கமலுடன் மோதும் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ்

சென்னை: இன்றைய நாட்களில் ஒரே நாளில் மூன்று பெரிய படங்கள் வெளிவந்தால் தியேட்டர் கிடைப்பதிலிருந்து, கிடைக்கும் வசூல் வரை அனைத்துமே பிரச்சினையாகிவிடுகிறது.

இதெல்லாம் நன்கு தெரிந்திருக்கும் அனுபவசாலி நடிகரான கமல் ஹாஸனே இதைத்தான் செய்யப் போகிறார். வேறு வழியில்லை அவருக்கும்.அடுத்த மாதம் ரம்ஜான் வெளியீடாக நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படம் வெளியாகிறது.

Kamal Haasan vs Dhanush vs Sivakarthikeyan: ' papanasam ' to Clash with 'Maari' and 'Rajinimurugan'?

ரஜினிமுருகனுடன் தனது மாரியை மோதவிட்டு களத்தில் குதிக்கிறார் நடிகர் தனுஷ். இருவரின் மோதலில் தற்போது மூன்றாவதாக இணைந்திருக்கிறார் கமல். அவரது பாபநாசம் படமும் அதே தேதியில் தான் வெளியாகிறது. ஆக ரம்ஜானுக்கு தற்போது தமிழ் சினிமாவில் மூன்று பெரிய நடிகர்கள் மோதுகிறார்கள்.

ரஜினிமுருகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு முன்பே வெளியிட்டு விட்டது, மாரி படம் இடையில் வந்தது, தற்போது பாபநாசம் கடைசியில் வந்து இணைந்துள்ளது.

ஏற்கனவே சிவாவிற்கும் தனுஷிற்கும் இடையில் நடக்கும் பனிப்போரின் உச்சமாக இந்த ரம்ஜான் மோதல் பார்க்கப்படுகிறது. இப்போது கமல் படமும் இணைந்துள்ளதால் எந்தப் படம் தியேட்டரில் ஓடப் போகிறது, எது பெட்டியை விட்டு ஓடப் போகிறது என்பது தெரியவில்லை பார்க்கலாம்!

 

சினிமா பற்றிய புத்தகத்துக்கு தேசிய விருது: தனஞ்செயனைப் பாராட்டிய ரஜினி

பிரைட் ஆப் தமிழ் சினிமா என்ற சினிமா புத்தகத்துக்காக தேசிய விருது பெற்ற தனஞ்செயனுக்கு ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.

நேற்று ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் நேரில் சந்தித்த தனஞ்செயன், தான் எழுதிய ‘பிரைட் ஆப் தமிழ் சினிமா' புத்தகத்தை அவரிடம் கொடுத்தார். புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட ரஜினி, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Rajini praises Danajayan

உடன் தனது திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரையும் அழைத்து வந்து ரஜினியுடன் படமெடுக்க வைத்துள்ளார்.

தான் எழுதிய புத்தகத்துக்கு ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைத்தது தனஞ்செயனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை சமூக வலைத் தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

 

சூர்யாவைத் தொடர்ந்து பேயாக மாறிய கார்த்தி!

சென்னை: வளர்ந்து வரும் கதாநாயகர்கள் மற்றும் அறிமுக நாயகர்கள் பேய்களாக நடித்தது போய், இப்போது முன்னணி ஹீரோக்களும் பேய்களாக மாறி வருகின்றனர். காஞ்சனா-2, டார்லிங், டிமாண்டி காலனி மற்றும் மாஸ் படங்களின் வெற்றி, கார்த்தியையும் பேயாக்கியுள்ளது.

தொடர்ந்து பல படங்கள் சறுக்கியதில் விரக்தியடைந்திருந்த கார்த்தி தற்போது மெட்ராஸ் மற்றும் கொம்பன் படங்களின் வெற்றியால் மீண்டும் உற்சாக வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது இயக்குநர் கோகுல் இயக்கத்தில் காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா என இரண்டு கதாநாயகிகளுடன் நடித்து வரும் கார்த்தி இந்தப் படத்தில் முதன் முறையாக பேயாக நடிக்கிறார்.

Brothers on the horror track

இதற்கு முன்பு வழக்கமான தனது கேலி, கிண்டல்களுடன் நடித்து வந்தவர் படத்தில் வித்தியாசம் காட்ட வேண்டி இந்தப் படத்தில் பேயாக நடிக்கிறார். தொடர்ந்து பேய்ப் படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட்டடிப்பதால் கார்த்தியும் இந்த பேய் பார்முலாவுக்குள் வந்து விட்டார் போல. படுமிரட்டலாக படம் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.

அண்ணன், தம்பி யாரு பேயாக நடிச்சாலும் நயன்தான் ஹீரோயின். அதில் மட்டும் மாற்றமில்லை!

 

கருணாநிதி தலைமையில் நடந்த அருள்நிதி திருமணம்

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் அருள்நிதியின் திருமணம் இன்று காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது.

திமுகவின் தலைவரும், அருள்நிதியின் தாத்தாவுமான கலைஞர் கருணாநிதி இத்திருமணத்தை நடத்தி வைத்தார்.

Arulnidhi  Marriage Reception: Rajinikanth, Other Celebs Wish Newlywed Couple

இயக்குநர் பாண்டிராஜின் வம்சம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி.

இரண்டாவதாக அருள்நிதியின் நடிப்பில் வெளிவந்த மௌனகுரு படம் இவருக்கு நல்ல ஒரு பிரேக்கை தமிழ் சினிமாவில் கொடுத்தது, தொடர்ந்து தகராறு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் போன்ற படங்களில் நடித்த அருள்நிதி சமீபத்தில் வெளிவந்த டிமாண்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வசூல் நடிகராகவும் மாறிவிட்டார்.

கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசுவின் மகனான அருள்நிதிக்கும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னால் நீதிபதியின் மகளான கீர்த்தனாவிற்கும் கடந்த மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம் பெரியவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது இன்று காலை திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கியமான பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்துக்கு முக அழகிரியும் குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார்.

முன்னதாக நேற்று மாலை நடந்த திருமண வரவேற்புக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், பிரபு,கார்த்தி, சூரி மற்றும் விஷால் என ஏராளமான நடிகர்களும், இயக்குனர் ஹரி, பாரதிராஜா, விஜய் ஆண்டனி,மற்றும் ஏ.வி.எம் சரவணன் ஆகியோர் நேரடியாக வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

 

சண்டிவீரன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்கத் தயார்! - பாலா

சண்டி வீரன் படத் தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பினால், அதைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறேன் என இயக்குநர் பாலா கூறினார்.

பாலாவின் தயாரிப்பில், சற்குணம் இயக்கும் புதிய படம் ‘சண்டிவீரன்'. இதில் அதர்வா - ஆனந்தி நடிக்கின்றனர். அருணகிரி இசையமைக்கிறார்.

Bala ready to face challenges against Chandi Veeran title

‘சண்டிவீரன்' என்பது சர்ச்சை தலைப்பு என்றும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் தயாரித்து இயக்கிய ‘சண்டியர்' பட தலைப்பை எதிர்த்தனர்.

இதுகுறித்து இயக்குநர் பாலா கூறும்போது, ‘‘டைரக்டர் சற்குணம் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து போனது. அதர்வாவும் நல்ல கதைக்காக காத்து இருந்தார். எனவே அதர்வாவுக்காக இந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன்.

‘சண்டியர்' பட தலைப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியதுபோல் சண்டிவீரன் தலைப்பில் நான் எடுக்கும் இந்த படத்துக்கும் எதிர்ப்புகள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

இந்தப் படத்தின் கதை இயக்குநர் பாலாவுக்குப் பிடித்துப் போனது தெரிந்ததும், கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அதர்வா.

 

ஆர்த்தி அகர்வால் மரணத்திற்கு... கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் "லிப்போ" ஆபரேஷனே காரணம்!

ஹைதராபாத்: அமெரிக்காவில் மாரடைப்பால் காலமான நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணத்திற்கு அவருடைய தற்கொலை முயற்சி மட்டுமல்லாமல் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் காரணம் என்ற திடுக் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆர்த்தி அகர்வால்.கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் திரையுலகை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார்.

Indian Actress Aarthi Agarwal Dies after Liposuction in the U.S

2007ஆம் ஆண்டில் கணினி பொறியியலாளர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் உடல் எடை கூடி பருமனாகிவிட்தால் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து ஆலோசித்து வந்தார்.

மேலும் அவரின் உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் தெலுங்கு பட உலகில் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரின் பிரபல மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அவர் அடிக்கடி மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருந்தபோதே அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜூன் 6 ஆம் தேதி காலை அவர் திடீர் மரணமடைந்தார். இச்சம்பவம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத் துறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எடைகுறைப்பு அறுவைச் சிகிச்சை தவறாக முடிந்ததால் நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

சென்னையில் கூட சமீபத்தில் ஒரு உடல் பருமன் உடைய இல்லத்தரசி, இதுபோன்ற லிப்போ ஆபரேஷனால் உயிரிழந்த சம்பவம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.

 

சம்பளம் வேண்டாம் படத்தில பங்கு தாங்க – ஒரே போடாக போடும் நடிகை அனுஷ்கா!

ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா தற்போது ஒரே நேரத்தில் பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி என இரண்டு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இதில் முதலில் ருத்ரம்மா தேவி படம் வெளிவர இருக்கிறது. 3 D படமாக வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு இந்தப் படத்தில் ராணி வேடத்தில் நடித்திருக்கிறார்.

Rudhrama Devi: Anushka Want’s Share For This Movie

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது, போதாதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் வருகிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இப்படம் ஓரளவு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் நடிப்பதற்கு இதுவரையில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கும் அனுஷ்கா அதற்குப் பதில் படத்தின் லாபத்தில் பங்கு கேட்கிறாராம்.

Rudhrama Devi: Anushka Want’s Share For This Movie

படம் எப்படியும் நல்ல லாபத்தைக் கொட்டிக் கொடுக்கும் அதனால் சம்பளம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கும் அனுஷ்கா, வசூலில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்பார்க்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அம்மணி!

‘ஆரோகணம்', ‘நெருங்கி வா முத்தமிடாதே' படங்களைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் அம்மணி.

இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் த்ரிஷாவின் பாட்டியாக நடித்திருந்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Lakshmi Ramakrishnan's third directorial Ammani

இப் படத்தின் ஷூட்டிங்கின்போது இவரைப் பாட்டி என்று யாராவது அழைத்தால் அவருக்குப் பிடிக்காதாம். அதனால் 82 வயதான இவரை ‘அக்கா' என்றுதான் அனைவரும் அழைக்கிறார்களாம். அதற்கேற்றார் போல், தனது வயதையும் பொருட்படுத்தாது பகல்-இரவென பாராமல் பரபரவென ஷுட்டிங்கில் உற்சாகத்துடன் கலந்து கொள்வாராம்.

Lakshmi Ramakrishnan's third directorial Ammani

நிஜவாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு இக்கதையை அமைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். டாக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் வெண் கோவிந்தா படத்தைத் தயாரிக்கிறார்.

 

தனுஷுக்கு ஜோடியானார் கீர்த்தி சுரேஷ்

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்த எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால் அவருக்கு வாய்ப்புகள் வரிசையாக வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் நடிகை மேனகா (ரஜினியுடன் நெற்றிக்கண்ணில் நடித்தவர்) - நடிகர் சுரேஷின் மகள்தான் இந்த கீர்த்தி.

Keerthi Suresh is Dhanush's next heroine

குழந்தையிலிருந்தே நடித்து வரும் கீர்த்தி, குமரியானதும் தமிழில் ஒப்பந்தமான முதல் படம் இது என்ன மாயம். அடுத்து ரஜினிமுருகன், பாம்பு சட்டை.

இந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, மேலும் பல படங்களில், குறிப்பாக பெரிய நிறுவனப் படங்களில் நடிக்க அழைப்பு வருகிறதாம். தமிழில் மிக சரளமாக பேசக் கூடிய திறமை இருப்பதால், கீர்த்தியே இயக்குநர்களில் முதல் தேர்வாக உள்ளாராம்.

பிரபு சாலமன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இப்போது கையெழுத்திட்டுள்ளாராம் கீர்த்தி.

 

த்ரிஷா இல்லனா நயன்தாராவில் சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா

நண்பர்களுக்காக படங்களில் நடித்துக் கொடுப்பதை ஒரு பழக்கமாகவே தொடர்கிறார் ஆர்யா. சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே படங்களில் வந்து போன மாதிரி, அடுத்து ஜிவி பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் தோன்றவிருக்கிறார் ஆர்யா.

இப்படத்தில் ஏற்கெனவே, நடிகை ப்ரியா ஆனந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இப்படத்தில் சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஆர்யாவும் நடிக்கிறார்.

Arya to appear in speaial role in Trisha Illana Nayanthara

கயல் ஆனந்தி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்டத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே இயக்குனர் ராஜேஷ், சந்தானம், விக்ராந்த் ஆகியோரது படங்களில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவை விரைவில் வெளியாகவிருக்கின்றன.

 

இந்தியில் வில்லனாகிறார் கமல் ஹாஸன்!

தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து இந்தியில் படம் இயக்கி நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.

த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துவரும் படம் தூங்காவனம். இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

கமல்

கமல்ஹாசனின் உதவியாளரான ராஜேஷ் இப்படத்தினை இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை முடித்த கையுடன் இந்தியில் படம் இயக்கவிருக்கிறார் கமல்.

‘அமர் ஹெய்ன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்திப்படம் தமிழில் ஏற்கெனவே படமாகவிருந்த "தலைவன் இருக்கிறான்" என்பதன் இந்தி வடிவம். சைஃப் அலிகானை மனதில் வைத்தே படத்தை எழுதிவருவதாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதும் கமல்தானாம். அரசியல் த்ரில்லராக அமையும் இந்தப் படத்தை துபாய், லண்டன், டெல்லி போன்ற இடங்களில் படமாக்க முடிவு செய்துள்ளாராம் கமல்.

 

விடாது ஆவி… இல்லத்தரசிகளே உஷார்…

பெரியதிரையைத்தான் பேய்கள் பிடித்து ஆட்டுகிறது என்றால் சின்னத்திரையிலும் இனி பேய்களின் ஆதிக்கம் அதிகமாகிவிடும் போல இருக்கிறது. சூரிய டிவியில் இரவு பத்துமணிக்கு தினசரி பேய் வந்து போகிறது. இது பத்தாது என்று ஞாயிறு இரவு ரிலாக்ஸ் ஆக டிவி பார்க்கலாம் என்றால் அப்போதும் ஆவிகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இப்போது புதிய சேனலிலும் பில்லி, சூனியம் பேய்கதை சொல்லப்போகிறார்களாம். ஒரு ஊர் ரெண்டு ஊர் இல்லை ஏழு ஊர் பெண்களை பேய் பிடித்து ஆட்டப்போகிறதாம்.

இதில் பேய் பிடித்து ஆடப்போகிறவர்களில் ஆட்டோ ராணியும் அடக்கமாம். சினிமாவில் நடித்த இவர், சீரியலில் வில்லி அவதாராம் எடுத்தார். இப்போது பேய் பிடித்து ஆடப்போகிறார். அதோடு பாசமலரின் நாயகியாக அறிமுகமாகி பாதியில் போனவருக்கும் பேய் பிடிக்குமாம்.

அது சரி அப்போ பேயை ஓட்டப்போகிறவர்கள்? அவர்களும் நமக்கு பழக்கமானவர்கள்தான்... இதை எடுப்பதோ நட்சத்திர சேனல், சூரிய சேனல் என்று சுற்றி வந்த அழகுமயமான இயக்குநர்தானாம். அது சரி... ஒரு பேய் என்றாலே தாங்க முடியாது... ஏழு ஊர் பேயை எப்படி தாங்கப் போகிறதோ இந்த தமிழ் சமுதாயம். அது சரி எத்தனை நாளைக்குத்தான் அழுகையா பார்க்கிறது பேய் பிடித்து ஆடுவதையும் பார்ப்போமே என்று தைரியமாக தயாராகிவிட்டனராம் இல்லத்தரசிகள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் டிவி சேனல்களை பேய்களும், பூதங்களும், ஆவிகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. மக்களுக்கு மூடநம்பிக்கையை வளர்க்காதீங்க... போதும் நிப்பாட்டுங்க... என்று கேஸ் போடும் அளவிற்கு போனது. இதையடுத்து கொஞ்சம் அடக்கி வாசித்தனர். இதனையடுத்து இதிகாசத் தொடர்கள் சேனல்களில் அதிகம் ஒளிபரப்பானது. ஆனால் தற்போது மீண்டும் பேய் கதைகள் டிவி சேனல்களை படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

அது சரி அழுது அழுது ரத்துக்கொதிப்பு வந்த மனைவிமார்களுக்கு இனி அச்சத்தில் காய்ச்சல் வராமல் இருந்தால் சரிதான் என்கிறது கணவர்களின் மைன்ட் வாய்ஸ்.

 

எலியோடும் மோதல, புலியோடும் மோதல.. என் ரூட்டு தனி! - சந்தானம்

வடிவேலு நடித்த எலி படத்துக்கோ, விஜய் நடித்த புலி படத்துக்கோ என் படம் போட்டியில்லை. நான் தனி வழியில் பயணிக்கிறேன், என்றார் நடிகர் சந்தானம்.

சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படம் வரும் ஜூன் 12-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படம் வெளியான ஒரு வாரம் கழித்து வடிவேலுவின் எலியும், அடுத்த சில வாரங்களில் விஜய் நடித்த புலியும் வெளியாகிறது.

Inime Ippadithaan is not competing with Eli or Puli

இந்த நிலையில், சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படம் எலிக்குப் போட்டியா என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சந்தானம், 'என் படம் எலியோடும் மோதல.. புலியோடும் மோதல. நான் என் ரூட்ல போறேன். அவங்க படம் வேற.. ரேஞ்ச் வேற.

இன்னும் 3 படங்களில் தொடர்ந்து ஹீரோவா நடிக்கப் போறேன். அதுக்காக தொடர்ந்து ஹீரோவாத்தான் நடிப்பேன்னு சொல்ல வரல. பிடித்த மாதிரி கதைகள் அமைந்தால் காமெடியனாகவும் தொடர்வேன்," என்றார்.

சந்தானம் இப்போது தன் படத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கெல்லாம் ரசிகர்களைச் சந்தித்து தன் படத்தை புரமோட் செய்து வருகிறார்.

 

மூளையைத் தூக்கி் போடு, முக்கைச் சிந்தி நல்லா அழு.. முட்டாள் பெட்டியின் முடிவுறா அழுவாச்சி காவியங்கள்

வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்'தானே கேள்விப்பட்டிருக்கிறோம்... அதென்ன அழுவாச்சி காவியம் என்று யோசிக்கிறீர்களா? அதான் தலைப்பின் முன்னாடியே எழுதியிருக்கோமே.. ‘முட்டாள் பெட்டி" பெட்டி பற்றிய "குமுறல் காவியம்"தான் இது.

நம் வீட்டின் நடுக்கூடாத்தில் இருக்கிறதே ஒரு முட்டாள் பெட்டி அதாங்க டிவி... அதற்கு முட்டாள் பெட்டி என்று பெயர் வைத்தவருக்கு சிலை வைத்து விழா எடுக்கலாம். அறிவுப்பூர்வமாக மக்கள் தெரிந்து கொள்ள எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் அந்த ஒப்பாரி சீரியல்களைத்தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்.

Effects of Idiot box on South Indian woman

தமிழில் 30க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. இதில் இசை சேனல்கள், செய்தி சேனல்களை ஒதுக்கிவிட்டால் பத்துக்கும் மேற்பட்ட சேனல்களில் காலை பத்து மணி முதல் இரவு 11 மணி வரை எந்த சேனலை திருப்பினாலும் சீரியல் மயம்தான். வீட்டுக்காரரையும், குழந்தைகளையும் அனுப்பி வைத்துவிட்டு அக்கடா என்று டிவி பெட்டி முன் உட்கார்ந்து சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர் நம் வீட்டு பெண்மணிகள்.

நேரடி தமிழ் சீரியல் இல்லையா? இந்தி டப்பிங் சீரியல் அல்லது கொரியன் டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகிறது. எதை எதை சொல்லக்கூடாதோ அதை எல்லாம் பூக்களும், பிஞ்சுகளும் புரிந்து கொள்ளும் அளவிற்கு விலாவாரியாக சீன் பை சீன் விளக்கி விட்டுத்தான் ஓய்வார்கள்.

இன்றைய சீரியல்கள் இருதாரத்திற்கு ஆதரவாக கொடி பிடிக்கிறது; இல்லையா? மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை ஏமாற்றி காதலிப்பது எப்படி? கள்ள உறவுகள்... என மிகப்பெரிய பட்டியலே போடலாம் இன்றைய சீரியலைப் பற்றி... அட அதெல்லாம் பழசு பாஸ்... இப்போ தங்கை உறவு கொண்ட பெண்ணையே... அதுவும் தன்னுடைய மனைவியின் தம்பி மனைவியை மிரட்டி படுக்கைக்கு அழைப்பதுதான் பேஷன் என்கிற ரீதியில் சீரியல்கள் எடுக்கப்படுகின்றன.

ரேடியோ ஜாக்கியாக இருந்து சீரியலில் நடிக்க வந்த ஒரு நடிகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னார். "நீங்க பேசவே வேணாம்... வந்து அழுதுட்டு போனா போதும்னு சொன்னாங்க... நானும் சீரியல்ல அதைத்தான் செய்துட்டு இருக்கேன்" என்று சொன்னார்.

இன்றைக்கு டிவியில் ஒளிபரப்பாகும் பத்துக்கு 8 சீரியல்கள் அழுகாச்சி காவியங்களாகத்தான் இருக்கிறது. ஏதோ போனா போகட்டும் என்று சில சேனல்களோ காமெடி சீரியல்களையோ அல்லது பேய் கதை சொல்லியோ பயமுறுத்துகிறார்கள்.

சீரியல் நடிகைகள் வீட்டை விட்டு கிளம்பும் போதே அழுகைக்கு தயாராகிவிடுவார்கள். அழகான நாயகி என்றாலும் அழவிட்டு பார்ப்பதில்தான் அந்த சீரியலின் இயக்குநருக்கு அப்படி ஒரு ஆனந்தம். சீரியலின் ஆரம்பத்தில் வீரவசனம் பேசும் நாயகி கூட சில எபிசோடுகள் முடிந்த உடன் வில்லிகளின் டார்ச்சர் தாங்காமல் கண்ணீர் சிந்தி இல்லத்தரசிகளின் உச்சு கொட்டல்களை வாங்கினால்தான் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும்.

சீரியல்களில் நடிகர்களுக்கு வந்து போகும் வாய்ப்புதான். இங்கு ஹீரோயின்கள், வில்லிகளுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம். ஹீரோயின்களை விட வில்லிகளை கொண்டாடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் எனவே நிறைய ஹீரோயின்கள் வில்லிகளாக நடிக்க ஆசைப்படுகின்றனர். வில்லிக்கு அழுகை கிடையாது... ஹீரோயின்கள்தான் சீரியல்களில் கண்ணீர் சிந்துகின்றனர். அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் காசுதான். இப்படி கண்ணீரும் கம்பலையுமாக நடிக்கும் சீரியல்களைப் பார்த்து நம் வீட்டு பெண்மணிகளின் ரத்தக்கொதிப்பு எகிறுகிறது. ஒரே அழுகையும் ஆர்பாட்டமுமாய் நாள்தோறும் நகர்கிறது தென்னிந்திய பெண்மணிகளின் நாட்கள்.

இந்த அழுகைக்கும் சிரிப்பும் இடையே வாழும் சீரியல் நட்சத்திரங்களின் வாழ்க்கையே எபிசோடுகளில் எண்ணும் அளவிற்கு இருக்கிறது. ‘அழுதாத்தான் துட்டு... இல்லையா அவுட்டு' என்பதுதான் டிவி சீரியலின் தாரக மந்திரம். அதுவும் வாங்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல் நடிக்கும் (அழுது புலம்பும்) சில நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் டிவி திரையில் வந்தாலே... ‘வந்துட்டாங்க 5 ரூபாய் சம்பளத்திற்கு 500 ரூபாய்க்கு அழும் நடிகை' என்று சீரியல் ரசிகர்களே சொல்லிவிடுவார்கள்.

கரக்காட்டக்காரன் படத்தில் கவுண்டமணி சொல்லுவார் செந்திலைப்பார்த்து "ஏண்டா நீ வாங்குற அஞ்சு, பத்துக்கு இதெல்லாம் தேவையா?" என்று கேட்பார். அதற்கு செந்தில், "எல்லாம் ஒரு வௌம்பரம்" என்று சொல்வார். அழும் நடிகைகளைச் சொல்லியும் குற்றமில்லை. இயக்குநர் சொல்படி கேட்டு நன்றாக அழுது புரண்டு நடித்தால்தான் அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் அந்த நடிகைக்குக் கிடைக்கும். இல்லை என்றால் ‘இவருக்கு பதில் இவர்' என்றோ, போட்டோவுக்கு மாலை' போட்டு அவர்களின் கதையை முடித்து விடுவார்கள். அப்புறம் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று பயந்தே அழுது புரண்டு நடிக்கிறார்கள் நடிகைகள். பாவம் இவர்கள் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு போயாவது தங்களின் சொந்த பந்தங்களுடன் கூடியாவது சிரிப்பார்களா? இல்லையா? தெரியாது.

இப்படி அழுகாச்சி காவியங்களைப் தினசரி பார்க்கும் நம் வீட்டு பெண்மணிகளோ ஒரு எபிசோடை மிஸ் செய்தால் கூட விடாமல் வெளியூருக்கு போன் போட்டு அந்த கதையைக் கேட்டு கண்ணீர் சிந்துவார்கள். அதுசரி ‘ஏம்பா ஆட்டோ சீக்கிரம் போப்பா பிரசவ வலியால துடிச்ச மலருக்கு என்ன ஆச்சோ? அவளை போய் கோபி பார்த்தானோ இல்லையோ? என்று சொந்த கதை, சோக கதை போல சீரியல் கதை பேசும் பெண்மணிகள் இருக்கும் வரை இந்த அழுகாச்சி காவியங்கள் முடிவுக்கு வராது!

ஓகே..ஓகே.. சீரியல் ஆரம்பிக்கப் போகுது.. போய் நல்லா அழுங்க..ஸாரி... பாருங்க!

 

இயக்குநர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் விக்ரமன்

இயக்குநர் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடகிறார் விக்ரமன்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விக்ரமன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Vikraman to contest directors association election

செயலாளராக ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக வி.சேகர், துணைத் தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள்.

இவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 5-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் விக்ரமன் மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பதவிக்கு வி.சேகர், துணைத்தலைவர் பதவிக்கு பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

கடந்த 4-ந்தேதி நடைபெற்ற இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வேட்பு மனுதாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 23-ந்தேதி நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஓட்டுப்பதிவு ஜூலை 5-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.

இயக்குநர்கள் சங்கத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 5-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும். வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்துவார்.

 

நெருங்கும் நடிகர் சங்கத் தேர்தல்... நாசருக்கு கொலை மிரட்டல்!

சென்னை: தமிழ் சினிமா படக் காட்சிகளை மிஞ்சும் வண்ணம் நாள்தோறும் நிஜக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருகின்றன நடிகர் சங்கத்தில்.

தொடர்ந்து மூன்று முறை நடிகர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப் பட்டு தற்போது பதவியில் இருக்கும் நடிகர் சரத்குமார், சொன்னது போல நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டவில்லை. இதனால் விஷால் உள்ளிட்ட இளம் நடிகர்கள் தற்போது சரத்குமாருக்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Nadikar Sangam Election 2015: Sarathkumar Vs Nassar

இதற்கிடையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியிட அவரை எதிர்த்து விஷாலின் அணியில் இருந்து நடிகர் நாசர் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின. நடிகர் விஷாலிடம் சரத்குமார் சற்று கடுமையாக நடந்து கொண்டதைக் கண்டித்து நாசர் ஏற்கனவே அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் நாசர் துணிச்சலாக சிலக் கேள்விகளை கேட்டிருந்தார், அவரின் துணிச்சலைக் கண்ட சீனியர் நடிகர்கள் முதல் ஜூனியர் நடிகர்கள் வரை அனைவரும், நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் அவருக்கே தங்கள் ஆதரவை அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதைக் கண்டு பொறுக்க முடியாத யாரோ சில மர்ம நபர்கள் நாசருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆபாசமாகவும் திட்டியுள்ளனர்.

இதனை தாங்க முடியாத நாசர் தனது சக நடிகர்களிடம் சொல்லி வருத்தப்பட, விஷயம் விஷாலின் காதுக்கு எட்டி தற்போது இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனராம் விஷாலின் அணியைச் சேர்ந்தவர்கள்.

இன்னும் என்னென்ன அதிரடிகளைப் பார்க்கப் போகிறோமோ!

 

என்னது டாப்ஸி 'அம்மா' ஆயிட்டாரா?

சென்னை: பாட்மிண்டன் வீரரைக் காதலிக்கும் நடிகை டாப்சி அம்மாவாகி விட்டார் என சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதால், கடும் கோபத்தில் இருக்கிறார் நடிகை டாப்சி.

செய்தியை வெளிட்டது நம்ம ஊரு பத்திரிக்கைகள் அல்ல வெளிநாட்டைச் சேர்ந்த பத்திரிக்கைகள். பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவைக் காதலித்து வரும் நடிகை டாப்சி தற்போது பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

I haven't delivered a Baby: Tapsee

டாப்சியின் காதலர் மத்தியாஸ் போவுடன் விளையாடி வரும் இணை வீரரான கேர்ஸ்டனுக்குத் தான் குழந்தை பிறந்திருக்கிறது, ஆனால் பத்திரிக்கைகள் மத்தியாஸ் போவின் காதலி டாப்சிக்கு குழந்தை பிறந்து விட்டதாக மாற்றி எழுதி விட்டன. அதனால் தற்போது உலகெங்கும் டாப்சி அம்மா ஆகி விட்டதாக பரவிய வதந்தி காட்டுத்தீ போன்று பரவி விட்டது.

இதைப் பற்றி கேள்விப்பட்ட நடிகை டாப்சி எனக்கேத் தெரியாமல் எனக்கு குழந்தையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், மத்திதியாஸின் இணை வீரரான கேர்ஸ்டனுக்கு பிறந்த குழந்தையை எனக்குப் பிறந்ததாக மாற்றி எழுதி விட்டனர். எனக்கு தற்போது நடிப்பதற்கும், சொந்தத் தொழிலை கவனிப்பதற்குமே நேரம் சரியாக உள்ளது என்று கூறியிருக் கிறது டாப்சி பன்னு.

அதானே.. டாப்சி பன்னு.. நல்ல பொண்ணாச்சே!