1/3/2011 10:34:02 AM
'கோ' படத்தில், என் கனவு கேரக்டரில் நடித்துள்ளேன் என்று அஜ்மல் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள 'கோ' படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் எனது கேரக்டர் சிறப்பானது. வில்லனாக நடித்துள்ளீர்களா என்கிறார்கள். வில்லன் இல்லை. ஜீவாவுடன் நானும் ஒரு ஹீரோவாகத்தான் நடித்துள்ளேன். இந்த கேரக்டர் எனது கனவு கேரக்டர். இந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கவே விரும்பியிருந்தேன். இந்த படத்துக்குப் பிறகு 'கதிர்வேல்' படம் ரிலீசாகும். இதில் எனக்கு சுனேனா ஜோடி. ஆக்ஷன், ரொமான்டிக் படம். ஏன் லேட் என்கிறார்கள். கதிர்வேல் படத்தின் இயக்குனர் வெங்கட்டுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டதால் கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி. 'கருப்பம்பட்டி' படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். இதன் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வாறு அஜ்மல் கூறினார்.