
அழகை எடுப்பாகக் காட்ட அமெரிக்காவில் சிகிச்சை செய்தாரா அமலா பால்?
மீடியா முழுக்க அமலா பால் புராணம்தான் கடந்த நான்கு நாட்களாய். அம்மணி அமெரிக்கா போய் வந்தாராம்.
அந்தப் புராணத்தை தனக்கு தெரிந்த நாலு மீடியாக்காரர்களிடம் சொல்லி வைக்க, அவர்கள் கொஞ்சம் சுமாரான அமலா பாலுக்கு அசத்தலாக அலங்காரம் பண்ணி அம்சமான செய்தியாக உலாவ விட்டுவிட்டார்கள்...
அதுவும் எப்படி? 'முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்ற வெற்றிப் படங்களில் (??!!) நடித்த அமலா பால்' என்றுதான் அடைமொழியே கொடுத்திருந்தனர்!
செய்தியைப் படித்துவிட்டு, அமலாபால் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்க்கும் கோடம்பாக்கவாசிகள், 'நண்பா தெரியுமா சேதி... அம்மணி அங்கே போய் விழாவில் சும்மா ஒப்புக்கு இரண்டு நாள் இருந்துவிட்டு, அடுத்து கமுக்கமாக ஒரு வேலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் அழகை எடுப்பாகக் காட்ட சிகிச்சை செய்தாராம்...", என்று கிசுகிசுக்கிறார்கள்.
ஆனால் அமலா பாலே, அமெரிக்காவில் புது மேக்கப், புது சிகை அலங்காரம் மட்டும்தான் பண்ணிக்கொண்டேன் என்று விளக்கம் வேறு அளித்துள்ளார்.
எப்படியோ... இந்த சாக்கில் முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்றவற்றை பெரிய வெற்றிப் படமாக்கிவிட்டனர், அமலா பாலின் 'நிருப(அன்)பர்கள்'!
ப்ளாப் நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்களே! - குமுறும் பார்வதி ஓமணக்குட்டன்
சென்னை: ஒரு படம்தான் நடிச்சேன். அது சரியா போகாததுக்கு நானா காரணம்... அதுக்குள்ள என்னை ராசியில்லாதவன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்களே...'
- இப்படி குமுற ஆரம்பித்திருப்பவர், பில்லா 2-ல் அஜீத்துக்கு அக்கா மகளாக நாலைந்து சீன்களில் வந்து பாதியில் செத்துப் போகும் பாத்திரத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன்தான்!
இந்தப் படத்துக்காக அவர் முதன் முதலில் ஒப்புக் கொண்ட இந்திப் படத்தைக் கூடத் துறந்தாராம்.
ஆனால் பார்வதியின் இந்த 'தியாகத்தை'யெல்லாம் பொருட்படுத்தாமல், அவரை தோல்விப் பட நடிகை என முன்னணி பத்திரிகை எழுதிவிட்டதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லையாம்.
"பில்லா 2 சரியா போகாததுக்கு நான் என்னங்க பண்ண முடியும். என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா புரமோட் பண்ணேன். கொடுத்த வேலையைச் செஞ்சேன். நான் என்ன நாலஞ்சி படங்களா நடிச்சிருக்கேன். ஒரே படம்தான். அதுக்குள்ள ராசியில்லாதவன்னு ஒதுக்கிடாதீங்க. நான் எந்த ரோலையும் செய்வேன். இன்னும் சில நல்ல சான்ஸ் கொடுத்துப் பாருங்க," என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் பார்வதி.
சரிசரி.. அடுத்த படத்திலாவது இன்னும் நாலு சீன் வர்றமாதிரி காட்சி வைக்கச் சொல்லுங்க. நீங்கதான் ஹீரோயின்னு ஜனங்களுக்குத் தெரியும்!
'ஹலோ... யாராவது இருக்கீங்களா.. நான் கவர்ச்சியா நடிக்கப் போறேன்!'
சென்னை: சுனேனா... காதலில் விழுந்தேனில் அசத்தாலாக அறிமுகமானார். வம்சம் படத்தில் அட, பரவாயில்லையே.. பாப்பா நல்லா நடிக்குது என பாராட்டும் பெற்றார்.
அத்தோடு காணாமல் போனவர்தான். யாரோ ஒரு நடிகரின் கஸ்டடியில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு வேறு.
கொஞ்சநாள் கழித்து, இப்போது நீர்ப்பறவை, கதிர்வேல், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சுனேனா.
தன் உடல் அமைப்புக்கு கவர்ச்சி ட்ரெஸ், பிகினி போன்றவை செட் ஆகாது என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது 'நான்தான் சின்னப் பொண்ணு, ஏதோ சொல்லிட்டேன். அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா... கொண்டாங்க அந்த பிகினியையெல்லாம்.. ஒரு கை பாத்துடறேன்," எனும் அளவுக்கு இறங்கிவிட்டாராம்!
நிசமாவா? என்றால், "ஆமா.. " என்றவர், தமிழ் நடிகைகள் எப்போதும் வைத்திருக்கும் அந்த ரெடிமேட் வாக்கியத்தை ஒப்பித்தார்.
"கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நான் நடிக்கத் தயார்!"
ஹப்பாடா... தமிழ் சினிமா ரசிகன் கட்ட வேகாம போயிடுமோங்கிற கவலை தீர்ந்ததம்மிணி!!
ஜெகனுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் உள்ளது- சொல்கிறார் 'தாய்மாமன்' மோகன்பாபு!
ஹைதராபாத்: சில அரசியல் சகுனிகளால் இன்று சிறையில் இருந்தாலும், ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என கூறியுள்ளார் நடிகர் மோகன் பாபு.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே ஜெயிலில் தொழில் அதிபர் நிம்மகட்ட பிரசாத்தும் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தொழில் அதிபர் நிம்மகட்ட பிரசாத் ஆகியோரை நடிகர் மோகன்பாபு, அவரது மகனும் நடிகருமான விஷ்ணு ஆகியோர் சந்தித்தனர்.
ஜெகனை சந்தித்து விட்டு வந்த மோகன்பாபு சிறைக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், "மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி எனது சகோதரி. எனவே ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் தாய் மாமன் என்ற முறையில் அவரை சிறையில் என் மகனுடன் சென்று சந்தித்தேன். தொழில் அதிபர் நிம்மகட்டபிரசாத் எனது நண்பர்.
எனவே அவரையும் சந்தித்தேன். தற்போதைய அரசியல் மகாபாரத யுத்தத்தை நினைவுபடுத்துகிறது. டில்லியில் சில சகுனிகள் உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டிக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. மகாபாரத சகுனியால் யாருக்கு நல்லது நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இங்கும் அதுதான் நடக்கப்போகிறது.
சிரடி சாயிபாபாவின் ஆசியால் ஜெகன்மோகன் ரெட்டியும், நிம்மகட்டபிரசாத்தும் விரைவில் வெளியே வருவார்கள். இருவரையும் சந்தித்த பிறகு இதயம் பாரமாகிவிட்டது. மிகுந்த வேதனையுடன் திரும்பி வந்தேன்," என்றார்.
ஜெகன் கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார் மோகன்பாபு.
மோன்பாபு தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது ஆதரவும் ஜெகன் பக்கம் திரும்பியுள்ளது.
தீராத விளையாட்டுப் பிள்ளை நாயகி மீது தாக்குதல் - உதடு கிழிந்தது!
டெல்லி: முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான சாரா ஜேன் தியாஸ் பரிதாபாத்தில் நடந்த படவிழாவின்போது தாக்கப்பட்டார். இதில் அவரது உதடு கிழிந்தது. அவரைத் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
‘தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ்.
தற்போது ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்திப் படம் ‘கியா சூப்பர் கூல் ஹைய் ஹம்' மில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ் தேஷ்முக், துஷார் கபூர் மற்றும் நேகா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் அறிமுக விழா அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்றது. அப்போது சாரா, சக நடிகைகளுடன் விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூட்டத்திலிருந்து கல் வீசினார். அந்தக் கல் சாராவின் உதட்டைத் தாக்கியதில், உதடு கிழிந்தது!
"என் வாழ்க்கையில் முதல் முறையாக இப்படி ஒரு தாக்குதலுக்கு உள்ளானேன். என்னை மிகவும் அவமானப்படுத்திய சம்பவம் இது. எனது முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியாக இருக்கலாம்,' என்று சாரா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
திருமணப் பேச்சை எடுத்தாலே ஓட்டம் பிடிக்கும் சைப், கரீனா
பாலிவுட் நடிகை கரீனா கபூர் திருமணம் செய்து கொண்டால் தனது கெரியர் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறாராம். அதனால் அவர் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவை மூட்டை கட்டி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் சைப் அலி கான், நடிகை கரீனா கபூர் பல ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வந்தனர். இவர்கள் எப்பொழுது தான் திருமணம் செய்வார்கள் என்று பாலிவுட் காத்திருந்தது. இந்தா அந்தா என்று ஒரு வகையாக வரும் அக்டோபர் 16ம் தேதி திருமணம் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை. சைபின் தாயாரும், பாலிவுட் நடிகையுமான சர்மிளா தாகூர் கூறினார்.
இந்நிலையில் அக்டோபரிலும் திருமணம் நடக்காது போல் இருக்கு. சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் ஒப்பந்தமான கரீனாவுக்கு திருமணம் என்றதும் அந்த வாய்ப்பு போனது. திருமணப் பேச்சால் கரீனா மேலும் சில பட வாய்ப்புகளை இழந்தார். உச்சத்தில் இருக்கையில் திருமணம் செய்து கொண்டால் நம்மை ஓரங்கட்டிவிடுவார்கள் போன்று என்று கரீனா அஞ்சுகிறார். இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவை ஓரங்கட்டியுள்ளாராம்.
மேலும் யாராவது கரீனாவிடம் திருமண தேதி பற்றி கேட்டால் எரிச்சல் அடைகிறாராம். திருமண தேதியைத் தானே கேட்டோம், ஏதோ கேட்கக் கூடாததை கேட்ட மாதிரி இவர் குதிக்கிறாரே என்று பலர் வியக்கின்றனர்.
இவர் தான் இப்படி என்றால் சைபிடம் நீங்களாவது திருமண தேதியை கூறுங்களேன் என்றால், நான் ரொம்ப பசி. 2 மாதம் போகட்டும் அதன் பிறகு தெரிவிக்கிறேன் என்கிறார். அவர்கள் பேச்சைப் பார்த்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையே போய்விட்டது பலருக்கும்.
இருவருமே படத்தில் நடிப்பதில் தான் குறியாய் இருக்கின்றனர். அதனால் நீங்களும் அவர்களைப் பற்றி நினைக்காமல் வேலையைப் பாருங்கள்.
கிசு கிசு - திருமணத்துக்கு நடிகை கண்டிஷன்
நல்ல காலம் பொறக்குது...
கோலிவுட்ல வில்லனா நடிச்சிட்டிருந்த லால் நடிகரு மல்லுவுட்ல ஹீரோவா நடிக்கறாராம்... நடிக்கறாராம்... ஒரு படம் ஓடுனா பல படம் ஊத்திக்கிதாம். இதெல்லாம் நானா தேடிக்கிட்டதுதான். எனக்கு பிரண்ட்ஸுங்க ஜாஸ்தி. அவங்க வந்து இந்த கேரக்டர்ல நடிச்சா நல்லாயிருக்கும்னு கேக்கறாங்க. அது பொருத்தமா இருக்காதுன்னு தெரிஞ்சும் பிரண்ட்சிப்புக்காக ஒத்துக்கறேன். இதையெல்லாம் கட் பண்ணாதான் உருப்படுவேன்னு புலம்பறாராம்... புலம்பறாராம்...
வம்புக்கு பேர்போன சோன நடிகை கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டிருந்தாராம்... இருந்தாராம்... இப்ப அவரோட எண்ணத்த மாத்திகிட்டாராம். இது பத்தி அவர் தன்னோட டுவிட்டர் பக்கத்துல கண்டிஷனோடு தன் விருப்பத்தை தெரிவிச்சிருக்காராம். விவாகரத்தான அழகான ஆண் சம்மதித்தால் அவர கல்யாணம் பண்ணிக்குவேனு சொல்லி இருக்காராம்... இருக்காராம்... ஆனா தான் சொல்றபடிதான் அவர் நடக்கணும்னு அடுத்த குண்டை தூக்கிப் போட்டிருக்காராம்...
போட்டிருக்காராம்...
பிரகாச ஹீரோ நடிச்ச¤ருக்கிற டபுள் ஹீரோ படத்தோட வேல ஜரூரா நடக்குதாம்... நடக்குதாம்... நிறுத்தி நிதானமா சீன்கள எடுத்திருந்த குழுவுக்கு திடீர்ன்னு அதிர்ச்சி கொடுத்தாரு பெல் ஹீரோயின். சான்டல்வுட்ல அவர் நடிக்கற ஒரு படமும் இதேபாணில தயாராயிட்டிருக்காம். போட்டி வேகத்துல ரெண்டு தரப்பும் சரமாரியா தகவல்கள லீக் செய்றாங்களாம். பெல் நடிகை பட சாயல் வந்துடக்கூடாதுன்னு பிரகாச படத்துக்கு புதுசா சில காட்சிகளை ஷூட் பண்றாங்களாம்... பண்றாங்களாம்...
தனுஷ் சார் இனி பிஸி தான்
செல்வராகவன் இயக்கும் "பொன்னியின் செல்வன்"?
மீராவின் வாய்ப்புகளை பறிக்கிறார் ரீமா
பிரேம்ஜியின் டி ஷர்ட் ரகசியம்
ஷங்கர் படத்தில் நடிக்கிறேனா?
தமிழில் ஒரே ஒரு படத்தில் நடிக்கிறேன். அது 'கோச்சடையான்'. ரஜினிக்கு ஜோடி. இந்தியில் சைப் அலிகானுடன் 'ரேஸ் 2', ரன்பீர் கபூருடன் 'ஏ ஜவானி ஹே திவானி' படங்களில் நடிக்கிறேன். இது தவிர மேலும் 2 இந்தி படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. இதனால் வேறு படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக நடித்து வெளியான 'காக்டெய்ல்' படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதற்காக சமீபத்தில் பார்ட்டி வைத்திருந்தேன். அதில் எனது நெருங்கிய சினிமா நண்பர்கள் கலந்துகொண்டனர். பார்ட்டியில் நிறைய அரட்டை அடித்தோம். அடிக்கடி இதுபோல் பார்ட்டி நடத்த விரும்புகிறேன். இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்.
தூசி தட்டும் ஸ்ரேயா படம்
'நான் ஈÕ பட இயக்குனர் ராஜமௌலி இயக்கி உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய தெலுங்கு படம் 'மகதீராÕ தமிழில் 'மாவீரன்Õ என்ற பெயரில் வெளியானது. Ôநான் ஈÕ ஹிட் ஆனதால் டோலிவுட்டில் இவர் இயக்கிய படங்களுக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்பட்டிருக்கிறது. 'சந்திரமவுலிÕ படத்தின் இசையை கீரவாணி அமைத்திருக்கிறார். ஹீரோ பிரபாஸ். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற மகன் மீண்டும் இணைகிறானா என்பது கதை. அம்மா வேடத்தில் பானுப்பிரியா நடித்திருக்கிறார்.
‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக்?
சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி
சிவசங்கரி தொடரில் மாயாஜால திருப்பங்கள்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிவசங்கரி தொடரில் மாயாஜால காட்சிகளும், மந்திர தந்திரங்களும், திடீர் திருப்பங்கள் வர உள்ளதாக தொடர் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
பஞ்சலிங்கத்தை தேடிச் செல்லும் சிவசங்கரி ஒருவரின் வீட்டில் தங்குகிறாள். அந்த வீட்டில் உள்ள கவிதா என்ற பெண்ணிற்கு சிறுநீரக கோளாறு என்று தெரியவருகிறது. சில மாதங்களில் மரணமடைந்து விடுவாள் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்ட நிலையில் தேவதை மீனிடம் ஆலோசனை கேட்கிறாள் சிவசங்கரி.
சதுரகிரி மலையில் உள்ள சஞ்சீவி மூலிகையினால் கவிதாவை காப்பாற்ற முடியும் என்று கூறிய தேவதை மீன் அந்த குகையை அரக்கன் ஒருவன் காவல் காத்து வருவதாகவும் அரக்கனின் கேள்விக்கு பதில் கூறிவிட்டு சஞ்சீவி மூலிகையை பறித்து வரலாம் என்றும் கூறுகிறாள்.
கவிதாவின் காதலனுடன் சதுரகிரிக்கு செல்லும் சிவசங்கரி அங்கு அரக்கனை சந்தித்து சஞ்சீவி மூலிகையை பறித்தாளா? என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.
திடீர் திருப்பங்களும், மாயஜாலாங்களும், மந்திர வித்தைகளும் நிறைந்த புதிய கதைக்களம் இனி சிவசங்கரி தொடரில் வர இருக்கின்றன. சன் டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் சிவசங்கரி தொடரை ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து வழங்கி வருகின்றனர். ஒ.என். ரத்னம் இயக்கும் இந்த தொடரில் அஜய் ரத்னம், ரஜேந்திரன், சுஹாசினி, அனுஸ்ரீ, சாந்தி ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
'இயக்குநர்களின் ஹீரோ' மகேந்திரன் பிறந்த நாள்!
மகேந்திரன் -
12 படங்கள்தான் இயக்கினார் என்றாலும்... காலத்தை தாண்டிய கல்வெட்டுகளாக நிற்கின்றன அவரது படைப்புகள்.
முதல் படம் முள்ளும் மலரும். தமிழ் சினிமாவுக்கே புதிய அங்கீகாரத்தையும் அர்த்தத்தையும் தந்தது அந்தப் படம் என்றால் மிகையில்லை.
ரஜினி என்ற மகா கலைஞனின், யாரும் பார்த்திராத நடிப்புப் பக்கத்தைக் காண வைத்தது முள்ளும் மலரும்தான்.
தொடர்ந்து வந்த உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என அனைத்துமே புதிய அனுபவத்தைத் தந்தன ரசிகர்களுக்கு.
மகேந்திரன் படங்கள் அனைத்துக்குமே இசை இளையராஜாதான். கடைசியாக வந்த சாசனம் தவிர. பாடல்கள் ஒவ்வொன்றும் மகா ரசனையானவை.
இளையராஜா அழகழகாய் மெட்டுக்கள் போட்டுத் தர, கவியரசர் காவியமாய் பாடல்கள் இயற்ற, அவற்றை காலம் சிறு கீறல் கூட போட்டுவிட முடியாத கல்வெட்டுக்களாய் செதுக்கி வைத்தார் மகேந்திரன்!
செந்தாழம் பூவில், அழகிய கண்ணே, ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது, ஏ தென்றலே..., மெட்டி ஒலி, பருவமே, உறவெனும்..., இப்படி எத்தனையோ பாடல்கள், மூன்று தசாப்தங்களையும் தாண்டி ரசிக மனங்களை ஆளுகின்றன.
மகேந்திரன் கடைசியாக இயக்கிய படம் சாசனம். என்எப்டிசிக்காக அந்தப் படத்தை சின்ன பட்ஜெட்டில் இயக்கினார். அதன் பிறகு அவர் சினிமா எதையும் இயக்கவில்லை. முந்தைய ஜெஜெடிவிக்காக ஒரு சீரியலும் இயக்கியுள்ளார்.
ஏழாண்டுகள் இடைவெளி... ஆனாலும் தனக்குப் பிடித்த சினிமா, தனக்குப் பிடித்த இசை என வாழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திரன் விரைவில் ஒரு புதிய சினிமாவுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
உறவுகள், அன்பு, இயல்பான எளிய வாழ்க்கைதான் மகேந்திரன் படைப்புகளின் பின்புலமும் பலமும். இன்று திரையில் நம்மால் பார்க்கவே முடியாத விஷயங்களும் இவையே.
இன்று மகேந்திரனின் பிறந்த நாள். மீண்டும் தன் அழகழகான படைப்புள் மூலம் அவர் திரையை ஆள வேண்டும் என வாழ்த்துகிறோம்!
பீர் அடிக்கும் ஷகிலா… கிர்ரடிக்கும் 'ஆசாமி'!
ஆசாமி என்றொரு படம். போலிச் சாமியார்களின் வேடத்தைப் புட்டுபுட்டு வைப்பதாகக் கூறி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் பீர் அடித்துவிட்டு குஜாலாக குறி சொல்லும் போலிச் சாமியாராக ஷகிலா நடித்திருக்கிறார். அவருக்கு நான்கு கைத்தடிகள் வேறு. சந்தானபாரதி, பாண்டு, நெல்லை சிவா மற்றும் அனுமோகன்தான் அந்த நால்வர்!
படத்தில் ஷகிலா வரும் காட்சிகளிலெல்லாம் ஜில்லென்று ஒரு கேஸ் பீரும் கொடுக்கப்பட்டதாம்.
அவரும் ஏக்தம்மில் பீரைப் போட்டுவிட்டு, காட்சியை ஒரிஜினலாக நடித்துக் கொடுத்தாராம்.
போதைக்கு ஷகிலா என்றால், பக்திப் பரவசத்துக்கு ஒரு சிறுமியை சாமியாகவே நடிக்க வைத்திருக்கிறார்களாம். அவர் வரும் காட்சிகளில் பெண்களுக்கு சாமி வருவது உறுதி என்கிறார் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன்.
போதை ஒரு பக்கம், பக்தி மறுபக்கம்... அட நெசந்தான்ல!