சென்னை: தனுஷின் பெயரில் இரண்டு எழுத்தை மாற்றி கா சேர்த்தால் அந்த நடிகையின் பெயர் வரும். அவர்
தன் மாமாவிடம் கேட்காமல் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சையைச் சேர்ந்த தமிழ் பொண்ணு தான் அந்த 4 எழுத்து நடிகை. அவர் நடித்து வரும் இரண்டு
எழுத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த நடிகையைப்
பார்த்ததும் நிருபர்கள் அவரை பேட்டி காண சென்றனர்.
அதற்கு நடிகையோ, பேட்டி எல்லாம் கொடுக்க மாட்டேன். மாமாவிடம் கேட்டு தான் பேட்டி
கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை தனது உதவியாளரிடம் மாமாவை அழைத்து
வரும்படி கூறியுள்ளார். அது யாரு அந்த மாமா என்று நிருபர்கள் ஆவலுடன் காத்திருந்தபோது
சிம்ரன், விந்தியா உள்ளிட்ட நடிகைகளுக்கு மேனேஜராக இருந்த அருண் வந்தார்.
அடடா இவர் தான் மாமாவா என்று நிருபர்கள் நினைத்துக் கொண்டனர். தன்ஷிகா அருகே வந்து
அமர்ந்த அருண், நீங்கள் தன்ஷிகாவை பற்றி நிறைய அவதூறு செய்திகளை எழுதுகிறீர்கள், அதனால்
உங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்க முடியாது என்று கத்தியுள்ளார்.