4/22/2011 12:02:52 PM
கோ' படத்தின் மூலம் தமிழ் திரையுலககிற்கு அறிமுகம் ஆகியுள்ளார் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. இந்த படத்திற்கு பிறகு கார்த்திகா தமிழ் பட வாய்ப்பு நிறைய வரும் என எதிர்பார்க்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கார்த்திகா எனது தாய் மொழி மலையாளம். ஆனால் தெலுங்கில் அறிமுகமானேன். மொழி தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். இரண்டாவதுப் படம் மலையாளம். அதில் சமஸ்கிருதம் பேச வச்சு கஷ்டப்படுத்திட்டாங்க. கோ-வில் பேசிய தமிழ்தான் ஈஸியாகவும், இயல்பாகவும் இருந்திச்சி. அதனால் தமிழில் நடிக்கதான் பிடிக்கும் என்றார் கார்த்திகா.