இப்போதைக்கு திருமணமில்லை! – கரீனா கபூர்


சயீப் அலிகானுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டார் கரீனா கபூர் என்ற செய்திகள் பாலிவுட் பட உலகில் படபடக்கின்றன.

2010 பிப்ரவரியில் திருமணம். உடைகள் தயாராகி வருகின்றன என்றெல்லாம் செய்திகள் உலா வரும் நிலையில் இதனை மறுத்துள்ளர் கரீனா.

திருமண நாளினை பெரியவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ள கரீனா, தன்னுடைய அனுமதியின்றி திருமண உடையோ ஹனிமூன் செல்லும் இடமோ யாரும் முடிவு செய்து விட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த படத்தில் பிஸி...

சயீப் உடனான தமது காதல் மிகவும் மகிழ்ச்சியாகவே போய்கொண்டிருக்கிறது என்றும் கரீனா தெரிவித்துள்ளார். திருமணத்தேதியோ, உடையோ எதுவுமோ முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமது அடுத்த படத்திற்கான வேலையில் முழு மூச்சுடன் ஈடுபட இருப்பதாகவும் உறுதியாக கூறியுள்ளார் கரீனா.
 

விளம்பரப் படத்தில் நடிக்க எந்த ஒப்பந்தமும் போடவில்லை! - ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு


குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு விளம்பரப் படம் ஒன்றில் ரஜினி நடிப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் ரஜினியின் உதவியாளர் விஎம் சுதாகர்.

ரஜினி ஏற்கனவே போலியோ தடுப்பு விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்துள்ளார். ஷாருக்கான் நடித்து சமீபத்தில் ரிலீசான ரா ஒன் படத்தில் கவுரவ தோற்றத்தில் வந்தார்.

அடுத்து அமீர்கானுடன் விளம்பர படத்தில் அடுத்து நடிக்க தயாராவதாக கூறப்பட்டது. இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் ரஜினியுடன் பேசியதாக நேற்று செய்தி வெளியிட்டனர். இந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரும் இதுபற்றிக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரஜினி நடிப்பது குறித்து அவர் தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ரஜினி உதவியாளரும், செய்தி தொடர்பாளருமான வி.எம்.சுதாகரிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "அமீர் கானுடன் விளம்பர படத்தில் ரஜினி நடிக்க போவதாக வெளியான செய்தி உறுதிப்படுத்தப்படாதது. ரஜினி சார் யாருக்கும் எந்த கமிட்மெண்டும் கொடுக்கவில்லை. விளம்பர படத்தில் நடிக்க ரஜினி இதுவரை எந்த ஒப்பந்தமும் போடவில்லை," என்றார்.
 

யாரோடும் கல்யாணம் இல்ல... சாந்தனுவும் நானும் நண்பர்கள்தான்! - சந்தியா


பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் காதல் என்று கிசு கிசுக்கப்படுவது வெறும் வதந்திதான், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும், இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்றும் நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.

காதல் படத்தில் அறிமுகமான சந்தியாவும் பாக்யராஜ் மகன் சாந்தனுவும் காதலிப்பதாகவும், இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் திரை உலக வட்டாரங்கள் கிசுகிசுத்தன. இதற்கேற்றார்போல தமிழ்நாட்டிலும் சந்தியாவிற்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. இதனால் மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சந்தியா பதிலளித்துள்ளார்.

காதல் இல்லை நட்புதான்

அவர் கூறுகையில், "எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன். எனக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறுவது தவறு. மலையாளத்தில் சிறந்த படங்களில் நடித்து வருகிறேன்.

எனக்கும், சாந்தனுக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள். எங்களுக்குள் காதல் இல்லை. நேரம் வரும்போது திருமணம் பற்றி எனது பெற்றோர் முடிவு எடுப்பார்கள்," என்று சந்தியா கூறியுள்ளார்.

 

பாரதி ராஜாவின் புதிய ஹீரோ அமீர்!


பாரதிராஜாவின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குநர் அமீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக சமீபத்தில் தேனியில் நடந்த போட்டோ ஷூட்டில் அவர் பங்கேற்றார்.

இந்தப் படத்தில் கட்டுவிரியன் என்ற பாத்திரத்தில் அமீர் நடிக்கிறார்.

இந்த வேடத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இயக்குநர் பார்த்திபன். அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு போட்டோ ஷூட் நடத்தி முடித்த நிலையில் அவர் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் வேடத்தில் நடிக்க அமீரை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இந்த வேடத்துக்கான போட்டோ ஷூட் சமீபத்தில் தேனியில் நடந்தது. அதில் அமீர் பங்கேற்றார். வேடத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பதாக பாரதிராஜா கூறினார்.

பாரதிராஜாவுக்கும் அமீருக்கும் சமீபத்தில் நடந்த இயக்குநர் சங்க தேர்தலில் கடுமையான மோதல் எழுந்தது. பாரதிராஜாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் அமீர். பின்னர் இருவருக்கும் சமரசம் செய்து, தலைவர் பதவிக்கு பாரதிராஜா மட்டும் போட்டியிடும் வகையில் ஏற்பாடு செய்தது நினைவிருக்கலாம்.

இதனால் அமீர் உள்ளிட்ட ஒரு கோஷ்டியினர் மீது பாரதிராஜா வருத்தத்தில் இருந்தார். இப்போது அவை அனைத்தும் சரியாகி, இருவரும் கைகோர்த்துள்ளனர். ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர் பார்த்திபன்தான். இந்தப் படத்துக்காக உடம்பை ஸ்லிம்மாக்கி, முறுக்கு மீசை வளர்த்து பக்காவாக தயாரானவர் பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இளம் மனைவியிடம் சில்மிஷம் செய்து கைதானது சிம்புவின் நண்பர்களா..? - ராஜேந்தர் விளக்கம்


சென்னை: குடித்துவிட்டு தகராறு, பெண்களிடம் சில்மிஷம் என ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விவகாரத்தில் சிம்பு மாட்டுவதும், அதற்கு அவரது அப்பா டி ராஜேந்தர் விளக்கம் அளிப்பதும் தொடர்கிறது.

நீலாங்கரை கடற்கரை அருகில் பப் ஒன்றில் இளம் பெண்ணை கிண்டல் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஒடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள் அந்த பப்பில் தனியார் நிறுவன மானேஜர் மனைவியுடன் வந்து இருந்ததாகவும் போதையில் அப்பெண்ணுடன் சிலர் ஆட விரும்பியதால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதில் பெண்ணின் கணவர் தாக்கப்பட்டார்.

பெண்ணிடம் சில்மிஷத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்டதாக அந்த 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நடிகர் சிம்புவின் நண்பர்கள் என்று செய்தி வெளியானது.

இதனை சிம்புவின் தந்தையும், சினிமா இயக்குனருமான டி.ராஜேந்தர் மறுத்தார். அவர் கூறுகையில், "சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில் நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்லும்போது பலர் இதுபோல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல முடியுமா?

சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்றும் செய்தி வந்துள்ளது. சிம்பு என்னிடம் அப்படி நண்பர்கள் யாரும் கிடையாது," என்றார்.

ஏற்கெனவே ஒரு முறை சிம்பு குடித்துவிட்டு தகராறு செய்ததால் குடிசைப் பகுதி மக்கள் அடித்து உதைத்ததாக செய்தி வெளியானது. உடனே பிரஸ் மீட் வைத்து மறுப்பு தெரிவித்த டி ராஜேந்தர், என் மகனுக்கு குடிக்கவே தெரியாது என்று கூறி கண்கலங்கி பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம்!
 

ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி: மீடியாவுக்கு புதிய கட்டுப்பாடு


மும்பை: ஐஸ்வர்யா ராயின் பிரசவ செய்திகளை வெளியிட தொலைக்காட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை தனியார் டெலிவிஷன் ஆசிரியர் கூட்டமைப்பு விதித்துள்ளது.

மீடியாவின் இந்த சுயகட்டுப்பாடு தன்னை நெகிழ வைப்பதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் பற்றிய செய்திகளுக்கு அனைத்து மாநில சேனல்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

38 வயதாகும் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று போட்டி போட்டுக்கொண்டு டி.வி.க்கள் செய்தி ஒளிபரப்புகின்றன.

நவம்பர் 8-ந் தேதி குழந்தை பிறக்கும் என்று முன்பு ஒளிபரப்பானது. அதன் பிறகு அபூர்வ நாளான (11-11-11) நேற்று குழந்தை பிறக்க ஏற்பாடாகி இருப்பதாக தகவல் வெளியிட்டன. மேலும் ஐஸ்வர்யாராய் கர்ப்பம், பிரசவம் பற்றிய தகவல்களை முக்கிய செய்தியாக (பிளாஷ் நியூஸ்) ஒளிபரப்பின.

இதையடுத்து தனியார் டெலிவிஷன் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அவற்றுக்கு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஐஸ்வர்யாராய் பிரசவம் பற்றி தகவல் சொல்லும் போது தேவையில்லாமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வேறு குழந்தையின் படத்தைக் காட்டக்கூடாது.

இது தொடர்பான செய்திகளை, படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக அமிதாப்பச்சன் வீட்டின் முன்போ, ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கும் ஆஸ்பத்திரியின் முன்போ ஒளிபரப்பு வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. மக்களின் கவனத்தை வேறு வகையில் திசை திருப்பும் வகையில் ஒளிபரப்பக்கூடாது, என்று கூறப்பட்டுள்ளது.


தனியார் டெலிவிஷன் கூட்டமைப்பு துணை தலைவர் அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறப்பது பெரிய விஷயம் அல்ல, அன்றாடம் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய் கட்ஜு கூறுகையில், நாட்டில் 80 சதவீத மக்கள் பல்வேறு இன்னல்களில் வசிக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சுகாதார சீர்கேடு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் டெலிவிஷன்கள் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவது போல், சினிமா நட்சத்திரங்கள் பற்றியும், பேஷன்ஷோ, கிரிக்கெட் பற்றியும் ஒளிபரப்புகிறார்கள், என்றார்.

இதற்கிடையே ஐஸ்வர்யாராயின் பிரசவம் பற்றிய செய்திகளை ஒளிபரப்புவதற்கு நடிகர் அமிதாப்பச்சன் கண்டனம் தெரிவித்தார். இதனால் தனிப்பட்ட ஒரு குடும்ப பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று தனது இணையதள டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இப்போது டெலிவிஷன் ஆசிரியர் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள சுய கட்டுப்பாட்டு நடவடிக்கையை அறிந்ததும், அதுகுறித்த தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இந்த சுய கட்டுப்பாடு தன் மனதைத் தொட்டுவிட்டதாகவும், உலகில் எங்கும் இதனைப் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

பாரதிராஜா பட விவகாரம்: 20 வருட அனுபவத்தில் இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை! - பார்த்திபன்


"பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனாலும் என் 20 வருட சினிமா வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை,'' என்று வருத்தப்பட்டுள்ளார் பார்த்திபன்.

சாதனை இயக்குநர் பாரதிராஜா தனது லட்சிய படைப்பாக, 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' என்ற படத்தை உருவாக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பார்த்திபன் நடிப்பார் என்றும், படப்பிடிப்பு 17-ந் தேதி தேனியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பட பூஜையும் தேனியிலேயே நடக்கிறது.

இந்த நிலையில், திடீரென்று 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் இருந்து பார்த்திபன் நீக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்திபனும் உறுதிப்படுத்தி, ட்விட்டரில் எழுதியிருந்தார்.

'அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார் பாரதிராஜா'

இதுபற்றி பார்த்திபன் அளித்துள்ள விளக்கத்தில், " நான் இயக்கி வரும் வித்தகன் படத்தை தயாரிக்கும் மாணிக்கம் நாராயணன் ஒருநாள் என்னிடம், "ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் ஒரு தொகையை சொன்னேன்.

"அவர் அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார்'' என்று சொன்ன மாணிக்கம் நாராயணனிடம், "யார் அந்த டைரக்டர்?'' என்று கேட்டேன். "பாரதிராஜா'' என்றார்.

"அவர் படம் என்றால், சம்பளம் இல்லாமலே கூட நடிக்க தயார். அவர் பக்கத்தில் இருந்தாலே போதும்'' என்றேன். குறைவான சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பாரதிராஜா படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் வாய்ப்பு கேட்டு போகவில்லை. அவர்தான் என்னை அழைத்தார். இரண்டு மூன்று முறை என்னை அழைத்து, நான் நடிக்க வேண்டிய 'கட்டுவிரியன்' என்ற கதாபாத்திரம் பற்றி விளக்கினார். ஒரு தொகையை 'அட்வான்ஸ்' ஆக கொடுத்தார். பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்.

நான் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பேனா? என்று 'டெஸ்ட்' எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் திடீரென்று, "போட்டோ எடுக்க வேண்டும்'' என்றார்கள். நான் போட்டோ எடுத்துக்கொடுத்து அனுப்பினேன். போட்டோவை பார்த்துவிட்டு, "சட்டை தைத்து போட்ட மாதிரி, அந்த கதாபாத்திரத்துக்கு பார்த்திபன் பொருத்தமாக இருக்கிறார்'' என்று பாரதிராஜா கூறியிருக்கிறார்.

மேலும் ஒரு போட்டோ ஷூட்டுக்காக கடந்த 9-ந் தேதி நான் தேனி போய் இருக்க வேண்டும். பாரதிராஜா அலுவலகத்தில் இருந்து தகவல் எதுவும் வரவில்லை. 10-ந் தேதி, அமீரை வைத்து போட்டோ சூட் எடுப்பதாக தகவல் அறிந்தேன். ஆனால், இந்த நிமிடம் வரை எனக்கு பாரதிராஜாவிடம் இருந்து தகவல் சொல்லப்படவில்லை.

என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியாது. சீமந்தமா நடக்கிறது, 'செண்டிமெண்ட்' பார்க்க? சினிமாதானே பண்ணுகிறோம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு, 'வித்தகன்' படத்தின் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டேன்.

20 ஆண்டுகளில் கிடைக்காத அனுபவம்

பாரதிராஜா படத்தில் நடித்தால் புது அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

பாரதிராஜா படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா? என்று என்னிடம் சேரன் உள்பட நிறைய பேர் விசாரித்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது, எனக்கு சங்கடமாக இருக்கிறது.

எது எப்படியோ... பாரதிராஜாவின் லட்சிய படம் வெற்றி பெற வாழ்த்துகள்,'' என்றார்.
 

'பெரிய இடத்துடன்' நடிகை... திகைத்து திரும்பிய போலீஸ்!


அவர் ஒரு பிரபல நடிகை... கையில் படம் இல்லாவிட்டாலும் பாபுலாரிட்டி காரணமாக அந்த நடிகையுடன் பழக ரொம்ப பேருக்கு ஆசை.

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு ஒரு ஆட்சியில் ரொம்ப ரொம்ப அந்தஸ்தான ஒருவர் நடிகையுடன் டிஸ்கஸ் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார்.

உடனே போனைப் போட்டாராம். நடிகை இந்த மாதிரி டிஸ்கஷன்களில் இரண்டு மூன்று முறை சிக்கி, மன்றாடி வெளியில் வந்தவர். ஆனால் அதிகாரம் உள்ள இடம் என்பதால், சுதந்திரமாக போய்விட்டார்.

டிஸ்கஷனின் முக்கியமான கட்டத்தில் போலீஸ் என்ட்ரி ஆகிவிட்டது. ஆனால் நடிகையும் சரி, முக்கிய பிரமுகரும் சரி அசரவில்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை.

அதுக்கென்ன இப்போ என்கிற ரேஞ்சுக்கு போலீஸ் அதிகாரியைப் பார்க்க, அவர் திகைத்தபடி வெளியேறினாராம்.

நல்ல வேளை காவலுக்கு வெளிய நிக்கச் சொல்லல... கருமம், கெளம்புங்கய்யா என்று சக போலீசாரிடம் நொந்தபடி ஜீப்பில் ஏறிப் பறந்தாராம் அதிகாரி!!
 

கார்த்தி - அனுஷ்கா நடிக்கும் புதிய படம்... 11-11-11-ல் தொடங்கியது!


கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா, முதல்முறையாக. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை இயக்குகிறார் தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11அன்று தொடங்கியது.

பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கார்த்தியும் சந்தானமும் இணைந்த சிறுத்தை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து சகுனியிலும் கார்த்தியுடன் இணைந்துள்ளார் சந்தானம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக மரத்தால் ஆன பிரமாண்டமான பங்களா செட் அமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர்.

சாலக்குடியில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.
 

'கொஞ்சம் பொறுங்க ரஜினி சார்!' - டாக்டர்கள் அட்வைஸ்


தான் பூரண குணமடைந்துவிட்டதாகவும், விரைவில் ராணா தொடங்கிவிடும் என்று்ம் சூப்பர் ஸ்டார் ரஜினியே சொன்னாலும், அவரது மருத்துவர்கள் இன்னும் சில தினங்கள் படப்பிடிப்புக்குப் போக வேண்டாம் என சொல்கிறார்களாம்.

“நீங்க படப்பிடிப்பில் பங்கேற்று பழையபடி ஆக்ஷனில் அசத்தும் அளவு நன்றாக உள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள் ரஜினி சார்,” என்று அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளனராம்.

இதனால் ஜனவரியில் தொடங்கவிருந்த ராணா படப்பிடிப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் மத்திய அரசின் குழந்தைகள் நல விழிப்புணர்வுப் பிரச்சாரப் படத்தில் நடிக்க ரஜினி தயாராகி வருகிறார்.

ராணா தொடங்கும் முன் இந்த கமிட்மெண்டுகளை முடித்துக் கொடுக்க விரும்புகிறாராம் சூப்பர் ஸ்டார்!
 

பாரதிராஜா இயக்கத்தில் அமீர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாரதிராஜா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் போட்டோ ஷூட் தேனியில் நேற்று நடந்தது. பாராதி ராஜா தயாரித்து இயக்கும் படம், 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. இதில் பாரதிராஜா, இ¬ளையராஜா, வைரமுத்து மீண்டும் இணைவதாக இருந்தது. அது தள்ளிப் போயுள்ளதால், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 'கோ' கார்த்திகா, இனியா ஹீரோயின்கள். பார்த்திபன், கதையின் நாயகனாக இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. அதற்காக தன்னை பார்த்திபன் தயார்படுத்தி வந்தார். இந்நிலையில் பார்த்திபனுக்குப் பதிலாக அமீர் நடிக்கிறார். அமீரை வைத்து தேனி அருகே நேற்று போட்டோ ஷூட் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.


 

எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் நடிகர் தீபனிடம் குறுக்கு விசாரணை


சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தீபனிடம் குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன். கடந்த 2008ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக விஜயன் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விஜயனின் மனைவியான சுதாவின் சகோதரி பானு உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தீபனிடம், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணை செய்தார்.

விசாரணையின் போது தீபன் கூறுகையில், "சாட்சி சொல்வதை தடுப்பதற்காகவே பானுவின் பணியாளர் ஒருவர் குற்ற புகார் கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் அடக்கத்தின் போது, ஊர்வல வேனில் இருந்து ஜெயலலிதாவை அடித்து உதைத்தாக எனக்கு ஞாபகம் இல்லை. மேலும் விஜயன் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு முன்னாள் முதல்வர் கருணாநிதியை, சுதா சந்தித்து பேசியது குறித்து எனக்கு தெரியாது", என்றார்.

கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணைக்கு பின்னர், சி.பி.சி.ஐ.டி தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயராஜ், சுதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, நடிகர் தீபனிடம் கேட்டு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அவரை துன்பறுத்துகிறார், என்றார்.

வாதங்களை கேட்ட நீதிபதி பி.தேவதாஸ் வழக்கை மற்றொரு தேதிக்கு மாற்றி வைத்தார்.
 

ரெண்டாவது படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'தமிழ்ப் படம்' படத்தை அடுத்து சி.எஸ்.அமுதன் இயக்கும் படம், 'ரெண்டாவது படம்'. விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஹீரோக்கள். ஸ்கிரீன் கிராப்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தரணி தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, விஜய் உலகநாதன். இசை, கண்ணன். அடுத்த மாதம் முதல் ஐதராபாத், பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.


 

குணச்சித்திர வேடம் கஸ்தூரிக்கு சவால்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் கஸ்தூரி கூறியதாவது: 'நாங்க', 'காதல் டூ கல்யாணம்', 'அழகன் அழகி' படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளேன். தெலுங்கில் ராஜேந்திர பிரசாத் ஜோடியாகவும் நடிக்கிறேன். ஹீரோயினாக இருந்தபோது, ஒரேமாதிரியான வேடத்தில் பல படங்களில் நடித்தேன். இப்போது அப்படியில்லை. நான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு குணச்சித்திர வேடமும் சவாலாக, நடிப்பில் பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதனால், கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறியதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


 

வெள்ளத்தில் சிக்கினார் நடிகை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எச்.எம்.டி பிக்சர்ஸ் சார்பில் வி.இராவணன் தயாரிக்கும் படம், 'செங்காடு'. பிரபு சாலமன் உதவியாளர் ரமேஷ் ராமசாமி இயக்குகிறார். அருண் பிரகாஷ்ரூபா, சுரேஷ்நகினா, உத்தம்விமலா, விக்கிபிரியா ஆகிய நான்கு ஜோடிகளுடன் முத்துக்கருப்பன், அன்பழகன், வேணுகோபால், ரகுநாத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மணி. இசை, ஜெரோம் புஷ்பராஜ். பாடல்கள், இளையகம்பன். படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ் ராமசாமி கூறியதாவது: வழக்கமாக நான்கு நண்பர்கள், தோழிகள் கதை என்றாலே, இப்படித்தான் இருக்கும் என்ற சினிமா பார்முலா எல்லாருக்கும் தெரியும். இதில் அந்த பார்முலாவை உடைத்து, புதிய திரைக்கதை யுக்தியுடன் உருவாக்கியுள்ளேன். சினிமாத்தனம் இல்லாத சினிமா இது. யதார்த்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கும். நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்குவது சாத்தியம் இல்லை என்பதால், புதுமுகங்களை தேர்வு செய்து, படப்பிடிப்பு நடத்தினேன். கற்பனைக்கதை என்றாலும், வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி சொல்லியிருக்கிறேன். காதல் துரோகத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியும். நண்பர்கள் செய்யும் துரோகத்தை தாங்கிக்கொள்ளவோ, மறக்கவோ முடியாது என்ற கருத்தை சொல்லும் கதை இது. சமீபத்தில் ஒரத்தநாடு பகுதியிலுள்ள ஆற்றில் அருண் பிரகாஷ், ரூபா நடித்த ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினேன். அருகிலிருந்த மதகு திறக்கப்பட்டதால், திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரூபா இழுத்துச் செல்லப்பட்டார். பயந்துபோன நாங்கள், அபயக்குரல் எழுப்பினோம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றி கரை சேர்த்தனர்.


 

அழகன் அழகியில் 60 புதுமுகங்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதுமுகங்கள் ஜாக், ஆருஷி ஜோடியுடன் ஆர்த்தி, சாம், ரவிமரியா, ஜி.எம்.குமார், ராஜலட்சுமி, கஸ்தூரி நடிக்கும் படம், 'அழகன் அழகி'. கிரீன் 2 சினிமா நிறுவனம் சார்பில் குருராஜன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, பிரபு தயாளன். இசை, கண்ணன். பாடல்கள்: நா.முத்துக்குமார், சினேகன், கபிலன், விவேகா. படத்தை இயக்கும் நந்தா பெரியசாமி கூறியதாவது: சேனல் ஒன்று ஊர், ஊராகச் சென்று 'அழகன் அழகி' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அப்போது ஹீரோ, ஹீரோயின் இருவரும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருடைய வித்தியாசமான வாழ்க்கைச்சூழலைப் பார்க்கும் அவர்கள், இறுதியில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது கதை.

சினிமா வாடையே இல்லாத 60 பேர் அறிமுகமாகின்றனர். சமீபத்தில் சில கவிஞர்களை வரவழைத்து, அவர்களிடம் சிச்சுவேஷன் சொன்னோம். அதற்கு அவர்கள் எழுதிய கவிதைகளில் சில வரிகளைத் தேர்வு செய்து, மூன்று பேரை வைத்து அந்தப் பாடலை எழுத வைத்தோம். பிருந்தா சாரதி, கருணாநிதி, சரண் ரவி இணைந்து எழுதிய அந்தப் பாடல், 'பெண்ணே பெண்ணே வானிலையில் மாற்றம்' என்று தொடங்குகிறது. தன்னம்பிக்கையூட்டும் ஒரு பாடல் காட்சியில் கஸ்தூரி ஆடியுள்ளார்.


 

தமிழ் சினிமா கைவிடாது : வினய்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'உன்னாலே உன்னாலே', 'ஜெயம்கொண்டான்', 'மோதி விளையாடு' படங்களில் நடித்தவவர் வினய். தற்போது மாதேஷ் இயக்கும் 'மிரட்டல்' படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: தமிழில் பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தும் தொடர்ந்து படங்கள் அமையாதது எனது துரதிர்ஷ்டம். சில நல்ல படங்கள் வந்தது, ஆனால் அவை தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் தெலுங்கு படங்களில் நடித்தேன். தமிழ் சினிமா திறமையானவர்களை கைவிடாது என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. மாதேஷ் இயக்கத்தில் இப்போது 'மிரட்டல்' படத்தில் நடிக்கிறேன். காமெடி கலந்த ஆக்ஷன் படம். எனக்கு நிச்சயம் திருப்புமுனை தரும் படமாக அமையும். மீண்டும் தமிழ் ரசிகர்களை வெற்றியுடன் சந்திப்பேன்.


 

மம்தா நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மம்தா மோகன்தான்ஸ் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நேற்று நடந்தது. மம்தா மோகன்தாஸுக்கும் அவரது பால்ய நண்பர் பிரஜித்துக்கும் திருமணம் செய்ய இருவீட்டிலும் முடிவு செய்யப்பட்டது. பிரஜீத், பஹ்ரைன் மற்றும் கொச்சியில் பிசினஸ் செய்துவருகிறார். பிரஜின் குடும்பத்தினர் கொச்சியிலுள்ள மூவாட்டுபுழாவில் பங்களா கட்டி வருகின்றனர். அதன் கிரஹப்பிரவேசத்தையும் திருமண நிச்சயதார்த்ததையும் 11.11.11 அன்று நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் நேற்று நண்பகல் 12 மணியளவில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமணம் அடுத்த வருடம் நடக்கிறது.


 

நடிக்காதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பார்த்திபனிடம் கேட்டபோது, கூறியதாவது: பாரதிராஜா போன் செய்து, தான் இயக்கும் படத்தில் கட்டுவிரியன் என்ற கேரக்டரில் நடிக்க கேட்டார். ஒப்பந்தமானேன். அட்வான்சும் கொடுத்தனர். 10ம் தேதி போட்டோ ஷூட்டில் பங்கேற்க வேண்டும் என்றார்கள். தயாராக இருந்தேன். இந்நிலையில், போட்டோ ஷூட்டில் அமீர் பங்கேற்றதாக சொன்னார்கள். எனக்கு எந்த விஷயமும் அறிவிக்கப்படவில்லை. என் 20 வருட சினிமா வாழ்வில் இப்போது நடந்த நிகழ்வு புது அனுபவமாக இருக்கிறது.  சரி, இது ஒன்றும் சீமந்த நிகழ்ச்சி இல்லையே. சென்டிமென்ட் பார்ப்பதற்கு. இது சினிமா. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் என்று எடுத்துக்கொண்டேன். அமீரும் அந்த கேரக்டருக்கு பொருத்தமாகத்தான் இருப்பார். நான் இயக்கி, என் நடிப்பில் உருவான 'வித்தகன்'18ம் தேதி ரிலீசாகிறது. அது சம்பந்தமாகத்தான் என் சிந்தனை சுழன்று கொண்டிருக்கிறது.


 

பஞ்சாபி பெண்ணாகிறார் மீரா நந்தன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மல்லுசிங்' என்ற மலையாளப் படத்தில் மீரா நந்தன், பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறார். இதற்காக பஞ்சாபி மொழி கற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் 'சூரியநகரம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். கலகலப்பான கிராமத்து பெண் வேடம். 'அய்யனார்' தவிர மற்ற எல்லாப் படங்களிலுமே கிராமத்து பெண் வேடத்தில்தான் நடித்திருக்கிறேன். ஒரு படத்திலாவது கமர்சியல் ஹீரோயின் மாதிரி ஆடிப்பாடி நடிக்க ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன். மலையாளத்தில் 'சொர்ப்ப சஞ்சாரி' படம் வெளிவர இருக்கிறது. இதில் டாக்டராக நடித்திருக்கிறேன். அடுத்து 'மல்லுசிங்' படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இது ஹீரோயின் சப்ஜெக்ட். பஞ்சாபி பெண், கேரள வாழ்க்கை முறையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் கதை. இதற்காக பஞ்சாபி மொழி பேசக் கற்று வருகிறேன்.


 

பாகன் என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வி.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஸ்வாஸ் யு.லாட், வி.புருஷோத்தம் இணைந்து தயாரிக்கும் படம், 'பாகன்'. ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர், கோவை சரளா, ஜார்ஜ், சூரி, பாண்டி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, லஷ்மன். இசை, ஜேம்ஸ் வசந்தன். பாடல்கள்: யுகபாரதி, சூர்யா, விருச்சிகா. படத்தை எழுதி இயக்கும் முகமது அஸ்லம் கூறுகையில், 'முதல்முறையாக ஸ்ரீகாந்த் காமெடி வேடத்தில் நடிக்கிறார். யானை எவ்வளவு பெரிய உருவமாக இருந்தாலும், அதை அடக்கி ஆள்பவன் பாகன். தனது வாழ்க்கையை லட்சியத்துடன் அடக்கி ஆள்பவன் ஹீரோ. வாழ்க்கையில் முன்னுக்கு வர ஆசைப்பட்டு, அதிக பணம் சம்பாதிக்க வெளியூர் மற்றும் வெளிநாடு செல்பவர்களுக்கு மத்தியில், வாய்ப்பு கிடைத்தும் வெளிநாடு செல்லாமல், தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னுக்கு வருகிறார் ஸ்ரீகாந்த். ஜனரஞ்சகமான படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் பொள்ளாச்சி, மும்பையிலுள்ள லோனாவாலா பகுதிகளில் நடந்து வருகிறது' என்றார்.


 

இடைவெளிக்கு காரணம் பாவாடை தாவணி : சுனேனா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'வம்சம்' படத்துக்கு பிறகு இடைவெளி விட்டதற்கு காரணம் பாவாடை தாவணிதான் என்று சுனேனா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: 'வம்சம்' படத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்தேன். அது நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு வந்த நான்கைந்து படங்கள் அதே மாதிரி பாவாடை தாவணி அணியும் கிராமத்து பெண்ணாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் பாவாடை தாவணி என்றாலே பயப்படும் நிலை வந்தது. அதனால் இடைவெளி விட்டேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. 'சமரன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இதில் த்ரிஷாவும் நடிக்கிறார். இதுதவிர ராசு மதுரவன் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இரண்டு படத்திலும் கிராமத்து பெண் வேடம் இல்லை. மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன். நடித்து முடித்துள்ள 'திருத்தணி', 'கதிர்வேல்' படங்களும் வெளிவர இருக்கிறது. 'சமரன்' படம் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை காட்டுவதாக இருக்கும்.