ஒவ்வொரு சீரியலுமே சினிமாதான்!

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
உடல் மெலிந்து, இளமை கூடி, இன்னும் அழகாகி இருக்கிறார் தேவயானி. 'கோலங்கள்' அபி விட்டுச் சென்ற இடத்துக்கு இப்போது 'முத்தாரம்' ரஞ்சனி! அபி கேரக்டர் பொறுமையின் அடையாளம் என்றால், ரஞ்சனி பொறுமையின் உச்சம்!

பொறுமைசாலியாவே நடிச்சு போரடிக்கலையா மேடம்?

''பெண்கள் பொறுமையோட பிம்பங்கள்தானே? 'கோலங்கள்' முடிஞ்சதும் ஒரு வருஷத்துக்கு எந்த சீரியலையும் கமிட் பண்ணலை. அபி கேரக்டர்லேருந்து வெளில வர முடியலை. நிறைய கதைகள் கேட்டதுல, 'முத்தாரம்' ரொம்பப் பிடிச்சுப் போச்சு. குழந்தையில்லாத பெண்ணோட வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தின கதை. குழந்தையின்மைங்கிறது இன்னிக்கு சமுதாயத்துல பெரிய பிரச்னையா இருக்கு. பர்சனலா பாதிக்கப்படற பெண்ணுக்கு மட்டும்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். அவ சந்திக்கிற மனிதர்கள், எதிர்கொள்ற கேள்விகள், போராட்டங்கள்னு யதார்த்தமான கேரக்டர். முதல்முறையா டீச்சரா நடிக்கிறேன். என் பாட்டி & அதாவது அம்மாவோட அம்மா & தான் இந்தக் கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன். பெரிய பணக்காரக் குடும்பத்துலேருந்து வந்தாலும், அந்த எண்ணமே இல்லாத பொறுமைசாலி. அவங்களை மாதிரிப் பெண்கள் இந்தக் காலத்துலயும் இருக்காங்க...'' & நீண்ட விளக்கத்துடன் ஆரம்பிக்கிறார் தேவயானி.

சினிமாவில் பிசியாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு செட்டிலான தேவயானி, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சின்னத்திரைக்கு வந்தவர். ''கல்யாணத்துக்குப் பிறகும் படங்கள் பண்ணி ட்டிருந்தேன். அப்பவே சீரியல் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்துல தயங்கினேன். என் முதல் சீரியல் 'கோலங்கள்' அந்த எண்ணத்தையே மாத்திடுச்சு. கிட்டத்தட்ட 7 வருஷம் அபியாவே மக்கள் மனசுல வாழ்ந்திருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா சினிமால எனக்கேத்த கேரக்டர் அமையலை. சீரியல்ல என்னை மையப்படுத்திதான் கதையே நகருது. இதைவிட வேற என்ன வேணும்?'' என்கிறவரை இப்போதும் சினிமா வாய்ப்புகள் விரட்டாமல் இல்லையாம்.

''நியூ படத்துல சின்ன வயசு எஸ்.ஜே. சூர்யாவுக்கு அம்மாவா நடிச்சேன். படத்துல எஸ்.ஜே.சூர்யா ராத்திரில பெரியவரா மாறிடற மாதிரி கதை. பலரும் என்னை 10 வயசுப் பையனுக்கு அம்மாவா பார்க்கலை. ஹீரோவோட அம்மாங்கிற மாதிரியே நினைச்சிட்டாங்க. அந்தப் படத்துக்குப் பிறகு 'அம்மாவா நடிக்கிறீங்களா'னு கேட்டு ஏகப்பட்ட வாய்ப்புகள். எனக்கோ, என் ஹஸ்பெண்டுக்கோ அதுல விருப்பமில்லை.

இந்தி சினிமால கல்யாணமாகி, குழந்தை பெத்த பிறகு கூட கஜோல் மாதிரி நடிகைகள் ஹீரோயினா நடிக்கிறாங்க. நம்ம இண்டஸ்ட்ரியோட தலையெழுத்து வேற. அதுக்காக நான் கவலைப்படலை. என் ஹஸ்பெண்ட் ராஜகுமாரன் டைரக்ஷன்ல, எங்க புரடக்ஷன்ல 'திருமதி தமிழ்' படத்துல முக்கியமான கேரக்டர் பண்றேன். என் எதிர்பார்ப்புக்கேத்த கேரக்டர் அமைஞ்சா படம் பண்ணுவேன். இல்லைன்னாலும் நோ பிராப்ளம். ஏன்னா ஒவ்வொரு சீரியலும் எனக்கு சினிமா மாதிரிதான்!'' & உதடு பிரியாமல் சிரித்துச் சொல்கிறார் தேவயானி.

சீரியல் ரொம்ப ஈஸி!

சன் டி.வி 'அனுபல்லவி' தொடரில் நடிக்கிற கிரீஷுக்கு சின்னத்திரை தொடர் களில் நடிப்பது அல்வா சாப்பிடுகிற மாதிரியாம்! தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல வருட மேடை நாடக அனுபவத்துடன் சீரியலுக்கு வந்தவர் கிரீஷ்.

''மலையாள நாடகங்கள்லதான் அறிமுகமானேன். பத்து வருஷங்களுக்கும் மேலா ஒய்.ஜி.மகேந்திரன் சார் ட்ரூப்ல இருக்கேன். நாடகங்கள்ல நடிக்கிறது ரொம்பவே சிரமம். டயலாக்கை மிஸ் பண்ணக்கூடாது. தப்பு பண்ணக் கூடாது. பண்ணினாலும், சமாளிக்கிற டைமிங் சென்ஸ் வேணும். இதையெல்லாம் பழகினவங்களுக்கு சீரியல் ஒரு விஷயமே இல்லை'' என்பவர், அடுத்து சன் டி.வியில் வரவிருக்கும் 'வெள்ளைத் தாமரை' தொடரிலும் முக்கிய வேடம் ஏற்கிறார். சென்னையின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மேனேஜராக இருக்கும் கிரீஷின் அடுத்த இலக்கு சினிமா!

சென்னை திரும்பிய அஜித்

மும்பைக்கும் சென்னைக்கு அடிக்கடி போகும் விஜய்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ஒரே ஷெட்யூல்ல 'துப்பாக்கி'யோட பெரும்பகுதியை முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டிருக்கறதால ஒரு மாசமா மும்பைல இருக்கிற விஜய், 'நண்பன்' ஆடியோ ரிலீஸை வச்சு கோவைக்கும், சென்னைக்கும் வந்து போனார். இன்னும் ஒரு மாசம் மும்பை வாசமாம்.

கிசு கிசு - அரசியல் ஆசையில் ஹீரோயின்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

காஜலான ஹீரோயின் காஸ்டியூம் விஷயத்துல ரொம்பவே தலையிடுறாராம்... தலையிடுறாராம்... கலர் கலரா டிரஸ் செலக்ட் பண்ணச் சொன்னா கூடவே ஒயிட் டிரஸும் கட்டாயமா செலக்ட் பண்றாராம். Ôமுதல் சீன்ல ஒயிட் டிரஸ் போட்டா படம் சக்சஸ். இது என்னோட சென்டிமென்ட். அதனால இந்த காஸ்டியூமை ரிஜெக்ட் பண்ணாதீங்கÕன்னு இயக்கத்துக்கிட்ட ஆர்டர் போடுறாராம்... போடுறாராம்...

சமீபத்துல ஜூனியர் பச்சனை த்ரி ஹீரோ சந்திச்சு இந்தி படம் இயக்க கதை சொன்னாரு. அதுக்கு பிறகு திரும்ப பச்சனை நடிகரு சந்திக்கல. இதற்கிடையே இந்தியிலேயும் நீயே நடிக்கலாமேன்னு த்ரிக்கு நட்பு வட்டாரம் தெம்பு ஊட்டுறாங்களாம்... ஊட்டுறாங்களாம்... நடிகரும் இதுபற்றி தீவிரமா யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

ஹன்சியான நடிகைக்கு அரசியல் ஆசை வந்திருக்காம்... வந்திருக்காம்... அரசியல் சம்பந்தமா படிச்ச வரு, நிறைய சமூக சேவை விஷயங்கள்ல கவனம் செலுத்துறாராம். Ôஇது எல¢லாம் சேவை மனப்பான்மையில பண்றேÕன்னு நடிகை சொல்றாராம். ஆனா, எதிர்காலத்துல அரசியலுக்கு வர நடிகை இப்போவே தயாராகுறாருன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...

நடுவிரலை உயர்த்திக் காட்டிய சோனம் கபூர்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார் இந்தி நடிகை சோனம் கபூர். பிளேயர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் சோனம் கபூர். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த சோனம் கபூர், பிரஸ் மீட் முடிந்து கிளம்பியபோது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார். நடுவிரலைக் காட்டியது குறித்து சோனத்திடம் கேட்டபோது, நடுவிரலைக் காட்டுவது என்பதில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மொழியாக அது உள்ளது. ஒருவரது பேச்சு அல்லது செயல் பிடிக்காவிட்டால் நடுவிரலைக் கொள்வது சகஜமானதுதான்., இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினையாக்கக் கூடாது. அதுவும் கலை, திரைப்படங்களில் ஈடுபட்டிருப்போருக்கு இதெல்லாம் சாதாரணம். மேலும் இந்தியா பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குப் பெயர் போனது. அப்படிப்பட்ட நாட்டில் நான் நடுவிரலைக் காட்டியதை பெரிதாகப் பேசுவது வியப்பாக உள்ளது என்றார்.

அனுஷ்கா கால்ஷீட் கிடைக்கவில்லை அஜீத்துக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். 'பில்லா 2' படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் வேறு படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் தர இயலவில்லை. இதையடுத்து பிரபல நடிகைகளிடம் கால்ஷீட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர்.

'பில்லா' முதல்பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். 'பில்லா 2' படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பு கைநழுவியது. தற்போது சக்ரி டுலிட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். அஜீத், விஷ்ணுவர்தன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் 'சிறுத்தை' ஷிவா இயக்கும் மற்றொரு படத்திலும் அஜீத் நடிக்கிறார்.

வசூல் வேட்டையில் டான் 2!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஷாரூக் கானின் சமீபத்திய படங்கள் சரியா ஓடவில்லை. இதில் 'ரா 1' படம் ஷாரூக்கானுக்கு வசூலில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் ஷாரூக்கான் நடிப்பில் தற்போது வெளிவந்த 'டான் 2' படம் வசூலை அள்ளி வருகிறது. இந்த படம் 3ஞி தொழிநுட்பத்தில் 500 மேலதிக தியேட்டர்களில் வெளியாகியது. இதில் வெளிநாடுகளில் உள்ள 480 தியேட்டர்களும் உள்ளடக்கம். ஞிஷீஸீ2 இற்கு என்றுமே இல்லாத வசூல் உலகின் பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பியிருக்கிறது, ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சியமைப்புகளுடன் உருவான ஞிஷீஸீ2 இரண்டு நாட்களில் 29 கோடியை குவித்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி வாழ்வில் புதிய திருப்பம் ஜோதிடர்கள் கணிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி வாழ்வில் வரும் மே மாதம் 12ம் தேதிக்கு பிறகு மாற்றம் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு திரையுலகில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இந்த ஆண்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். 'பொதுவாக பார்க்கும்போது நடிகர், நடிகைகளின் வாழ்க்கை மேம்பட்டிருக்கும். தமிழ் சினிமா உலகம் ஒரு புதிய பரிமாணத்தை அடையும்' என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ரஜினிக்கு இன்னல் தரும் ஆண்டாக அமைந்தது.

அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் 'ராணா' படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரஜினிக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மே 12ம் தேதி அவரது வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்துக்கு பிறகு அவரது புகழ் ஓங்கும்' என்று கணித்திருக்கின்றனர். கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் பற்றி கூறும்போது,'வரும் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் பெரிய அளவில் பிரபலம் அடைவார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவரது வாழ்வில் மாற்றம் ஏற்படும். தன்னுடைய தொழிலை அவர் மாற்றக்கூடும்' என்றனர்.

நகுலன் படத்தில் நீக்கப்பட்ட பிந்து மாதவிக்கு புது வாய்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நகுலன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிந்து மாதவிக்கு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத் தது. 'வெப்பம்' படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. தற்போது 'கழுகு' படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வரவுள்ளது. இதற்கிடையில் நகுலன் நடிக்கும் 'வல்லினம்' என்ற படத்தில் நடிக்க தேர்வானார். ஆனால் திடீரென்று நீக்கப்பட்டார். இந்நிலையில் தேசிய விருது வென்ற  'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கும் 'நீர்பறவை' என்ற படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இதில் விஷ்ணு ஹீரோ. இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ''இப்படத்துக்கு மேலும் சில ஹீரோயின்கள் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் பிந்து மாதவின் கண்கள் நான் எதிர்பார்க்கும் பாவங்களை வெளிப்படுத்துவதாக இருந்ததால் அவரை தேர்வு செய்தேன். இதன் ஷூட்டிங் இம்மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது'' என்றார்.

முகமூடிக்காக தினமும் 1 லட்சம் ரூபாய்க்கு மீன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'முகமூடி' படத்துக்காக தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீன்கள் வாங்கி ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், 'முகமூடி'. ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். மிஷ்கின் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக வானகரம் மீன் மார்க்கெட்டில் செட் அமைத்து நடந்து வந்தது. மீன் மார்க்கெட் தினமும் காலை பத்தரை மணிக்கு முடியும். அது முடிந்ததும் மாலை ஆறுமணி வரை அங்கு ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டில் 40 லட்சம் செலவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்புக்காக தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீன்கள் வாங்கப்பட்டன. ஒரு நாள் பயன்படுத்தப்படும் மீன், மறுநாள் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடுவதால் ஷூட்டிங் நடக்கும் ஏழு நாட்களுக்கும் தினமும் மீன்கள் வாங்கி ஷூட்டிங் நடத்தியதாகப் படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

மூன்று படங்களில் நடிக்கிறார் பிரஷாந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் வந்த 'மம்பட்டியான்' ரீமேக், தெலுங்கில் 'பெப்புலி' பெயரில் ரிலீசாகிறது. இதுகுறித்து பிரஷாந்த் கூறியதாவது: தமிழில் ரிலீசான 'மம்பட்டியான்', நல்ல பெயரைக் கொடுத்தது. 'பி' அன்ட் 'சி' ஏரியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் அடுத்த மாதம் ரிலீசாகும் இப்படத்துக்கு நானே டப்பிங் பேசியுள்ளேன்.  இதையடுத்து தமிழில் 3 இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். அதுகுறித்து அவர்களே விரைவில் அறிவிப்பார்கள். மீண்டும் அப்பா தியாகராஜன் டைரக்ஷனில் நடிக்க உள்ளேன். கதை விவாதம் நடக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன், மற்ற இயக்குனர்களின் படத்தில் நடித்து முடித்து விடுவேன். நடிப்பு தவிர, சினிமா தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்துகொள்கிறேன். பிற்காலத்தில் நானும் படம் இயக்க, அது உதவியாக இருக்கும்.

அமலாவை கட்டிப்பிடிக்க பயந்தார் அதர்வா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் அமலாவை கட்டிப்பிடிக்கப் பயந்தேன் என்று அதர்வா கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இது கவித்துவமான படம். வித்தியாசமான கதை. இன்றைய மாடர்ன் வாழ்க்கைப் பற்றிய கதை. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ஹீரோயின் அமலா பாலும் நானும் நண்பர்களாகி விட்டோம். காதல் காட்சியில் அவருக்கும், எனக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். என்றாலும், முதல்முறையாக அவரைக் கட்டிப்பிடித்தபோது நடுக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் தைரியம் சொன்னதும் பதட்டமின்றி நடித்தேன். படம் முடிந்துவிட்டது. அடுத்து பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.

மாற்றான் படத்துக்காக ஒன்றரை கோடி செட்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மாற்றான்' படப் பாடல் காட்சிக்காக, ஏவிஎம்மில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் படம், 'மாற்றான்'. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் ஒரு மாதம் நடந்தது. படத்தின் முக்கிய காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இங்கு படமானது. இதையடுத்து சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒன்றரை கோடி ரூபாயில் பிரமாண்ட செட் அமைத்து, பா.விஜய் எழுதிய, 'தீண்ட தீண்ட தீர்ந்தியா' என்ற பாடல் காட்சியில் படமாக்கப்பட்டது. பிருந்தா நடனம் அமைக்க, இந்தி நடிகை இஷா ஷெர்வானி ஆடினார்.

குழந்தைகளுடன் புத்தாண்டு ஹன்சிகா மகிழ்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடியதாக, ஹன்சிகா மோத்வானி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு வருட புத்தாண்டையும் சிறப்பாகக் கொண்டாடுவேன். 2011ம் வருடம் எனக்கு சிறப்பானது. 'வேலாயுதம்' உட்பட நான் நடித்தப் படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கின்றன. அடுத்து, உதயநிதி ஸ்டாலினுடன், 'ஒரு கல் ஒரு கண்ணாடி', சிம்புவுடன் 'வேட்டை மன்னன்' படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களும் எனக்கு பெயரைக் கொடுக்கும். இந்த வருட புத்தாண்டை எங்கு கொண்டாடினீர்கள் என்று கேட்கிறார்கள். நான் தத்தெடுத்துள்ள 20 குழந்தைகளுடன் லோகண்ட்வாலாவில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

திருமணம் எப்போது?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு செல்வது வழக்கம். இந்த வருடம் கோவாவில் கொண்டாடினேன்' என்று த்ரிஷா கூறினார். அவர் கூறியதாவது: 2011ம் வருடம் எனக்கு நல்லதாகவே அமைந்தது. ஆனால், என் திருமணம் பற்றி தவறான தகவல்கள் வந்தன. இப்போது என் திருமணத்துக்கு அவசரம் இல்லை. நடக்கும்போது கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன். தமிழில் விஷாலுடன் 'சமரன்', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தம்மு' படங்களில் நடிக்கிறேன். தவிர தமிழ், தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில், முன்னணி ஹீரோவுடன் நடிக்கிறேன். இந்த வருட புத்தாண்டை கோவாவில் கொண்டாடினேன்.

மௌனகுரு கவனிக்க வைத்திருக்கிறது : அருள்நிதி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மௌனகுரு' படம் என்னை கவனிக்க வைத்திருக்கிறது என்று அருள்நிதி கூறினார். சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி, இனியா நடித்த படம், 'மௌனகுரு'. சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றி அருள்நிதி கூறியதாவது: இந்தப் படம் ரசிகர்கள் மட்டுமன்றி விமர்சகர்களாலும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. பல இயக்குனர்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. சினிமாவில் நான் கவனிக்கப்பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இப்போது பல இடங்களில் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். கூடுதலாக முப்பதுக்கும் அதிகமான பிரின்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. காட்சியின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். இதையடுத்து பலர் கதை கேட்க, என்னை அழைத்திருக்கிறார்கள். ரசிகர்களின், சினிமா ரசனை மாறியிருக்கிறது. அதற்கேற்ப கதைகளை கேட்டு வருகிறேன். இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை. 'மௌனகுரு'வை விட சிறந்த கதையாகத் தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். இவ்வாறு அருள்நிதி கூறினார்.

3 பெண்களுக்கு பேய் பிடித்ததாக வல்லினம் ஷூட்டிங்கில் பரபரப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'வல்லினம்' ஷூட்டிங்கில் துணை நடிகைகளுக்கு பேய் பிடித்ததாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் 'ஈரம்' அறிவழகன் இயக்கும் படம், 'வல்லினம்'. கூடைப்பந்தை மையப்படுத்திய இதில் நகுல் ஹீரோ. அவர் ஜோடியாக பரத நாட்டிய டான்சர் மிருதுளா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் மதுரையிலுள்ள கல்லூரி ஒன்றில் நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் துணை நடிகைகள், நடிகர்கள் உட்பட பலர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவிகளாக நடிக்கும் மூன்று பேருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பேய் பிடித்ததாகவும் திடீரென்று அவர்கள் ஏதோ உளறியபடி கத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அருகிலுள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்து சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் தலைமுடியை அவிழ்த்துவிட்டுவிட்டு ஏதேதோ பேசியதாகவும் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி படத்தின் இயக்குனர் அறிவழகனிடம் கேட்டபோது, ''பேய் பிடித்ததா என்பது தெரியாது. ஆனால், அவர்கள் இயல்பை மீறி நடந்துகொண்டதாகச் சொன்னார்கள். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு விட்டனர்'' என்றார்.