எதிர்ப்பாளர்கள் தீவிரம்... கத்தி திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகுமா? - எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்

கத்தி படத்துக்கு எதிரான தமிழ் அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனம் ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகக் கூறி, அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன தமிழ் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஈழத் தமிழ் ஆதரவு கட்சிகள்.

எதிர்ப்பாளர்கள் தீவிரம்... கத்தி திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகுமா? - எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்

ஆனால் லைகா நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தமிழர் வாழ்க்கைக்காக பல நல்ல விஷயங்களை தாம் செய்து வருவதாகவும் லைகா நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் கத்தி படத்தின் பட்ஜெட் என்பது தனது இரண்டு நாள் வருமானம் என்று கூறிய தயாரிப்பாளர் சுபாஷ்கரண், படத்தை லைகா பேனரில் வெளியிடுவதில் உறுதியுடன் உள்ளார்.

இந்த நிலையில் படத்தை வெளியிட நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம் என்று வேல் முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இதில் 150 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்த எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது லைகா. சென்சாருக்கு படத்தைப் போட்டுக் காட்டியதில், எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் யு சான்று வழங்கினர். 400 அரங்குகளில் வரும் அக்டோபர் 22-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி மற்றும் மாணவர் அமைப்புகள் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று, அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டனர். மீறித் திரையிட்டால் போராட்டம், வெடிக்கும் என்று எச்சரித்தனர்.

இத்தோடு நில்லாமல், நேற்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதில் அபிராமி ராமநாதன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கத்தி படத்துக்கான எதிர்ப்பு நிலையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்த எதிர்ப்பை மீறி படத்தைத் திரையிட வேண்டாம் என்றும் திரையரங்க நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டனர். இந்தப் படத்தைத் திரையிட கொடுக்கப்பட்ட முன்பணத்தை வாங்கிக் கொள்ளும்படி திரையரங்க உரிமையாளர்களை வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.

எனவே மேற்கொண்டு என்ன முடிவெடுப்பது என்று குழம்பிய திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மீண்டும் இன்று சந்தித்துப் பேசவிருந்தனர். ஆனால் இன்று ஜெயலலிதா வழக்கு, ஜாமீனில் விடுதலை போன்ற காரணங்களால் சந்திப்பை நாளை தள்ளி வைத்துள்ளனர். நாளைய சந்திப்புக்குப் பிறகே கத்தி வெளியாகுமா இல்லை என்பது தெரியும்!

 

இணையதளத்தில் 'லீக்'கான கத்தி கதை: கூலாக இருக்கும் படக்குழு

சென்னை: இணையதளத்தில் கத்தி படத்தின் கதை கசிந்துவிட்டது என சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் டென்ஷன் ஆனாலும் படக்குழுவினர் கூலாகவே உள்ளனர்.

தீபாவளிக்கு ரிலீஸாகும் விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். படம் ரிலீஸாக உள்ள நேரத்தில் விஜய்யை பிடிக்காதவர்கள் செய்த சதி என்று அவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.

நெட்டில் கசிந்த 'கத்தி' கதை: டென்ஷனில் ரசிகர்கள், படக்குழுவோ 'கூல்'

படத்தில் இரண்டு விஜய்யும் சகோதரர்களாம். ஒருவர் நல்லவர், மற்றொருவர் கெட்டவர். நல்ல விஜய் குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உதவுகிறாராம். கெட்ட விஜய் தீவிரவாதியாம். நல்ல விஜய் வில்லன் டோடா ராயை பிடித்துக்கொடுக்க உதவுகிறாராம். வெளியே வரும் ராய் விஜய்யை பழிவாங்க நினைக்கையில் ஒரே ஜாடையில் இரண்டு பேர் இருப்பதை பார்க்கிறாராம். இதில் விந்தை என்னவென்றால் ஒரு விஜய் இருப்பது மற்றொரு விஜய்க்கு தெரியாதாம். ராய் இருந்தாலும் நீல் நிதின் முகேஷ் தான் முக்கிய வில்லனாம். இதுவே கசிந்த கதை.

இணையதளத்தில் கத்தி கதை கசிந்துவிட்டதாமே என்று விசாரித்தபோது கசிந்த கதை வேறு படத்தின் கதை வேறு. அது இணையதளத்தில் வெளியாக வாய்ப்பே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

நடிகை தியா மிர்சா திருமணத்தில் கன்னிகாதானம் செய்து வைக்கும் 'ரீல்' அப்பா போமன் இரானி

மும்பை: பாலிவுட் நடிகை தியா மிர்சா திருமணத்தில் நடிகர் போமன் இரானி கன்னிகாதானம் செய்து வைக்கிறாராம்.

ஜெர்மனியைச் சேர்ந்த அப்பாவுக்கும், இந்திய அம்மாவுக்கும் பிறந்தவர் பாலிவுட் நடிகை தியா மிர்சா. 2000ம் ஆண்டில் மிஸ் ஆசியா பசிபிக் அழகிப்பட்டம் வென்ற அவர் பாலிவுட்டில் நுழைந்தார். தேவையில்லாத விஷயத்தில் தலையிடாத தியாவுக்கு அவரது காதலர் சாஹில் சங்காவுக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது.

நடிகையின் திருமணத்தில் கன்னிகாதானம் செய்து வைக்கும் 'ரீல்' அப்பா

இந்நிலையில் நேற்று இரவு மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தியா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இன்று இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை நடக்கும் திருமணத்தில் நடிகர் போமன் இரானி கன்னிகாதானம் செய்து வைக்கிறார். அதாவது தந்தை ஸ்தானத்தில் இருக்கும் போமன் இரானி மடியில் தியா அமர மாப்பிள்ளை தாலி கட்டுவார்.

தியாவின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவர் போமன் இரானியை தான் தனது தந்தையை போன்று கருதுகிறார். லகே ரஹோ முன்னா பாய் படத்தில் தியாவின் தந்தையாக போமன் இரானி நடித்தார். அதில் இருந்து அவர்களின் தந்தை, மகள் உறவு ரியல் வாழ்விலும் தொடர்கிறது.

 

'அம்மா ரிலீஸ்'.. திரையுலகினர் கொண்டாட்டம்... படப்பிடிப்பில் பட்டாசு வெடித்த சரத்குமார்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய செய்தி வெளியானதும் தமிழ் சினிமா உலகமே இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த செய்தி வெளியானதிலிருந்து, திரையுலகின் அனைத்து அமைப்பினரும் ஒருவருக்கொருவர் செய்தியை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.

'அம்மா ரிலீஸ்'.. திரையுலகினர் கொண்டாட்டம்... படப்பிடிப்பில் பட்டாசு வெடித்த சரத்குமார்!

திரைப் பிரபலங்கள் பலரும் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் சந்தோஷத்தை தெரிவித்தனர்.

இந்த செய்தி வெளியானபோது நடிகர் சரத்குமார் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தார். செய்தி அறிந்ததும், யூனிட்டுக்கே பட்டாசு பண்டல்களை வரவழைத்து வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

'படக்குழுவினருக்கு இனிப்பு வழங்கினார். இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுபட்டு தமிழகத்தின் நிரந்தர முதல்வராகத் திகழ்வார் அம்மா' என்று தெரிவித்தார் சரத்குமார்.

 

தாயின் வருகையில் பொங்குது மகிழ்ச்சி- ஜெயலலிதாவை வரவேற்கும் இயக்குநர்கள் சங்கம்

தீயில் விழுந்தது தீயவர் தீயவர் சூழ்ச்சி, தாயின் வருகையில் பொங்குது மகிழ்ச்சி என்று தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கூறியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் இன்று விடுதலைப் பெற்றார். உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

தாயின் வருகையில் பொங்குது மகிழ்ச்சி- ஜெயலலிதாவை வரவேற்கும் இயக்குநர்கள் சங்கம்

இதனை வரவேற்று தமிழகம் முழுக்க இன்று கொட்டும் மழையிலும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

ஜெயலலிதா விடுதலையை வரவேற்று தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

நமது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தடைகளைத் தாண்டி வெற்றியுடன் தமிழகம் திரும்பி வருகிறார். தீயில் விழுந்தது தீயவர் தீயவர் சூழ்ச்சி, தாயின் வருகையில் பொங்குது மகிழ்ச்சி. கண் கலங்கி நெஞ்சம் குமுறி அழுதுகொண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கி எழுகின்றன.

அன்று சிறை சென்று திரும்பிய அன்னை இந்திரா காந்தி அம்மையார் சீற்றத்துடன் செயல்பட்டு ஏற்றமிகு நிலையை அடைந்தார்.

அதைப் போலவே இன்று நமது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சீரும் சிறப்பும் பெறப் போகிறார்.

தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அற்பணித்துக் கொண்டு தமிழக மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கப் போகிறார் என்று சொல்லிக்கொண்டு, அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு என பிராத்தனை செய்கிறோம்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இளையராஜா அறிவித்த போட்டி... என்ன செய்ய வேண்டும் ரசிகர்கள்?

நேற்று முன்தினம் இசையமைப்பாளர் இளையராஜா தன் ரசிகர்களுக்கு அறிவித்த போட்டி நினைவிருக்கலாம்.

இளையராஜா இசையமைத்த ஆயிரம் படங்களின் தகவல்களைத் திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு பிரமாண்டமான தகவல் களஞ்சியம் தயார் செய்வது இந்தப் போட்டியின் நோக்கம்.

ராஜாவின் முதல் படம் அன்னக்கிளியிலிருந்து ஆயிரமாவது படமான பாலாவின் தாரை தப்பட்டை வரையிலான தகவல்களைத் துல்லியமாகத் தர வேண்டும்.

இளையராஜா அறிவித்த போட்டி... என்ன செய்ய வேண்டும் ரசிகர்கள்?

படங்களின் பெயர்கள், வெளியான தேதி, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பெயர், பாடலாசியர்கள், பாடகர்கள் என்று எல்லா தகவல்களும் இருக்க வேண்டும்.

அப்படி ஆயிரம் படங்களின் தகவல்களை கொடுக்கும் ரசிகருக்கு இசைஞானியின் கையால் பரிசு வாங்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

பாட்டுத்தலைவன் கையால் பரிசு வாங்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

இவர்கள் தங்கள் தகவல்களைத் தர வேண்டிய முகவரி:

எண், 10, நாவலர் நெடும்பாதை,
தேவராஜ் நகர்
சாலிகிராமம், சென்னை 93
தொலைபேசி எண் 044- 43331050

 

ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல! - ராய் லட்சுமி

ஆபாச வீடியோவில் உள்ள பெண் நான் அல்ல என்று நடிகை ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையதளங்களில் நடிகை ராய் லட்சுமியின் ஆபாச வீடியோ என்று கூறப்படும் ஒளிப்படம் வெளியாகி வருகிறது. இதுகுறித்த செய்தி ஒன்றை, நடிகையின் பெயரைக் குறிப்பிடாமல் தமிழ் ஒன்இந்தியா நேற்று வெளியிட்டது நினைவிருக்கலாம்.

அந்தப் படத்தில் உள்ள பெண் பார்க்க ராய் லட்சுமியின் தோற்றத்தைப் போலவே காட்சியளித்ததால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல! - ராய் லட்சுமி

இதுகுறித்து ராய் லட்சுமியிடம் கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

"இப்படி ஒரு வீடியோ உலா வருவதாக எனது நண்பர்கள் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. ஒரு நடிகையாக இதுபோன்ற விஷயங்களை நான் எதிர்நோக்க வேண்டியுள்ளது", என்றார்.

இரு தினங்களுக்கு முன்பு சரிதா நாயரின் வீடியோ வாட்ஸ்ஆப்பில் உலா வந்தது. அதற்கு முன் ஷாரூக்கான் மகனின் ஆபாச வீடியோ வெளியானது நினைவிருக்கலாம்.

 

திருத்தப்பட்ட காட்சிகளுடன் தீபாவளி ரேசில் புலிப்பார்வையும் குதித்தது!

இந்த தீபாவளிக்கு கத்தி, பூஜை என இரு தமிழ்ப் படங்கள்தான் என்று கூறப்பட்ட நிலையில், சர்ச்சைக்குள்ளான புலிப்பார்வை படமும் இந்த ரேசில் குதித்தது.

வேந்தர் மூவீஸ் பாரிவேந்தர் தயாரிப்பில், பிரவீண் காந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புலிப் பார்வை.

ஈழப் போராட்டத்தைப் பின்னணிக் களமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை இதில் பதிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட காட்சிகளுடன் தீபாவளி ரேசில் புலிப்பார்வையும் குதித்தது!

ஆனால் படத்தின் புகைப்படங்களில் பாலச்சந்திரன் ஒரு சிறார் போராளியாகக் காட்டப்பட்டுள்ளதாகவும், படம் முழுக்க சிங்கள ராணுவத்துக்கு ஆதரவான கருத்துகள், காட்சிகள் உள்ளதாகவும் கூறி எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து தமிழீழ ஆதரவாளர்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகே அனுமதிக்க முடியும் என்று போராட்டங்கள் நடத்தினர். அதன்படி, பழ நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், மாணவர் அமைப்பினருக்கு இந்தப் படம் போட்டுக் காட்டப்பட்டது.

அப்போது படத்தில் பல காட்சிகளை மாற்ற வேண்டும், குறிப்பாக பாலச்சந்திரன் புலிகளின் சீருடையில் இருப்பது போன்ற காட்சியை மாற்ற வேண்டும் என்று கோரினர். உடனடியாக அதனை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய தயாரிப்பாளர் மதன், தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தக் காட்சியும் படத்தில் இருக்காது என உறுதியளித்தார்.

அதன்படி படத்தின் காட்சிகளை கடந்த சில தினங்களாக மாற்றியமைத்தனர். இப்போது படத்தை தீபாவளிக்கே வெளியிட முடிவு செய்து, விளம்பரங்களையும் ஆரம்பித்துள்ளனர்.

இப்போதைய நிலவரப்படி, கத்தி 400 அரங்குகளிலும், பூஜை 350 அரங்குகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலிப்பார்வையும் வெளியாவதால், அதற்கும் கணிசமான அரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர். புலிப்பார்வையின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ்தான் பூஜையை வெளியிடுகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

 

பி.கே. 'பப்ளிசிட்டி'க்காக இந்த ஆமீரும், அனுஷ்காவும் இப்படி கிளம்பிட்டாங்களே!

மும்பை: பி.கே. படத்தின் நான்காவது போஸ்டரில் தான் தெரிவித்தபடியே அனுஷ்கா ஷர்மா டிரான்சிஸ்டருன் போஸ் கொடுத்துள்ளார்.

ஆமீர் கான், அனுஷ்கா சர்மா நடித்து வரும் இந்தி படம் பி.கே. இந்த படத்தை பற்றி தான் மக்கள் அவ்வப்போது பேசி வருகின்றனர். காரணம் படத்தின் போஸ்டர்கள். முதல் போஸ்டரில் ஆமீர் நிர்வாணமாக போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பி.கே. 'பப்ளிசிட்டி'க்காக இந்த ஆமீரும், அனுஷ்காவும் இப்படி கிளம்பிட்டாங்களே!

அந்த போஸ்டரில் அவர் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு நிர்வாணமாக நின்றார். இதையடுத்து வந்த 2 போஸ்டர்களில் ஆடையுடன் வந்தார். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா தானும் ஆமீரை போன்று டிரான்சிஸ்டருடன் போஸ் கொடுப்பேன் என்று அறிவித்திருந்தார்.

பி.கே. 'பப்ளிசிட்டி'க்காக இந்த ஆமீரும், அனுஷ்காவும் இப்படி கிளம்பிட்டாங்களே!

அவர் அறிவிப்பை பார்த்தவர்கள் ஆமீருக்கு போட்டியாக அனுஷ்காவுமா நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறார் என்று தலையில் அடித்துக் கொண்டனர். இந்நிலையில் படத்தின் 4வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அனுஷ்கா காக்கி நிற ஆடை அணிந்து டிரான்சிஸ்டருடன் போஸ் கொடுத்துள்ளார்.

பி.கே. படத்திற்கு விளம்பரம் தேட இப்படி ஆமீரும், அனுஷ்காவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

யு.கே.: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 'கத்தி'யை தனியாக பார்க்க தடை

சென்னை: இங்கிலாந்தில் கத்தி படத்திற்கு 12ஏ சான்று கிடைத்துள்ளது. அதாவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படத்தை தனியாக பார்க்கக் கூடாது என்பது ஆகும்.

விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படம் தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளா மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள இங்கிலாந்திலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

இங்கிலாந்தில் விஜய்யின் கத்திக்கு '12ஏ': அப்படின்னா....

இங்கிலாந்தில் மொத்தம் 70 தியேட்டர்களில் கத்தி ரிலீஸாகிறது. இந்நிலையில் இங்கிலாந்து சென்சார் போர்டு கத்திக்கு 12ஏ சான்று கிடைத்துள்ளது. அதாவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையின்றி தனியாக படத்தை பார்க்கக் கூடாது.

படத்தில் ஓவராக ஆக்ஷன் காட்சிகளோ, வன்முறையோ இருந்தால் அதை 12 வயதுக்குடப்பட்ட குழந்தைகள் தனியாக பார்த்தால் அவர்களின் மனதை அது பாதிக்கும் என்று கருதுகிறது இங்கிலாந்து சென்சார் போர்டு.

இங்கு கத்தி படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.