சென்னை: மதம் மாறும்படி தன்னை வற்புறுத்தும் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக நடிகை ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
ஒயிலாட்டம் மூலம் கோலிவுட் வந்த ஷர்மிளா கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் ராஜேஷ் என்ற என்ஜினியரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆடனிஸ் ஜூட் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஷர்மிளா தனது கணவரை பிரிந்து வாழ்கிறார்.
மேலும் தன்னிடம் இருந்து மகனை கடத்திய கணவர் மீது அவர் கடந்த வாரம் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
நான் ஒரு கிறிஸ்தவ பெண். அது தெரிந்து திருமணம் செய்து கொண்ட என் கணவர் என்னை இந்து மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்துகிறார். என் மேல் சந்தேகப்படும் அவர் நான் வெளியாட்களுடன் பேச அனுமதிப்பதில்லை. தற்போது இரவு நேரத்தில் செல்போனில் மிரட்டுகிறார். இனியும் அவருடன் வாழ முடியாது என்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்.
முதலில் இருவரும் மனமொத்து பிரிய திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது அவரை விவாகரத்து செய்வது என்று தீர்மானித்துள்ளேன். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். என் மாமியார் வேறு தொல்லை கொடுக்கிறார். என் மகனையும் கடத்திச் சென்றுவிட்டனர் என்றார்.