நண்பன் கமலுக்கு கைகொடுக்க வருகிறார் ரஜினி?

Rajini Tries Make Peace Between Govt And Kamal

சென்னை: இக்கட்டான சூழலில் உள்ள தனது 40 ஆண்டுகால நண்பன் கமல் ஹாஸனுடன் போனில் பேசிய ரஜினி, அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார்.

ரஜினி - கமல் இருவரும் திரையில் மரியாதைக்குரிய போட்டியாளர்களாகவும், நிஜத்தில் நட்புக்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

உழைப்பாளி சமயத்தில் ரஜினிக்கு நெருக்கடி ஏற்பட்ட போது கமல் உதவிக்கு வந்தார். அதே போல கமலுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் முதல் குரல் கொடுப்பவராகத் திகழ்கிறார் சூப்பர் ஸ்டார்.

இந்த விஸ்வரூபம் விவகாரத்திலேயே கூட, கமலை அரசும் இஸ்லாமிய அமைப்புகளும் நெருக்கடிக்குள்ளாக்கிய போது முதல் அறிக்கை வெளியிட்டவர் ரஜினிதான். அதன்பிறகுதான் பாரதிராஜா போன்றவர்கள் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், பிரச்சினை மிகத் தீவிரமடைந்து கமல் இந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறேன் என்று மனம் வெதும்பி அறிவித்துள்ளதால், அதிர்ச்சியடைந்த ரஜினி, கமலுடன் உடனடியாக போனில் பேசினார்.

கமல் வைத்த பிரஸ்மீட்டுக்கே நேரில் வருவதாக ரஜினி கூறியுள்ளார். ஆனால் வேண்டாம், பிரஸ் மீட் முடிந்ததும் சந்திக்கலாம் என்று கமல் கூறியதால் வரவில்லை. இன்று இரவு அவர் கமலைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தை விட்டு கமல் வெளியேறுவேன் என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட ரஜினி, "அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விட வேண்டாம். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். பொறுமையாக இருங்கள்," என்று அறிவுறுத்தினாராம்.

ஏற்கெனவே கமலை இக்கட்டிலிருந்து மீட்க ரஜினி வேறு சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

கமல் வீட்டுக்கு விரைந்த நட்சத்திரங்கள்

ரஜினி தவிர, பாரதிராஜா, வைரமுத்து, சரத்குமார், ராதிகா, பிரகாஷ் ராஜ், சிம்பு, சினேகா, பிரசன்னா என பலரும் கமலை நேரில் சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

 

கமலுக்கு எதிரான அரசின் கடுமையான நிலைக்கு 'அந்தப் பேச்சு' காரணமா?

Is These The Reasons Tn Govt Opposition To Kamal

சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது.

அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்...

நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்,

சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார்.

இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.

கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்' அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்.

 

கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் - இது கமல் ரசிகர்கள்

Kamal Fans Decide Return Ration Cards

மதுரை: கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கமல் ரசிகர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் அழகர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் தலைவர் கமல்ஹாசன் எந்த மதத்தையும் சேராதவர். எங்கள் நற்பணி மன்றத்தில் எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும், எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர்.

கமல்ஹாசன் அதிக செலவில் விஸ்வருபம் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சில முஸ்லிம்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த படத்தை பார்த்து பின்னர் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

எங்கள் தலைவர் எங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வது கிடையாது. எங்கள் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவிதான் செய்து வருகிறோம். இன்று நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக கூறியுள்ளார்.

தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம்.

அவரது உத்தரவுக்காக பொறுமை காத்து கொண்டு வருகிறோம். அவர் கட்டளையிட்டால், களம் இறங்க தயார்," என்றனர்.

 

கமலுக்கு ஏற்பட்ட சோதனையை ஜீரணிக்க முடியவில்லை: அர்ஜுன்

Kamal Is The Man Arjun

சென்னை: விஸ்வரூபம் குறித்து இன்று கமல் ஹாசன் அளித்த பேட்டியைப் பார்த்து கண்கலங்கிவிட்டதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து விஸ்வரூபம் பற்றியும், அதற்கு தமிழக அரசு விதித்த தடை பற்றியும் உருக்கமாக பேட்டியளித்தார். தனக்கு மதமும் இல்லை, குலமும் இல்லை தற்போது பணமும் இல்லை என்றார். தன்னுடைய ரசிகர்களில் ஏராளமானோர் முஸ்லிம்கள் என்றும், யார் மனதையும் புண்படுத்த படம் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன் என்றார்.

இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில்,

கமலின் பேட்டியைப் பார்த்து கண்கலங்கினேன். அவருக்கு ஏற்பட்டுள்ள சோதனையை ஜீரணிக்க முடியவில்லை. தன்னுடைய இத்தனை ஆண்டு கலைசேவையில் அவர் இதுவரை யார் மனதையும் புண்படுத்தாதவர். அவருக்கா இப்படி ஒரு சோதனை. கமல் சார் எங்கும் போகக் கூடாது அவர் இங்கு தான் இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கமல் சார் உங்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது என்றார்.

 

விஸ்வரூபம்: ஜெ. அரசின் தடையால் கர்நாடக, கேரள தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்

பெங்களூர்: விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதால் கர்நாடகா, கேரள மாநில தியேட்டர்களில் அமோக வசூலாக உள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவருக்கு சாதகமாக தீரப்பும் வந்துவிட்டது. ஆனால் தமிழக அரசோ அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் விஸ்வரூபம் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்க்க தமிழக ரசிகர்கள் கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

thanks tn govt ban on vishwaroopam
அதிலும் குறிப்பாக பெங்களூரில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்கிடையே நேற்று கர்நாடகத்தில் விஸ்வரூபம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டவுடன் பல்வேறு நிறுவன ஊழியர்கள் அலுவலகங்களில் அனுமதி பெற்று படத்தைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.
 

விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம்!

Kamal Edit Certain Parts Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்கவும் மாற்றவும் நடிகர் கமல் ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தப் படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை சுட்டிக் காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கமல், எனது முஸ்லீம் குடும்ப நண்பர்கள் என்னை அணுகி பிரச்சனையைத் தீர்க்க உதவ வேண்டும் என்றனர். விஸ்வரூபம் படப் பிரச்சனை குறித்து என்னிடம் பேசினர். இந்த பிரச்சனையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

படத்தில் சர்ச்சைக்குள்ள காட்சிகள், வசனங்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் அளித்தனர். இதற்கு சுமூகத் தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட சில காட்சிகளை மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருந்து சில வாசகங்களை படத்தில் நான் பயன்படுத்தியுள்ளது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர். அதனால் இறைமறை வசனங்களை நீக்குவது என்று தீர்மானித்துள்ளேன். சில காட்சிகளையும் எடிட் செய்ய உள்ளேன்.

இதனால் எங்களுக்குள் இனி பிரச்சனை இல்லை. குறிப்பாக எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

இந்தப் படப் பிரச்சனைகளால் சில விரும்பத்தாக சம்பவங்கள் நடந்து வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. என் சகோதர்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

இனி இஸ்லாமியர்களுக்கும், எனது இஸ்லாமிய ரசிகர்களுக்கும், பொதுவாக எனது ரசிகர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டியதும், சட்டம் ஒழுங்கை பேண வேண்டியதும் அரசின், காவல்துறையின் கடமை என்றார்.

கமலின் இந்த அறிவிப்பு குறித்து 24 இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆருண் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால், விஸ்வரூபத்துக்கு இஸ்லாமியர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு அகலலாம். ஆனால், அரசின் எதிர்ப்பு அகலுமா என்பது தெரியவில்லை.

 

விஸ்வரூபம்: உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகும் கமல்

Kamal Move Sc

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டு, படத்துக்கும் தடை விதித்தனர்.

மேலும் இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

தீர்ப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேட்டியளித்த கமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் காணச் சென்ற ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டுகிறது போலீஸ்

Kamal Fans Throng Viswaroopam Theaters

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தை காணும் ஆவலுடன் தியேட்டர்களின் குவிந்த ரசிகர்களை வெளியேற்றிய போலீசார், அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பெரும் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று இரவு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற பெஞ்சில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ள தியேட்டர்களின் முன்பாக கமல் ரசிகர்கள் குவிந்து நிற்கின்றனர்.

சில தியேட்டர்களில் படத்தைப் போட்டு விட்டனர். இருப்பினும் சில ஊர்களில் தியேட்டர்களில் 12 மணிக்கு மேல்தான் முதல் காட்சி என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.

தியேட்டர்களை விட்டு விரட்டப்பட்ட ரசிகர்கள்

ஆனால் போலீஸார் திடீரென இன்று கமல் ஹாசன் ரசிகர்களுக்கு எதிராக மாறினர். தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்களை அவர்கள் படமெல்லாம் போட மாட்டாங்க என்று கூறி தடியடி நடத்தி விரட்டியடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் போலீஸார் ரசிகர்களை விரட்டியடிப்பதாக தவகல்கள் வந்து கொண்டுள்ளன.

திருப்பூரில் காத்திருப்பு

திருப்பூரைப் பொறுத்தவரை யுனிவர்சல், உஷா மெகா உள்ளிட்ட7 தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். இருப்பினும் படம் இன்னும் திரையிடப்படவில்லை. 12 மணிக்குமேல்தான் முதல் காட்சி என்று அங்கு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் வெளியே காத்து நிற்கின்றனர்.

படம் தொடர்பான பிளக்ஸ் போர்டுகளையும் கூட தியேட்டருக்கு வெளியே வைக்கவில்லை. கோர்ட் உத்தரவு வந்த பிறகே வெளியில் வைப்போம் என்று தியேட்டர் நிர்வாகம் கூறிவிட்டன.

சேலத்தில் ரசிகர்கள் மீது தடியடி

இதற்கிடையே சேலத்தில் இன்று காலை கேயெஸ் தியேட்டர், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து விட்டனர். ஆனால் அவர்களைப் போலீஸார் திடீரென தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்கள் தடையை மீறிப் போக முயன்றனர். இதையடுத்து படம் இப்போது கிடையாது என்று கூறிய போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தியதால் அவர்கள் கலைந்து ஓடினர்.

இதை இன்று சென்னையில் அளித்த பேட்டியிலும் கமல் குற்றச்சாட்டாக முன் வைத்தார். எனது ரசிகர்களை போலீசார் தியேட்டர்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர் என்றார்.

 

விஸ்வரூபம்... அரசின் மேல்முறையீடு தீர்ப்பு வரும் வரை காத்திருக்க தியேட்டர்கள் முடிவு!

Theaters Still Not Ready Screen Viswaroopam

சென்னை: இன்று காலை முதல் விஸ்வரூபம் படத்தை திரையிட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டாலும், படத்தைக் காண ரசிகர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த இரண்டு வார தடையை உயர்நீதிமன்றம் நேற்று இரவு ரத்து செய்தது. படத்தை இன்றுமுதல் திரையிட அனுமதித்தது.

ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போகிறது. காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த அப்பீலை எடுத்துக் கொண்டு விசாரிக்கவிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச்.

இந்த நிலையில் படத்தைக் காண ஏராளமானோர் திரையரங்குகளின் முன் இன்று காலையிலேயே குவிந்தனர். ஆனால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுத்துவிட்டனர் போலீசார்.

இதனால் எங்குமே காலை சிறப்புக் காட்சி நடக்கவில்லை. முதல் காட்சி முற்பகல் 11 மணிக்குப் பிறகுதான் தொடங்கும். அதற்குள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு தீர்ப்பு கிடைத்துவிடும் என்பதால், தியேட்டர்களும் அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

இதனை வெளிப்படையாக சொல்லாமல், போலீஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர். 11 மணிக்குப் பிறகுதான் காட்சி நடக்கும். போய் வாருங்கள்... கூட்டம் கூட வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர் போலீசார்.

 

விஸ்வரூபம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை!!

Viswaroopam Hc Postpones Hearing Govt Appeal Petition

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.

முன்னதாக இந்தப் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10 மணிக்கு படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள் படத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாளை காலை (இன்று) இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.இதையடுத்து இந்தப் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது.

பின்னர் வழக்கு பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 4ம் தேதி) தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

விஸ்வரூபம்.. 'வெயிட் பண்ணுங்க..'- தியேட்டர்களுக்கு முக்கிய பிரமுகர் வாய்மொழி 'உத்தரவு'?

Viswaroopam Issue Govt S Oral Instruction Theaters

சென்னை: விஸ்வரூபம் படம் வெளியிடுவதை தாமதப்படுத்துமாறு திரையரங்குகளுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது.

ஆனால் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடாமல், படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவே, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை, மூத்த அமைச்சர் ஒருவர் தொடர்பு கொண்டாராம்.

'விஸ்வரூபம் விவகாரத்தில் அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சிறுபான்மையினர் உணர்வுகளை மதிக்க வேண்டும். எனவே அரசுக்கு துணை நிற்கும் வகையில், மேல்முறையீட்டு மனு முடிவு தெரியும் வரை படத்தைத் தாமதப் படுத்த முடியுமா?' என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.

அரசுத் தரப்பு கேட்கும்போது, மறுக்க முடியுமா என்ன... உடனடியாக அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் தொலைபேசியில் அழைத்த அந்த நிர்வாகி அரசின் முடிவை தெரிவித்து, வெயிட் பண்ணுங்க... அவசரப்பட வேண்டாம், என்று கூறியுள்ளாராம்.

சாதாரண நடிகர்களின் படங்களுக்கே சிறப்புக் காட்சி போட அனுமதிக்கும் அரசு, கமல் படத்துக்கு இன்று அனுமதி மறுத்த போதே விஷயத்தைப் புரிந்து கொண்ட திரையரங்குகள், இப்போது அப்பீல் மனு ரிசல்ட் தெரியும் வரை காத்திருக்க முடிவு செய்திருப்பதன் பின்னணி இதுதானாம்!

 

தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால் வேறு மாநிலம் அல்லது வெளிநாட்டில் குடியேறுவேன்- கமல்

I Will Go Some Other State Or Abroad

சென்னை: எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை.

தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது. இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ் மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன். ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒருபிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன்.

என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா.. என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று.நான் அதை ஏற்கிறேன். நாட்டுக்கா, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார்.

தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.
மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன்.

எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை.எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான்.இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்.

எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப்படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும்.

எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.

  Read in English: Vishwaroopam: Kamal Haasan to leave Ind?
 

அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைகாய் ஆக்கிவிட்டனர்-கமல்

Kamal Sees Political Plot Against His Movie

சென்னை: அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் உருக்கமாக பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஒரு படம் எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையையும் பாதிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர்.

யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும்

நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல-நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உள்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை என்றார் கமல்ஹாசன்.

 

கமலுக்கு ஏற்பட்ட நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் - பாரதிராஜா

Bharathi Raja Comes Support Kamal

சென்னை: கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

விஸ்வரூபம் சர்ச்சை குறித்து பாரதிராஜா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலை குணிய வேண்டும். நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான். அனைவருக்கும் பாலமாக இருந்து பெருமை தேடித் தருகிறவர்கள் இவர்கள்தான். கலைஞன் அழிந்தால் கலை அழியும், கலை அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும், இனம் அழிந்தால் பிணம் திண்ணும் கழுகுகள்தான் பறக்கும். அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வரக் கூடாது.

கலைக்காக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு கலைஞனை கீறி ரணம் பார்த்து ரத்த ருசி பார்ப்பது தமிழகத்தின் சாபக்கேடாக முடிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

கமல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கித் தலை குணிய வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் நீதியின் பாலும், சட்டத்தின்பாலும் நம்பிக்கையுடன் உள்ளோம்.

கண்ணகி கோபப்பட்டாள், அன்று மதுரை எரிந்தது. இன்று ஒரு கலைஞனை வேதனையுறச் செய்துள்ளார்கள். அதனால் தமிழகமே எரிந்து போய் விடுமோ என்று அஞ்சுகிறேன்.

கமல் என்ன தவறு செய்து விட்டான்... நடப்புநிகழ்ச்சியைச் சொன்னான். அது தவறா.. பின்லேடனையும், முல்லா உமரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது தவறா.. கஜினி முகம்மது கொள்ளையடித்தான் என்று பேசினால் அது தவறா.. அப்படியென்றால் அதைப் பாடப் புத்தகத்திலிருந்தே எடுத்து விடுங்கள்.

தயவு செய்து நல்ல கலைஞனை வாழ விடுங்கள். இல்லாவிட்டால் அத்தனை கலைஞர்களின் பெருமூச்சும், தீமூச்சாக மாறி விடும் என்றார் பாரதிராஜா.

 

விஸ்வரூபம் வெளியிட்ட சென்னை தியேட்டர்கள் மீது தாக்குதல்- பேனர்கள் எரிப்பு

Viswaroopam Banner Torched Chennai

சென்னை: சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது சிலர் கல்வீசியும், தீவைத்து எரித்தும் தாக்குதல் தொடுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் விஸ்வரூபம்திரைப்படம் திரைக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டுள்ளனர். அத்தனை தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் எழும்பூரில் உள்ள ஆல்பட் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பேனரைசிலர் தீவைத்து எரித்து விட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ பரவமால் தடுக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

தேவி தியேட்டரிலும் தீவைப்பு

இதேபோல இன்று காலை, அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் முன்பு மத்திய சென்னை மாவட்ட கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் ரசிகர்கள் விஸ்வரூபம் படத்துக்கான பேனரை காலை 6 மணி அளவில் வைத்தனர். அதை அங்கு வந்த ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி பேனரை எரித்து விட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தியேட்டரின் மெயின் வாசல் அருகில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

விஸ்வரூபம் படத்தின் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் தேவி தியேட்டர் முன்பு கமல் ரசிகர்களும் திரண்டனர். அவர்கள் பேனர் எரிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் அப்படியெல்லாம் தீவைப்பு சம்பவங்கள் நடக்கவில்லையே என்று போலீஸார் மகா அமைதியாக பதிலளித்தனர். உண்மையில் தீயில் எரிந்த பேனரை போலீஸாரே எடுத்து மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் தியேட்டர் மீது கல்வீச்சு

அதேபோல சென்னை வில்லிவாக்கத்தி்ல் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் இன்று சிலர் திரண்டு வந்து கல்வீச்சில் இறங்கினர். இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.மேலும் தியேட்டருக்கு முன்பு டயர்களையும் போட்டுத் தீவைத்து எரித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்

சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் படம் நிறுத்தப்பட்டது. தாக்குதலை தடுக்க தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருப்பூரில் உஷா மெகா, எஸ்.ஏ.பி, ஸ்ரீசக்தி, யுனிவர்சல் உள்ளிட்ட 7 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படுவதை ஒட்டி காலை முதலே ரசிகர்கள் திரண்டனர்

ரசிகர் மன்ற காட்சி

காலை 6 மணிக்கு எஸ்.ஏ.பி தியேட்டரில் ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. பிற தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். படம் திரையிடப்படவில்லை. சில தியேட்டர்களில் ப்ளக்ஸ் பேனர்களை கூட வைக்க அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டரின் அனுமதி கிடைத்தபின்னர்தான் படம் திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

திருப்பூரில் அனைத்து தியேட்டர் வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலும் பேனர்கள் எரிக்கப்பட்டதாலும் இங்கும் அதுபோல சம்பவங்களை ஏற்படாமல் தடுக்க போலீஸ் காவல் நிற்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் பாதியில் நிறுத்தம்

ஈரோட்டில் மிகமுக்கியமான பகுதியில் உள்ள திரையரங்கில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 15 நிமிடத்தில் திரைப்படம் நிறுத்தப்பட்டது.

நாகையிலும் சிக்கல்

இதேபோல நாகப்பட்டினம் பாண்டியன் திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. விஸ்வரூபம் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர். ஆனால் திடீரென அங்கு வந்த வட்டாட்சியர், திரையரங்கு உரிமையாளரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி, திரைப்படத்தைப் பாதியில் நிறுத்தச் சொன்னார். இதை அடுத்து, படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் கலைவாணியிலும் படம் நிறுத்தம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கலைவாணி திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி உடனே நிறுத்தும்படி கட்டளை வந்ததால், படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகள் பெரும் கோபம் அடைந்து பிரச்னையில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் குதித்தனர்.

 

இந்தியாவில் நாங்கள் மிக பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக உள்ளோம்: பாக். அமைச்சருக்கு ஷாருக் பதிலடி

Shahrukh Khan Slams Pakistan Rehman Malik Over Security

மும்பை: தான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவில் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகளுக்கு அரசியல் தலைவர்கள் சில சமயம் என்னை ஒரு சின்னமாக ஆக்கிவிடுகின்றனர். நான் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக சில சமயங்களில் என் மீது குற்றம் சுமத்தினர். இத்தனைக்கும் நான் ஒரு இந்தியன், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் என் தந்தை. என்னை என் தாய்நாட்டை விட்டுவிட்டு 'என் தாய்நாடு' என்று அவர்கள் கருதும் நாட்டுக்கு என்னை போகச் சொல்லி தலைவர்கள் பேரணிகள் நடத்தினர் என்றார்.

இதையடுத்து ஷாருக்கிற்கு இந்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கோரிக்கை விடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மாலிக்கின் கருத்து குறித்து ஷாருக் கூறுகையில்,

நான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக உள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் நான் இந்தியாவில் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக எங்குமே இல்லை. என் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்.

இவ்வாறு சிலர் அறிவுரை கூறுவதற்கு காரணம் அவர்கள் நான் எழுதிய கட்டுரையை படிக்காமல் பிறர் கூறியதை வைத்து கருத்து தெரிவிப்பது தான் என்று நினைக்கிறேன். அதனால் முதலில் கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

 

கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர்: நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்!

Police Charged Rs 100 Fine Vivek

சென்னை: காரில் அனுமதியின்றி கறுப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விவேக்குக்கு ரூ 100 அபராதம் விதித்தனர் சென்னை மாநகர போலீசார்.

சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில் பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கொடிசெல்வம், பரமசிவம், வெங்கடேசன், ஜெயவேல் உள்பட ஏராளமான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விமான நிலையத்தில் இருந்து நடிகர் விவேக்கின் கார் வந்தது.

அந்த காரின் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. உடனே காரை போக்குவரத்து போலீசார் நிறுத்தி, "உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு பிரபலமான நீங்களே இதைச் செய்யலாமா?" என்றனர்.

உடனே, காரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற இருப்பதாக நடிகர் விவேக் கூறினார். ஆனால் தற்போது அனுமதி இல்லாததால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அபராத தொகையை நடிகர் விவேக் செலுத்தினார்.

செலவு ரூ 100... பலன்? பெரிய பப்ளிசிட்டி!!

 

விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல் முறையீடு!

Tn Govt File Appeal Petition Against Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான தடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு. இதற்கான அனுமதியை தலைமை நீதிபதி (எலிப்பி தர்மாராவ்) வழங்கினார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தமிழக அரசு விதித்த இரு வார கால தடை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீக்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.

இதனையடுத்து, விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிரான சிக்கல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து, இந்த உத்தரவு அமுலுக்கு வருவதை புதன் கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்டது. ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எலிபி தர்மாராவை அவரது இல்லத்தில், இரவு 11. 30 மணி அளவில் சந்தித்த அரசு வழக்கறிஞர்கள் குழு, மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெற்றது. இதனையடுத்து இந்த மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விஸ்வரூபம் இன்று வெளியாவதும் கஷ்டமே.

 

விஸ்வரூபத்திற்கு சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசின் பரபரப்பு புகார்

Tn Govt S Charge On Viswaroopam Certification

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல்,முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது.

நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.

144 தடை ஏன்...?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார். அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.