ஈசிஆர் ரோட்டில் 5 கிரவுண்டில் சொகுசு பங்களா கட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்


பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன். நாயகி வேடத்தில் நடித்து ஓய்ந்து மார்க்கெட் போன பின்னர், அம்மன் வேடமா கூப்பிடு ரம்யா கிருஷ்ணனை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். பாளையத்து அம்மன், ராஜகாளியம்மன் வேடங்களி்ல் நடித்த அவர் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் வேடத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஈசிஆர் சாலையில் சொகுசு பங்களா கட்டியுள்ளாராம் ரம்யா. அமைதியான சூழலில் வசிக்க விருப்பம் கொண்டு இந்த பங்களாவைக் கட்டியுள்ளாராம்.

5 கிரவுண்ட் நிலத்தில் சொகுசு பங்களா கட்டியுள்ளார். அந்த பங்களாவைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா கண்காணிப்பு தவிர காவலாளிகளும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொகுசு பங்களான்னா சும்மாவா? கண்காணிப்பு பலமா இருக்கனுமே!
 

பத்ராசலத்தில் ராமராஜ்யம் இசைவெளியீடு... இளையராஜா பங்கேற்பு


தெலுங்கில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகா பட்ஜெட் படமான ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீடு இன்று பத்ராசலத்தில் உள்ள ஸ்ரீசீதா ராமச்சந்திரா சுவாமி கோயிலில் நடக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இசைத் தட்டை வெளியிடுகிறார் படத்தின் இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா.

இந்த விழாவில் நயன்தாராவும் பங்கேற்கிறார். மதம் மாறிய பிறகு அவர் செல்லும் முதல் கோயில் இதுதான். இந்தக் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராமராஜ்யம் படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணா நடித்துள்ளார். நயன்தாரா சீதையாக நடித்துள்ளார்.

இதைவெளியீட்டு விழாவுக்காக தனி ஹெலிகாப்டரில் பத்ராச்சலம் சென்றுள்ளனர் இளையராஜா உள்ளிட்டோர். ஹைதராபாத் நகரிலிருந்து 400 கிமீ தூரத்தில் உள்ளது பத்ராச்சலம்.
 

பாரதிராஜா - ஜீவி பிரகாஷ்... புதிய கூட்டணி ஆரம்பம்!


இயக்குநர் பாரதி ராஜா தனது அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் படம் அன்னக் கொடியும் கொடிவீரனும்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஹ்மான் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகின.

இப்போது, பாரதிராஜா இந்த இருவரையும் விட்டு, ஜீவி பிரகாஷுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. படத்துக்கான பாடல் கம்போஸிங்கை ஏற்கெனவே ஜீவி பிரகாஷ் தொடங்கிவிட்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "பாரதிராஜா ஒரு சாதனையாளர். தமிழ் சினிமாவின் தலையாய இயக்குநர். அவர் என்னை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். ஒரு இசையமைப்பாளிரிடமிருந்து சிறந்த பாடல்களை வாங்குவது அவரது ஸ்டைல். அந்த அனுபவத்துக்காக காத்திருக்கிறேன்," என்றார்.
 

ஷம்மிஜி... எங்கள் இதயத்தில் எப்போதும் வாழ்கிறீர்கள்! - ரஜினி


ஷம்மி கபூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, ஷம்மிஜி… நீங்கள் எப்போதும் என் இதயத்தில் வாழ்கிறீர்கள், என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டின் சாதனை நாயகர்களில் ஒருவரான ஷம்மி கபூர் நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. தேசபக்திப் படங்களாக இருந்தாலும், ஆக்ஷன் கதைகளாக இருந்தாலும் ரொமான்டிக் படங்களாக இருந்தாலும், ஷம்மி கபூர் தன் ஸ்டைலான உடல் மொழியால் தனி கவனத்தைப் பெற்றார்.

ஷம்மி கபூரின் உடல் இன்று மும்பையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஷம்மி கபூரின் மறைவு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

ரஜினி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நான் ஷம்மிஜியின் தீவிர ரசிகன். திரையில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தவன் நான். அவரது மறைவு திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஒ மேரே சோனா… (தீஸ்ரி மன்ஸில் படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல் வரி) நீங்கள் எப்போதும் எங்களது இதயத்தில் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

 

போச்சே, போச்சே உழைப்பெல்லாம் வீனாப் போச்சே: காஜல் புலம்பல்


சிங்கம் படத்தில் காஜல் நடித்த பல காட்சிகளை அவருக்கு தெரிவிக்காமலேயே நீக்கிவிட்டார்களாம். இதனால் அம்மணி என் உழைப்பெல்லாம் வீனாப்போச்சே என்று புலம்பித் தள்ளுகிறாராம்.

தெலுங்கில் முன்னிணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். அவ்வப்போது தமிழிலும் வந்து தலையைக் காட்டிவிட்டு போவார். இருப்பினும் அவருக்கு பாலிவுட் மீது தான் கண்கள். அவர் ஏக்கத்தை தீர்ககும் வகையில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் சேர்ந்து சிங்கம் படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் அவர் வரும் பல காட்சிகளை அவர் அறியாமலேயே நீக்கிவிட்டார்களாம். இதனால் தன் உழைப்பெல்லாம் வீனாகிவிட்டது என்று காஜல் ஒரே புலம்பலாம்.

அப்பாடா பாலிவுட்டில் அறிமுகமாகியாச்சு இனி நிறைய வாய்ப்புகள் வரும் என்று அம்மணி பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லை. பாலிவுட்டை நம்பி டோலிவுட்டில் வந்த பல வாய்ப்புகளை தட்டிக்கழித்துள்ளார். அதை நினைத்து தற்போது வருந்துகிறாராம்.

அடடா பாலிவுட்டில் கூப்பிடுவார்கள் என்று நினைத்து நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிட்டேனே என்று புலம்புகிறாராம்.

சரி விடுங்க இனியாவது சூதானமாக இருந்துக்கோங்க…!

 

தலைநகரம் நாயகி ஜோதிர்மயி சினிமாவுக்கு குட்பை?


நடிகை ஜோதிர்மயி ச்த்தமில்லாமல் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டதாக மாலிவுட்டில் பேசப்படுகிறது.

தலைநகரம் மூலம் தமி்ழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. இதையடுத்து அவர் நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மொத்தம் 30 படங்களில் நடித்துள்ளார்.

அன்மையில் ஜோதிர்மயி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது தான் பலர் அட இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிசயித்தனர். அந்த அளவுக்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், சினிமாவையும் தனித்தனியாக வைத்திருந்தார்.

விவாகரத்து கேட்டிருக்கும் அவர் என்னடா திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் உள்ளாராம். இதையடுத்து சத்தமில்லாமல் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டதாக கேரள திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.

கையில் இருந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம். புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
 

ரஜினி உடல் நலம்-சிங்கப்பூர் டாக்டர்கள் திருப்தி-பரிசோதனைக்குப் பின் ஷூட்டிங் திரும்புகிறார்


சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பி ஒரு மாதம் ஓடிவிட்டது. இந்த நாட்களில் அவர் என்ன செய்கிறார், எப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், ரசிகர்களைச் சந்திப்பார்? என்ற கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம் அவருக்காக மொட்டையடித்தல், கிடா வெட்டு என நேர்த்திக் கடன் நிகழ்ச்சிகள் கனஜோராக நடந்து வருகின்றன.

இப்போது ரஜினியின் உடல்நிலை எப்படி உள்ளது?

அவருக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சமீபத்தில் வந்து ரஜினியைச் சந்தித்து, உடல்நிலையைப் பரிசோதித்துள்ளனர். ஆச்சரியப்படத்தக்க அளவில் அவரது உடல்நிலை வேகமாக முன்னேறிவிட்டதாக மருத்துவர்களே தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, ரஜினி சாப்பிட்டு வந்த மருந்து மாத்திரைகளின் அளவையும் குறைத்துவிட்டார்களாம்.

இந்த மருத்துவர் குழு மீண்டும் ஒரு முறை சென்னை வந்து ரஜினியை சோதித்துப் பார்த்து, மருந்து மாத்திரைகளை நிறுத்திய பிறகே ரஜினி வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, ரசிகர்களைச் சந்திப்பது, ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்வது போன்றவற்றுக்கான தேதிகளைத் தருவாராம்.

இதற்கிடையே, நெருங்கிய நண்பர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு தானே போன் செய்து பேசி வருகிறாராம் ரஜினி. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரையும் சந்திக்கிறேன். நேரில் இப்போது வரமுடியவில்லையே என வருத்தம் வேண்டாம் என்று கூறிவருகிறாராம்.
 

சென்னை அருகே எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கட்டிய கோயில் திறப்பு!


புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என மக்களால் புகழப்பட்ட தலைவர் அமரர் எம்ஜிஆர்.

திரையுலகில் அவர் இருந்தவரை வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அடுத்து அரசியலில் அடிவைத்த நாளிலிருந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார். இறுதி மூச்சு வரை, யாராலும் அசைக்க முடியாத தன்னிகரில்லாத தலைவராகத் திகழ்ந்தார் எம்ஜிஆர்.

அவரது ஆட்சிமுறையை அன்றைக்கு விமர்சித்த அத்தனை பேரும், இன்று எம்ஜிஆரின் ஆட்சிக் காலமே பொற்காலம் என புகழ்கிறார்கள். அன்று எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களே இன்று புகழ்பெற்று விளங்குகின்றன.

சத்துணவு, இலவச சீருடை, இலவச சைக்கிள், 108 ஆம்புலன்ஸ் போன்றவை எம்ஜிஆர் அன்றைக்கே கொண்டுவந்த திட்டங்களில் சில.

இன்றைக்கு எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், அவரை கடவுளாக்கி, கோயில்கள் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

சென்னை அருகே திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் சாலையில் சமீபத்தில் அவர் பெயரில் புதிதாக கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. இதில் 1.5 லட்சம் ரூபாய் ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டன என்றார்.

இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா சுதந்திர திருநாளான இன்று நடந்தது.

அதிகாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. புரோகிதர்கள் வேதமந்திரம் ஓதினர்.பின்னர் கலசங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
 

ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா! - வெங்கட் பிரபு


அஜீத்தின் பொன்விழா படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஆடியோ சிடி மங்காத்தாதான் என்று விற்பனையாளர்கள் பாராட்டும் அளவுக்கு பரபரப்பான விற்பனையில் உள்ளது இந்த சிடிக்கள்.

சமீபத்தில் மங்காத்தா பட வெளியீடு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "மங்காத்தா படத்தில் அஜீத் கெட்டவனாக நடித்துள்ளார். இந்தக் கதையில் மொத்தம் 5 கேரக்டர்கள். அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப ரொம்ப கெட்டவர்.

எனது படங்களின் கதை கிரிக்கெட்டோடு தொடர்புடையதாகவே இருக்கும். சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களைச் சொல்லி இருக்கிறேன்.

அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம். அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்," என்றார்.

மங்காத்தாவை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிடுகிறது.
 

அனைவருக்கும் கல்வி... விஜய்யின் சுதந்திர தின ஆசை


அனைவருக்கும் கல்வி வசதி அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

நடிகர், நடிகைகள் பலர் தங்களின் சுதந்திர தின ஆசைகளைத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் கூறுகையில், "இந்தியாவில் நூறு சதவித மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும். இதன் மூலம் வேலையின்மை இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது என் விருப்பம். ஒவ்வொரு வருடமும் நான் இலவச நோட்டு புத்தகங்கள் சீருடைகள், ஏழைகளுக்கு கல்வி உதவிகள் போன்றவற்றை வழங்கி வருவதன் காரணம் இதுவே.

பொருளாதாரத்தில் பின் தங்கிய சிலருக்கு உயர் கல்வி செலவையும் ஏற்றுள்ளேன். அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம். இதற்காக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளேன். அங்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

நடிகை அமலா பால் கூறுகையில், "நாட்டில் ஊழல் முற்றாக ஒழிய வேண்டும் என்பதுதான் எனது சுதந்திர தின ஆசை" என்று கூறியுள்ளார்.

தமன்னா கூறுகையில், "நன்கு படித்தவர்கள் உள்ள இந்த நாட்டில்தான் குற்றங்களும் வழக்குகளும் அதிகமாக உள்ளன," இந்த நிலை மாற வேண்டும் என்றார்.

நடிகை த்ரிஷா இப்படிச் சொல்கிறார்:

சுதந்திரம் எத்தனை அற்புதமான விஷயம் என்பது அனுபவிக்கும்போதுதான் புரிகிறது. நமது முன்னோர்களுக்கு நன்றி. நல்ல சிந்தனைகள் பெருக வேண்டும். அப்போதுதான் சமூகக் குற்றங்கள் குறையும், என்றார்.
 

புலிவேஷத்துக்கு யு / ஏ சான்றிதழ் தந்த சென்சார்!


பி வாசு இயக்கத்தில் ஆர்கே நடிக்கும் புலிவேஷம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

எல்லாம் அவன் செயல், அழகர் மலை போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் ஆர்கே. கதாநாயகனாக வெற்றி பெற்ற போதும், நல்ல வேடம் என்பதால் பாலாவின் அவன் இவனில் வில்லனாக நடித்தார். அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது.

இந்த நிலையில் இப்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் புலிவேஷம் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் அவருடன் கார்த்திக், பிரபு, சதா, திவ்யா விஸ்வநாத், கஞ்சா கருப்பு என பெரிய நடிகர் கூட்டமே நடித்துள்ளது.

ஒரு யதார்த்தமான மனிதன், எப்படி பெரிய டானாக மாறுகிறார் என்பதுதான் கதை. இதில் இரண்டுவிதமான கேரக்டர்களை ஆர்கே செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

வாசுவுக்கு தமிழில் மிக முக்கியமான படம் இது என்பதால், படம் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து வருகின்றனர்.

யு/ஏ சான்றிதழ்

இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. நேற்று முன்தினம் படம் பார்த்த சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

படத்தை வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளிடத் திட்டமிட்டுள்ளனர்.