இசையமைப்பாளருக்கு திருமண வரவேற்புக்கு பத்திரிக்கை வைத்து பிடுங்கிச் சென்ற ஜெயகாந்தன்

Music Director Disappoints His Frie

சென்னை: பிரபல நாவலாசிரியர் ஜெயகாந்தனின் மகள் திருமணம் நடந்தபோது மகாலின் பெயரைப் பார்த்ததும் அதற்கு இசையில் பெரும் ஞானமுள்ள இசையமைப்பாளர் வர மறுத்தார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாடல் ஆசிரியர், கவிஞர் வைரமுத்து விகடன் மேடையில் கூறியிருப்பதாவது,

எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிக்கும் விஷயம்?

அவரது அறச் சீற்றம்.

ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.

வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.

என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.

அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.

'பொன்மணி மாளிகை' பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.

'கட்டாயம் வருகிறேன்' என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே' என்று நெளிந்தாராம்.

விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?' என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.

கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?

என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நீங்கள் 11வது பாராவிலேயே கண்டுபிடித்திருப்பீர்களே..

 

நீதானே என் பொன் வசந்தம்... பார்க்க மறுத்த சென்சார் குழு

நீதானே என் பொன்வசந்தம் படத்தை சென்சார் அதிகாரிகள் பார்க்க மறுத்து திருப்பியனுப்பிவிட்டார்களாம்.

censor board rejects neethane en ponvasantham print   
கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வரும் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் நீதானே என் பொன்வசந்தம்.

இந்தப் படத்தின் முதல் பிரதியை சென்சாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பிரதி பைலட் காப்பியாக இருந்ததாம். வசன உச்சரிப்பு பொருந்தாமலும், இசை காட்சிகளுடன் சேராமலும் இருந்துள்ளது அந்தப் பிரதியில்.

தவறுதலாக இந்த பைலட் காப்பியைக் கொடுத்துவிட்டார்களா... அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தெரியவில்லை. எனவே இந்தப் பிரிண்டை பார்க்க முடியாது என சென்சார் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

படம் ரிலீசுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால், வேறு பிரிண்டைக் கொடுத்து சென்சார் சான்று வாங்கும் பணியில் தீவிரமாக உள்ளார்களாம்.

 

மதுரையில் விஸ்வரூபம் இசை வெளியீடு.. முதல் சிடியை மாற்றுத் திறனாளி ரசிகருக்கு வழங்கிய கமல்!

Kamal Releases His First Audio Cd Viswaroopam Madurai   

மதுரை: விஸ்வரூபம் படத்தின் இசை இன்று மதுரையில் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் இசை குறுந்தட்டை மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவருக்கு வழங்கி கவுரவப்படுத்தினார் கமல் ஹாஸன்.

விஸ்வரூபம் படத்தின் இசையை இன்று ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார் கமல்.

அதன்படி முதலில் மதுரையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தினார். வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவில், முதல் இசை குறுந்தகட்டை தனது தீவிர ரசிகரிடம் வழங்கினார்.

அந்த ரசிகர் பெயர் பத்ரிநாராயணன். மதுரைக்காரரான இவர் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாற்றுத் திறனாளியை கவுரவப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை கமல் நடத்தியது வந்திருந்தவர்களை நெகிழ வைத்தது.

அடுத்து கோவையிலும், மாலை சென்னையிலும் இசைத் தட்டை வெளியிடவிருக்கிறார் கமல்.

 

எனக்கு பணம் வேணும்... கதை எப்படி வேணா இருந்து தொலைக்கட்டும் - டாப்ஸி

Tapsee Is Keen On Money Only   

எனக்கு பணம்தான் பிரதானம். பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன். கதை எப்படி இருந்தாலும் கவலையில்லை... - இது நடிகை டாப்ஸி பண்ணுவின் ஓபன் ஸ்டேட்மென்ட்!

டாப்ஸி நடித்த படம் எதுவும் பிச்சிக்கிட்டு ஓடவில்லை என்றாலும், அவரது சிவப்புத் தோல் நம்ம ஊர் இயக்குநர்களை எக்கச்சக்கமாக ஈர்த்துவிட்டது.

அவரது கால்ஷீட்டை விரும்பி கேட்டு வருகிறார்களாம். இப்போது தெலுங்கில் இரண்டு, தமிழில் இரண்டு, இந்தியில் ஒன்று என 5 படங்களை கைவசம் வைத்திருக்கும் டாப்ஸி, அதிரடியாக சம்பளத்தை உயர்த்திவிட்டார்.

ஏன் இப்படி ஏத்திட்டீங்க? என கேட்பவர்களுக்கு டாப்ஸி சொல்லும் பதில் பக்கா 'தொழில்முறை'!

இதோ அம்மணியின் பதில்...

"பணம் எல்லோருக்கும் முக்கியம். பணம் இல்லாமல் எதுவும் இல்லை. நான் பணத்துக்காகத்தான் நடிக்கிறேன். சில நடிகைகள் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால் சம்பளம் இல்லாமல் நடிப்பேன் என்று சொல்வாங்க. அதெல்லாம் பொய். சம்பளம் இல்லாமல் யாரும் நடிக்கமாட்டார்கள்.

நடிகைகள் எல்லோருமே சம்பாதிக்கத்தான் நடிக்க வந்து இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் அல்ல. அதை காப்பாற்றவும் தெரிந்து இருக்க வேண்டும். நான் நடிக்கும் படங்களில் எனக்கு வரவேண்டிய சம்பள பணத்தை கறாராக பேசி வாங்கிடுவேன்," என்றார்.

டாப்ஸி பண்ணு... சமத்துப் பொண்ணு!

 

இட்லி, தோசை வாங்கிச் சாப்பிட்ட புவனேஸ்வரி... தான் தான் ஏமாந்து போனதாக போலீஸில் வாக்குமூலம்!

Actress Buvaneswari Refutes Cheating Charges

சென்னை: தான் யாரையும் மோசடி செய்யவில்லை என்றும் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கி தன்னைத்தான் மோசடி செய்து விட்டார்கள் என்றும் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளாராம் நடிகை புவனேஸ்வரி. போலீஸில் காவலில் உள்ள அவர் இட்லி, தோசை வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் போலீஸார் ஹோட்டலில் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தார்களாம்.

டிரைவ் இன் ஹோட்டலில் செய்த தகராறு உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் புவனேஸ்வரி. தியேட்டர் கலாட்டா வழக்கு தவிர, குருநாதன் என்பவரிடம் டிவி சீரியல் தயாரிப்பதாக கூறி ரூ. ஒன்றரை கோடி மோசடி செய்து விட்டதாக வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 நாள் காவலில் புவனேஸ்வரியை போலீஸார் எடுத்துள்ளனர்.

அவரை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து பெண் போலீஸார் உதவியுடன் துருவித் துருவி விசாரணை நடத்தினராம் போலீஸார். அப்போது போலீஸாரிடம் புவனேஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்தாராம்.

இதுகுறித்து புவனேஸ்வரி கூறுகையில், சினிமாவில் உள் அலங்கார பணிகளை செய்து வரும் குருநாதனுடன் சினிமா துறையில் இருப்பவர் என்ற முறையில் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் சினிமா படம் டி.வி. சீரியல் எடுப்பதற்காக நிதி உதவியும் செய்து வருகிறார். டி.வி. சீரியல் தயாரிக்கப்போவதாக கூறி குருநாதனிடம் நான் பணம் வாங்கியது உண்மைதான்.

அவர் கூறுவது போல ரூபாய் ஒன்றரை கோடியெல்லாம் வாங்கவில்லை. 10 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கினேன் இதற்காக வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார்கள். இதை வைத்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். அப்பாவித்தனமாக நானும் ஏமாந்து விட்டேன் என்று கூறினாராம் புவனேஸ்வரி.

இட்லி, தோசை மீது விருப்பம்

விசாரணையின்போது புவனேஸ்வரிக்குப் பிடித்த சாப்பாட்டை போலீஸார் வாங்கிக் கொடுத்தனராம். இரவும், காலையும் தனக்கு இட்லி, தோசை வேண்டும் என்று புவனேஸ்வரி வேண்டுகோள் வைக்கவே, அதற்கேற்ப போலீஸாரும் இட்லி, தோசை வாங்கிக் கொடுத்தனராம்.

எழும்பூரில் கமிஷனர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள கென்னத் லேனில் உள்ள ஹோட்டலில் போய் இட்லி, தோசை வாங்கி வந்தனராம். அதை வாங்கிச் சாப்பிட்டாராம் புவனேஸ்வரி.

போலீஸ் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை மீண்டும் கோர்ட்டில் புவனேஸ்வரியை போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

 

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

சென்னை: விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் உரிமை ரூ 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

leading dth operator snap viswaroopam rs 5 cr
கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.

ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.

இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.

தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம். அனைத்து ஏரியாக்களிலும் கமல்ஹாஸனே ரிலீஸ் செய்கிறார்.

 

அசினுக்கு காய்ச்சல்! ‘கிலாடி 786’ புரமோசனுக்கு போக முடியலை

Unwell Asin Skips Promotional Events Of Khiladi 786

நடிகை அசினுக்கு குளிர் கிளைமேட் ஒத்துக்கொள்ளவில்லையாம். இதனால் காய்ச்சல் அதிகமாகி கிலாடி 786 பட புரமோசனுக்கு செல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம் அசின்.

இப்பொழுதெல்லாம் படத்தில் நடிப்பதை அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் அதிக மெனக்கெடுகின்றனர் நடிகர் நடிகையர்கள். படத்தில் புரமோசனுக்காக என்று ஊர் ஊராக சுற்றி அதைப்பற்றி பேச வைப்பார்கள். டப்பா படமாக இருந்தாலும் கூட ப்ரமோசன் செய்தால் ஓடிவிடும் என்பது சினிமாக்காரர்கள் நம்பிக்கை. சரி விசயத்திற்கு வருவோம். தமிழில் இருந்து பாலிவுட் போன அசின் இப்போது ‘கிலாடி 786' படத்தில் அக்சய்குமாருடன் நடித்திருக்கிறார். இந்த படம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரிலீசாக இருக்கிறது. இதற்காக பெங்களூர், புனே என்று பரபரப்பாக ப்ரமோசன் வேலைகளை தொடங்கிவிட்டார் அக்சய்குமார்.

சமீபத்தில் பெங்களூர் வந்த அசின் கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்துதான் காணப்பட்டாராம். காரணம் பெங்களூர் கிடைமேட்தானாம். மறுநாள் புனோவில் ப்ரமோசன் நிகழ்ச்சி. ஆனால் அசின் போகாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம். பாவம் படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் தனியாகப் போய் தன் படத்தை ப்ரமோட் செய்துவிட்டு வந்துள்ளார்.

 

ஜெயா டிவியில் டெக்னீஷியன் பஞ்சமா... அல்லது விஜய்யுடன் கூட்டா?

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.

ஆனால் இதில் ஜெயா டிவிக்காக தொழில்நுட்பப் பணிகளை ஒருங்கிணைத்து செய்து கொடுப்பவர்.. விஜய் டிவியின் தலைமைப் பொறுப்பில் உள்ள மகேந்திரனாம்!!

பொதுவாக விஜய் தொலைக்காட்சியுடன் வேறு சேனல்கள் ஒத்துப் போவதில்லை. தொழில்போட்டியில் இது சகஜம் என்பது எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் விஜய் டிவியின் தலைமைப் பொறுப்பில் உள்ள மகேந்திரன், இப்போது ஜெயா டிவிக்காக மதுரை, கோவைக்கெல்லாம் போய், கமல்ஹாஸனின் விஸ்வரூபம் பட இசை வெளியீட்டு நிகழ்வை படமாக்குவதிலும், ஒளிபரப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

இதென்ன புதுசா இருக்கே... ஜெயா டிவியில் டெக்னீஷியன்கள் பஞ்சமா அல்லது விஜய் டிவியுடன் கூட்டணி வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்களா.. அல்லது மகேந்திரனே மாறி வரப் போகிறாரா? என்பது விஷயம் தெரிந்த பணியாளர்கள் அடிக்கும் கமெண்ட்!

 

காவியத் தலைவன்... ஏஆர் ரஹ்மானுடன் கைகோர்க்கும் வசந்தபாலன்!

Vasantha Balan Joins With Ar Rahman

தான் அடுத்து உருவாக்கும் காவியத் தலைவன் படத்துக்காக ஏஆர் ரஹ்மானுடன் கைகோர்க்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சித்தார்த்.

அரவான் படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் குறித்து கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் அமைதி காத்து வந்தார் வசந்தபாலன்.

கதை உருவாக்கம் முடிந்து காவியத் தலைவன் என படத்துக்குப் பெயரும் சூட்டிவிட்டார். அடுத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணியை உருவாக்கி வருகிறார்.

முதல் முறையாக இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மானுடன் இணைகிறார் வசந்த பாலன். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

ஹீரோவாக சித்தார்த் நடிக்கிறார்.

காவியத் தலைவன் என்ற பெயரில் ஏற்கெனவே கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், விஜயகாந்த் ஒரு படம் நடித்துள்ளார். இப்போது அதே தலைப்பை தனது படத்துக்குப் பயன்படுத்துகிறார் வசந்தபாலன்.

 

முதல்ல 4, 5 ஹிட் கொடுத்துட்டுத் தான் அஜீத்திடம் போகணும்: முருகதாஸ்

First Give 4 5 Hits Then Approach Ajith Ar Murugadoss

சென்னை: புதிதாக வரும் இயக்குனர்கள் முதலில் 4 முதல் 5 ஹிட் படங்கள் கொடுத்த பிறகே அஜீத் குமார் போன்ற பெரிய நட்சத்திரங்களை அணுக வேண்டும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் புதுமுகமாக கோலிவுட்டுக்கு வந்தபோது அவருக்கு வாய்ப்பளித்தவர் அஜீத் குமார். அவர்கள் சேர்ந்த தீனா படம் இருவருக்குமே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் முருகதாஸ் அஜீத்துடன் மீண்டும் சேர ஆவலாக உள்ளார்.

அஜீத் குமார் வளர்ந்து வந்தபோது புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்ததுபோன்று தற்போதும் செய்ய வேண்டுமா என்று முருகதாஸிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

புதிதாக வரும் இயக்குனர்கள் முதலில் 4, 5 ஹிட் படங்களை கொடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் அஜீத் போன்ற பெரிய நடிகர்களை அவர்கள் அணுகலாம் என்றார்.

அஜீத் குமார் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இயக்குனர்களான எஸ்.ஜே. சூர்யா, முருகதாஸ், ஏ.எல்.விஜய் ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2012ல் கோலிவுட்டை கலக்கிய டாப் 5 கிசுகிசுக்கள்

 

'வள்ளி' வரப் போறா... சீரியலுக்கு வரும் நடிகை உமா!

Film Actress Uma Debuts On Small Sc

சன் தொலைக்காட்சியில் வள்ளி சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைக்கிறார் நடிகை உமா.

முன்னாள் கதாநாயகி சுமித்ராவின் மூத்த மகள் உமா சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் பிரபலமாகாவிட்டாலும் நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர். சொக்கத்தங்கம், தென்றல், கடல்பூக்கள், செல்வம் உள்ளிட்ட பல படங்களில் திறமையாக நடித்துள்ளார் உமா.

குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட உமா ஒரு படத்தில் கூட கவர்ச்சியாக நடித்ததில்லை. இதனால்தான் விரைவில் திருமணமாகி பெங்களூர் பக்கம் செட்டிலாகிவிட்டார். அங்கே போய் சும்மா இல்லை. கன்னட சீரியல்களில் நடித்து வருகிறார்.

அந்த அனுபவம்தான் தமிழ் சீரியல்களில் நடிக்க அவரை தூண்டியிருக்கிறது. விடுவார்களா நம் ஊர் சீரியல் தயாரிப்பாளர்கள். பெங்களூருக்கு டிக்கெட் போட்டுப்போய் புக் செய்துவிட்டார்கள்.

வள்ளி என்ற சீரியலில் இப்போது நடித்து வருகிறார். விரைவில் இது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சினிமாவில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த உமா டிவியில் இல்லத்தரசிகளிடம் பெயரெடுப்பாரா, அல்லது இவரும் அழ வைப்பாரா என்று சீரியல் ஒளிபரப்பாகும் போது தெரியும்.

 

ஒய்எம்சிஏ மைதானத்தில் விஸ்வரூபம் இசை வெளியீடு... ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கு!

சென்னை: விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் வெளியீட்டு விவகாரம் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்க, கமல் ஹாஸனோ அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகிவிட்டார்.

viswaroopam audio launch at ymca ground

ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார். இதில் மதுரை, கோவையில் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை நான்கு தினங்களுக்கு முன்பே அறிவித்துவிட்ட கமல், சென்னையில் மட்டும் எங்கே நிகழ்ச்சி நடக்கிறது என்பதை சொல்லாமல் இருந்தார்.

இன்றுதான் இடத்தை அறிவித்துள்ளார். அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை வெளியீட்டை நடத்துகிறார் கமல்.

சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ள விஸ்வரூபம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கெனவே ஜெயா டிவி வாங்கிவிட்டது. இப்போது இசை வெளியீடு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையும் பெற்றுள்ளது. மூன்று நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் ஜெயா டிவிதான் ஒளிபரப்பப் போகிறது.

திறந்தவெளி மைதானத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவது கமலுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தனது விருமாண்டி பட இசை வெளியீட்டை கேம்பகோலா மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தியவர் கமல் என்பது நினைவிருக்கலாம்.

 

விஸ்வரூப விவகாரம்... கமலுக்கு எதிராக திரளும் தியேட்டர்காரர்கள்.. இன்று அவசர கூட்டம்!!

Theater Owners Call Extraordinary Meeting

சென்னை:விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் முதலில் டிவியில் வெளியிடுவதில் கமல் தீவிரமாக இருப்பதால், அவருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் திரள ஆரம்பித்துள்ளனர்.

விஸ்வரூபம் மற்றும் கமல் மீது அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வதென முடிவு செய்ய இன்று திரையரங்கு உரிமையாளர்களின் அசாதாரண கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், "கமல் ஹாஸனின் முடிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் சீரியஸான விவகாரம். சினிமா தியேட்டர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக் கூடியது என்பதால், அசாதாரண கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். இன்று மாலை கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்," என்றார்.

ஆனால் இதற்கெல்லாம் மசிகிறவர் இல்லை கமல். அவரைப் பொறுத்தவரை, படம் அவருடைய சொந்தத் தயாரிப்பு. அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யும் உரிமையும் அவருக்கே உண்டு என்பதால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் வேலையில் இறங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு படைப்பாளிகள் - பெப்சி விவகாரம் வெடித்தபோதுகூட கமல் தன் முடிவை வெளிப்படையாக அறிவித்து பெப்சி தொழிலாளர்கள் பக்கம் நின்றார். அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு அப்போதும் நிலைமை சீரியஸாகி, பின் புஸ்வாணமானது நினைவிருக்கலாம்.

 

ஒரு லிப் டூ லிப் கொடுத்தது இவ்வளவு பெரிய குற்றமா? அலுத்துக் கொள்ளும் ஐஸ்

Aishwarya Rai Did Not Appreciate People

மும்பை: 3 மணிநேரம் ஓடும் படத்தில் வெறும் 2 நொடிகள் வரும் முத்தக் காட்சி குறித்து விளக்கம் கேட்கிறார்களே என்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தூம் இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே போய் ரித்திக் ரோஷனுக்கு லிப் டூ லிப் கொடுத்திருப்பார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,

தூம் படத்தில் முத்தக் காட்சியில் நடித்ததற்காக சில கோர்ட் நோட்டீஸ்கள் கூட வந்தது. ஐஸ்வர்யா நீங்கள் இப்படி நடிக்கலாமா? எங்கள் மகள்களுக்கு நீங்கள் தான் முன் மாதிரியாக இருக்கிறீர்கள், அவர்கள் நீங்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதைப் பார்க்க சங்கடப்படுகிறார்கள் என்றெல்லாம் தெரிவித்தனர்.

நான் ஒரு நடிகை. எனது வேலையைத் தான் நான் செய்கிறேன். 3 மணிநேரம் ஓடும் படத்தில் வெறும் 2 நொடிகள் வரும் காட்சி குறித்து விளக்கம் கேட்கிறார்கள் என்றார்.

 

கிம் ஜிம்முக்குப் போனாலும் அதுவும் நியூஸ்தான்... கவர்ச்சிப் படம் ரிலீஸ்!

மியாமி: ஜிம்முக்குப் போன கிம் கர்தஷியான் ஒரு கிளர்ச்சியான, கவர்ச்சியானப் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

kim kardashian bares her cleavage sexy twitter

32 வயதான கிம் எதைச் செய்தாலும் அது நியூஸாகி விடுகிறது. அவருக்கு ரசிகர்களும் எக்கச்சக்கம். மியாமியில் தங்கியிருக்கும் கிம் கர்தஷியான் நேற்று ஜிம்முக்குப் போய் நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். ஜிம்முக்குப் போய் விட்டு வெளியே வந்த கிம், தனது புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மார்பக கிளீவேஜ் முழுமையாகத் தெரியும் வகையில், உள்ளது.

ஆனால் அவர் ஜிம்முக்குள் போய் என்ன செய்தார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். காரணம், கிம்மின் மேக்கப் கலையவில்லை, வியர்த்து விறுவிறுத்துப் போய்க் காணப்படவும் இல்லை. ஒரு வேளை ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்த பின்னர் மேக்கப் போட்டுக் கொண்டாரோ என்னவோ, தெரியவில்லை.

ஜிம்முக்குப் போன கையோடு குளித்து முடித்து விட்டு சூப்பராக மியாமியை ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்தாராம் கிம். அதையும் டிவிட்டரில்தான் சொல்லியுள்ளார் கிம்.

 

எனக்கு எதிராக சதி நடக்கிறது.. புவனேஸ்வரி

Buvaneswari Sees Plot Against Her

சென்னை: எனக்கு எதிராக சிலர் சதி செய்து வருகின்றனர். இதனால்தான் என் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார்.

தியேட்டரில் வன்முறையில் ஈடுபட்டது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை போலீஸார் இன்று 3 வழக்கில் ஆஜர்படுத்தினர்.

அப்போது கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த புவனேஸ்வரி போலீஸ் வேனில் ஏறுவதற்கு முன்பு அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம், என் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்வதற்கு சதி வேலையே காரணம். இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் விரைவில் இந்த சதிகள் அம்பலமாகும். சட்டப்படி என் மீதான வழக்குகளை சந்திப்பேன் என்றார்.

மனம் கோணாதபடி கவனிக்குமாறு கூறிய போலீஸ் அதிகாரி

இதற்கிடையே புவனேஸ்வரியை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுமாறு ஒரு போலீஸ் அதிகாரி, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பரிந்துரைத்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

 

கருப்பை கேன்சர்: 10ம் தேதி மனீஷா கொய்ராலாவுக்கு அமெரிக்காவில் ஆபரேஷன்

Manisha Undergo Surgery Ovarian Can   

மும்பை: கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு வரும் 10ம் தேதி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா கடந்த மாதம் 28ம் தேதி மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு கருப்பை புற்றுநோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து மனீஷா தரப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தது.

தொடர்ந்து மனீஷா சிகிச்சைக்காக கடந்த வாரம் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் இது குறித்து மனீஷாவின் மேனேஜர் சுப்ரதோ கோஷ் கூறுகையில்,

மனீஷாவுக்கு கருப்பை புற்றுநோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். வரும் 10ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்கின்றனர். இன்றைக்கு தான் அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. ஆனால் மருத்துவர்கள் சில பரிசோதனைகள் செய்த பிறகு அறுவை சிகிச்சையை வரும் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர் என்றார்.

 

மதுரையில் கமல்... விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா குறித்து ஆலோசனை!

Kamal Visits Madurai Venue

மதுரை: விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார் கமல்ஹாஸன்.

விஸ்வரூபம் படத்தின் இசைக் குறுந்தகடு நாளை மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடக்கிறது.

காலையில் முதல் நிகழ்ச்சி மதுரையில்தான் நடக்கிறது. விழாவுக்கு ஒரு நாள் முன்பாகவே மதுரைக்குப் போன கமல் ஹாஸனை மதுரைப் பகுதி கமல் நற்பணி இயக்கத்தினர் வரவேற்றனர்.

நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கமல், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விழா குறித்து ஆலோசனை செய்தார். விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் கோவையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைப் பார்வையிடுகிறார்.

நாளை பிற்பகல் கோவை நிகழ்ச்சி முடிந்ததும் சென்னைக்கு திரும்பும் கமல், ஒய்எம்சிஏ மைதான நிகழ்ச்சியில் விஸ்வரூபம் இசையை வெளியிடுகிறார்.

 

ஏ.ஆர். ரஹ்மான் அழைக்க மாட்டாரா: காத்திருக்கும் தபு

Tabu Waits Ar Rahman S Call

மும்பை: பாலிவுட்டில் நடிகையாக வளம் வரும் தபுவை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாடகியாக்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

அவ்வப்போது தமிழ் படங்களில் தலையைக் காட்டும் பாலிவுட் நடிகை தபு அண்மையில் அமெரிக்கா சென்றபோது அங்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்துள்ளார். அப்போது அவர், தனக்கு இசை மீதுள்ள ஆர்வத்தையும், தான் முறையாக இந்துஸ்தானி இசை கற்றுள்ளதையும் ரஹ்மானிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ரஹ்மான் தபுவை வாழ்த்திவிட்டு ஒரு பாட்டு பாடி அதை சிடியில் ஏற்றி எனக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் குரல் பிடித்தால் நிச்சயம் உங்களை என் படத்தில் பாட வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு குஷியான தபு மும்பை திரும்பிய கையோடு ஒரு பாட்டைப் பாடி அதை சிடியில் ஏற்றி ரஹ்மானுக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது ரஹ்மான் பதிலுக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். ரஹ்மான் வாய்ப்பளித்தால் பாடகியாக ஒரு ரவுண்ட் வரத் திட்டமிட்டுள்ளார்.

 

மெட்ராஸ் டு கோவா... புல்லட்டில் போய்வந்த இயக்குநர் சாந்தகுமார்!!

Santhakumar S Motor Cycle Trip Goa

மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார், சமீபத்தில் தனது புல்லட்டில் சென்னையிலிருந்து கோவாவுக்கு போய்வந்துள்ளார்.

2,600 கிலோ மீட்டர் தூர பயணத்தை 26மணி நேர பயணம் செய்து கடந்துள்ளார் சாந்தகுமார். இடையில் இரண்டு இரவு ஓய்வு எடுத்துள்ளார்.

சாந்தகுமாரின் படம் மட்டுமல்ல, பள்ளிப் பருவமும் வித்தியாசமானதுதான். நல்ல பள்ளி, நல்ல ஆசிரியர்களிடம்தான் படிக்க வேண்டும் என்பது அவரது பெற்றோரின் ஆசையாம். அதனால் கிராமம் தொடங்கி சென்னை வரை ஆறு பள்ளிகளுக்கு மாறினாராம்.

அடுத்த படத்தைத் தொடங்க ஏன் இத்தனை தாமதம் என்றால், "நல்ல கதைக்காக நேரம் எடுத்துக் கொள்கிறேன். நான் கதை எழுத எடுத்து கொள்ளும் நேரம் அதிகமே தவிர படப்பிடிப்பை திட்டமிட்ட குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவேன்," என்றார்.

 

ஷரோன் ஸ்டோன் ஷூட்டிங்குக்கு கவர்ச்சி பிரா அணிந்து வந்த நடிகை!

Sofia Vergara Spills Of Lingerie

நியூயார்க்: உலகின் மிகவும் பணக்கார பிளஸ் கவர்ச்சிகரமான டிவி நடிகை என்ற பெயரைப் பெற்ற சோபியா வெர்கரா, ஒரு திரைப்பட படப்பிடிப்புக்கு மகா கவர்ச்சிகரமாக வந்ததால் செட்டே பற்றிக் கொண்டு விட்டது.

கவர்ச்சிக்குப் பெயர் போன சோபியா, உலக சின்னத் திரை நாயகிகளில் முக்கிய இடத்தில் இருப்பவர். பெரும் கோடீஸ்வரி மட்டுமல்ல, கவர்ச்சியிலும் இவர் மெகா கோடீஸ்வரி ஆவார்.

பேடிங் கிகோலா என்ற புதிய நடித்து வரும் சோபியாவுக்கு 40 வயதானாலும் அது சற்றும் அவரது அழகில் வெளிப்படுவதில்லை. அந்த அளவுக்கு கவர்ச்சியில் ஜொலிக்கும் சோபியா, நியூயார்க்கில் நடந்த படப்பிடிப்புக்கு மிகவும் கவர்ச்சிகரமான காஸ்ட்யூமில் வந்து செட்டில் இருந்தவர்களை வெலவெலக்க வைத்து விட்டார்.

இன்னும் சொல்லப் போனால் அவர் போட்டிருந்தது டிரஸ்ஸே இல்லை. மாறாக, ஜன்னலுடன் கூடிய கருப்பு நிற லேஸ் வைத்த பிராதான் அவர் போட்டிருந்தது. கார்செட் ஸ்டைல் பிரா அது.

ஷூட்டிங்கின்போது சோபியாவுடன் நடித்தவர் பழம்பெரும் கவர்ச்சி நடிகையான ஷரோன் ஸ்டோன். 54 வயதான ஸ்டோனுக்கும், சோபியாவுக்கும் இடையிலான செக்ஸியான காட்சிகளை அன்று படம் பிடித்துள்ளனர். அதில் நடிக்கத்தான் இப்படிக் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட வந்திருந்தாராம் சோபியா. இந்தப் படத்தை இயக்குபவர் ஜான் டுர்சுரோ. இவருக்கு படத்திலும் முக்கிய ரோல் உண்டு. அதாவது ஸ்டோன் மற்றும் சோபியாவுடன் மாறி மாறி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் பாத்திரமாம். இந்தக் காட்சிகளைத்தான் சில நாட்களாக நியூயார்க் ஸ்டுடியோவில் வைத்துப் படமாக்கி வருகின்றனராம்.

சரி படத்தில் உங்களுக்கும் ஸ்டோனுக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பது போல காட்சிகள் உள்ளனவா என்று சோபியாவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள்தான் உள்ளன. அதை காதல் காட்சி என்று கூறலாம், ஆனால் லெஸ்பியன் அல்ல என்றார்.

 

மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலம் எடுத்த லேடி காகா

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகப்புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்களை பாப் பாடகி லேடி காகா ஏலத்தில் எடுத்துள்ளார்.

பாப் இசைச் சக்கரவர்த்தி என்று அவருடைய ரசிகர்களால் புகழப்படுபவர் மைக்கேல் ஜாக்சன். தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகம் முழுவதும் பலகோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். உடல்நலக்குறைவினார் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார்.

lady gaga buys michael jackson item at auction

மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தாலும் அவரது புகழ் இன்னமும் மறையவில்லை என்பதை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டது. மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த உடைகள், இசை நிகழ்ச்சிகள், பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் போன்றவை ஏலம் விடப்பட்டன.

இந்த ஏல நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பங்கேற்றனர். பிரபல பாப் இசைப்பாடகி காகா, மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலத்தில் எடுத்தார். மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகை என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார் லேடி காகா.

மைக்கேல் ஜாக்சனின் வெள்ளை நிற க்ளவுஸ் ஒரு லட்சத்து 92 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது. அதேபோல் அவர் அணியும் அழகிய சட்டை ஒன்று 2 லட்சத்து 40 ஆயிரம் டாலருக்கு விற்பனையானது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த நிதியில் ஒரு பகுதியை நலத்திட்ட உதவிகளுக்காக செலவிடப்படும் என ஏலம் நடத்திய ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் 2 வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது?

சென்னை: பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் இரண்டு மோசடிப்புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து விரைவில் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

goondas power star sreenivasan

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.65 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதேபோல் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார் சீனிவாசன்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாறு பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவர் 5 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றுக்கொண்டு சீனிவாசன் ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் கொடுத்திருந்தார். இது பற்றி அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனரை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் நடிகர் சீனிவாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டன.

இப்போது கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே 2 மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்து 'லட்டு தின்று கொண்டிருக்கும்' நடிகர் சீனிவாசன் மீது மேலும் மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே விரைவில் இந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் இம்முறை அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் கூறப்படுகிறது.

சந்தானத்துடன் லண்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து வரும் பவர் ஸ்டார், சிறையில் அடைபட்டு களி திண்பாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.