சமந்தா, கொஞ்சம் இக்கட ராம்மா..! - அழைக்கும் தெலுங்கு ஹீரோக்கள்

ஹைதராபாத்: சென்னையில் பிறந்து பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தாவை தமிழ் உலகம் ஆதரிக்கத் தவறியதால் தெலுங்குக்குப் போனார். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் நான் ஈ படம் தெலுங்கில் அவருக்கு நல்ல ஒரு மார்க்கெட்டைக் கொடுக்க அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

மீண்டும் தமிழுக்கு வந்த சமந்தாவுக்கு, அஞ்சான் சறுக்கினாலும் கத்தி கை கொடுத்தது.

Telugu Heroes liking Duet With Actress Samantha

அஞ்சானுக்கு முன்பு வரை தெலுங்கில் பிஸியாக இருந்த சமந்தா கையில் தற்போது அரை டஜன் தமிழ் படங்கள் இருப்பதால், தெலுங்கு தேசத்துக்கே போக முடியவில்லையாம்.

இதனைத் தாங்க முடியாத தெலுங்கு ஹீரோக்கள் 'உங்களுக்காக நாங்க வெய்ட் பண்றோம்.. எங்க கூடவும் நடிங்க' என்று கேட்டுக் கொண்டதால், தற்போது போனால் போகிறது என்று தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்!

சன் ஆப் சத்தியமூர்த்தி படத்தைத் தொடர்ந்து சற்று இடைவெளி விட்ட சமந்தா மீண்டும் தெலுங்குப் படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

தமிழில் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள, தனுஷுடன் வேலை இல்லாப் பட்டதாரி 2 மற்றும் வட சென்னை, விஜயுடன் ஒரு படம், சூர்யாவுடன் 24 போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

பேயாக நடிக்க மறுத்து, மகனுக்காக ஒப்புக் கொண்ட சத்யராஜ்!

பெரியாரின் கொள்கைப்படி சாமி, பேய், பூதம் சமாச்சாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்த சத்யராஜ், தன் மகன் சிபிராஜுக்காக ஒரு படத்தில் பேயாகவே நடிக்கிறார்.

நாய்கள் ஜாக்கிரதை' வெற்றிக்குப் பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் ‘ஜாக்சன் துரை'. இப்படத்தை ‘பர்மா' படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார்.

Sathyaraj turns ghost in Jackson Durai

சிபிராஜுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஷாசெரி தமிழுக்கு அறிமுகமாகிறார்.

ஜாக்சன் துரை படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 25 சதவிகித படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தந்தை சத்யராஜ் பேயாக நடிக்கிறார்.

பேய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியபோது, முதலில் அதில் நடிக்க மறுத்து விட்டாராம். பின்னர், கதையின் முக்கியத்துவம் புரிந்து, பேயாக நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.

 

இவங்க டான்ஸ் பார்த்து நீங்க சொல்வீங்க சூப்பர் மச்சி!

ஒரு பெண் இருக்கும் இடத்தில் மனதிற்கு பிடித்த இசை கேட்டால் அவருடைய கால் அதற்கேற்ப தாளமிடும். ஆனால் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்தால் கேட்கவா வேண்டும். அந்த இடம் அதகளம்தான். அதுவும் ஹிட் பாடல்களுக்கு அவர்களின் நடன அசைவுகள் இருக்கிறதே அட போட வைக்கிறது.

தெலுங்கு பட உலகில் அறுபதுகள் முதல் சமீபத்திய புதிய திரைப்படங்கள் வரை ஹிட் அடித்த பாடல்களை தொகுத்து அதற்கேற்ப நடனமாடியுள்ளனர் மூன்று இளம்பெண்கள்.

A Journey Through Tollywood

பிரம்மாண்ட மேடையில்லை... லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இல்லை. ஒரு சின்ன கார் அதில் மூன்று சீட்டில் மூன்று பெண்கள் அமர்ந்து கொண்டு நடன அசைவுகளை வெளிப்படுத்துகின்றனர்.

டாம் டாம் டாம்.... தொடங்கி பாட்டனி பாடம்... மாட்டனி ஆட்டம் என ஆடும் இவர்கள் ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா வரை பட்டையை கிளப்புகிறார்கள். தொடர்கிறது அவர்களின் நடனம்.

ஒவ்வொரு பாடலுக்கு ஏற்ப அந்த பெண்களின் உடையலங்காரம் மட்டும் மாறுகிறது. பாடல்களும் அதற்கேற்ப அந்த பெண்கள் ஆடும் நடனமும் சூசூசூப்பர் மச்சி!...

தங்களின் நடனத்தை பதிவு செய்து அதை இணையத்தில் உலாவவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நீங்களும் பாருங்க சொல்வீங்க சூப்பர்!!

 

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட பாகுபலி பாடல்கள்!

உலகமே பெரும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் பாடல்களை யாரோ திருட்டுத்தனமாக இணையத்தில் கசியவிட்டுள்ளனர்.

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பாகுபலி படத்தை எஸ்எஸ் ராஜமௌலி பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

Bahubali audio leaked online

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு, யூடியூப்பில் அதிக பார்வையாளர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ஜூன் 13ம் தேதி திருப்பதியில் பிரம்மாண்டமாக விழா நடத்தி வெளியிடவுள்ளனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே, இப்படத்தின் பாடல்களை இணையதளத்தில் திருட்டுதனமாக ரிலீஸ் செய்துவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களிலும் இப்படத்தின் பாடல்கள் வேகமாக பரவி வருகின்றன.

ஏற்கெனவே படத்தின் 10 நிமிடத்துக்கு மேற்பட்ட முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்தது நினைவிருக்கலாம்.

 

நாளை சந்தானத்தின் இனிமே இப்படித்தான் ரிலீஸ்... ட்விட்டரில் வாழ்த்திய விவேக்!

சந்தானம் நாயகனாக நடித்த புதிய படம் இனிமே இப்படித்தான் நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.

காலத்துக்கேற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளும் காமெடி நடிகர்களில் ஒருவர் விவேக். அதேபோல சக நடிகர்களுடன் இணக்கமாக, இளம் நடிகர்களை அரவணைத்துச் செல்வதில் விவேக் முதன்மையானவர்.

Vivek wishes Santhanam's Inimey Ippadithaan

சக காமெடி நடிகரான சந்தானம் நாயகனாக நடித்த இனிமே இப்படித்தான் நாளை வெளியாகிறது. சந்தானம் இந்தப் படத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்.

இந்த நிலையில் படம் வெற்றியடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் விவேக்.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் வெளியிட்டுள்ள செய்தியில், "நாளை வெளியாகும் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்திற்கு என் அன்பு வாழ்த்துக்கள். Good luck bro!!" என்று தெரிவித்துள்ளார்.

விவேக் இப்படி ட்வீட் போட்டதுமே, நூற்றுக்கும் மேற்பட்டோர் அதை ரீ ட்வீட் செய்துள்ளனர். விவேக்கைப் பாராட்டியும் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

 

விவேக்கின் பாலக்காட்டு மாதவன் ஜூன் 26-ம் தேதி ரிலீஸ்!

விவேக் கதாநாயகனாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படம் வரும் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் ‘நான்தான் பாலா' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை சந்திரமோகன் என்பவர் இயக்கியுள்ளார்.

Vivek's Palakkattu Madhavan from June 26th

ஸ்ரீகாந்த் தேவா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

குடும்ப பின்னணியில் நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகியிருக்கிறது. சமீபத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற ஜூன் 26-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்' படம் நாளை வெளியாகவுள்ளது. அதற்கு அடுத்து வாரமே வடிவேலு நடித்த ‘எலி' படம் வெளியாகவுள்ளது.

 

டியர் மினிஸ்டர்.. ஜல்லிக்கட்டு தடையை நீக்காதீங்க... லிங்கா நாயகி "சவுண்டு"!

மும்பை: லிங்கா பட நாயகியும், பாலிவுட் ஹாட் ஸ்டார்களில் ஒருவருமான சோனாக்ஷி சின்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் ஒரு போராட்டக் களம் தயாராகி விட்டது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என்று அவர் குரல் கொடுத்துள்ளார். மேலும் காளை மாடுகளை பத்திரமாக பாதுகாக்குமாறும் அவர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தென் தமிழகம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மஞ்சு விரட்டு, மாடு பிடி என்று பல பெயர்களில் இது நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாமல் போனது.

Sonakshi Sinha stands against Jallikattu

இந்தத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தடை நீங்கும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகரும் சென்னை வந்திருந்தபோது கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக களம் குதித்துள்ளார் சோனாக்ஷி. டிவி்ட்டரில் இதுதொடர்பாக அவர் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் தடையை நீக்கக் கூடாது என்று கோரியுள்ளார்.

டியர் மினிஸ்டர், பிரகாஷ் ஜவடேகர், தயவு செய்து காளைகளைக் காப்பாற்றுங்கள், பத்திரப்படுத்துங்கள், ஜல்லிக்கட்டுத் தடையை நீடியுங்கள் என்று போட்டுள்ளார் சோனாக்ஷி.

மேலும் தனது செய்தியோடு, ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு வீடியோவையும் அவர் இணைத்துப் போட்டுள்ளார். அதில் விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவது போன்ற காட்சி உள்ளன.

இன்னொரு டிவிட்டையும் அவர் போட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிக்க தனது ரசிகர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், விலங்குகளை நேசிக்கும் ஒவ்வொருவரும், ஜல்லிக்கட்டு பழக்கத்தை அடியோடு தடை செய்ய அமைச்சருக்கு டிவிட் செய்யுங்கள். ஜல்லிக்கட்டை தடை செய் என்று போட்டுள்ளார் அவர்.

இன்னும் இதுபோல ஜல்லிக்கட்டை வைத்து மேலும் சில டிவிட்களையும் சோனாக்ஷி போட்டுள்ளார்.

அட, ஏம்மா நீங்க வேற.. பாஜகவே தேர்தல் ஆதாயத்திற்காக ஜல்லிக்கட்டை திரும்பக் கொண்டு வர முயற்சித்து வருகிறது. தேர்தல் நெருங்கும்போது தடையை தூக்க திட்டமிட்டு ஆறப்போட்டு வருகிறார்கள். இதில் உங்கள் சொல்லா அம்பலத்தில் ஏறப் போகிறது...!

 

ருத்ரமா தேவி ட்ரைலர்... இளையராஜா வெளியிடுகிறார்

தெலுங்கு - தமிழில் குணசேகர் இயக்கத்தில் தயாராகியுள்ள ருத்ரமாதேவி படத்தின் ட்ரைலரை நாளை வெளியிடுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமாதேவி படம் இந்தியாவின் முதல் ஸ்டீரியோபோனிக் 3டி சரித்திரப் படம் என்ற பெருமையுடன் வெளியாகவிருக்கிறது.

Ilaiyaraaja to release Rudhramadevi trailer

வரும் ஜூன் 26-ம் தேதி படத்தை உலகெங்கும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் பாடல்கள் ஆந்திராவின் வெவ்வேறு நகரங்களில் ஏற்கெனவே வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்போது படத்தின் ட்ரைலரை வெளியிடுகிறார்கள்.

படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜாவே இந்த ட்ரைலரை நாளை வெளியிடுகிறார்.

ருத்ரமாதேவிக்கு லண்டன் சிம்பொனி இசைக் குழுவை வைத்து பின்னணி இசைக் கோர்ப்பு செய்துள்ளார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமீருடன் கைகோர்க்கிறார் சிம்பு?

விளையாட்டாக நான்கு ஆண்டுகள் படங்களே இல்லாமல் ஓடிப் போனதால் ஏற்பட்ட இழப்பை நன்கு உணர்ந்திருக்கிறார் சிம்பு. விளைவு.. அடுத்தடுத்து புதிய படங்கள்.. புதிய கூட்டணிகள் என பரபரப்பாகக் கிளம்பிவிட்டார்.

நேரந்தவறாமை என்பதற்கு அர்த்தமே தெரியாமலிருந்த சிம்பு, இப்போது ஓரளவு அதைக் கடைப்பிடிக்க முயல்வதாகவும் சொல்கிறார்கள்.

Simbu to join hands with Ameer?

இப்போது கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் படங்களில் நடித்து வரும் அவர், பாண்டிராஜின் இது நம்ம ஆளு படத்தையும் கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

அடுத்து கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம் சிம்பு.

இதற்கிடையில் பருத்தி வீரன் மாதிரி ஒரு கிராமத்துக் கதையை இயக்குநர் அமீர் சொல்ல, அந்தக் கதை சிம்புவுக்கும் பிடித்துவிட்டதாம். நிச்சயம் நாம் இணைந்து இந்தப் படத்தைச் செய்யலாம் என்று கூறியிருக்கிறாராம். பண்ணையாரும் பத்மினியும் படத்தைத் தயாரித்த மேஜிக் பாக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கிறதாம்.

 

எதிர் நீச்சல் இயக்குநரின் அடுத்த நாயகன் தனுஷ்

சென்னை: துரை செந்தில்குமாரின் இரண்டு படங்களுக்கும் தயாரிப்பாளராக இருந்த நடிகர் தனுஷை, தான் இயக்கும் அடுத்தப் படத்தில் இயக்க விருக்கிறார் இயக்குநர் துரை.செந்தில்குமார். எதிர்நீச்சல் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் துரை.செந்தில்குமார்.

எதிர்நீச்சல் படம் அதுவரை வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்த இயக்குனர் துரை.செந்தில்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் மிகப் பிரகாசமான ஒரு எதிர்காலத்தை அளித்தது.

Edhir Neechal Durai Senthilkumar To Direct Danush

எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான நடிகர் தனுஷ் தற்போது தமிழின் சிறந்த தயாரிப்பாளராக காக்கா முட்டை படம் மூலம் உயர்ந்திருக்கிறார்.

எதிர்நீச்சல்

துரை.செந்தில்குமார் இயக்கிய முதல் படம் எதிர்நீச்சல். நடிகராக சிவகார்த்திகேயன் நடித்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சார்பில் வெளிவந்தது. தமிழில் முன்னணி நடிகராக நடிகர் சிவகார்த்திகேயன் உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்த இந்தப் படம் 5 கோடி செலவில் எடுக்கப்பட்டு சுமார் 32 கோடி பணத்தை வசூல் செய்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் மற்றும் முக்கியமான பாத்திரத்தில் நடிகை நந்திதா நடித்து வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அனிருத் இசையில் வெளிவந்த பாடல்களும் ஹிட்டடித்தது குறிப்பிடத் தக்கது.

தயாரிப்பாளர்

அறிமுக இயக்குநர் மற்றும் பெரிய ஹீரோ அந்தஸ்து இல்லாத சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்தார் நடிகர் தனுஷ். முதன்முதலில் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தனுஷை படம் ஏமாற்றவில்லை. அந்த நம்பிக்கை தான் காக்கா முட்டை படத்தையும் தயாரிக்க வைத்தது,படத்திற்கு தேசிய விருது கிடைத்ததுடன் வசூலிலும் தற்போது சாதனை புரிந்து வருகிறது காக்கா முட்டை.

காக்கிச்சட்டை

முதல் படத்தில் இணைந்த அதே கூட்டணி மீண்டும் காக்கிச்சட்டை படத்தின் மூலம் இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்தது. ஆனால் ஒரே ஒரு மாற்றமாக இந்த முறை தமிழின் முன்னணி நடிகராக மாறியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சரிந்திருந்த சிவ கார்த்திகேயன்

சிவாவின் புகழ் எந்த அளவுக்கு இருந்தது என்றால் தொடர்ந்து சில தோல்வி படங்களைக் கொடுத்து தனுஷின் மார்க்கெட் சற்று சரிந்திருந்தது. அப்போது தனது வேலை இல்லாப் பட்டதாரி படத்தை வெளியிட முடியாமல் தனுஷ் தடுமாறிக் கொண்டிருந்த நேரம் தமிழின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை வைத்து நீங்கள் தயாரிக்கும் காக்கிச்சட்டை படத்தின் உரிமையை எனக்குக் கொடுங்கள் உங்கள் படத்தை வெளியிட நான் உதவி செய்கிறேன் என்று சொல்லுமளவிற்கு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தது.

காக்கிச்சட்டையில் நடந்த பனிப்போர்

காக்கிச்சட்டை படத்தின் போதே நடிகர் தனுஷிற்கும், சிவகார்த்திகேயனிற்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. ஆனால் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் காக்கிச்சட்டை படத்தை தனது நிறுவனம் சார்பாக வெளியிட்டார் தனுஷ். 140 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட காக்கிச்சட்டை சுமார் 500 மில்லியனை சம்பாதித்துக் கொடுத்தது. ஒரே ஒரு ஆச்சரியமாக தனுஷின் நடிப்பில் அவரே வெளியிட்ட வேலை இல்லாப் பட்டதாரி படம் சுமார் 50 கோடி வசூலைக் குவித்தது. தனுஷின் மார்கெட் மீண்டும் உயர்ந்தது.

மூன்றாவது முறையாக

துரை.செந்தில்குமார் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்கும் புதிய படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். ஆனால் இந்த முறை துரையின் இயக்கத்தில் நடிக்கப் போவது சிவகார்த்திகேயன் அல்ல தனுஷ். சிவகார்த்திகேயனும், தனுஷும் பிரிந்ததைத் தொடர்ந்து இந்த முறை துரையின் இயக்கத்தில் நானே நடிக்கிறேன், கதையை தயார் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். வேலை இல்லாப் பட்டதாரி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் பிரபு சாலமன் படங்களைத் தொடர்ந்து துரையின் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ் .விரைவில் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகலாம்.

 

டாக்டரின் கன்னத்தில் பளார் விட்ட பாடகர் கைது

மும்பை: பாலிவுட்டின் பிரபல பாப் பாடகரான மிகா சிங்கை (38) கைது செய்திருக்கிறது டெல்லி போலீஸ். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மிகா சிங்கின் பாடல் நிகழ்ச்சியில் டாக்டர் ஸ்ரீகாந்த் என்பவரும் கலந்து கொண்டார். திடீரென்று மிகா சிங் டாக்டர் ஸ்ரீகாந்தை பளாரென்று கன்னத்தில் மேடையிலே வைத்து அறைந்திருக்கிறார். இதைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

இது தொடர்பாக இருவருமே டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார் தொடர்பாக இன்று பாடகர் மிகாசிங்கைக் கைது செய்தது டெல்லி போலீஸ். ஆனால் கைது செய்த சிலமணி நேரங்களுக்குள்ளேயே ரூபாய் 2௦௦௦௦ பணத்தைக் காட்டி பெயிலில் வெளிவந்து விட்டார் பாடகர் மிகா சிங். இவர் அடித்ததில் டாக்டர் ஸ்ரீகாந்தின் செவிப்பறையே கிழிந்து விட்டதாம், அந்த அளவிற்கு அடித்திருக்கிறார் என்ன கோவமோ யாருக்குத் தெரியும்.

டாக்டர் ஸ்ரீகாந்த் குடித்து விட்டு பிரச்சினை செய்ததால் தான் அவரை அடித்தேன் என்று கூறும் மிகா சிங் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல நடிகை ராக்கி சாவந்திற்கு முத்தம் கொடுக்க முயன்றது, குடித்து விட்டு ரசிகரைத் திட்டியது, பணத்தைக் கட்டுக்கட்டாக அள்ளிச் சென்றது போன்ற வழக்குகளில் ஏற்கனவே சிக்கிய மிகா சிங் தற்போது டாக்டர் ஸ்ரீகாந்தை ஆராய்ந்ததின் மூலம் இணையதளத்தில் மிகுந்த புகழை அடைந்துள்ளார்.

 

திருத்த முடியாத குடிகாரர்களுக்கு இந்த ஸ்டில் சமர்ப்பணம்!

நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்..  இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்... - இது நீதி படத்தில் கவியரசர் எழுதிய பாட்டு வரிகள்.

அதன் முதல் வரியை எடுத்து ஒரு படத்துக்கு தலைப்பாக்கியிருக்கிறார்கள். 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' - இதுதான் படத் தலைப்பு.

Naalai Muthal Kudikka Matten against drunkards

குடிக்கு எதிரான படம் என்பது தலைப்பிலேயே தெரிந்துவிட்டதல்லவா... ஆனால் சுவாரஸ்யமே இந்தப் படத்தின் ஸ்டில்கள்தான். சாம்பிளுக்கு சில இங்கே தந்திருக்கிறோம் (குடியே கதி என்று கிடப்பவர்களைக் கூட தெறித்து ஓடும்படியான ஆவேச புகைப்படங்கள் இவை).

இயக்குனர் ஆர். பாண்டியராஜின் டபுள்ஸ் மற்றும் பல இயக்குகனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா இந்தப் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

Naalai Muthal Kudikka Matten

ராஜ், காந்தராஜ், சம்ர்த்தின், பனிமதி போன்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். முதல் கட்ட படபிடிப்பு இதுவரை படபிடிப்பே நடந்திராத கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலம் அருகே உள்ள வாசுதேவனூர், ராயப்பனூர், எலித்தூர் போன்ற எதார்த்தம் மாறாத கிராமப்புறங்களில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு "புன்னகை" வெங்கடேஷ், இசை ஆர்.சிவசுப்புரமணியன்.

Naalai Muthal Kudikka Matten

பைத்தந்துறை, தென் செட்டியந்தல், நமச்சிவாயபுரம் ஆகிய கிராமப்பகுதிகளில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் திரைக்கு வருகிறது நாளை முதல் குடிக்க மாட்டேன்!

 

நடிகர் விதார்த் திருமணம்.. திருப்பதியில் இன்று நடந்தது!

திருப்பதி: நடிகர் விதார்த் - காயத்ரி திருமணம் இன்று காலை திருப்பதி திருமலையில் நடந்தது.

தமிழில் கவுதம் மேனன் இயக்கிய ‘மின்னலே', ‘லாடம்' உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த விதார்த், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Actor Vidharth marriage held at Thiruppathi

அதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்த விதார்த், கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வீரம்' படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்தார்.

இவருக்கும், பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பவரின் மகள் காயத்ரிக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் இன்று திருப்பதியில் நடந்தது.

இவர்களது திருமணத்திற்கு நடிகர் ராதாரவி நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், இந்த திருமணத்தில் விதார்த்-காயத்ரி இருவருடைய குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 17-ந் தேதி சென்னை வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.

 

பாகுபலியுடன் மோதும் மகேஷ் பாபு

ஹைதராபாத்: டோலிவுட்டின் இளவரசர் மகேஷ் பாபுவின் புதிய படமான ஸ்ரீமந்துடு படமானது ராஜமௌலியின் பாகுபலியுடன் போட்டியிட இருக்கிறது. நடிகர் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படம் கோடை விருந்தாக திரைக்கு வர இருந்தது. ஆனால் அதே சமயத்தில் உலக அளவில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் பாகுபலி படமும் வெளியாகலாம் என்று எழுந்த தகவல்களால் ஸ்ரீமந்துடு படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது.

பாகுபலியிடன் மோதினால் நமது படம் வசூலில் பின்தங்கி விடும் என்று தள்ளி வைக்கப்பட்ட மகேஷ் பாபுவின் படத்தை தற்போது பாகுபலி படத்துடன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் . இது தெலுங்குத் திரையுலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை உறுதி செய்வதுபோல பாகுபலி படத்தின் டிரைலர் வெளியான அன்றே ஸ்ரீமந்துடு படத்தின் டிரைலரும் வெளியானது.

Baahubali Vs Srimanthudu

இது தற்செயலாக நடந்தது என்று கூறிய படக்குழு தற்போது நேரடியாகவே பாகுபலியுடன் மோதப் போகின்றனர். என்னதான் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், பலரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சரித்திரப் படத்துடன் நேரடியாக மோத மகேஷ் பாபு துணிந்தது தான் பலருக்கும் ஆச்சரியம்.

தற்போதைய நிலவரப்படி தெலுங்குத் திரையுலகினர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் ஏதாவது ஒரு படத்தின் வசூல் குறைய வாய்ப்பு உள்ளது, எனவே யாராவது ஒருவர் உங்கள் படத்தை சற்றுத் தள்ளி வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் மகேஷ் பாபு இதற்கு செவி சாய்க்கவில்லை என்பதோடு தனது முடிவில் இருந்தும் பின்வாங்க விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வாழும் காலம் முழுவதும் நடிகையாகவே தொடர ஆசை! - த்ரிஷா

சமூக வலைதளங்களின் மூலம் ஒருவர் மற்றவரைத் தொடர்பு கொள்வது என்பது மிகவும் எளிதாகி விட்டது. சில பேரின் தவறான நடத்தையால் சமூக வலைதளங்கள் மக்களிடம் அச்சத்தைத் தோற்றுவித்தாலும் தகவல் தொடர்புக்கு அது ஒரு மிகச் சிறந்த நவீன சாதனம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

முன்பெல்லாம் நடிக, நடிகைகளைப் பார்க்க வேண்டும் அவர்களுடன் பேச வேண்டுமென்றால் நேரடியாகப் பார்க்க முடியாது, கடிதம் எழுதினாலும் எல்லா ரசிகர்களுக்கும் ஒரே மாதிரி பதில்தான் கிடைக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது நடிகர் மற்றும் நடிகைகள் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தங்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகவே பதில் அளிக்கின்றனர்.

Trisha krishnan Wants Continue Acting After Marriage

எந்தக் கேள்விக்கும் ஒளிவு மறைவின்றி பதில் அளிக்கின்றனர், அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பதில் அளித்தார். நடிகைகளில் த்ரிஷா மற்றும் டாப்ஸி போன்றோர் பதில் அளித்தனர். சிம்பு மற்றும் டாப்ஸியை விட நடிகை த்ரிஷாவின் பதில்கள் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. #asktrishkrish என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி த்ரிஷா அவரது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் ஒரு ரசிகர் இன்னும் 10 வருடங்கள் கழித்து நடிகையாக இருப்பீர்களா அல்லது குடும்பப் பெண்ணாக இருப்பீர்களா என்று கேட்டிருந்தார், அதற்கு த்ரிஷா அளித்த பதில் " எனது வாழ்நாள் முழுவதும் நான் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். அதிகமான ரசிகர்கள் விஜய், அஜித் பற்றி கேட்டிருந்தனர். ராணாவுடனான நட்பு தொடரும் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்து ராணாவுடனான நட்புத் தொடர்வதையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் நடிகை த்ரிஷா.

 

ஐஐஎப்ஏ விருது விழா. பிரியங்காவுக்கும், அனுஷ்காவுக்கும் சண்டை.. பாதியில் வெளியேறிய 'பி.சி'!

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த இந்தியா சர்வேச திரைப்பட விருது விழாவின்போது அனுஷ்கா சர்மாவுக்கும், பிரியங்கா சோப்ராவுக்கும் இடையே கசமுசா ஏற்பட்டு பிரியங்கா சோப்ரா பாதியிலேயே விழாவை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

இத்தனைக்கும் இரண்டு பேரும் ரொம்ப நல்ல மாதிரியாகத்தான் பழகி வந்தனர். இருவரும் இணைந்து தில் தடக்னே தோ படத்திலும் கூட நடித்துள்ளனர். இதன் பிரமோஷன் வேலைகளிலும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் ஈஷிக் கொண்டு உற்சாகத்துடன் வளையவும் வந்தனர். ஆனால் இடையில் என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ.. கோலாலம்பூரில் வைத்து ஆளுக்கு ஒருபக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டனர்.

Priyanka gets Angry with Anushka at IIFA, why you know?

கோலாலம்பூரில் நடந்த ஐஐஎப்ஏ விருது விழாவில் பிரியங்கா சோப்ரா டான்ஸ் ஆடுவதாக இருந்தது. இந்த நிலையில் திடீரென அது ரத்தாகி விட்டது. இதற்கு பிரியங்காவுக்குக் காரணம் தெரியவில்லை, தெரிவிக்கப்படவும் இல்லை.

அதேசமயம், அனுஷ்கா சர்மாவின் நடனம் இடம் பெறுவதாகவும், அதுவும் தில்.. படத்தின் பாடலுக்கு அவர் ஆடவிருப்பதும் கடைசி நேரத்தில் பிரியங்காவுக்குத் தெரிய வர டென்ஷனாகி விட்டாராம் பிரியங்கா சோப்ரா.

இதனால் பாதியிலேயே விழாவை விட்டு வெளியேறி விட்டார் பிரியங்கா சோப்ரா. தன்னை ஆட விடாதது, ஆனால் அனுஷ்காவை மட்டும் ஆட விட்டதால்தான் பிரியங்கா கோபித்துக் கொண்டு போய் விட்டதாக கூறுகிறார்கள்.

அதேசமயம், நிகழ்ச்சிக்கு சரியான முறையில் ஏற்பாடுகள் செய்யாததால்தான் பிரியங்கா கோபித்துக் கொண்டதாக ஒரு தரப்பு செய்தி கிளப்பி வருகிறது.

உண்மையில் என்ன நடந்ததோ அதை பிரியங்காதான் விளக்க வேண்டும்..

ஆ ஊன்னா கோச்சுக்கிறாங்கப்பா..!

 

கவர்ச்சியில் அலியா பட்டை மிஞ்சிய சோனம் கபூர்

இன்றைய தேதிக்கு பாலிவுட்டில் நம்பர் ஒன் கவர்ச்சி நடிகை என்றால் அது தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் சோனம் கபூர்.

சமீபத்தில் சோனம் கபூர் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த சூடான புகைப்படங்களைப் பார்த்து இந்தித் திரையுலகமே ஆடிப் போய்க் கிடக்கிறது.

Sonam Kapoor beats Alia Bhatt to have the HOTTEST magazine cover, say fans

நடிகைகள் அனைவருமே தலைசிறந்த மாத இதழ்களின் அட்டைப்படம் மற்றும் காலண்டர் போன்றவற்றுக்கு தங்கள் புகைப் படங்களை அளிப்பது வழக்கம். இதற்காக தலைசிறந்த புகைப்பட நிபுணர்களை வைத்து புதிதாக புகைப்படங்களை எடுப்பார்கள். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் காலத்திற்கு ஏற்றவாறு ஏடாகூடமான கவர்ச்சியுடன் இருக்கும்.

குறிப்பிட்ட சில பிரபல பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களை அலங்கரிப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் அல்ல, எனவே கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நடிகைகளும் போஸ் கொடுத்து தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்கின்றனர்.

குறிப்பிட்ட பத்திரிகையின் காகிதத்தை மட்டும் அணிந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, சிலசமயங்களில் துணியே இல்லாமலும் கூட போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடுவார்கள்.

கிங்பிஷர் நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட கடன்கள் இருக்கின்றன. ஆனால் ஆண்டுதோறும் பிரபலமான நடிகைகளின் புகைப்படங்களுடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் இருந்து காலண்டர் வெளிவரத் தவறுவதில்லை.

இந்த வருடம் மும்பையில் வெளியான பிரபல பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தை அலங்கரித்த 5 நடிகைகளில் மிகச்சிறந்த நடிகை யார் என்று ஒரு வாக்கெடுப்பு ரசிகர்களிடம் நடத்தப் பட்டது. சோனம் கபூர், அலியா பட், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நர்கிஸ் பக்ரி மற்றும் நிம்ரத் கவுர் போன்ற 5 நடிகைகளில், மற்ற நால்வரையும் விட அதிக வாக்குகளைப் பெற்று (43%) முன்னணியில் இருக்கிறார் நடிகை சோனம் கபூர்.

ஹாட் மற்றும் செக்ஸியான நடிகை யார் என்பதுதான் போட்டியின் தலைப்பாம், நடிகை அலியா பட்டை வெறும் செக்ஸி நடிகையாக மட்டுமே அங்கீகரித்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்!