கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களின் ஒளிப்பதிவாளர் ஏ சபாபதி மரணம்!

எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் சூப்பர் ஹிட்டான பல படங்களின் ஒளிப்பதிவாளர் ஏ சபாபதி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 50.

உணவு ஒவ்வாமை மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.

மணிவண்ணன் இயக்கிய 40 படங்களுக்கும் மேல் சபாபதிதான் ஒளிப்பதிவு செய்தார். கங்கை அமரனின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு சபாபதிதான். அவற்றில் கரகாட்டக்காரன் குறிப்பிடத்தக்க படமாகும்.

இளம் வயதிலேயே கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சபாபதி.

 

தீபாவளிக்கு வருகிறது கும்கி

Kumki release on deepavali

'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கி உள்ள படம் 'கும்கி'. பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து உள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளது. இமான் இசை. யுகபாரதி பாடல்கள். சுகுமார் ஒளிப்பதிவு. இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. இதனையடுத்து, படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
 

வீட்டை விட்டு ஓடி... ரயில்வே ஸ்டேஷனில் உணவு தண்ணீரின்றி மயங்கிவிழுந்த நடிகை!

Actress Divya Depression

வீட்டில் கொடுமை தாங்காமல் வெளியேறிய தெலுங்கு நடிகை திவ்யா, ரயில் நிலையத்தில் உணவு தண்ணீரின்றி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தெலுங்கில் ஒக ரொமான்டிக் க்ரைம் கதா படத்தில் கவர்ச்சியாக நடித்தவர் திவ்யா. இந்தப் ப டம் அங்கே பெரிய வெற்றியைப் பெற்றது.

சினிமாவில் ஜெயித்தாலும் வீட்டில் பல தொல்லைகளுக்கு ஆளாகிவந்தார் திவ்யா. அவர் சொத்துக்களை உறவினர்கள் அபகரித்துக் கொள்ள, சொந்த சித்தப்பாவே ஏகப்பட்ட கொடுமைகளை செய்து வந்தாராம். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல், வீட்டை விட்டே ஓடிவிட்டாராம் திவ்யா.

அப்படி ஓடியவர், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கிறார். அங்கே சாப்பாடு தண்ணீர் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டவர், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார்.

அவரைப் பின்னர் அடையாளம் தெரிந்து கொண்ட சிலர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனிருக்கும் திவ்யாவின் அம்மா, "இனி என் மகள் மனசு கெடாமல் பாத்துக்கறோம்...," என்று சொல்லி வருகிறாராம்.

 

இங்கிலீஷ் விங்கிலீஷ்... பாராட்டு குவியுது... தியேட்டர்களோ டல்லடிக்குது!

நல்ல படம் என்ற பாராட்டைப் பெற்றாலும் ஸ்ரீதேவி நடித்த english vinglish disappoints at the bo   

Close
 

மும்பை மற்றும் வட இந்தியாவில் இந்தப் படத்துக்கு பகல் காட்சிகளில் 20 சதவீத கூட்டமும், மாலை மற்றும் இரவுக் காட்சிகளுக்கு 35 சதவீத கூட்டமும் மட்டுமே வருகிறதாம்.

மல்டிப்ளெக்ஸ்களில் ஓரளவு வசூல் உள்ளதாம். ஆனால் சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் ஒற்றைத் திரையரங்குகளில் நிலைமை படுமோசமாக உள்ளதாம்.

தமிழைப் பொருத்தவரை நகர்ப்புறங்களில் மட்டும்தான் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் சிறப்பாக இருந்தாலும், படத்தைக் காப்பாற்றுவது சில நிமிடங்கள் மட்டுமே வரும் அஜீத்தான்.

படத்தின் பெரிய ஹீரோ இல்லாத குறையை அவரின் சில நிமிட தோற்றம் ஈடுகட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தல தளபதி ரசிகராக சூர்யா

ThalaThalapathy fan in Maatraan

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மாற்றான் படம் வருகிற 14ந் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தை பற்றி சில சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளன. படத்தின் டிரைலரில், இரட்டையரில் ஒருவர் தல நடித்துள்ள மங்காத்தா படத்தை பார்க்க வேண்டும் என்றும், மற்றொருவர் தளபதியின் நண்பன் படத்தை பார்க்க வேண்டும் என்றும் சண்டையிட்டுக் கொண்ட காட்சி இடம்பெற்றுள்ளது.
 

நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை

Rajinikanth donated 10 Crore

மந்திராலயம் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளார். மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த், இக்கோயிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவசெட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை மூலம் மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

பத்ம விருது பரிந்துரை பட்டியலில் ஸ்ரீதேவி

Sridevi in Padma award recommendation list

ஸ்ரீதேவி தற்போது இரட்டை சந்தோஷத்தில் உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ள ஸ்ரீதேவியின் பெயரை, மகாராஷ்டிர அரச பத்ம விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து படத்தின் வெற்றிக்கு துணையாக இருந்து அனைவருக்கும் ஸ்ரீதேவி நன்றி தெரிவித்துள்ளார்.
 

இன்னும் ஷூட்டிங் முடியவில்லை : கௌதம்

scenes are yet to be shot in NEP

இசைஞானி இளையராஜாவின் இசையில் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் ஹிட்டான பிறகு, ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்று இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார். இன்னும் ஜீவா மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்க கட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கௌதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வாசகர்களின் திட்டுக்களைப் படித்து தன்னை தானே தண்டித்துக் கொள்ளும் நடிகை!

Kristen Stewart Punishing Herself

லண்டன்: நடிகை கிறிஸ்டன் ஸ்டூவர்ட், தன்னைத் திட்டியும், கடுமையாக விமர்சித்தும் எழுதப்பட்ட கமெண்டுகளைத் தேடிப் பிடித்துப் படித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறாராம்.

படு அழகான நடிகை கிறிஸ்டன் ஸ்டூவர்ட். இவரது காதலர் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். இவர்களின் காதல் வாழ்க்கை ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தபோது திடீரென இயக்குநர் ரூபர்ட் சாண்டர்ஸுடன் ரகசிய உறவு கொண்டு பாட்டின்சனுக்கு அதிர்ச்சி அளித்தார் கிறிஸ்டன்.

இதனால் பாட்டின்சன், கிறிஸ்டன் ஜோடி பிரிந்தது. இருப்பினும் மின்னல் வேகத்தில் இருவரும் சமாதானமாகி இப்போது ஒன்று சேர்ந்து விட்டனர். ஆனால் பாட்டின்சனை பிரிந்திருந்த காலத்தில் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார் கிறிஸ்டன். இதனால் அவர் தன்னைப் பற்றி இணையதளங்களில் வெளியான செய்திகளில், வாசகர்கள் தன்னைத் திட்டியும், விமர்சித்தும் எழுதிய கமெண்டுகளைத் தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தார். இதை ஒரு வகை தண்டனையாக அவர் கூறிக் கொண்டார்.

தான் செய்த தவறுக்காக இதை ஒரு தண்டனை போல நினைப்பதாக அவர் கூறி வந்தார். இப்போது காதலருடன் இணைந்த பிறகும் கூட இந்த கமெண்ட் படிப்பதை அவர் நிறுத்தவில்லையாம். இதனால் பாட்டின்சன் கவலை அடைந்துள்ளார். அதுதான் திரும்பச் சேர்ந்து விட்டோமே, பிறகெதற்கு தண்டனை என்று கூறி கிறிஸ்டனை அவர் சமாதானப்படுத்தியுள்ளாராம்.

இருந்தாலும் கிறிஸ்டனின் மனு ஆறவில்லையாம். நான் செய்த தவறுக்கு இதுதான் சரியான தண்டனை என்று தொடர்ந்து படித்து வருகிறாராம்...

 

எனக்கு சுஜிபாலா வேணாம்... கல்யாணம் கேன்சல்! - மீண்டும் முறுக்கிக் கொண்ட இயக்குநர்

New Director Cancels His Marriage With Sujibala

சென்னை: நடிகை சுஜிபாலா எனக்கு வேண்டாம்... திருமணத்தை ரத்து செய்கிறேன் என்று அறிமுக இயக்குநர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

'உண்மை' என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

பிறகு இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் இதை மறுத்து சுஜிபாலா, நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாரை திருமணம் செய்வேன் என்றார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் உள்ள சுஜிபாலா வீட்டுக்கு ரவிக்குமார் திடீரென்று சென்றார். அப்போது சுஜிபாலாவுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டதாம்.

திருமணத்துக்கு மறுத்ததுடன் சுஜிபாலைவை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில் இயக்குனர் பி.ரவிக்குமார் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் ரத்தாகிவிட்டதாக கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டோம். திருமணம் ரத்தாகிவிட்டது. இனி எனக்கும் சுஜிபாலாவுக்கும் எந்த உறவோ தொடர்போ இல்லை," என்றார்.

 

விஜய் டிவியின் வழக்கு எண் 18/9 மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்

 

டென்ஷனா இருந்தா 'செக்ஸ்' வச்சுக்குவேன்.. காஷ்மீரா ஷா அதிரடி!

Actress Kashmera Shah Says Ide Stress Myself Having Sex   

மும்பை: எனக்கு டென்ஷன் அதிகமானா, மனச் சோர்வு ஏற்பட்டா உடனே செக்ஸ் வச்சுக்குவேன். அதன் பிறகு மனசும், உடம்பும் லேசாயிடும் என்று கூறியுள்ளார் பாலிவுட் கவர்ச்சி நடிகை காஷ்மீரா ஷா.

தெலுங்கு சினிமாவைக் கலக்கிய கவர்ச்சி நடிகை காஷ்மீரா ஷா. இப்போது பாலிவுட்டில் மையம் கொண்டுள்ள இந்தக் கவர்ச்சிப் புயல் படு வெளிப்படையாக பேசக் கூடியவர்.

செக்ஸ் குறித்து அவர் கூறுகையில், எனக்கு நேரம் காலம், மன நிலை என்றெல்லாம் இல்லை. தோ்ணும்போது வைத்துக் கொள்வேன். குறிப்பாக மன அழுத்தம், டென்ஷன், சோர்வு ஏற்படும்போது தவறாமல் வைத்துக் கொள்வேன்.

பிறகு எதுக்கு பாய் பிரண்ட். எனது பாய் பிரண்ட் நான் எப்போது கூப்பிட்டாலும் வருவார். அவருடன் உறவு கொள்வதன் மூலம் என்னைப் புதுப்பித்துக் கொள்வேன். படுக்கை அறையில் ஒருவர் சந்தோஷமடைந்தால், அவர் எல்லாக் காரியங்களிலும் வெற்றிகரமாக திகழ முடியும். இது எனது அனுபவம்
என்று கூறுகிறார் காஷ்மீரா .

மேலும் அவர் கூறுகையில், எனக்கு 20 வயது இருக்கும்போதே நான் கன்னித்தன்மையை இழந்து விட்டேன். அதற்காக நான் வருத்தமெல்லாம் படவில்லை. அது இயற்கையானதுதான். என்னுடன் முதல் முறை உறவு வைத்துக் கொண்டவர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் இல்லை என்று அதிரடியாக பேசுகிறார் காஷ்மீரா.

காஷ்மீரா கடந்த 6 வருடங்களாக கிருஷ்ணா என்பவருடன் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வாழ்க்கை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'பிக் பாஸ் 6': எபிசோடுக்கு ரூ.4 கோடி வாங்கும் சல்மான் கான்

Bigg Boss 6 Salman Khan Becomes Highest Paid Tv Actor

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சல்மான்கானுக்கு ஒரு எபிசோடுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசனில் ஒரு கோடி ரூபாய் அதிகமாம்.

அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் சின்னத்திரை தொகுப்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். நிகழ்ச்சி பிரபலமடைகிறதோ இல்லையோ நடிகர்களின் காட்டில் பணமழைதான். ஒரு எபிசோடுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். பிக் பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு ஒரு எபிசோடுக்கு 3.8 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் தர முன்வந்துள்ளனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். இதன் மூலம் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகர்களின் வரிசையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் சல்மான்கான்.

அமீர்கானும், ஷாருக்கானும் சின்னத்திரை நிகழ்ச்சிக்காக ஒரு எபிசோடுக்கு 3 கோடி சம்பளம் பெற்றனர். ஹிருத்திக் ரோஷன் 2 கோடி ரூபாயும், அக்சய் குமார் 1.5 கோடி ரூபாயும் பெற்றனர். அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 100 கோடி ரூபாய் வழங்கினார்கள்.

பிக் பாஸ் சீசன் 5ல் சல்மான்கானுடன் சஞ்சய் தத் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த சீசன் 6ஐ சல்மான்கான் தனியாக தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏமாற்றும் வெளிநாட்டு மாப்பிள்ளை கதை

The image becomes the story of a girl pretending foreign groom.

பெண்களை ஏமாற்றும் வெளிநாட்டு மாப்பிள்ளை கதை படமாகிறது. 'என்னவோ பிடிச்சிருக்கு', 'எழுதியது யாரடி' படங்களை தயாரித்த ஸ்ரீகந்தராஜா இயக்கும் படம் 'சிக்கி முக்கி'. இது பற்றி அவர் கூறியதாவது: வெளிநாட்டு மோகத்தால் சிலர், தங்கள் மகள்களை அங்கிருந்து வரும் மாப்பிள்ளைகளை பற்றி சரிவர விசாரிக்காமல் திருமணம் செய்து வைக்கின்றனர். அப்படி சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் கதைதான் இது. டாக்டருக்கு படித்திருப்பதாக கூறி ஒரு பெண்ணை மயக்கி அவரையே மணந்துகொண்டு வெளிநாடு செல்கிறார் ஹீரோ. அங்கு சென்றதும் குடும்பத்தைபற்றி நினைக்காமல் தொழிலிலேயே கவனமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் இறக்கிறாள். அடுத்து நடந்தது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். ஜித்தேஷ் ஹீரோ. திஷா பாண்டே ஹீரோயின். கஞ்சாகருப்பு சூரி, நகுலன், புதுமுகம் பூஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோ.டி. ஒளிப்பதிவு. கவுதம் இசை. ஆர்.செந்தில்குமார் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் 50 நாட்கள் மலேசியாவில் நடந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் ஸ்ரீகந்தராஜா கூறினார்.
 

அமிதாப் பிறந்த நாள் : ரஜினிக்கு அழைப்பு

Special invitation for rajini

அமிதாப்பச்சனின் 70வது பிறந்த நாளுக்கு வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு வரும் 11ம் தேதி எழுபது வயது பிறக்கிறது. இதை பிரமாண்டமாக நடத்த அவர் மனைவி ஜெயா பச்சன் திட்டமிட்டுள்ளார். இதற்கான விழா மும்பை திரைப்பட நகரில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியும் அமிதாப்பும் நெருங்கிய நண்பர்கள். இதையடுத்து ரஜினியை விழாவில் பங்கேற்க கேட்டிருக்கிறார் ஜெயா பச்சன். அவரும் குடும்பத்தினருடன் பங்கேற்பதாகக் கூறி இருக்கிறார். விழாவில் நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமிதாப் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
 

கும்கி, அலெக்ஸ் பாண்டியன் டிரைலர்

Kumki trailer from 12 october

சூர்யா, காஜல் அகர்வால் நடித்துள்ள படம், 'மாற்றான்'. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கதையான இதை கே.வி. ஆனந்த் இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தோடு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள 'கும்கி', கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள 'அலெக்ஸ் பாண்டியன்' பட டிரைலர்கள் இணைக்கப்பட்டுள்ளன. 'கும்கி' தீபாவளிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' டிசம்பர் 14ம் தேதியும் வெளியாக உள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

இயக்குனர் ஏ. ஜெகநாதன் மரணம்

Director Jaganathan passed away

தமிழ்ப் படவுலகின் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த படங்களை இயக்கிய ஏ.ஜெகநாதன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.
மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெகநாதன், சில நாட்களுக்கு முன் திருப்பூரிலுள்ள மகள் உஷாதேவி வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கோவை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் உடல்நிலை கவலைக்கிடமானது.  நேற்று காலை மரணம் அடைந்தார். மறைந்த ஜெகநாதனின் உடல் திருப்பூர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. ஜெகநாதனுக்கு மனைவி ராஜாமணி, மகள்கள் உஷாதேவி, பவித்ரா தேவி, மகன் அருண்குமார் உள்ளனர்.

'மணிப்பயல்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஜெகநாதன், எம்.ஜி.ஆர் நடித்த 'இதயக்கனி', சிவாஜி நடித்த 'வெள்ளை ரோஜா', 'முத்துக்கள் மூன்று', ரஜினி நடித்த 'மூன்று முகம்', 'தங்க மகன்', கமல் நடித்த 'காதல் பரிசு' உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். டி.வி தொடர்களையும் இயக்கியுள்ள ஜெகநாதன், தமிழ்த் தாத்தா உ.வே.சா பற்றிய டி.வி தொடரையும் இயக்கினார். தற்போது தமிழக அரசு சினிமா விருது தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். முதல்வர் இரங்கல்: ஏ.ஜெகநாதன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் குறிப்பு:

இயக்குனர் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்திலிருந்து ஜெகநாதனை எனக்கு தெரியும். எம்.ஜி.ஆரும் நானும் இணைந்து நடித்த காவல்காரன், கணவன், என்அண்ணன், கண்ணன் என் காதலன் போன்ற பல படங்களில் உதவி இயக்குனராக திறம்பட பணியாற்றியவர். ஜெகநாதன் மறைவு தமிழ்த் திரைப்படத் துறைக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

வழக்கு எண் ரீமேக்கில் யஷிகா

case 18/9

கன்னடத்தில் ரீமேக்காகும் 'வழக்கு எண் 18/9' மற்றும் 'போராளி' படங்களில் நடிப்பதாக யஷிகா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழில் ரிலீசான 'வாடா போடா நண்பர்கள்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படங்களில் நடித்தேன். பிறகு வாய்ப்புக்கு காத்திருந்தேன். எதுவும் வரவில்லை. கன்னடத்தில், தமிழில் வெளியான 'வழக்கு எண் 18/9' படம், 'கேஸ் 18/9' என்றும் 'போராளி' படம், 'யாரே கூகாடளி' என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இந்தப் படங்களில் நடித்துவருகிறேன். தவிர 'ஜெய்பதுரங்களி', 'டிராமா' படங்களிலும் நடிக்கிறேன். கன்னடத்தில் 'யஷிகா' என்ற பெயரை மாற்றி, 'சிந்து லோக்நாத்' என்ற பெயரில் நடித்து வருகிறேன்.
 

துறு துறு பிரியா ஆனந்த்

Priya anand in dhanush film

நடிகை பிரியா ஆனந்த் கூறியதாவது: 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்தது எதிர்பாராதது. '180' பட இயக்குனர் ஜெயேந்திராவும் பால்கியும் நண்பர்கள். பால்கி மனைவி கவுரி, அமெரிக்கன் ஸ்டைல்
ஆங்கிலம் பேசி நடிக்கக் கூடிய நடிகையை தேடுவதாகச் சொன்னார். நான் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதால் என்னை சிபாரிசு செய்தார் ஜெயேந்திரா. ஆடிஷனில் ஓ.கே.ஆனபின் ஒப்பந்தம்
செய்யப்பட்டேன். இன்னும் இரண்டு இந்தி படங்களில் நடிக்கிறேன். அதில் ஒன்று 'நாடோடிகள்' படத்தின் ரீமேக். பிரியதர்ஷன் இயக்குகிறார். தற்போது தெலுங்கில் ஷர்வானந்துடன் நடிக்கிறேன். தமிழில்,
'எதிர்நீச்சல்' படம் இருக்கிறது. இதை தனுஷ் தயாரிக்கிறார். இதில் என் வயதுக்கேற்ற துறு துறு கேரக்டரில் நடிக்கிறேன்.
 

லொள்ளு தாதா பாடல்கள் வெளியீடு

Lollu Dadha Song Release

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூரலிகான் தயாரித்து நடிக்கும் படம், 'லொள்ளு தாதா பராக் பராக்'. அவரே இசை அமைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார். விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு, முன்னாள் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர், தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, படத்தின் நாயகி உமாஸ்ரீ, நாயகன் பிரவீன், இயக்குனர் ஜே.ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாடல் சி.டியை 15 ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் மன்சூரலிகான்.
 

தாண்டவம் கதை என்னுடையது தான்

Thandavam is my story : Vijay

விக்ரம், அனுஷ்கா நடித்துள்ள 'தாண்டவம்' படம் சமீபத்தில் வெளிவந்தது. இதன் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி வழக்குத் தொடர்ந்துள்ளார். இந் நிலையில் 'தாண்டவம்'
இயக்குனர் விஜய், நிருபர்களிடம் கூறியதாவது: 'தாண்டவம்' படத்தின் கதை தன்னுடையது என்ற உதவி இயக்குனரின் சந்தேகம் நியாயமானது. காரணம், அவருடையதும் பார்வையற்றவர் பழிவாங்கும்

கதை. அவரது சந்தேகத்தை தீர்க்க, அவருக்கும், இயக்குனர்கள் சங்கத்துக்கும் படத்தை திரையிட்டுக் காட்டினேன். அதில் திருப்தி அடையாமல் நீதிமன்றம் சென்றுள்ளார். இரண்டு கதைக்கும் உள்ள வித்தியாசத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து படத்தை வெளியிட இருந்த தடையை நாங்கள் நீக்கினோம். தாண்டவம் படத்தின் கதை, என்னுடையதுதான் என்பதை எங்கும் நிரூபிப்பேன். அதற்காக கடைசி
வரை போராடுவேன். இதற்கிடையில் நான் பொன்னுசாமிக்கு பணம் கொடுத்து சமாதானமாகப் போய்விட்டதாகவும், அவர் இயக்கும் படத்தை நான் தயாரிக்கப் போவதாகவும் செய்தி வந்துள்ளது. அதில்
எந்த உண்மையும் இல்லை. அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்.
 

கரண் நடிக்கும் சொக்கநாதன்

Karan film named as 'Chockanathan'

கரண் நடித்த 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். இவர் தற்போது, 'சிங்கம் சினிமா' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி  படம் தயாரித்து, இயக்குகிறார். 'சொக்கநாதன்' என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தில் கரண் ஹீரோவாக நடிக்கிறார். ''தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது. அந்தந்த மொழி முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய கோணத்தில் சொல்லப்படும் ஆக்ஷன் கதை. தமிழ் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. நான் இயக்கிய 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' தெலுங்கில் 'டான் சுந்தரம்' என்ற பெயரில் அடுத்த மாதம் டப் ஆகிறது'' என்றார் இயக்குனர் வி.சி.வடிவுடையான்.
 

80களின் ஸ்டைலில் சாந்தினி

Chandani in 80's Style

'சித்து பிளஸ் 2' படத்தில் அறிமுகமான சாந்தினி கூறியதாவது: நகுலுடன் 'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் நடித்துவருகிறேன். ராம்கோபால் வர்மா உதவியாளர் பிரவீன் இயக்கும் 'காளிச்சரண்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறேன். 1980களில் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்தில் நடித்த சில நடிகைகளின் படங்களைப் பார்த்து, அவர்களின் ஸ்டைல் மற்றும் மேக்கப், காஸ்டியூம், மேனரிசங்களை தெரிந்துகொள்கிறேன். மற்றவர்களின் நடிப்பைப் பார்த்தாலும், அதைக் காப்பியடிக்க மாட்டேன்.
 

இந்திப் படம் இயக்குகிறார் ராஜமவுலி

bollywood debut direction for raja mouli

இந்தியில் நேரடி படம் ஒன்றை இயக்க இருப்பதாக இயக்குனர் ராஜமவுலி கூறினார். ராஜமவுலி இயக்கி உள்ள 'நான் ஈ' படம் இந்தியில் 'மாக்கி' என்ற பெயரில் டப் ஆகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ராஜமவுலி கூறியதாவது: நான் இயக்கிய 'மகதீரா' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இயக்குனர் அனுராக் காஷ்யப் அதன் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். அதில் யார் நடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஹிருத்திக் ரோஷன் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'நீங்களே ஏன் ரீமேக் செய்யக்கூடாது?' என்கிறார்கள்.
மகதீரா படத்தை இரண்டு வருடங்கள் செலவழித்து எடுத்திருக்கிறேன். மீண்டும் அதே இரண்டு வருடத்தை ஒரே கதைக்கு ஏன் செலவழிக்க வேண்டும். அதற்கு வேறு கதையை நான் இயக்கலாமே. அதுமட்டுமில்லாமல் ரீமேக் எனக்குப் பிடிக்காத விஷயம். விரைவில் நேரடி இந்தி படம் ஒன்றை இயக்க இருக்கிறேன். இப்போது டப் ஆக இருக்கிற 'மாக்கி' தமிழ், தெலுங்கில் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் ஹிட்டாகும் என நம்புகிறேன். இவ்வாறு ராஜமவுலி கூறினார்.
 

‘பிக் பாஸ்Õ ஷோவில் சனாகான்

Sana khan in Big boss Show

வெளிநபர்கள் தொடர்பில்லாமல் பூட்டிய வீட்டுக்குள் 1 மாதம் தங்கப்போவதாக கூறினார் சனா கான். இது பற்றி அவர் கூறியதாவது: பாலிவுட் ஹீரோ சல்மான் கான் 'பிக் பாஸ்Õ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை வடநாட்டு டி.வி.சேனலில் நடத்தி வருகிறார். இந்த ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. உடனே ஒப்புக்கொண்டேன். இந்த ஷோவில் பங்கேற்கும்போது உடன் தங்கி இருப்பவர்களுடன் கருத்துவேறுபாடு, மோதல், கெட்ட வார்த்தைகள் பிரயோகம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்குமே என்கிறார்கள். இதற்கு முன்வேண்டுமானால் அந்த கசப்பான சம்பவங்கள்
நடந்திருக்கலாம். இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் நல்லமுறையில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். ஒரே விஷயம் என்னவென்றால் 24 மணி நேரமும் என்னை ரசிகர்கள்
கவனித்துக்கொண்டே இருப்பார்கள். எனவே உடை விஷயத்தில் கவனமாக இருப்பேன். ஒரு மாதம் பூட்டிய வீட்டுக்குள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கப்போவதுபற்றி கேட்கிறார்கள். அதற்கு நான் என்னை தயார்படுத்திக்கொண்டேன். சில நேரம் வெளியுலக தொடர்பு இல்லாமல்

இருக்க வேண்டிய காலகட்டங்கள் நமக்கு ஏற்படும்போது செல்போனைகூட அணைத்துவிடுவோம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துவேன். இந்த ஷோ மூலம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு சனாகான் கூறினார்.
 

‘பிக் பாஸ்Õ ஷோவில் சனாகான்

Sana khan in Big boss Show

வெளிநபர்கள் தொடர்பில்லாமல் பூட்டிய வீட்டுக்குள் 1 மாதம் தங்கப்போவதாக கூறினார் சனா கான். இது பற்றி அவர் கூறியதாவது: பாலிவுட் ஹீரோ சல்மான் கான் 'பிக் பாஸ்Õ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை வடநாட்டு டி.வி.சேனலில் நடத்தி வருகிறார். இந்த ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. உடனே ஒப்புக்கொண்டேன். இந்த ஷோவில் பங்கேற்கும்போது உடன் தங்கி இருப்பவர்களுடன் கருத்துவேறுபாடு, மோதல், கெட்ட வார்த்தைகள் பிரயோகம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்குமே என்கிறார்கள். இதற்கு முன்வேண்டுமானால் அந்த கசப்பான சம்பவங்கள்
நடந்திருக்கலாம். இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் நல்லமுறையில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். ஒரே விஷயம் என்னவென்றால் 24 மணி நேரமும் என்னை ரசிகர்கள்
கவனித்துக்கொண்டே இருப்பார்கள். எனவே உடை விஷயத்தில் கவனமாக இருப்பேன். ஒரு மாதம் பூட்டிய வீட்டுக்குள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கப்போவதுபற்றி கேட்கிறார்கள். அதற்கு நான் என்னை தயார்படுத்திக்கொண்டேன். சில நேரம் வெளியுலக தொடர்பு இல்லாமல்

இருக்க வேண்டிய காலகட்டங்கள் நமக்கு ஏற்படும்போது செல்போனைகூட அணைத்துவிடுவோம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துவேன். இந்த ஷோ மூலம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு சனாகான் கூறினார்.
 

செல்வராகவன் படத்தில் நடிக்கிறேனா?

Selevaraghavan directs simbu film

செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் சிம்பு. கோலிவுட்டில் சிம்பு, தனுஷ் கடும் போட்டியாளர்கள். ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி படங்களில் வசனம் வைப்பது முதல் பல விஷயங்களில் கருத்து மாறுபாடு காட்டுபவர்கள். இதனால்  தனுஷின் அண்ணன் செல்வராகவனும் சிம்புவும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பேசிக்கொள்ளாமல் தலை கவிழ்ந்துகொண்டு சென்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. சமீபகாலமாக சிம்பு, தனுஷ் இடையே திடீர் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வராகவனும் சிம்புவும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷை வைத்து 'காதல் கொண்டேன்Õ, 'மயக்கம் என்ன', 'புதுப்பேட்டை' ஆகிய படங்களை இயக்கிய அவரது அண்ணன் செல்வராகவன்

சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாறுபட்ட காதல் கதை அம்சம்கொண்ட இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இது பற்றி சிம்புவிடம் கேட்டபோது, ''இப்படம் பற்றி இப்போதைக்கு பேசுவது முந்திரிக்கொட்டை சமாச்சாரமாக இருக்கும். ஆனால் இதுபற்றி செல்வராகவனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு மத்தியில்தான் இப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளன. பெரிய தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்க உள்ளது" என்றார்.
 

நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி நன்கொடை

Rajinikanth donated 10 Crore

மந்திராலயம் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளார். மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த், இக்கோயிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவசெட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை மூலம் மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

ஷகீலா அரசியலுக்கு வராங்க!

Shakeela Eager Enter Politics

மலையாளப் பட உலகில் சூப்பர் ஸ்டார்களையே பதற அடித்த ஷகீலா இப்போது காமெடி நடிகையாக கலக்கி வருகிறார். அரசியல் பிரமுகருடன் திருமணம், சினிமாவுக்கு முழுக்கு என மீடியாக்களில் செய்தி அடிப்பட்ட நிலையிலும் தனக்கு கல்யாணம் என்றால் அலர்ஜி, தனியாக இருப்பதுதான் ஜாலி என்று பேட்டி தருகிறார்.

சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என்று நினைத்திருந்த நிலையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் உறவினர்களே ஏமாற்றி விட்டதாக நொந்து போய் கூறும் ஷகீலா. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட நான் நடித்தால்தான் காசு என்ற நிலை வந்த காரணத்தால்தான் மறுபடியும் நடிக்க வந்ததாக கூறியுள்ளார்.

இப்போது ‘உண்மை' என்ற படத்தில் நடித்து வரும் ஷகீலா ஷூட்டிங்கில் கூடிய கூட்டத்தைப் பார்த்து அசந்து விட்டாராம். இதனால் அரசியல் ஆசை வந்து தவிக்கும் ஷகீலா கூடிய விரையில் ஏதாவது கட்சியில் சேர்ந்தாலும் ரசிகர்கள் ஆச்சரியப்படவேண்டாம்.

ஷகீலாவை வரவேற்க எந்தக் கட்சிக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ....

 

கரீனா கபூர் - சயீப் திருமணத்திற்கு ஜனாதிபதியே வர்றாராம்!

President Attend Saif Kareena Wedding   

டெல்லி: கரீனா கபூர் - சயீப் அலிகான் திருமணம்தான் இன்றைக்கு ஹாட் டாபிக்காகிவிட்டது.

நாட்டின் அத்தனை விவிஐபிக்களையும் திருமணத்துக்கு அழைத்துள்ளனர். இதில் முக்கியமானவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரணாப், நிச்சயம் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த திருமணத்துக்காக பட்டோடி அரண்மனை பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும், டெல்லியிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

பாரம்பரியமிக்க அரண்மனை நகைகள் தவிர, பல கோடி ரூபாய்க்கு புதிய நகைகள் வாங்கியுள்ளனர் கரீனாவுக்காக. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரிதுகுமார்தான் முகூர்த்த சேலையை தயார் செய்து வருகிறார்.

திருமணத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.

சயீப்பின் தாயார் சர்மிளா தாகூர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியிடம் திருமண அழைப்பிதழை நேரில் கொடுத்து அழைப்பு விடுத்தார்.

அவரும் திருமணத்துக்கு வருவதாக உறுதி அளித்துள்ளராம். பிரணாப் முகர்ஜியும், மன்சூர் அலிகான் பட்டோடியும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டோடி அரண்மனை படங்கள்

 

துப்பாக்கி: அட... போஸ்டரும் காப்பிதான்!

எந்த ஒரு விஷயத்துக்கும், அதற்கு முந்தைய நிகழ்வு அல்லது படைப்புதான் இன்ஸ்பிரேஷன் என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

tuppaakki poster copied from hollywood movie   
Close
 
ஆனால், அதை அப்படியே காப்பியடிப்பது ஏற்க முடியாதது. தமிழ் சினிமாக்காரர்கள் பெரும்பாலும் இந்த இரண்டாம் ரகத்தினராகத்தான் இருக்கிறார்கள்.

ஏதாவது ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்க வேண்டியது.. அதை அப்படியே சீன் பை சீன் உருவி தமிழ்ப் படமாக்குவதுதான் இவர்களின் பாணி. முன்னணி இயக்குநர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இதற்கு விலக்கில்லை.

தெய்வத் திருமகள் படத்தைப் பார்த்துவிட்டு சராசரி ரசிகன் பாராட்ட, சினிமா தெரிந்தவர்களோ தெய்வத் திருட்டு மகள் என்று திட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். காரணம் ஐயாம் சாம் படத்தின் அப்பட்டமான காப்பியாக அமைந்தது அந்தப் படம்.

கஜினி படம் பெரும் வெற்றிப் பெற்றாலும், அது ஏற்கெனவே வந்த மொமன்டோவிலிருந்து உருவப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகியது.

இப்படி ஏகப்பட்ட படங்களை பட்டியல் போடலாம்.

சொந்த சரக்கு இருந்தாலும், ஒரு படத்தில் ஏதாவது நல்ல சீன் இருந்தால் அதை அப்படியே எடுத்தாள்வது நம்மவர்களின் வழக்கமாகிவிட்டது.

இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது, கஜினி புகழ் முருகதாஸ் இயக்க, விஜய் நடிக்கும் துப்பாக்கி.

இந்தப் படத்தின் தலைப்பு, தலைப்பின் டிசைன் எல்லாம் எங்களைப் பார்த்து காப்பியடித்து வைக்கப்பட்டது என ஒருவர் கேஸ் போட்டு, அதிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ விளம்பர டிசைன் இன்று வெளியானது. அதில் விஜய் ராணுவ உடையில், காஜல் அகர்வாலைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார். காஜல் அகர்வால் தலையில் விஜய்யின் மிலிட்டரி தொப்பி.

அப்படி கட் பண்ணுங்க... An Officer and a Gentleman என்று ஒரு படம். 1982-ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படம்.

அதில் ஹீரோ கடற்படை வீரன். தன் காதலியை தூக்கிக் கொண்டு நிற்பார். காதலி தலையில் அவனது கடற்படை தொப்பி!!

தமிழ் சினிமா ஹாலிவுட்டை தொட்டுடுச்சாம்.. ஹய்யோ ஹய்யோ!

 

மீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் செல்வராகவன்!

Yuvan Rejoin With Selva Again

இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களை ரொம்பவே மயக்கிய இசையமைப்பாளர் - இயக்குநர் என்றால்... அது யுவன் சங்கர் ராஜா - செல்வராகவன் கூட்டணிதான்.

துள்ளுவதோ இளமையில் தொடங்கி, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களின் இசை தமிழ் சினிமாவைக் கலக்கியது. இந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே இப்போதும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்த்தார் செல்வா. இந்த இரு படங்களுமே பெரிதாக பேசப்படாமல் போயின.

அடுத்து இரண்டாம் உலகம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்துள்ளார் செல்வராகவன்.

இந்த நிலையில் தற்போது யுவனும் செல்வாவும் மீண்டும் இணைந்துள்ளனர். இரண்டாம் உலகம் படத்தினைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் செல்வராகவன்.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கெனவே தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார் யுவன்.

 

ரஜினி கேட்டும் பாலச்சந்தர் படத்துக்கு இசையமைக்க மறுத்தேன்! - இளையராஜா அதிரடி பதில்

Why Ilayaraaja Not Working With K Balachander

ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

பிரபல வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அந்த கேள்வி பதில்:

கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்?

பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவிதாலயாவிலிருந்து அனந்தும் நடராஜனும் வந்து என்னைச் சந்திச்சாங்க.

'சார் படம் ரிலீஸ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. ஆனால் ஸ்டிரைக் நடந்துகிட்டிருக்கு. நீங்களும் பாம்பேயிலிருந்து வர முடியாது. நாங்க உங்களுக்காக காத்திருந்து ரெக்கார்ட் பண்ணுறதுக்கும் டைம் இல்லாமல் இருக்கு. அதனால் நாங்க ட்ராக் எடுத்து போட்டுக்குறோம்,' என்றார்கள்.

'அப்போ உங்களுக்கு டைட்டிலில் இளையராஜா என்று பெயர் மட்டும்தான் போட வேண்டும். என் மியூசிக் உங்களுக்கு தேவையில்லைன்னு தெரியுது. என்னோட பெயரை வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கப் போறீங்க. இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல. நீங்க பண்றதை பண்ணிக்கோங்க,' என்று சொல்லி விட்டுவிட்டேன்.

அப்புறம் ரொம்ப நாள் கழித்து கவிதாலயாவிலிருந்து வந்து மியூசிக் பண்ண சொன்னபோது 'இவங்களுக்கு நம் பெயர் மட்டும்தான் முக்கியமா இருக்கு. நம்மோட இசை இல்ல. அதனால் நாம் ஏன் மியூசிக் பண்ணணும்'னு நினைச்சேன்.

அப்புறம் ரஜினியை வெச்சு படம் எடுத்தபோது ரஜினியையே பாலசந்தர் என்கிட்ட அனுப்பினார். ஆனால் 'ஏன் நீங்க அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தீங்கன்னு' அவரும் என்கிட்ட கேட்கல. நானும் சொல்லல.

அவர் என் படத்துக்கு மியூசிக் பண்ணணும்னுதான் கேட்டார். பாலசந்தரே ரஜினிகிட்ட நடந்த விஷயங்களை சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கலாம். இல்ல ரஜினியாவது கே.பி சாரை நான் பேச சொல்றேனு சொல்லியிருக்கலாம். எதுவும் நடக்கல. அதனாலதான் ரஜினி கேட்டும்கூட நான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ணல. இதுதான் காரணம்."

 

அக்கா கார்த்திகாவுடன் ஜோடி சேர்ந்த ஜீவா அடுத்து தங்கச்சி துளசியுடன் இணைகிறார்?

Thulasi Nair Star Opposite Actor Jiiva In Yaan

ஜீவா நடிக்கும் ‘யான்' படத்தில் கடல் கதாநாயகி துளசி ஜோடி சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கார்த்திக் மகன் கவுதமும், ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் நடித்து வருகின்றனர். திரை உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஜோடியின் புகைப்படங்களை வெளியிடுவதற்குக் கூட மணிரத்னம் தடை விதித்துள்ளார். இந்த நிலையில் துளசி அடுத்ததாக ஜீவா உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'யான்' திரைப்படத்தை ஆஸ்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களை தயாரித்த இந்நிறுவனம் ஜீவாவின் அடுத்த படத்தை தயாரிக்கின்றனர். ‘யான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. கடல் படத்தில் துளசி பிஸியாக இருப்பதால் அது முடிந்த உடன் யான் படத்தில் துளசி நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவோ கோ படத்தில் கார்த்திகாவுடன் இணைந்து நடித்தார் ஜீவா. ராதாவின் மூத்த மகள்தான் கார்த்திகா. இந்த நிலையில் அடுத்து கார்த்திகாவின் தங்கச்சியுடன் இணையப் போகிறார் ஜீவா. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்கா, தங்கச்சி நடிகைகளுடன் இணையும் நடிகர் என்ற பெயர் ஜீவாவுக்கு கிடைக்கவுள்ளது.

ஒரு காலத்தில் ராதாவும், அவரது அக்கா அம்பிகாவும் இணைந்து தமிழ் ஹீரோக்களை கலக்கி வந்தனர். ரஜினி, கமல் உள்ளிட்டோர் இவர்கள் இருவருடனும் மாறி மாறி நடித்துள்ளனர். மேலும் ஒரே படத்தில் இந்த இரு ஹீரோயின்களுடனும் இணைந்தும் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

பூங்காற்று திரும்புதோ....??

 

'செல்போன் காதலால்' நடிகரின் குடும்பத்தில் குழப்பம்!

What Is Happening Between The Kalavaani Couple

இனிமே நான் அவருக்கு சிபாரிசு செய்யமாட்டேன் என்று களவாணி நாயகன் பேட்டி கொடுப்பது. யாருடைய சிபாரிசும் எனக்குத் தேவையில்லை என்று ஒவிய நாயகி கடுப்படிப்பதும் ஊடகங்களில் உலாவரும் செய்தி. ஆனால் ஆப் தி ரிகார்டாக நாயகனும், நாயகியும் காதல் தீயில் சிக்கித் தவிக்கின்றனராம்.

மூன்றாவது முறையாக சில்லுனு சந்திக்கும் இந்த ஜோடியின் செல்போன் காதலால் கடுப்பாகியிருக்கிறாராம் நாயகனின் உண்மையான நாயகி. இனிமேலும் இது தொடர்ந்தால் டைவர்ஸ்தான் என்று கோபம் காட்டினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தங்கள் நெருக்கத்தை 'களவாணித்தனமாக' தொடர்கின்றனராம் இந்த ஜோடி.

எத்தனாக நடித்தவருக்கு ஏமாற்றுவது பெரிய விசயமா என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில்.

 

என் ஆசிரியர்கள்தான் என்னை செதுக்கினார்கள்... சமுத்திரகனி

Samuthirakani Opens His Heart On His Teachers

என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் என்னுடைய ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பங்குள்ளது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி கூறியுள்ளார். ஜெயா டிவியில் என் திரைப்பயணம் நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்னை செதுக்கிய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு 9 மணிக்கு என் திரைப்பயணம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்துறையில் வெற்றி பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் பங்கேற்று தங்களில் திரை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்தவாரம் இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி பங்கேற்று தனது அனுபவங்களை பேசினார்.

7ம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில வீட்டுப்பாட நோட்டில் கதை எழுதி வைத்ததை கூறிய சமுத்திரகனி அதனைக் கண்டு ஆசிரியர் தம்மை திட்டவோ அடிக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக அந்த கதையை எல்லோருக்கும் படித்து காட்டச் சொன்னார். அன்றைக்கு மட்டும் அந்த ஆசிரியர் தனக்கு தண்டனை கொடுத்திருந்தால் தன்னால் சிறந்த கதை ஆசிரியராக வளர்ந்திருக்க முடியாது என்றார்.

உன்னைச் சரணடைந்தேன் படத்திற்கு சிறந்த கதாசிரியர் விருது கிடைக்க இந்த சம்பவம் ஒரு காரணமாக அமைந்தது என்றார். ‘சாட்டை' படத்தில் ஆசிரியர் வேடம் ஏற்று நடிக்க காரணம் தன்னுடைய ஆசிரியர்கள்தான் என்று கூறிய சமுத்திரகனி ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி காலம் வரை தனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் பெயர்களை கூறினார்.

இன்றைக்கும் தன்னுடைய ஆசிரியர்கள் சிறந்த நண்பர்களாக, வழிகாட்டிகளாக இருப்பதாக கூறிய சமுத்திரகனி தான் இயக்கிய நாடோடிகள் திரைப்படத்தில் இரண்டு ஆசிரியர்களை நடிக்க வைத்திருப்பதை நினைவு கூர்ந்தார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் ரோல்மாடலாக இருப்பார்கள். தன்னுடைய ஆசிரியர்கள்தான் தன்னுடைய ரோல்மாடல். அவர்கள்தான் தன்னை செதுக்கினார்கள் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் சமுத்திரகனி.

 

எல்லோரையும் கொஞ்சம் பேச விடுங்க கோபிநாத்!

Neeya Naana Vijay Tv Talk Show Program

விவாத நிகழ்ச்சி என்றாலே நிகழ்ச்சி தொகுப்பாளரை விட பங்கேற்பாளர்தான் அதிகம் பேசவேண்டும். ஆனால் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளரை விட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்தான் அதிகம் பேசுகின்றனர்.

‘நீயா நானா' நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருந்தாலும் அவர்கள் பேசுவதை விட தொகுப்பாளர் கோபிநாத்தான் அதிகம் பேசுகிறார் என்கின்றனர் விமர்ச்சகர்கள்.

இந்தவாரம் உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா கூடாதா என்பது பற்றி விவாதம் நடைபெற்றது. அத்தைப் பெண்ணையோ, மாமன் மகனையோ திருமணம் செய்வதை ஏன் விரும்புகின்றனர். அந்நியத்திற்குள் திருமணம் செய்வதை ஏன் தவிர்க்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் கருத்துக்களை முன் வைத்தனர். சொந்தங்களுக்குள் திருமணம் செய்வது பாதுகாப்பானது என்ற கோணத்திலேயே பேசினார்கள் ஒரு சாரார். அதற்கு கோபிநாத், எத்தனையோ வீடுகளில் அந்நியத்தில் இருந்து வந்த பெண் மகள் போல நடந்து கொள்வதும், சொந்தத்தில் திருமணம் செய்த பெண் குடும்பத்தை பிரிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறினார் கோபி. இந்த இடத்தில்தான் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை சரியாக கூட கூறவிடாமல் தொகுப்பாளரான கோபிநாத் அதிகம் பேசினார். அது தவிர ஒருவர் கருத்துக்களை கூறும் முன்பாக வேற... வேற... என்று கூறி டைவர்ட் செய்வதும் நடந்தது.

சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதன் மூலம் வெளி வட்டார பழக்க வழக்கம் தடுக்கிறது. மரியதை கிடைக்காது. பரம்பரை பகையா மாற வாய்ப்புள்ளது எனவே நெருங்கிய உறவுக்குள் திருமணம் கூடாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது சாதிய சிந்தனை என்றும் கலப்புத்திருமணங்கள் ஏற்படுவதை தடுக்கிறது என்றும் கூறினார்கள்.

நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது அழகானது. ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். சொந்தமும் சொத்தும் விட்டுப்போகாது என்று கூறினார்கள் சொந்தங்களுக்குள் திருமணம் செய்தவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, எழுத்தாளர் ராஜேந்திர சோழன், டாக்டர் கமலா செல்வராஜ், உள்ளிட்ட பல சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

உறவுகளுக்குள் திருமணம் செய்வது விபரீதம். ஆளுமையற்ற குழந்தைகளை உருவாக்கும், தலைமுறையை பாதிக்கும். குழந்தைகள் அசாதாரணமான நிகழ்வுகளோடு இருக்கும்.எதிர்கால தலைமுறையை பலவீனமானதாக இருக்கும் என்றார் எழுத்தாளர் ராஜேந்திர சோழன்.

ஆனால் சொந்தக்களுக்குள் திருமணம் செய்வது காலம் காலமாக நடைமுறையில் இருக்கிறது. பாரம்பரியத்தை உடைக்கவேண்டாம் என்றார் வேல. ராமமூர்த்தி

உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் மரபணு ரீதியான பிரச்சினையைத்தான் தரும் என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர் ஹெப்சிபா. டாக்டர் கமலா செல்வராஜ். சொந்தத்தில் திருமணம் செய்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கூறினார். எத்தனையோ கண்ணீர் கதைகள் உள்ளன என்றார்.

இளங்கோ கல்லானை சமூக பார்வையாளர் எழுத்தாளர், மரபணு மாற்றத்தினாலும், அறிவியல் ரீதியாகவும் கூட சில தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன என்ற கருத்தை முன்வைத்தார்.

நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போகும் போதே பிரேக் விடும் கோபிநாத், அனல் பறக்கும் இந்த விவாதம் பற்றி பேசலாம் இன்னும் ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு என்று சொன்னாலும் நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை விட கோபிநாத்தான் அதிகம் பேசினார் என்கின்றனர் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள்.

எனவே கோபிநாத் நீங்க அதிகமா பேசுறதை விட கொஞ்சம் பங்கேற்பாளர்களையும் பேச விடுங்களேன் என்பது நேயர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

அமிதாப் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் ரஜினி!

Rajini Attend Amitabh S Birthday With Family

சென்னை: பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சனின் 70வது பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்திய சினிமாவின் 'ஐகான்' என்று புகழப்படுபவர், தன் சினிமா உலக குரு என சூப்பர் ஸ்டார் ரஜினியால் அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன்.

வரும் அக்டோபர் 11-ம் தேதி அவருக்கு 70 வது பிறந்த நாள். இந்த பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார் அவரது மனைவியும் நடிகையும் பாராளுமன்ற எம்.பியுமான திருமதி ஜெயாபச்சன்.

மும்மை பிலிம் சிட்டியில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது இந்த விழா. பாலிவுட், கோலிவுட் மற்றும் இந்திய சினிமா உலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அனைவருக்குமே விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. அவர் தன் குடும்பத்தினருடன் பங்கேற்கவிருக்கிறார்.

இரவு 8.30 மணிக்கு பிறந்த நாள் விழா தொடங்குகிறது. அனில் அம்பானி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க ஆட்டம், பாட்டம், விருந்து என பெரும் விழாவாக நடக்கவிருக்கிறது.