செருப்பை தூக்கி எறிந்த நடிகை: படாத இடத்தில் பட்டு துடித்த ஹீரோ

மும்பை: ஆர்.. ராஜ்குமார் படப்பிடிப்பின்போது நாயகி சோனாக்ஷி சின்ஹா தூக்கி எறிந்த செருப்பு ஹீரோ ஷாஹித் கபூருக்கு முக்கியமான இடத்தில் பட்டு துடித்துவிட்டாராம்.

ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ஆர்...ராஜ்குமார். பிரபுதேவா இயக்கியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஒரு பாடலில் சோனாக்ஷி ஷாஹித் மீது செருப்பை தூக்கி எறிந்து விட்டு அமைதி என்று கூற வேண்டும்.

செருப்பை தூக்கி எறிந்த நடிகை: படாத இடத்தில் பட்டு துடித்த ஹீரோ

இயக்குனர் கூறியது போன்று சோனாக்ஷியும் செருப்பை தூக்கி எறிந்தார். ஆனால் செருப்பு ஷாஹிதுக்கு படாத இடத்தில் பட்டுவிட்டது. இதையடுத்து ஷாஹித் வலியால் துடித்த போதிலும் சத்தம் போடவில்லை. சோனாக்ஷி அமைதி என்று சொல்லாமலேயே ஷாஹித் அமைதியாகிவிட்டார்.

செருப்பை தூக்கி எறிந்த நடிகை: படாத இடத்தில் பட்டு துடித்த ஹீரோ

இதற்கிடையே ஷாஹிதுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

 

முதல்வர் சாண்டியை சந்தித்து நடந்ததை கூறினேன்: நடிகை ஸ்வேதா மேனன்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து தன்னிடம் காங்கிரஸ் எம்.பி. நடந்து கொண்ட விதம் குறித்து தெரிவித்ததாக நடிகை ஸ்வேதா மேனன் கூறினார்.

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கொல்லத்தில் நடந்த படகு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் மறுநாளே புகாரை வாபஸும் பெற்றார்.

முதல்வர் சாண்டியை சந்தித்து நடந்ததை கூறினேன்: நடிகை ஸ்வேதா மேனன்

இந்நிலையில் அவர் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை நேற்று சந்தித்து பேசினார்.

இது குறித்து ஸ்வேதா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் முதல்வரை சந்தித்து நடந்தவை பற்றி கூறுவேன் என்று கடந்த வாரம் தெரிவித்தேன். அதன்படி நேற்று அவரை சந்தித்து நிகழ்ச்சியில் எனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவித்தேன் என்றார்.

 

குழந்தை பிறந்த கையோடு ஆடி வாங்கிய சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் வெற்றி நடைபோடுபவர் சிவகார்த்திகேயன். அவர் ஹீரோவாக நடித்த மெரினா படம் தொடங்கி எதிர்நீச்சல் வரை மொத்தம் 6 படங்கள் ரிலீஸாகி உள்ளன.

தற்போது அவர் மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டணா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். 6 படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அவர் ஆடி கார் வாங்கியுள்ளார்.

குழந்தை பிறந்த கையோடு ஆடி வாங்கிய சிவகார்த்திகேயன்

மனிதர் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரோ தான் சம்பளம் பற்றி கறாராக இல்லை என்கிறார்.

சிவகார்த்திகேயன் அண்மையில் தான் பெண் குழந்தைக்கு அப்பாவானார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த கையோடு புதிய கார் வாங்கியுள்ளார் சிவா. வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவரே, வாழ்த்துக்கள்...

 

கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய், மாதவன், ஆண்ட்ரியா

கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய், மாதவன், ஆண்ட்ரியா

சென்னை: கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய், மாதவன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த 7ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் தனது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், மூன்று சக்கர வாகனங்களை அளித்தார்.

முன்னதாக தனது வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் அவர் தனது பிறந்தநாளையொட்டி திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.

அந்த பார்ட்டியில் நடிகர்கள் விஜய், மாதவன், சந்தான பாரதி, இயக்குனர் பிரியதர்ஷன், கிரேஸி மோகன், நடிகை ஆண்ட்ரியா, விஸ்வரூபம் 2 படக்குழுவினர் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.