பிரகாஷ் ராஜ் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் இன்று வெளியாகவிருந்த கவுரவம் படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுமுகங்கள் சிரிஷ், யாமி கவுதம் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியாகவிருந்தது கவுரவம் திரைப்படம். தெலுங்கில் இந்தப் படம் வெளியான நிலையில், தமிழில் தடை செய்யப்பட்டுள்ளது.
கண்ணன் என்பவர் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில், கௌரவம் படத்துக்கு தடை கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், அலுவலக வாடகை உள்பட 11 லட்ச ரூபாய் நடிகர் பிரகாஷ்ராஜ் வழங்கவில்லை என்றும் இதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 22ஆம் தேதி வரை கௌரவம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் பதில் அளிக்க உத்தரவிட்டார்.