7சி வகுப்புக்கு வந்த சமுத்திரகனி

Sattai Team Meet 7c Students

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘7 சி' சீரியல் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டது. 7 சி யின் வகுப்பு ஆசிரியர் ஸ்டாலின் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமானவர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சாட்டை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவும் ஆசிரியர் - மாணவர்களைப் பற்றிய கதைதான். அதில் அரசுப் பள்ளி ஆசிரியராக வரும் தயாளன் மாணவர்களின் நலனுக்காகவும், பள்ளியின் நலனுக்காகவுமே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

சாட்டையில் தயாளனாக நடித்துள்ள சமுத்திரகனி, இயக்குநர் எம். அன்பழகன், தயாரிப்பாளர் பிரபுசாலமன் ஆகியோர் 7சி வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடினார்கள். ஆசிரியராக நடித்த சமுத்திரகனியிடம் 7சி வகுப்பு மாணவர்கள் சராமாரியாக கேள்விகளை கேட்டனர்.

சாட்டைப் படத்தின் வசனத்தை அதே வேகத்தோடும் உணர்ச்சியோடும் பேசி மாணவர்களிடம் கைத்தட்டல் பெற்றார் சமுத்திரக்கனி. இறுதியாக பள்ளி மாணவர்கள் அனைவரும் சமுத்திரகனி, பிரபுசாலமன், அன்பழகன் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அன்றைய தினம் மகிழ்ச்சியாக கழிந்தது 7சி மாணவர்களுக்கு.

 

காஞ்சனாவை ‘3டி’ யில் வெளியிடும் லாரன்ஸ்

Kanchana Re Release 3d   

காஞ்சனா திரைப்படத்தை 3 டி யில் மாற்றி வெளியிட ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்த படம் காஞ்சனா. தமிழில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தை 3 டி யாக மாற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ரிபல் தெலுங்குத் திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. இதனையடுத்து காஞ்சனா திரைப்படத்தினை 3 டி யாக மாற்றும் வேலைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 6 மாதகாலம் வரை ஆகும் என்பதால் புதிதாக ஏதாவது சில காட்சிகளை சேர்க்கலாமா என்று லாரன்ஸ் யோசித்து வருகிறார்.

லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. தலைவர் படம் சிவாஜி 3 டியில் வெளியாக உள்ளது. அதே பாணியில் தனது படமான காஞ்சனாவை 3 டியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.

 

'பர்ஃபி' ரீமேக்கில் சிம்புவா? ஜீவாவா?

Simbu Stepping Into The Shoes Ranbir Kapoor   

யுடிவி தயாரிப்பில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்து வரும் பர்ஃபி இந்திப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. தமிழில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்களை வெளியாகி உள்ளன.

ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகியோர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் பர்ஃபி. ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்ய யுடிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் ரன்பீர் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் யுடிவி தயாரிப்பில் வெளியான முகமூடி படத்தில் ஜீவா நடித்து இருந்தார். எனவே பர்ஃபி ரீமேக்கில் ஜீவாவையே நடிக்க வைக்கலாமா என்று அந்த நிறுவனத்தினர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து கூறியுள்ள சிம்பு, பர்ஃபி சிறந்த படம். மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த படத்தை இரண்டு முறை நான் பார்த்திருக்கிறேன். இதன் ரீமேக்கில் நடிப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.

இந்தியில் வெளியான த்ரி இடியட்ஸ், டெல்லி பெல்லி போன்ற திரைப்படங்கள் தமிழில் சமீபத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பர்ஃபி படமும் ரீமேக் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் ரூ.10 லட்சம்!

Santhanam Charges 10 Lakhs Per Day

சந்தானத்தின் காட்டில் அதிர்ஷ்ட மழை பொழிவதால் 1 நாள் 2 நாள் கால்சீட் என்றால் நோ சொல்லிவிடுகிறாராம். 10 நாள் 20 நாள் என்றால் மட்டுமே கால்சீட் தருகிறாராம். இதற்கு காரணம் லம்பாக பணம் கிடைக்கும் என்பதுதான் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில்

காமெடி நடிகர்களைப் பொறுத்தவரை நாள் கணக்கில் தான் சம்பளம் கொடுப்பார்கள். சந்தானத்துக்கும் அப்படி தான். அவரது ஒரு நாள் சம்பளம் 10 இலட்சம். ஒரு படத்திற்கு தொடர்ந்து 10 நாள் நடித்துக் கொடுத்தால் அவருக்கு கிடைப்பது 1 கோடி. இது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளின் சம்பளத்தை விட அதிகம். இதனால் சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளை 2 அல்லது 3 நாட்களில் முடிக்கவே இயக்குனர்கள் முயற்சி செய்கின்றனர். தற்போது சந்தானம் போட்டிருக்கும் இந்த புதிய நிபந்தனையினால், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலங்கிப் போய் இருக்கின்றனர். 20 நாள் என்றால் சந்தானத்தின் சம்பளம் 2 கோடியா என்று அனைவரும் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதால், மீண்டும் அவரிடமே செல்கின்றனர்.

சந்தானத்தை ஒதுக்கியவர்கள் எல்லாம், இன்று அவரது கால்ஷீட்டுக்காக தவம் இருக்கின்றனர். இந்த வரிசையில் சில முன்னணி இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் சந்தானம்.

 

'களிமண்ணு' படத்திற்காக மலையாள நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி படப்பிடிப்பு

மும்பை: பிரபல மலையாள நடிகை சுவேதா மேனனின் உண்மையான பிரசவ காட்சியை, களிமண்ணு என்ற திரைப்படத்திற்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

malayalam actress shweta menon s reality   
Close
 
நடிகை சுவேதா மேனன். இவர் தமிழில் 'நான் அவன் இல்லை 2, ‘சாது மிரண்டால், ‘அரவான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்த சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிக்கை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் தனது பிரசவ காட்சியை படமாக்க அனுமதித்துள்ளதாக சுவேதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். நேற்று மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை 5.27 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

சுவேதா மேனன் ஏற்கனவே கூறியது போல, அவரது பிரசவ காட்சியை, 'களிமண்ணு' என்ற மலையாள திரைப்படத்திற்காக படப்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற பிரசவத்தை இயக்குனர் பிளஸி படம் பிடித்தார். பிரசவத்தின் முடிவில் சுவேதா மேனன் தனது குழந்தைக்கு முத்தமிடுவதுடன் படப்பிடிப்பு முடிந்தது.

இந்தியாவிலேயே ஒரு நடிகை உண்மையிலேயே பிரவசத்தில் இருக்கும் காட்சி படப்பிடிப்பு நடத்துவது இதுவே முதல் முறையாகும். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிபி ஜேக்கப் மற்றும் 2 உதவியாளர்கள், சுவேதா கணவர் ஸ்ரீவல்சன் ஆகியோர் பிரசவத்தின் போதும் காட்சி படமான போதும் உடனிருந்தனர்.

'களிமண்ணு' படத்தில் சுவேதா மேனன், பிஜூ மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். கர்ப்பிணியாக உள்ள போது ஒரு தாய்க்கும், சேய்க்கும் இடையிலான அன்பு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுவதாக, 'களிமண்ணு' படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்காக சுவேதா மேனன் கர்ப்பம் தரித்தது முதல் பல கட்டங்களாக, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாவது கதாநாயகியா நடிச்சா என்ன தப்பு?: பியா

Piaa Avoids Glamor Roles   

இரண்டாவது கதாநாயகியாக நடித்தாலும் என் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறது அதனால் இரண்டாவது கதாநாயகி வேடம் பற்றி நான் கவலைப்படவில்லை என்று நடிகை பியா கூறியுள்ளார்.

கோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் பியா. தொடர்ந்து இரண்டாவது கதாநாயகியாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதாம். இது குறித்து கருத்து கூறிய பியா," சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும், நல்ல வேடங்களாக இருந்தால் நடிக்க சம்மதிக்கிறேன். கோ மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாக தான் நடித்திருந்தேன். ஆனால் அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியது எனவே இரண்டாவது கதாநாயகியாக நடிப்பது பற்றி வருத்தப்படவில்லை என்றார். கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை மாற்றும் வகையில் யாராவது கவர்ச்சி இல்லாத வேடங்கள் கொடுத்தால் உடனே நடிக்கத் தயார் என்றும் பியா கூறினார்.

பியா தற்போது சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியாவுடன் பிந்து மாதவி, ரீமா சென் போன்றோரும் இந்தப் படத்தில் இருக்கின்றனர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

 

ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி

Rajini S Praise Sridevi

இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த ரஜினிகாந்த் ஹீரோயின் ஸ்ரீதேவியை புகழ்ந்து தள்ளிவிட்டாராம். இதனால் மகிழ்ந்து போயிருக்கிறார் ஸ்ரீதேவி.

1980 களில் ரஜினிகாந்துடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை. இந்தி பட வாய்பிற்குப் பின்னர் பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

தற்போது கௌரி இயக்கத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப்பின்னர் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அதில் ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து வெகுவாகப் புகழ்ந்தாராம். படத்தில் என்னுடைய நடிப்பு ரஜினி மிகவும் பிடித்திருந்தது என்று ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

கண்ணதாசனின் பேத்தியுடன் நடிகர் ரிச்சர்டுக்கு நிச்சயதார்த்தம் - அஜீத் பங்கேற்பு!

Actor Richard S Marriage Engagement

நடிகை ஷாலினியின் சகோதரரும் அஜீத்தின் மைத்துனருமான ரிச்சர்டுக்கும் தயாரிப்பாளர் சத்யலட்சுமிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

கிரிவலம், நாளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ரிச்சர்ட். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஏன் இப்படி மயக்கினாய், ரெண்டாவது படம், கூத்து போன்ற படங்களில் இப்போது நடித்து வருகிறார். ரிச்சர்ட்டுக்கும் கவிஞர் கண்ணதாசனின் பேத்தி சத்திய லட்சுமிக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.

பொன்மாலை பொழுது என்ற படத்தைத் தயாரித்துள்ளார் சத்யலட்சுமி.

ரிச்சர்ட் - சத்தியலட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன.

இதில் நடிகர் அஜீத் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் கலந்து கொண்டார். வருகிற ஜனவரியில் திருமணம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

 

சன்னி லியோனுக்கு யாரும் வீடு தர மறுக்கிறார்களாம்!

No Home Porn Star Sunny Leone Mumbai    | ஜிஸ்ம் 2  

மும்பை: கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை சன்னி லியோனுக்கு மும்பையில் யாரும் வீடு தர மறுக்கிறார்களாம்.

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண் இந்த சன்னி லியோன். மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னர் ஆபாசப் பட நடிகையாகிவிட்டார்.

இவரது எக்கச்சக்க ஆபாச வீடியோக்கள் இப்போதும் ஆன்லைனில் உள்ளன. இந்த நேரத்தில்தான் ஜிஸ்ம் 2 இந்திப் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது.

இந்தப் படம் சுமாராக இருந்தாலும், சன்னியின் கவர்ச்சிக்காக நல்ல வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து இனி ஆபாசப்படங்களில் நடிக்காமல், இந்திப் படங்களில் முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவித்தார். அத்துடன் மும்பையிலேயே குடியேறவும் முடிவு செய்துள்ளார்.

ஆனால் சன்னி லியோனுக்கு வீடு வாடகைக்கு தர பலரும் மறுத்துவிட்டனர்.ஆபாச நடிகைக்கு வீடு தர முடியாது என கூறுகிறார்களாம்.

சரி, வாடகைக்குதானே வீடு தர மறுக்கிறார்கள்? சொந்தமாகவே ஒரு வீட்டை வாங்கிவிடலாம்... உடனே ஏற்பாடு செய்யுங்கள் என புரோக்கர்களிடம் கூறிவிட்டாராம் சன்னி லியோன்!

 

கிராமத்து மணம் கமழும் பரவை முனியம்மா சமையல்

Suvaiyo Suvai Kalaignar Tv Show

சமையல் செய்வது அனைவருக்கும் கை வந்து விடாது அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதுபோலத்தான் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், அதை செய்து காட்டுவதும் எல்லோராலும் சிறப்பாக செய்து விட முடியாது. கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் ‘சுவையோ சுவை' நிகழ்ச்சியில் பரவை முனியம்மா வின் ‘கிராமத்து சமையல்' சிறப்பானதாக அமைந்துள்ளது.

சமையல் செய்வது பாரம்பரியம் மிக்க மண் சட்டிகளில்களில்தான். பக்குவமாக வறுத்து அவற்றை அம்மியில் அரைத்து பாட்டி செய்யும் சமையல் பக்குவமே தனிதான். வறுக்கும் போது ஒரு பாட்டு, கறி வேகும் போது ஒரு பாட்டு என கலந்து கட்டி அடிக்கிறார். கண் பார்வைக்கு ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை பொறியல் ஆகட்டும், சளி, ஜலதோசத்திற்கு மருந்தாக சமைத்த இளந்தேங்காய் பொரியல் அற்புதமான சமையல். அம்மாவின் கைமணமும், பாட்டி வைத்தியமும் கலந்த ரசனையான சமையல் அது.

கிராமத்து திருவிழாக்களில் பாட்டுக்களை பாடி தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொண்டிருந்த பரவை முனியம்மா தூள் படத்தின் மூலம் சினிமாவில் காலடி வைத்தார். பின்னர் சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் களம் இறங்கி பாரம்பரிய சமையலை கற்றுக்கொடுத்தார். இப்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் விதம் விதமான கிராமத்து விருந்தினை சமைத்து உணவே மருந்து என்று நிரூபித்து வருகிறார். சமையல் ரசிகர்கள் கொஞ்சம் பரவை முனியம்மாவின் கிராமத்து சமையலையும் பார்த்து ரசிக்கலாமே.

 

டிஸ்கவரி சேனலில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரித்திரம்

Discovery Celebrates The Epic Life Neil Armstrong

தமிழ் சேனல்களைப் பார்த்து போரடித்துப் போனவர்கள், கொஞ்சம் டிஸ்கவரி, அனிமல் பிளானட், என்ஜிசி என சேனலை திருப்பிப் பாருங்களேன். அற்புதமான, மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. டிஸ்கவரி தமிழில் இந்த வாரம் ஞாயிறு இரவு 8 மணிக்கு நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரித்திரம் ஒளிபரப்பாக உள்ளது.

மனிதப்பிறவி எடுக்கும் அனைவருமே சாதனையோ, சரித்திரமோ படைப்பதில்லை. சிலர் மட்டுமே சாதனை படைத்து வரலாற்றில் நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சாதனையும் சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட முக்கிய நிகழ்வு என்றே கூறலாம்.

நிலவில் காலடி வைத்த நீல்ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையும் விண்வெளி ஆய்வில் அவரது கணக்கற்ற பங்களிப்புகளையும் கொண்டாடும் வகையில், டிஸ்கவரி சேனல் `ஒன் ஜெயன்ட் லீப் : எ நீல் ஆம்ஸ்ட்ராங் ட்ரிபியூட்` என்ற நிகழ்ச்சியை ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்புகிறது. ஒருமணிநேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நீல் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சியின் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.

நிகழ்ச்சியில் அவருடன் நிலவுக்கு பயணித்த குழு உறுப்பினர்களான ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் உடனான நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்போல்லோ -11 விண்கலத்தில் அவர்களின் பயணம் அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளிலிருந்து நிலவில் நடந்த தருணம் மற்றும் மீண்டும் பூமியில் இறங்கிய தருணம் வரை முழுமையான அந்த பரவச சாதனைப் பயணமும் இடம் பெறுகிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங் பிரம்மிக்கத்தக்க சாதனையை படைத்து இந்த உலகத்தில் அதற்கான அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியை அவருக்கு சமர்ப்பிப்பதாக டிஸ்கவரி சேனலில் தெற்காசிய பொது மேலாளர் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை அற்புதமான அறிவியலும் தொழில்நுட்பம் இணைந்த மகத்தான கலவை. இந்த வாழ்க்கைக் கதை இணையற்ற உணர்ச்சியைத் தருவதுடன், உலகின் சிறப்பு மிக்க வரலாற்றுத் தருணத்தின் ஒரு காட்சியையும் வருங்காலத்திற்கு உணர்த்துகிறது. ஞாயிறு இரவு 8 மணி முதல் 9 மணிவரை கண்டு டிஸ்கவரி தமிழில் அதனை ரசிக்கலாமே. இந்த சிறப்பு நிகழ்ச்சி உலகம் முழுவம் 200 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.