ராம் கோபால் வர்மா படத்தில் புது 'ஐட்டம்'!


Nathalia
ராம் கோபால் வர்மாவின் படத்தில் புதிய விசேஷம் சேர்க்கப்பட்டுள்ளது. அது நதாலியாவின் கலக்கலான கவர்ச்சிமிகு குத்துப் பாட்டு.

நதாலியா வேறு யாருமல்ல, பாலிவுட்டுக்குக் கிடைத்துள்ள புதிய ஐட்டம் கேர்ள். 2012ம் ஆண்டுக்கான கிங்பிஷர் காலண்டர் கேர்ள் ஆக தேர்வானவர். இப்போது பாலிவுட்டுக்குள் குத்துப் பாட்டின் மூலம் பிரவேசம் செய்கிறார். ராம் கோபால் வர்மாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டுள்ளதால், குத்துப் பாட்டில் இவர் ஓஹோவென வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் கோபால் வர்மா இயக்கும் டிபார்ட்மென்ட் படத்தில்தான் நதாலியா தனது குத்தாட்டத்தை கொடுக்கவுள்ளார். டான் டான் சீனி என்று தொடங்கும் இந்த குத்துப் பாட்டு மிக மிக கவர்ச்சிகரமாக படமாக்கப்படவுள்ளதாம். இதில் மிதமிஞ்சிய கவர்ச்சி காஸ்ட்யூமில் வரப் போகிறாராம் நதாலியா.

நதாலியா ஒரு இந்திய, பிரேசில் கூட்டுத் தயாரிப்பாவார். பிரேசிலில் பிறந்த இந்திய மாடல் அழகியான நதாலியா, கடந்த ஆறு மாதங்களாக மும்பையில்தான் வசித்து வருகிரார். இவரது குடும்பத்திலேயே முதல் முறையாக மாடலிங்கில் புகுந்தது இவர்தானாம். 14 வயதிலேயே வந்து விட்டாராம்- மாடலிங் செய்ய. நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ள நதாலியா இப்போது பெரிய திரையில் பிரமாண்டமான குத்துப் பாட்டின் மூலம் பாலிவுட் ரசிகர்களை கிறங்கடிக்க வருகிறார்.
 

ரூ. 20 கோடிக்கு ஐஸ்வர்யாவை விளம்பரத்திற்கு புக் செய்த கல்யாண் ஜுவல்லர்ஸ்!


Aishwarya Rai and Sushmita
கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராய் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக அவர் பெறவிருக்கும் சம்பளம் ரூ. 20 கோடி ஆகும்.

கல்யாண் ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாசிடராக வெகுகாலமாக இருப்பவர் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். அவரது ஒப்பந்தம் விரைவில் முடிகிறது. இதையடுத்து புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யாவை தேர்வு செய்துள்ளனர் கல்யாண் ஜுவல்லர்ஸ்.

சுஷ்மிதா சென் படங்களில் நடிக்கவில்லை. விளம்பரப் படங்களில் மட்டுமே வருகிறார். ஆனால் ஐஸோ படம், விளம்பரம் என்று வரும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரசவத்திற்கு பிறகு தற்போது மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தான் ஐஸுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்தத்திற்கு ஐஸுக்கு கிடைக்கும் சம்பளம் கொஞ்ச, நஞ்சமல்ல ரூ.20 கோடி ஆகும். வருடத்திற்கு ரூ.10 கோடி சம்பளம்.

சரி உங்கள் பார்வையில், நகை விளம்பரத்திற்கு ஏற்றவர் ஐஸ்வர்யாவா, சுஷ்மிதாவா?
 

டர்ட்டி பிக்சர் ரீமேக்கில் நடிக்க இஷ்டமில்லை- நயனதாரா


இந்தியில் சூப்பர் ஹிட்டான தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பமில்லை என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான தி டர்ட்டி பிக்சர் சக்கைப் போடு போட்டது. அதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சிகரமாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழில் தி டர்ட்டி பிக்சரை ரீமேக் செய்வது என்று முடிவு செய்தனர்.

தமிழில் அனுஷ்கா சில்க் வேடத்தில் நடிக்கிறார். ஆனால் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு நயன்தாராவைத் தான் சில்க் வேடத்தில் நடிக்க கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நயன்தாராவிடமே கேட்டதற்கு, சில்க் வேடத்தில் நடிக்க என்னை யாரும் அனுகவில்லை என்றார். அந்த படத்தில் நடிக்க உங்களுக்கு ஆர்வமுள்ளதா என்றதற்கு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று பொசுக்கென்று கூறிவிட்டார்.

தி டர்ட்டி பிக்சர் வித்யா பாலனை புகழின் உச்சிக்கே கொண்டு போய் அமரவைத்துள்ளதால் தமிழ் ரீமேக்கில் நடிக்க பல நடிகைகள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் நயன் உல்ட்டாவாக பதில் சொல்லியிருக்கிறார்.

அது சரி, சீதை வேடத்தில் நடித்தவரைப் போய் சில்க வேடத்தில் நடிக்கக் கூப்பிட்டால் எப்படி...
 

மோகன் லாலுடன் இணையும் அமலா பால்!


தமிழில் ஆரம்பித்து தெலுங்கில் புகுந்த மலையாளத்து அமலா பால் தற்போது தனது சொந்த தேசத்திற்கும் நுழைந்துள்ளார். தன்னை விட வயதில் பல மடங்கு மூத்தவரான மோகன்லாலுடன் புதிய படத்தில் ஜோடி போடுகிறாராம் அமலா பால்.

தமிழில் வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி மற்றும் முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற குஷியில் இருக்கும் அமலா பால் தெலுங்கிலும் திறமை காட்டி வருகிறார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான மலையாளத்திலிருந்து திறமை காட்ட அழைத்துள்ளனர்.

மலையாள இயக்குனர் ஜோஷி சூப்பர் ஸ்டார் மோகன் லாலை வைத்து படம் எடுக்கிறார். அதில் அவருக்கு யாரை ஜோடியாகப் போடலாம் என்று அலசியுள்ளனர். இறுதியில் தேர்வாகியிருப்பது அமலா பால் என்று கூறப்படுகின்றது.

அடடா எந்தா ஒரு அதிர்ஷ்டம் என்று புளகாங்கிதமடைந்து போய் விட்ட அமலா பால், லாலுடன் இணையப் போவதை நினைத்து குதூகலமாக உள்ளாராம்.

இதற்கிடையே, காதலில் சொதப்புவது எப்படி இந்திக்கு போகிறதாம். ஏற்கனவே அமலா நடித்த மைனாவும் இந்திக்குப் போயுள்ளது நினைவிருக்கலாம்.
 

வீணா மாலிக் சுயம்வரத்திற்கு இப்படி ஒரு சோதனையா?


Veena malik
பாலிவுட் படங்களி்ல் நடித்து வரும் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கின் சுயம்வரம் நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தொலைக்காட்சி இழுத்து மூடப்படுகிறது.

பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக். பிரபல ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர். அடுத்ததாக ஷூட்டிங்கின்போது சக நடிகையைத் தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். நடிப்பை விட சர்ச்சைக்கு பெயர் போன வீணா மாலிக்கின் சுயம்வரம் நிகழ்ச்சி இமேஜின் டிவியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

அவரை மணக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவி்த்து விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்த இமேஜின் டிவியியை திடீர் என்று இழுத்து மூடிவிட்டனர்.

இது குறித்து டர்னர் இன்டர்நேஷனலின் தெற்காசிய பிரிவு எம்.டி. சித்தார்த் ஜெயின் கூறுகையில்,

இமேஜின் டிவி எதிர்பார்த்தது போன்று ஓடவில்லை. ஒரு சில நிகழ்ச்சிகள் நன்றாக போனாலும் ஒட்டுமொத்தமாக டிவி நன்றாக ஓடவில்லை. அதனால் டிவியை இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

வாரம் ரூ. 15,000 சம்பளத்துக்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்த நடிகை தாரா!


Tara Choudary
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு நடிகை தாரா, விபச்சாரத்தில் ஈடுபடுவற்காக பெண்களுக்கு வாரம் ரூ. 15,000 வரை சம்பளம் கொடுத்து ஒரு கம்பெனி போல தனது விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

மிகப் பெரிய அளவில் தனது விபச்சாரத் தொழிலை தாரா நேர்த்தியாகவும், பிரமாண்டமான அளவிலும் நடத்தி வந்துள்ளார். அவரது விபச்சாரத் தொழிலுக்கு அரசியல்வாதிகள், காவல்துறையினர் என சகல தரப்பினரும் உறுதுணையாக இருந்து ஓஹோவென தொழில் நடக்க உதவியுள்ளனர்.

மார்ச் 31ம் தேதி கைது செய்யப்பட்ட தாரா குறித்து தற்போது பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விஐபிக்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளிடம் பெண்களை அனுப்பிவைப்பது அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது ரகசிய கேமரா மூலம் படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் தாரா ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் பிரபலமான ஒரு தெலுங்கு நடிகரும், தாராவின் வலையில் சிக்கி வீழ்ந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதை விட சுவாரஸ்யமாக, அந்த நடிகரின் மனைவிதான், தாராவை அணுகி தனது கணவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.

அந்த நடிகருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி மோதல் மூண்டுள்ளதாம். இதனால் தன்னை எங்கே கணவர் விவாகரத்து செய்து விடுவாரோ என்று பயந்துள்ளார் மனைவி. இதையடுத்து தாராவை அணுகிய அவர், தனது கணவர் வேறு பெண் பக்கம் திரும்பி விடாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தாரா அந்த நடிகருக்கு காதல் வலை வீசி தனது பக்கம் திருப்பி விட்டாராம்.

தாராவிடம் பெரும் சந்தோஷத்தைக் கண்ட அந்த நடிகரும், தாராவைத் தவிர வேறு யார் பக்கமும் திரும்பாமல் இருந்து வந்தார். மேலும் தாராவை பெரிய நடிகையாக்குவதாகவும் உறுதியளித்து வந்தாராம்.

அத்தோடு நில்லாமல், தனது நண்பர்கள், திரையுலகினர் சிலருக்கும் தாராவை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் சந்தோஷம் காட்டியுள்ளார் அந்த நடிகர்.

இந்த நிலையில் தாராவின் விபச்சார நெட்வொர்க் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறுமை, ஏழ்மையில் வாடும் அழகான பெண்களாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துள்ளார் தாரா. அவர்களுக்குப் பணத்தாசை காட்டியும், சொகுசாக வாழலாம் என்று ஆசை காட்டியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அந்தப் பெண்கள் தன்னை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வாரத்திற்கு ரூ. 15,000 வரை சம்பளம் போல கொடுத்து வந்துள்ளார்.

தாராவின் இந்த நாசத் தொழிலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஹனீப், வியாபாரி ஜெயந்த், பிரிமீளா என்பவர் ஆகியோரே. இதில் ஜெயந்த்தின் பங்களாவைத்தான் தனது விபச்சார விடுதியாக தாரா பயன்படுத்தி வந்துள்ளார்.

இங்குதான் அரசியல் பிரமுகர்கள் முதல் காவல்துறையினர், தொழிலதிபர்கள், சினிமாத்துறையினர் என பலரையும் இழுத்து வந்து தொழிலை நடத்தியுள்ளார்.

தனது தொழிலுக்குப் பாதுகாப்பாக, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளார். தாராவிடம் விழுந்த ஒரு காங்கிரஸ் தலைவர் மூலம்தான் ரெட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் தாரா என்கிறார்கள்.

தாராவுடன் தொடர்புடைய அத்தனை பேரையும் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளனராம். குறிப்பாக அந்த நடிகரையும் பிடிக்கவுள்ளதாக கூறப்படுவதால் ஆந்திர திரையுலகம் பரபரப்பாகி கிடக்கிறது.
 

6 நாட்கள் ஷூட்டிஙகிற்கு 60 கேட்ட தமன்னா!


ஃபேண்டா கூல்டிரிங்கஸ் விளம்பரத்திற்கு ஆண்டில் 6 நாட்கள் கால்ஷீட் கொடுக்க நடிகை தமன்னா ரூ. 60 லட்சம் கேட்டுள்ளார்.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புக்ள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் அவருக்காக லைன் கட்டி நிற்கிறார்கள். அவரது கவர்ச்சிக்கு அவ்வளவு மவுசு அங்கே.

இந்த நிலையில் திரைப்படங்கள் தவிர்த்து விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா. கொககோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டா விளம்பரத்திற்கு இத்தனை நாட்கள் நடிகை ஜெனிலியா வந்தார். அவருக்கு திருமணமானதையடுத்து இந்த விளம்பரத்திற்கு கல்யாணமாகாத வேறு ஆளைப் போடலாம் என்று அந்நிறுவனம் முடிவு செய்தது.

இதையடுத்து தென்னிந்தியாவுக்கான அம்பாசடராக தமன்னாவை அந்நிறுவனம் தேர்வு செய்தது. ஆனால் விளம்பரத்திற்காக ஆண்டில் 6 நாட்கள் கால்ஷீட் கொடுக்க அவர் ரூ.60 லட்சம் கேட்டுள்ளார். முதலில் பெரிய தொகையா இருக்கே என்று யோசித்த போதிலும், தமன்னா மீதான தெலுங்கு கிராக்கியை மனதில் கொண்டு ஓ.கே. சொல்லிவிட்டார்களாம்.

இது குறித்து தமன்னா கூறுகையில்,

நான் தேர்வு செய்து தான் ஒரு பொருள் அல்லது பிராண்டை விளம்பரம் செய்வேன். எனது இமேஜ் மற்றும் வயதிற்கு ஏற்ற பிராண்டுகளையே விரும்பித் தேர்வு செய்கிறேன். எனது ரசிகர்களுடன் டச்சில் இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும் என்றார்.

ஆமாமா, நல்ல வாய்ப்புதான்...
 

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்


SA Chandrasekaran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு அது இரண்டாக உடைந்துள்ளது. சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 20 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் இடைக்காலக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக் குழு சென்னை 100 அடி சாலையில் உள்ள ராதா பார்க் ஓட்டலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மூத்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் தலைமை வகித்தார்.

இப்ராகிம் ராவுத்தர், முரளிதரன், கேயார், ஆர்.கே. செல்வமணி, சுந்தர் சி, ராதாகிருஷ்ணன், பி.சிவா, சக்தி சிதம்பரம், மோகன் நடராஜன், எச். முரளி, சித்ரா லட்சுமணன், ஹென்ரி, சோபா பொன்னுரங்கம், கலைப்புலி சேகரன், விஜய முரளி, ஏ.வி.எம். முருகன், சுப்பையா, ஜாக்குவார் தங்கம், ஞானவேல்ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், அரிராஜன், வி.ஏ. துரை, ருக்மாங்கதன், வி.சேகர் உள்ளிட்ட பலர் போட்டி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காரசாரமான விவாதம் நடந்தது. ராஜினாமா செய்தவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களைக் காட்டினர். அப்போது எஸ்.ஏ. சி ஆதரவாளர்களான தயாரிப்பாளர்கள் தமிழரசன், ரிஷிராஜ், ராஜசிம்மன் உள்ளிட்ட சிலர் எழுந்து தலைவரின்றி கூட்டம் நடத்துவதா என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இபுராகிம் ராவுத்தர் தெரிவி்த்தார். அதில சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சங்கத்தின் தலைவர் எஸ். ஏ. சந்திரகேரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகிய 3 பேரையும் சங்கத்தில் இருந்து 6 மாதம் நீக்கி வைப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிரச்சினை வரலாம் என்று கருதப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சினிமாக்காரர்கள் சண்டையால் திரையுலகமே பிளவுபட்டுக் கிடக்கிறது.
 

பிராட் பிட், ஜூலி நிச்சயதார்த்தம் முடிந்தது- நிச்சயதார்த்த மோதிரம் ரூ.1.28 கோடி


Brad Pitt and Angelina Jolie
திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வரும் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், நடிகை ஏஞ்சலினா ஜூலியும் ஒரு வழியாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும (48), நடிகை ஏஞ்சலினா ஜூலியும் (36) கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலேயே குடித்தனம் நடத்தி வருகின்றனர். பிட் தனது காதல் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனுடன் இருந்தபோது அவரது வாழ்க்கையில் நுழைந்தவர் ஜுலி. இவர் நுழைந்ததால் அனிஸ்டன் வெளியேறினார். பிராட் பிட், அனிஸ்டனை முறைப்படி விவாகரத்து செய்துவி்ட்டு ஜுலியுடன் செட்டில் ஆகி விட்டார். ஆனாலும் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி, ஒரு பெண் குழந்தை, இரட்டைக் குழந்தைகள் என்று 3 குழந்தைகளை பெற்றுள்ளனர். இது போக, மேலும் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலி மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இப்படி குழந்தைகள் வதவெதன்று அதிகரித்துக் கொண்டு போன நிலையில், இரண்டு பேருமே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று பிராடையும், ஜூலியையும் அவர்களது குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து தான் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த மோதிரத்தை பிராட் பிட்டே டிசைன் செய்துள்ளார். எமரால்ட், வைரம் பதித்த அந்த மோதிரத்தின் விலை ரூ. 1,28,25,725 ஆகும்.

அவர்கள் நிச்சயம் செய்து கொண்டாலும் இன்னும் திருமண தேதி குறிப்பிடவில்லை. ஒரு வழியாக அம்மாவும், அப்பாவும் நிச்சயம் செய்து கொண்டதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்தில் பிட்டுக்கும், ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் வந்துள்ளதாகவும், இருவரும் பிரியப் போவதாகவும் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்...
 

'பாலாஜியை' பாய்பிரண்டுன்னு சொன்னது தப்புதான், தப்புதான்.. காம்னா புலம்பல்!


Kamna Jethmalani
திருப்பதி ஏழுமலையானை பாய்பிரண்ட் என்று கூறியதற்காக நடிகை காம்னா ஜெத்மலானி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதய திருடன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி. மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடி்ததுள்ளார். இருந்தாலும் எதிலும் அவர் எந்த எபக்ட்டையும் ஏற்படுத்தவில்லை. அவரது நடிப்பும், கவர்ச்சியும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இருப்பினும் தெலுங்கில் கொஞ்சம் போல பிசியாக உள்ள அவர் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏழுமலையானை தன்னுடைய பாய்பிரண்ட் என்று கூறியிருந்தார். இது பஞ்சாயத்தைக் கூட்டி விட்டது. கடவுளை எப்படி பாய்பிரண்ட் என்று கூறலாம் என்று அவருக்கு தொலைபேசி, கடிதம் மூலமாக பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திருப்பதி ஏழுமலையான் தான் எனக்கு எல்லாமும். அவர் தான் எனக்கு தந்தை, நண்பர். அந்த அர்தத்தில் தான் பாய்பிரண்ட் என்று கூறினேன். அதற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. பாய்பிரண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியது பிரச்சனையாகிவிட்டது.

ஏழுமலையான் தான் என்னுடைய இஷ்ட தெய்வம். அவரை பாய்பிரண்ட் என்று நான் கூறியது பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்காக வருந்துகிறேன். அதற்காக அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.