நகை திருட்டு விசாரணை: லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லிண்ட்சே ஓட்டம்

Lindsay Flees La After Cops Quizz Her About Jewel Theft

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் விலை உயர்ந்த நகைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்ததையடுத்து ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன் லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறிவிட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹனுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் நடந்த விருந்துக்கு சென்ற லிண்ட்சே தன்னுடன் தனது சகோதரர் காய், உதவியாளர் மற்றும் பெயர் தெரிவிக்கப்படாத 2 ஆடவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு அவர்கள் அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள், கூலிங்கிளாஸை காணவில்லை என்று உரிமையாளர் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு தங்கியிருந்த லோஹனை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர் தான் திருடினார் என்று சந்தேகிக்காவிட்டாலும் அவர் அழைத்து வந்த அந்த பெயர் தெரிவிக்கப்படாத இருவர் மீது தான் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணையை முடித்த கையோடு லிண்ட்சே லாஸ் ஏஞ்சல்ஸை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

 

உற்சாகத்திற்கு காரணம் பழைய பாடல்கள்தான் : தொகுப்பாளர் ஸ்ரீதேவி

Old Songs Are My Energy Thenkinnam Sridevi

ஒரு நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் காரணமாக அமைந்துவிடுகின்றனர். ஜெயா டிவியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவியும் அப்படித்தான்.

புதிய பாடல்களைவிட பழைய பாடல்களுக்குத்தான் இப்பொழுது ரசிகர்கள் அதிகமாகிவருகின்றனர். இதனால் காலை நேரத்தில் சன், ஜெயா, மெகா, வசந்த், ராஜ் என பெரும்பாலான டிவிகளில் பழைய பாடல்களே ஒளிபரப்பாகின்றன. ஜெயா டிவியில் பழைய திரைப்படங்களின் பாடல்களை தொகுத்து வழங்கும் ஸ்ரீதேவிக்கு புதிய பாடல்களை விட பழைய பாடல்கள்தான் உற்சாகத்தை தருகின்றனவாம்.

மற்ற டி.வி.க்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஜெயா டி.வி.யின் "தேன் கிண்ணம்' நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்க கூடிய இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது பெருமையாக இருக்கிறது. தலைமுறை இடைவெளியில் சில சமயங்கள் இது மாறிவிட்டாலும், சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நம் உதடுகளால் முணுமுணுக்கப்படுகிறது. ஏனென்றால் நாம் இன்னும் பழமையின் சாயல்கள்தான் என்கிறார் ஸ்ரீதேவி.

தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வழங்கியதிலிருந்து ஸ்ரீதேவியின் நண்பர்களும் இப்போது பழைய பாடல்களின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டனராம். தேன் கிண்ணம் நிகழ்ச்சிக்கு முன்பு பொதிகை டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த "கதை கதையாம் காரணமாம்' என்ற நிகழ்ச்சியையும் ஸ்ரீதேவிதான் தொகுத்து வழங்கியுள்ளார். தேன் கிண்ணம்' பழைய பாடல்களில் தொகுப்பு என்றால், அந்த நிகழ்ச்சி பழைய சினிமா காட்சிகளின் தொகுப்பு.

ஸ்ரீதேவிக்கு பழைய பாடல்களைப் போல பரத நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் பரத நாட்டியம்தான் பிராக்டீஸ் செய்கிறார். தீவிர சினிமா ரசிகையான ஸ்ரீதேவிக்கு சினிமா, சீரியல் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் நடிக்க ஆர்வம் இல்லையாம்.

 

சாக்கடை அடைப்பை எடுத்து விடுங்கப்பா.. சொல்கிறார் நயனதாரா

Nayanthara Wants Clean Rain Water Canals In Chennai   

நயனதாராவுக்கு வர வர சமூக பார்வை அதிகமாகிக் கொண்டு போகிறது போலும். சாக்கடை அடைப்பையெல்லாம் எடுத்து விடுமாறு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்.

ஒரு காலத்தில் ஓஹோவென திரையுலகில் வலம் வந்தவர் நயனதாரா. அவருடன் ஜோடி போட ஒரே கூட்டமாக இருந்த காலம் அது. இடையில் இரண்டு முறை காதலில் விழுந்தார் நயனதாரா. இரண்டுமே பாதியிலேயே புட்டுக் கொண்டது. அந்த இரண்டு தோல்விக்கும் என்ன காரணம் என்பது இதுவரை சரியாக தெரிவிக்கப்படவில்லை, அது அவர்களது பெர்சனல் மேட்டர். நமக்கேன் வம்பு.

இப்போது மேட்டருக்கு வருவோம். சென்னை நகரம் குறித்த தனது கருத்துக்களைக் கூறியுள்ள நயனதாரா சென்னை நகரின் அலங்கோலங்களையும் கோடிடடுக் காட்டி அதையெல்லாம் சரி செய்யுமாறு கோரிக்கையும் வைத்துள்ளார். குறிப்பாக சாக்கடை அடைப்புதான் அவரை ரொம்பவே கடுப்பாக்குகிறதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மழைக்காலத்தில் சென்னையில் நடக்கவே முடியாது. சாலைகள் எல்லாம் ரொம்ப மோசம். அதை விட இந்த சாக்கடை கால்வாய் அடைப்புகள்தான் பெரும் சிரமப்படுத்தும். அதையெல்லாம் சரி செய்து, அடைப்புகளை எடுத்து விட்டால், ரோடுகளில் தண்ணீர் நிற்க வாய்ப்பே இல்லை. மழைக்காலத்தில் மக்களும் நிம்மதியாக செல்ல முடியும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

அட, நம்ம அரசியல்வாதிகளுக்குக் கூட இந்த அடைப்பெடுக்கும் யோசனை தோன்றாமல் போய் விட்டதேய்யா...!!

 

ரூ.100 கோடி வசூல் சாதனை படங்கள்: பெருமை அடிக்கும் அசின்

Asin Takes Dig At Fellow Members 100 Crore Club   

மும்பை: ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் என்ற கணக்கு, நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி படத்தில் இருந்து தான் துவங்கியது என்று அசின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசின் கூறுகையில், நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி(2008) படத்தில் இருந்து தான் இந்த ரூ.100 கோடி வசூல் கிளப் துவங்கப்பட்டது. எனது முதல் இந்தி படமே ரூ.100 கோடி வசூல் செய்தது. ஹீரோயின்களைப் பொறுத்த வரையில் ரூ.100 கோடி வசூல் கிளப்பை துவக்கியவளே நான் தான் என்று உணர்கிறேன். ஆனால் அதை வைத்து நான் ஒரு போதும் விளம்பரம் தேடியதில்லை. நான் ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் வெற்றிப் படங்களாகும்.

எனக்கு தற்பெருமை அடிக்கப் பிடிக்காது. அது என் குணமே இல்லை. பணம் எவ்வளவு வருகிறது என்பதை பார்ப்பது எனது வேலையில்லை. அந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் விட்டுவிட்டு நடிப்பைப் பற்றி மட்டுமே நடிகர், நடிகைகள் கவலைப்பட வேண்டும். ரெடி, போல் பச்சன், ஹவுஸ்புல் 2 ஆகிய காமெடி படங்கள் அடுத்தடுத்து கிடைத்தது தற்செயலானது. காமெடி தவிர பிற படங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

அசினை தவிர்த்து ரூ.100 வசூல் செய்த படங்களில் நடித்த பிற பாலிவுட் நாயகிகள் கரீனா கபூர் (3 இடியட்ஸ், 2009), பிரியங்கா சோப்ரா (டான் 2, 2011), சோனாக்ஷி சின்ஹா (தபாங், 2010) மற்றும் கத்ரீனா கைப் (ஏக் தா டைகர்) ஆவர்.

 

விஜய், சூர்யாவுக்காக 'சிவாஜி 3டி' ரிலீஸை தள்ளிப் போடுகிறார் ரஜினி?

Rajini S Help Vijay Surya

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சிவாஜி படத்தின் 3டி பதிப்பு ரெடியாகி விட்டாலும் கூட அதன் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாமதத்திற்கு ரஜினிதான் காரணம் என்றும் கூறுகிறார்கள். அதாவது மிக விரைவில் விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. அவர்களது படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் தனது 3டி சிவாஜியை சற்று தாமதித்து வெளியிடலாம் என்று ரஜினி முடிவு செய்துள்ளாராம்.

இதுதொடர்பாக ஏவிஎம் நிறுவனத்திடம் ரஜினியே பேசி, முதலில் சூர்யா, விஜய் படங்கள் வெளியாகட்டும். நாம் சற்று தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். அதற்கு ஏவிஎம் நிறுவனமும் சரி என்று கூறி விட்டதாக சொல்கிறார்கள்.

இளம் நடிகர்கள் மீது ரஜினிக்கு உள்ள அக்கறையை, அவரது பெருந்தன்மையை இது காட்டுவதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

விஜய், சூர்யா படங்கள் வெளியாகும் நேரத்தில் சிவாஜி 3டி வெளியானால், நிச்சயம், விஜய், சூர்யா படங்களின் வசூலை அது வெகுவாக பாதிக்கும் என்பதால்தான் ரஜினியே பெருந்தன்மையாக தனது படத்தை தள்ளிப் போட யோசனை தெரிவித்துள்ளாராம்.

ரஜினி தி கிரேட்...

 

சபாஷ்... பேட்மிண்டன் போட்டிகளில் கலக்கிய 'கோலிவுட்டின் சாய்னா' ஷாலினி!

Shalini Ajith Sizzles Badminton Championship   

சென்னை: கோலிவுட்டின் சாய்னா என்று செல்லப் பெயர் பெற்ற நடிகை ஷாலினிக்கு நாகர்கோவிலில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

நாகர்கோவிலில் சமீபத்தில் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி நடந்தது. இதில் ஷாலினியும் கலந்து கொண்டார். ஷாலினி ஒரு சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை. சமீப காலமாக அவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.

நாகர்கோவிலில் நடந்த போட்டியில் அவர் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் கலந்து கொண்டார். இதில் இரண்டிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

போட்டியின் இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில் அவர் பரிசினை பெற்றுக் கொண்டார். தனக்கான பரிசை தனது மகள் அனுஷ்கா மூலமாக பெற்றார் ஷாலினி.

 

விஜயலட்சுமிக்கு சீரியலிலும் சோகம்தான்!

Actress Vijayalakshmi Plays Chelleme

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து நிகழ்ச்சித் தொகுப்பாளராக களம் இறங்கிய நடிகை விஜயலட்சுமி பின்னர் சீரியலில் முகம் காட்டினார். இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஒதுங்கிய விஜயலட்சுமி இப்பொழுது செல்லமே சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சொந்த வாழ்க்கைதான் சோகமாகிப்போனது என்றால் அவருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களும் சோகமயமானதாகவே, அமைந்திருக்கிறது. கேரளாவில் செட்டில் ஆனா விஜயலட்சுமி அங்கு வரும் செல்லம்மாவின் கணவர் வடமலையை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். இனி ராதிகாவுடன் மல்லுக்கு நிற்கும் பாத்திரமாம்.

இயக்குநர் சீமானுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின்னர் மீடியாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவர் இப்பொழுதுதான் அதிலிருந்து மீண்டு சீரியலில் நடிக்க வந்துள்ளார். ஆனால் கிடைத்துள்ள கதாபாத்திரமும் இப்படி அமைந்து விட்டதே என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

 

சூரியவணக்கமாய் மாறிய வணக்கம் தமிழகம்!

Sun Tv S Suriya Vanakkam

சன் தொலைக்காட்சியில் காலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த வணக்கம் தமிழகம் நிகழ்ச்சி புத்தம் புது பொலிவாய் சூரிய வணக்கமாய் மாறியிருக்கிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் புதிதாய் உற்சாகமாய் இருப்பது நிகழ்ச்சியின் மெருகினை கூட்டியிருக்கிறது.

அரங்கில் அமர்ந்து பேசிய சாலமன் பாப்பையா, அழகாய் அவுட்டோரில் அமர்ந்து செய்தி சொல்கிறார். ராஜாவும், பாரதி பாஸ்கரும் அற்புதமான தகவல்களை எளிமையாய் பரிமாறிக்கொள்கின்றனர். யோகா நிகழ்ச்சி கூட புதிய பொலிவாய் அனைவரும் பின்பற்றும் வகையில் அமைந்திருக்கிறது.

சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் ரம்ஜான் தினத்தன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.ராஜேந்தர் தன்னுடைய கருத்துக்களை, இசை மீதான காதலை பகிர்ந்து கொண்டார். இசைப்பது இறைவன், வாயசைப்பது நான் என்று டி. ராஜேந்தர் தன்னடக்கத்தோடு தெரிவித்தார். இசை வந்து எங்கும் எப்படியும் நிறைந்திருக்கும். இசை என்பது அனைவருக்கும் அப்பாற்பட்டது என்று கூறிய ராஜேந்தர் கரும்பு தின்ன கூலியா என்பதைப் போல இசையைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு தன்னுடைய வாயினால் ஒரு இசை ராஜாங்கமே நடத்திவிட்டார் டி.ராஜேந்தர்.

 

மீண்டும் நகை திருட்டு சர்ச்சையில் சிக்கினார் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன்

Lindsay Lohan Questioned Aftter Jewellery Burgled

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் விலை உயர்ந்த நகைகள் திருடு போனது தொடர்பாக நகை திருட்டு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஹாலிவுட் நடிகை லிண்ட்சேயிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் லிண்ட்சேவுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இப்பொழுது மீண்டும் நகை காணாமல் போன சம்பவத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.

ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டி முடிந்த பிறகு லிண்ட்சேயும் மற்றவர்களும் இரவு அங்கேயே தங்கியிருக்கின்றனர். ஆனால் காலையில் ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியின் உரிமையாளர் போலீசில் அலறியடித்துக் கொண்டு புகார் செய்தார். தமது விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகளைக் காணவில்லை என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் நகை திருட்டு பற்றி அனைவரிடமும் விசாரித்தனர். நகை திருடி ஜெயிலுக்குப் போன லிண்ட்சேயிடமும் :"தீவிர" விசாரணை நடத்திவிட்டுப் போயிருக்கின்றனர்.

அம்மணி இம்முறையும் ஆட்டையை போட்டிருப்பாரோ? என்றுதான் அமெரிக்க போலீஸ் சந்தேகிக்கிறதோ?

 

பாக்சர் மேரி கோம் வாழ்க்கையை படமாக்கும் சஞ்சய் லீலா பன்சாலி

Bhansali Make Film On Mary Kom S Life

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்.  இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மேரி கோமின் வாழ்க்கையை படமாக்கவிருக்கிறார். இதற்கான திரைக்கதையை ஆர்ட் டைரக்டர் ஓமங் குமார் தயாரித்து வருகிறார். மேரி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பே அவரது வாழ்க்கையை படமாக்குவது குறித்த முயற்சிகளை துவங்கியதாக பன்சாலி தெரிவித்துள்ளார்.

ஒரு ஆண்டுக்கு முன்பே ஓமங் மேரியை சந்தித்து அவரது வாழ்க்கையை படமாக்க அனுமதி கோரியுள்ளார். மேரியும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

இந்த படம் குறித்து பன்சாலி கூறுகையில்,

மேரி கோம் இரண்டு குழந்தைகளின் தாய். அவர் பல போராட்டங்களைத் தாண்டி சாதித்துள்ளார். அவர் தற்போதைய உலக சாம்பியன். இந்தியாவில் குத்துச்சண்டை வீராங்கனைகள் அரிது. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மேரி கோம் பற்றிய படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

 

எம்.எஸ்.வியுடன் இணைகிறார் யுவன் ஷங்கர் ராஜா

Yuvan Join With Msv Thillumullu

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைகிறார் இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசு யுவன் ஷங்கர் ராஜா.

இசைஞானியும், மெல்லிசை மன்னரும் இணைந்து கொடுத்த மெல்லத் திறந்தது கதவு இன்னும் கூட ரசிகர்களின் மனதிலிருந்து அகலவில்லை. அப்படி ஒரு மதுரமான இசையில் உருவானது அப்படம்.

இந்த நிலையில் எம்.எஸ்.வியுடன் இணைகிறார் இசைஞானியின் இசை வாரிசான யுவன் ஷங்கர் ராஜா. இருவரும் இணையப் போகும் படம் தில்லுமுல்லு ரீமேக்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவாகி பட்டையைக் கிளப்பிய படம் தில்லுமுல்லு. இப்படம் இப்போது சிவா நடிக்க ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில்தான் எம்.எஸ்.வியுடன் இணைந்து இசையமைக்கவுள்ளார் யுவன்.

எம்.எஸ்.வியுடன் இணைந்து இசையமைக்கவுள்ளது குறித்து யுவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தில்லுமுல்லு ரீமேக்கில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஈஷா தல்வார் நடிக்கவுள்ளார். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், சத்யன், மனோபாலா ஆகியோரும் நடிக்கவுள்ளார். தேங்காய் சீனிவாசன் காமெடியில் கலக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பார் என்று தெரிகிறது.

கமல்ஹாசன் நடித்த கடைசி சீன் காமெடிக் காட்சியில் அவரது வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.