நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள்-தமன்னா

Tamanna
நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஒருபோதும் அவ்வளவு சம்பளம் கேட்கவில்லை என்கிறார் தமன்னா.
தமிழ் சினிமாவின் ஹாட் ஸ்டாராக திகழ்பவர் தமன்னா. கை நிறையப் படங்களுடன் தமிழ், தெலுங்கில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் முன்னணிக் குதிரை. இந்த நிலையில் தமன்னா 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதை மறுக்கிறார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3 படங்களில் நடித்து வருகிறேன்.
அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. ஆனால் சிலர் என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டனர். எனது நிலையைச் சொல்லி மறுத்து விட்டேன். இதனால் கோபமாகி நான் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது நியாயமா என்று விசனப்படுகிறார் தமன்னா.
Also Read Thamanna gets wild when she was asked that she demanding heavy salary

 

காஸனோவாவுக்காக மோகன்லாலுடன் துபாயில் ஸ்ரேயா!

Shriya Saran
ஸ்ரேயா நடிக்கும் மலையாளப்படம் காஸனோவா. இந்தப் படத்துக்காக மோகன்லாலுடன் துபாய்க்குச் சென்றுள்ளார் ஸ்ரேயா.
மோகனலாலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிப்பது இதுதான் முதல் முறை. ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதைப்படி பெரிய தாதா மோகன்லால். எப்போதும் ஒரு பெண்ணுடன் ஜாலியாக சுற்றுவாராம். அதனால் லட்சுமிராய் உள்பட 4 நாயகிகள் படத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ஸ்ரேயாவும் நடிக்கிறார். மோகன்லாலுடன் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பல நாள் கனவு நனவாகியது, என்று உருகுகிறார் ஸ்ரேயா.
 

ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்

Trisha
நடிகை திரிஷாவின் பேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரிஷா அப்செட்டாகியுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நீளமானது. அதில் இணையாவிட்டால் அவர்களை ஒருமாதிரியாக பார்க்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அக்கவுண்ட் வைத்திருக்கும் தென்னிந்தியப் பிரபலங்களில் திரிஷாவும் ஒருவர். ஆனால் அவரது பேஸ்புக் அக்கவுண்டை சில விஷமிகள் ஹேக் செய்துள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் திரிஷா. நேற்று காலை திரிஷாவின் பேஸ் புக் பக்கத்திற்குச் சென்ற அவரது நட்பு வட்டாரம், அது பிளாக் ஆகிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
தனது தளம் ஹேக் செய்யப்பட்டால் அதிர்ச்சி அடைந்த திரிஷா உடனடியாக வேறு ஒரு அக்கவுண்ட்டைத் தொடங்கியுள்ளார். இதையாவது யாரும் நோண்டாமல் இருக்க வேண்டுமே என்று புலம்பி வருகிறாராம் திரிஷா.
சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் ட்விட்டர் தளத்திற்குள் சிலர் ஊடுறுவி விஷமம் செய்தது நினைவிருக்கலாம்.
Read in English Trisha's Facebook account hacked

 

‘அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!’

Thotta Tharani
தோட்டா தரணி… தேசிய விருதெல்லாம் வாங்கிய பெரும் கலைஞன். சமீபத்தில் ஒரு பெரிய படத்திலிருந்து சடாரென்று விலகி வந்துவிட்டார். அதுவும் சாதாரண நடிகர் அல்ல, இளம் நடிகர்களிலேயே பிரபலமாக உள்ள ஒருவரின் படத்திலிருந்து.
காரணம்…?
“ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை.
வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன்.
ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை” என்று கூறி விலகிவிட்டார்.
இவர்தான் இப்படியென்றால், படத்தின் கேமராமேன் ரவி கே சந்திரன் ஏக டென்ஷனில் இருக்கிறாராம். ஷாரூக்கான், அமீர்கானையெல்லாம் பார்த்த அவருக்கே கேமராவை இப்படி வையுங்க, லைட்டிங் இப்படி இருந்தால் பெட்டர், அந்தக் கோணம் வேணாம், இது ஓ.கே. என்றெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாராம் அந்த ஹீரோ.
இதனால் கடுப்பான ரவி, யோவ் இன்னொருவாட்டி அந்தாளு என்கிட்ட வந்தா, நானே பேக்கப் சொல்லிட்டு போயிடுவேன்” என்று இயக்குநரிடம் கடித்து விட்டாராம்.
இவர்கள் இப்படி வெளிப்படையாக புலம்புகிறார்கள் என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினியையே பறக்க விட்டு சண்டை போட வைத்த, படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினோ வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கிறாராம். இன்னும் ஒரு சான்ஸ் தருவோம். சரியா வரலேன்னா விலகிடலாம் என்பதுதான் அவரது நினைப்பும் என்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்த ஹாலிவுட் ஸ்டைல் இயக்குநர் என்னதான் செய்கிறார்? அவருக்கும் கூட ‘அக்காய் உக்காய்’தானாம். ஆனால், தான் முதலில் இயக்கியபோது இருந்த டம்மி பார்ட்டி இல்லை நாயகன் என்பதைப் புரிந்து, பிழைக்கத் தெரிந்த புத்திசாலியாக நடந்து கொள்கிறாராம். அதாவது வாயை மூடிக் கொண்டு வேலை பார்க்கிறாராம்.
‘எக்ஸ்ட்ரா அறிவு’ இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிக் கஷ்டப்படுத்தும் ஒரு ஹீரோவால் ஒட்டுமொத்த யூனிட்டும் புலம்பிக் கொண்டிருப்பது விசித்திரம்தான்!