மகள் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்கிறார் ரஜினிகாந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சமீபத்தில் வெளியான படம் '3'. இப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் படம் வெளிவரும் முன்பே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் நஷ்டம் அடைந்திருப்பதாக ஆந்திர சினிமா வினியோகஸ்தர் நட்டி குமார் கூறியுள்ளார். ஆந்திர நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்தது தொடர்பாக என்டிடிவி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் சூப்பர்ஹிட் ஆனதால் '3' படத்தின் தெலுங்கு பட உரிமையை ரூ.4.3 கோடிக்கு வாங்கினேன். 'தனுஷின் தெலுங்கு மார்க்கெட் ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடையாது. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாய்?' என்று நண்பர்கள் கேட்டார்கள்.

ரஜினி குடும்பத்தினர் மீது இருந்த நம்பிக்கையாலும் ஐஸ்வர்யா தனுஷ் முதன்முதலாக இயக்கும் படம் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்பியும்தான் அதிகளவு முதலீடு செய்தேன். மேலும், படத்தின் தோல்விக்கு தனுஷ், ஸ்ருதி, ஐஸ்வர்யா ஆகியோரும் காரணம். படத்தை விளம்பரப்படுத்த ரூ.1 கோடிக்கு அதிகமாக செலவு செய்தேன். ஆனால், பட விளம்பரத்துக்காக கட்டாயம் ஐதராபாத் வருவதாக சொல்லியிருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் வரவில்லை. படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டபோதும் வரவில்லை என்று நட்டி குமார் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, நட்டி குமாருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்வதாக ரஜினிகாந்தும் ஐஸ்வர்யாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ரஜினிகாந்த் தனது 'பாபா', 'குசேலன்' படங்களால் வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தபோது சொந்தமாக பணம் வழங்கி ஈடுகட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது என என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.



 

பேரன் நடித்த ஓகே ஓகே படத்தை ரசித்துப் பார்த்த கருணாநிதி!


Karunanidhi watches OKOK
உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை நேற்று பிற்பகல் பார்த்து ரசித்தார் திமுக தலைவர் மு கருணாநிதி.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பிரத்யேகமாக கருணாநிதிக்கு திரையிட்டுக் காட்டினார்கள். வடபழனியில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடந்தது.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பார்க்க வந்த கருணாநிதியை உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் படத்தை ரசித்துப் பார்த்தார். படம் முடிந்ததும் அதில் நடித்தவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கருணாநிதி பாராட்டினார்.
 

கணவர் டார்ச்சர் - தூக்கில் தொங்கிய டிவி நடிகை உமா மகேஸ்வரி!


சென்னை: கணவனின் டார்ச்சர் தாங்காமல் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை உமா மகேஸ்வரி, மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (27). நடனம் அறிந்தவர். தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பரிசும் பெற்றார்.

உமா மகேஸ்வரிக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் பெயர் அருண் (32). கோயம்பேடு ஜெயின் நகரில் வசித்து வந்தனர். பிரசவத்துக்காக உமாமகேஸ்வரி வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து மனைவியை மீண்டும் வீட்டுக்கு அருண் அழைத்தார்.

ஆனால் 5 மாதம் கழித்து வருவதாகக் கூறிவிட்டாராம் உமா. இதனால் ஏமாற்றம் அடைந்த அருண் தனக்கு விபத்து ஏற்பட்டதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இதனால் அரக்கப் பரக்க வீட்டுக்கு வந்த உமா மகேஸ்வரி, கணவருக்கு விபத்து இல்லை, தன்னை ஏமாற்ற நாடகம் ஆடியது தெரிந்து கொண்டார்.

இதனால் கணவன்- மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அருண் மனைவியை அடித்து உதைத்தார். இதனால் உமாமகேஸ்வரி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண் அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவியுடன் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

டாக்டர்களின் சிகிச்சைக்குப்பின் உமாமகேஸ்வரி உயிர் பிழைத்தார். கழுத்து எழும்பில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சம்பத் விசாரணை நடத்தினார்.

அதில், அருண் மனைவியிடம் 40 பவுன் நகை மற்றும் வீட்டை எழுதித் தருமாறு கேட்டு வற்புறுத்தி வந்தார். நடத்தையில் சந்தேகப்பட்டார். நகை, வீடு தராவிட்டால் நடத்தை பற்றி வெளியில் சொல்வேன் என்று மிரட்டி தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக உமா மகேஸ்வரி குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டார். உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கணவர் அருண் கைது செய்யப்பட்டார்.
 

'கலகலப்பு' ஆனது மசாலா கபே!


மசாலா கபே என்ற தனது படத்தின் பெயரை கலகலப்பு என்று மாற்றியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.

குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனமும் யுடிவியும் இணைந்து தயாரிக்கும் அதிரடி நகைச்சுவைப் படம் மசாலா கபே. விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, இளவரசு, பஞ்சு சுப்பு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் வி எஸ் ராகவன் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

யு கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, விஜய் எபிநேசர் இசையமைத்துள்ளார்.

மசாலா கபே என்பது தமிழ்ப் பெயராக இல்லாததாலும், படத்தின் நகைச்சுவைத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தலைப்பு அமைய வேண்டும் என்பதாலும் இப்போது 'கலகலப்பு' என தலைப்பை மாற்றியுள்ளனர்.

கலகலப்பு என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் வெளியாகியுள்ளது. இப்போது பிரபல இயக்குநராக உள்ள ஏ எல் விஜய்யின் அண்ணன் உதயா நடித்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

அதிருப்தி அணி மீது வழக்கு, சிறப்புப் பொதுக்குழு - எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மும்முரம்


SA Chandrasekaran
சென்னை: தயாரிப்பாளர்கள் பொதுக்குழு நடத்தியது முறையற்றது, சட்டப்படி தவறு. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான தன்னை நீக்கியது செல்லாது என்று வழக்குத் தொடரப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

மேலும் முறையான பொதுக்குழுவை கூட்டுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

13.4.2012 வெள்ளிக்கிழமை தினசரி பத்திரிகைளில் ஞாயிற்றுக்கிழமை தயாரிப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் நடத்தப் போவதாக பார்த்தேன். அதைப் பார்த்ததும் இப்படி திடீரென்று கூட்டப்படும் கூட்டம் எல்லோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, அதை தவிர்த்து விடும்படி நானும் செயலாளர் தேனப்பனும், பொருளாளர் கலைப்புலி தாணுவும் சேர்ந்து ஒரு விளம்பரம் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் செயலாளர் முரளிதரனுக்கு தெரியப்படுத்தினோம்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 15.4.2012 ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த சிறப்புக் கூட்டத்தில் என்னை ஆறு மாதம் சஸ்பெண்டு செய்வதாக அறிவித் துள்ளார்கள். இதை நான் செய்தி மூலம் படித்து தெரிந்து கொண்டேன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி ஓட்டுப் போட்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டவன் நான். தலைவரின் அனுமதியில்லாமல் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தியது தவறுதலாகும். இது ஜனநாயகப்படி ஓட்டுப் போட்ட தயாரிப்பாளர்களை அவமதிக்கும் செயல்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் என்னை ஆறு மாதம் சஸ்பெண்டு செய்திருக்கிறார்கள். ஓட்டுப் போட்டு தேர்வான ஒருவரை சஸ்பெண்டு செய்ய யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அப்படியே ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் செயற்குழு கூடி முதலில் அவருக்கு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். அவரது பதிலில் திருப்திகரம் இல்லாவிட்டால் பொதுக்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கலாம் என்று பைலா சொல்கிறது.

வெளிநாட்டில்...

நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நான் திரும்பி வந்ததும் சங்க விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் மீதும், விதிமுறைகளை மீறி என்னை சஸ்பெண்டு செய்தவர்கள் மீதும் சட்டப்படி வழக்குத் தொடருவேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் எஸ்.ஏ.சந்திசேகரன் கூறியுள்ளார்.
 

ஹீரோவுடன் சோனாக்ஷி மோதல்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
தமிழிலிருந்து ரீமேக் ஆகிறது வேட்டை. லிங்குசாமி இயக்குகிறார், ஆர்யா நடித்திருந்தனர். இந்தியில், ஆர்யா வேடத்தில் நடிக்க ஷாஹித் கபூர் தேர்வானார். அவருக்கு ஜோடியாக நடிக்க சோனாக்ஷி சின்ஹாவிடம் பேசப்பட்டது. அவரும் ஓகே சொல்லியிருந்தார். அடுத்த கட்ட பணிகள் நடந்துகொண்டிருந்தவேலையில் ஷாஹித்துடன் ஜோடியாக நடிக்க மறுத்து, படத்திலிருந்து வெளியேறிவிட்டார் சோனாக்ஷி. இதுவொரு பழிவாங்கும் படலமாக நடந்து முடிந்திருக்கிறது என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. புனித் மல்ஹோத்ரா இயக்கும் ஒரு படத்தில் ஷாஹித் கபூருடன் ஜோடியாக நடிக்க சோனாக்ஷி தேர்வு செய்யப்பட்டார். இப்படத்துக்காக தனது கால்ஷீட்டை பொருத்தமான தேதிகளில் ஒதுக்கி தந்தார்.

திடீரென்று அப்படத்திலிருந்து சோனாக்ஷி நீக்கப்பட்டார். இது ஷாஹித்தின் தூண்டுதல் பேரில் நடப்பதாகவே சோனாக்ஷி கருதினார். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்தி 'வேட்டைÕயில் ஷாஹித் ஜோடியாக நடிக்க அவர் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி சோனாக்ஷி மேனேஜர் கூறும்போது, 'சோனாவும், ஷாஹித்தும் ஒரு படத்தில் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. அது ஒர்க்அவுட் ஆகவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த கசப்பான உணர்வும் இல்லை. பொருத்தமான ஸ்கிரிப்ட் வரும்போது ஷாஹித்துடன் சோனாக்ஷி நடிப்பார் என்றார்.


 

கிசு கிசு - ஹீரோவை திட்டும் இயக்கம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

காட்டன் வீர டைரக்டரு இயக்குற படத்துல ஜெயமான ஹீரோ நடிக்கிறாரு. ஷூட்டிங் டிலே ஆகறதுல ஹீரோவுக்கு வருத்தம் இருந்தாலும் அதை வெளியில காட்டாம இருக்காராம்... இருக்காராம்... ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்கம் திடீர் திடீர்னு பலபேர் முன்னால திட்டுறதை கேட்டு நொந்துபோறாராம். என்ன இருந்தாலும் ஹீரோவை இப்படியா திட்டுவாங்கன்னு யூனிட் ஆட்களே வருத்தப்படுறாங்களாம்... வருத்தப்படுறாங்களாம்...

ஜீவ எழுத்து பட ஹீரோ நடிக்கிற புது படத்துல மூணுஷா நடிக்க¤றாரு. இதே படத்துல இன்னொரு ஹீரோயினை ஒப்பந்தம் பண்றதா சொன்னப்போ மூணுஷா முரண்டு புடிச்சாராம்... புடிச்சாராம்... சவுத்லேருந்து இல்லாம நார்த் ஹீரோயின் யாரையாவது நடிக்க வெச்சா அப்ஜெக்ஷன் இல்லேன்னாராம். அதுக்காக தேடி கண்டுபிடிச்சி பாலிவுட் லிசா ஹீரோயினை ஒப்பந்தம் பண்ண¤னாங்களாம்... பண்ணினாங்களாம்...

இனிஷியலுக்கு பேர் மாறின நடிகரு, வில்லத்தனமான ரோலுக்கு தயாராகுறாராம்... தயாராகுறாராம்... வித்தியாசமா ஏதாவது பண்ணுங்கன்னு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறாங¢களாம். இதை கேட்டு அடுத்து நடிக்க¤ற ஹன்ட் கிங் படத்துல தன் கேரக்டரை வில்லத்தனமா மாத்தி கிளைமாக்ஸ்ல நடிகரு டுவிஸ்ட் கொடுக்கப்போறாராம்... போறாராம்...


 

தமிழ் படத்தில் டான்ஸ் ஆடுகிறார் : கேட்டி பெர்ரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார் அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி. கலிபோர்னியாவை சேர்ந்த பாப் பாடகி, டான்ஸர் கேட்டி பெர்ரி, சமீபத்தில் ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம் ஆடினார். இவரிடம் கருப்பம்பட்டி தமிழ் படத்தில் நடனம் ஆட கால்ஷீட் கேட்டுள்ளனர். இது பற்றி பட இயக்குனர் பிரபு ராஜ சோழன் கூறியதாவது: பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் வசிக்கும் அஜ்மல் தமிழகத்தில் தனது தந்தை வாழ்ந்த ஊரை தேடி வருகிறார். அவருடன் ஹீரோயின் அபர்ணா பாஜ்பாய்க்கு காதல் மலர்கிறது. ஊரை கண்டுபிடித்தாரா? அபர்ணாவுடன் காதல் என்ன ஆகிறது என்பதே கதை. இதன் ஷூட்டிங் பாரிஸ் நகரில் 30 நாட்கள் நடந்தது. இதையடுத்து சென்னை, பழநியில் ஷூட்டிங் நடந்தது.

தந்தை, மகன் என இருவேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். இப்படத்திற்காக பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹரி ஒரு பாடல் பாடி உள்ளார். இதன் ஷூட்டிங் டிஸ்கோ பாணி அரங்கில் நடக்க உள்ளது. இதில் நடனம் ஆடுவதற்காக பிரபல மேற்கத்திய இசை பாடகி கேட்டி பெர்ரியிடம் பேசப்பட்டுள்ளது. கால்ஷீட் இடைவெளியை பொருத்து நடிப்பதாக கூறி இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடக்க விழாவில் சமீபத்தில் நடனம் ஆடி இருந்தார். அஜ்மலும் இவருடன் டான்ஸ் ஆடுகிறார். இவ்வாறு இயக்குனர் பிரபு ராஜ சோழன் கூறினார்.


 

தனுஷ், ஐஸ்வர்யாவைச் சூழ்ந்த 3 சிக்கல்- கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!


Aishwarya and Danush
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பிலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்திலும் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான 3 படம் பிளாப் என்பது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாகி விட்டது. தெலுங்கில் இந்தப் படம் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளதாம். இதனால் நாலாபுறமும் தனுஷை நிதி சிக்கல் நெருக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மருமகனை இந்த சிக்கலிலிருந்து காக்க கை கொடுத்துள்ளாராம்.

கொலவெறி பாடல் ஏற்படுத்திய மிகப் பெரிய ஹைப் மற்றும் பரபரப்புக்கு மத்தியில் வெளியான 3 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படம் நன்றாகப் போவதாக செய்திகள் வெளியானாலும் கூட படம் பிளாப் என்று இப்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்துள்ளதாம். வார இறுதி நாட்களிலும் கூட பல தியேட்டர்களில் திணறித் திணறித்தான் கூட்டம் கூடுகிறதாம்.

இந்த நிலையில் 3 படத்தால் சிக்கல்களில் சிக்க ஆரம்பித்துள்ளாம் தனுஷ் குடும்பம். இந்தப் படத்தை தனுஷ் குடும்பம்தான் தயாரித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். குறிப்பாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டி குமாரால் சிக்கல் உருவெடுத்திருப்பதால், மகளையும், மருமகனையும் பத்திரமாக காப்பாற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியே களத்தில் குதிக்க நேரிட்டுள்ளதாம்.

ரஜினிகாந்த் இப்படி பண உதவி செய்வது என்பது புதிதல்ல. ஏற்கனவே குசேலன் படம் தொடர்பாக இப்படி ஒரு சிக்கல் வந்தபோது சற்றும் தயக்கமில்லாமல் நஷ்டக் கணக்கை தனது சொந்தப் பணத்தை வைத்து சரி செய்து கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியவர் அவர் என்பது நினைவிருக்கலாம். தற்போது மருமகன் தனுஷுக்கும் அவர் கை கொடுத்துள்ளாராம்.

3 படத்தின் ஆந்திர விநியோக உரிமையை வாங்கியவரான நட்டி குமார்தான் 3 படம் தொடர்பாக முதல் குண்டைப் போட்டவர். தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதற்கு தனுஷ், ஐஸ்வர்யாதான் காரணம் என்றும் பரபரப்பாக குற்றம் சாட்டினார் நட்டி. ரூ. 4 கோடிக்கு இந்த நட்டி குமார் படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

3 படம் தொடர்பாகவும், நட்டி குமாரின் குற்றச்சாட்டு காரணமாகவும் வெளி வரும் செய்திகள் ரஜினியை அப்செட் செய்துள்ளதாம். இதை அவர் விரும்பவில்லையாம். எனவே இந்தப் பிரச்சினை சட்டென்று சரி செய்து விட வேண்டும் என்று அவர் விரும்புகிறாராம். இதனால் நஷ்டப் பணத்தைக் கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறும், அந்தப் பணத்தைத் தானே தருவதாகவும் ஐஸ்வர்யா, தனுஷிடம் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நட்டி குமார் தனது மகள், மருமகனால் நஷ்டப்பட்டுப் போனேன் என்று கூறியது ரஜினியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இதையடுத்தே இந்த முடிவுக்கு வந்தாராம் ரஜினி. ரஜினியின் இந்த முடிவை ஐஸ்வர்யாவும், தனுஷும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினியே நட்டியைத் தொடர்பு கொண்டு நஷ்டத்தை சரி செய்வதாக உறுதியளித்துள்ளாராம்.

இந்த செய்திகள்தான் இப்போது கோலிவுட்டை பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுதொடர்பாக ரஜினி தரப்பிலோ அல்லது ஐஸ்வர்யா தரப்பிலோ அல்லது நட்டி தரப்பிலோ யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுப்பு வெளியிடவும் இல்லை.
 

கோச்சடையான் 2 வது கட்ட படப்பிடிப்பு: கேரளாவில் சூப்பர் ஸ்டார்!


Kochadayan Movie
ரஜினி குடும்பத்தில் குழப்பம், கோச்சடையானுக்கு பிரச்சினை, மகள்களுக்குள் சண்டை என்றெல்லாம் செய்திகள் வந்த நிலையில், அவையனைத்துமே வதந்திகள் என்பதை நிரூபிக்கும் வகையில், கூலாக அடுத்த கட்டப் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கோச்சடையானின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் இன்று முதல் கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதனை சௌந்தர்யா நேற்று அறிவித்துவிட்டார். லண்டன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத ஆதி, தீபிகா படுகோன் ஆகியோர் தொடர்புடைய காட்சிகள் இங்கே படமாக்கப்பட உள்ளன.

கேரள ஷெட்யூலில் முதல்கட்டமாக திருவனந்தபுரம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தும் சௌந்தர்யா, அடுத்து கோட்டயம், ஆலப்புழா மற்றும் கொச்சியில் மீதிக் காட்சிகளை எடுக்கிறார்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் இந்தக் காட்சிகளை சௌந்தர்யா படமாக்குகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு டான்ஸ் மாஸ்டர்களாக புதிய டீம் அமைந்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான், சின்னி பிரகாஷ் மற்றும் ஷோபி ஆகியோர் ரஜினிக்கு நடனக்காட்சிகளை அமைக்கின்றனர். இவர்களுடன் ஒரு பாடலுக்கு ராஜூ சுந்தரமும் இணைகிறார்.

கோச்சடையான் இந்தியாவின் முதல் முப்பரிமாண இயக்கு நிலை படமாக்கல் (3D Motion capturing technology) தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுகிறது. எனவே வழக்கமான முறையிலான ஷூட்டிங் குறைவுதான். எனவே இப்போதே படத்தின் பெரும்பாலான talky பகுதிகளை எடுத்து முடித்துள்ளனர்.

மேலும், எந்தப் படத்துக்கும் இல்லாத வகையில் படுவேகத்துடன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார். இதுவரை 5 பாடல்களை முடித்துவிட்ட ரஹ்மான், ஒரு தீம் மியூசிக்கும் உருவாக்கியுள்ளார்.
 

மேலும் ஒரு ஆண்டு தள்ளிப்போன ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம்!


Saindavi and GV Prakash Kumar
பிரபல இசையமைப்பாளரும், ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகனுமான ஜிவி பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி திருமணம் மேலும் ஒரு ஆண்டு தள்ளிப் போனது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குசேலன், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வத்திருமகள் தற்போது முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இவர்களின் காதல் மற்றும் திருமணம் குறித்து கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. எப்படியும் 2012 ஜனவரியில் திருமணம் செய்து கொள்வோம் என ஜிவி பிரகாஷ் குமார் கூறியிருந்தார்.

ஆனால் பல படங்களில் இருவருமே பிசியாக இருப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளதாக பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 

எஸ்ஏ சந்திரசேகரன், தாணு, தேனப்பனை நீக்கியது சட்டப்பூர்வமானது! - இப்ராகிம் ராவுத்தர்


Ibrahim Ravuthar, Vijay and SA Chandrasekaran
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை சங்க விதிகளின் சட்டப்படிதான் நீக்கியிருக்கிறோம் என பொறுப்புத் தலைவர் இப்ராகிம் ராவுத்தர் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு தொடர்பாக பெப்ஸி அமைப்பினருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பிரச்னையை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை 6 மாத காலத்துக்கு நீக்கியும் அடுத்த நான்கு மாதத்துக்குள் தேர்தல் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை இப்ராகிம் ராவுத்தர் பொறுப்புத் தலைவராக பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஏசி அணி எதிர்ப்பு

இந்த நீக்கத்துக்கு பொருளாளர் எஸ். தாணு கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகியோர் ராஜினாமா செய்யாத நிலையில் எங்களை அழைக்காமல் நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த வகையிலும் செல்லாது. இது சட்டப்படி தவறு. இந்தக் கூட்டத்தில் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. எனவே எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையிலான சங்கம் அப்படியே செயல்பட்டு வருகிறது. பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தினர் எடுத்த முடிவு எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என எஸ்.தாணு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சட்டப்படியே நடவடிக்கை

இந்த நிலையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு கூடிய அவசரக் கூட்டத்தில் இப்ராகிம் ராவுத்தர், தயாரிப்பாளர்கள் கேயார், கே. ராஜன், முரளிதரன், சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அவர்கள் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை சிறப்புப் பொதுக்குழு நீக்கியது முற்றிலும் சட்டப்பூர்வமானதே. பொதுக்குழுவில் நாங்கள் மேற்கொண்ட தீர்மானங்களை சட்டப்படி முறையாக பதிவுத்துறைக்கு அனுப்பிவிட்டோம்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு சார்பாக நடந்துகொண்டார். அவர் பேசியது தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரிவை உருவாக்கும் நோக்கத்திலேயே இருந்தது.

பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாத சூழ்நிலையில் அவருடைய மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடையில்லாமல் நடைபெற்று வருவதில் இருந்தே இதை புரிந்துகொள்ளலாம்.

மேலும் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் மூன்று மாதங்களை விடுமுறையிலேயே கழித்துள்ளார் எஸ்.ஏ.சி. அதோடு சக நிர்வாகிகளிடமும் சங்க ஊழியர்களிடமும் கடுமையாக நடந்து கொண்டார். ஒரே அணியில் உள்ள எங்களிடமே இப்படி நடந்துகொண்டால் ஃபெப்ஸி அமைப்பினரிடம் இவர் எப்படி பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்துவார்?

அதனால்தான் அவரையும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் பொதுக்குழுவைக் கூட்டி நீக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை நீக்கியது பொதுக்குழுவில் கூடிய 292 தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த முடிவு. அதை மாற்ற முடியாது.

இனி நாங்கள் சார்ந்த அணியினர் சார்பாக ஃபெப்ஸி அமைப்பினருடன் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையை விரைவில் தீர்ப்போம்," என்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்ற முயற்சி - எஸ்ஏசி, தாணு, தேனப்பன் மீது போலீசில் புகார்!


S Thaanu
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக்க கூறி, போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுக்கப் போவதாக இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

மேலும் தயாரிப்பாளர் சங்கக் கட்டடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்ராகிம் ராவுத்தர் கூறுகையில், "சட்டப்படிதான் நாங்கள் சந்திரசேகரனையும், தாணுவையும், தேனப்பனையும் நீக்கியுள்ளோம். ஆனால் அவர்கள் இன்னும் தாங்களே சங்கம் என்று கூறி, கட்டடத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.

6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட இவர்களை சங்கக் கட்டடத்துக்குள்ளேயே விடக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். அதையும் மீறி சட்டவிரோதமாக கைப்பற்றல் முயற்சியை அவர்கள் மேற்கொள்ளக் கூடும் என்பதால், கமிஷனர் அலுவலகத்தில் இவர்கள் மீது புகார் தர முடிவெடுத்துள்ளோம்.

மேலும் கட்டடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தருமாறு காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்," என்றார்.