த்ரிஷாவின் நாயகி முதல் பார்வை போஸ்டர் வெளியானது

சென்னை: நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன, இந்த 13 ஆண்டுகளில் சுமார் 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

சுந்தர்.சியின் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் அரண்மனை 2 திரைப்படம் த்ரிஷாவின் 50 வது படமாக அமைந்து இருக்கிறது, இதுவரை நடிகர்களின் காதலியாக நடித்து வந்த த்ரிஷா தற்போது முதன் முதலாக தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

Trisha's 'Nayaki' First Look Poster Revealed

நாயகி என்ற படத்தில் த்ரிஷா தற்போது நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார், இந்தப் படத்தில் த்ரிஷா 2 வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

2 வேடங்களில் ஒரு வேடத்தில் நடிகையாக நடிக்கிறார் மற்றொரு வேடம் பற்றி தெரியவில்லை, அதனை ரகசியமாக படப்பிடிப்புக் குழுவினர் வைத்திருக்கின்றனர்.

த்ரிஷாவின் ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க, இவர்களுடன் இணைந்து மனோபாலா, கோவை சரளா போன்றோர் நடிக்கவிருக்கின்றனர். காமெடி+ திகில் கலந்து உருவாகும் நாயகி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

Trisha's 'Nayaki' First Look Poster Revealed

ஆகஸ்ட் 20 ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தப் படத்தில் நடிப்பது பெருமையான விஷயம் என்றும் இது தனது வாழ்வின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் நாயகி திரைப்படம் உருவாகின்றது, அறிமுக இயக்குநர் கோவி இயக்கும் இந்தப் படத்திற்கு ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய ரகு குஞ்சே இசையமைக்கிறார்.

நாயகிக்கு(த்ரிஷா) ஏற்ற படம்தான்....

 

என் திருமணத்தை கடவுள் பார்த்துப்பார்!- ஆன்மீக சிம்பு

என் திருமணத்தை கடவுளிடம் விட்டுவிட்டேன். அவரக் பார்த்துக் கொள்வார் என்று நடிகர் சிம்பு கூறினார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு நடிப்பில் தற்போது ‘வாலு' படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிம்புவிடம், அவரது ஆன்மீக ஈடுபாடு, திருமணம் குறித்து கேட்கப்பட்டது.

God only decide my marriage, says Simbu

அதற்கு பதிலளித்த சிம்பு, "என்னுடைய திருமணத்தை நான் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டேன். இப்போதைக்கு படங்களில் நடிப்பது மட்டுமே எனது வேலை. மிச்சத்தை கடவுள் தீர்மானிப்பார்.

நான் வணங்கும் சிவன், சாய்பாபா என்னை வழி நடத்துவார்கள். இவர்களைத்தான் நான் தினமும் வணங்கி வருகிறேன். எனக்குக் கல்யாணத்தை எப்போ நடத்தணும்னு கடவுள் நினைக்கிறாரோ அன்றைக்கு அது நிச்சயமா நடக்கும்.

நான் அதைப் பத்தியெல்லாம் இப்போ யோசிச்சுக்கலை. இப்போ என்னுடைய முழு கவனமும் என்னுடைய அடுத்தடுத்த படங்கள் மீதுதான் உள்ளது," என்றார்.

 

இந்தப் 'புள்ளைக்கு' செல்பி புடிக்காதாமே!

ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி எல்லாரையும் தொற்றிக் கொண்டுள்ளது இன்றைக்கு செல்பி மோகம்.

நல்ல தரம் வாய்ந்த செல்போன்களில் விதம் விதமாக செல்பி எடுத் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Ileana hates taking selfie

ஆனால் நடிகை இலியானாவுக்கு செல்பியே பிடிக்காதாம்.

"கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். அடிக்கடி ‘செல்பி' எடுக்கும் கலாச்சாரம் வளர்ந்து விட்டது. எனக்கு ‘செல்பி' எடுப்பதே பிடிக்காது. அதற்கான ஆர்வமோ, பொறுமோ இல்லை.

யாராவது கட்டாயப்படுத்தினால் மறுக்க முடியாமல் ஒத்துக் கொள்கிறேனே தவிர இது வரை நானே விரும்பி ‘செல்பி' எடுத்தே இல்லை. சமீபத்தில் ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு சிறுமி செல்பி எடுத்ததை பார்த்தேன். இதற்காக கிட்டதிட்ட கால்மணி நேரம் ஒதுக்கினார். அதாவது வேஸ்ட் செய்தார். ஆச்சர்யமாக இருந்தது.

இந்த பொறுமையையும் நேரத்தையும் வேறு விஷயங்களுக்கு ஒதுக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைக்க தோன்றியது," என்றார்.

 

விஜய்யைச் சந்திப்பதைத் தவிர்த்த விஷால்!

தொழில் ரீதியான மோதல் காரணமாக நடிகர் விஜய்யைச் சந்திப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் நடிகர் விஷால்.

நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.

இதில், விஷால் தலைமையிலான அணியில் நாசர், பொன்வண்ணன், கருணாஸ், கார்த்தி, உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ரஜினி, கமலை நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர்.

Why Vishal avoids to meet Vijay?

விஜய்யுடன் சந்திப்பு

அடுத்து நடிகர் விஜய்யையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்தனர். விஜய், சென்னைக்கு அருகே உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார் என்று தெரிந்ததும், அவரை நேரில் சந்திக்க விஷால் குழுவினர் முடிவு செய்தனர்.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

அதன்படி படப்பிடிப்பு தளம் நோக்கி விஷால் குழுவினர் சென்றனர். விஜய் படப்பிடிப்பு தளத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதி கிடையாது என்பதால், பத்திரிகையாளர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

விஷால் வரவில்லை

விஷால் குழுவினர் விஜய்யைச் சந்தித்து விட்டு, பத்திரிகையாளர்களிடம் விஜய்யிடம் தங்களது அணிக்கு ஆதரவு கோரினோம் என்று தெரிவித்தனர். விஜய்யுடனான சந்திப்பின்போது விஷால் கலந்துகொள்ளாதது குறித்து, விஷால் குழுவினரிடம் கேட்டபோது, விஷாலுக்கு அந்த நேரத்தில் 'பாயும் புலி' படத்தின் டப்பிங் பணிகள் இருந்ததால் விஜய்யை சந்திக்க அவரால் வரமுடியவில்லை என்று கூறினார்.

தவிர்ப்பு

ஆனால், உண்மையில், விஜய்யை சந்திக்க விஷால் வேண்டுமென்றே தவிர்த்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால், அண்மை காலமாக விஜய்யுக்கும், விஷாலுக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்துகொண்டே இருக்கிறது.

மோதல்

கடந்த வருடம் விஜய்யின் 'கத்தி' படம் வெளிவந்தபோது விஷாலின் 'பூஜை' படம் அதற்கு போட்டியாக வந்தது. அதேபோல், சமீபத்தில் ஆகஸ்ட் 2-ந் தேதி விஜய்யின் ‘புலி' படத்தின் ஆடியோ வெளியானபோதுகூட, அதற்கு போட்டியாக விஷாலின் பாயும் புலி படத்தின் ஆடியோவும் வெளியிட்டதாக கூறப்பட்டது. புலி ரிலீசாகும் தேதியிலேயே பாயும் புலியும் வெளியாகிறது.

 

நடிகர் சங்கத் தேர்தலில் என் ஆதரவு சரத்குமார் அணிக்குதான்!- சிம்பு அதிரடி

நடிகர் சங்கத் தேர்தலில் என் ஆதரவு சரத்குமார், ராதாரவி அணிக்குத்தான் என்று அறிவித்துள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கவிருக்கிறது. பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்தத் தேர்தலில் இப்போது பதவியில் உள்ள சரத்குமார் அணி போட்டியிடுகிறது.

Simbu openly supports Sarathkumar team

இவர்களுக்கு எதிராக விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் அடங்கிய புதிய அணி களமிறங்கியுள்ளது. சரத்குமார் அணிக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் செய்துவரும் இவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்டோரைப் பார்த்து ஆதரவு கேட்டு வருகின்றனர். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவையும் பார்க்கப் போகிறார்களாம்.

இந்த நிலையில் நேற்று வாலு பட வெற்றி சந்திப்பில் நடிகர் சிம்புவிடம் நடிகர் சங்கத் தேர்தலில் அவரது ஆதரவு யாருக்கு என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிம்பு, "நான் விஜய்காந்த் தலைவராக இருந்தபோதிலிருந்து உறுப்பினராக இருக்கிறேன். இப்பொழுது நடக்கும் தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு என்று ஏதும் கிடையாது. சரத்குமாருக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. அவர்கள் தான் நடிகர் சங்கத்திற்காக அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் விஷால், விஷ்ணு, கார்த்தி ஆகியோர் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் என்னுடைய நல்ல நண்பர்கள். இப்போதும் பேசிக் கொண்டு இருக்கிறோம். தேர்தல் வரைதான் அணிகள். தேர்தலுக்குப் பிறகு அணிகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்..," என்றார்.

 

கபாலி தலைப்பு பிரச்சினை... சீக்கிரம் சரி செஞ்சுடுவோம்! - கலைப்புலி தாணு

கபாலி படத் தலைப்பு பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

படத் தலைப்பு கபாலி என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதே தலைப்பில் வேறு ஒரு படம் உருவாகிக் கொண்டிருப்பதும், அண்மையில்தான் அதன் பாடல் வெளியீடு கூட நடந்தது என்ற தகவலும் வெளியாகின.

Kabali titler issue will be solved, says Thaanu

இது படக்குழு மற்றும் ரஜினி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. கபாலி என்ற தலைப்பை முழுமையாகக் கொண்டாட முடியவில்லையே என ஆதங்கப்பட்டனர் ரசிகர்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள தாணுவின் படத்துக்கே இப்படி தலைப்பு பிரச்சினை வரலாமா? தயாரிப்பாளர் சங்க லிஸ்டில் சரி பார்க்காமல் போனது எப்படி என்று திரையுலகினர் கேட்கிறார்கள்.

இன்னொன்று, ரஜினியின் 40 ஆண்டு திரை வாழ்க்கையில் தலைப்புப் பிரச்சினை என்று வந்ததே இல்லை.

இதைப் பற்றி கலைப்புலிதாணுவிடம் கேட்டபோது, "எங்கள் படத்துக்கு கபாலி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தவுடன், தயாரிப்பாளர்கள் சங்கம், சேம்பர், கில்டு ஆகிய எல்லா இடங்களிலும் விசாரித்துப் பார்த்தோம். ஓப்பனாகத்தான் இருந்தது. அதனால் நாங்கள் வைத்துவிட்டோம்.

அதன் பின்னர்தான் இப்படி ஒருபடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் இதுவரை அந்தப் படம் சம்பந்தப்பட்ட யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அந்தத் தலைப்பை அவர்கள் புதுப்பிக்காமல் விட்டதால்தான் ஓப்பனாக இருந்திருக்கிறது. எங்கள் பக்கம் தவறு இல்லை என்றாலும் இப்படி நடந்தது வருத்தத்துக்குரிய விசயம்தான். விரைவில் சரி செய்துவிடுவோம்," என்றார்.

 

நடு ராத்திரியில் வெளியே வரும் புலி.. டிரெய்லர் அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்ட சோனி

சென்னை: விஜய் ரசிகர்களுக்கு ஒரு அன்பான செய்தி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது.அனைவரும் கண்டு மகிழுங்கள் என்று சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பைப் பெற்றதுடன் பல புதிய வரலாறுகளையும் படைத்தது.

அடுத்ததாக புலி படத்தின் டிரைலரை 20 ம் தேதியில் வெளியிடுகிறோம் என்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

விஜயின் அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்தது, இதனைத் தொடர்ந்து தற்போது புலி படத்தின் டிரைலரை இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிடுவதாக சோனி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


இதனால் மகிழ்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது இந்த செய்தியை தீயாய் பரப்பி வருகின்றனர், தீயா வேலை செய்யணும் பசங்களா....

 

ஹிருத்திக் ரோஷனுடன் டின்னர் சாப்பிட 15 ஆண்டுகள்... கோலாவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பெண்

சண்டிகர்: சண்டிகரைச் சேர்ந்த ஷிகா மொங்கா என்ற 34 வயதுப் பெண் கொக்க கோலா நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாக, வழக்கொன்றை அந்த நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்திருக்கிறார்.

அதாவது அந்த நிறுவனம் 2௦௦௦ ம் ஆண்டில் போட்டி ஒன்றை அறிவித்து இருந்தது, அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகள் பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக்ரோஷனுடன் இணைந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று கூறியது.

Girl Waits for Dinner Date With Hrithik Roshan Waiting More Than 15 Years

இதனால் ஆர்வம் கொண்ட ஷிகா மொங்கா அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார், ஆனால் சொன்னபடி ஹிருத்திக் ரோஷனுடன் இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பை ஷிகாவிற்கு கொக்க கோலா ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

2 வருடங்கள் பொறுத்துப் பார்த்த ஷிகா 2003 ம் ஆண்டில் கொக்க கோலா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார், இதனால் அதிர்ந்து போன கோலா நிறுவனம் ஷிகாவிற்கு சுமார் 5 லட்சங்களை நஷ்ட ஈடாக வழங்க முன்வந்தது.

ஆனால் ஷிகா அதனை ஏற்க மறுத்து விட்டார், சண்டிகர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு வருகின்ற 24 (ஆகஸ்ட்) ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கின்றது.

வழக்கில் ஷிகாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில், ஷிகா கோலா நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடாக சுமார் 2.5 கோடி வரை பெற வாய்ப்புள்ளது.

ஒரு பெரிய வணிக ஊழலை ஷிகா துணிந்து அம்பலப்படுத்தி இருக்கிறார், இதற்காக அவர் நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டிய கட்டணத் தொகையான 2.43 லட்சங்களை தள்ளுபடி செய்யவும் நீதிமன்றம் தீர்மானித்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

வழக்கில் கோலாவிற்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் கோலாவின் சந்தை மதிப்புகள் மற்றும் நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவை சரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தற்பொழுது மொகஞ்சதாரோ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்து வரும் நடிகர் ஹிருத்திக்ரோஷன் இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகாவின் 20 வயதில் இந்தப் போட்டியில் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார், ஆனால் 15 வருடங்கள் கடந்தும் ஹிருத்திக் ரோஷனுடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பை கோலா நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

ஒரு டின்னருக்கு 15 வருடங்கள் என்பதெல்லாம் ரொம்பவே அதிகம் தான்.

 

சம்பளம் என்னாச்சுப்பா.. தலையெழுத்தை நினைத்துப் புலம்பும் 2 எழுத்து படக் குழுவினர்!

சென்னை: தமிழ்நாட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த இரண்டெழுத்துப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, அடுத்த மாதம் படமே வெளியாகப் போகின்றது.

ஆனால் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறிய நடிகர்களுக்கு இன்னும் சம்பளம் முழுவதுமாக வழங்கப் படவில்லையாம்.

பலமுறை சம்பளத்தைக் கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்களாம், மிகவும் வலியுறுத்திக் கேட்கிறவர்களுக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விரைவில் இன்னொரு படத்தைத் தொடங்கவிருக்கிறார். அந்தப்படத்தில் உங்களுக்கு வேலை இருக்காது என்று பதில் வருகிறதாம்.

இதனால் படத்தில் பணியாற்றியவர்கள் வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் மெல்லவும் முடியாமல் இரண்டிற்கும் இடையில் கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இத்தனைக்கும் பெரிய பட்ஜெட்டில் தான் படத்தை எடுத்திருக்கின்றனர், விளம்பரங்கள் போன்றவற்றிற்கு ஏகப்பட்ட செலவுகளையும் செய்து வருகின்றனர்.

ஆனால் கஷ்டப்பட்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பாக்கியை செட்டில் செய்ய மனம் வரவில்லையே, தெரியாமலா சொன்னார்கள் சினிமா ஒரு கனவுலகம் என்று.

 

காதல் என்பது மனசுக்குள் பூக்கும் பூ... : இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ்க்ளுசிவ் இன்டர்வியூ

"பிளாஸ்டிக் கத்தியை
காட்டி மிரட்டுகிறாள்
அறுவை சிகிச்சையில் பிறந்த
அன்பு மகள்"
என்று டுவிட்டரில் ஹைகூ எழுதும் சீனு ராமசாமியின் ஒவ்வொரு நொடியும் கவிதைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவர் எழுதும் கவிதைகளைப் போலவே அவரது திரைப்படங்களும் கவித்துவமாக இருக்கிறது.

ராமேஸ்வரம் கடலைப் பார்த்து
சதா குறைத்துக்கொண்டிருக்கிறது
ஒரு எல்லையோர நாய்
ஒரு வேளை அதன்
ஒளிரும் கண்களுக்குத்
தெரிந்திருக்கக் கூடும்
வசிப்பிடமின்றிக் கடலில் அலைந்து
கொண்டிருக்கும் உருவமற்ற
எம் மக்களை!

இது இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை... ‘காற்றால் நடந்தேன்' கவிதைத் தொகுப்பில் இதைப்போல பலவித உணர்வுகளை கொட்டியிருக்கிறார் சீனு ராமசாமி.

Love is a flower in blossom, says Seenu Ramasamy

முதல்படமான கூடல்நகர் படம் பார்த்த போதே திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை சீனு ராமசாமியை விட இத்தனை அழகாய் யாராலும் கொண்டு வந்திருக்க முடியாது என்று நினைத்தேன். ஏனெனில் ஒவ்வொரு பாறையாக அந்த மலையை ரசித்தவர்களால் மட்டுமே திரையில் அதை கொண்டுவர முடியும். நான் நினைத்தது போலவே சீனு ராமசாமி தினந்தோறும் திருப்பரங்குன்றம் மலையை பார்த்து ரசித்து வளர்ந்த திருநகரத்துக்காரர்.

தென்மேற்கு பருவக்காற்று பார்த்த போதே விஜய் சேதுபதியை ரொம்பவே பிடித்து போக, கிராமத்து இளம்பெண்ணாய் வளைய வந்த வசுந்தராவின் அழகும் அப்படியே மனதில் பதிந்து போனது. புழுதிக்காட்டு காதலை படம் பிடித்து தேசிய விருதை பெற்றுத் தந்தவர் சீனு ராமசாமி.

நீர்பறவை படத்தில் கடலின் அழகும்... அதைவிட கதையின் நாயகி சுனைனாவின் அழகும் மனதில் பதிந்து போனது. ரசிகன்டா... ராமசாமி என்று ஒரு நொடி மனதில் வந்து போனது. ஒரு கவிஞனால் மட்டுமே இப்படி ரசனையாய் படமெடுக்க முடியும் என்று எண்ணத் தோன்றியது.

சினிமா துறைக்கு வந்து எட்டு ஆண்டுகளில் நான்கு படங்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார், ஆனாலும் அவரது கதைக்களங்கள் காற்று, கடல், நிலம் என ரசனையாக இருக்கிறது. தன்னுடைய சினிமா உலக பயணம் பற்றியும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தைப்பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

நாம்: சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை எப்படி தோன்றியது?

சீனு ராமசாமி: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி தாய் கிராமம். வளர்ந்தது, படித்தது எல்லாமே திருநகரில்தான். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் படிப்பு முடிந்த உடன் பாலுமகேந்திராவின் திரைப்படங்களினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதம் எழுதி மாணவனாக இணைந்தேன். அதுவே ஒரு சுவாரஸ்யமான கதை. பாலுமகேந்திராவிற்கு நான் எழுதிய முதல் கடிதத்திற்கு பதில் வராமல் போகவே, அதையே ஜெராக்ஸ் எடுத்து மீண்டும் அனுப்பினேன். நீங்கள் பதில் அனுப்பும் வரை இதையேதான் மீண்டும் மீண்டும் அனுப்புவேன் என்று எழுதியதைப் பார்த்து எனக்கு பாலுமகேந்திரா பதில் எழுதினார். அவரிடம் சினிமாவை கற்றுக்கொண்டேன். சீமான் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து 2007ம் ஆண்டு கூடல்நகர் படத்தை முதன் முறையாக இயக்கினேன். 8 ஆண்டுகளில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல் என மொத்தம் நான்கு படங்கள் இயக்கியிருக்கிறேன்.

நாம்: உங்களின் முந்தைய இருபடங்களில் நடித்த விஜய் சேதுபதி, விஷ்ணுவை இடம் பொருள் ஏவல் படத்தில் மீண்டும் தேர்வு செய்தது ஏன்? கதை எழுதும் போதே கதை நாயகர்களை முடிவு செய்து விடுவீர்களா?

சீனு ராமசாமி: கதை எழுதி முடித்த பின்னர்தான் கதாநாயகர்களைத் தேடுவேன். நாயகருக்காக கதை உருவாக்குவது ஒருவகை. அது கடினம். நான் தன்னியல்பாக கதையை உருவாக்குகிறேன் அதன்பின்னர் கதாபாத்திரங்களை தேடிப்போகிறேன் விஜய் சேதுபதியும், விஷ்ணுவும், என் கதைக்கான நாயகர்களாக பொருந்தி போகிறார்கள்.

நாம்: கவர்ச்சி நாயகிகளை நம்பும் இயக்குநர்கள் மத்தியில் கதைக்கேற்ப சந்தியா, வசுந்தரா, சுனைனா, நந்திதா தாஸ், ஐஸ்வர்யா ராஜேஸ், நந்திதா என நாயகிகளை தேர்வு செய்வதன் பின்னணி என்ன?

சீனு ராமசாமி: என்னுடைய திரைப்படங்களில் ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக பெண் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். தெற்கு பகுதியில் வசிக்கிற, திராவிட முகங்களாக பொருந்தி போகிற நாயகிகளாக நான் தேடுகிறேன். பக்கத்து வீட்டுப்பெண்கள் போல அனைவராலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவன் நான். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கிற படங்களைத்தான் நான் இயக்குகிறேன் எனக்கு கவர்ச்சிகரமான நடிகைகள் தேவையில்லை.

நாம்: உங்களின் ‘காற்றால் நடந்தேன்' கவிதைத்தொகுப்பை வாசித்திருக்கிறோம்... அவ்வப்போது டுவிட்டர் வலைத்தளத்தில் உங்களின் ஹைகூவை வாசித்திருக்கிறோம். உங்களுக்குள் ஒரு கவிஞர் உருவானது எப்படி?

சீனு ராமசாமி: பள்ளியில் படிக்கும் போதிருந்தே சுப்ரமணியபாரதியார் கவிதைகளை படித்து வளர்ந்தவன் நான். அடிப்படையில் நான் ஒரு கவிஞன், பின்னர்தான் இயக்குநராக உருவானேன். எனக்குள் ஒரு கவித்துவமான மனநிலை இருந்துகொண்டே இருக்கும். நான் ஒவ்வொரு நொடியும் கவிதைகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதை அவ்வப்போது பதிவு செய்கிறேன்.

நாம்: கவிதைகள் எழுதும் சீனு ராமசாமி உங்களின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதலாமே?

சீனு ராமசாமி: திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது பனியில் சிற்பம் செதுக்குவதைப்போல கடினமானது. அதற்கு இசைஞானம் அவசியம். கவிதை எழுதுவது வேறு, ஆனால் பாடல்கள் எழுதுவது சுமையான விசயம். என்னைவிட பாடல்கள் எழுதுபவர்கள் இருக்கையில் எனக்கும் எழுதத்தெரியும் என்பதற்காக எழுதக்கூடாது.

நாம்: உங்களின் முந்தைய படமான நீர்பறவையைப் போல இடம் பொருள் ஏவல் படத்திற்கு ஒருவித பரபரப்பு இல்லையே ஏன்?

சீனு ராமசாமி: நீர்பறவை படம் மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தியது. அது உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம். அரசியல் பின்னணி இருந்த படம் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது இடம் பொருள் ஏவல் தென்றலைப் போல தாலாட்டும்.

நாம்: இடம் பொருள் ஏவல் திரைப்படம் எப்படி?

சீனு ராமசாமி: என்னை நம்பி வரும் ரசிகர்களை சோர்வடைய வைக்காது. உன்னதமான விசயங்களை உணரவைக்கும். இந்தப்படத்தில் 5 முக்கிய கதாபாத்திரங்களை சொல்லியிருக்கிறேன். விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. மலை கிராமத்துப் பெண் வெண்மணியாவே நந்திதாவைப் பார்க்கலாம். பட்டிமன்றப் பேச்சாளர் கலைச்செல்வி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா பேசுற ஒவ்வொரு வசனமும் பெண்களைக் கேவலமா பார்க்கிற ஆண்கள் மனசை அசைக்கும். விஜய் சேதுபதியை வளர்ப்பு மகனாகப் பார்க்கும் தாயின் தவிப்பில் வடிவுக்கரசி நடிச்சிருக்கார். முதல்மரியாதை படத்திற்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று வடிவுக்கரசியே சொல்லியிருக்கிறார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பட்டிமன்ற நடுவராகவே வர்றார். அழகம்பெருமாள், இளவரசு, தீப்பெட்டி கணேசன், பால சரவணன்னு பெரிய குழுவே நடிச்சிருக்காங்க.

நாம்: உங்களின் படங்களில் அம்மா கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறீர்களே?

சீனு ராமசாமி: அம்மாதான் நம் ஒவ்வொருவருக்கும் அடிப்படை. ஆனால் அம்மாவை யாரும் கவனிப்பதில்லை. நம்மை விட்டு போனபின்னர்தான் நாம் ஒவ்வொருவரும் அம்மாவை கவனிக்க ஆரம்பிக்கிறோம். என்னுடைய படங்களில் அம்மாவைப் பற்றிய பாத்திரப்படைப்பு சற்றே அதிகமாக இருப்பது உண்மைதான். நம்முடைய நன்றி உணர்வை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

நாம்: யுவன் சங்கர் ராஜாவை பற்றி?

ஒரு இசையமைப்பாளராக எனக்கு அறிமுகமாகி ஒரு சகோதரனாக மாறியவர் யுவன் சங்கர் ராஜா. அதிகம் பேசமாட்டார் அமைதியானவர். 100 படங்களுக்கு இசையமைத்திருக்கிறோம் என்ற கர்வம் துளிகூட கிடையாது. மனதை லேசாக்கும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார்.

நாம்: வைரமுத்துவை நீங்கள் தேர்வு செய்வது ஏன்?

கவிப்பேரரசு வைரமுத்து தென்மாவட்டத்துக்காரர். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் இருந்தே ஒருவித அழுத்தமான பாடல்களை என்னுடைய படங்களில் பதிவு செய்து வருகிறார். இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட எளியவனான எனக்கு தருகிறார். அவருடன் பணிபுரிவது நம்ம ஊர் விவசாயியுடன் பணிபுரிவதைப்போல ஒரு ஆத்ம திருப்தியைத் தருகிறது.

நாம்: உங்களின் படங்களில் காதல் டூயட், வெளிநாடுகளில் பாடல்காட்சிகள் எதுவும் இடம்பெறுவதில்லையே?

சீனு ராமசாமி: காதல் என்பது இரண்டு மனசுக்குள் நடக்கிற விசயம். இதற்கு வெளியில் எதற்கு குத்தாட்டம் போடவேண்டும்? வெளிநாட்டில் போய் குதியாட்டம் போடவேண்டும்?

நாம்: உங்களின் ஆதர்ஷ இயக்குநர்களைப் பற்றி சொல்லுங்களேன்?

சீனு ராமசாமி: பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலச்சந்தர் என தமிழ் சினிமாவில் என்னுடைய ஆதர்ஷ இயக்குநர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு பலரும் சத்யஜித்ரே வழித்தோன்றல்கள்தான். பரதன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்களும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

நாம்: எட்டு ஆண்டுகளில் நான்கு படங்களை மட்டுமே இயக்க முடிந்திருக்கிறது என்று எப்போதாவது நினைத்தது உண்டா?

சீனு ராமசாமி: நிதர்சனமான உண்மையை சொல்லவேண்டுமானால் கலைப்படங்களுக்கான காலம் இதுவல்ல. 80களைப்போல இப்போது வாய்ப்புகள் இல்லை. திரைப்படங்களுக்கான இப்போதைய வியாபார சூழல் வேறு தயாரிப்பாளரை தேடி பிடித்து படத்தை இயக்குவதற்குள் இந்த கால இடைவெளி ஏற்படுவது இயல்புதான். என்னைப் பொருத்தவரை படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல நல்ல படங்களைக் கொடுத்தோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.

 

இளையராஜா இசையில் தேசிய கீதம் ஆல்பம்... விரைவில் ஷூட்டிங்!

இளையராஜா இசையில் அமிதாப் பாடவிருக்கும் தேசிய கீதம் ஆல்பத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வு எடுத்தார். மேலும் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். என்றாலும், நேற்று மாலை வீடு திரும்பினார்.

Ilaiyaraaja starts National Anthem album work

வீட்டுக்கு வந்த சில மணி நேரத்திலேயே பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அவரது ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்றார். அங்கு ‘குற்றமே தண்டனை' என்ற படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கினார்.

பாடலே இல்லாமல் உருவாகும் இந்த படத்தில் பின்னணி இசையே பிரதானம். எனவே அவர் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தனர்.

இது தவிர ‘ஒரு மெல்லிய கோடு', ‘கட்டம் போட்ட சட்டை' போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

அடுத்து அகில இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘தேசிய கீதம்' ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளையும் இளையராஜா தொடங்கி இருக்கிறார்.

அமிதாப்பச்சன் நடித்து குரல் கொடுக்கும் இந்த ஆல்பத்தை பால்கி இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டின் போதே இதனை இளையராஜாவும் பால்கியும் அறிவித்தது நினைவிருக்கலாம்.

 

மணிரத்னம், ரசிகர்களை கோமாளி ஆக்காமலிருந்தால் சரி!

ஓ காதல் கண்மணி கொடுத்த தெம்பில் ரொம்பவே உற்சாகமாக உள்ள மணிரத்னம், தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

இந்தப் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் நாயகர்களாக நடிப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறாராம்.

Is Manirathnam's next title 'Komali'?

இவை அனைத்துமே ஹேஷ்யங்களாக வந்தவைதான். மணிரத்னமோ அவர் அலுவலகமோ எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாகக் கொடுக்கவில்லை. அது அவர்கள் வழக்கமும் இல்லை.

மணிரத்னம் படத்தைப் பொருத்தவரை, காற்றுவாக்கில் வருவது போலத்தான் செய்திகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் கடைசியில் அவையெல்லாம் உண்மையாகவே இருக்கும்.

இந்த நிலையில் அவர் படத்தின் தலைப்பு கோமாளி என்று ஒரு செய்தி நேற்று கசிந்தது. உடனே அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார் மணிரத்னம்.

"இது முற்றிலும் தவறான செய்தி, எப்படி இந்தப்பெயர் வந்ததென்று தெரியவில்லை என்று ஆச்சரியப்படுவதோடு, படத்தின் பெயர் மற்றும் நடிகர்கள் பற்றி நாங்களே அறிவிப்போம்!" என்று கூறியுள்ளார் அவர்.

ஆனால் உண்மையில் கோமாளி என்ற தலைப்பை மணிரத்னம்தான் சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளாராம்!