கிசு கிசு -நடிகரால் தவிக்கும் இயக்குனர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நடிகரால் தவிக்கும் இயக்குனர்

1/27/2011 7:35:51 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

கன்னடம், இந்தி படங்கள்ல உச்ச நடிகரை கெஸ்ட் ரோல்ல நடிக்க வைக்க முயற்சி நடந்துச்சு… நடந்துச்சு… ஆனா, நடிகரு அன்பா மறுத்துட்டாராம்… மறுத்துட்டாராம்… அனிமேஷன் பட ஷூட்டிங்ல மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்துறாராம்… செலுத்துறாராம்…

தமிழ்ப் பட ஹீரோ புது முடிவுக்கு வந்திருக்கிறாராம். காமெடி கதைகள்ல, கமென்ட் அடிச்சி நடிக்கிறதை கைவிட முடிவு பண்ணியிருக்கிறாராம்… பண்ணியிருக்கிறாராம்… இனிமே சீரியஸ் ரோல்கள்ல கவனம் செலுத்துப் போறாரம்… போறாராம்…

பஞ்ச் நடிகருக்கு கதை சொல்லி ஓகே வாங்கிட்டாரு எல்லோரும் சுகம்னு சொன்ன பட டைரக்டரு. அதே நேரம், படத்துல பஞ்ச், கமர்ஷியல் அயிட்டங்களை நடிகரு சேர்க்கச் சொல்லியிருக்கிறாராம். நடிகரு விரும்புற மாதிரி அதை சேர்க்க முடியாம இயக்குனரு விக்கிறாராம்…தவிக்கிறாராம்… ரூம் போட்டு பலமுறை டிஸ்கஷன் பண்ணியும் இயக்குனர் சேர்த்த கமர்ஷியல் அம்சங்கள், நடிகருக்கு திருப்தி தரலையாம்… தரலையாம்…


Source: Dinakaran
 

பிப்ரவ‌ரி 11ல் நடுநிசி நாய்கள் ரிலீஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிப்ரவ‌ரி 11ல் நடுநிசி நாய்கள் ரிலீஸ்!

1/28/2011 12:40:57 PM

தனது சொந்த தயாரிப்பில் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி முடித்துள்ளார் கௌதம் மேனன். க்ரைம் கலந்த த்ரில்லர் கதைக்கு பாடல்கள், பின்னணி இசை எதும் கிடையாது. படம் வருகிற பிப்ரவ‌ரி மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 90 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஓர் இரவில் நடக்கும் கதையை படமாக்கியுள்ளார் கௌதம். இதையடுத்து அவர் தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெ‌ரிகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெ‌ரிகிறது.


Source: Dinakaran
 

’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்கிறார் விஜய்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்கிறார் விஜய்?

1/28/2011 12:33:27 PM

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கு நீடித்த வந்த குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஷங்கர் இயக்கும் ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் நடிக்கமாட்டார் என செய்திகள் வெளியாகின. மேலும் விஜய்-க்கு பதில் சூர்யா நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் கண்டிப்பாக நடிப்பார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.

7ஆம் அறிவு படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சூர்யா, ’3 இடியட்ஸ்’ படத்திலிருந்து விலகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வேலாயுதம் படத்திற்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டில் சில மாற்றம் செய்து ’3 இடியட்ஸ்’ படத்திற்கு விஜய் கால்ஷீட் தந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த குழுப்பம் நீடித்து வரும் நிலையில், ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் ஷங்கர் படமாக்குகிறார். க‌‌ரீனா கபூர் வேடத்தை யார் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இலியானாவாக இருக்கலாம். படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

’3 இடியட்ஸ்’ படத்தில் நடிப்பது குறித்து விஜய்யும், இயக்குனர் ஷங்கரும் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இதற்கு பிறகு தான் ’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்கப் போவது யார் என்பது தெரியும்.


Source: Dinakaran
 

ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார அமைப்பு வழங்கியது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார அமைப்பு வழங்கியது!

1/28/2011 11:37:45 AM

ஆஸ்கர் விருதுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட அடுத்த நாளான நேற்று, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு உலக பொருளாதார அமைப்பு 'கிரிஸ்டல் விருது' வழங்கி கவுரவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் வர்த்தகம், அரசு, கலை, கலாசாரம், மதங்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 2,500 சர்வதேச தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அதில் கலைத் துறையில் இசை மட்டுமின்றி தனது திறமையால் சமூக மற்றும் அறக்கட்டளை பணிகளுக்கும் சிறந்த பங்களிப்பதற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு 'கிரிஸ்டல் விருது' வழங்கப்பட்டது.

அழகிய எம்பிராய்டரி செய்த கறுப்பு குர்தா அணிந்து விழாவில் பங்கேற்ற ரகுமான், விருதை பெற்றுக் கொண்டார். 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'பாம்பே ட்ரீம்ஸ்' ஆகிய திரைப்படங்களில் ரகுமானின் சிறந்த இசை பற்றி கூட்டத்தில் பெருமையாக குறிப்பிட்ட பலரும் குழந்தைகள் நலனுக்கு அவர் பணியாற்றி வருவதை பாராட்டினர். இரண்டு ஆஸ்கர் விருதுகள் உட்பட பல சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றுள்ள ரகுமான், விருதுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், "தனது சமூக பணிக்கு இந்த விருது மேலும் ஊக்கம் அளிக்கிறது" என்றார். ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் மீண்டும் 2 பிரிவுகளில் ஏ.ஆர். ரகுமான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Source: Dinakaran
 

கிசு கிசு -ரசிகர்களே வேண்டாம் நடிகர் முடிவு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ரசிகர்களே வேண்டாம் நடிகர் முடிவு

1/28/2011 2:35:03 PM

நல்ல காலம் பொறக்குது…

நல்ல காலம் பொறக்குது…

'தா’ங்கிற பேர்ல ரிலீசான படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவு செஞ்சாங்களாம்…
செஞ்சாங்களாம்… ஆனா, ஏதாவது ஒண்ணு தடையா வந்து முட்டுக்கட்டை போடுதாம்…
போடுதாம்… 'முதல்ல நீங்க படத்தோட பேரை மாத்துங்க. அப்பறம் ஒரு மாற்றம்
தெரியும்’ன்னு தயாரிப்புக்கு ஜோசியருங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனால
தலைப்பை மாத்தப்போறாங்களாம்… மாத¢தப்போறாங்களாம்…

காமெடி ஆக்டருங்க தனித்தனியா குரூப் வச்சிருக்காங்க. பிளாக் காமெடி
நடிகருக்கு மட்டும் குரூப் அமைய மாட்டேங்குதாம்… மாட்டேங்குதாம்…
'யப்பா, நீ வந்துருப்பாÕன்னு எதிர் கோஷ்டில இருக்க¤றவங்களுக்கு வலை
விரிச்சும் பார்த்தாராம். யாரும் சிக்கலையாம்… சிக்கலையாம்… ஆனாலும்
காமெடியின் முயற்சி தொடருதாம்… தொடருதாம்…

ஃபேன்ஸ் கூட்டம் சுற்றி சுற்றி வந்தாலும் அலைபாயுற நடிகரு கண்டுக்க
மாட்டேங்க¤றாராம்… மாட்டேங்க¤றாராம்.. ‘நடிகர் அந்தஸ்த்தெல்லாம்
எதிர்பார்க்காம வந்ததுதான். அதை தக்க வச்சிக்கிற அவசியம் எனக்கில்லை.
வாய்ப்பு க¤டக்க¤ற வரைக்கும் ஆக்டிங். இல்லேன்னா பேமலி’ன்னு தத்துவம்
சொல்றாராம்… சொல்றாராம்…


Source: Dinakaran
 

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

1/28/2011 11:58:11 AM

நிகழ்கால உண்மைகளுடன் சுவாரஸியப்படுத்தி தருவது இயக்குனர் சிம்புதேவனின் ஸ்டைல். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 365ல் கடவுள். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படங்களை‌த் தொடர்ந்து அவர் தனுஷை வைத்து இயக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடுகளத்தைத் தொடர்ந்து மாப்பிள்ளை, வேங்கை, சீடன், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் வெளிவரவிருக்கின்றன. இதில் சீடனில் தனுஷுக்கு கெஸ்ட் ரோல். இந்தப் படங்களுக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். சிம்புதேவன் கதை பிடித்ததால் உடனே தனது சம்மதத்தை தெ‌ரிவித்துள்ளார். இந்தப் படத்தை யார் தயா‌ரிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.


Source: Dinakaran
 

ஆர்யாவின் கவுரவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யாவின் கவுரவம்

1/28/2011 12:56:37 PM

இன்றுள்ள இளம் ஹீரோக்களில் கவுரவ வேடங்களில் அதிகம் நடிப்பவர் ஆர்யாதான். நட்புடன் யார் அணுகினாலும் உடனே ஓகே சொல்லி விடுகிறார். 'ரெண்டு சீன்ல நாம நடிச்சுட்டு போறது ஏதோ ஒரு வகையில அவங்களுக்கு யூஸ்புல்லா இருக்குனா சந்தோஷந்தான் பாஸ்' என்கிறார். கடைசியாக 'பரிமளா திரையரங்கம்' என்ற சின்ன பட்ஜெட் படத்தில்கூட நடித்திருக்கிறார். ஒரு பழைய திரையரங்கை புதுப்பித்து கட்டும் ஹீரோ அதை நடிகர் ஆர்யாவை வைத்து திறக்க ஆசைப்படுகிறார். அதை ஏற்று அந்த சிறிய கிராமத்துக்கு வந்து தியேட்டரை திறந்து வைக்கிறார். இதற்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்து அன்று முழுவதும் பயங்கர கூட்டத்துக்கிடையே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆர்யாவின் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டின் மதிப்பு பல லட்சங்கள்.


Source: Dinakaran
 

என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு?

1/28/2011 12:58:49 PM

சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெங்களூருவில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் நிர்வாகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார் பூஜா. 'என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு? ஒரு படத்துக்கு 20 லட்சம் வரை சம்பளம் பெறும் நிலையில் இருப்பவர் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தது ஏன்?' என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் மில்லியன் டாலர் கேள்வி. சினிமாவில் அவருக்கு சில கசப்பான அனுபவங்கள். அதனால் வெறுத்து ஒதுங்கி விட்டார் என்றும், அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கும் கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் வேலையில் சேர்ந்து விட்டார் என்றும் அதே கேள்விக்கு பதில்களும் உலா வருகிறது.


Source: Dinakaran
 

விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன நடிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன நடிகை

1/28/2011 1:00:28 PM

அறிமுக நிலையிலேயே விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன ஒரே நடிகை அமலாபால்தான். ஒரு சில விளம்பர படங்களில் நடித்து விட்டாலும் அடுத்து பல முன்னணி நிறுவனங்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில் 'மைனா'வுக்கு முன் சில மாவட்ட தலைநகர் கடை விளம்பரங்களில் நடிக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறார் அமலா. இப்போது அந்த நிறுவனங்களுக்கு நடித்துக் கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருக்கிறாராம்.


Source: Dinakaran
 

நல்ல பெயர் வாங்க ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நல்ல பெயர் வாங்க ஆசை

1/28/2011 1:02:33 PM

வில்லங்க படங்கள் எடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட சாமிக்கு அடுத்து ஒரு நல்ல படம் எடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் உடுமலைப்பேட்டையில் இருந்தபடி தீவிரமாக திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார். காதல் கதையாம். அமலா நடித்தால் நன்றாக இருக்கும் என்பது சாமியின் கணிப்பு. அவருக்கு எப்போது போன் போட்டாலும் நாட் ரீச்சபிள்தானாம். அதனால் புதுமுகம் தேடிக் கொண்டிருக்கிறார். 'சிந்துசமவெளி' காலர் டியூனைகூட மாற்றி இப்போது 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…' என்று மாற்றிவிட்டார்.


Source: Dinakaran
 

சமூக சேவையில் ஸ்ரேயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சமூக சேவையில் ஸ்ரேயா

1/28/2011 2:23:29 PM

நடிகை ஸ்ரேயா கூறியது: ஜீவாவுடன் 'ரவுத்திரம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மலையாளத்தில் மோகன்லாலுடன் 'கேசினோவாÕவில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் தாமதமாகிறது. காரணம் தெரியவில்லை.  'போக்கிரி ராஜாÕ படத்தில் மம்முட்டியுடன் நடித்தேன். 2 மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தது சந்தோஷம். விரைவில் இரண்டு சர்வதேச படங்களில் நடிக்க உள்ளேன். அதில் ஒன்று சேகர் கபூர் இயக்கும் 'பானி’. இப்படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்’ டேனி பாய¢ல் இணை தயாரிப்பில் ஈடுபடுகிறார். ஹிருத்திக் ரோஷன் ஹீரோ. அடுத்து தீபா மேத்தா இயக்கும் 'மிட்நைட் சில்ரன்Õ படத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் அவரது சகோதரர் திலிப் மேத்தா இயக்கிய 'குக்கிங் வித் ஸ்டெல்லாÕ படத்தில் நடித்தேன். அப்போது தீபாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை அவரது இயக்கத்தில் நடிக்க அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக சேவையிலும் கவனமாக இருக்கிறேன். பார்வையற்ற பெண்களுக்கு பயிற்சி அளிக்க மும்பையில் அழகு கலை நிலையம் அமைத்தேன். அங்கு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வெளி அழகு நிலையங்களில் வேலை தர தயங்குகிறார்கள். அந்த தயக்கத்தை போக்குவதற்காக போராடப் போகிறேன். சில நேரம் வாடிக்கையாளர்களால் பார்வையற்ற பெண்கள் பாதிக்கும் சூழல் உள்ளது என்பதை அறிந்திருக்கிறேன். அதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட உள்ளேன்.


Source: Dinakaran
 

இனி எனக்கு ஜோடி தேவையில்லை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இனி எனக்கு ஜோடி தேவையில்லை!

1/28/2011 3:03:42 PM

நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ், சனா கான் நடித்துள்ள படம் 'பயணம்’ பிப்ரவரி 4ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் நாகார்ஜுனாவிற்கு ஜோடி இல்லையாம். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘'பயணம்’ படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கும் காலத்தை கடந்துவிட்டேன். இப்போது கதைக்குத்தான் முக்கியத்துவம் தருகிறேன்’ என்கிறார் நாகார்ஜுனா.


Source: Dinakaran
 

காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது

1/28/2011 2:31:38 PM

'பொன்மாலைப் பொழுது’ பட இயக்குனர் ஏ.சி.துரை கூறியது: கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் ஹீரோவாக அறிமுகம் படம் இது. ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். ‘வாங்க காதலில் விழுங்கள்’ என்று இப்படத்திற்கு துணை தலைப்பு தந்திருக்கிறேன். ஏன் அப்படி தலைப்பு வைத்தேன் என்பதற்கு படத்தில் விடை இருக்கும்.  பிளஸ் 2 படிக்கும் டீன் ஏஜ் மாணவர்களின் காதலை சொல்லும் கதை. இது ஜாதியை மையமாக கொண்டதா என்கிறார்கள். ஜாதி, மதம் வைத்து நிறைய காதல் கதைகள் வந்துவிட்டன. மீண்டும் மீண்டும் அதையே படமாக்குவது மக்களின் மனதை அதே பாதைக்கு கொண்டு செல்வதுபோல்தான் ஆகிறது. இயக்குனர்கள் ஜாதி, மதத்தை கடந்து வந்தால்தான் மக்களும் அதை கடப்பார்கள். இப்படத்தில் காதலை புதிய களத்தில் சொல்கிறேன். ஒரு மகன் இப்படத்தை பார்த்தால் தந்தையையும் பார்க்கச் சொல்வான். அதேபோல் தந்தை பார்த்தால் மகனை போய் பார்க்க வலியுறுத்துவார். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பிப்ரவரியில் தொடங்குகிறது.


Source: Dinakaran
 

தனுஷ் செய்த ஜாங்கிரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனுஷ் செய்த ஜாங்கிரி

1/28/2011 2:53:09 PM

தனுஷ் கவுரவ வேடத்தில் தோன்றும் படம் 'சீடன்'. மலையாளத்தில் ரிலீஸான 'நந்தனம்' ரீமேக்கான இதை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது. ''கவுரவ வேடத்தில் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் சிவபெருமானின் தீவிர பக்தன். 'சீடன்' படத்தில் சிவன் வேடம் ஏற்க வேண்டும் என்று சுப்ரமணியம் சிவா சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன்'' என்றார் தனுஷ்.  மேலும் 'சீடன்' படத்தில் தனுஷ் சமையல்காரராக கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஷூட்டிங்கில் அவரே செய்த ஜாங்கிரியை படக்குழுவினர் ருசித்து சாப்பிட்டார்களாம்.


Source: Dinakaran