சினேகாவின் கடைசி படம¢?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரசன்னா, சினேகா காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்த சினேகா தற்போது 'ஹரிதாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார்.  குமாரவேலன் இப்படத்தை இயக்க உள்ளார். ஹீரோவாக, வில்லன் நடிகர் கிஷோர் நடிக்கிறார். இவர்களுடன் 8 வயது சிறுவன் ஒருவன் நடிக்க உள்ளான். ஏற்கனவே 'கோச்சடையான்' படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க இருந்த சினேகா அப்படத்திலிருந்து திடீரென்று விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஹரிதாஸ்'தான் சினேகாவின் கடைசி படமாக இருக்கும் என¢றும் திருமணத்துக்கு பின் அவர் நடிப்புக்கு முழுக்கு போடு வார் என்றும் கூறப்படுகிறது.


 

குங்பூ கராத்தே கற்கிறார் அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதிய படத்துக்காக சீன பயிற்சியாளரிடம் குங்பூ, கராத்தே பயிற்சி பெறுகிறார் அனுஷ்கா. செல்வராகவன் இயக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஆர்யா ஹீரோ. நகரத்துபெண், மலைவாழ் பெண் என மாறுபட்ட இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறார். மலைவாழ் பெண் வேடத்தில் வரும் அனுஷ்காவுக்கு கராத்தே, குங்பூ கலைகளில் தேர்ச்சி பெற்றவர் போன்ற பாத்திரம் அமைந்துள்ளது. இதையடுத்து அதற்கான பயிற்சி பெறுகிறார். சீன படங்களில் சண்டை பயிற்சி அளித்த ஸ்டன்ட் மாஸ்டர் இதற்காக வரவழைக்கப்படுகிறார். ஏற்கனவே தெலுங்கில் 'பில்லாÕ படத்துக்காக அனுஷ்கா இத்தகைய பயிற்சி பெற்றிருக்கிறார். மேலும் 'அருந்ததி' படத்தில் வில்லன் நடிகர் சோனு சூட்டுடன் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். 'பஞ்சமுகி' படத்தில் இரட்டை வேடத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது வேடத்தை புதுமையாக சித்தரிக்க முடிவு செய்து செல்வராகவன் சரித்திர பின்னணியையும் இக்கதையில் இணைத்திருக்கிறார். இதன் ஷூட்டிங் அமெரிக்காவில் நடத்த லொகேஷன் தேர்வு நடக்கிறது. "கதைப்படி பீரியட் படமாக இது தெரிந்தாலும் ஆனால் அத்தகைய படமாக இது இருக்காது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாண்ட முறையில் படமாகிறது" என 'இரண்டாம் உலகம்' யூனிட் தெரிவித்தது.


 

கிசு கிசு - வாய்ப்புகளை பறிகொடுத்த நடிகை

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ரிச்ச ஹீரோயினுக்கு லக் ஒர்க் அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... காத்திருந்து பூத்துப்போனவருக்கு வங்க படம் கைகொடுத்திருக்காம். அதுக்காக ஷூட்டிங் போன இடத்துல பனியும், குளிரும் வாட்டுதாம்... வாட்டுதாம்... பாக்க¤றதுக்கு கிளாமரா இருந்தும் சான்ஸ் வராததுக்கு காரணம் பேர் கோளாறுதான்னு ஜோசியருங்க சொல்றாங்களாம். முதல்ல பேரை பவர்புல்லா மாத்துன்னு கூட இருக்கிறவங்க அட்வைஸ் தர்றாங்களாம். நடிகையும் அதுபற்றி தீவிரமா யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

திவ்யமான நடிகைக்கு தமிழ்ல வாய்ப்புகளே வரமாட்டேங¢குதாம். அதுக்கு காரணம், நடிகை அடிக்கடி சர்ச்சையில சிக்குறதுதானாம். அதனால நடிகை இனிமே சண்டை சச்சரவுல சிக்காம ஒதுங்கி இருக்க முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... நடிகையோட கோப குணத்தால கன்னடத்துலேயும் 2 பட வாய்ப்புகள் பறிபோயிருச்சாம்... பறிபோயிருச்சாம்...

முருக இயக்கம் தன்னோட பிரதரை ஹீரோ ஆக்குறதுல தீவிரமா இருக்காராம்... இருக்காராம்... பிரதருக்கு டான்ஸ் கிளாஸ், ஃபைட் கிளாசுக்கு எல்லாம் அனுப்புறாராம். பிரதருக்கு ஜோடியா ஹன்சியான நடிகையை நடிக்க வைக்க இயக்கம் முயற்சி பண்ணினாராம். புதுமுகத்துக்கு ஜோடியான்னு ஹன்சி எஸ் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... அதனால அஞ்சலியான நடிகையை ஒப்பந்தம் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...


 

எல்.ஆர்.ஈஸ்வரி பாடலுக்கு ஹீரோயின் தேடுகிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலுக்கு நடனம் ஆட ஹீரோயின் தேடுகிறோம் என்றார் அருண் விஜய். நீண்ட வருடங்களுக்கு பிறகு 'ஒஸ்தி' படத்தில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல் பாடினார். இதையடுத்து அருண் விஜய் நடிக்கும் 'தடையற தாக்கÕ படத்திற்காக பாடல் பாடினார். இது பற்றி அருண் விஜய் கூறியதாவது: 'மலை மலை', 'மாஞ்சா வேலு'க்கு பிறகு நடிக்கும் படம் 'தடையற தாக்க'. இதில் டிராவல்ஸ் நடத்துபவராக நடிக்கிறேன். வம்பு தும்புக்கு செல்லாமல் ஒதுங்கிச் செல்லும்போது, எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது கதை. இடது கை பழக்கம் உள்ளவனாக நடிப்பதற்காக பல நாட்கள் பயிற்சி செய்தேன். மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயின்கள். 7 அடி உயர கருப்பு நிற மனிதன் காந்தி, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. மகிழ் திருமேனி இயக்கம். சுகுமார் ஒளிப்பதிவு. தமன் இசை. இப்படத்துக்காக எல்.ஆர்.ஈஸ்வரி குத்துப்பாடல் பாடினார். அவருடன் இணைந்து நானும் பாடினேன்.  இப்பாடலுக்கு தற்போதுள்ள முன்னணி ஹீரோயின் ஒருவர் ஆட உள்ளார். அதுபற்றி பேச்சு நடக்கிறது. இவ்வாறு அருண் விஜய் கூறினார்.


 

தனுஷுக்கு ஜோடியாகிறார் சோனம் கபூர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தி படத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் '3' படத்தில் 'கொலவெறி' பாடல் மூலம் பிரபலம் ஆனதால் முதன்முறையாக இந்தி படத்தில் நடிக்கிறார் தனுஷ். 'ராஞ்ஜா' என்ற இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். காசியை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கதையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வந்தது. தற்போது சோனம்கபூர் நடிக்க முடிவாகி உள்ளது. இவர் பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள். மணிரத்னம், தயாரிப்பாளர் டி.ராமநாயுடு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அனில் கபூர். தந்தையை போல தானும் தென்னிந்திய படவுலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது சோனம் கபூரின்ஆசை. அது தனுஷுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் நிறைவேறி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனாலும் ஏற்கனவே 2 இந்தி படங்களில் சோனம் கபூர் நடித்து வருகிறார். இதனால் தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை எழுமா என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவவிட சோனம் கபூருக்கு விருப்பம் இல்லாததால் மற்ற தயாரிப்பாளர்களுடன் பேசி இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது.