தமிழ் படங்கள் போதும் :ஆதி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆதி நடித்த 'அய்யனார்' தீபாவளிக்கு வெளிவருகிறது. தற்போது 'ஆடுபுலி', 'அரவான்' படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகளை அவர் மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: தெலுங்கு, மலையாளத்தில் நடிக்கக் கூடாது என்கிற எண்ணம் இல்லை. இப்போதைக்கு தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி நல்ல இடத்தை பிடித்து விட்டு, பிறகு மற்ற மொழிகளில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இருந்தாலும் 'ஈரம்' தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 'அரவான்' தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகிறது. எனது உடலமைப்பு ஆக்ஷன் கேரக்டர்களுக்கு பொருந்துவதால் அப்படிப்பட்ட கதைகளாகவே வருகிறது. 'அய்யனார்' ஆக்ஷன் படம். 'ஆடுபுலி' பேமிலி படம். 'அரவான்' வேறொரு தளத்தில் செல்லும் படம். இப்படி கலந்து நடித்து ஆக்ஷன் இமேஜ் வந்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன். அடுத்து காமெடி படம் ஒன்றில் நடிக்கும் ஆசையில் இருக்கிறேன்.


Source: Dinakaran


Source: India Glitz
 

அமரா படத்திலிருந்து ஓவியா நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஞாபகங்கள்' படத்தையடுத்து ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் படம் 'அமரா'. இதில் புதுமுகம் அமரன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக 'களவாணி' ஓவியா ஒப்பந்தமாகியிருந்தார். திடீரென்று அவரை நீக்கிவிட்டு 'காதலர் குடியிருப்பு' ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளனர். இதுபற்றி ஜீவனிடம் கேட்டபோது, "ஹீரோயினாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரது கால்ஷீட் பெறுவதில் பிரச்னை வந்தது. கதைப்படி ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. எப்போதும் தளத்தில் இருக்க வேண்டி இருக்கும். ஆனால், அவரால் அப்படி வர முடியாது என்றார். இதனால் அவருக்கு பதில் ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளோம்" என்றார்.

Also Read Oviya thrown out of ‘Amara’

Source: Dinakaran
 

கவர்ச்சிக்கு மாறினார் திஷா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஷாஜி கைலாஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் கே.வாசு இயக்கும் படம் 'அச்சமின்றிÕ. படம் பற்றி அவர் கூறியது: கால்சென்டர், மொபைல் ஸ்டோர்களில் வேலை செய்யும் இளைஞர்கள் பெருகிவிட்டனர். இதில்  நன்றாக சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் பலர் பெற்றோரை கவனிப்பதில்லை. காதல் வலைகளில் சிக்குகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது. வழி தவறிப்போகும் ஹீரோ வேடத்தில் விநாயக் நடிக்கிறார். 'தமிழ்ப்படம்Õ திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். மொபைல் ஸ்டோரில் வேலை செய்யும் பெண் வேடம் ஏற்கிறார். அங்கு அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை சில பெண்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அது படத்தில் காட்சிகளாக வரும். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் மலேசியாவில் 60 நாட்கள் நடக்கிறது. இதற்கு முன் திஷா பாண்டே ஹோம்லியாக நடித்திருந்தார். இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார்.


Source: Dinakaran


Source: India Glitz
 

மாதவனின் ஆட்டோகிராஃப் :முதல் காதல் பற்றி நெகிழ்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தன் இளம் வயது கேர்ள் பிரெண்ட் பற்றி பேஸ்புக்கில் மாதவன் கூறியது: சிறுவயது முதல் என் குடும்பத்தைவிட்டு பிரிந்ததே இல்லை. வெளியில் சென்றால் நெருங்கிய நண்பர்களுடன் இருப்பேன். அப்போது எனக்கு 16 வயது. முதன் முறையாக கனடா நாட்டுக்கு பள்ளி சார்பில் ஒரு நிகழ்ச்சிக¢காக சென்றேன். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லாமல்  முதன்முறையாக வெளிநாட்டில் தங்கும் அனுபவம். மனசுக்குள் ஒரு நடுக்கம். யாரிடம் எப்படி பழகுவது என்று புரியாத வயது. கனடா செல்வதற்கு முன் எனக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைத்தார். அழகும் திறமையும் நிறைந்தவர். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. ஒருவரையொருவர் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டோம். எனது ஆசை, கோபம், லட்சியங்களை அவருடன் பகிர்ந்து கொண்டேன். கனடா செல்வதை அவரிடம் சொன்னதும் திடீரென்று ஓடிவந்து, என்னை இருக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டார். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தேன். அதுதான் ஒரு பெண் என்னை கட்டி அணைத்த முதல் சம்பவம். வித்தியாசமான உணர்வை பெற்றேன். அதை என்னால் விவரிக்க முடியவில்லை. சூழ்நிலையால் நாங்கள் பிரிந்துவிட்டோம். ஆனாலும் அந்த நிமிடங்கள் பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்துவிட்டது.


Source: Dinakaran


Source: India Glitz
 

தசராவுக்கு எந்திரன் ‘டச்’ கொடுத்த கர்நாடக மாணவர்கள்!

Rajinikanth and Aishwarya Rai
மைசூர், பெங்களூரில் இது தசரா சீஸன். ஆனால், இந்த ஆண்டோ எந்திரன் சீஸன் போலிருக்கிறது!
பொதுவாக தசராவுக்கு களிமண் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி ஊர்வலமாய் கொண்டு செல்வது வழக்கம்.
இந்த முறை அதில் ஒரு மாறுதல். சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பார்த்த எஃபெக்டில், சிறு ரோபோக்களை உருவாக்கி, அவற்றை ஊர்வலமாகக் கொண்டு செல்கிறார்களாம்.
யானைகள், அழகிய ரதம், கிராமியக் காட்சிகள், பண்டைய போர்க்களக் காட்சிகள் என பாரம்பரியம் சொல்லும் இந்த தசரா ஊர்வலத்தில், ரோபோ வடிவ ரஜினியின் சிலைகளும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதுதவிர மேலும் சில உருவங்களையும் ரோபோ வடிவத்திலேயே செய்து எடுத்துச் செல்கிறார்களாம்.
“களிமண் பொம்மைகள் மழையால் கரைந்துவிடக்கூடும். ஆனால் இதுபோன்ற ரோபோட்டிக் பொம்மைகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. எங்களால் புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளவும் முடிகிறது”, என்கிறார்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கவிருக்கும் கர்நாடக பள்ளி மாணவர்கள்.
மனதுக்குப் பிடித்த விஷயத்தின் வடிவில் கல்வி கற்றுக் கொள்வது ஒரு சிறந்த முறை. இந்த மாணவர்கள் எந்திரன் வடிவில் கல்வி கற்க ஆசைப்படுகிறார்கள். அதை அனுமதிப்பதில் தவறில்லை, என்கிறார்கள் இந்த மாணவர்களின் ஆசியர்கள்.