சுந்தரபாண்டியன் வெற்றியால் இயக்குநருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு!

Sundarapandiyan Director Sr Prabhakaran   
சசிகுமார் நடித்து தயாரித்த சுந்தரபாண்டியன் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரனுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.

அடுத்து ரெட்ஜெயன்ட் மூவீசுக்காக படம் இயக்கவிருக்கிறார் பிரபாகரன்.

சுந்தரபாண்டியன் படத்தை சமீபத்தில் பார்த்த உதயநிதிக்கு, படமும் அதை எடுத்த விதமும் ரொம்பவே பிடித்துப்போக, அந்த யூனிட்டை அப்படியே ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

"சுந்தரபாண்டியன் அருமையான படம். ஜாலியா ரசிச்சுப் பார்த்தேன். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்," என்று ட்விட்டரில் தெரிவி்த்திருந்த உதயநிதி, அடுத்த நாளே பிரபாகரனை அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்.

ரெட்ஜெயன்ட் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குங்கள் என்று கூறி, மற்ற விவரங்களையும் பேசி முடித்தாராம்.

இந்தப் படத்தில் உதயநிதியே நாயகனாக நடிப்பாரா அல்லது வேறு ஹீரோ நடிப்பார்களா என்பதை ஓரிரு நாளில் அறிவிக்கவிருப்பதாக பிரபாகரன் தெரிவித்தார்.
 

சூப்பர் ஸ்டார் மகளுக்கு இது மறக்கமுடியாத பிறந்த நாள்!

Soundarya Celebrates Her Crucial Birthday Today
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு இந்த ஆண்டு பிறந்த நாள் மறக்க முடியாதது.

காரணம் அவரது கன்னி முயற்சியான கோச்சடையான். அதுவும் இந்தியாவின் ஆனானப்பட்ட இயக்குநர்களே தவம் கிடக்கும் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியுள்ள அவரது முதல்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகப் போகிறது.

அந்த மகிழ்ச்சி மற்றும் பரபரப்புடன் தனது பிறந்த தினத்தை இன்று கொண்டாடினார் சௌந்தர்யா.

ஒரு கிராபிக் டிசைன் மேற்பார்வையாளராக தனது கேரியரைத் தொடங்கிய சௌந்தர்யா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன் என ரஜினியின் படங்களில் கிராபிக் டிசைனராகப் பணியாற்றினார்.

அதே காலகட்டித்தில் ரஜினியை வைத்து அனிமேஷன் படமாக சுல்தான் - தி வாரியரைத் தொடங்கினார். ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

பின்னர் கோவா என்ற படத்தைத் தயாரித்த சௌந்தர்யா, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகுதான் கோச்சடையானுக்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் பர்பார்மன்ஸ் கேப்சரிங் 3 டி படம் என்ற பெருமையுடன் வெளியாகவிருக்கும் கோச்சடையானின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சௌந்தர்யா, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளார்.

வரும் டிசம்பர் 12 அல்லது 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக மொழிகள் மற்றும் அரங்குகளில் கோச்சடையானை வெளியிடவிருக்கிறார் சௌந்தர்யா.
 

சீனா போகும் இயக்குநர் ஷங்கர்!

Shankar Shoot The Second Schedule I China
இயக்குநர் ஷங்கரின் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், இந்தப் படம் சீனாவில் படமாகப் போகிறது என செய்திகள் வரும். ஏற்கெனவே ஜீன்ஸ் படத்துக்காக ஒரு காட்சியை சீனாவில் ஷூட் செய்தவர் ஷங்கர்.

ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு அவர் எந்தப் படத்துக்கும் சீனா போகவில்லை. இந்த முறை ஐ படத்துக்காக சீனா போகிறார். ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல... தொடர்ந்து 45 நாட்கள் அங்கே ஷூட்டிங் நடத்துகிறார் ஷங்கர்.

அவருடன் நாயகன் விக்ரம், நாயகி எமி, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் உள்பட 60 பேர் கொண்ட குழுவினர் சீனாவுக்குப் போகிறார்கள். சந்தானமும் உடன் செல்கிறார்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையை ஏ ஆர் ரஹ்மான் அமைக்கிறார். முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

முழுக்க முழுக்க ரொமான்டிக் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது.
 

தீபிகா படுகோனுக்கு தேசிய விருது வேண்டுமாம்!


I Am Happy That Sridevi Likes My Work Deepika Padukone
தேசிய விருது வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

தீபிகாவின் நடிப்புத் திறமைக்காக அவருக்கு ஸ்மிதா பட்டீல் நினைவு விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்டபின்னர் பேசிய தீபிகா, இதுபோன்ற விருதுகள் தனக்கு மேலும் உற்சாகம் அளிப்பதாக கூறியுள்ளார்.

நடிப்பிற்காக தேசிய விருது வாங்க வேண்டும் என்று எல்லோரையும் போல எனக்கும் ஆசை இருக்கிறது. அது நிச்சயம் நிறைவேறும். கேமரா முன் நிற்கும் போது விருதுக்காக நடிக்கிறோம் என்று நினைக்காமல் இயல்பாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதுவே நமக்கு விருதினை பெற்றுத்தரும் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.

இதனிடைய தீபிகாவின் நடிப்பை நடிகை ஸ்ரீதேவி புகழ்ந்துள்ளார். சமீபத்திய நடிகைகளில் தீபிகாவின் நடிப்பு தனக்கு பிடிக்கும் என்றும் ஸ்ரீதேவி கூறியிருந்தார். இது குறித்து கருத்துக் கூறிய தீபிகா, மிகப்பெரிய நடிகையான ஸ்ரீதேவி இங்கிலீஸ்,விங்கிலீஸ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருப்பது என்னைப் போன்ற நடிகைக்கு உற்சாகம் தருகிறது. அவ்வளவு பெரிய நடிகை என் நடிப்பை புகழ்ந்திருப்பது எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததைப் போல உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

தென்றலுக்கு என்ன ஆச்சு? சக்சேனாவிடம் கைமாறுகிறது?

Is Thendral Goes Saxena Hand
மத்திய அமைச்சராக உள்ள ஜெகத்ரட்சகன் கடந்த திமுக ஆட்சியின்போதே ஆரம்பித்த சேனல் தென்றல்.

அவரது தினசரி பத்திரிகை மூடப்பட்டதும், அந்த அலுவலகத்தை அப்படியே தென்றலுக்கு மாற்றிக் கொடுத்தார்கள்.

சோதனை ஒளிபரப்பு நடந்து, பின்னர் சேனலும் ஆங்காங்க லேசாக எட்டிப் பார்த்தது. ஆனால் ஏனோ முழு வீச்சில் நடக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக, இந்த சேனலை ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் ஐயப்பன் நடத்தப் போவதாக செய்தி வெளியானது.

இதற்கிடையே, தென்றலை செழியன் என்பவரது நிர்வாகத்தில் ஒப்படைத்துள்ளாராம் ஜெகத்ரட்சகன்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, தென்றல் டிவி நிர்வாகத்தை தற்காலிகமாக செழியனிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அடுத்த மாதமே இந்த சேனல் சக்சேனா - ஐயப்பன் குழுவிடம் போகிறது. அவர்களும் ஏற்கெனவே சேனல் ஆரம்பிக்கும் நோக்கத்தில் இருந்ததால், இந்த டீலை ஒப்புக் கொண்டார்களாம்.

இதுகுறித்த பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டனவாம். தென்றல் சேனலில் சக்சேனா தரப்பு 26 சதவீதம் முதலீடு செய்யப் போவதாகவும் தெரியவருகிறது.

ஜெகத்ரட்சகன் இன்னொரு சேனலுக்கான உரிமமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரோட்டில் நின்றவரை காரால் இடித்துத் தள்ளிய லின்ட்சே லோஹன் கைது

Lindsay Lohan Arrested New York Hitting Pedestrian

நியூயார்க்: ரோட்டில் நின்றிருந்தவரை காரால் இடித்துத் தள்ளி விட்டு போன நடிகை லின்ட்சே லோஹனை போலீஸார் கைது செய்தனர்.

26 வயதாந லின்ட்சேவை நியூயார்க் போலீஸார் கைது செய்துள்ளனர். மிகவும் குறைந்த வேகத்தில் கார் வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. புதன்கிழமை நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மன்ஹாட்டனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்தார் லின்ட்சே. அங்கிருந்த பார்க்கிங் பகுதியில் நுழைந்த அவர் காரைப் பார்க் செய்ய முயன்றபோது அருகில் நின்றிருந்த ஒருவர் மீது மோதி விட்டார். இதில் அந்த நபருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் காரை விட்டு இறங்கி ஹோட்டலுக்குள் போய் விட்டார் லோஹன். இந்த விபத்தை நேரில் பார்த்த சிலர் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் நேராக ஹோட்டலுக்குள் சென்று லோஹனைக் கைது செய்து கொண்டு சென்றனர்.

இருப்பினும் தற்போது அவரை ஜாமீனில் போலீஸார் விடுவித்துள்ளனர்.

 

கரீனாவின் ‘ஹீரோயின்’ படம் பார்த்து அழுத கரீஷ்மா

Karisma Kapoor Cried Ten Minutes After Watching Heroine

கரீனா கபூர் நடிப்பில் வெளியாக உள்ள ஹீரோயின் திரைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் அந்த படத்தில் கரீனாவின் நடிப்பைப் பார்த்து அவருடைய சகோதரியும், நடிகையுமான கரீஸ்மா கபூர் கண் கலங்கிவிட்டாராம்.

ஹீரோயின்' படத்தில், சினிமா நடிகையாகவே கரீனா கபூர் நடித்திருக்கிறார். போதைக்கு அடிமையானவராக இந்த படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் பற்றி கரீனா, இந்த படம் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார். என்னுடைய முதல் விமர்ச்சகர் என் சகோதரி கரீஸ்மாதான். அவர் இந்த படத்தை பார்த்து பத்து நிமிடத்திற்குள் கண் கலங்கிவிட்டார். அதனை என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் கரீனா.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கரீஸ்மா கபூர், ஹீரோயின் 'படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்தேன், இந்த படத்தில் கரீனான் நடிப்பு அற்புதமாக உள்ளது. அவருடைய நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த படம் வந்த பிறகு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படம் நிச்சயம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்பதில் சந்தேகம் இல்லை' என்றார்.

 

சிங்கம் 2... அனுஷ்காவுடன் நடிக்கத் தயங்குகிறாரா ஹன்சிகா?

Hansika S Dilemma On Singam 2   

சென்னை: சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் இரண்டாவது நாயகியாக நடிக்க ஹன்சிகா தயங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் பூஜை நேற்றுதான் சென்னையில் நடந்து, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் இரு நாயகிகள். முதல் நாயகி அனுஷ்கா. இரண்டாவதுதான் ஹன்சிகா. வரிசையாக வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்போது வாலு, வேட்டை மன்னன் என பெரிய படங்களில் சோலோ நாயகியாக நடிக்கிறார். இப்படி முன்னணியில் உள்ள தன்னை இரண்டாவது நாயகியாக்கியதில் ஹன்சிகாவுக்கு ஏக வருத்தமாம்.

இரண்டாவது நாயகியாக நடித்தால், அந்த இமேஜ் தான் அடுத்து ஒப்பந்தமாகும் படங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எப்படி இந்தப் படத்தைத் தவிர்ப்பது என அவர் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகையின் இந்த குழப்பத்தை அறிந்த இயக்குநர், என் படத்தில் ஸ்கிரிப்டுக்குதான் முக்கியத்துவம். அதன் படி இருவருக்குமே சமமான வேடங்கள்தான்... கவலை வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

 

அமீரின் அடுத்த படம்.... இளையராஜாவா... 'இளைய'ராஜாவா?

Ameer Requests Raaja Compose His Next Flick

விஜய்யை வைத்து தான் இயக்கும் அடுத்த படமான கண்ணபிரானுக்கு இசையமைத்துத் தரவேண்டும் என இளையராஜாவைக் கேட்டுள்ளாராம் இயக்குநர் அமீர்.

தனது முதல் படமான மௌனம் பேசியதே-யிலிருந்து இசைஞானியின் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவின் இசையைத்தான் அமீர் பயன்படுத்தி வருகிறார்.

பருத்தி வீரனில் யுவன் இசையில் இளையராஜா பாடிய அறியாத வயசு... பாடல் மிகப் பிரபலமானது.

தனது அடுத்த படத்துக்கு எப்படியாவது இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒரு மேடை நிகழ்ச்சியில் அமீர் கேட்டுக் கொள்ள, 'நீங்கள்லாம் ரத்தமும் அரிவாளுமா திரியறீங்களேப்பா... அது நான் சரிப்பட மாட்டேன். யுவனே போதும்..', என்றார் சிரித்தபடி ராஜா.

ஆனால் தொடர்ந்து அமீர் ராஜாவை இசையமைக்கக் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது ஆதிபகவன் படத்தை முடித்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார் அமீர். அதற்குள் விஜய்யை வைத்து அவர் இயக்கும் அடுத்த படமான கண்ணபிரான் குறித்து செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

இந்தப் படத்துக்கு இசையமைத்துத் தர வேண்டும் என அமீர் இளையராஜாவுக்ககு கோரிக்கை விடுத்துள்ளாராம். கண்ணபிரானை இசை மழையால் நனைப்பாரா அல்லது தன் வீட்டு 'இளைய'ராஜா யுவனே போதும் என்று விட்டுவிடுவாரா... பார்க்கலாம்!

இதற்கு முன் இளையராஜா இசையமைத்த விஜய் படங்களான காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ப்ரெண்ட்ஸ் ஆகியவற்றின் இசை - பாடல்கள் பெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

தனுஷுக்கு டைபாய்ட் - வீடடில் ரெஸ்ட்!

Danush Suffers With Typhoid Taking Rest At Home   

நடிகர் தனுஷ் டைபாய்ட் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்தியில் ராஞ்ஜனா, தமிழில் பரத்பாலாவின் மரியான் மற்றும் சற்குணத்தின் சொட்டவாளக்குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

காசியில் இந்திப்படமான ராஞ்ஜனா ஷூட்டிங்கில் பங்கேற்றபோதுதான், தனக்கு டைபாய்சட் காய்ச்சல் என்பதே தனுஷுக்கு தெரியவந்ததாம். ஆனால் முதல்கட்ட ஷூட்டிங் என்பதால் சமாளித்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

ஆனால் பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் ஷூட்டிங்குக்கு பிரேக் கொடுத்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம்.

இதுகுறுத்தி தனுஷின் உறவினர் கொலவெறி புகழ் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில், "டைபாய்ட் காய்ச்சலால் அவதிப்படுகிறார் நடிகர் தனுஷ். வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் விரைவில் மீண்டும் காசிக்குப்போய் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்," எனத் தெரிவித்துள்ளார்.

 

'நினைத்தாலே இனிக்கும்': கேட்க கேட்க ருசித்த பாடல்கள்!

Ninaithale Inikkum The Legendry Ms Vishwanathan

காலத்தால் அழியாத பழைய பாடல்கள் என்றைக்கு கேட்டாலும் புதிதாகவே இருக்கும். ஜெயா டிவியில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஒளிபரப்பான ‘நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல 50க்கும் மேற்பட்ட மனதை மயக்கும் பாடல்களை செவி குளிர கேட்க முடிந்தது.

ஜெயா டிவி 14 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பிரபல இசையமைப்பாளர்களான இசை இரட்டையர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு விழா எடுத்து கவுரவப்படுத்தினார்கள். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் `நினைத்தாலே இனிக்கும்' என்ற தலைப்பில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். இந்த மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி கவுரவிக்கப் பட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் ஜெயா டிவி சார்பில் நடைபெற்ற சர்வேயில் இசைச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெரும்பாலான மக்கள் வழங்கியிருந்தனர். இந்த பட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

‘நினைத்தாலே இனிக்கும்' மெல்லிசைக் கச்சேரியில் பாடப்பட்டவை அனைத்தும் செவிகளைக் குளிரவைக்கும் பாடல்களாக இருந்தன.

விழா நாயகன் எம்.எஸ்.வி. புல்லாங்குழல் கொடுத்த பாடல்களே... என்ற பாடலை பாடி நிகழ்ச்சியைத் துவங்கினார். ‘ஏழு ஸ்வரங்களுக்குள்'.... பாடலை அதே இனிமை மாறாமல் வாணிஜெயராம் பாடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். இந்த நிகழ்ச்சியை பாடகி சின்மயி, சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றிய சக கலைஞர்கள், நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தமிழ் திரை உலகின் பல முன்னணி திரைப்பட நட்சத்திரங்களும் முன்னணி இயக்குனர்களும், பிரபலங்களும் பங்கேற்றனர். பழங்கால நடிகர், நடிகையர்கள் பங்கேற்று தங்களின் மலரும் நினைவுகளை பேசினார்கள்.

இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகையர்களின் குத்தாட்டம் எதுவும் இல்லாமல் இன்னிசை கச்சேரியோடு முடிந்த நிகழ்ச்சி இதுவாகத்தான் இருந்திருக்கும்.

அமுதகானமாய் ஒலித்த மெல்லிசைப் பாடல்களின் நினைவுகளோடு அன்றைய தினம் கழிந்தது.

 

தியேட்டர்களில் காட்சிகள் ரத்து இல்லை- வழக்கம் போல படம் பார்க்கலாம்!

No Bandh Theatres

சென்னை: பாரத் பந்த்தில் தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இன்று வழக்கம் போல திரைப்படங்கள் காட்டப்படும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். காலை, பகல் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும் என்று கூறியுள்ளார்.

அதற்கேற்ப சென்னையில் காலை மற்றும் பகல் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும் என்று தியேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் 2 காட்சிகள் ரத்து

அதேசமயம், திருப்பூரில் பந்த்தில் தாங்கள் கலந்து கொள்வதாக கூறியுள்ள மாவட்ட தியேட்டர் உரி்மையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம், காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

தடம் மாறும் பெற்றோர்கள் : தடுமாறிய பிள்ளைகள்

Solvathellam Unmai Reality Show

"நான் என்னோட புருஷனையும், பிள்ளையும் விட்டுட்டு இன்னோரு பையனோட வந்துட்டேன். 15 நாள் ஆச்சு" என்று கொஞ்சம் கூட தடுமாற்றமில்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார் இளம் பெண். ஏதோ தோசை சாப்பிட்டேன் ஏப்பம் வந்திச்சு என்கிற ரீதியில் அவர் பேசுவதைக் கேட்க நமக்குத்தான் அதிர்ச்சியாக இருந்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் கள்ளக்காதலும், கொலையும், துரோகமும், கண்ணீரும்தான் பகிர்ந்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ரியாலிட்டி ஷோவில் அடுத்தவரின் கண்ணீர் நமக்கு பொழுதுபோக்கு என்கிற ரீதியில் போய்விட்டது.

சில தினங்களுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த 20 வயது பெண் பங்கேற்றார். தந்தையும் தாயும் பிரிந்து வேறு வேறு வாழ்க்கையைத் தேடிப் போகவே தந்தையிடம் சில நாள், தாயிடம் சில நாள் வாழவேண்டியதாயிற்று குழந்தைகள். இரண்டு பெண் ஒரு ஆண் என மூன்று குழந்தைகளை விட்டு பிரிந்த பெற்றோர்கள், பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றி நினைக்காமல் வேறு திருமணம் செய்து கொண்டனர்.

தாயை மறுமணம் செய்தவன் விட்டு ஓடிப்போகவே தாயின் வாழ்க்கை நடுத்தெருவில். இதனால் தந்தையிடம் தஞ்சம் புகுந்தனர் பிள்ளைகள் மூவரும். முத்தபெண்தான் தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்பாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்காங்க அவங்களை விட்டுட்டுதான் எங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என்று அதிர்ச்சித் தகவலை சொன்ன அந்தப் பெண், தனது சித்தியே தன்னை காதலிக்க தூண்டிவிட்டதாக முதலாவதாக குண்டைப் போட்டார்.

காதலித்து திருமணம் செய்த வாழ்க்கையில் நிம்மதியில்லை. கணவரின் சகோதரர்களின் பாலியல் டார்ச்சர், கணவனின் சந்தேகம், அதனால் அடி உதை போன்ற கொடுமைகளுக்கு ஆளானதாக கூறினார். குழந்தை பிறந்த பின்னர் நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்து விரட்டி விட்டனர்.

இதனால் புருஷனையும் குழந்தையையும், விட்டுட்டு பக்கத்து வீட்டுப்பையனுடன் 15 நாளைக்கு முன்பு ஓடி வந்து விட்டேன் என்று கேஷூவலாக சொல்லிக்கொண்டே வந்தார். இதைக்கேட்டு கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாத நிர்மலா பெரியசாமி, இது செல்லாத கல்யாணம். நீ எப்படி 20 வயசுல இது போல காரியத்தை செய்தே என்று சொன்னார்.

சரி நிகழ்ச்சிக்கு வருவோம் இந்தப்பெண் இந்த அளவிற்கு வந்து டிவியில் பேசுவதற்குக் காரணம் அவரது தங்கைதான். தங்கைக்கு 18 வயது ஆகிறது. அவளும் இப்போது காதலிக்கிறாளாம். நான் காதலித்து என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. அவளை காதலிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள் என்பதற்காகவே உங்களிடம் அழைத்து வந்தேன் என்று கூறுகிறாள் அந்த சின்னப்பெண்.

உடனே நிர்மலா பெரியசாமி அந்தப் பெண்ணைப் பார்த்து, காதல்னா என்னம்மா? அதற்கு அர்த்தம் தெரியுமா? என்று கேட்கவே, அந்த பெண் எதுவும் சொல்லாமல் சிரிப்பை மட்டுமே பதிலாக தருகிறாள்.

பெற்றோர்கள் தடம்மாறிப் போனதால் பிள்ளைகளின் வாழ்க்கை எந்த அளவிற்கு தடுமாறிப்போகிறது. என்று சொல்லாமல் ‘சொல்லியது சொல்வதெல்லாம் உண்மை'.

 

ஆரோ 3 டி ஒலியுடன் வருகிறது கமலின் விஸ்வரூபம்!

Kamal Uses Auro 3 D Technique Vishwaroopam

ஹாலிவுட் தயாரிப்பாளரே வியக்கும் அளவுக்கு படத்தை எடுத்த உலகநாயகன் கமல்ஹாஸன், எதற்காக இத்தனை நாள் அமைதி காக்கிறார்?

இதுதான் திரைத் துறை மற்றும் பத்திரிகையாளர்களும் கேட்டு வந்த கேள்வி. இதோ அதற்கான விடை... படத்துக்கு மேலும் மேலும் சிறப்பு சேர்க்க உலகில் என்னென்ன புதிய தொழில் நுட்பங்கள் உள்ளனவோ அவற்றைத் தேடிப்பிடித்து பயன்படுத்துவதில் வல்லவரான கமல், இந்தப் படத்துக்கும் அப்படி ஒரு புதிய தொழில்நுட்பத்தைச் சேர்த்து வருகிறார்.

AURO 3D எனும் ஒலித் தரத்துடன் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மேலும், பல படிநிலைகளுக்கு உயர்த்தி பெரும் கிளர்ச்சியை நமக்களிக்கும் திறன் இந்த ஆரோ 3 டிக்கு உண்டு.

இதுகுறித்து இன்று கமல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்த AURO 3D தொழில்நுட்பத்தை விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மற்ற தொழில்நுட்பங்களைப் போல் அல்லாது, AURO 3D இயங்குதளத்தின் செயல் உருவாக்கமும், மிகக்குறைந்த நிறுவுதல் நேரமும் இதன் பெரும் சிறப்பு.
என்னுடய நண்பர் வில்ஃப்ரெடின் இந்த AURO 3D தொழில் நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரை அரங்குகளும், அதன் நிர்வாகிகளும் வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என உறுதியளிக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

 

என்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் வினய் பிறந்த நாள் - த்ரிஷா வாழ்த்து!

என்றென்றும் புன்னகை படப்பிடிப்புத் தளத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் வினய்.

vinay celebrates his birthday at shooting spot
Close
 

உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், சமீபத்தில் வந்த மிரட்டல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வினய், அடுத்து நடிக்கும் படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் ஜீவா - த்ரிஷா ஜோடி. இன்னொரு நாயகனாகத்தான் வினய் நடிக்கிறார்.

இந்தப் படத்தை டாக்டர் வி ராமதாஸ் மற்றும் ஜிகேஎம் தமிழ்க் குமரன் தயாரிக்கின்றனர். தமிழன் படத்தை இயக்கிய அகமது இந்தப் படத்தை டைரக்டு செய்கிறார்.

இன்று வினய்யின் பிறந்த நாள் என்பதால், பெரிய கேக் வரவழைத்து செட்டிலேயே கொண்டாடினர்.

ஜீவா, த்ரிஷா, தயாரிப்பாளர்கள், இயக்குநர் உள்ளிட்டோர் வினய்க்கு கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.