கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் காயம்

பிரபல கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் படப்பிடிப்பில் காயமடைந்தார்.

சந்தித்தவேளை, நான் அவனில்லை, அரவான், சினேகிதியே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். நேற்று ரிலீசான துணை முதல்வர் படத்தில் பாக்யராஜ் ஜோடியாக நடித்துள்ளார்.

மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார் ஸ்வேதா.

கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் காயம்

ஒரு மலையாள தொலைக்காட்சி தொடரில் பங்கேற்க சமீபத்தில் தாய்லாந்து சென்றார் ஸ்வேதா. அங்கே ஒரு காட்சி படமாக்கப்பட்ட போது, தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் ஸ்வேதா மேனனுக்கு சிகிச்சை தரப்பட்டது.

 

ஓசியில் டிவிடி கொடுத்தாலும் வீடியோ பைரசி ஒழியாது போலிருக்கே!

இனி இலவசமாகவே டிவிடியைக் கொடுத்தாலும் திருட்டுத்தனமாக படங்களை ஒளிப்பரப்புவதும், இணையத்தில் பதிவேற்றுவதும் ஒழியாது போலிருக்கிறது.

திருட்டு டி.வி.டி.யை ஒழிக்கவும், புதிய திரைப்படங்களை வீட்டிலேயே பார்க்கும் வகையில் ‘சி.2.எச்' சினிமா டூ ஹோம் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.

ஓசியில் டிவிடி கொடுத்தாலும் வீடியோ பைரசி ஒழியாது போலிருக்கே!

இந்த திட்டத்தில் இயக்குநர் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்த டிவிடி விலை 50 ரூபாய்தான்.

இந்த திரைப்படத்தை புதுவையில் டி.வி.டிக்களில் 100-க்கும் மேற்பட்ட முகவர்கள் விற்பனை செய்து வந்தார்கள்.

ரூ 50 கொடுத்து ஒரிஜினல் டிவிடி வாங்கக் கூட மனசில்லை தமிழ் ரசிகர்களுக்கு. அதையும் ரூ 30க்கு திருட்டு டிவிடிதான் வாங்குவேன் என அடம்பிடிக்கிறார்கள்.

ஜேகே திரைப்படத்தின் திருட்டு டி.வி.டி.க்கள் புதுவையில் விற்கப்படுவதாக விற்பனை முகவர்கள் உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் புதுவையில் உள்ள தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் உரிய அனுமதி பெறாமல் ஒளிபரப்பப்பட்டதாக சேரனுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அவர் நேற்று புதுவை வந்தார். அவர் உரிய அனுமதியின்றி திரைப்படத்தை ஒளிபரப்பிய தனியார் தொலைகாட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பெரிய கடை போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து தனியார் தொலைகாட்சி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை நான்கு லோக்கல் சேனல்கள் மீது சேரன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 

'நீ ஆந்திர மந்திரியா இருந்தா எனக்கென்ன.. ஆஃப் பண்ணு போனை!'- 'அசால்ட்' ஸ்ருதிஹாஸன்

விமானத்தில் சத்தமாக போனில் பேசிக் கொண்டு வந்த ஆந்திர அமைச்சரிடம் கடுமையாக சண்டை போட்டு போனை ஆஃப் பண்ண வைத்தார் நடிகை ஸ்ருதிஹாஸன்.

புலி படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாஸன் தற்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் முகாமிட்டுள்ளார்.

'நீ ஆந்திர மந்திரியா இருந்தா எனக்கென்ன.. ஆஃப் பண்ணு  போனை!'- 'அசால்ட்' ஸ்ருதிஹாஸன்

தலைக்கோணம் நீர்வீழ்ச்சி பகுதியில் ரூ.1 கோடி செலவில் அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர்.

படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் ஓய்வு எடுத்து திருப்பதி செல்ல திட்டமிட்டார். ஹைதராபாத் சென்று அங்கிருந்து விமானத்தில் திருப்பதி புறப்பட்டார். அதே விமானத்தில் ஆந்திர அமைச்சர் ஒருவரும் வந்துள்ளார்.

ஸ்ருதிஹாசனுக்கு முன் வரிசையில் ‘சீட்' ஒதுக்கப்பட்டு இருந்தது. அவருக்குப் பக்கத்து சீட்டில் அமைச்சர் அமர்ந்திருந்தார்.

விமானத்தில் ஏறிய சிறிது நேரத்தில் போனை அணைத்து வைக்குமாறு கூறியும், அவர் யாருடனோ போனில் மிக சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இது எல்லோருக்கும் தொந்தரவாக இருந்தது.

எனவே போனை அணைத்து வைக்குமாறு ஸ்ருதி அவரிடம் கூறினார். ஆனால் ஸ்ருதியை நக்கலாகப் பார்த்தபடி, தான் ஒரு அமைச்சர் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஸ்ருதி, யாரா இருந்தா எனக்கென்ன.. விமான விதிப்படி நீங்கள் செய்வது தவறு. போனை ஆப் பண்ணுங்கள் என்றாராம் கடுமையாக. தொடர்ந்து இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். விமானப் பணிப்பெண்களிடமும் இதுகுறித்துப் புகார் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து விமான பணிப் பெண்கள் அமைச்சரின் போனை வாங்கி ஸ்விட்ச் ஆப் செய்தனர்.

 

விஜய் சேதுபதிக்கு “ஒரே கல்லில் ரெண்டு மாங்கா”- ஒரே மாசத்தில் ரெண்டு படம் ரிலீஸ்!

சென்னை: விஜய் சேதுபதி நடித்து வரும் "மெல்லிசை", ''நானும் ரவுடிதான்" ஆகிய 2 படங்களும் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கின்றன.

மெல்லிசை படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, ரமேஷ் திலக், சோனியா தீப்தி ஆகியோர் நடித்து வருகிறார்கள். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார். படம் முடிவடையும் நிலையில் உள்ளது.

 விஜய் சேதுபதிக்கு “ஒரே கல்லில் ரெண்டு மாங்கா”- ஒரே மாசத்தில் ரெண்டு படம் ரிலீஸ்!

விஜய் சேதுபதி முதன்முதலாக நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் "நானும் ரவுடிதான்". இந்தப் படமும் வேகமாக வளர்ந்து வருகிறது. விக்னேஷ்வரன் இயக்கி வருகின்றார். இவர் போடா போடி படத்தை இயக்கியவர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து தனது 2 படங்கள் வெளிவருவதால் விஜய் சேதுபதி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அதே சமயம், இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டுமே என்ற பதற்றத்திலும் அவர் இருந்து வருகிறார்.

 

அமீர்கானை குலுங்கிக் குலுங்கி அழ வைத்த “மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா”!

மும்பை: பாலிவுட் நட்சத்திரமான அமீர்கான் கல்கி நடித்துள்ள "மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா" திரைப்படத்தினைப் பார்த்துவிட்டு குலுங்கி, குலுங்கி அழுதுள்ளார்.

பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி சிறந்த நடிகை உட்பட பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம் தான் "மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா".

 அமீர்கானை குலுங்கிக் குலுங்கி அழ வைத்த “மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா”!

இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே மனம் அன்புடன் சேர்ந்த வலியால் மவுனமாக அழுகிறது.

சக்கர நாற்காலியே வாழ்க்கை:

உடல் வளர்ச்சி குன்றியதால் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை துளியும் சினிமாத்தனமின்றி வெகு இயல்பாக சித்தரித்துள்ள படம் இது.

கதை நாயகியாய் வாழ்ந்த கல்கி:

இதில் அந்த இளம் பெண்ணாக நடித்துள்ள கல்கி கொச்லின் சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் பெண்ணின் மன உணர்வுகளை மிக நுட்பமாக பிரதிபலித்துள்ளார்.

தாயின் வேடத்தில் ரேவதி:

அவரது தாயாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரேவதி நடித்துள்ளார். ஷோனாலி போஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அப்படி என்னதான் இருக்கு:
"நீங்கள் கண்டிப்பாக இந்த படத்தைப் பார்க்க வேண்டும்" என்று தனது மனைவி கிரண் ராவ் கூறியதற்கு, "அப்படி அந்த சினிமாவில் என்ன விசேஷம் இருக்கிறது?" என்று கேட்ட அமீர் கான் இந்த படத்துக்கான சிறப்பு திரையிடல் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

பாலிவுட் பிரபலங்களுடன்:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இயக்குனர் ஷோனாலி உட்பட பலர் கலந்து கொண்ட இந்த திரையிடலில் நடிகை கல்கிக்கு பக்கத்து சீட்டிலேயே அமர்ந்து இப்படத்தை அமீர் கான் பார்த்துள்ளார்.

கதறி அழுது தீர்த்த அமீர்கான்:

திரைப்படம் முடிந்து விளக்குகள் போடப்பட்ட போது தான் அமீர்கான், தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தது கல்கிக்கு தெரிய வந்தது.

என்ன வேண்டுமானாலும் செய்வேன்:

அழுதுக்கொண்டே "கல்கி இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் அமீர்கான்.

17 ஆம் தேதி ரிலீஸ்:

மேலும், இது அனைவரும் பார்க்க வேண்டிய படம் இந்த படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வருகிற 17 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாகிறது.

 

உத்தம வில்லனுடன் மோதும் ரஜினி மகள்!

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்துடன் மோதுகிறது ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை திரைப்படம்.

திருப்பதி பிலிம்ஸ் நிறுவனம், கமலின் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன். கமல் திரைக்கதை எழுதி, இரு வேடங்களில் நடித்துள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது.

உத்தம வில்லனுடன் மோதும் ரஜினி மகள்!

இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள, கவுதம் கார்த்திக் - ப்ரியா ஆனந்த் நடித்துள்ள வை ராஜா வை திரைப்படமும் அதே மே 1-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மே 1-ம் தேதி வேறு சில படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக எஸ்பி ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமையும் அந்தத் தேதியில்தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது கமல் படத்துடன் வை ராஜா வை மட்டும்தான் மோதுகிறது!

 

அதெப்படி ஆந்திரா போகலாம்... சந்திரபாபு நாயுடுகிட்ட சிடி வாங்கலாம்?- த்ரிஷாவுக்கு கண்டனம்

இனி ஆந்திரா பக்கம் செல்லும் தமிழ்நாட்டுப் பிரபலங்களுக்கு கொஞ்சம் சிக்கல்தான். இதில் முதலில் சிக்கலுக்குள்ளாகியிருப்பவர் நடிகை த்ரிஷா.

தான் தெலுங்கில் நடித்த ஒரு பட விழாவில் பங்கேற்கச் சென்ற த்ரிஷாவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சி கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

அதெப்படி ஆந்திரா போகலாம்... சந்திரபாபு நாயுடுகிட்ட சிடி வாங்கலாம்?- த்ரிஷாவுக்கு கண்டனம்

பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கில் த்ரிஷா நடித்துள்ள படம் லயன். இந்தப் படம் வருகிற 25-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் 20- தமிழர்கள் படுகொலைக்கு காரணமான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

இந்த விழாவில்தான் த்ரிஷாவும் பங்கேற்றார். பாடல் சி.டி.யை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் த்ரிஷா கலந்து கொண்டதற்கு இந்து மக்கள் கட்சி (இந்தக் கட்சி எங்கதாம்ப்பா இருக்கு?) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்ட அறிக்கை:

20 தமிழர்களை ஆந்திர போலீசார் குரூரமாக கொன்று குவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொலையுண்ட தமிழர்களின் ரத்த கறை காயும் முன்பே சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பட விழாவில் த்ரிஷா கலந்து கொண்டு அவருடன் சிரித்து பேசியது தமிழர்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது.

இந்த விழாவை த்ரிஷா புறக்கணித்து இருக்க வேண்டும். குறிப்பாக தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை நடிகைகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு நாய் காரில் அடிபட்டு காயம்பட்டு கிடந்ததற்கே கவலைப்பட்டு துடித்து போனவர் த்ரிஷா. அப்படிப்பட்டவர் 20 தமிழர்களை கொன்றவர்களுடன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப் பயணம்!

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் இன்று காலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது.

நடிகர் ஜெயம்ரவி நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்.

இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாக உடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1 மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நியூ ஹோப் ப்ரெய்ன் அண்ட் ஸ்பைன் சென்டர் மற்றும் ஆண்டனி பவுண்டேஷன் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இன்று காலை நிகழ்வைத் தொடங்கி வைத்து நடிகர் ஜெயம்ரவி பேசும்போது, "இந்த நடைப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் டாக்டர் குழுவினரைப் பாராட்டுகிறேன். அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். " என்றார்.

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர்  ஜெயம்ரவி நடைப் பயணம்!

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது " நல்ல நோக்கத்தில் நடத்தப்படுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் என்கிற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பற்றிமேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்," என்றார்.

இந்நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நபரான பார்க்கின்சன் பெயரையே இந்நோய்க்கு வைத்துள்ளனர். அதைக் கண்டுபிடித்தவரும் அவரே.

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர்  ஜெயம்ரவி நடைப் பயணம்!

பார்க்கின்சன்ஸ் நாளையொட்டி நரம்பியல் நிபுணர் டாக்டர் ராம் நாராயணன் பேசும்போது, "பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி இந்த நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர்தான் இது வெளியே பிரபலமானது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட ஆரம்பித்தது.

சர்க்கரை நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருப்பது போல பார்க்கின்சன்ஸ் நோய் வரவும் பல காரணங்கள் உள்ளன. இதனால்தான் வருகிறது என்று வரையறுத்துக் கூற முடியாது.

மூளையில் செயல்களைச் செய்யத் தூண்டும் டோபமீன் என்கிற வேதிப் பொருளின் அளவு குறைவதால் இது ஏற்படுகிறது.

அசதி, மந்தம், தடுமாற்றம், பேச்சு குளறுதல், உணர்ச்சியை வெளிப்படுத்தாத முகம், நடுக்கம் என்று இதில் பல நிலைகள் உண்டு.

ஆரம்பத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். முற்றினால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

முதலில் பார்க்கின்சன்ஸ் நோய் பற்றிய விழிப்புணார்வே மக்களிடம் இல்லை. அதனால்தான் இதை நடத்துகிறோம்," என்றார்.

டாக்டர்கள் சைமன் ஹெர்குலிஸ், எம். அருண் மொழிராஜன், சேகர், எஸ்.ஈ.பி.தம்பி, சையது, ஆனந்த் நேசமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான இளைஞர்களும் இளைஞிகளும்இந்த நடைப்பயணத்தில் பங்கு பெற்று நடந்தனர்.

இந்த நடைப்பயணம் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை அடைந்து நிறைவு பெற்றது.

 

ரொம்ப பிசி: திருமணத்தை தள்ளிப் போட்ட சின்ன நம்பர் நடிகை?

சென்னை: சின்ன நம்பர் நடிகையின் திருமணத் தேதி அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சின்ன நம்பர் நடிகைக்கும், தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் தான் காதல் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டது. ஆனால் அவர்கள் காதல் முறிந்த வேகத்தில் நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ரொம்ப பிசி: திருமணத்தை தள்ளிப் போட்ட சின்ன நம்பர் நடிகை?

இதையடுத்து நடிகைக்கும், அந்த தொழில் அதிபருக்கும் சென்னையில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடத்தப்பட்டது. நிச்சயம் முடிந்த கையோடு நடிகை படங்களில் நடிக்க சென்றுவிட்டார். முதலில் அவருக்கு திருமணம் என்ற செய்தி பரவியபோது அவரை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய பலர் தயங்கினர்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகோ அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அதிலும் அவர் விரும்பிய பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வேறு வந்துள்ளது. நடிகையும் சந்தோஷமாக தன்னை தேடி வரும் வாய்ப்புகளை ஒப்புக் கொள்கிறார்.

மார்க்கெட் சூடுபிடித்துள்ளதால் திருமணம் பற்றிய பேச்சுக்கு தற்போதைக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளாராம் நடிகை. அவரது திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது திருமணம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

 

20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் நடந்த புலி ஷூட்டிங்

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில் விஜய்யின் புலி பட ஷூட்டிங் நடந்துள்ளது.

‘புலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரப் பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப் பட்டன.

20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் நடந்த புலி ஷூட்டிங்

அதே நாளில்தான் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர போலீசார் என்கவுன்ட்டர் என்ற பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேரை படுகொலை செய்தனர்.

அன்றைய தினம் மாலை படப் படிப்பை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு திரும்பி வந்து கொண் டிருந்த படப்படிப்பு குழுவினர், தலக்கோணம் பகுதி உட்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனை நடப்பதை அறிந்து விசாரித்தனர்.

அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில்தான் அந்த கோரப் படுகொலை நடந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

 

மே 9.. இந்தத் தேதியிலாவது ரிலீஸ் ஆகிடுமா வாலு?

சிம்பு நடித்த வாலு படத்தின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படுவதும், அந்தத் தேதிகளில் கண்டிப்பாக அந்தப் படம் வராது என்பதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் பார்த்து வரும் சமாச்சாரம்.

இந்த முறையும் ஒரு தேதியை அறிவித்துள்ளனர். அது மே 9.

மே 9.. இந்தத் தேதியிலாவது ரிலீஸ் ஆகிடுமா வாலு?

ஏற்கெனவே ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒவ்வொரு தேதியை வெளியிட்டிருந்தனர். அந்தத் தேதிகளில் படம் வெளியாகவில்லை. கடைசியாக மே 1-ம் தேதி படம் வெளியாகிவிடும் என்றார்கள். அன்றுதான் கமலின் உத்தம வில்லன் ரிலீசாகிறது.

எனவே புதிய தேதியாக மே 9ஐ அறிவித்துள்ளனர். வழக்கம் போல சிம்புவும் இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாலு படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். சிம்பு, ஹன்சிகா நடித்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது.

 

கோஹ்லி தங்கிய ஹோட்டலுக்கு சென்று மசாஜ் செய்து கொண்ட அனுஷ்கா

கொல்கத்தா: கொல்கத்தாவில் கிரிக்கெட் வீரர் கோஹ்லி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று மசாஜ் செய்து கொண்டுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.

ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. துவக்க விழாவில் கலந்து கொள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாக கொல்கத்தா வந்தார்.

கோஹ்லி தங்கிய ஹோட்டலில் மசாஜ் செய்து கொண்ட அனுஷ்கா

துவக்க விழாவில் அனுஷ்கா நடனம் ஆடினார். அவர் மேடையில் ஆடியதை கோஹ்லி ரசித்துப் பார்த்தார். இருவரும் ஒன்றாக கொல்கத்தா வந்தபோதிலும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கினர்.

அனுஷ்கா கோஹ்லி தங்கியிருந்த ஐடிசி சோனார் ஹோட்டலுக்கு சென்று தனது காதலனுடன் நேரத்தை செலவிட்டார். இருவரும் மீடியாவை பார்த்தால் கோபம் அடைந்து பாய்வார்கள். ஆனால் இம்முறை அவர்கள் செய்தியாளர்களைப் பார்த்தும் கோபப்படாமல் இருந்தனர்.

ஐடிசி ஹோட்டலில் இருந்த ஸ்பாவுக்கு சென்ற அனுஷ்கா மசாஜ் செய்து கொண்டார். அனுஷ்கா கிரிக்கெட் வீரரை காதலித்தாலும் அவருக்கு பிடித்த விளையாட்டு டென்னிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமாக்காரன் சாலை 19: 'எங்க சங்கத்து ஆளைப் பத்தி சினிமா எடுக்குறது எவன்டா?'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

இன்று தமிழ் சினிமா சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கியமான ஆலமரத்தடி பஞ்சாயத்து இதுதான்.

பூஜை துவங்கி பூசணிக்காய் உடைக்கிற நாள் வரை சினிமா எடுப்பதில் சந்திக்கிற பிரச்சினைகள் போதாதென்று, படம் ரிலீஸாகிற சமயம் யார் எந்த திசையிலிருந்து என்ன காரணத்துக்காக படத்துக்கு தடை கேட்பார்கள் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நிலைமை கந்தலாகியிருக்கிறது.

‘ஆ ஊ' என்றால் ' எங்க சாதியைப் பத்தி என்னமோ வருதாமே, எனக்கு படம் போட்டுக் காட்டிவிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணிக்கோ' என்கிறார்கள். படம் ரிலீஸாகிற சமயங்களில் பெரும்பாலான தயாரிப்பாளர் கோவணம் முற்றிலும் அவிழ்ந்து அடுத்து அம்மணமாகும் நிதி நிலையில் இருப்பார்கள். இந்த நேரத்தில் சென்சாரைத் தாண்டிய பிறகு வெளி மனிதர்களுக்கு ஷோ காட்டுவதென்பது சாதாரண காரியமில்லை.

இன்று பிரிவியூ தியேட்டர்களின் வாடகை குறைந்த பட்சம் இருபதாயிரம் ரூபாயாக இருக்கிறது. அப்புறம் படம் பார்க்க வருகிற பஞ்சாயத்து புண்ணியவான்களுக்கு டிபன், காபி கருமாந்திரங்களுக்கு எல்லாம் அழுது முடித்தால் அடுத்து பிச்சை எடுக்க வேண்டிய நிலைதான்.

'எங்க சங்கத்து ஆளைப் பத்தி சினிமா எடுக்குறது எவன்டா?'

பாடலில் 'அழுக்கு மூட்டை மீனாச்சி மூஞ்சைக் கழுவி நாளாச்சி' என்று வந்ததும் சலவைத் தொழிலாளர்கள் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் வெள்ளாவியில் வைத்து வெளுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு 'சலவைக் கட்டணம்' கட்டிவிட்டால் சைலண்டாகிவிடுகிறார்கள்.

‘கொம்பன்' படத்துக்கு இந்தமாதிரியான பிரச்சினை வந்தபோது ஆச்சரியமாக சினிமாக்காரர்கள் ஒன்று திரண்டு ‘எதிர்ப்புக் குரல் எழுப்பி' அப்படத்தைக் காப்பாற்றினார்கள். அதற்கு முக்கிய காரணம் அது சூர்யா, கார்த்தி என்ற இருபெரும் நட்சத்திரங்களின் குடும்பப் படமாக இருந்ததுதான். ‘நாம கூவுற கூவுக்கு இன்னைக்கு இல்லாட்டியும் அடுத்த வருசமாவது கால்ஷீட் தந்துரமாட்டாங்களா?' என்கிற அவர்களது மைண்ட் வாய்ஸ் நல்லா சவுண்டாவே நமக்கு கேட்கிறது. இதுவே ஒரு அப்பாவி தயாரிப்பாளரின் படமாக இருந்திருந்தால் ‘எதிர்ப்புக் குரலர்கள்' சத்தமின்றி காணாமல் போயிருப்பார்கள்.

'எங்க சங்கத்து ஆளைப் பத்தி சினிமா எடுக்குறது எவன்டா?'

இன்னொரு பக்கம் இதே சூழலை சந்தர்ப்பவாதமாக எடுத்துக்கொண்டு செல்ஃப் பப்ளிசிட்டி பண்ணும் சினிமாக்காரர்கள்.

விரைவில் வெளிவர இருக்கும் ஒரு படத்தின் இயக்குநர் அடிக்கும் கேவலமான பப்ளிசிட்டி ஸ்டண்ட் ஒன்றைப் பாருங்கள்.

அவர் படத்தில் அஜீத் பெரிய ஆளா விஜய் பெரிய ஆளா என்று இரு கதாநாயகிகளுக்குள் விவாதம் வருகிறதாம். அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது போல் காட்சி அமைந்திருந்ததால் அதைப் பார்த்த விநியோகஸ்தர் இயக்குநர் கன்னத்தில் அறைந்து விட்டாராம். (இத்தனைக்கும் இவர்தான் படத்தை பத்துப் பைசா தராமல் ஓசிக்கு வாங்கி, தமிழகம் முழுக்க ரிலீஸ் பண்ணியே தருகிறார்!)

அறைந்து முடித்ததும் இருவரும் ஹோட்டலுக்கு கிளம்பிப்போய் சரக்கடித்து பிரியாணி சாப்பிட்டு முடித்து கட்டித் தழுவிக்கொண்டு பிரிந்து சென்றார்களாம்
இப்படி ஒரு செய்தி படத்தின் பப்ளிசிட்டிக்கு பயன்படும் என்று அந்த இயக்குநர் முட்டாள்தனமாக நம்புகிறார். அந்த இயக்குநரே ஒவ்வொரு பத்திரிகையாளராக போன் செய்து ‘சார் என்னை அந்த டிஸ்ட்ரிபியூட்டர் அடிச்சிட்டாரு. கன்னம் இன்னும் வலிக்குது சார். கண்டிப்பா இந்த செய்திய உங்க பத்திரிகையில போடுங்க சார்' என்று கேட்கிறாராம்!

அவராவது ஒரு கத்துக்குட்டி டைரக்டர். கமல் எவ்வளவு பெரிய மேதை? அவரே பல சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு தனிப்பட்ட முறையில் உண்டு.

‘உத்தம வில்லன்' ரிலீஸ் தேதி அறிவித்த அன்று இணையங்களில் ‘என்னடா கமல் ‘உத்தம வில்லன்' ரிலீஸ் தேதியை அறிவிச்சிட்டார். ஆனா இன்னும் ஒருத்தன் கூட படத்துக்கு தடை கேக்கலை?' என்று ஓட்டுகிறார்கள்.

அடுத்த நாள் காலையே வைணவ வகுப்பைச் சேர்ந்த ஏதோ ரங்காச்சாரியோ, விட்டலாச்சாரியோ ‘எங்க ஜாதி சங்கத்தை கமல் தவறாக சித்தரிச்சிருப்பது போல கனவு கண்டேன். அதனால படத்துக்கு தடை விதிக்கணும்' என்று ஏதோ நாயர் கடையில வடை கேட்பது போல் அவ்வளவு ஈஸியாக தடை கேட்கிறார். உடனே அதை இணையர்கள் ‘இந்தா கமல் களத்துல இறங்கிட்டாருடா' என்கிறார்கள். அட சீனிவாசா...

'எங்க சங்கத்து ஆளைப் பத்தி சினிமா எடுக்குறது எவன்டா?'

காசு செலவழித்துச் செய்கிற பப்ளிசிட்டியை இப்படிப்பட்ட பப்ளிசிட்டிகள் தியேட்டருக்கு அதிக கூட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற மூட நம்பிக்கையே இந்த அற்ப செயல்களுக்கு காரணமாக இருக்கவேண்டும்.
இப்படிப் படங்களின் மேல் கேஸ் போடச்சொல்லி ஆள் செட் பண்ணிக்கொடுத்து பின்னர் அதை வாபஸ் வாங்கச் செய்வதற்கென்றே சில வக்கீல்கள் இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் நவில்கின்றன.

வரவர அரசியல்வாதிகள் பொதுக் கூட்டத்துக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்து ஆள் சேர்ப்பது போல் படங்களுக்கு ‘விளம்பரம்' தர ஆள் பிடிக்கிறார்களோ என்று சமீப காலமாக சந்தேகம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

ஒரிஜினலா காப்பியா என்று புரியாமல், பல படங்களைப் பார்த்து தலையைப் பிய்த்துக் கொள்வதுபோல், இன்னும் கொஞ்ச காலத்தில் எது ஒரிஜினல் தடை கேட்பு, எது செட்-அப் தடை கேட்பு என்று தெரியாமல் குழம்பி பைத்தியக்காரர்களாக அலையப் போகிறோமோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.

‘டாக்டர் எங்க இருக்கீங்க?'

(தொடர்வேன்..)

 

ரஜினியின் அடுத்த படம் லைக்காவுக்காமே!

ரஜினியின் அடுத்த படம் எந்திரன் 2.. ஷங்கர் இயக்குகிறார்.. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது..

-இன்று பிற்பகலிலிருந்து இணையதளங்கள், சமூக வலைத் தளங்களில் கலக்கும் செய்தி இதுதான்.

ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘எந்திரன்'. சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படம் வசூலில் பெரிய சாதனையை படைத்தது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.

ரஜினியின் அடுத்த படம் லைக்காவுக்காமே!

இந்த கூட்டணி மீண்டும் இணையப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், எந்திரன் 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கப்போவது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் ரஜினி இரட்டை வேடத்திலேயே நடிக்கவிருக்கிறாராம். ஷஇயக்கவிருக்கிறாராம். இப்படத்தை ‘கத்தி' படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, லைக்கா நிறுவனம் தயாரித்தது என்ற ஒரே காரணத்தால் கத்தி படம் பெரிய அளவில் பிரச்சினைகளைச் சந்தித்தது. பின்னர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் தாராளமாய் தமிழில் படம் தயாரிக்கலாம், எதிர்ப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பெற்றது.

இப்போது ரஜினி படத்தையும் லைக்கா தயாரிக்கிறது என்ற தகவலே சினிமா மற்றும் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரசாந்துக்கு ஜோடியான கைப்படாத ஆஸ்திரேலிய ரோஜா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்து வரும் படம் ‘சாஹசம்' படத்தில் அவருக்கு ஜோடியாக இங்கிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் செட்டிலான அழகி அமண்டாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிரசாந்துக்கு ஜோடியான கைப்படாத ஆஸ்திரேலிய ரோஜா!

சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடிவந்து, அமண்டாவை கண்டுபிடித்து கதாநாயகியாக்கி உள்ளார் நடிகர் தியாகராஜன்.

இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா ஒரு ஆஸ்திரேலியாவாசி. பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்ற அமண்டா லண்டன் நடிப்பு பள்ளியில் பட்டம் பெற்றவர். நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கிவிடுகிறாராம் அமண்டா.

பிரசாந்துக்கு ஜோடியான கைப்படாத ஆஸ்திரேலிய ரோஜா!

படப்பிடிப்பில் அமண்டாவின் நடிப்பை பார்த்து நாசர் அசந்து போய், 'தமிழ் பட உலகிற்கு மற்றுமொரு கைப்படாத ரோஜா' என பாராட்டியுள்ளார். அமண்டாவின் பழகும் விதம், காலம் தவறாமை, தொழில் சிரத்தை, கிறங்க வைக்கும் அழகு, மற்றும் கொஞ்சும் தமிழ் இவை எல்லாம் மொத்த படக்குழுவினரையும் வியக்க வைத்துள்ளது.

அமண்டா பற்றி பிரசாந்த் கூறுகையில், ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி என்றும், சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு வெகுவாக பேசப்படும் கதாநாயகி ஆவார் என்றும் பாராட்டியுள்ளார்.

பிரசாந்துடன் இணைந்து சாஹசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் மற்றும் எனது அதிர்ஷ்டமே என அமண்டா கூறினார்.

பிரசாந்துக்கு ஜோடியான கைப்படாத ஆஸ்திரேலிய ரோஜா!

ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி, சாஹசம் படத்தில் ஒரு பாட்டு நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன் இசையமைத்து வரும் இப்படத்தை அருண்ராஜ் வர்மா இயக்கி வருகிறார். திரைக்கதை, வசனம் எழுதி அதிக பொருட்செலவில் சாஹசம் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விரைவிலும் படத்தை மே மாதம் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.